• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

இழைத்த கவிதை நீ! 15 - FINALE 1

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
23
இழைத்த கவிதை நீ! 15


ட்ராஃபிக் சிக்னல் போல்
குங்குமம், விபூதி, கணபதி ஹோம ரக்ஷை, ஐயப்பன் கோவில் சந்தனம், கூடவே வழக்கமான சிறிய ஒட்டுப் பொட்டு என இடமின்றி நிறைந்திருந்த நெற்றியும், கைகளிரண்டிலும் குலுங்கிய கண்ணாடி வளையல்களும், கூந்தலில் வேப்பிலையும், பயம் கரையிட்டிருந்த கரிய பெரிய ஈரம் பளபளத்த ருக்மிணியின் விழிகளில், அவ்வப்போது கீழ், பின் இடுப்பு, அடி வயிறு, தொடைகள், முதுகு, விலாக்கள், நெஞ்சாங்குழி, இன்னும் எங்கே என அறுதியிட்டுக் கூற முடியாது உடல் முழுதும் சுளீரென சாட்டையாய் சொடுக்கிய வலி பிரதிபலித்தது.

மூன்றாம் நாளாக
கண்மண் தெரியாத மழை பெய்ய, ஹாஸ்பிடலின் போர்ட்டிகோ வரை காரைச் செலுத்தி நிறுத்திய சௌமித்ரன், இறங்கி மறுபக்கம் வந்து மனைவிக்கு இறங்கக் கை கொடுத்து உதவினான்.

மருத்துவமனை பணியாளர் கொண்டு வந்த சக்கர நாற்காலியை மறுத்தவள் “இது வேண்டாம் சௌ, நான் உன்னோட நடந்தே வரேன்”

பின் இருக்கையில் இருந்து இறங்கிய ஜெயந்தியும் இந்துவும் ஏதோ சொல்ல வர, சௌமித்ரன் “இட்ஸ் ஓகேம்மா, அவ இஷ்டப் படியே வரட்டும். நான் பாத்துக்கறேன்”

இந்து “காரை நான் பார்க் பண்ணிட்டு வரேன்” என சாவியை வாங்கிச் சென்றாள். ருக்மிணிக்கு காலை முதலே அசதியும், வலியும் இருந்ததோடு, பிரசவத்திற்கென கொடுத்த தேதிக்கு இரண்டு நாளே இருப்பதால், மதியமே வந்து விட்டாள்.

மெதுவே நடத்தி அழைத்துச் சென்றவன், ருக்மிணி முகம் சுளிக்கவும் “சொன்னாக் கேளுடா, நான் வேணா தூக்கிக்கவா?”

“நோ வே”

நல்ல வேளையாக லிஃப்ட் வர, முதல் மாடிக்குச் சென்றனர். மழை மற்றும் இரவு நேரமென்பதால், மருத்துவருக்கு முன்பே தகவல் தெரிவித்து இருந்ததில் காத்திருந்தார்.

ஜெயந்தி “தைரியமா இரு ருக்கு. தாயுமானவரை வேண்டிக்கோ”

டாக்டர் “கம் ருக்மிணி, லெட்ஸ் கோ, சிஸ்டர், ஒளகே ஹோகு, க்விக் ”

இருந்த பதட்டத்திலும் படபடப்பிலும் அந்த நொடியைக் கடப்பதைத் தவிர, எதுவுமே ஓடாத நிலையில் இருந்தான் சௌமித்ரன்.

காரில் வருகையிலேயே மெலிதான ஈரத்தை உணர்ந்த ருக்மிணி, இப்போது உள்ளே செல்லத் திரும்பவுமே பளீரென பனிக்குடம் உடைந்து இளஞ்சிவப்பான நீர் கால் வழியே வேகமாகக் கீழே பரவியதில் பயந்துபோன சௌமித்ரன் “முனீஸ், என்னடா” என்றபடி ஒரே எட்டில் அவளை இறுக அணைத்துக் கொள்ள, சிறிதே கடுமை கலந்து அரை இன்ச் புன்னகைத்த டாக்டர் “வி வில் டேக் கேர் மிஸ்டர் சௌமித்ரன்”

மனதே இல்லாமல் விடுவித்தவனிடம் மனைவிக்குச் சொல்ல தைரியம் என்பது மருந்துக்குக் கூட இல்லை.

லேபர் அறையின் கதவுகள் மூடிக்கொள்ள, மைதிலி, ரேகா, குமார் மூவரும் வந்தனர்.

வரவேற்பாகத் தலையசைத்த இந்து “இப்பதான் உள்ள போனா”

ரேகா “கூல் மித்ரா” என சௌமித்ரனை தோளோடு அணைத்துக் கொள்ள, குமார் அவன் தோளில் தட்டினான்.

இரவின் அகாலத்தில், அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்ததில் மூச்சு வாங்க, சில்லிட்டுக் கிடந்த எவர்சில்வர் நீள்விருக்கையில் அமர்ந்த மைதிலி “மித்ரா” எனவும், அதற்காகவே காத்திருந்ததைப் போல், அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து “பயமா இருக்கு மா” என்றவனைப் பார்த்த மைதிலிக்கு இருட்டுக்கு பயப்படும் மூன்று வயது மித்ரன்தான் கண்ணுக்குத் தெரிந்தான்.

“எதுக்குடா பயம், ஈஸ்வரன் போட்ட காப்புடா, கட்டை எப்படி அவிழ்க்கணும்னு அவருக்குத் தெரியாதா, தைரியமா இருடா கண்ணே!” என்றவர் சொன்னது அவருக்கும் சேர்த்தேதான் என்றது அவரது குரலின் தழுதழுப்பில் புரிந்தது.

நாற்பத்தி மூன்று வயதிலும் சௌமித்ரனுக்கு அம்மாவின் ஆறுதல் அலாதியான அமைதியையும் மனோபலத்தையும் தந்ததென்னவோ நிஜம்.

வெளியே வந்த செவிலி “சௌமித்ரன் சார்” என்றபடி ருக்மிணியின் நகைகளையும் கண்ணாடி வளையல்கள்யும் கொண்டு வந்து நீட்டவும் “ஏனாகிதே சிஸ்டர்?” என்றவனின் குரல் ஏகத்துக்கும் கலங்கிக் கிடந்தது.

ரேகா “தேங்க் யூ சிஸ்டர்” என்று அனுப்பியவள், தம்பியிடம் “நந்திங் மித்ரா. ஹாஸ்பிடல் ரொட்டீன்தான். இப்டி சின்னப் பையன் மாதிரி பயந்தா எப்டிடா?”

பதிமூன்று வருட திருமண வாழ்க்கையை விட உணர்ச்சிகரமான, உணர்வு பூர்வமான, சண்டையும் சமாதானமும், சரசமும் சல்லாபமும் , எதிர்பார்ப்பும் ஏமாற்றமும், பதட்டமும் பரிதவிப்பும், சிணுங்கலும் சிரிப்புமான கடந்த ஒன்றரை வருடங்களில் சௌமித்ரனும் ருக்மிணியும் அத்தனை நெருங்கியிருந்தனர்.

**************

“நாம குழந்தை பெத்துக்கலாமாடீ?”

“உனக்கு வேணும்னா பெத்துக்கலாம் சௌ” என்றவளை முறைத்தவன்,

“உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்”

“வேணும்னுதானே சௌ கேட்ட?”

“நீதான் ஒத்துக்கலையே?”

“நான் அப்டி சொன்னேனா?”

“அப்ப உனக்கு ஒகேயா?”

“வேண்டாம்னா விடவா போற?”

“...”

“குட்டிப் பையனாட்டம் அதுக்குள்ள பலூன் ஊதியாச்சு, சும்மாடா… எனக்கும் ஓகேதான்”

“முனீஸ்…”

ஒரு கணம் இருக்குமிடம் மறந்து நெருங்கியவனைத் தடுத்தவள்
“அதுக்குன்னு இங்கேயேவா சௌ?” எனவும் சத்தமாகச் சிரித்துவிட்டான்.

“இரு வரேன்” என உள்ளே சென்றவன், மைதிலியிடமும் மற்றவர்களிடமும் என்ன சொன்னானோ தெரியாது, அடுத்த ஐந்தாவது நிமிடம் ஹென்னூரை நோக்கி காரை எடுத்துவிட்டான்.

சந்ததி வேண்டுமெனத் தீர்மானித்த பின்புதான் ருக்மிணிக்கு எக்கச்சக்கமான கேள்விகளும் சந்தேகங்களும் தயக்கங்களும் வரிசை கட்டி வந்தன.

தங்களது வயது, ஆரோக்யம், ஒரு வருடத்துக்குள் பிறந்தாலுமே குழந்தை தன் குறைந்தபட்ச படிப்பை முடிக்கையில் தங்களுக்கு என்ன வயதாகும் என்ற கணக்கு…

“நல்ல ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், மியூஸிக் க்ளாஸ், மேல் படிப்பு, இதுக்கெல்லாம் நாம சம்பாதிக்கறது போறுமா சௌ?”

“பார்த்துக்கலாம் டா”

“இத்தனை வருஷம் கழிச்சு குழந்தை பெத்துண்டா எல்லாரும் என்ன சௌ சொல்லுவா?”

“எவடீ இவ, யார் என்ன சொன்னா என்ன? இப்ப ஸ்டார்ட் பண்ணி ரவுண்டா அஞ்சு கூட பெத்துப்போம், நம்ம இஷ்டம்டீ”

“அடப்பாவி சௌ, என்னை என்ன ஆர்க்கிட் செடின்னு நினைச்சியா?”

“ம்ப்ச், பீ ஸீரியஸ் மினி”

“ஸாரி… சௌ, சப்போஸ் ப்ரெக்னென்ட் ஆனா, உங்கம்மா, எங்கம்மா கிட்டல்லாம் எப்டி சொல்றது?”

“இதெல்லாம் ஒரு விஷயமாடீ, ஆமா, அவா கிட்டல்லாம் யாரு சொல்றது?”

“நீதான்”

பேச்சும் நினைவும் பிள்ளையையே சுற்ற, ருக்மிணி தடை நீக்கி பச்சைக்கொடி காட்டிய பரவசத்தில் மிதந்த சௌமித்ரனுக்கு, முதல் இரண்டு மாதங்கள் வரை அவளது உள்ளுணர்வுகள் புரியவில்லை.

ருக்மிணி பிள்ளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததுமே, அதற்கான ஆசனங்கள், மெதுவான நடைபயிற்சி, அதற்கேற்ற குளுமையான உணவுகள் எனத் தன்னை தயார் படுத்திக்கொண்டாள்.

தன் வயது கருதி, விரைவில் பிள்ளை உண்டாக வேண்டும் என்ற கணக்கீடு உள்ளே ஓடியதில், மெலிதான பதட்டமும் கவலையும் கொண்டாள்.

ருக்மிணி நெருக்கமான பொழுதுளில் வழக்கத்துக்கு மாறாக இறுக்கமாக இருப்பதைக் கண்ட சௌமித்ரன்,

“ரிலாக்ஸ் டா மினி. என்ன டென்ஷன் உனக்கு?”

“...”

முதல்முறை தானாக உருவான கருவை வலிந்து கலைத்தபோதும், இரண்டாம் முறை அது தானாகவே கரைந்தபோதும் வராத குற்றவுணர்வு …

இயற்கையாக நடக்கவேண்டிய ஒன்றைத் தேவையில்லை எனத் தீர்மானித்து, விலக்கி வைத்தபோது வராத எதிர்பார்ப்பு…

இரண்டு மாத சுழற்சியில் பிள்ளை நிற்காததில் வர,
“நமக்குக் குழந்தை வருமா சௌ?”

“ஏம்மா?”

“நாம வேணாம்னு சொன்னதால, கைக்கு எட்டற மாதிரி பக்கத்துலயே இருந்தாலும் தொடமுடியாதோன்னு தோண்றது சௌ. ஒரு மாதிரி tantalizing கா இருக்கு”

“முனீம்மா, தேவை இல்லாம யோசிச்சு உன்னையே கஷ்டப் படுத்திக்காதடா. நீ இத்தனை டென்ஷன் ஆனா, நமக்குக் குழந்தையே வே…”

மேல பேச விடாது பட்டென கையால் அவன் வாயை அழுததமாக மூடி இருந்தாள்.

“நாம ஒரு நல்ல டாக்டரை பார்ப்போமா?”

“வேண்டாம் சௌ”

“ஏன்?”

“தானா வந்தபோது நமக்கு அருமை தெரியலை சௌ. இப்ப மூணு மாசமா வரலைன்னதுமே டென்ஷனா இருக்கு”

“...”

“டாக்டர் ஸ்மித்தோட ரிப்போர்ட்படி நான் ஹெல்த்தியாதான் இருக்கேன். இயற்கையா வந்தா வரட்டும் சௌ. டீரீட்மென்ட்லாம் வேண்டாம்”

“மினி”

“பளீஸ், சௌ”

வலிந்து கருக்கலைப்பு செய்த தங்களுக்கு கடவுள் வரம் தராவிட்டால், சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி தங்களுக்கு இல்லை என ருக்மிணி நினைப்பது, சௌமித்ரனுக்குப் புரிந்தது.

“அது ஒரு நேரத்துல எடுத்த முடிவுடா முனீம்மா. அது தப்பாவே இருந்தாலும், இப்ப சரியாதானே யோசிக்கறோம்?” என அவன் எத்தனையோ சொன்னாலும், அந்த விஷயத்தில் அவனால் அவளை சமாதானம் செய்யவே இயலவில்லை.

“நாம குழந்தை வேண்டாம்னு தீர்மானிச்சது தப்பில்லை சௌ, நம்ம கிட்ட வந்த குழந்தையை… எவ்ளோ க்ரூயலா, ராட்சஸி மாதிரி…”

“மினி, டோன்ட் டூ திஸ் டு யூ டா, ப்ளீஸ்”

இந்துவின் திருமணத்தின்போது அவளை முதலிரவுக்குத் தயார் செய்த பெரியம்மா

“ இந்து, மாப்பிள்ளையை அனுசரிச்சு நடந்துக்கோ. சந்தோஷமா இருங்கோ. எந்த நேரத்துல குழந்தை ஜனிக்குனு சொல்ல முடியாது. சேர்ற நேரம் ஸ்வாமியை நெனைச்சுக்கோ. ஆரோக்கியமான, அறிவான குழந்தை பொறக்கும்”

என்றது ருக்மிணியின் நினைவுக்கு வர, கிறங்கும் தருணத்திலும் கடவுளை வேண்டினாள்.

உண்மையில் முதலில் மனம் மாறி, ஆசைப்பட்ட தன்னை விட, ஏதோ தனக்கான பரீக்ஷை போல், சவால் போல் கருதிய ருக்மிணியைக் கண்டு ‘தேவை இல்லாம இவளைக் கிளப்பி விட்டோமோ?” என்று கூட எண்ணினான் சௌமித்ரன்.

ஐந்து மாதங்கள் சென்ற நிலையில்,

“பெரியவளான பொண்ணை கல்யாணம் பண்ணாம , வீட்டுல வெச்சுண்டு இருந்தா, மாசம் ஒரு சிசுவைக் கொன்ன பாவம்” என்பாராம் ஜெயந்தியின் அம்மா,

சௌமித்ரன் “புரியலைடீ”

பதில் பேசாது தன் தோளில் சரிந்தவளை அணைத்துக் கொண்டவன், அடுத்து வந்த நாட்களில் அவளை நெருங்கவே தயங்கினான்.

மூன்று வரங்களுக்குப் பின், காலை, மதியம் இரண்டு நேரமும் சாப்பிட வராது, நந்திவனில் இருந்தவனை அழைக்க, “வரேன்டா, கொஞ்சம் லேட் ஆகும். மிடில் ஈஸ்ட்டுக்கு லோட் போறது”

சாப்பாடு, பழங்கள், ஃபிளாஸ்க்கில் காஃபியுடன் ருக்மிணியே நந்திவனுக்குச் சென்றாள்.

க்ளாஸ் ஹவுஸில் சௌமித்ரன் பிஸியாக இருந்தான். இருட்டி விட, விளக்கொளியில் வேலை நடந்தது. டெலிவரி வேன்கள் கிளம்பியதும், பணியாட்கள் சென்றுவிட, கோகுலும் புறப்பட்டான்.

“நாமும் போகலாம், வா”

“முதல்ல சாப்பிடு சௌ”

உண்டு முடிப்பதற்குள், காற்று குளிர்ந்து, வலுவாக மழை பெய்தது. மின்சாரம் நின்றுவிட, செக்யூரிடிக்கு அழைத்து, கட்டிடத்துக்கு உள்ளேயே இருக்கச் சொன்னான்.

உணவும் காற்றும் மழையும் கண்களைச் சுழற்ற, ருக்மிணியின் துப்பட்டாவைக் கேட்டு வாங்கி, தரையில் விரித்துப் படுத்த நொடி உறங்கி இருந்தான்.

கையில் இருந்த மொபைலைக் கூடப் பார்க்கத் தோணாது, செடிகளின் நடுவே, இலையும் பூவும் மண்ணும் மணக்க, ஏதேதோ நினைத்தபடி, உறங்கும் கணவனை ஒட்டி உரசியபடி அமர்ந்திருந்தாள். ஓரிரு முறை அவனது தலை கோதினாள். முத்தமிட்டாள்.

‘என் சௌ’

இயற்கை தானும் குளிர்ந்து, சகல ஜீவராசிகளையும் குளிர்வித்ததில், ருக்மிணியும் தன் இறுக்கம் தளர்ந்து, குளிர்ந்தேலோர் எம்பாவையானாள்.

மழை நின்றிருக்க, பதினோரு மணி போல் மின்சாரம் மீண்டதில், கண்விழித்த சௌமித்ரன், “தூங்கலையா நீ, குளூர்றதா?” என எழ, வீடு வந்தனர்.

அடுத்த வாட்டம் மழை தொடங்கி இருக்க, வெந்நீரில் குளித்து வந்தவனிடம் சூடான ராகி மால்ட்டை நீட்டினாள்.

“தேங்க்ஸ் பேபி, நீ குளிக்கல?”

“மூட் இல்ல சௌ. நந்திவன்ல சில்லுனு இருந்துது. எம் மேலெல்லாம் ஆர்க்கிட் வாசனை வர ஃபீல். நல்ல ஃப்ராக்ரன்ஸ், இல்ல?”

“ஆ..ஹான்… ஹூ….ம்”

“என்ன செய்ற சௌ?”

“மோப்பம் புடிக்கறேன்டீ, அப்டியே டேஸ்ட்டா இருக் …”

கூதலும் கூடலும் சேர, மலர்ந்து மகரந்தம் தாங்கினாள் மனைவி.

******************

வரம் வரக் காத்திருந்தவளுக்கு சரியாக முப்பத்தைந்து நாட்களிலேயே அறிகுறிகள் தொடங்கி விட,
கர்ப்பத்தை உறுதி செய்தாலும், இன்னும் சிறிது நாள்கள் கழித்தே வீட்டிற்குச் சொல்ல முடிவு செய்தனர். மேலும் பத்து நாள் செல்ல, வயிற்றில் எதுவும் தரிக்காது வெளியேற்றியவள்,

“வேலையை விட்டுடவா சௌ?”

“அதை பொறுமையா யோசிக்கலாம். இப்ப
அம்மாவை வரச் சொல்லவா?”

“வேணாம்”

“உங்க அம்மாவைடீ”

“யாரும் வேணாம் சௌ, உன்னோடயே இருக்கேன்”

வாக்கியத்தை முடிக்கும் முன்பே ஓங்கரித்துக் கொண்டு வர, வாஷ்ரூமுக்கு ஓடினாள்.

ஆனால், அடுத்த வாரமே சௌமித்ரனுக்குப் பிறந்தநாள் வந்ததில், அசோகாவும் மைசூர் போண்டாவுமாக ஆஜரான மைதிலியும் ரேகாவும், ஒரு வாய் ஸ்வீட்டுக்கே உமட்டிய ருக்மிணியைப் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டனர்.

“ஏன் சொல்லலை?”

“இல்லம்மா…”

“என்ன, இப்பவும் ஏதாவது கோளாறு பண்ண ப்ளானா, சிசுஹத்தி மஹாபாவம்டா”

அந்தப் பதமே கலவரத்தைக் கொடுக்க, ருக்மிணிக்கு சட்டென அழுகை வந்துவிட்டது.

சௌமித்ரன் “நீ வேற ஏம்மா, அவளே பயத்துலயும் டென்ஷன்லயும் சுத்தறா” என்றவன், அவள் அமெரிக்கா சென்றபோது நடந்ததை உளறி விட,

“இதுக்குதான் நீ அவசரமா ஓடினியா? இத்தனை நடந்திருக்கு, பெரியவாகிட்ட சொல்லணும்னு கூடத் தோணலையா உனக்கு?”

“...”

“லேகியம், பத்தியம் ,காரம், கருக்குனு எதுவும் சேராம, அந்த ஊர்ல போய் அட்டை மாதிரி பீட்ஸாவும், கொழகொழன்னு பாஸ்தாவும் சாப்ட்டா உடம்பு எப்டி திடப் படும்? அபார்ஷன்னா லேஸா, எல்லாமே விளையாட்டா உங்களுக்கு? வயசுக்கு தக்கன வளர வேண்டாம்?”

ரேகா “போறும்மா, எத்தனை திட்டுவ, சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கா. கங்கிராட்ஸ் ருக்கு. உனக்கும்தாண்டா மித்ரா, ஃபைனலி நான் அத்தையாகப் போறேன்”

மைதிலி ருக்குவிடம் “அதுசரி, இப்பவாவது நல்ல புத்தி வந்ததே, அதுவே சந்தோஷம். ஆனா ஒண்ணு, பகவோனோட அமைப்புல இதை ரொம்ப நாள் ரகசியமா வெச்சுக்க முடியாது. இதையாவது உங்கம்மா கிட்டயாவது சொன்னயா?”

“இல்லைம்மா”

அவரே ஜெயந்திக்கு அழைத்துப் பேசினார். நேரமாகிறது என்று புறப்பட்ட ரேகா “வாம்மா, போகலாம்”

“இந்தப் பொண்ணை இப்டி திண்டாட விட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன், என்னடா, நான் இங்க இருக்கலாந்தானே”

சௌமித்ரன் “என்னம்மா இப்டி கேக்கற?”

முன்பானால் எப்படியோ, இப்போது மாமியார் காட்டிய உரிமையிலும் அக்கறையிலும் நெகிழ்ந்த ருக்மிணி கண்கலங்க, அதற்கும் திட்டினார்.

“அதென்ன பொசுக் பொசுக்குன்னு அழற? எப்போதும் போல திடமா இரு ருக்கு. பகவான் மேல பாரத்தைப் போட்டு, நிம்மதியா இரு. வேலை பார்க்க முடிஞ்சா பாரு. இல்லைன்னா விட்டுடு. எது சௌகர்யமோ செய். என்ன வேணுமோ கேளு, பண்ணித் தரேன்” என்றவர், ஜெயந்தி வந்து தங்கிய நாள்களைத் தவிர இங்கேயேதான் இருந்தார்.

புளிப்பும் அளவான உரைப்புமாக கலந்த சாதங்களும், தொக்கு, துவையல் வகைகளும் செய்து தந்தார்.

பேரனையோ பேத்தியையோ கண்டு விடும் ஆசையில், அறுபத்தாறு வயதிலும் ஓடியோடி மருமகளின் கையில் கொடுக்கும் மாமியார் மைதிலியை, இப்போது ருக்மிணியால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும், தன் வயது, தன்னால் பர்ஃபெக்ட் அம்மாவாக இருக்க முடியுமா, தேவையான அளவு தாய்ப்பால் வருமா, இத்தனை வருடங்கள் கழித்துப் பெற்றுக்கொண்ட குழந்தையை விட்டுவிட்டு வேலை பார்க்க வேண்டுமா என நாளொரு கேள்வியும், பொழுதொரு சந்தேகமுமாய் சௌமித்ரனை ஆட்டி வைத்தாள் ருக்மிணி.

ருக்மிணி, சௌமித்ரனுக்கு அவனது உணர்வுகளை அவனே இனம் காணவோ, புரிந்துகொள்ளவோ, வெளிப்படுத்தவோ வாய்ப்பும் நேரமும் தரவே இல்லை.

ஆறாம் மாதத்தில் இருந்து கர்ப்ப கால ரத்த அழுத்தம் சற்று கூடுதலாக இருந்தது. அவளது கம்பெனியில் ஆறு மாதங்கள் வரை மெட்டர்னிடி லீவ் உண்டு என்பதால் வேலையை விடாது ஒர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தாள். பெரும்பாலும் ஆன்லைனில் இணைந்து கொள்பவள், அதி அவசியமான மீட்டிங் எனில் மட்டும் அலுவலகம் சென்றாள்.

மிக நெருங்கிய உறவுகளுடன் மைதிலியின் வீட்டில் வைத்து எட்டாம் மாதம் வளையலிட்டு, சீமந்தம் செய்தனர். திருச்சிக்கு அழைத்த ஜெயந்தியிடம் மறுத்த சௌமித்ரன், அவரையும் போக விடவில்லை.

ருக்மிணியும் “தனியா ஏம்மா, நீயும் இங்கேயே இரு” என்றாள். ஜெயந்தி வரவும், தன் வீட்டுக்கு சென்ற மைதிலி, நினைத்தபோது வந்து பார்த்துவிட்டுச் செல்வதும், எதையாவது செய்து எடுத்துக்கொண்டு வருதுமாக இருந்தார்.

“ஏம்மா அலையற, இங்கேயே இரேன்” - சௌமித்ரன்.

“ருக்குக்கு இந்த நேரத்துல அம்மா சமையலை சாப்பிடத் தோணும். வயசானாலும் அம்மாட்ட பின்னிக்க, எண்ணெய் வெச்சுக்க, மடில படுத்துக்கன்னு சலுகையா இருக்க ஆசை இருக்கும். நான் இருந்தா சங்கடப் படுவள்டா. இன்னும் ஒரு மாசந்தானே, குழந்தை பொறந்தா வந்துடப் போறேன்”

கருத்தரிக்க முடிவு செய்த நொடி முதல் மனைவிக்குத் தைரியமளித்து, தட்டிக்கொடுத்த வண்ணம் இருந்தவனுக்குத் தன் மனோதிடமெல்லாம் ருக்மிணியோடு லேபர் வார்டுக்குள் சென்றுவிட்ட உணர்வு.

‘இந்த டென்ஷனுக்கு DINK ஆவே இருந்திருக்கலாமோ’

“ஓ நோ! கடவுளே, ஸாரி , ஸாரி கடவுளே, நான் சொன்னதை மறந்துடு’ என தான் நினைத்ததை டெலீட் செய்ய பட்டனைத் தேட,

“சௌமித்ரன் ஸார், பாய் பேபி ஹுடித்தே, நார்மல் டெலிவரி, வெயிட் நாலு கிலோ” என்ற செவிலியின் குரலில் கலைந்தவன், “மினி?”

“இன்னொரு அரை மணில ரூம்ல பார்க்கலாம்”

வாழ்த்துகள், சந்தோஷப் பரிமாறல்களுக்கு நடுவே, அமைதியாக நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

மீண்டும் அதே நர்ஸ் குழந்தையுடன் வர, ரேகா அடம் பிடித்து முதலில் குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

“அப்படியே மித்ரன்தான்”

“கண்ணும் கலரும் ருக்குவேதான்”

மற்றவர்கள் குழந்தையிடம் தங்களின் குடும்ப அடையாளத்தைத் தேட, மகனை ஏந்திய சௌமித்ரனின் கைகள் மெலிதாக நடுங்கின.

ருக்மிணியைப் பார்க்க கும்பலாகச் செல்ல, எவரையும் பொருட்படுத்தாது, குனிந்து மனைவியின் நெற்றியில் தன் நெற்றியை வைத்து அழுத்தியவனிடம் அசைவில்லை.

தந்தை இறந்தபோது கூட கலங்கினாலும் அழாத சௌமித்ரனின் கண்கள் சிவந்து கண்ணீரால் நிரம்பி இருந்தது.

“சௌ?”

“மித்ரா”

கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்தவன் “ஐ’ம் ஆல்ரைட், நான் ஓகேதான்”

மற்றவர் வெளியேறிய பின், ருக்மிணி “பையன் பொறந்ததால பேர் வைக்கற பிரச்சனைல இருந்து எஸ்கேப் ஆயிட்ட சௌ”

“அதுக்கென்ன, அடுத்த வருஷமே பேர் வைக்கன்னே ஒண்ணை ரெடி பண்ணிட்டா போச்சு”

“போடா, பூமர்”

“ப்ரிசைஸ்லி” எனச் சிரித்து, ருக்மிணியின் இதழில் அழுந்த பதிந்து “பெஸ்ட் மொமென்ட் ஆஃப் லைஃப் டீ முனீஸ்” என்றவனின் கண்களில் நிம்மதியும் நிறைவும்.


[பூமர்/ Boomer : இரண்டாம் உலகப் போரின் அழுத்தங்களுக்குப் பின், 1946 - 1964 இடைப்பட்ட காலத்தில் உலகெங்கும் குழைந்த பிறப்பு அதிக அளவில் அதிகரித்தது. இதை பேபி பூமர்ஸ் அல்லது பூமர்ஸ் என அழைக்கிறனர்]
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: இழைத்த கவிதை நீ! 15 - FINALE 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Lakshmi

Member
Joined
Jun 19, 2024
Messages
59
காலத்திற்கேற்ப கதை.வாழத்துக்கள் சுதா. கதைக்கான கரு சூப்பர்.கதை அவ்வளவு அழகாக இருந்தது. சில கதைகள் எப்பொழுதும் மனதை விட்டு மறையாது.என்னைப் பொறுத்த வரையில் இந்த கதையும் அதில் ஒன்று. மேலும் மேலும் நிறைய கதைகளை எழுத வேண்டும்.
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
15
அட அடா பிள்ளையை வச்சிட்டு இந்த மாடர்ன் couple பண்ணுற அட்ராசிட்டி யை கொஞ்சம் காட்டி இருக்கலாம் வேதா மா
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
23
அட அடா பிள்ளையை வச்சிட்டு இந்த மாடர்ன் couple பண்ணுற அட்ராசிட்டி யை கொஞ்சம் காட்டி இருக்கலாம் வேதா மா
இன்னும் ஒரு எபி இருக்கு டீச்சர்
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
40
காலத்திற்கேற்ப கதை.வாழத்துக்கள் சுதா. கதைக்கான கரு சூப்பர்.கதை அவ்வளவு அழகாக இருந்தது. சில கதைகள் எப்பொழுதும் மனதை விட்டு மறையாது.என்னைப் பொறுத்த வரையில் இந்த கதையும் அதில் ஒன்று. மேலும் மேலும் நிறைய கதைகளை எழுத வேண்டும்.
சரியான வார்த்தைகள். திரும்ப திரும்ப படிக்க மனத்தை மாற்ற யோசிக்க வைக்கும்
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
40
அருமையான பதிவு. நல்ல கதை கரு. அமெரிக்காவை இந்தியாவோ கல்யாணமான பிறகு குழந்தை முக்கியமான விஷயம்தான் இன்றைய இளைய சமுதாயம் உணர வேணடும்
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
40
மித்ரன் லூடடி தாங்கல...அதைவிட ருக்மணி..எப்படியோ வழிக்கு வந்தாங்க
 
Joined
Jun 19, 2024
Messages
19
😍😍😍

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே..
வானம் முடியும் இடம் நீதானே..

 
Top Bottom