• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
அத்தியாயம் 13

"வாவ் பாலா!" என்று சொல்லி கவிபாலாவை சித்தார்த் நெஞ்சோடு அணைக்க,

"சித்து!" என ஒரு அடி வைத்தாள் அவன் கைகளில்.

"அழகா நடக்குறியே! பாராட்ட வேண்டாமா?" என்றவன் புன்னகையில் இவள் முறைக்க, அமலி வந்துவிட்டார்.

மருத்துவமனையில் கவிபாலாவின் பரிசோதனைக்காக வந்திருந்தனர் மூவரும்.

விஜயா மதி இருவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்க, தான் பார்த்துக் கொள்வதாய் சொல்லி தான் அவர்களை அனுப்பி வைத்திருந்தான் சித்தார்த்.

"இப்ப நல்ல இம்ப்ரூவ்மென்ட் இல்லம்மா?" சித்தார்த் அன்னையிடம் கவிபாலாவைக் காட்டி கேட்க,

"நீ எங்க டா அவளை இருக்க விட்ட? ஹாஸ்பிடல்ல குடுத்த ஸ்டிக்கை கூட ஒரு வாரத்துக்கு மேல யூஸ் பண்ண விடல நீ! அப்புறமும் கூட இந்த இம்ப்ரூவ்மென்ட் இல்லைனா எப்படி?" என சிரித்தார் அவர்.

"அதான் நான் இருக்கேனே! அப்புறம் எதுக்கு ஸ்டிக்? அதுமட்டும் இல்ல ஸ்டிக்கை குடுத்தா அதை மட்டும் தான் பேலன்ஸ் பண்றா!" என்றும் குறையாய் சொல்ல, புன்னகையோடு பார்த்தபடி மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்தாள் கவிபாலா.

"கொஞ்சம் டைம் ஆக வேண்டாமா சித்து? சட்டுனு நடக்க முடியாதே! வலிக்குதான்னு அப்பப்ப கேளு! உனக்காக வலியை தாங்கிக்க போறா!" அமலி சொல்ல,

"அப்படி எதனா பண்ணினா பிச்சுடுவேன் ராஸ்கல்! சீக்கிரம் சரியாகணும். சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்! ஓகே!" என்றவன் சொல்லில் அவள் வாய்விட்டு சிரிக்க, அவள் கன்னத்தில் தட்டினான் சிரித்தபடி.

இரண்டு மாதங்கள் முடிந்திருந்த போதும் இன்னும் முழுதாய் அவளால் நடக்க முடியவில்லை. மெதுவாய் அவள் நடக்க, அதற்கு தான் அத்தனை பாராட்டும் சித்தார்த்திடம் இருந்து.

மருத்துவரை பார்க்க சென்று வெளிவர, அவருமே நல்ல முன்னேற்றம் என்று சொல்லி மாத்திரை மருந்துகளை மாற்றிக் கொடுத்திருந்தார்.

கொஞ்சமாய் பழைய உற்சாகம் மீண்டிருந்தது சித்தார்த்திடம். ஏற்கனவே அவளுக்காக தன்னை திடப்படுத்தி கொண்டவன் தான் என்றாலும் இப்பொழுது கவிபாலாவின் எழுச்சியில் இன்னுமே மனதளவில் நிம்மதியும் பலமும் கூடிக் கொண்டிருந்தது அவனுக்கு.

"சரி அப்போ நீ இவளை பார்த்துக்கோ சித்து. நான் போய் கம்பெனி வேலை எல்லாம் என்னாச்சுன்னு பாக்குறேன். நேத்தே ஒரு சின்ன பிரச்சனை!" என்றார் அமலி.

"ம்மா! அந்த லேண்ட் ப்ரோப்லேம் சொல்றிங்களா? அது லீகள் இஸ்சுஸ் வர வாய்ப்பில்ல ம்மா! நான் வேணா போகவா? நீங்க பாலாவை பார்த்துக்கோங்க!" சித்தார்த் நிஜமாய் சொல்ல,

"எனக்கும் தெரியும் சித்து! ஆனா எம்பிளாயீஸ் என்ன சொல்றாங்கன்னு பாக்கணும் இல்ல. பெரிய ப்ரோப்லேம் எல்லாம் இல்ல. அம்மா பாத்துக்குறேன். அப்படியே நீ போனாலும் அரை மணி நேரத்துக்கு ஒருக்கா இவளுக்கு கால் பண்ணி நான் வீட்டுல இருக்குறதுக்கு மரியாதையே இல்லாம பண்ணிடுவ!" என்று கிண்டலில் முடிக்க, கவிபாலா சிரித்தாள் அவர் சொல்லிய விதத்தில்.

"ம்மா!" என பாவம்போல விழித்தவன் கெஞ்சலான முறைப்பில்,

"சும்மா டா! நீ இவளை பாத்துக்குறது தான் பெட்டர் சாய்ஸ்! இந்த பாப்பா அப்புறம் ஏங்கிப் போய்டும்ல?" என கவிபாலாவையும் சொல்லி சிரிக்க, மூவருக்குமே புன்னகை தான்.

மருத்துவமனையில் இருந்தே அமலி கிளம்பிவிட, கவிபாலாவோடு அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சித்தார்த்.

"நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு ஆசை தான். ஆனா ஃபர்ஸ்ட் டைம் நீ வரும் போது எந்த ஒரு சஞ்சலமும் இருக்க கூடாதே! என்னவோ ஒரு சின்ன சென்டிமென்ட்! அதான் கூட்டிட்டு போகல. எல்லாம் சரியாகட்டும்! உன்னை நம்ம வீட்டுல நம்ம ரூம்ல ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்றேன்!" என்றான் வரும் வழியிலேயே கண்ணடித்து.

"சித்து!" என முகம் சிவந்தவள் அதை அவனுக்கு காட்டாது திரும்பிக் கொண்டாள் ஜன்னல் பக்கமாய்.

வரும் போதே மதியம் பன்னிரண்டு மணியை தொட்டிருக்க, ஹாலில் இருக்கும் சோஃபாவில் அவள் அமர, இவனே மருந்தினை கைகளில் எடுத்தான்.

"என்ன பண்றீங்க?" கவிபாலா கேட்க,

"ஆயின்மென்ட்! டெய்லி நாலு டைம் போடணும் இல்ல?" சித்தார்த் சொல்லி அருகே வர,

"ம்ம்ஹும்! இப்ப வேண்டாம். அம்மா வரவும் போட்டுக்குறேன்" வேகமாய் அவள் மறுக்க,

"அடி வாங்காத பாலா! ஏன் நான் போட்டா என்னவாம் உனக்கு?" என்றவன் அருகில் வந்து அமர்ந்து அவள் கால்களை கைகளில் ஏந்த,

"சித்து சித்து! ப்ளீஸ் சித்து! வேணாம்!" என்றவள் கெஞ்சலில்,

"ஆட்டிடாத பாலா! வலிக்க போகுது!" என்றவன் அவள் பேச்சை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

"அவ்ளோ தான்! அப்ளை பண்ணிட்டேன். இதுக்கு போய்" என்றவன் அவள் முகம் காண, கன்னங்கள் சிவந்து அமர்ந்திருந்தவள் இதழ்களில் கீற்றாய் புன்னகை.

"அடி அடி! தப்பு!" என கன்னத்தில் போட்டுக் கொண்டவன் பாவனையில் அவள் பலமாய் சிரிக்க,

"டெம்ப்ட் பண்றல்ல நீ? மொத்தமா வாங்குவ!" என்றான் அகம் மலர்ந்த புன்னகையோடு.

"காலை தூக்க முடியல! கீழ வச்சுவிடுங்க!" கவிபாலா சொல்ல,

"ஏன்? நான் தான வச்சிருக்கேன். இருக்கட்டும்!" என்றான் கால் விரல் பாதங்களைப் பிடித்தபடி.

"அச்சோ!" என குஷனை எடுத்து முகத்தை மறைத்துக் கொள்ள,

"வலி தெரியாம இருக்குமேன்னு நினச்சேன்!" என்றான் புன்னகையை இதழ்களுக்குள் மறைத்து.

"இருங்க! அத்தைக்கு கால் பண்றேன்!" என அவள் அலைபேசியை எடுக்க,

"நீ இருக்கியே! சும்மா இருக்கவனை டெம்ப்ட் பண்ணிட்டு..." என்றவன் மெதுவாய் அவள் பாதங்களை சோபாவில் வைக்க,

"அம்மாக்கு மட்டும் தான் பயம் இல்ல?" என்றாள் கிண்டலாய்.

"உன் ஹெல்த்க்காக பாக்குறேன். இல்லைனா ஸ்வாகா தான்!" என்று சிரிப்புடன் சொல்லி எழுந்து செல்ல,

"யூ..." என்றவள் கையிலிருந்த குஷனை அவன்மேல் எறிய, அதை லாவகமாய் பிடித்துக் கொண்டான்.

"வாய் மட்டும் எல்லாத்துக்கும் நோ சொல்லுது! கன்னம் என்னை கிட்டக்க வா வான்னு கூப்பிடுது!" சித்தார்த் இன்னும் இன்னும் பேச,

"ச்சோ சித்து! என்ன பண்றிங்க நீங்க?" என்றாள் முடியவே முடியாது என்ற உணர்வுகளில்.

அப்படி சிரித்தான் சித்தார்த் அவள் பேச்சுக்களிலும் முகத்தின் பாவனைகளிலும் என.

"ஓகே ரிலாக்ஸ்! சாப்பிட எடுத்துட்டு வரவா?" சித்தார்த் சிரிப்புடனே கேட்க,

"இப்ப வேண்டாம்!" என்றாள் மெதுவாய்.

"டேப்லெட் போடணுமே டா!"

"கொஞ்ச நேரம் போகட்டுமே!" என்றவள் கெஞ்சலான குரலில்,

"ஓகே! கொஞ்சம் ரெஸ்ட் எடு! சேர்ந்தே சாப்பிடலாம்!" என்றவன் டிவியை ஆன் செய்து அமர்ந்தான்.

அத்தனை இலகுவாய் நேரம் கடக்க, இருவருமாய் சாப்பிட்டு அவளுக்கான மாத்திரையை எடுத்து கொடுத்தவன் அவளருகில் அமர்ந்து கதை பேச, கதையோடு அவனையும் அதிகமாய் கவனித்தாள் கவிபாலா.

"தூக்கம் வந்துடுச்சு உனக்கு!" என்று சொல்லி அங்கேயே தூங்க வைக்க அவன் செய்த அனைத்தும் அத்தனை அநியாயத்திற்கு நெஞ்சில் ஒட்டிக் கொண்டது பெண்ணிடம்.

"லவ் யூ சித்து!" கவிபாலா சொல்ல, நிமிர்ந்து நின்று அவளை முறைத்தான் சித்தார்த்.

கண் சிமிட்டி அவள் புன்னகைக்க, "சேட்டை கூடி போச்சுல்ல உனக்கு?" என்றவன் அவள் கூறியதற்கு பதில் வார்த்தை மட்டும் கூறவில்லை.

அன்று விபத்து நடந்த தினம் முதல் இன்று வரை என தினம் ஒரு முறை இந்த ஐ லவ் யூவை அவனிடம் அவள் கொடுத்துக் கொண்டிருக்க, பதிலுக்கு காதல் பார்வையோ அழகான வார்த்தையோ என சித்தார்த்திடம் வந்ததே இல்லை.

"நான் சொன்னது தான் பாலா! இப்படி எல்லாம் இதை சொல்ல கூடாது. என் கைக்குள்ள வந்து சொல்லு! அப்படி நீ சொல்ற அன்னைக்கு என் மனசு முழுக்க உன் பேரை எழுத நான் இடம் குடுக்குறேன்!" என்று அத்தனை திடமாய் இருந்து இன்று வரை சொல்லவில்லை சித்தார்த்.

"பேசாம தூங்கு! இன்னும் ரொம்ப நாள் எல்லாம் இல்லை. நீ நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டா கல்யாணம் பண்ணி கடத்திட்டு போய்டுவேன். அப்ப நிமிஷத்துக்கு எவ்வளவு டைம் நான் சொல்றேன்னு நீ பாரு!" என்றான் இப்பொழுதும் கூட.

அப்படி ஒரு நாளும் இவர்களுக்கு வந்தது. அவர்களுக்கே அவர்களுக்காய். ஏங்கி அழுத கண்களை துடைத்து அவளை ஆராதித்து கண்களில் வைத்து கொண்ட நாள் கவிபாலாவின் பொன்னாள்.

அடுத்தடுத்த நாட்கள் நகர, கவிபாலா மூன்றாம் மாத முடிவில் அவளே எழுந்து சாதாரணமாய் நடக்கும் நிலைக்கு வந்துவிட, விஜயா, மதியோடு சித்தார்த்துமே அவளை கொண்டாடிவிட்டான்.

அடுத்த பதினைந்தே நாட்களில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை அமலி செய்ய, கவிபாலா முடியவே முடியாது என நின்றாள் அவரிடமே!

"என்ன பாலா?" என சித்தார்த்தும் கேட்க,

"என்ன என்ன பாலா? ஒன்னும் தெரியாத மாதிரி கேட்குறீங்க? எனக்காக எவ்வளவு தான் எல்லாரும் பொறுத்து போவீங்க? நான் வேண்டவே வேண்டாம்னு சொன்னாங்க அத்தை. உங்களுக்காக ஏத்துகிட்டாங்க. இப்ப வரை உங்களுக்காக என் கூட எல்லா விஷயத்துலயும் துணையா இருக்காங்க!" என்று கவிபாலா சொல்ல,

"சரி டி இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற?" என்றார் விஜயாவும்.

"ம்மா! இவ்வளவும் அவங்க செஞ்சது அவங்க ஒரே பையனுக்காக. அந்த பையன் மேல இருக்க பாசத்துக்காக. அவங்க ஆசையை எப்படி ம்மா நாம முறிக்கலாம்?" என்றாள்.

அவள் சொல்வது புரிய தான் செய்தது. ஆனாலும் வேண்டாம் என்ற பின் என்ன செய்ய என விஜயா அமைதியாகிவிட,

"பாலா! இதுவும் அம்மா நமக்காக தான் சொல்றாங்க!" என்றான் சித்தார்த்.

"ஒரே பையன் கல்யாணம். அவங்க ஆசைப்படி பார்த்து பார்த்து எவ்வளவு கிராண்டா பண்ணனும் நினைச்சிருந்தாங்க. இப்ப சிம்பிளா கோவில்ல பண்ணுவோம் சொன்னா? கஷ்டமா இருக்காதா?" என்றாள் பாலாவும்.

"சொன்னதே அம்மா தான் பாலா! இதுக்கு மேல திருஷ்டி வேணாம்னு சொல்றாங்க! அப்புறம் என்ன?" என்றான் சித்தார்த்தும்.

"அத்தைக்குன்னு எவ்வளவோ ஆசை இருக்கும். இப்ப எல்லாத்தையும் என் ஒருத்திக்காக மாத்திக்குற மாதிரி இருக்கு. இதெல்லாம் பின்னாடி ஏந்த மாதிரி விளைவை குடுக்கும்னு பயமா இருக்கு சித்து!" கவிபாலா வருந்தி சொல்ல,

"ஹே மெண்டல்!" என்று சொல்லி தான் அவள் உளறலை எல்லாம் நிறுத்தி இருந்தான் சித்தார்த். அதில் அவள் முறைத்துக் பார்க்க,

"அம்மாக்கு பையன் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு எல்லாம் பிரச்சனை இல்லையாம். அவன் குடும்பம் குழந்தைன்னு எப்படி வாழறான்னு பார்க்க தான் ஆசையாம்!" என அவள் காதருகில் வந்து சொல்ல, மொத்தமாய் அமைதியாகிவிட்டாள் விரிந்த கண்களும் சிவந்த கன்னங்களும் என.

"இப்ப புரியுதா?" என்றவன் கள்ளப் புன்னகையில் நிமிர்ந்து அவனைக் காணவே அத்தனை கூச்சம் அவனவளுக்கு.

தொடரும்..
 

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
காதலாக பணிவிடை
காதலுடன் காத்திருக்கும்
கண்ணனின் மனது
கல்யாணத்தை நோக்கும்
கன்னியின் மனது
காதலாக இருவரின்
கண்ணுக்குள் உலவும்
காத்திருப்பு
காதலாக கூவும் கானம்....
 

Kota

Member
Joined
Mar 27, 2025
Messages
60
காதலாக பணிவிடை
காதலுடன் காத்திருக்கும்
கண்ணனின் மனது
கல்யாணத்தை நோக்கும்
கன்னியின் மனது
காதலாக இருவரின்
கண்ணுக்குள் உலவும்
காத்திருப்பு
காதலாக கூவும் கானம்....
😍😍😍
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
25
என்னவோ திக்கு திக்குன்னு இருக்கு சித்தோட லவ் நினைச்சஸ்
 
Top Bottom