அத்தியாயம் 9
சித்தார்த் காரில் அவனருகில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் கவிபாலா.
"ரொம்ப டீப் திங்கிங் போல!" சித்தார்த் கேட்க, அவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவள்,
"மேரேஜ்க்கு பேசியாச்சே! அடுத்து என்னனு யோசிச்சுட்டு இருந்தேன்!" என்றவள் பதிலில்,
"வாவ்! குட் குட்!" என்றவன்,
"அடுத்து என்ன?" என்றான் அத்தனை ஆர்வமாய்,
"அதான்! மண்டபம் பார்க்கணும்! எங்க வீட்டு சைட் கொஞ்ச பேர் தான். ஆனா உங்களுக்கு நிறைய இருப்பாங்க இல்ல? சொந்தக்காரங்க வேற! அதுபோகவும் ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்க, அப்புறம் பிரண்ட்ஸ்.. சோ அதுக்கேத்த மாதிரி பார்க்கணுமே! இன்விடேஷன்ல இருந்து கேட்டரிங்னு நிறைய இருக்கு. அம்மா அப்பா தனியா சமாளிச்சுக்க மாட்டாங்க. அவங்களுக்கு நானும் கூட இருக்கனும். ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யணும்!" என்றவள் அவனை கவனிக்கவில்லை.
"பணமெல்லாம் பிரச்சனை இருக்காது! பாதி சேலரி வீட்டுல குடுத்தது போக என்கிட்ட பாதி சேவிங்ல தான் இருக்கு. அம்மா அப்பாவோட ஆசை என் கல்யாணம் தான்" என்றவள் மௌனமாய் புன்னகைக்க,
"அவ்வளவு தானா?" என்றான் காற்றாகிவிட குரலில்.
"எவ்வளவு சொல்றேன்! அவ்வளவு தானானு கேட்குறீங்க?" என்று அவன்பக்கம் திரும்ப,
"உன்னை என்ன சொல்ல நான்? பாலா! நீ கல்யாணம் நெக்ஸ்ட்னுலாம் சொல்லவும் நான் என்னென்னவோ நினச்சுட்டேன். நீ சாப்பாடு, பந்தல்னு சொல்லிட்டு இருக்க?" என்றவன் சொல் புரிந்து அவள் மெல்லிய புன்னகையை முறைப்போடு கலந்து கொடுக்க,
"ஆனா நமக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருஷம் ஆச்சுன்னு நியாபகம் இருக்கா?" என்றான்.
"ஹ்ம்! அப்ப நார்மலா நடந்திருந்தா இப்ப ரெண்டு வயசுல ஒரு பேபி உன் மடியில உக்காந்து அம்மா அம்மான்னு உன்னை கூப்பிட்டுட்டு இருந்திருக்கும்!" என்றவன் சொல்லில் விழிகளை விரித்தவள்,
"சித்தார்த்!" என்று அழைத்தவள் முகம் சிவந்து மின்னியது.
"நிஜம் தானே?" என்றான் அதனை ரசித்து.
"இப்படி தான் எதுவோ பேச போறனு நான் நினச்சேன்! நீ என்னன்னா மண்டபம் அது இதுன்னு!" என்றவன் சொல்லில்,
"முதல்ல இது தான் நடக்கணும். நடக்கும்!" கவிபாலா சொல்ல,
"அப்போ அடுத்து நான் சொன்னது நடக்கும் சொல்றியா?" என்று புன்னகையை அடக்கி கேட்க,
"ச்சோ! என்ன நீங்க?" என்றாள் அவன் முகம் பார்க்க முடியாத தவிப்போடு.
"உன்னை கன்வின்ஸ் பண்ண தான் என்ன பண்ண போறேனோனு ஒரு பயம் இருந்துச்சு. அதனால என் அம்மா உன் அம்மா அப்பாகிட்ட பேச எல்லாம் நான் ரொம்ப யோசிக்கல. ஆனா நீ ஓகே சொன்னது தான்.." என்றவன் பெருமூச்சோடு புன்னகையை கொடுத்து அவன் கைகளை அவள் பக்கமாய் நீட்டி இருந்தான்.
என்ன என அவள் பார்க்க, "சும்மா உன் கையை குடு பாலா!" என்றான்.
"டிரைவிங்ல என்ன பண்றீங்க நீங்க?" என்றவள் தன் கைகளை இறுக்கமாய் கட்டிக் கொள்ள,
"ஒன்னும் பண்ணிட மாட்டேன்! குடு!" என்றான் அவள் செய்கையில்.
தயங்கி தயங்கி தான் மெல்ல அவன் பக்கம் தன் கைகளை நீட்டினாள் அவள்.
"லவ்னா என்ன பாலா?" அவள் கைகளை தன் கைகளோடு இணைத்து அவன் கேட்க,
"நிஜமா தெரில!" என்றாள் அவளும்.
"ஹ்ம்! எனக்கும். ஏதோ ஒரு ஸ்பார்க்! உன்னை கல்யாணம் பண்ணிக்க தோணுச்சு. கொஞ்சம் திங்க் பண்ண டைம் எடுத்துக்கிட்டேன் தான். ஆனா டக்குனு பிக்ஸ் ஆகிட்டேன். அது தான் லவ்னா... ஐம் இன் லவ் வித் யூ!" என்றவன் பேச்சில் ஒரு வித மகிழ்ச்சியை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
"பழைய விஷயத்தை பேசவே கூடாது. அதை நினைக்கவே கூடாதுன்னு சொன்னாலும் அதை அப்படி ஈஸியா மறந்துட முடியல. என் முன்னாடி நீ வந்து நின்னதும் நான் தாலி கட்டினதும்... ப்ச்! இதை ஸ்லோமோஷன்ல வேற ஷூட் பண்ணி எடிட் பண்ணி வச்சிருக்காங்க!" முதலில் கவலையாய் ஆரம்பித்தவன் குரல் இறுதியில் சிரிப்புக்கு மாறிவிட,
"நிஜமாவா?" என்றாள் கண்கள் விரிய.
"ஹ்ம்! நானும் இப்ப கொஞ்ச நாள் முன்னாடி தான் அந்த டைரக்டரை பார்த்து அந்த ஷூட்டிங் வீடியோவை வாங்கினேன்!" என்று சொல்ல,
"ஹ்ம்!" என்றாள்.
"பெரியவங்க சும்மா சொல்லல இல்ல. எது நடந்தாலும் நன்மைக்கேன்னு! இப்ப நல்லதா தானே நடந்திருக்கு!" என்றான் அவள் கைகளை இழுத்து தன் இதயத்தில் வைத்துக் கொண்டு.
"சித்தார்த்!" என்றவள் கைகளை இழுத்துக் கொள்ளப் பார்க்க, அவன் விட வேண்டுமே!
"விடுங்களேன்!" கவிபாலா சொல்ல,
"விடவா பிடிச்சேன்!" என்றவன் குரல் தான் உள்ளுக்குள் என்னவோ செய்தது பெண்ணை.
"ஒண்ணு சொல்லவா?" என்றவனை என்ன என்பதை போல அவள் பார்க்க,
"ரொம்ப அழகா இருக்க!" என்றவனை கிண்டலாய் பார்த்து முறைத்தாள்.
"பேச்சுக்கு சொல்ற மாதிரி இருக்கா உனக்கு?" என்று சிரித்தவன்,
"நிஜமா தான் சொல்றேன்! ஒரு குட்டி பொம்மை ஃபேஸ் உனக்கு. இப்பவே இப்படி இருக்க அப்ப மூணு வருஷம் முன்னாடி எப்படி இருந்திருப்ப?" என்று யோசிப்பதாய் பாவனை கொடுத்தவன்,
"நிஜமா அவ்வளவு எல்லாம் எனக்கு நியாபகம் இல்ல! பட் மறுபடி பார்த்தா தெரிஞ்சிடும் இல்ல?" என்றான்.
"சும்மா இருக்க மாட்டிங்களா?" என்றவள் குரலில்,
"நான் சும்மா தான் இருக்கேன்!" என்றவன் இதழ்களை மடக்கி புன்னகையை அடக்க, அதை கண்டு கொண்டவளுக்கு தாமதமாய் புரிந்தது அதன் அர்த்தம் அவன் சொல்லிய விதத்தில்.
"நீ எதுவும் சொல்லல?" என்றான் கைகளை மீண்டும் தன் மடியில் வைத்துக் கொண்டு.
"என்ன சொல்லணும்? நீங்க அழகா இருக்கிங்கன்னா?" சிரித்தபடி கவிபாலா கேட்க,
"அதெல்லாம் நிறைய பொண்ணுங்க சொல்லி இருக்காங்க!" என்றவனை திரும்பி நன்றாய் முறைத்தாள் அவள்.
"சும்மா பாலா!" என்றவன் உற்சாகம் அவன் குரலில் உணர முடிந்தது.
"அதான் நேத்தே சொல்லிட்டேனே!" என்றாள் புன்னகையோடு தானே.
"உனக்கு எப்படி என்னை பிடிச்சது பாலா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைனு நான் நினைச்சுட்டு இருந்தேன்!"
"அதான் எனக்கும் தெரியல!" என அவள் கிண்டல் செய்ய,
"ஹோய்!" என்றவன் முறைப்பில் இன்னுமே சிரித்தாள்.
"அம்மா அடிக்கடி நீங்க சொன்னதை எல்லாம் போன்ல என்கிட்ட சொல்லுவாங்க. நீங்களும் தேய் வந்து நின்னிங்களே! அங்க தான் என்னோட பிடித்தம் ஆரம்பமாச்சுன்னு நினைய்க்குறேன். ஆனா அதை காட்டிக்க எல்லாம் நினைக்கவே இல்லை!" கவிபாலா சொல்ல,
"தெரியுமே! நேத்து நானா வர போய் தான். அதுவும் நானா முதல்ல சொல்ல போய் தான் இல்ல? இல்லைனா பாடு கஷ்டம் தான்" என்று அவன் புன்னகைக்க, அவளுமே சிரித்தாள்.
"அம்மா தான் புலம்பிட்டே இருந்தாங்க. அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தெரியுமா?" கவிபாலா சொல்ல,
"ஹ்ம்! தெரியும். எனக்கு அவங்களை முதல்ல ஃபேஸ் பண்ணவே அவ்வளவு பயம். ஆனா என்னால பாதிக்கப்பட்டு இருக்காங்கனு நினைக்கும் போது அமைதியா போக முடியல. அதனால தான் அவங்க திட்டினாலுமே மறுபடியும் மறுபடியும் அவங்க நார்மலாக பேசினேன். அவங்க குணம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதனால தானோ என்னவோ உன்னையும் பிடிச்சிடுச்சு" என்றான் கைகளில் இறுக்கம் கொடுத்து.
"போதும் வழியைப் பார்த்து ஓட்டுங்க!" என்றவள் அவன் எதிர்பாரா நேரத்தில் கைகளை உருவிக் கொள்ள அதற்குமே புன்னகை தான் சித்தார்த்திடம்.
இரு மனங்களின் பாரங்களும் சற்று தூரம் சென்றிருக்க தங்களுக்கான நேரங்களை அத்தனை அனுபவித்து ரசித்து தான் மகிழ்ந்தனர்.
நிச்சயம் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் என நேற்றைய தினம் அவன் வந்து பேசும்வரை அவள் நினைத்தும் பார்க்கவில்லை என்றால் கவிபாலா முடிவு என்னவாய் இருக்கும் என சித்தார்த்துமே நேற்றைய தினம் வரை ஒரு உறுத்தலில் இருந்தவனுக்கு இன்று அனைத்திலும் விடுபட்ட பறவையான உணர்வு தான்.
கவிபாலா அவள் வீட்டில் இறங்கிக் கொள்ள, தன் அலுவலகம் நோக்கி அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சித்தார்த்.
அடுத்த ஒன்றரை மணி நேரங்களில் விஜயாவும் மதியும் வந்திருந்தனர் வீட்டிற்கு.
"ஒன்னும் பிரச்சனை இல்லையே! எல்லாம் ஓகே தானம்மா?" என அவர்கள் வந்ததும் கவிபாலா கேட்க,
"என்ன பெரிய பிரச்சனை வர போகுது? அதான் சித்தார்த் அவ்வளவு உறுதியா சொல்லிட்டாரே!" என மரியாதையாய் கூறிய மதி,
"அவங்க அம்மாவும் முதல்ல அவ்வளவு யோசிச்சாலும் பையனுக்காக எவ்வளவு இறங்கி வந்துட்டாங்க இல்ல? எனக்கு இப்ப எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா?" என்றார் சந்தோச மிகுதியில்.
"குடுத்து வச்சவ டா நீ!" என்றார் விஜயா.
"ஆனா கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல வர்ற நல்ல நாள்ல பண்ணிட சொல்லி சொல்றாங்க! பத்திரிக்கை மண்டபம் எல்லாம் அவங்க பாத்துக்குறதா சொல்லிட்டாங்க!" என்றார் விஜயா.
"ஆனா அதெல்லாம் நாம தான பண்ணனும்?" மகள் கேட்க,
"ஆமா தான்! நாங்க பண்றோம்னு உன் அப்பாவும் சொன்னாங்க கவி. ஆனா அந்தம்மா கேட்கல. எல்லாரும் சேர்ந்தே பார்ப்போம்னு சொல்லிட்டாங்க. சரினு உங்க அப்பாவும் சாப்பாடு பொறுப்பையாவது நாங்க பாத்துக்குறோம்னு சொல்லவும் சரினு சொல்லிட்டாங்க!" என்று சொல்ல,
"சரிம்மா நல்லாவே பண்ணிடலாம்!" என்றாள் மகள்.
"அடுத்தநாள் இருவர் வீட்டிலுமாய் என சேர்ந்து நாள் குறிக்க செல்ல, சித்தார்த் கவிபாலாவோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நேரம் ஸ்ரீதர் அழைத்தான் அலைபேசியில்.
"சொல்லு டா!" என அவன் அழைப்பை சித்தார்த் ஏற்க,
"என்ன டா போனையே காணும்! இங்கேருந்து ஒரு பொண்ணை கூட்டிட்டு போனியே! என்ன பண்ணின? பொண்ணு சேஃப் தானே?" என ஸ்ரீதர் கேட்க,
"அவகிட்டயே கேளேன்!" என்ற சித்தார்த்,
"சொல்லு பாலா!" என்று சொல்ல,
"டேய்!" என அதிர்ந்தான் ஸ்ரீதர். அவளும் இணைப்பில் இருப்பாள் என அறியவில்லை அவன்.
"சாரி சார்! இவங்க தான்..." என கவிபாலா மெல்லிய குரலில் சொல்ல,
"நாள் குறிச்சிட்டு வந்துட்டு இருகாங்க டா. கால் பன்றேன் வந்துடு!" என்றான் சித்தார்த் அவனிடம் மற்றதை கண்டு கொள்ளாமல்.
"அன்னைக்கு மட்டும் நேர்ல வர முடிஞ்சது? இன்விடேஷன் கொண்டு வர முடியாதா?" என்றான் ஸ்ரீதர் வேண்டும் என்றே.
"அன்னைக்கு வந்தது என்னவளைப் பார்க்க மிஸ்டர் ஸ்ரீதர்.. "
"அப்போ நானு? நான் யாரோவா?" அவன் கேட்க,
"சார்! அவங்க வருவாங்க. நிச்சயம் நீங்க கல்யாணத்துக்கு வரணும்!" என்று கவிபாலா சொல்ல,
"பின்ன எம்பிளாயீக்கு திடீர் மேரேஜ்னு போட்டுல்ல உங்களை ரிலீவ் பண்ணி விட்ருக்கேன். அதுக்காவாச்சும் வந்து ஒரு போட்டோ எடுத்துக்கணும்!" என்று பேச,
"அபி என்ன டா ஆச்சு?" என்றான் சித்தார்த்.
"உன் வாயை வச்சுட்டு சும்மா இரேன் டா. இவனோட.. நான் வைக்குறேன்!" என உடனே வைத்துவிட்டான் ஸ்ரீதர்.
"எந்த அபி?" சித்தார்த்திடம் கவிபாலா கேட்க,
"அது அப்புறமா சொல்றேன்!" என்றவன் தங்கள் கதைக்கு வந்திருந்தான்.
தொடரும்..

Author: Kota
Article Title: கூழாங்கல் கூவுகின்ற கானம்! 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.