அத்தியாயம் 16
"சித்து! கவி எங்க?" என அமலி கேட்க,
"அப்பவே கிளம்பி கீழே வந்துட்டாளே ம்மா?" என படிகளில் இறங்கி வந்தான் சித்தார்த்.
"கிளம்பிட்டாளா? இங்க வரலையே டா!" என அவர் சொல்ல,
"வரலையா?" என சொல்லும் நேரம் பின்பக்க வாசலில் இருந்து மலர்களுடன் உள்ளே நுழைந்தாள் கவிபாலா.
"பூப்பறிக்கவா போன?" அமலி புன்னகைக்க,
"அம்மா த்தை! காலையில சாமி கும்பிட பூஜை ரூம் போனேன். பூ இல்லாததை பார்த்ததும் தான் பறிக்கலாம்னு தோணுச்சு!" என்றவற்றை பூஜை அறைக்கு கொண்டு சென்றாள்.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. முதல் ஒரு மாதமும் அவர்களுக்காகன தனி நேரங்களும் நினைவுகளும் என அழகிய நாட்கள் மட்டும் நிறைந்தவை அவை.
இருக்கும் சொந்த பந்தங்கள் உறவுகள் என மொத்த விருந்தையும் முடித்துக் கொண்ட கையோடு சித்தார்த் அவளை பாலி கூட்டி சென்றான் ஹனிமூன்.
அங்கே இருந்த ஒரு வாரமும் அவளைவிட்டு அகலவில்லை அவன். சுற்றி திரிந்து கதையோடு காதலையும் பேசி என அவளில் மட்டும் முதலும் முடிவுமாய் சித்தார்த் இருந்த நாட்கள்.
திரும்ப வீடு வந்து நான்கு நாட்களில் சித்தார்த் அலுவலகம் கிளம்ப தயாராக, கவிபாலா இயல்பாய் தான் இருந்தாள்.
ஆனால் சித்தார்த்தால் அப்படி இருக்க முடியவில்லை.
"உனக்கு போரடிக்குமே பாலா! என்ன பண்ணுவ?" என்றவனுக்கு வீட்டில் அவளை மட்டும் விட்டு செல்ல அத்தனை வருத்தம். அன்னையும் கடைகளைப் பார்க்க கிளம்பி விடுவாரே என.
"இதென்ன? நான் என்ன குழந்தையா? அதெல்லாம் நான் பார்த்துப்பேன். கிளம்புங்க!" என கவிபாலா தான் அவனை கீழே இழுத்து வந்திருந்தாள்.
"கிளம்பிட்டியா சித்து?" நேற்று இரவே அவன் அலுவலகம் செல்லப் போவதை கூறி இருந்ததால் அமலி சாப்பிட அமர்ந்திருந்தவர் கேட்க,
"ஹ்ம் ம்மா!" என்றவன் அவளோடு சாப்பிட அமர்ந்தான்.
"சரி அப்போ அவன் ஆபீஸ் கிளம்பட்டும்! அப்புறம் நாம போகலாம்!" அமலி கவிபாலாவிடம் சொல்ல, எங்கே அழைக்கிறார் என சித்தார்த்தோடு கவிபாலாவிற்குமே புரியவில்லை.
"ஷாப்பிங் எதாவது போறிங்களா ம்மா?" என சித்தார்த் தான் கேட்டான்.
"ஷாப்பிங்கா? ஏன் டா? ஸ்டோர்க்கு போகணும்ல?" என அன்னை சொல்லவும் அவன் புரியாமல் பார்க்க,
"நீ ஆபீஸ் போய்ட்டா அவ தனியா இருப்பாளே! அதான் கூட்டிட்டு போலாம் நினச்சேன். அவளுக்கும் இனி தெரியணும்ல?" என்று சொல்லவும் சித்தார்த் கவிபாலா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
"அவளுக்கு இஷ்டம் இருந்தா வரட்டும். இல்லைனா சும்மா சுத்தி பார்த்துட்டு கூட வரட்டும் டா. நான் கம்பல் பண்ணல!" என அன்னை சொல்ல,
"அய்யோ அத்தை நான் வர்றேன்!" என்றாள் வேகமாய் கவிபாலா.
அதில் அவள் விருப்பமும் தெரிய, "ம்மா! நானும் அவளுக்கு போரா இருக்குமேனு தான் நினைச்சுட்டு இருந்தேன்!" என சித்தார்த்தும் சிரிக்க,
"எனக்கு அப்புறம் அவ தானே எல்லாம்! சரி நீ சாப்பிட்டு கிளம்பு!" என்று அமலி சொல்லவும் நிம்மதியாய் கிளம்பினான் என்று தான் சொல்ல வேண்டும் சித்தார்த்தை.
இப்படி திருமணம் ஆன இரண்டாம் மாத தொடக்கத்திலேயே தன்னோடு வைத்துக் கொண்டு கவிபாலாவிற்கு தொழிலை கத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் அமலி.
அன்று ஒரு மீட்டிங் இருக்கவே அமலி விரைவில் தயாராகி வெளிவந்து கவிபாலாவை தேட, கை நிறைந்த பூக்களுடன் பின்பக்கம் இருந்து வந்தவள் அதை கடவுளிடம் சமர்ப்பித்துவிட்டு விளக்கேற்றி தயாராய் வர,
"நீ அப்புறம் கூட வானு சொல்ல தான் தேடினேன்.. நீ எனக்கு முன்னாடி தயாரா இருக்கியே!" என்றார் அமலி.
"நேத்து மீட்டிங்னு பேசும் போது கூட இருந்தேனே த்தை! அதான் கிளம்பிட்டேன். நானும் வர்றேன்!" என்றாள்.
"ரொம்ப பொறுப்பான பொண்ணு டா சித்து!" மகனிடம் புகழ,
"ஆமாமா! பொறுப்பு தான்!" என முறைத்தான் அவளை.
மாலை நான்கு மணிக்கெல்லாம் கவிபாலாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார் அமலி. சித்தார்த் ஆறு மணியில் இருந்து ஒவ்வொரு நேரம் எட்டு மணியும் ஆகிவிடும் வீட்டிற்கு வர.
ஹனிமூன் சென்று வந்த பின் இருவருக்குமான நேரங்கள் குறைந்ததாய் தான் அவன் உணர்ந்தான். இரவுகளின் நீளம் எல்லாம் அவர்களுக்கே போதாத ரகசிய நேரங்கள் அவை.
புரிதலில் ஏந்த குறையும் இல்லை இருவருக்கும் என்றபோது வாழ்வு இனிமையாய் தான் சென்று கொண்டிருந்தது.
"சண்டே நான் ஊருக்கு போறேன் சித்தார்த். அங்க நம்ம சொந்தக்காரங்க விஷேஷம்னு இன்வைட் பண்ணினாங்க இல்ல?" என அமலி சொல்லவும் சித்தார்த் மனைவியைப் பார்க்க,
"நானும் வர்றேன் த்தை!" என்றாள் வேகமாய்.
"ம்ம் கூட்டிட்டு போங்க ம்மா! எனக்கென்ன! நான் இங்க ஆபீஸ், ஸ்டோர், வீடுன்னு இருந்துக்குறேன்!" என்றவன் மனைவியை முறைக்க, நாக்கைக் கடித்துக் கொண்டாள் அவள்.
"உன் மேல அவனுக்கு கோவமாம் கவி!" என சிரித்தவர்,
"நம்பிட்டேன் டா!" என்று கிண்டல் செய்து,
"நான் உன் பாலாவை எங்கேயும் கூட்டிட்டு போகல. நீ பார்த்துக்கோ. அன்னைக்கு ஆபீஸ் போக வேண்டாம்ல? ஸ்டோரை மேனேஜர் பார்த்துப்பார். நீங்க போக வேண்டாம்!" என்றும் சொல்லி,
"ரெண்டு நாள்ல வந்துடுறேன்!" என்று அமலி சொல்லிவிட,
"ம்ம் சரி ம்மா!" என்றான் உடனேயே சித்தார்த்.
"பேச்சுக்காவது சொல்றியா டா நீ?" என அப்போதும் சிரிக்க தான் செய்தார்.
"ம்மா!" என்றவன் அன்னையின் கிண்டலில் வெட்கம் கொள்ள,
"ஆபீஸ் ஒர்க் உனக்கு இப்ப டைட்டா தான் இருக்கும். எனக்கு தெரியும். அதுக்காக அவளையும் பார்க்காம இருக்க கூடாதுல்ல? நான் இல்லைனா நீ தானே அவளை பார்த்துக்கணும்?" என்றார் அமலி.
"என்னம்மா? இங்க இருக்க ஊருக்கு போக இவ்வளவு சொல்லனுமா? அதெல்லாம் நான் பார்த்துக்குவேன்!" என்றான் சித்தார்த்.
"என்னவோ குழந்தையை பார்த்துக்க போற மாதிரி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிங்க! எனக்கு தெரியாதா?" என இடையில் கவிபாலா முறைக்க,
"ஆமா பின்ன? நீ தான் வளந்த பாப்பா ஆச்சே!" என்ற அமலியை கவிபாலா முறைக்க,
"ச்சோ டைம் ஆச்சு! சரி வா போகலாம்!" என அமலி முன்னே செல்ல, சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைத்தவள் தடுமாறி நின்றாள்.
சித்தார்த் முதலில் கவனிக்கவில்லை. மீண்டும் இரண்டு எட்டுக்கள் வைத்தவளுக்கு நடக்க முடியாமல் போக,
"சித்து!" என அவன் பக்கம் திரும்பி தலையை உலுக்கி அவன் பக்கம் வந்தவள் சட்டென்று டைனிங் அறை நாற்காலியில் அமர்ந்து தலையை டேபிளில் சாய்த்துவிட,
அவள் அழைப்பில் திரும்பிய சித்தார்த் "ஹே பாலா!" என பதறிவிட்டான் அவள் சட்டென்று சாய்ந்ததில்.
"ம்மா!" என சத்தமிட்டு அழைக்கவும் அவன் பதட்டமான சத்தத்தில் அவருமே வந்துவிட்டார் உள்ளே!
"என்னாச்சு சித்து?" என அமலி அவள் தலையை தாங்க,
"தலையெல்லாம் சுத்துது த்தை!" என்றாள் தலையை பிடித்துக் கொண்டு.
சித்தார்த் உடனே தண்ணீரை எடுத்து புகட்ட,
"இரு லெமன் கொண்டு வர சொல்றேன்!" என திரும்பிய அமலி நியாபகம் வந்தவராய்,
"கவி!" என அழைத்து அவளை கேள்வியாயும் அப்படி இருக்குமோ என்பதை போலவும் பார்க்க, அவர் பார்வையில் தான் இவளுமே அர்த்தம் புரிந்து சிந்தித்ததில் கண்களை விரித்தவள்,
"அத்தை!" என்றாள் கண்கள் விரிய.
"கவிமா!" என அருகில் அமர்ந்துவிட்டார்.
"ம்மா என்னாச்சு?" அன்னையின் புன்னகையும் கவிபாலாவின் யோசனை சுமந்த அதிர்ச்சி முகமும் என முதலில் சுத்தமாய் புரியவில்லை அவனுக்கு.
"பாலா! என்ன பண்ணுது?" சித்தார்த் கேட்க,
"எல்லாம் நல்ல நியூஸ் தான் டா!" என்றார் அமலி.
ஒரு சில நொடிகள் அதிகமாய் தேவைப்பட்டது சித்தார்த்திற்கு அன்னை கூறியது புரிய.
"ஹே நிஜமாவா?" என கவிபாலாவைப் பிடித்துக் கொண்டான்.
"தெரியல! ஆனா.." என்றவள் பதட்டமாகி இருந்தாள் அந்த நேரம்.
"சரி விடு! ஹாஸ்பிடல் போய்டலாம்!" அவளை அதிகம் பயமுறுத்தாது அமலி சொல்லிட, பொங்கி வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு சித்தார்த் காரை செலுத்த, நகங்களை கடித்துக் கொண்டு பதட்டத்தை தணிக்க முடியாமல் இருந்த கவிபாலா அவ்வபோது கணவனையும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
அமலியுடன் இருவரும் மருத்துவமனை உள்ளே வந்து மருத்துவர் பரிசோதித்து வந்து, "எஸ்! நீங்க கன்ஸீவா இருக்கிங்க" என்று சொல்லும் வரை அந்த பதட்டம் தொலையாமல் இருந்த கவிபாலா, அவர் சொல்லவுமே சித்தார்த் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"வாவ் டா பாலா!" சித்தார்த் சொல்ல,
"கவி!" என அவள் முகம்வழித்துக் கொஞ்சினார் அமலி.
"ம்மா!" என்ற சித்தார்த் அன்னையை அணைத்துக் கொண்டவன்,
"நீங்க பாட்டி இனிமேல்!" என்றான் புன்னகைத்து.
இன்னும் உறைந்த நிலையில் தான் நின்றிருந்தாள் கவிபாலா.
"ஹே பாலா!" என தோள் தட்டி சித்தார்த் அழைக்க,
"சித்து!" என்றவள் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் உணர்வுகளை விளக்கும் வார்த்தைகளை தேடி கிடைக்காமல்.
"வீட்டுல தான் குழந்தையை பத்தி பேசினா கவி! இப்ப நிஜமாவே நம்ம வீட்டுக்கு குழந்தை வர போகுது டா!" என்ற அமலி நிஜமாய் குழந்தையாய் குதூகலித்தார் சந்தோசத்தில்.
"சரி! நீங்க போய் கவி அம்மா அப்பாவை பார்த்துட்டு வீட்டுக்கு வாங்க. நான் ஸ்டோர்ல மீட்டிங் என்ன பேசினாங்கனு பார்த்துட்டு வந்துடுறேன்!" என்று சொல்லி அனுப்பி வைக்க, வழி முழுதும் அமைதி கவிபாலாவிடம்.
வீட்டு வாசலில் சித்தார்த் காரை நிறுத்தி அவள் கைகளைப் பிடிக்க, திரும்பிப் பார்த்தவள் முகத்தில் வெட்கமும் பூரிப்புமாய் புன்னகை.
"லவ் யூ டி பாலா!" சித்தார்த் அவள் உள்ளங்கையில் முத்தமிட்டு சொல்ல,
"எனக்கு என்ன சொல்லனு தெரில சித்து! ஐம் ஸ்பீச்லெஸ்! நிஜமா எதிர்பார்க்கவே இல்ல!" கவிபாலா இன்னும் ஆச்சர்யம் மாறாமல் சொல்ல,
"சோ நெக்ஸ்ட் போஸ்டிங் இல்ல நமக்கு? அப்பா அம்மா!" சொல்லிக் கொண்டவன் உடலெல்லாம் சிலிர்த்தது.
கவிபாலாவும் அந்த வார்த்தைகள் கொடுத்த தித்திப்பில் அமர்ந்திருக்க, "வா வா! அத்தை மாமா ரியாக்சன் பார்க்கலாம்!" என இனிப்போடு இறங்கினர்.
நிஜமாய் இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. தங்கள் குழந்தை இன்னொரு குழந்தைக்கு தாயாக இருக்கிறாள் என்ற செய்தியில் இருவரும் ஆனந்த அதிர்ச்சி அடைய,
"நல்லாருக்கணும் டா நீ!" என எப்போதும் போல வாழ்த்துவதை தவிர வேறு வார்த்தைகள் தெரியவில்லை மதி விஜயாவிற்கு.
"கவி அம்மா!" என விஜயா சொல்லிப் பார்த்தவருக்கு கண்ணீர் கன்னம் தொட,
"ம்ம்ஹுஹ்ம்ம்! பாலாம்மா!" என்றான் புன்னகைத்து சித்தார்த்.
"என் பொண்ணு!" என்று பார்த்து நின்ற மதி உள்ளம் முழுதாய் நிறைந்துவிட்டது.
தொடரும் எபிலாக்

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.