• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீன் குழம்பு

Reva

New member
Joined
Nov 26, 2024
Messages
4
தேவையான பொருட்கள்:
மீன் -1/2 கி
சி.வெங்காயம்-15
தக்காளி- 2
புளி -பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் -2 குழி கரண்டி
கறிவேப்பிலை -2கொத்து
தேங்காய் -3மேஜைக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -2தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் -2 மேஜைக்கரண்டி

அரைக்க:
தேங்காய்+5 சி.வெங்காயம்

செய்முறை:
மீன் துண்டுகளை உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.அதில் அரைத்த தேங்காய் விழுது, தக்காளி ,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் சி.வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி பாத்திரத்தை மூடி வைக்கவும். மசாலா தூள்கள்,புள்ளியின் பச்சை வாசனை போனதும் அதில் மீன் துண்டுகளை சேர்க்கவும். மீண்டும் பாத்திரத்தை மூடி வைக்கவும். மீன் வெந்ததும் 3 நிமிடம் பாத்திரத்தை திறந்து வைத்து குழம்பை கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அனைத்து விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.
 

Attachments

  • 20220403_120007.jpg
    20220403_120007.jpg
    851.4 KB · Views: 6

Author: Reva
Article Title: மீன் குழம்பு
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom