• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது -7 ஹம் தில் தே ச்சுக்கே சனம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
186
காதல் காலமிது 7
IMG-20250404-WA0000.jpg


பரந்து விரிந்து கிடந்த பிரேக்ஃபாஸ்ட் பஃபேயில் பாதி ஐட்டங்களை வாசித்துக் கடந்து, மீதி ஐட்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து, முக்கால்வாசி சாப்பிட்டு முடித்திருந்தாள் ரித்திகா.

அப்போதுதான் அர்ஜுன் உணவுக் கூடத்திற்குள் நுழைந்தான். 'நடக்கிறது போல நடக்கட்டும்.. நான் ஒத்துக்க மாட்டேன்.. மீட்டிங்னு ஃபாரின் டூர் கிளம்பிப் போறதை அதுக்கப்புறம் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டே இருப்பேன்.. இங்கே வரவே மாட்டேன் அட்லீஸ்ட் இவனுக்கு கல்யாண முடியிற வரைக்குமாவது’ என்று நினைத்துக் கொண்டாள் ரித்திகா. மித்ரனுக்கோ உடனடியாக விவகாரத்தைப் பேசி முடிக்க வேண்டும், இனிமேல் யாரும் இந்த திருமணம் விஷயமாக என்னிடம் பேசக் கூடாது என்று ஆத்திரமாக வந்தது.

‘முன்னாடி எல்லாம் கேர்ள்ஸ் தான் கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்கு போராடுறதா சொல்லுவாங்க. இப்ப அப்படியே காட்சிகள் மாறுது.. நான் சொல்ல வேண்டியதா இருக்கு, அந்த பொண்ணு ஜாலியா உட்கார்ந்து ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருக்கு..’ அவளை கண்ணில் பார்த்தபடி தன் தட்டை நிரப்பத் துவங்கினான் மித்ரன்.

மேனகா அங்கே பரபரப்பாக ஓடி வந்தாள், "ரித்தி ரித்தி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடி.. சாப்பிட்டதெல்லாம் போதும். அங்கே முன்னால வந்து ரிசப்ஷன்ல நில்லுடி.."

"ரிசப்ஷனா? அக்கா இன்னிக்கு முகூர்த்தம்ல.. நேத்தே ரிசப்ஷன் முடிஞ்சதே"

"ஐயோ அந்த ரிசப்ஷன் இல்ல.. வர்றவங்கள எல்லாம் வரவேற்பாங்க இல்ல.. வாசல்ல டேபிள் போட்டு, பன்னீர் சொம்பு, சந்தனம், குங்குமம் எட்ஸட்ரா எட்ஸட்ரா..”

“இவ்வளவு பெரிய டெஸ்டினேஷன் வெட்டிங்கில ஏற்கனவே நீங்க பஞ்சாயத்து ப்ராப்பர்டிசை தூக்கிட்டு வந்தாச்சு.. இப்ப பன்னீர் சொம்பு, சந்தனக் கும்பா எல்லாம் எடுத்துட்டா வந்திருக்கீங்க? அதுக்கெல்லாம் ஈவென்ட் ஆர்கனைசிங் டீம்லேருந்து பார்ட் டைம் ஒர்க் பண்ற காலேஜ் பொண்ணுங்க வந்திருந்தாங்களே?”

“அவங்க ஒரு பக்கம் இருக்காங்க. எங்க மாமியாரும் இன்னும் சில பாட்டீஸும் சேர்ந்து, என்னதான் டெஸ்டினேஷன் வெட்டிங்னாலும் நம்ம பாரம்பரியத்தைக் காப்பாத்த வேண்டாமா அப்படின்னு சொல்லி நார்மலா நம்ம ஊர்ல நடக்கிற கல்யாணங்கள் மாதிரி சடங்குகளை நடுவுல நடுவுல புகுத்தி இருக்குதுங்க.. அந்தப் பொண்ணுங்க வரவேற்குறதுக்கு ஒரு பத்து அடி தள்ளி நாம ஒரு டேபிள் போட்டிருக்கோம்.. அதுல நான் இவ்வளவு நேரம் உக்காந்திருந்தேன். இப்ப ஒரு வில்லங்கம் என தேடி வந்திருக்கு”

“வாட்! வில்லங்கமா? நீயே ஒரு வில்லங்கம்.. உனக்கே யாரு வில்லத்தனம் காட்டுறது?”


“ஆமாண்டி என்னை ஸ்கூல்ல காலேஜ்ல எல்லாம் தொறத்துவான்னு சொன்னேன்ல.. ஒரு லூசுப் பையன்”

“ஆமா விஸ்வாவோ என்னமோ..”

“அதே கொசுவா தான்.. அவன் என்னை நேத்து ஏதோ youtube வீடியோவில் பார்த்தானாம். தேடி, விசாரிச்சு வந்துட்டான்”

“வந்தவுடனே அவன்னு தெரியாம நான் சந்தனக் கும்பாவை எடுத்து நீட்ட, குங்குமச் சிமிழை எடுத்து அவன் என்கிட்ட நீட்டுறான். ஏங்க, நீங்க டைவர்ஸ் பண்ணப் போறீங்களாமே.‌ நான் இருக்கேன், வாழ்க்கை தரேன் அப்படிங்கிறான். பக்கத்துல நின்னுட்டிருந்த சின்னப் பொண்ணு மாப்பிள்ளை வீடு. அது என்னை ஒரு மாதிரி பார்த்துச்சு. அந்த நந்து தாத்தா ஏதோ வீடியோ போட்டு இருக்காரு. அத பாத்து இந்த பன்னாடை‌ இங்க வந்திருக்குது. எப்படியாவது என்னைக் காப்பாத்துடி”

“அக்கா உனக்கே காமெடியா தெரியலையா? எங்க எல்லாத்தையும் சுத்தல்ல விடுறவ நீ..‌ அவனைப் பார்த்து நீ பயப்படுற.. அவனை டேக்கில் (tackle) பண்றதுக்கு உனக்கு சொல்லியா தரணும்”

“இல்லடி.. இவன் ஒரு மாதிரி. நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான். சொன்னதையே சொல்லுவான். சுத்தி யாரு இருக்காங்க என்னன்னு பாக்க மாட்டான். அர்ஜுன் மேல நான் சொல்ற கம்ப்ளைன்ட்ஸ்ல கொஞ்சம் உண்மை இருக்கிறதால எங்க அப்பா நான் சொல்றதை ஒத்துக்கிட்டு இருக்காரு. ஆனா அவரைப் பத்தி உனக்குத் தெரியுமில்ல. ஸ்கூல் டேஸ்ல நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணினோம், அப்படி இப்படின்னு இவன் போய் எங்க அப்பா கிட்ட ஏதாவது சொன்னான்னா எனக்கு வேற வினையே வேண்டாம்”

“அட அட அட! அப்பாக்கு பயப்படுற சின்ன பாப்பாவாங்க இது.. தெரியாம வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.. இந்தக் கல்யாண விவகாரத்துல உங்களைக் கெஞ்சுறதுக்கு பெரியப்பா கால்ல போய் விழுந்திருக்கலாம்” ரித்திகா சொல்ல,

“அதை விடு.. எனக்கு பதில் ரிசப்ஷன்ல போய் நில்லு” என்று சொல்லிவிட்டு எங்கோ ஓரிடத்தில் நுழைந்து, வேறு இடத்தில் புகுந்து, மறைந்தாள் மேனகா.

சாவகாசமாகவே தன் உணவை முடித்த ரித்திகா அந்த ரிசப்ஷன் டேபிளை அடைந்தாள்.

அங்கிருந்த டீனேஜ் பெண் சிடுசிடுவென்று இருந்தாள். “அவங்க பாட்டுக்கு என்னை மட்டும் நிக்க வச்சுட்டுப் போயிட்டாங்க” என்றாள்.

“ஒரு அர்ஜென்ட் ஒர்க் வந்துருச்சு போய்ட்டாங்க” என்று ரித்திகா சொல்ல

“ஏதோ ஒரு அண்ணா வந்து என்னல்லாமோ சொன்னாங்களே”

“அத விடு பாப்பா.. அது ஒரு லூசு, இது ஒரு லூசு. நாம வேலையை பார்ப்போம்” என்ற ரித்திகா சொல்லி முடிக்கும் முன்னால்,

“ஓ நீ தான் இங்கே நிக்கிறியாடா ரித்து ரொம்ப சந்தோஷம்” என்று வந்து நின்றது அர்ஜுனனின் மற்றும் மித்ரனின் அம்மா பாக்கியலட்சுமி தான்.

“ஹாய் ஆன்ட்டி!” என்று ரித்திகா சொல்ல,

“நான் மேனகா பொண்ணை இருக்கச் சொல்லிட்டுப் போனா அவ உன்னை நிக்க வச்சுட்டாளா? பொறுப்பே கிடையாது அவளுக்கு. ஆனா பேசறது என்னமோ பெரிய பருப்பு மாதிரி பேசுவா” என்றார் எதுகை மோனையாக.

“ஆமா ஆண்ட்டி, அதான் நானும் சொல்றேன். அவ சொல்றது எதுவும் வேலைக்காகாது” என்று ரித்திகா சொல்வதற்கு வாயைத் திறக்க,

“ஆனால் உன்னை மித்ரனுக்குக் கட்டி வைக்கலாம்னு ஐடியா கொடுத்தா பாரு.. அது மட்டும் ‘ஏ’ கிளாஸ் ஐடியா. உன்னை மாதிரி ஒரு பொண்ணு தான் எங்க குடும்பத்துக்கு வேணும். எவ்வளவு புரட்சிகரமாக லட்டு லட்டா பேசுற நீ. நீ பேசுற வீடியோஸ் கேட்டேன். அதுவும் பொண்ணுங்களுக்கு சொத்து கொடுக்கணும், சம உரிமை கொடுக்கணும்னு நல்லா பேசுற.. பாரு இந்த பாயிண்ட் எல்லாம் வச்சு தான் எங்க அண்ணன் தம்பி கிட்ட வாதாடிக்கிட்டு இருக்கேன். எங்க அம்மாப்பா சொத்துல ஒரு பைசா கொடுக்க மாட்டேங்கிறாங்க” என்க,

அவர்களது குடும்பத்தை பற்றி கொஞ்சமாக தெரிந்து வைத்திருந்த பக்கத்து சீட்டு பெண், “உங்க பசங்க எல்லாம் நல்ல சம்பாதிக்கிறாங்க. நீங்க ஏற்கனவே வசதி. அப்புறம் ஏன் உங்க அண்ணன் தம்பி சொத்து?”

“அண்ணன் தம்பி சொத்துங்கிறது பணம் மட்டும் கிடையாது. அது என்னோட பிறந்த வீட்டு உரிமை. இதோ ரித்திகாவைக் கேளு, அவ சொல்லுவா. நான் சின்ன வயசுல இருந்து தையல் தச்ச தையல் மெஷின், அதை அவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்டேன். எங்க அம்மா அப்பா வீட்டுல சும்மா ஒரு மூலைல துருப் பிடிச்சுப் போய் கிடக்குது. அத நான் எடுத்துட்டு வரேன்னு கேட்டதுக்கு தர மாட்டேன்னுட்டான் எங்க அண்ணன். நூறு ரூபாய்க்கோ 200 ரூபாய்க்கோ கடைசில ஸ்கிராப்க்கு போட்டிருக்காங்க. எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும் அந்த ஸ்கிராப்க்கு போன இடத்துல இருந்து நான் நிறைய காசு கொடுத்து வாங்கிட்டு வந்தேன். இப்ப சொத்து வேணும்னு கேஸ் கூட போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”

“ஆன்ட்டி, நான் வந்தா உங்க வீடு சண்டையா இருக்கும். ஒரு இடத்துல இருக்க மாட்டேன். மேனகாவையே உங்களால அட்ஜஸ்ட் பண்ண முடியலைன்னா, என்னைக் கண்டிப்பா அட்ஜஸ்ட் பண்ண முடியாது, மித்ரனும் என்னைப் பிடிக்கவில்லைன்னு தான் சொல்றார்.

“அட இந்த மாதிரி வசனம் எல்லாம் மௌன ராகம் படத்துல ரேவதி பேசி அந்த காலத்திலேயே கேட்டுருக்கேன்மா. உன்னைப் பிடிக்காதுன்னா சொன்னான் மித்ரன்? எப்போ உன்னைப் பார்த்தான்? இரு நான் அவனையே கேட்கிறேன்” என்று கையோடு அலைபேசியை எடுத்து மித்ரனை அழைத்தார் பாக்கியலட்சுமி.

‘அம்மா காலிங்!’ என்று வர, ஒரு சலிப்புடன் அந்த அழைப்பை ஏற்காமல் தவித்தான் மித்ரன். “பாரேன் ஃபோனை எடுக்க மாட்டேங்கறான்”

“மித்ரன் அண்ணாவா ஆன்ட்டி? கல்யாண வீட்டு சத்தத்துல ஃபோன் அடிக்கிறது கேட்டிருக்கிறாது..” வக்காலத்து வாங்கினாள் பக்கத்து சீட்டு பெண்.

“அப்படி என்ன லவுட் ஸ்பீக்கர் போட்டா இங்க கல்யாணம் நடக்குது.‌. அதெல்லாம் ஒன்னும் இல்ல. லைட் மியூசிக்ன்ற பெயரில் தூக்கம் வர வைக்குறாங்க.. நான் அவனோட கல்யாண விஷயம் பேசப் போறேன்னு நெனச்சிட்டு கட் பண்ணுவான். நான் போய் அவனை நேர்லயே பார்க்கிறேன்” என்று பாக்கியலட்சுமி கிளம்ப,

இந்த சிக்கல் காலையில் சாப்பிட்ட இடியாப்பம் போலுள்ளதா இல்லை நூடுல்ஸ் போலாகி விட்டதா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ரித்திகா.

அங்கே அர்ஜுன் மேனகாவைத் தேடி ஏதோ சிறு வயதுக் காதலன் வந்திருப்பதை அறிந்து நந்து தாத்தாவின் அசிஸ்டன்ட்களில் ஒருவனைப் பிடித்து நிறுத்தி, ஒரு தூண் மறைவில் வைத்து மிரட்டிக் கொண்டிருந்தான்.

“டேய்! ஏற்கனவே என் வாழ்க்கை சிரிப்பா சிரிக்குது.. நீங்க வேற ஏண்டா வந்து கும்மி அடிக்கிறீங்க? என் பொண்டாட்டி முகத்தை பிடிச்சு வீடியோ போட்டிருக்கீங்க.. அதைப் பார்த்துட்டு எவனோ வந்திருக்கானாம்”

“இல்ல ப்ரோ அந்த வீடியோவை யாரோ ரிப்போர்ட் அடிச்சுட்டாங்க.. எங்க ஓனரே கடுப்பா சுத்திட்டு இருந்தாரு”

“உங்க ஓனர் ஊர்ல எல்லா பயலையும் கடுப்பாக்கி விட்டுட்டு அவருக்கு என்னடா கடுப்பு வேண்டியிருக்கு?” மீண்டும் அவனை ஒரு குத்து குத்த,

“அர்ஜுன் அர்ஜுன்! இங்கே வா” என்று மேனகா அவனை கூப்பிட்டாள்.

“சரி சரி போ.. உன்னை அப்புறம் கவனிக்கிறேன்” என்று அடித்த தடயம் தெரியாமல் அவனது சட்டையை சீராக்கி அர்ஜுன் அனுப்பிவிட்டு,

“என்ன மீனு?” என்று கேட்க, “அர்ஜுன் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை” என்றாள்.

அருகிலிருந்த நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர். சோகமாக அவள் கையையே அவள் பார்த்துக் கொண்டிருக்க, இதுதான் சாக்கென்று அதைப் பிடித்து தடவிக் கொடுத்த அர்ஜுன், “ஃபீல் பண்ணாத.. என்னவா இருந்தாலும் சொல்லு.. சரி பண்ணிக்கலாம்.. என்ன, என்னைத் திட்டினதெல்லாம் நினைக்கிறியா? அத நான் மறந்துக்கிறேன்” என்றான்.

“அது அப்படியேதான் இருக்கு.. விஸ்வான்னு ஒரு லூசு என்னைத் தேடி வந்திருக்கு.. நான் அவனை லவ் பண்ணவே இல்ல தெரியுமா.. ஆனால் நான் லவ் பண்ணினேன்னு அவன் அப்பவே சொல்லிட்டு திரிஞ்சான். ஒரே ஒரு தடவை பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஸ்கூலைக் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போனோம்.. அப்ப இவனும் என்கிட்ட உக்காந்து இருந்தான்.. அதை அப்பாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன்னு இன்னைக்கு வரை மிரட்டுறான்”

“இப்ப நீ என்னோட பிராப்பர்ட்டி. உங்க அப்பா கேட்கிறதுக்கு எந்த ரைட்ஸும் இல்ல.. தெரியுமா?” மேனகா முறைக்கும் முன்,

“மேனகா இங்க இருக்கியா நீ?” என்று வந்து நின்றான் விஸ்வா.

மேனகா அர்ஜுன் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர, அவள் தோளில் கையைப் போட்ட அர்ஜுன், “என்ன மீனு.. சார் யாரு?” என்க,

சுதாரித்த மேனகா, “விஸ்வா இதுதான் என் ஹஸ்பண்ட் அர்ஜுன்.. இவன் என் கூட ஸ்கூல்ல படிச்சான். பெயர் விஸ்வா” என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“ப்ரோ நீங்க ரெண்டு பேரும் பிரேக்கப் பண்ணிக்கிட்டீங்கன்னு சொன்னாங்களே”

“அதெல்லாம் இல்லங்க.. யாரோ உங்க கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க” என்று அர்ஜுன் பொறுமையாகவே விளக்கினான்.

“இல்ல ப்ரோ.. ஏதோ பிரச்சினைன்னு கேள்விப்பட்டேன்.. இப்ப இல்ல ஃபியூச்சர்ல செப்பரேட் ஆகுற ஐடியா இருந்தாலும் சொல்லுங்க.. நான் மேனகாவுக்காக எப்பவுமே வெயிட்டிங்..”

“போடாங்ங்..” என்று சொல்ல வந்த அர்ஜுன், பல்லைக் கடித்துக் கொண்டிருக்க,

“இங்கே பார் விஸ்வா நான் உன்னை எந்த காலத்திலும் லவ் பண்ணினதே இல்லை.. இப்ப என் லவ்வெல்லாம் இவருக்காக மட்டும் தான். எங்களுக்கு நடுவுல யாரும் வர முடியாது” என்று மேலும் நன்றாக அர்ஜுன் மேல் சாய்ந்து கொண்டாள்.

தான் காண்பது நிஜமா இல்லை மேனகா நடத்தும் நாடகமா என்று தலை சுற்றி அவளையே பார்த்தான் அர்ஜுன். அதே சமயம், ‘கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணிட்டோமோ, இவ்வளவு நாள் கொடுத்த பில்டப் வேஸ்ட்டா போச்சோ’ என்று மேனகாவும் நாக்கைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்க்க, அது பரஸ்பரம் காதல் பார்வை போல் விஸ்வாவுக்குத் தோன்றியது.

“சொன்னாங்க.. என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க.. கல்யாணம்னு ஆயிருச்சுன்னா பொண்ணுங்க புருஷனை தான்டா லவ் பண்ணுவாங்க அப்படின்னு.. உண்மைதான் போலருக்கு.. யூ‌ போத் மேக் எ குட் பேர் (you both make a good pair)” என்றவன் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ ட்யூனை முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

**

இந்த அத்தியாயத்தில் நான் குடுத்த இருக்குற படம் ஹம் ‘தில் தே ச்சுக்கே சனம்’ ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், அஜய் தேவ்கன் நடிச்சது.. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய படம்.. நம்ம ‘அந்த ஏழு நாட்கள்
’ டைப்பில் இருக்கும் கதை😀😀

“எண்ட காதலி நிண்ட மனைவி ஆகலாம்.. பக்ஷே நிண்ட மனைவி எண்ட காதலி ஆக முடியாது!!”😂😂
 

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -7 ஹம் தில் தே ச்சுக்கே சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
25
நன்றி தெய்வமே... ஹிந்தி படத்துக்கு குட்டி நோட்ஸ் தந்துக்கு...

மேனகா உன்னையும் அறியாமல் உண்மையை சொல்லிட்டீயா...

பாக்கியா சொன்னது சரி தான்... குப்பையில் போட்டாலும் உனக்கு கொடுக்க மாட்டேன்னு நினைக்கிற சில நல் உள்ளம் இருக்க தான் செய்யுறாங்க
 

Akhilanda bharati

New member
Joined
Jun 30, 2024
Messages
21
நன்றி தெய்வமே... ஹிந்தி படத்துக்கு குட்டி நோட்ஸ் தந்துக்கு...

மேனகா உன்னையும் அறியாமல் உண்மையை சொல்லிட்டீயா...

பாக்கியா சொன்னது சரி தான்... குப்பையில் போட்டாலும் உனக்கு கொடுக்க மாட்டேன்னு நினைக்கிற சில நல் உள்ளம் இருக்க தான் செய்யுறாங்க
நன்றி சகோதரி..

பெண்ணியத்தை, பெண் உரிமையை நாமாவது பேசணும்ல😅
 
Top Bottom