- Joined
- Jun 17, 2024
- Messages
- 16
இழைத்த கவிதை நீ! 6
கலிஃபோர்னியாவின் சான் ஓஸேவில் (San Jose) உள்ள தமிழ் மன்றத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி.
தமிழக மேடைகளில், ஊடகங்களில், ஏன், ஓரிரு திரைப்படங்களில் கூட தலைகாட்டிய பிரபல பேச்சாளர்கள் வந்திருந்தனர். அதுவரை டீவியில் மட்டுமே பார்த்தவர்களை நேரில் கண்டதும், அளவான, அரங்கு நிறைந்த கூட்டத்தில் அவர்களது பட்டிமன்றத்தை நேரில் கண்டு ரசித்ததும், அவர்கள் சகஜமாகப் பழகியதும் ருக்மிணிக்குப் புதிய அனுபவம்.
மூன்றாம் வரிசையில் அமர்ந்துகொண்டு குடும்பத்தில் அதிகப் பொறுப்பு ஆணுக்கா, பெண்ணுக்கா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை இருவரும் வெகுவாக ரசித்தனர்.
ஆண்களுக்கு ஆதரவாகப் பேசிய அணியினர் பெண்களின் பொருள், புடவை, நகைகளின் மீதான ஆசை, கணவனை அடக்கி ஆளும் பேராசை மற்றும் இன்னபிற அசட்டு ஆசைகளால் இன்னல் படுவது ஆண்களே என்றனர்.
எதிரணியில் பேசிய அந்த நட்சத்திரப் பெண் பேச்சாளர் “கழுத்தை நெறிக்கும் குடும்பப் பொறுப்புகளால், நீங்கள் சொன்ன எந்த ஆசையும் நிறைவேறாது பெண்களின் நியாயமான ஆசைகள் கூட நிராசையாவதுதான் நடைமுறை”
“முன் காலத்தைப் போல் வீடு, குழந்தைகள், உறவுகள் மட்டுமின்றி தங்கள் அலுவலகம், குழந்தைகளின் தினசரி ஹோம் ஒர்க் முதல் அவசர ப்ராஜெக்ட்டுகள், பாட்டு, நடன, ஓவிய வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சி வகுப்புகளுக்கு அவர்களுக்கு சாரத்யம் செய்தல், பிள்ளைகள் ஆசைப்படும் வித்தியாசமான ஹோட்டலைப் போன்ற உணவு வகைகளை சமைத்தல், கார்ட்டூன், மாங்கா கேரக்டர்களின் காஸ்ட் ப்ளே
(Cast play) வரை இன்றைய நவீனப் பெண்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்”
என சிறப்பாகப் பேசியதோடு, நடுநடுவே நகைச்சுவையாக பொருத்தமான மேற்கோள்களுடன் அவரது கருத்துகளை அழுத்தமாக முன் வைத்தார்.
நடுவர் வழக்கம்போல் இரு புறமும் சாதகம்போல் பேசினாலும், குடும்பத்தில் அதிகப் பொறுப்பு பெண்களுக்கே! என்று தீர்ப்பு வழங்கினார்.
விழா முடிந்த பின், குறைந்த பட்ச விருந்தினர்களோடு நடந்த லஞ்ச் பார்ட்டியில் சௌமித்ரனும் இன்னும் சில இளைஞர்களும் ஏற்பாடுகளிலும் பரிமாறவும், வாலன்டியர்களாக இருந்தனர்.
சௌமித்ரனுடன் இணைந்து பஃபே கவுன்ட்டரில் பரிமாற நின்றிருந்த ருக்மிணிக்குத் தன் அக்கா மாலாவின் நினைவு.
எம்.காம் படித்து, தனியார் வங்கியில் வேலை பார்த்தவள், திருமணம் ஆன புதிதில் மாமியாருடன் மதுரையில் இருந்தாள்.
முதல் குழந்தை பிறந்து, புக்ககம் சென்று, மெட்டர்னிடி லீவ், சம்பளமில்லா லீவ் என எல்லாம் முடிந்து, குழந்தையின் எட்டாவது மாதத்தில், விடுப்பு முடிந்து வேலைக்கு சேரும் நேரம், அவளது மாமியார், குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. க்ரச்சிலும் விடக் கூடாதென்றார். வீட்டில் ஆள் போடவும் அனுமதிக்க மறுத்தார்.
இத்தனைக்கும் அவருமே பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வாலன்டரி ரிடையர்மென்ட் வாங்கியவர்தான். அவரது பிடிவாதத்தில், இருந்த விடுப்பெல்லாம் போட்டுத் தீர்ந்தபின், வேறு வழியின்றி வேலையை மாலா ராஜிநாமா செய்தாள்.
அவளது கணவர் மத்திய அரசுப் பணியில் பெரிய பதவியில் இருக்க, வேலையைத் துறந்தது என்னவோ மாலாதான். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. தாயின் அதிகாரமும் அர்த்தமற்ற கெடுபிடிகளும் மாலாவின் கணவருக்கே அதிகப்படியாகத் தோன்றியதில் மாற்றல் வாங்கிக் கொண்டு திருச்சிக்கே வந்து விட்டனர்.
ஆரம்பத்தில் மாலாவிடம் இ
, இருந்த விட்டதைப் பிடிக்கும் ஆர்வம் நாளடைவில், நீர்த்துப்போனதுதான் நடந்தது.
அநேகமாக விருந்தினர்கள் அனைவரும் உண்டு முடிக், பட்டிமன்றப் பேச்சாளர்கள் குழு புறப்படும் முன், விழா அமைப்பாளர்கள், நிர்வாகிகளோடு, அங்கே நின்றிருந்த ஆர்வலர்களிடமும் உரையாடினர்.
அங்கு வாலண்டியராகப் பணி புரிந்தவர்கள் அனைவருமே நல்ல பதவியில் இருப்பவர்கள் என அவர்களுக்கும் தெரியுமே. ஊர், பெயர் என விசாரித்தனர் , முதன் முறை என்பதால், தயக்கத்துடன் சௌமித்ரனுக்குப் பின்னே நின்றிருந்த ருக்மிணியைப் பார்த்து சிரித்தபடி சற்றே குனிந்து அந்தப் நட்சத்திரப் பெண் பேச்சாளர் “நன்றி மா, உங்க பேரு?” என்றார்.
“ருக்மிணி” என்றவளின் முழங்கையைப் பிடித்து முன்னே இழுத்த சௌமித்ரனை கணத்திற்கும் குறைவான நேரம் திகைத்து நோக்கியவள், சுதாரித்து பேச்சாளரின் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.
அவர்கள் விடைபெற்றுச் சென்றதும், வாலண்டியர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பதால், அவரவர் அலுவலகம், ஊர் பேச்சு, சினிமா என்று கலகலக்க, ருக்மிணி சௌமித்ரனின் தொடுகையை இனம் பிரிக்கும் முயற்சியில் இருந்தாள்.
அலுவலக ரீதியாகக் கை குலுக்குவதை விட்டு விடலாம். சாலையைக் கடக்கையில், எஸ்கலேட்டரின் முதல்படியில் கால் வைக்கையில், தானியங்கிக் கதவுகளில் நுழைகையில், உயரமான படிகளில் ஏறி, இறங்குகையில், எதையாவது காணச் சொல்லி கவனம் திருப்புகையில், கூட்டமான மால்களில், விவசாயிகளின் வாரச் சந்தையில் என எத்தனையோ முறை சௌமித்ரன் ருக்மிணியின் கையைப் பிடித்து இருக்கிறான்தான்,
அவள் கையைப் பிடித்து இருக்கிறான், பட்டும் படாமலும் தோளில் கை வைத்து, நடைபாதையின் உள்புறமாக நகர்த்தி இருக்கிறான். கூட்டத்தில், மின் தூக்கிகளில் தொடாது, ஆனால் தொட்டு விடும் தூரத்தில் அணைவாகக் கை வைத்து அழைத்துச் சென்றிருக்கிறான்.
அப்போதெல்லாம் அனிச்சை செயலாக, முன்னெச்சரிகையாக, பாதுகாப்புக்கெனத் தோன்றிய அதே செய்கையில் இன்று ஒருவித உரிமையும் அழுத்தமும் இருந்ததை ருக்மிணி உணர்ந்தாள். மனம் அலை பாய்ந்தது. அதனாலேயே இந்தத் திகைப்பும் திளைப்பும்.
“ஹலோ ருக்மிணி மேடம், கேட்டரர்ஸ் வேன் கூட போயாச்சு. நாங்க கிளம்பறோம். ஸீ யூ. பை மித்ரன்” என்ற இளங்கோவின் குரலில் கலைந்து “பை” என்றாள்.
தங்கள் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து, அவளது கட்டிடத்தின் எதிரே காரை நிறுத்தினான்.
நேரம் பிற்பகல் மூன்று மணி.
ருக்மிணி டேபிள் டென்னிஸைத் தவிர, ஓரிரு வாரங்களாக சௌமித்ரனிடம் பில்லியர்ட்ஸ் விளையாடக் கற்று வருகிறாள்.
புதிய விளையாட்டு என்பதால், அதிக ஆர்வத்துடன் கற்றாள்.
காரிலிருந்து இறங்கிய ருக்மிணி, காலை முதல் வெளியில் சென்றதில் அச்சமயத்தில் சோர்வாக இருந்தாலும், அன்று சனிக்கிழமை என்பதால், நேரமானாலும் இருவரும் மாலையில் விளையாடச் செல்லலாம் என நினைத்து, சௌமித்ரனிடம் கேட்கும் முன்பே,
“ஈவினிங் எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு. நீ க்ளப்புக்கு போறதுன்னா போ. நாம நாளைக்கு மார்னிங் ஜாக்ல மீட் பண்ணலாம். ஸீ யூ மினி”
தன்னை மீறி ‘நானும் உங்க கூட வரவா?’ என்று கேட்க நினைத்தவள், நல்லகாலமாகத் தலையசைப்போடு நிறுத்தினாள்.
இஞ்ஜினை ஓட விட்டு, காரைக் கிளப்பாமல் நின்றிருந்த சௌமித்ரனின் முகத்தில் பிடிக்காத ஒன்றைச் செய்யப் போகும் பாவனை.
“என்னாச்சு மித்ரன்?”
“க்க.. க்க…” என்றவன் ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்தான்.
‘என்னை விட்டுட்டு இவன் மட்டும் தனியா எங்க போறான், அதுவும் வீக் எண்ட்ல?’
தன் எண்ணம் போன போக்கில் அதிர்ந்தவள், தலையை உலுக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் ருக்மிணி.
*****************
திருமணத்திற்கான அனைத்துத் தகுதிகளுடன் முப்பது வயது யுவனும் இருபத்தி ஐந்து வயது யுவதியும் அமெரிக்காவில் தனித்திருக்கையில், அவர்களது இந்திய, தமிழ் பெற்றோர்களால் வாளாயிருக்க முடியுமா என்ன?
“புள்ளைக்கு எப்போ கல்யாணம்?”
“இன்னும் பொண்ணுக்கு ஜாதகமே பார்க்கத் தொடங்கலையா?”
“கண் காணாத தேசத்துல இருக்கும்போது சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிக்கறதுதான் நல்லது. பின்னால வருத்தப்பட்டுப் பலன் இல்லை”
“அங்கத்திய வாழ்க்கை முறையே வேற. அதுக்கு பழகிட்டா, அப்புறம் நம்ம பசங்க நமக்கில்லன்னு தண்ணி தெளிச்சு விட்ற வேண்டியதுதான்”
“யாராவது ஒரு வெள்ளைக்காரிய இழுத்துட்டு வர முன்ன கல்யாணத்தை முடிக்கப் பாருங்க”
எதிரில் கண்டவர், காணாதவர் என எல்லோரும் இது போன்ற கேள்விகளால் தங்களைத் துளைப்பதாக உணர்ந்ததில் ஜாதகம் பார்க்கத் தொடங்கினர்.
எத்தனையோ முறை காதிலேயே வாங்காது தட்டிக் கழித்த சௌமித்ரனால், அன்று அவனது தந்தையின் நண்பரின் மகள் அமெரிக்காவிலேயே இருக்க, அவளது பெற்றோர் இங்கு வந்திருந்தனர்.
“உனக்காகப் பார்ஸல் அனுப்பி இருக்கிறோம், போய் வாங்கிக்கொள்” என்ற தந்தையின் வார்த்தையை மீற முடியாது அவர்களை சந்திக்கச் சென்றான்.
தங்களது நோக்கத்தையும் எதிர்பார்ப்பையும் சொல்லியேதான் சந்திக்க வற்புறுத்தினார் தந்தை.
ருக்மிணியின் மீதான ஈர்ப்பில், முன் போல் திருமணமே வேண்டாம், கடமை, கட்டுப்பாடு என எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் போய், அவளுடன் இணைந்து வாழும் ஆசை உள்ளுக்குள் வேர் பிடித்து வளர்ந்திருக்க, அவளுடன் விளையாடிக் கழிக்க வேண்டிய பொழுதைத் தவற விட்டதும், விருப்பமில்லாத ஒன்றைச் செய்வதும் சௌமித்ரனுக்குப் பிடிக்கவில்லை.
ருக்மிணியின் நொடி நேர ஏமாற்றம் நிறைந்த முகம் வருத்தத்தைக் கொடுத்தது. கடமைக்கென சென்ற சௌமித்ரன், அவர்களது கம்யூனிடியின் விஸிட்டர்ஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, லிஃப்டில் உயர்ந்து, அவர்களது தளத்தில் வெளி வந்தபோது, வலப்புறத்தில் மூன்றாவதாக இருந்த வீட்டின் கதவு திறந்திருக்க, இரண்டு இளைஞர்கள் வெளியே வருவது தெரிந்தது.
அவர்களின் பின்னே நின்றிருந்த பெரியவர் “ நாம பேசலாம்” என்று விடை கொடுத்ததும் கேட்டது.
சௌமித்ரன் எதிர்ப்பட்ட இளைஞர்களைப் பார்த்துக் கொண்டே, அந்தப் பெரியவர் கதவை மூடும் முன், அவரது வீட்டு வாசலில் போய் நின்றான்.
“ ஹலோ அங்கிள், நான் சௌமித்ரன். ரகுநாதனோட சன்”
“ஓ, கம், கம். உனக்… உங்களுக்காகதான் வெய்ட் பண்றோம்” என்றார் சமாளிப்பாக.
சற்று முன் குடித்த காஃபியோ, டீயோ சிறிது மிச்சமிருந்த கோப்பைகளும், குக்கீஸும் தட்டையின் விள்ளல்களும் இருந்த தட்டும் அவர் பொய் சொல்வதைத் தெளிவாகத் தெரிவித்தது.
மீண்டும் கோப்பையில் பானமும், தட்டையும் குக்கீஸும் அவனுக்காக வந்தன. சற்றே ஆறி இருந்த காஃபியில் ஃப்ளாஸ்க் வாசனை.
‘மொத்தமாக போட்டு வைத்து விட்டார்கள் போல. என் டோக்கன் நம்பர் என்னன்னு தெரியலையே’ என நினைத்தவன் சிரிப்பை அடக்கப் பாடுபட்டான்.
சற்றே சங்கடமும் எரிச்சலுமாக “ஹாய்” என்ற நீரஜா அழகாக இருந்தாள். தனியே பேச பால்கனிக்கு சென்றனர்.
சௌமித்ரன் போய் நின்றதுமே, அவள் “ஸாரி, ஆல்ரெடி ஐ’ம் கமிட்டட்”
“ஆல் தி பெஸ்ட்” என்றவன் தன் பார்ஸலை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து, ரேகாவை அழைத்தான்.
“என்னடா மித்ரா, பொண்ணு எப்படி, உனக்குப் புடிச்சிருக்கா, பேசினியா?”
“அங்க நாள் முழுக்க நடந்த வாக் இன் சுயம்வரத்துல, நான் செலக்ட் ஆகலை”
“என்னடா சொல்ற?”
“ம்… சொல்றாங்க… ஒருத்தன் பொண்ணு பார்த்துட்டு வெளில வரான், நான் உள்ள போறேன். தேவையா எனக்கு?”
“மை காட், அப்பாட்ட சொன்னியா?”
“...”
“மித்ரா…”
“ரேக்ஸ், ஒரு ஃபோட்டோ அனுப்பி இருக்கேன் பாரு. பேர் ருக்மிணி. மத்த டீடெய்ல்ஸ் அனுப்பறேன். அம்மா, அப்பா கிட்ட நீதான் பேசணும்”
“டேய்… லவ்வாடா?”
“ம்… இனிமேதான் சொல்லணும். ஆனா அவதான்” என்றவனின் குரலில் குழைவும் ரசனையும் கொட்டிக் கிடந்தன.
“அடப்பாவி, இந்த அளவுக்கு முத்திடுத்து போல”
“ஆல் தி பெஸ்ட் சொல்லு ரேக்ஸ்”
சௌமித்ரன் அம்மாவிடம் அதீத அன்பு , தந்தையிடம் மரியாதை, சகோதரியிடம் நெருக்கம் உடையவன். தன் குடும்பத்தை நேசிப்பவன். அதே நேரம், தன் விருப்பங்களை விட்டுக் கொடுக்காதவன்.
எட்டு வருட அமெரிக்க வாசம், சௌமித்ரனிடம் நிறைய சுதந்திர உணர்வை, தன்னிச்சையான வாழ்க்கை முறையை விதைத்திருந்தது.
அதற்கான பொருள் யாருக்கும் அடங்காது தவறான பாதையில் செல்கிறான்
என்பதல்ல. அலுவலகம் மற்றும் வெளி வேலைகள் தவிர, தனிப்பட்ட முறையில் தன் வாசிப்பு, ரசனைகள், பொழுதுபோக்குகள், விளையாட்டு, நேரம் என தன் விருப்பங்களை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள சௌமித்ரன் தயாராக இல்லை.
*****************
மேலும் இரண்டு மாதங்கள் நகர, தங்கள் காலை நேர ஓட்டம், அலுவலகம், மாலை நேரமிருப்பின் டிடியோ, பில்லியர்ட்ஸோ ஒரு ஆட்டமாவது விளையாடுவது என நாட்கள் சீராகச் சென்றது
ருக்மிணி கடைசி பெண் என்பதால், அவளுக்கு வந்த வரன்களைத் தேர்ந்தெடுக்க பெற்றோர், அக்காக்கள், அவர்களின் கணவர்கள் மட்டுமின்றி மாலாவின் ஆறு வயது மகன் கூட முன் நெற்றி பெரிதாயிருந்த மாப்பிள்ளையின் ஃபோட்டோவைப் பார்த்து “சொட்டை சித்தப்பா வேண்டாம்” என்றான்.
வீட்டினர் இங்கே பல்வேறு நிபந்தனைகள், தகுதிகளின் அடிப்படையில் பாதிக்கு மேல்பட்ட வரன்களைக் கழித்துக் கட்டினர். மீதியை ருக்மிணி நிராகரித்தாள். அதில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் வரன்களும் கூட அடக்கம்.
படிப்பு, வேலை, தோற்றம், குடும்பம் என எல்லாம் பொருந்தி வந்த தஞ்சையைச் சேர்ந்த அமெரிக்க வரன் விடுமுறையில் இந்தியா வந்திருக்க, அவர்கள் வீட்டிற்கே சென்று நேரில் பார்த்தவர்களுக்குப் பரமதிருப்தி. அவர்களுக்கும் ருக்மிணியைப் பிடித்து விட்டது (ஃபோட்டோவில்தான்!)
ருக்மிணியின் தந்தை “இதான் நம்ம மாப்பிள்ளை” என அறிவித்ததோடு, திரும்ப அமெரிக்கா சென்றதும் எங்கேயாவது காஃபி ஷாப்பில் சந்தித்து மகளுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டவர், மகள் மறுக்க வழியின்றி கடைசி நிமிடத்தில்தான் தெரிவிக்க முடிவு செய்தார்.
அன்று ஞாயிறு என்பதால் காலையில் சிறிது தாமதமாக எழுந்த ருக்மிணி சௌமித்ரனின் அழைப்பில் மின்னல் வேகத்தில் தயாராகிக் கீழே சென்றாள் ருக்மிணி.
முந்தைய நாளே வாராந்தர ஷாப்பிங் முடிந்து விட்டதால், காலை ஓட்டத்திற்குப் பின் பில்லியர்ட்ஸ் விளையாடச் சென்றனர்.
க்யூ ஸ்டிக்கால், க்யூ பால் (Cue ball) எனப்படும் வெள்ளை நிறப் பந்தை (சௌமித்ரனுடையது) குறி வைத்து பாட்டிங் (Potting) செய்தவளுடன் முஷ்டியை மோதி (Fist bump),
“குட் ஷாட் மினி” என்றவனின் பாராட்டுக்கு முட்டியை சற்றே மடித்து விம்பிள்டனில் செய்வது போல் bow செய்து சிரித்தவளிடம், சௌமித்ரன் தன் தடுமாற்றத்தை மறைக்க தோள்களையும் புருவங்களையும் உயர்த்தினான்.
சௌமித்ரனின் வீட்டில் இருவரும் சேர்ந்து லஞ்ச் சமைக்கும் திட்டம் இருந்ததால்
“ட்வெல்வ் ஓ க்ளாக் ஷார்ப்” என்றபடி அவரவர் வீடு சென்றனர்.
நிதானமாகத் தலைக்குக் குளிக்க எண்ணி வழிய, வழிய எண்ணெய் வைத்துக் கொண்டிருந்தவளின் மொபைல் அலற, வீட்டிலிருந்து வீடியோ கால்.
குடும்பத்துக்கே ‘தைலக் காப்பு தரிஸனம்’ என நினைத்தபடி அழைப்பை ஏற்க, டேபின் முன்னே மொத்த குடும்பமும் கூடி இருந்தது.
எடுத்ததுமே அவளது தந்தை மாப்பிள்ளை பார்க்க மாலுக்கோ காஃபி ஷாப்பிற்கோ பன்னிரெண்டு மணியளவில் போகச் சொல்ல, மற்ற எல்லோரும் அந்த திவாகரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டனர்.
பொறுமையை வரவழைத்துக் கொண்ட ருக்மிணி “என்னப்பா திடீர்னு, இன்னும் ரெண்டு மணிநேரம் கூட இல்ல. லாஸ்ட் மினிட்ல எங்க, எப்டி…”
“ஃபோட்டோவும் மத்த விவரமும் மெயில் பண்ணி இருக்கேன் பாரு. நொண்டிச் சாக்கு சொல்லாம மரியாதையா போய் பார்த்துட்டு வா. அவரே கால் செஞ்சு எங்க மீட் பண்ணணும்னு சொல்லுவார். ஆல்ரெடி நீ இருக்கற ஏரியாவுக்கு வந்துட்டராம்”
“அப்பா, நான்…”
“போய்ட்டு வந்து கால் செய்”
“...”
முக்கால் மணி நேரம் போல் மாறி மாறி ருக்மிணிக்கு வேப்பிலை அடித்த பின் “ஆல் தி பெஸ்ட் ருக்கு” என்ற சகோதரிகளின் கோரஸ் வாழ்த்துடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
எதற்கு, ஏன், யார் மீது என்று புரியாமலே ஆத்திரம் மீதூற அங்குமிங்கும் நடந்தவளை அழைத்த திவாகர், அவள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கும் ஒரு காஃபி ஷாப்பில் காத்திருப்பதாகச் சொன்னான்.
வேறு வழியின்றி அவசரமாகக் குளியலை முடித்து ஜீன்ஸ், ஸ்வெட் ஷர்ட்டில் புறப்பட்டவள், நேரத்தைப் பார்க்க, வீட்டிலேயே பன்னிரண்டு அடிக்க, மூன்று நிமிடங்களே மீதமிருந்தது.
காத்திருந்த கேபை (cab) நோக்கி ஓடியவள் இருந்த டென்ஷனிலும் ஆத்திரத்திலும் சௌமித்ரனை மறந்து போனாள்.
ஒரு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றது ருக்மிணியின் மனசாட்சி.
அவளெதிரே அமர்ந்து க்ரீமா (Crema) சேர்க்காத எஸ்ப்ரஸ்ஸோ காஃபியை ரசித்துப் பருகிய திவாகர், அயனான வரன் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது என்பதுதான் அந்த உண்மை.
வழியில் நடுநடுவே அலைபேசியில் “ஸாரி, ஆன் தி வே, பக்கத்துல வந்துட்டேன்’ என விதவிதமாக மன்னிப்பைக் கோரினாலும், சொன்ன நேரத்திற்கு நாற்பது நிமிடங்கள் தாமதமாக வந்தவளுக்காகப் பொறுமையாகக் காத்திருந்தான்.
தோற்றம், படிப்பு, வேலை, வருமானம், அவன் வைத்திருந்த வாகனம் வரை எல்லாமே தரமாகத்தான் இருந்தது. தன்னைப் பற்றி, தன் குடும்பம், வேலை, வருமானம், எதிர்காலத் திட்டங்கள், பொழுதுபோக்குகள் என தெளிவாக, ரத்தினச் சுருக்கமாக, நிதானமாக, புரியும்படி சொன்னான்.
தந்தையின் கட்டளையை மீற முடியாமல் வந்தவளால், திவாகரை, அவனது பேச்சை நட்பு ரீதியாக என ஒதுக்கவும் முடியாது, கவனமாகக் கேட்கவும் எதுவோ தடுத்தது. அவனானால், எல்லாம் முடிவாகி விட்ட தொனியிலேயே பேசினான்.
அவளைப் பற்றிக் கேட்டான். சமைக்கத் தெரியுமா, டிரைவிங் தெரியுமா, கார் இருக்கிறதா, எப்படி அலுவலகத்திற்குச் செல்கிறாள், தற்சமயம் எந்த ப்ராஜக்ட்டில் இருக்கிறாள், H1-B யா அல்லது L1ஆ, எந்த விஸா, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டாளா, திருமணத்திற்குப் பின் அவளால் பணியிடத்தை மாற்றிக் கொள்ள முடியுமா, அதில் பிரச்சனை ஏதும் இருக்காதே என்று கேட்க, ருக்மிணிக்கு தொண்டை வறண்டது.
‘யாருடா நீ, நாளைக்கே குடித்தனம் வைக்கப் போறாப்பல…’
“ஹலோ…” என்று மீண்டும் தொடங்கியவனிடமிருந்து காப்பாற்றியது மீண்டும் மீண்டும் வைப்ரேட் ஆன ருக்மிணியின் மொபைல்.
வீட்டிலிருந்து கிளம்பியது முதல் மூன்று முறை அழைத்து விட்ட அப்பாவாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் எடுக்காது தவிர்த்தவளிடம்,
“பிக் அப் தி ஃபோன்” - திவாகர்.
சௌமித்ரனின் பெயரைக் கண்டதும், மனதிற்குள் தலையிலேயே நறுக் நறுக்கென குட்டிக் கொண்டவள், கடிகாரத்தைப் பார்க்க ‘ஐயோ, ரெண்டரையா?’
மிகுந்த பிரயத்தனத்துடன் தன் முக பாவனையை வெளிக்காட்டாது “எக்ஸ்க்யூஸ் மீ” என எழுந்து விலகி வந்து விட்டாள்.
பச்சை நிறத்தை அழுத்திய மறு நொடி “எங்க போன, இப்ப இங்க இருக்க?” என வார்த்தைகள் சுள்ளென வந்து விழுந்தன.
அவனது குரலின் வேகத்தில் ருக்மிணி தன்னைப்போல் “காஃபி பீன்ல” என்றதுமே இணைப்பைத் துண்டித்திருந்தான்.
சௌமித்ரனைத் தெரிந்த பத்து மாதங்களாக, தன்னிடம் அவன் கோபப்பட்டதாக ருக்மிணிக்கு நினைவில்லை. அவனது கோபம் நியாயமானது என்கையில் என்ன சொல்ல முடியும்? சமைத்தானோ, இல்லை இன்னும் வெய்ட் பண்றானோ? நான் ஒரு மடச்சி…’
தன்னை சமன் செய்து கொண்டு எதிரே வந்து அமர்ந்தவளிடம், திவாகர் “ஆல் வெல்?” என மத்தளம் கேட்ட நந்தியைப்போல் தலையை ஆட்டினாள்.
இவள் பேசிய நேரத்தில் திவாகர் மெயில் ஐடியை அனுப்பி, ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராமில் நட்பு அழைப்பு விடுத்திருந்தான்.
மேலும் பத்து நிமிடங்கள் கடந்திருக்க, திவாகர்
“வெல், சம் மோர் காஃபி?”
“நோ, தேங்க்ஸ்”
“ஓ கே, ருக்மிணி, நான் நேரவே சொல்லிடறேன். எனக்கு உன்னை புடிச்சிருக்கு. ஐ திங்க் வி வில் மேக் எ குட்….”
திவாகரின் வாக்கியம் முடியும் முன் ருக்மிணியின் பக்கத்து இருக்கையில் காஷுவலான ஷார்ட்ஸ், டீஷர்ட்டில் வந்து அமர்ந்த சௌமித்ரன், அவனிடம்
“ஹாய்” என்றவன், படு இயல்பாக ருக்மிணியின் தோளில் கை போட்டு தன்னுடன் இடித்து “ரொம்ப நேரமாச்சா முனீம்மா?”
திவாகரின் முகம் சிவந்துவிட, ருக்மிணியின் பார்வை அதிர்ச்சியில் விரிந்தது. சௌமித்ரனின் அதிரடி மெலிதான கலக்கத்தைக் கொடுத்தாலும், அதுவரை இருந்த ஒவ்வாமையும் அவஸ்தையும் சடாரென நீங்கியதை உணர்ந்தாள் ருக்மிணி.
சௌமித்ரன் ஏதோ அவனுக்காகதான் ருக்மிணி அங்கு காத்திருப்பதைப் போல் பேசியதைக் கேட்ட திவாகரின் பார்வை இருவரையும் கூர்மையாக எடை போட்டது.
சௌமித்ரனின் திடீர் வருகைதான் ருக்மிணிக்கு அதிர்ச்சி என்பதும், இருவருக்கும் நல்ல பழக்கம் இருப்பதும், அவனது அண்மையையும் நெருக்கத்தையும் அவள் இயல்பாக ஏற்றதையும் புரிந்து கொண்ட திவாகர், எழுந்து விட்டான்.
“ஹலோ, ஐ’ம் சௌமித்ரன், என்ன நான் வந்ததும் எழுந்துட்டீங்க?“
கேட்டவனை விடுத்து, ருக்மிணியிடம் திரும்பிய திவாகர் “ஆல் தி பெஸ்ட் ருக்மிணி. நைஸ் மீட்டிங் யூ” என்றவன் சரக்கென வெளியேறிவிட்டான்.
“ஊஃப்” எனப் பெருமூச்சு விட்டவள் “மித்ரன், ஏன் இப்படி?”
“என்ன, ஏன் இப்படி?”
“இல்ல… திடீர்னு அப்பா கால் பண்ணி….”
“ பன்னண்டு மணிக்கு நீ வந்து பெல் அடிச்சு எழுப்புவன்னு நான் உக்கார்ந்த இடத்துலயே தூங்கிட்டேன். கண்ணு முழிச்சா மணி ஒன்னு, உன்னையும் காணும், சமைக்கவும் இல்ல. ஃபோன் செஞ்சாலும் எடுக்கலை. பயங்கர பசி. சாதமும், ரசமும் வெச்சு, சன்னா மசாலா செஞ்ச பிறகும் நீ வரல. உன் வீட்டுக்குப் போனா கதவு பூட்டி இருக்கு. சொல்லாம எங்க போய்ட்டன்னு கேட்டா, மேடம் மாப்பிள்ளை பார்க்க கிளம்பியாச்சு”
“ஸ… ஸாரி மித்ரன். அப்பா லாஸ்ட் மினிட்ல சொன்ன டென்ஷன்லயும் கோபத்துலயும் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்”
“இல்லைன்னா கல்யாணத்துக்கு பையனை பார்க்கப் போறேன்னு எங்கிட்ட சொல்லிடுவியா நீ?”
“மித்ரன்…”
“என்னடீ மித்ரன், மித்ரன்னு ஆஃபீஸ்ல கூப்பிடற மாதிரி. ஒரு ஒன்னரை மணிநேரம் நீ எங்க இருக்க, ஏன் சொல்லாம போனன்னு புரியாம மனுஷனுக்கு பித்து புடிக்க வெச்சுட்டு…”
“டீ யா?”
“ஆமான்டீ, அப்படித்தான்டீ. நாம ரெண்டு பேரும் போட்ட டீஸன்ட் வேஷம் போதும். வா போகலாம்”
இருவரும் வெளியில் வர, மொபைலில் பேசியபடி நின்றிருந்த திவாகரைப் பார்த்தனர். அவனைக் கண்ட ருக்மிணி,
“காட், இப்ப நான் எங்க அப்பா, அம்மா கிட்ட என்ன சொல்லுவேன்?”
“ஏன், அவனை புடிச்சிருக்குன்னு சொல்றதா இருந்தியா?”
“...”
“பை தி வே, நீ எதுவும் சொல்ல வேணாம், இந்நேரம் தானே நியூஸ் போயிருக்கும்”
“...”
“என்ன முறைப்பு?”
“எல்லாம் உங்களாலதான்”
“பின்ன, உன்னை எதிர உட்கார வெச்சு ஒருத்தன் ரெண்டு மணி நேரம் சட்டப்படி சைட் அடிப்பான், நான் வேடிக்கை பார்ப்பேனா?”
பக்கெனச் சிரித்தவள், ‘அவன் என்னை பொண்ணு பார்க்கதான் வந்திருக்கான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“போன மாசம் நானும் போனேனே”
“அடப்பாவி!”
“யாரு, நானு? அன்னைக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கப் போன என் டோக்கன் நம்பர் ஆறு. போதுமா? அப்பாவிம்மா நான்”
“அப்புறம்?”
“வேறென்ன, முனீம்மாதான்னு ரேகாட்ட சொல்லி, ஃபோட்டோவும் அனுப்பியாச்சு”
ரேகா யாரென்று தெரிந்த ருக்மிணி அமைதி காத்தாள்.
“புடிக்கலையா மினி?”
“முனீம்மாதானே, புடிச்சிருக்கு, புடிச்சிருக்கு”
"கொழுப்புடீ உனக்கு"
வீடு வந்து இருவரும் சாப்பிட அமர்கையில் ருக்மிணிக்கு மாலாவிடமிருந்து அழைப்பு வந்தது.
மொபைல் கை மாறி, மாறி வசவு, அழுகை, கண்ணீர், சாபம் என ஆளாளுக்குத் தூற்றிய பின், “உன் பொண்ணை உடனடியா அந்த வேலையை விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா கிளம்பி வரச்சொல்லு” என்று பின்னாலிருந்து உறுமினார் அப்பா.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லைன்னு சொல்லி அப்பா கிட்ட மன்னிப்பு கேளுடீ ருக்கு. இது போல சங்காத்தமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, விட்டுடுடீ, வேண்டாம்” - இந்து.
ஜெயந்தி “அப்படி என்ன ஒசத்தியா இருக்கு அவன் கிட்ட, நாலு பேர் பாக்கற இடத்துல தொடறதும், இடிக்கறதுமா இருக்கற பொறுக்கி ராஸ்…”
“நிறுத்து மா. யாரோ ஒரு திவாகருக்காக, என் சௌமிய தப்பா பேசாத, பின்னால வருத்தப் படுவ”
“அந்தளவுக்குப் போயாச்சா?”
அப்பா “இந்து, பேசின வரைக்கும் போதும். உங்கம்மாவை ஃபோனைக் கட் பண்ணச் சொல்லு. கழுதை எக்கேடும் கெட்டுப் போகட்டும்”
ருக்மிணிக்குத் தனிமை கொடுத்துச் சென்றவன் வந்து பார்க்க, அவளது இறுக்கமான முகத்தைக் கண்டு பதறினான்.
“என்னாச்சு, ஸாரிம்மா, நான்தான் அவசரப்பட்டு…”
“ப்ளீஸ் சௌ, நம்ம நேசத்தை நாமே குறைவா பேச வேண்டாம். தப்போ, சரியோ உங்க பொஸஸிவ்நெஸை நான் ரொம்பவே ரசிச்சேன்”
“முனீம்மா…”
“சௌ, கல்யாணம் பத்தி முடிவு செய்யறதுக்கு முன்னால நாம கொஞ்சம் பேசணும்”
“எனக்கும்” என்றான் சௌமித்ரன்.

Last edited:
Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.