• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 15 - FINALE 2

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
37
Mr. மாமியார் 15


சிங்காரச் சென்னையின் முற்பகல் போக்குவரத்தில்
மூன்று முறை சிக்னல் மாறியும், கடக்க முடியாது வண்டிகள் குவிந்திருந்தன . பெரிய பெரிய எஸ்யூவிக்கள், ஆட்டோக்கள், பைக்கர்களோடு மாநகரப் பேருந்துகளும் சரிநிகர் சமானமாய் போட்டி போட்டு இடம், வலம் பாராது முந்திச்செல்ல விழைந்து சமத்துவத்தை நிலைநாட்டினர்.
நண்பகல் சூரியனின் பேரருளால் ஏசியை மீறி காருக்குள் வியர்த்தது.

கிருஷ்ணாவைத் தேடி, விடிவதற்கு முன்னே வாமனமூர்த்தியின் வீட்டிற்குச் சென்றதில், வயதான தந்தை ரத்னத்திற்கு டீ, காஃபி கூட தராததோடு, காலை உணவு நேரமும் கடந்து விட, கார் இஞ்ச் இஞ்சாக நகர்ந்ததில்,
காத்திருந்த ஒவ்வொரு நொடியும் லக்ஷ்மிக்கு கவலையும் பதட்டமும் அதிகரித்தது.

இத்தனைக்கும், ரத்னமே கால் செய்து “சம்பந்தி கிட்ட பேசி, சரிகட்டிட்டு சமாதானம் ஆகி, மெதுவா வாங்க, நான் பழம் சாப்பிட்டு மாத்திரை போடறேன்” என்றிருந்தார்தான். ஆனாலும், முன்னூத்தி சொச்சம் சர்க்கரையை வைத்துக்கொண்டு எத்தனை வாழைப்பழத்தை, சப்போட்டாவை சாப்பிடச் சொல்வது?

உதவிக்கு இருக்கும் பெண் மேல் வேலைகளுக்கு மட்டுமே. இதுவரை சமையல் செய்யச் சொன்னதில்லை. இனி போய், குளித்து, சமைத்து…

“இப்ப நீ டென்ஷன் படறதால ஏதாவது பலன் உண்டா லக்ஷ்மி, ரிலாக்ஸ்டா இரு, பாத்துக்கலாம்” என்றார் ரங்கராஜன்.

“எப்படி, எப்படி ரிலாக்ஸ்டா இருக்க முடியும், உங்க அப்பான்னா இப்டி சொல்லுவீங்களா?”

“என்ன, உம் மகளோட வாசனை அடிக்குது?”

“...”

பேசிக்கொண்டே வந்தவர், இடப்புற சாலையில் திரும்பி, அங்கிருந்த பிரபலமான பழைய உணவகத்தில் வண்டியை நிறுத்தி மனைவியின் ரத்த அழுத்தத்தை ஏற்றினார்.

“ஏங்க, நானே நேரமாகுது, அப்பாக்கு ஒரு டீ கூட கொடுக்காம வந்துட்டோம், போய்தான் ஏதாவது செய்யணுங்கற கவலைல இருந்தா…”

“எனக்குப் பசிக்குது, நாம ஏதாவது சாப்பிட்டு போகலாம், வா”

“எனக்கு ஒண்ணும் வேணாம். இன்னும் குளிக்கல, தெளிக்கல, இதுல வீட்ல அப்பா வேற, இன்னும்…”

ரங்கராஜன் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கவும், லக்ஷ்மி வேறு வழியின்றிப் பின் தொடர்ந்தாள்.

இரண்டு ஐஸ் போட்ட சாத்துக்குடி ஜூஸை வரவழைத்தவர் “முதல்ல இதைக் குடி” என ஒன்றை மனைவியின் புறம் நகர்த்தினார்.

“விளையாடறீங்களா?”

“யாரு, நானா… நேத்து நைட் எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்ததுல இருந்து கிருஷ்ணாவை காணோம்னு நீ எனக்கு சாப்பாடே போடலை. காலைல சம்பந்தியம்மா புண்ணியத்துல ஒரு காஃபி கிடைச்சுது. உண்மையாவே பசிக்குதுடீ”

“...”

ரங்கராஜனின் மொபைல் ஒலிக்க, ரத்னம்தான் அழைத்தார்.

“சொல்லுங்க மாமா”

“...”

“எல்லாம் ஃபைன்தான் மாமா”

“...”

“எங்கிட்ட சாவி இருக்கு மாமா, நீங்க ரெஸ்ட் எடுங்க”

லக்ஷ்மி என்னவோ என கணவனையே பார்த்திருக்க, ரங்கராஜன் தன் மொபைலில் இருந்த வாட்ஸ்ஆப் மெஸேஜை மனைவிக்குக் காட்டினார்.

“உங்கப்பாக்கு ரமணீ’ஸ் கேட்டரிங்ல இருந்து காஃபி, சாப்பாடு வரவழைச்சு கொடுத்து அவர் சாப்பிட்டும் ஆச்சு. போதுமா, இப்ப நிம்மதியா மூச்சு விடுவியா?”

தளையறுந்தது போல் உணர்ந்த லக்ஷ்மி நிஜமாகவே, தளர்ந்து அமர்ந்து பழரசத்தைப் பருகத் தொடங்கினாள்.

பேரரை அழைத்து “ரெண்டு பாம்பே மீல்ஸ்”

“இருபது நிமிஷம் ஆகும் ஸார்”

“பரவாயில்லை”

“லக்ஷ்மி…”

“ம்…”

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ரிலாக்ஸ்டா வெளில வந்து எத்தனை நாளாச்சு?”

“நாளா, வருஷமாகப் போகுது. அமெரிக்கால இருந்து அப்பா வரமுன்ன, நம்ம லலிதாவோட வளைகாப்புக்கு முன்னாடி போனதுதான்…”

“ஹும்… பாட்டியோட நேரத்தையெல்லாம் பேரனே கொண்டு போறான்”

சட்டென முகம் கசங்கி “ஏங்க, உண்மையா சொல்லுங்க, என்னைப் பாத்தா பாட்டி மாதிரி தெரியுதா?” என்ற லக்ஷ்மியின் குரலில் இருந்த விசனத்தில் ரங்கராஜன் வாய்விட்டுச் சிரித்தார்.

“யார் சொன்னா, உனக்கு நாப்பத்தேழு வயசுன்னு சொன்னாதான் தெரியும்”

“கிண்டலு?”

“சத்தியமாடீ, உன் வேகமும் வீரமும் எனக்குதானே தெரியும்?”

கணவரின் பேச்சில் முகம் சிவந்த லக்ஷ்மி, அவரது
கண் சிமிட்டலில் சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.

“ஆனா, லலிதா டெலிவரிக்கு வந்ததுல இருந்து நீ என் பக்கத்துல வந்ததாவே ஞாபகம் இல்ல”

லக்ஷ்மி “என்னங்க இது, நமக்கென்ன சின்ன வயசா?”

“இப்பதானேடீ பாட்டி மாதிரியா இருக்கேன்னு கவலைப்பட்ட?”

“ம்ப்ச்… அது வேற இது வேற”

“எல்லாம் ஒன்னுதான். உம் பொண்ணு மாப்பிள்ளையைத் தனியா தவிக்க விட்டதோட நிக்காம, நம்மையும்..”

இடை மறித்த லக்ஷ்மி “இந்தப் பேச்சு, அதுவும் இங்க வெச்சு… போதுமே…”

“நான் என்ன பொய்யா சொல்றேன்?”

“ப்ளீஸ் மாமா”

“மாமாவா, இது கூட நினைவிருக்காடீ உனக்கு?”

“...”

“லக்ஷ்மி, ஜோக்ஸ் அபார்ட், லலிதா அங்க பேசின விதத்தையும் விஷயத்தையும் நினைச்சா கவலையா, ஏடாகூடமா எதையாவது பேசி, அவ வாழ்க்கையை அவளே கெடுத்துக்கப் போறளேன்னு பயமா இருக்கு”

“ஆமாங்க, இவ பவித்ராவை பத்தி பேசினதும், மாப்பிள்ளைக்கு எவ்வளவு கோபம்னு பாத்தீங்களா… இதுல அந்தப் பொண்ணே வந்து நிக்கவும், ஒரு நிமிஷம் என்னடா, பெருசா சண்டை வந்திடுமோன்னு திக்குனு ஆயிடுச்சு”

“அதேதான் லக்ஷ்மி, அவங்க எலலாரும் எப்படி பண்பா, பெருந்தன்மையா நடந்துக்கிட்டாங்க… அந்த பவித்ரா, எத்தனை நாசூக்கா நகர்ந்து போனா.. பாவம், அவளுக்கு அம்மா வீடு இல்லையா அது?”

“...”

உணவு வந்து, உண்ணத் தொடங்கியதும்தான் பசியின் அளவு தெரிந்தது.

லக்ஷ்மி “இப்ப என்னங்க ஆகும்?”

“”உன் பொண்ணைத்தான் கேக்கணும். வரி கட்டற மாதிரியோ, வண்டி ஓட்டுற மாதியோ எல்லாத்துக்கும், எல்லாருக்கும் எல்லா சட்டமும் பொது கிடையாது. லலிதா அவங்கவங்க வாழ்க்கை, சூழல் வேற வேறன்னு புரிஞ்சுக்கிட்டா தேவலை”

“...”

“மாப்பிள்ளை இத்தனை பொறுமையா இருக்கறதே பெருசு.லலிதா வரும்போது , கிருஷ்ணா மேல இருக்கற ஆசைல, அவ சொல்றதுக்கெல்லாம் மண்டையை ஆட்டாத, புரியுதா?”

“நான் எங்க …”

“சொல்றதைக் கேளு, நம்ம பொண்ணுக்கு பொறுப்பு வந்து, புள்ளையோட புகுந்த வீட்ல வாழணும்னா, அவளை வேலை செய்யாம உக்காரவெச்சு தூபம் போடறதை நிறுத்து”

“இதை சொல்லத்தான் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தீங்களா?”

“அப்டியே வெச்சுக்கோயேன். ஆனா ஒண்ணு, கொஞ்ச நாள் பார்ப்பேன், எதுவும் சரி வரலைன்னா, திரும்பவும் பாம்பே, கல்கத்தான்னு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போயிடுவேன். நான் வேணும்னா என் கூட வா. இல்ல, மகளும் பேரனும் போதும்னா, என்னை ஆளை விடு”

அதிர்ந்த லக்ஷ்மியின் ஸ்ருதி இறங்கி விட்டது.

“என்னை விட்டுட்டுப் போயிடுவீங்களா?”

“வேணும்னா இப்டி செய்யலாம்”

“???”

“உனக்கு போரடிக்காம இருக்க டாக்டர் கிட்ட போய் பேசாம, நாமளே ஒரு குழந்தை பெத்துக்கலாம்”

“ஐய்ய… ஆசைதான்”

ரங்கராஜனின் பேச்சு தந்த லஜ்ஜையும் கற்பனையுமாக வீடு வந்து ஒரு குளியல் போட்ட லக்ஷ்மி, எந்த வேலையுமின்றி, நிம்மதியாய், தங்கள் அறையில், இதமான ஏசியில், தன் விரல்களுக்கு சொடுக்கெடுத்த கணவனிடம்,

“என்னங்க, லலிதா அங்க என்ன செய்யறாளோ தெரியல, நான் வேணா பேசி பார்க்கட்டுமா?”

கேட்டவளின் விரல்கள் நெரிபட்ட வேகத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

*********************

வாயிலில் கார் வந்து நின்று, கார் மற்றும் கேட் கதவுகள் திறந்து மூடப்பட்ட சப்தமோ, விட்டு விட்டு அழைத்த அழைப்பு மணியோ கேட்காத அளவிற்கு, முந்தைய நாள் மாலை முதலே தங்கள் தினசரி வழமை பிசகியதில், ரத்னம், ரங்கராஜன், லக்ஷ்மி மூவருக்குமே இரவு பகல் தெரியாத உறக்கம்.

ரங்கராஜனின் மொபைல் ஒலிக்கவும் மிகுந்த பிரயாசையுடன் கண்களை இடுக்கியபடி அழைப்பை ஏற்றார். நேரம் பார்க்க ‘ஏழா?!’

“”ஹலோ...”

“...”

“ஓ, இதோ வரேன்…”

கதவைத் திறந்து, “..ப்பா” என்ற கிருஷ்ணாவைக் கையில் வாங்கியவர் “வாங்க, வாங்க. ஸாரி, தூங்கிட்டோம்” என மகளையும் மருமகனையும் வரவேற்றார்.

காஃபி, டீயை மறுத்து, வந்த சுருக்கிலேயே கிருஷ்ணாவைத் தூக்கி முத்தமிட்ட வாமனமூர்த்தி, பொதுவான ஒரு ‘நான் வரேன்’ உடன் புறப்பட்டுவிட,
லலிதா வந்தது முதல் நின்ற இடத்திலேயே நின்றாள்.

ரங்கராஜன் வாசல்வரை சென்று வாமனமூர்த்தியை வழியனுப்பி விட்டு உள்ளே திரும்பும்வரை கூட பொறுக்க முடியாத லக்ஷ்மி, தன் விசாரணையைத் தொடங்கி இருந்தாள்.

“அங்க என்னடீ நடந்தது?”

“மாப்பிள்ளை ஏன் உடனே கிளம்பிட்டார்?”

“உங்க மாமியார் ஏதாவது சொன்னாங்களா, நாங்க வந்த பிறகு பவித்ரா வந்து ஏதாச்சும் கேட்டாளா?”

“ஏன்டீ எதைக் கேட்டாலும் பதில் பேசாம இப்படி மரமாட்டம் நின்…”

“மரம்தான்… நான் உணர்ச்சியே இல்லாத மரம்தான்… எந்த எமோஷனும் இல்லாத வெறச்ச கட்டை, போதுமா?”

தொண்டை இறுகியது போல் நெரிபட்ட குரலில், உணர்ச்சி இல்லாத ஜடம் என தன்னையே நிந்தித்தபடி, தன் அறைக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்ட லலிதா அதீதமாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.

இன்னவென்று இனம் பிரிக்க இயலாத கலவையான உணர்வுகள்… உருவமில்லா கேள்விகள்…

கரகரப்பான சிமென்ட் தரையில் சிராய்த்துக் கொண்டால், தோல் வழண்டு, சிவந்து, ரத்தமும் வராது, எரிச்சல் மட்டும் மிகுந்த உணர்வு.

தோல்வி, ஏமாற்றம், ஏக்கம், தர்மசங்கடம், உடன்படாமை, பிரிவாற்றாமை, அகம் என கற்றையான உணர்வுகள் கலைடாஸ்கோப்பாய் விலகி விலகி சேர்ந்தன.

விளக்கு, ஃபேன் எதையும் போடாது, சுருண்டு படுத்து, கண்களை மூடிக்கொண்டாள்.

வெளியில் பெற்றோரும் தாத்தாவும் அங்கே என்ன நடந்திருக்கும் என தங்கள் கற்பனைக்கு பொட்டு, பூவெல்லாம் வைத்துக் கொண்டிருப்பது கேட்டது.

அவர்கள் நினைப்பது, இவள் நினைத்தது என எதுவுமே அங்கு நடக்கவில்லை.

இதோ, இந்த இருட்டிலும் தனிமையிலும் தொலைவிலும் கூட தலைக்குள் வாமனனின் குரலே ஒலித்தது…

‘எல்லாம் ஓகே, என்னை ஏன்டா இங்க கொண்டு வந்து விட்ட?’

கணவனிடம் கேள்வி கேட்க மாட்டாத ஆதங்கம் கழுத்து வரை நிரம்பி வழிய, மூச்சடைத்ததில் உடல் உதறியது.

கால்பந்தாட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘பெனால்டி கிக்’(Penalty kick)’, அந்தக் கடைசி பந்தை உதைக்கும் பொறுப்பைத் தன்னிடம் கொடுத்து விட்டு எல்லோரும் வேடிக்கை பார்ப்பது போல் தோன்றியது.

‘டேக் யுவர் டைம் லால்ஸ், நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா’ என்றான் வாமனன்.

கதவை லேசாகத் தட்டி, திறந்து, உள்ளே வந்த லக்ஷ்மி விளக்கைப் போட, “ப்பா…” என்ற கிருஷ்ணா, தன் மீது ஏறி அமரவும் லலிதா எழுந்து அமர்ந்து பிள்ளையைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டாள்.

“சாப்பிட வா லலிதா”

“கிருஷ்ணா?”

“இதோ, அவனுக்குதான் பால். தூக்கம் வருதுபோல”

“சின்ன லைட் போதும்மா. நான் தூங்க வெக்கறேன்”

கதவருகே சென்ற லக்ஷ்மி, “லலிதா…?” என்றாள் கேள்வியாக.

“ஐ’ம் ஃபைன் மா. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க, வரேன்”

‘வரேன்’ என்றவளின் எண்ணம் போனதென்னவோ வாமனமூர்த்தியிடம்தான்.

‘சரியான மாமியார் மெட்டீரியல்’

************

வாமனன் “நான் சொல்றதைக் கேட்பியா?” என்றதுமே,

“இன்னும் என்ன?” எனச் சிலிர்த்தவளைப் பார்த்துச் சிரித்தான்.

“நான் என்ன உனக்கு எதிரியா, இத்தனை காட்டம் எதுக்குடீ?”

“...”

தொடர்ந்தவன் “முதல்ல புகுந்த வீட்டு மனுஷங்க எல்லாம் கெட்டவங்கன்னு யார் உனக்கு சொன்னது?”

“...”

“எங்கம்மாவோ, பவித்ராவோ, பாட்டியோ உன் கிட்ட நிந்தனையா, கோபமா எப்பவாவது பேசி இருக்காங்களா?”

லலிதா “இல்லை” என மிக மிக மெலிதாக முனகினாள்.

“கொஞ்சம் சத்தமாதான் சொல்றது, அதை விடு. அப்படியே இதை செய்,
இப்படி செய், எங்க வீட்டுப் பழக்கம் இதுன்னு ஏதாவது சொன்னாதான் என்ன? அவங்க சொல்லாம உனக்கு எப்படித் தெரிய வரும்?”

“...”

“அஃப்கோர்ஸ், நீ இங்க எங்களோட இருந்து, இதையெல்லாம் செய்ய
விருப்பம் இருந்தாதானே தெரிஞ்சுக்கணும்?”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை…”

“அதாவது தெரிஞ்சுக்க விருப்பமில்லைங்கற”

மறுப்பாகத் அசைந்த தலையைப் பிடித்து நிறுத்தினான்.

“லால்ஸ், உன் கம்பெனில உனக்கு மேல இருக்கற எத்தனை பேருக்கு நீ ரிப்போர்ட் பண்ற, கூட வேலை பாக்கற எத்தனை பேரோட கோபதாபங்களை, பார்வைகளை அனுசரிச்சு போற?”

“அது… குறைஞ்சது ஒரு பத்து, பன்னெண்டு பேர்…பட், ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரா சண்டையா போட முடியும்? ஒரு ஆஃபீஸோட சட்டத்துக்கு உட்பட்டாதானே பிரச்சனை இல்லாம அங்க வேலை பார்க்க முடியும்?”

“அஹான்…” என்ற வாமனனின் குரலில் அப்படியொரு நையாண்டி.

“என்ன, என்ன ஆஹான், ஓஹான்… ரூல்ஸை மீறினா சம்பளம் தருவானா? சங்கைப் புடிச்சு வெளில தள்ளுவான்”

“வாரே வா, என்னடீ திருவள்ளுவர் பேத்தி மாதிரி தமிழ்ல விளையாடற… அப்ப, பணம் குடுத்தா சொன்ன பேச்சை கேப்ப, அப்படியா? அப்ப நான் வேணா உனக்கு…

ஆத்திரமடைந்த லலிதா அங்குமிங்கும் அலைபாய்ந்தாள்.

தன் பேச்சை தானே ரசிக்காத வாமனமூர்த்தி “ஐ’ம் ஸாரி ஃபார் தட் லலிதா. ஆனா, நான் சொல்ல வர்றது உனக்குப் புரியுதுதானே?”

“...”

“திருமணம் என்பது ஒரு சமூக நிறுவனம்’ னு கேள்விப்பட்டிருக்கியா? (Marriage is an institution) அப்ப அந்த நிறவனத்துக்குன்னு இருக்கற ரூல்ஸை கடைப்பிடிக்கதானே வேணும்?”

“...”

“ஆஃபீஸோ, குடும்பமோ இன்னொரு இடத்துக்கு நாம போனா, அங்க உள்ள வழக்கத்தை, சடங்குகளை, சட்டங்களை ஏத்துக்கிட்டு செய்யத்தானே வேணும்?”

லலிதா “சரி, அது ஏன் பொண்ணுங்க மட்டும்தான் ஃபாலோ செய்யணும், அதையே பசங்க செஞ்சா என்ன?”

“செய்யலாம், செய்யறவங்களும் இருக்காங்க. அது அவங்க சூழல். இந்த சமூகத்துல அது பெரும்பான்மை கிடையாது. அதோட நான் அதுக்குத் தயாராவும் இல்ல”

“செய்யப் புடிக்கலை, அல்லது நம்பிக்கை இல்லைன்னா…” - லலிதா.

“சோஷியல் மீடியாவால ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்க லால்ஸ்”

“...”

“இப்ப ஒரு மோட்டிவேஷனல் பேச்சாளரோ, யூட்யூபரோ, ரீல்ஸ் வீடியோ போடறவரோ, எழுத்தாளரோ ஒரு கருத்து, அது பெண்ணியம், நாத்திகம், ஜாதி மறுப்பு… இப்படி எதைப்பத்தி வேணா இருக்கலாம்… சொல்லி போஸ்ட் போடறாங்கனு வை. அதை அவங்க வாழ்க்கைல அப்படியே கடைப்பிடிப்பாங்கன்னு நம்பினா நாமதான் முட்டாள்”

லலிதா “ஏன், ஒருத்தருக்கு சரின்னு படறதை, நம்பிக்கை இருக்கற ஒரு விஷயத்தை பத்தி பொதுவெளில பேசறவங்க, அவங்களே அதை ஃபாலோ பண்ணலைனா எப்படி?”

“அவங்க கருத்தும் குடும்பச் சூழலும் வேறயா இருக்கலாம். உதாரணமா ஒருத்தருக்கு கடவுள், சடங்கு எதிலயும் நம்பிக்கை இல்லைன்னு வெச்சுப்போம். ஆனா, அவங்க குடும்பம் அதை நம்பினா, புடிச்சுதோ, புடிக்கலையோ அவங்களும் அதை செய்வாங்க. ஏன் தெரியுமா?”

“???”

“அவங்களோட கொள்கை வேற, குடும்பம் வேற. சுய நம்பிக்கை வேற நேசம் வேறங்கறதுல அவங்க தெளிவா இருக்காங்க. அதுக்காக அவங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன். அதுதான் சரியும் கூட. ஆனா, அவங்க சொல்ற மெஸேஜ், பரப்பற கருத்துகளை சிரமேற்கொண்டு செய்யணும்னு உன்னை மாதிரி நம்பி கெடறவங்கதான் லூஸர்ஸ்”

“...”

“ஏன், நான் எங்கம்மா, அப்பாவை…

“ஷப்ப்பா… கொஞ்சம் வெய்ட் பண்ணுடீ” என்று கை உயர்த்தியவன்,

“உங்கிட்ட ரெண்டு பிரச்சனை, சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கற, சுயமா சிந்திச்சா, ஏடாகூடமா யோசிக்கற”

லலிதாவின் பார்வையில் வாமனமூர்த்தி

“என்ன முறைக்கற, நான் சொல்றது சரிதானே? நீ
இங்க வந்தா முன்னால மாதிரி வேலைக்கு டிமிக்கி குடுக்க முடியாது. குழந்தைக்காகவாவது வேலை செய்யணும். உங்கம்மா வீட்லன்னா கிருஷ்ணாவை அவங்க தலைல கட்டிட்டு நீ ஹாயா இருக்கலாம். இங்க வந்தா எங்கம்மா கிட்ட கேக்கணும். அதுக்கு முதல்ல அவங்களை/ எங்களை நீ நம்பணும்”

“...”

“தென், உங்க அம்மா, அப்பாவை பாத்துக்கறதை பத்தி… நிச்சயமா அவங்க உன் இல்ல, நம்ம பொறுப்புதான். ஆனா, இப்ப இல்லை. யாரோட அம்மா, அப்பாவா இருந்தாலும் சரி, செயலா, தெம்பும் திடமுமா, இருக்கறவரை நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க. அதுலயும் இப்ப இருக்கற முக்கால்வாசி பேரன்ட்ஸ்லாம் முடிஞ்ச வரை சுதந்திரமா தன் செயல்ல இருக்கறதைத்தான் விரும்பறாங்க”

“...”

தந்தை பேச்சாலேயே தாலாட்டியதில் உறங்கி இருந்த கிருஷ்ணாவை லலிதா கட்டிலில் படுக்க வைத்தாள்.

திரைச் சீலைகளை சரியாக இழுத்த வாமனமூர்த்தி மனைவியின் எதிரில் வந்து நின்றான்.


“...”

லால்ஸ், ஒன்னே ஒன்னு சொல்லு, இத்தனை நாளா அங்க இருக்கியே, அந்த வீட்ல உன் விருப்பப்படி என்ன செஞ்ச?”

“மத்லப் (அப்படீன்னா?)”

“வெளில போறது, வீட்டுக்கு சாமான் வாங்கறது, வீட்டோட மொத்த வரவு, செலவு, பணத்தை இன்வெஸ்ட் பண்றது… இது போல”

தோளைக் குலுக்கியவள் “நான் ஏன் இதெல்லாம் செய்யணும், அதெல்லாம் அம்மா, அப்பா பார்த்துப்பாங்க. எனக்கு ஏதாவது வேணும்னா கேப்பேன், அவ்ளோதான்”

“ஒரு தரம் முடிவை கையில் எடுத்துப் பாரு. நீ எதையெல்லாம் மிஸ் பண்றன்னு உனக்குப் புரியும்”

“என்னது?”

“உங்க வீடும் சரி, எங்க வீடும் சரி, நாம கேட்டா செய்வாங்க, தருவாங்கதான். ஆனா, முடிவு எல்லாம் அவங்களோடது. அது இன்னும் அவங்க வீடுதான். இது நம்ம வீடு. நாம நினைச்சதை வாங்கலாம், மாத்தலாம், சமைக்கலாம், இன்னும் எத்தனையோ ***லாம்”

“...”

“நாம குழந்தையா இருந்தது போய், நமக்கொரு குழந்தை வந்தாச்சு. Grow up லால்ஸ். நம்ம அம்மா, அப்பா நமக்கு செய்யணும்னு நாம நினைக்கறதை கிருஷ்ணாக்கு நாம செய்ய வேண்டாமாடீ?”

“...”

“லலிதா, கடவுள் புண்ணியத்துல நம்ம ரெண்டு போரோட அம்மா, அப்பாவுமே இன்னும் ஆரோக்கியமா, பிஸியா இருக்காங்க. அவங்க வேலையை, வாழ்க்கையை, நாளை திட்டமிட்டு நிம்மதியா இருக்காங்க… அதனாலதான் நமக்கும் உதவி செய்யத் தயாரா இருக்காங்க”

“இன்னும் சொல்லப்போனா,, ஆஃபீஸ், ஆடி ஸேல், கேன்டி க்ரஷ், கல்யாணம், காதுகுத்துன்னு அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க.

அம்புக்குட்டி இங்க இருக்காளே தவிர, ஃபேக்டரில மீட்டிங்னா அம்மா புறப்பட்டு போயிடுவாங்க. பவியோ ஸ்ரீயோதான் வீட்ல இருந்து அவளை பார்க்கணும்”

“உங்க வீட்ல இதுபோல ஒரு சூழல் வந்தாலும் இதேதான் நடக்கும். உண்மைல, உன்னோட பிடிவாதத்தால நீயும் நானும்தான் தனித் தனியா இருக்கோம்”

“அப்டி… நா…” என வார்த்தைகளில் தடுக்கி விழுந்த லலிதாவிடம் “ஹக்?” என்றவனை லலிதா மறுக்கவில்லை.

இறுக அணைத்து விடுவித்தவன்
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வந்துடறேன். நீயும் தூங்கறதுனா தூங்கு”

அந்த அறையின் அமைதியில், ஆழ்ந்து உறங்கும் மகனின் அண்மையில், வாமனனின் அணைப்பு தந்த கதகதப்பில் இதமாக உணர்ந்த லலிதா, உறக்கமும் விழிப்பும் இல்லாத இரண்டுங்கெட்டான் நிலையில் படுத்திருந்தாள்.

வாமனமூர்த்தி திரும்ப வந்தபோது, கையில் அம்புக்குட்டியும் அவன் பின்னே சீதளாவும் பவித்ராவும் நின்றிருந்தனர்.

இவர்களுக்கு காஃபி, சுண்டல், கிருஷ்ணாவிற்குப் பால், சிறிதே பொரி, வீட்டில் செய்த ஓம பிஸ்கட்டுடன் வந்திருந்தனர்.

பவித்ராவைப் பார்த்ததும் சிறிது சங்கடப்பட்ட லலிதா “ஸாரி அண்ணி, உங்களை காயப்படுத்தறது என் நோக்கம் இவ்லை” என சட்டென்று சரண்டராகி விட்டாள்.

வேறு எதையும் கிளறாது, பொதுவாக நலன் விசாரித்த பவித்ரா, சிறிது நேரத்திற்கெல்லாம் “அம்புக்குட்டீ, அப்பா வந்துடுவாங்க, வீட்டுக்குப் போகலாம் வா” என மகளைத் தூக்க, குழந்தை முரண்டினாள்.

“மா, கிச்னா பேபி”

“கிச்னா பேபி சீக்கிரமே இங்கயே வந்துடுவான். நீ அவன் கூடவே இருக்கலாம், அப்பா பைக் வந்தாச்சே” என்றபடி பவித்ரா தன் எதிர்பார்ப்பை வலியுத்தி, பெண்ணை அள்ளிக்கொண்டு சென்றாள்.

பவித்ராவை நேருக்கு நேர் எதிர்கொள்வதில் இருந்த நெருடலை ஒன்றுமில்லாமல் செய்த நாத்தனாரின் செயல் லலிதாவை சற்றே உறுத்தத்தான் செய்தது. அது அவளது இரட்டை சகோதரனின் நிம்மதிக்காக என்பதும் புரிந்தது.

பாலைக் குடித்த கிருஷ்ணாவை சீதளா தன்னோடு தூக்கிச் சென்றார்.

மிகுந்த கலக்கத்துடன் தொடங்கிய நாள், இப்போது ஏனோ இதமாகத் தோன்றியது. ஆனாலும் அங்கேயே தொடர்வதா, பிறந்த வீட்டிற்குச் செல்வதா என்ற குழப்பம் மட்டும் தீரவில்லை.

வாமனமூர்த்தியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பது தெரியாமலே எதிர்பார்த்தாள்.

“நீ இனிமே இங்கதான், என்னோடதான் இருக்கணும்”

“இங்க இருந்து அம்மா வீடு, அப்பா வீடுன்னு வெளில போய்ப் பாரு, தெரியும்?”

லலிதா கணவன் என்ன சொல்வான் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ தெரியாது.

நேரம் மாலை ஐந்தரை. குளித்து, உடைமாற்றி வந்த வாமனமூர்த்தி “லால்ஸ், நீ விளக்கேத்தறியா?”

ஏற்றினாள்.

“லலிதா”

“ஹும்”

“என்ன செய்யப் போற?”

“எதுக்கு?”

“இங்க இருக்கியா இல்ல…”

தன் அகத்தை அடைத்திருந்த ஈகோவைக் கடக்க இயலாத லலிதா மௌனமாக நின்றாள். வாமனனே வற்புறுத்தி அவளை இருக்கச் சொல்வான் என நினைத்ததற்கு மாறாக, முடிவை இவளிடம் தள்ளியதை லலிதாவால் ஏற்க முடியவில்லை. மனம் சுணங்கியது.

நாள் முச்சூடும் அத்தனை பேசியும் மனைவியிடம் பதிலின்றிப் போகவே தன் ஏமாற்றத்தை வெளியில் காட்டாது

“ இன்னும் ஒரு மாசத்துல நமக்குக் கல்யாணமாகி மூணு வருஷமாகப்போகுது. இன்னுமே உனக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னா, நான் என்ன செய்ய?”

“அது.. அப்படியெல்லாம் இல்லை”

“இட்’ஸ் ஓகே லலிதா. நீ கிளம்பு, உன்னை உங்க வீட்டுல கொண்டு போய் விட்டுடறேன்”

லலிதாவிற்கு வாமனனின் குரலில் இருந்த இறுக்கத்தில் அவனிடம் கேட்கவே அச்சமாக இருப்பினும் “கிருஷ்ணா?” என்றாள்.

“அம்மா கிட்ட இருந்து சின்னக் குழந்தையை எப்போதும் பிரிக்கற அளவு நான் மோசமானவன் இல்லை”

கார் சாவியைக் கையில் எடுத்தவன், கதவைப் பூட்டி, எதிரே இருந்த தன் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே தரையில் பாய் விரித்து கிருஷ்ணாவை நடுவில் அமர்த்தி பெரியவர்கள் மூவரும் சுற்றி அமர்ந்து அவனோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

மகனைத் தூக்கிய வாமனன் “லலிதாவை அவங்க வீட்ல விட்டுட்டு வரேன்” என, ஸ்ரீசைலமும் சீதளாவும் ஆமோதிப்பாகத் தலையசைத்தனர்.

ஜானகி பாட்டி மட்டும் “இன்னும் எத்தனை நாள்தான் எம் பேரனை இப்படி அல்லாட விடுவ?” என நேரடியாகவே கேட்டார்.

காரில் ஏறி அமர்ந்தவளிடம் கிருஷ்ணாவைக் கொடுத்துவிட்டு, காரை கிளப்பி, பெஸன்ட் நகரில் இருந்த அவளது வீட்டுக்கு வந்து, இறங்கும் முன்

“ உன் முடிவு எதுவானாலும் கிருஷ்ணாக்காகவாவது சீக்கிரமா சொல்லு. எது சரின்னு நிதானமா யோசி” என்றவன், வந்த வேகத்தில் புறப்பட்டு விட்டான்.

லலிதாவிற்கு வாமனமூர்த்தியின் குரலில் இருந்த விலகலையும் தன் ஏமாற்றத்தையும் ஜீரணிப்பது அத்தனை சுலபமாக இல்லை.
 

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 15 - FINALE 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
37
😍😍😍

வாமனன் & லலிதா..❤️❤️❤️
என்னோடு நீ வந்தால் என்ன வா..😌😌

ரங்கராஜன் & லக்ஷ்மி..🙈🙈🙈
வயசான ஜோடிக்கும் ஒரு பாட்டு..😁😁
வராதா என்ன🙈😍
 

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
76
வாமனா பொறுமையின் சிகரம்யா நீ.

லலிதா இன்னும் என்ன எதிர்பார்க்கிறன்னு உனக்கேத் தெரியலை. என்ன செய்ய, உங்க அம்மாவுக்கே என்ன பண்ணனும்னு புரியல. வளர்ப்பு அப்படி.
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
73
அருமையான, அம்சமான, நிதானமான வாமன விஸ்வ ரூபம்
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
40
வாமன் சொன்ன விளக்கம் எல்லாம் கிச்சா குட்டிக்கே புரிஞ்சி இருக்கும் ஆனா நம்ம லாஸ்க்கு புரிய மாட்டுது புரிஞ்ச்சாலும் ஏத்துக்க ஈகோ ஒதுக்க மாட்டுது...
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
73
லலிதாவிற்கு வாமனமூர்த்தியின் குரலில் இருந்த விலகலையும் தன் ஏமாற்றத்தையும் ஜீரணிப்பது அத்தனை சுலபமாக இல்லை.
எப்படிங்க இருக்கும்? Office ல கூட சம்பளத்ததுக்காக குறித்த அளவு (not beyond level ) மேலு‌ம் பொறுப்பை ஏற்க , நான் ஏன செய்ய வேன்டும் என்ற எண்ணமே.. தானாக சரியான தான உண்டு
 
Top Bottom