அத்தியாயம் 12
கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வந்து கொண்டிருந்தாள் கவிபாலா.
கவிபாலாவை சென்னை அழைத்து வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. முழுதாய் பத்து நாட்கள் முடிந்திருந்தது கவிபாலாவிற்கு விபத்து நடந்து.
எல்லாம் சரியாய் சென்றிருந்தாள் இன்னும் பத்து நாட்களில் திருமணம். இந்த நினைவில் தான் அர்ந்திருந்தவளின் எண்ணத்தில் ஓடிக் கொண்டே இருந்தது..
விஜயா மகளை விட்டு எங்கும் நகரவில்லை. அவள் முகம் பார்த்து தேவை அறிந்து என கூடவே இருந்தார்.
முடிந்த மட்டும் அவளுடன் சித்தார்த் இருக்க, "போய் ஆபீஸ் பாருங்க. அதான் அம்மா இருகாங்க இல்ல?" என அவளே தான் சொல்லி அவனை அனுப்பி வைப்பதும்.
அப்பொழுதும் கூட சென்று அரை மணி நேரத்திற்கு ஒரு அழைப்பு கொடுப்பான். இந்த நேரம் தூங்க வேண்டும். இந்த நேரம் இதை குடிக்க வேண்டும் என ஒரு பாடம். அத்தனையும் விஜயாவிடம் தான்.
எத்தனை பேரிடம் சென்று திருமணம் தள்ளி வைத்ததை என்னவென்று சொல்லுவான்? பத்திரிக்கை வைத்த அனைவரும் எத்தனை முக்கியமானவர்கள் அமலிக்கு என்று கவிபாலா யோசித்துக் கொண்டிருக்க, அமலி சரியாய் கவிபாலாவைப் பார்க்க அந்நேரம் வந்திருந்தார்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்துவிடுவார். இன்றும் வந்தவர் நலம் விசாரிக்க,
"சாரி அத்தை! என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்? இன்வைட் பண்ணினவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க இல்ல?" என வருந்தி கேட்க,
"அதுக்காக என்ன பண்ண முடியும் டா? போன் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீ அதையெல்லாம் நினச்சு ஒரி பண்ணிக்காத!" என்றார் அமலியும்.
"எல்லாரும் விஐபீ'ங்க இல்ல?" என இன்னும் அவள் வருந்த,
"என் மகனை விடவா விஐபீ'ங்க எனக்கு முக்கியம்?" என்ற சொல்லில் கவிபாலா நெகிழ,
"முதல்ல நல்ல ஹெல்தியா சாப்பிட்டு தெம்பா வா! அப்புறமா கல்யாணம் என்னனு பேசிக்கலாம்." என்று ஆறுதலாய் சொல்ல,
"அவங்க எப்படி இருக்காங்க த்தை!" என்றாள் தான் சொல்ல வந்ததை கூற முடியாமல்.
"ஏன் தினமும் பாக்குற தான?" அமலி புன்னகைக்க,
"ஆனா பத்து நாள்ல என்னவோ மாதிரி ஆகிட்டாங்க!" என்றாள்.
"ஹ்ம்! சந்தோசமா இருந்தா முகம் பளிச்சுன்னு இருக்கும் கஷ்டமான நேரத்துல கொஞ்சம் சதை விடும். சித்துவுக்கும் உனக்கும் இப்ப கஷ்டமான நேரம். நீ தேறி வந்து தான் அவனைப் பார்க்கணும். யார் சொல்லியும் அவன் கஷ்டம் இல்லைனு ஆகிடாதே! சும்மாவா பாலா பாலானு சுத்தி வந்தான்?" என்று சிரிக்க, கவிபாலா தலை தாழ்த்திக் கொண்டாள்.
"ரொம்ப டல்லாகிட்டான். எனக்கு தெரிஞ்சும் சித்துவை நான் இப்படி பார்த்ததே இல்ல!" என்று பெருமூச்சுடன் அமலி சொல்ல,
"நீங்க சொல்லுங்க த்தை! எனக்கு தான் ஒண்ணுமில்லயே! அவங்களை கவனியுங்க!" என்றாள் கவிபாலா.
"அதான் சொன்னேனே! நீ நடந்து வந்து அவன் பார்த்தா தான் அவன் கவலை தீரும். அவன் உலகமே இப்ப நீ தான். கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளந்த பையன் அவன்" என்றவர்,
"பிடிச்ச பொண்ணோட கஷ்டத்துல அவனும் துணையா இருக்கான் இப்போ. எனக்கு சந்தோசம் தான் அதுல!" என்றும் சொல்ல, வருத்தமானாள் அவள்.
"எனக்கும் தோணுச்சு! ஏன் இவன் இவ்வளவு கஷ்டத்தை தாங்கணும்னு! ஆனா ஹாஸ்பிடல்ல அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என அவன் பேசியதை எல்லாம் கவிபாலாவிடம் அமலி சொல்ல, கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு.
"சொல்லுவாங்களே பூர்வ ஜென்ம பந்தம்னு. அப்படி தான் உன்னோடதும் சித்தார்த்ததோடதும் போல.
"சித்தார்த் எவ்வளவு உறுதியா இருக்கான். உன்னை அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு நாளுக்கு நாள் நான் பார்த்துட்டு இருக்கேன் அவன் கூட இருந்து" என்றவர்,
"நீ இல்லைனா அவனும் காணாம கரைஞ்சு போய்டுவானாம்!" என சொல்ல சொல்ல, கேட்டவளுக்கு தான் தாள முடியவில்லை.
"எனக்குமே தெரியும் கவிமா! நீ இல்லைனா அவன் இல்ல. அதுக்காக தான் சொல்றேன். சீக்கிரமா சரியாகி வா. வந்து அவனை கவனிச்சுக்கோ! நிஜமாவே கரைஞ்சுடுவான் போல!" என்றார் அமலியும் கலங்கிய குரலில்.
விஜயா காபியை கொண்டு வந்து கொடுக்கவும் அதை குடித்தவர் மேலும் சில நிமிடங்கள் இருந்துவிட்டு தான் கிளம்பினார் அமலி.
"ம்மா!" என கவிபாலா அன்னையை அருகில் அழைக்க,
"நானும் கேட்டுட்டு தான் இருந்தேன் கவி! ரொம்ப நல்ல பையன் சித்தார்த். நானும் இவ்வளவு நினைக்கல. சந்தோசமாவும் இருக்கு. கஷ்டமாவும் இருக்கு. சித்தார்த்க்காகவாச்சும் சீக்கிரமா குணமாகி வா!" என்றார் அருகில் அமர்ந்தபடி விஜயா மகளிடம்.
"மனசே சரி இல்ல ம்மா! ஒரு மாதிரி நிம்மதியே இல்லாத மாதிரி இருக்கு!" என்றாள் கவிபாலா.
"சரியாகிடும் விடு!" என்றவர் தலைகோதலில் கண்களை மூடிக் கொண்டாள்.
அடுத்தநாள் சித்தார்த் வரும் நேரம் அவனுக்காகவே காத்திருந்தாள் கவிபாலா.
"ஓய்!" என அவளருகில் புன்னகையுடன் சித்தார்த் வந்து அமர,
"லேட்டா வந்திருக்கிங்க!" என்றாள் முறைத்தபடி.
"வெயிட் பண்ணியா என்ன?" என்றவன் புன்னகையில் அவள் கண்கள் நிலைக்க,
"என்ன பாலா?" என்றான் சித்தார்த்.
"ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க!" என்றாள் அவனை மொத்தமாய் பார்த்தபடி.
"இந்த லுக் இப்ப தேவை தான்!" என்றவன் அவள் கால்களைப் பார்க்க, சிரித்துவிட்டவள்,
"நான் பார்த்தது வேற!" என்று சொல்ல,
"நான் சொன்னதும் வேற தான்!" என்றவனை,
"சித்து!" என்றவள் அவன் தோளோடு சாய,
"என்னவாம்? காலையிலே?" என்றான் சித்தார்த் இன்னும் சிரித்தபடி.
"நேத்து ஈவினிங் அத்தை வந்தாங்க!"
"ம்ம் சொன்னாங்க!"
"ம்ம் நீங்க பண்ணினதை எல்லாம் சொன்னாங்க!" என்றவள் அமலி கூறியதை சொல்ல,
"சோ?" என்றான் தோள்களை குலுக்கி.
"என்ன நீங்க? எனக்கு சரியாகி வரும் போது நீங்க இப்படி தான் இருப்பிங்களா? கஷ்டமா இருக்குன்னு சொல்றேன்!" என்றவள் அவன் கைகளைக் கட்டிக் கொள்ள,
"நான் என்ன வேணும்னா சாப்பிடாம தூங்காம உடம்பை பார்த்துக்கல?" என்று சிரித்தவன்,
"அம்மாக்கு தெரிஞ்சது நீ நினைக்குறதை எல்லாம் விட இன்னும் நிறைய இருக்கு" என்றவன் சொல்லில் அவள் நிமிர்ந்து பார்க்க,
"சீக்கிரமா குணமாகி வா! இல்லைனா நான் சரியாக வாய்ப்பில்ல!" என்றான் கண்களோடு ஆழமாய் கலந்து.
"நீங்க இப்படி இருந்தா நான் எப்படி சரியாக முடியும்?" கவிபாலா கேட்க,
"நீ சரியானா மட்டும் தான் நான் சரியாக முடியும். வேணா ஒரு போட்டி வச்சுக்கலாம். உனக்கு சரியாகி நீ நடந்து ஓடி என்னை தேடி வாயேன்! அவ்வளவு தான்! அன்னைக்கே நான் என்னை மீட்டுப்பேன்!" என்றவன் சொல்லில் இவன் இமைக்க மறந்து விழிக்க,
"நம்பிக்கை இல்லையா? மேஜிக் எல்லாம் இல்லை. நிஜமா நீ என்னை தேடி என்கிட்ட வந்துட்டா போதும்னு உள்ள ஒரு தவிப்பு ஓடிட்டே இருக்கு. அது சரியாச்சுனா போதும் நான் நார்மல் ஆகிடுவேன்!" என்றான்.
"சித்து!" என்றவளுக்கு மீண்டும் அழுகை வரும் போல இருந்தது.
"நீ அழுறதுக்காக சொல்லல. சரியாகி வானு சொல்றேன்!" என ஒரு கொட்டு அவள் தலையில் வலிக்காமல் வைத்தவன்,
"சிவனேனு கோவிலுக்கு வந்த உன்னை நான் பண்ணி வச்ச வேலைனு இப்ப வரை மனசே ஆறல! கல்யாணமும் இப்ப தள்ளிப் போச்சு. என்னால தான் எல்லாம் தப்பு தப்பா நடக்குது உன் லைஃப்ல!" என்றவன்,
"நீ என் வைஃபா என் வீட்டுக்கு வந்துடு! அதுவரை என் தவிப்பெல்லாம் அடங்காது!" என்றான் அவளை தோளோடு இறுக்கமாய் அணைத்து.
"ப்ச்! நான் உன்னை பார்த்துட்டு ஆபீஸ் போக வேண்டாமா? நீயும் அழுது என்னையும் பீல் பண்ண வச்சுட்டு..." என்றவன்,
"அத்தை மாமா எங்க?" என்று கேட்க,
"அப்பா வேலைக்கு போய்ட்டாங்க. அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. இருங்க சாப்பிட்டு போகலாம்!"
"லேட்டாயிடுமே! நான் வேணா மினி டிபன் சாப்பிடுக்கவா?" சித்தார்த் கேட்க,
"மினி டிபன்?" என்றவள் புரியாமல் விழிக்கும் முன்பே அவள் கண்ணத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தவன்,
"டேக் கேர்!" என அவள் அதிர்ந்து அமர்ந்திருக்கும் போதே சொல்லிக் கொண்டு வெளிவர, விஜயாவும் வந்துவிட்டார்.
வாசலிலேயே அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சித்தார்த்.
அத்தனை புன்னகை கவிபாலாவிற்கு. கன்னத்தில் கைவைத்துப் பார்த்துக் கொண்டவள் முகமெல்லாம் சிவந்துவிட்டது அவன் செய்த வேலையில்.
அடுத்தடுத்த நாட்கள் அவரவர் வேலையில் நகர, இரண்டு வாரங்கள் முடிந்திருக்கும் நேரம் மெதுவாய் நடைபழக ஆரம்பித்தாள் கவிபாலா.
"முடியலைன்னா ஸ்டாப் பண்ணிடு!" என கூடவே நின்று நடக்க வைத்தான் சித்தார்த்.
விஜயாவின் கவனிப்பில் கொஞ்சம் நன்றாய் அவள் தேறி வர ஆரம்பிக்க, மனமும் சித்தார்த் என்ற ஒருவனை எண்ணி அவனுக்காக தன்னை சீராக்கிக் கொள்ள, கால்களில் கொஞ்சம் கொஞ்சமாய் அசைவு கொடுத்து இப்பொழுது தான் கால்களை கீழே வைக்க பழகி இரண்டு அடிகளையும் எடுத்து வைத்தாள் கவிபாலா.
"கவிமா! உன்னை பார்க்க வந்திருக்காங்க!" என்ற மதியின் பின்னோடு ஸ்ரீதர் அபிநயா வர, அவர்களை எதிர்பார்க்கவே இல்லை கவிபாலா.
"சார்!" என்றவள் எழ முயல,
"இட்ஸ் ஓகே!" என்று சொல்லிவிட்டவன் இருக்கையில் அமர, அபிநயா முறைத்தபடி வந்து கவிபாலாவின் அருகில் அமர்ந்தாள்.
"நீங்க எப்படி அபி இங்க?" என நம்ப முடியாமல் கவிபாலா கேட்க,
"உன் போன் என்னாச்சு?" என்றாள் அபிநயா.
"அம்மா போன் தான் யூஸ் பன்றேன். அன்னைக்கு அச்சிடேன்ட்ல போன் மிஸ் ஆகிடுச்சு!"
"அந்த நம்பரை வாங்க வேண்டியது தானே?" அபிநயா கேட்க,
"வாங்கணும் டி! சித்தார்த் ரெடி பண்ணிட்டு இருகாங்க. நீங்க எப்படி இங்க அதை சொல்லு!" என்று கேட்கவும்,
"சித்தார்த் தான் சார்கிட்ட சொல்லி இருக்காங்க. சார் என்னை கூப்பிட்டு தெரியுமான்னு கேட்டாங்க. நாங்க உன் மேரேஜ்க்கு வர தான் பிளான். அன்னைக்கு அச்சிடேன்ட் ஆனது எங்களுக்கு தெரியவே செய்யாது. ஏன் டி சொல்லல!" என அபிநயா அத்தனை திட்டி வைக்க,
"அபிநயா! இதுக்காகவா வந்திங்க?" என்றான் ஸ்ரீதர்.
"கஷ்டமா போச்சு டி கேட்டதுல இருந்து!" என்று அபிநயா சொல்ல, கவிபாலா ஸ்ரீதரைக் கண்டாள்.
"இப்ப பரவால்லயா கவிபாலா?" என்று ஸ்ரீதர் கேட்க,
"சேர்ந்து தான் வந்திங்களா? சொல்லவே இல்ல?" என்று கிண்டலாய் சொல்லி உள்ளே சித்தார்த் வர,
"சும்மா இரேன் டா!" என்றான் ஸ்ரீதர்.
"ரைட் ரைட்!" என்ற சித்தார்த் புன்னகையில் கவிபாலாவிற்கும் எதுவோ புரிவது போல இருக்கவும் அவள் ஸ்ரீதரைப் பார்க்க,
ஸ்ரீதர் சித்தார்த்தின் காதை கடித்துக் கொண்டிருந்தான் ரகசியமாய் என்னவோ சொல்லிக் கொண்டு.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.