புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் என குறிப்பிடப்படுகிறது. இவை முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலகட்டமாகும். மகாளய பட்சத்தின் சிறப்புகள் என்ன, இந்த கால கட்டத்தில் என்ன செய்தால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இறந்த நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபட்டு, அவர்கள் தெய்வ நிலையை அடைவதற்கும், நமக்கு பித்ருக்களின் ஆசிகள் கிடைப்பதற்கும் செய்யும் காலமே மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சத்தில் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து, நாம் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை அவர்களே நேரடியாக ஏற்படுதாக ஐதீகம். அதனால் இந்த 15 நாட்களும் முன்னோர்களை வழிபடுவதற்கு, திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கும், தானங்கள் வழங்குவதற்கும் ஏற்ற காலமாகும்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்து வழிபடுவதற்கும், முன்னோரின் பெயரால் தானம் செய்து வழிபடுவதற்கும் ஏற்ற சிறப்பான காலமாக நம்பப்படுகிறது. வழக்கமாக அமாவாசைகளில் நாம் யாருடைய பெயரை சொல்லி தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே போய் சேரும். ஆனால் மகாளய பட்சத்தில் நாம் அளிக்கும் தர்ப்பணம், நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என சொல்லப்படுகிறது. அதே போல் இந்த காலகட்டத்தில் அளிக்கப்படும் தானங்களை நம்முடைய முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்று, நமக்கு ஆசி வழங்குவதாகவும் ஐதீகம். அதனால் தான் மகாளய பட்சம் மிகவும் முக்கியமான காலமாக குறிப்பிடப்படுகிறது. இந்த 15 நாட்களும் நாம் செய்யும் வழிபாடுகளால் பித்ரு தோஷத்தில் இருந்து மீண்டும், முன்னோர்களின் ஆசிகளை முழுவதுமாக பெற முடியும். இந்த நாட்களில் செய்யப்படும் முன்னோர் வழிபாடு குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், சுப காரிய தடைகள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றை போக்கி, சுபிட்சத்தை உண்டாக்கும். மகாளய பட்சத்தில் மட்டும் தெரியாதவர்களுக்கும், இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். மேலும், மகாளய பட்ச காலத்தில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கன்னியாகுமரி, கோடியக்கரை, காவிரி ஆறு போன்ற புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நம் வம்சம், வாழையடி வாழையாக தழைத்தோங்குவதோடு, பித்ருக்களின் ஆசியால் மன நிம்மதியும், வாழ்க்கையில் வளமும் வந்து சேரும். அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. அவ்வாறு இயலவில்லை என்றால், சில குறிப்பிட்ட திதிகளில் மட்டுமாவது செய்ய வேண்டும்.
இந்த மகாளயபட்ச அமாவாசை காலகட்டம் எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்க வல்லது. நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடம் மிகவும் முக்கியமானது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் செய்வது விசேஷம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் எந்த காலகட்டத்தோடு செய்ய வேண்டும் என்றால், காலை நேரம் சூரியன் உதயமாகிற காலகட்டம் ரொம்ப விசேஷம்.
வீட்டுக்கு வந்து பித்துருக்களுடைய படம் வைத்து அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் வைத்து தீபாராதனை காண்பித்து, முறையாக வணங்கி முதல் உணவை காக்கைக்கும், இரண்டாவது உணவை அந்த ஊரில் ஏழ்மை நிலையில் இருப்பவருக்கும் கொடுத்துவிட்டு, பின் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
பித்ருக்களுக்கு ஏன் திதி கொடுக்க வேண்டும்?
தெய்வங்களை வழிபடுவது போலவே, குறிப்பிட்ட காலத்தில் முன்னோர்கள் வழிபாடுகள், திதி, காரியம் போன்றவை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் இரவு காலமான தட்சிணாயன புண்ய காலத்தில் பூமியைக் காக்க, பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள் பூமிக்கு வந்து, மனிதர்களை காப்பார்கள் என்பது ஐதீகம். ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் முடியும் இந்த காலத்தில், புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்று பித்ரு காரியம் செய்ய ஏற்ற நாட்களாகும். புரட்டாசி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி, அமாவாசை வரை நீடிக்கும். இந்த காலத்தில், நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய: இந்த நாட்களில் திதி கொடுப்பதன் மூலம், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷம் நீங்க: உங்கள் குடும்பத்தின் இறந்தவர்களுக்கு சரியாக திதி கொடுக்க முடியாமல் அல்லது தவற விட்டிருந்தால், பித்ரு தோஷம் ஏற்படலாம். மகாளய பட்ச நாட்களில் திதி கொடுப்பதன் மூலம் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
பண்டைய வழக்கம்: சிவபெருமான், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்றோரும் மகாளய நாட்களில் பித்ரு வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மகாளய பட்சம் நாட்களில் என்ன செய்ய வேண்டும்?
இந்த 15 நாட்களும் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், பித்ரு தோஷம் நீங்கவும் பல்வேறு செயல்களைச் செய்யலாம்
தர்ப்பணம் அல்லது திதி கொடுத்தல்:
இந்த நாட்களில், குடும்பத்தில் இறந்தவர்களின் திதி வரும் நாள் அல்லது ஏதேனும் ஒரு நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பிண்டம் வைத்து அல்லது எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்யலாம். நீர் நிலைகள், ஆற்றங்கரைகள் அல்லது கடற்கரைகளில் திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தானம் செய்தல்: மகாளய பட்ச நாட்களில் தானம் செய்வது மிகவும் புண்ணியமானது. குறிப்பாக, பசுக்களுக்கு உணவளிப்பது அல்லது நன்கொடை அளிப்பது பித்ரு கடன்களைத் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.
கால்நடைகளுக்கு உணவளித்தல்: கால்நடைகளுக்கு உணவளிப்பதும் இந்த நாட்களில் செய்ய வேண்டிய ஒரு முக்கிய காரியம்.
மகாளய பட்சம் 2025 தேதி - எப்போதி துவங்குகிறது
2025 மகாளய பட்சம், செப்டம்பர்8, 2025 அன்று தொடங்குகிறது மற்றும் செப்டம்பே 20, 2025 அன்று முடிகிறது. சர்வ பித்ரு அமாவாசை என்று சொல்லப்படும் மகாளய அமாவாசை
செப்டம்பர் 21, 2025 அன்று வருகிறது.

Last edited:
Author: SudhaSri
Article Title: மஹாளய பட்சம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.