பாம்பென்றால்…!
மிகவும் பின்தங்கிய கிராமம் அது. மருத்துவ வசதிக்குப் பல கிலோமீட்டர் போக வேண்டும். நான் முன்பு வேலை பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் அந்த கிராமம் வந்தது. ஒரு வேளை மேப்பில் பார்த்தால் அருகில் இருக்குமோ என்னவோ சாலை வழியாகப் போனால் 40 கிலோமீட்டர் போக வேண்டும். பக்கத்து மாவட்டத்தின் எல்லை. சாலையும் மிக மோசம். அந்த ஊரில் எட்டு மாத கர்ப்பவதியான பெண் ஒருவர் அன்று அதிகாலையில் திடீரென்று இறந்துவிட்டார் என்று கிராம சுகாதார செவிலியர் அழுகையுடன் எனக்கு ஃபோன் செய்தார். இப்படிப்பட்ட செவிலியர்களின் பொறுப்பில் நான்கைந்து கிராமங்கள் இருக்கும். அதில் ஒன்றில் அவர் தங்கியிருப்பார்.
எப்போதுமே சுகாதாரத்துறையில் கர்ப்பகால மரணங்கள் மிகத் தீவிரமாகப் பார்க்கப்படுகின்றன. பொறுப்பு செவிலியரிடம் ஏன்? எதற்கு? நீங்கள் என்ன செய்தீர்கள்? இதில் உங்கள் கவனக்குறைவு ஏதும் உண்டா? என்று கேள்விகள் ஏகப்பட்டது வரும். அதனால் சிஸ்டருக்குப் பதட்டம். 'பொறுமையா இருங்க சிஸ்டர். என்ன நடந்தது?' என்று நான் கேட்க, "நல்லா தான் இருந்திருக்கா. காலையில அஞ்சு மணிக்கு வாசல் தெளிக்கப் போனவ, உள்ள வந்து வீட்டுக்காரரை எழுப்பி எனக்கு ஒரு மாதிரி வருதுன்னு சொல்லிருக்கா.. அப்படியே மயங்கி விழுந்து இறந்துட்டாளாம்" என்றார்.
சரி நேரில் போய் விடுவோம் என்று கிளம்பிப் போனோம். அந்த சாலையில் காரில் போவதே பெரிய விஷயமாக இருந்தது. பல இடங்களில் சாலையே இல்லை. வயல்கள் வழியே வண்டியை இறக்கி, ஏற்றி, ஒரு வழியாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அது கரிசல் காட்டில் அமைந்திருந்த ஒரு சிறு குடிசை. இறுதி யாத்திரைக்கு எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்கள். திடீர் மரணம், வாசல் தெளிக்கப் போன பெண், வீட்டைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது அதனால் பாம்புக்கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடனே உள்ளே சென்றேன். உடலைக் குளிப்பாட்டி மாலைகள் போட்டு வைத்திருந்தார்கள். வெளியே தெரிந்த உடல் பாகங்களில் தேடிப்பார்க்க, ஒரு காலின் பாதத்தில் பாம்பின் பற்கள் பதிந்த தடம் இருந்தது. அந்தப் பெண்ணின் உறவினர்கள் என்ன? என்ன? என்று கேட்க, பாம்புக்கடியாக இருக்கலாம் என்று கூறிவிட்டு வந்தோம். ஒன்றிரண்டு போலீஸ் தலைகளும் தென்பட்டன. செவிலியரும் தன் பங்குக்கு அந்தப் பெண்ணின் தூரத்து உறவினர்களிடம் கணவன் மேல் எதுவும் சந்தேகம் இருக்கிறதா, அடிதடி என்று எதுவும் வாய்ப்பு உண்டா என்று விசாரித்திருந்தார். அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்தது. இன்றைய சூழலில் போலீஸ் விசாரணை, போஸ்ட்மார்ட்டம் எல்லாம் அவசியமாகிவிட்டது. இந்தச் சம்பவம் பதினாறு ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் எங்களுடைய அறிக்கை மட்டுமே போதுமானதாக இருந்தது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது உண்மைதான். அதுவும் விவசாயிகளிடையே பாம்புக்கடி மிக அதிகம். இன்றும் ஒரு நாளில் நான்கு முதல் பத்து நோயாளிகள் வரை எதிர்கொள்கிறோம். வறட்சியான பூமியில் மழை பெய்யும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கிறது. பாம்புப் பொந்துக்குள் மழைத் தண்ணீர் புகுந்து விட்டால் அவை வெளியே வர வாய்ப்பு அதிகம். இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட முந்நூறு வகையான பாம்புகளில் பதினைந்து மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. அந்த பதினைந்தில் நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே 98 சதவீத பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. நல்ல பாம்பு அல்லது நாகப்பாம்பு (cobra), கட்டுவிரியன் (krait), கண்ணாடி விரியன் (Russel's viper) சுருட்டை விரியன் (saw scaled viper) ஆகிய இந்த நான்கு பாம்புகளால் நம் நாட்டில் மட்டும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் மரணங்கள் நடப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தப் பாம்புகளின் விஷத்தை சேகரித்தே விஷமுறிவு மருந்து anti snake venom தயாரிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் பாம்புக் கடிபட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டால் குணப்படுத்துவது சுலபம். உரிய பரிசோதனைகளுக்குப் பின் தான், கடித்தது விஷப் பாம்பா அல்லது விஷமற்ற பாம்பா என்பது தெரியும். விரியன் பாம்பு வகைகள் ரத்தத்தின் உரை நிலையை பாதிக்கக்கூடியவை. அதனால் நோயாளி வந்தது முதல் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து எப்போது ரத்தம் உறைவதில் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போது விஷ முறிவு மருந்து உடனடியாக செலுத்தப்படும். அதன் பின்னும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு நோயாளி தொடர் கண்காணிப்பில் இருப்பார்.
விஷம் உடலில் ஏறும் வாய்ப்பினை, கடியின் தன்மை, அதற்கு முன் பாம்பு எப்போது உணவு உட்கொண்டது, எப்போது தன் விஷத்தை வெளியேற்றியது இவையெல்லாம் முடிவு செய்யும். சற்று முன் தான் பாம்பு ஒரு தவளையை உண்டு முடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் நஞ்சுப் பையில் சேமிக்கப்பட்ட விஷம் அப்போது காலியாகி இருக்கலாம். அதன்பின் அந்தப் பாம்பு ஒரு மனிதனைத் தீண்டினால் பெரிய பாதிப்பு இருக்காது. பாம்பு கடித்தவுடன் அதிகப் பதற்றம் கூடவே கூடாது. இதயத்துடிப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ரத்த ஓட்டம் விஷம் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து உடல் முழுவதும் விரைந்து பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
நாகப் பாம்பைப் பொறுத்தவரை தன் விஷத்தை அவ்வளவாக வெளியேற்ற விரும்பாது, சேமித்து வைக்கவே விரும்பும் என்பார்கள். அதனால் பெரும்பாலும் பக்கவாட்டில் லேசாக கோடிழுப்பது போல் கடிக்கும், அல்லது ஒற்றைப்பல்லை மட்டுமே உபயோகிக்கும். அப்படி இருந்தால் அதிக பாதிப்பு இல்லை. இரண்டு பற்களாலும் முழுவதுமாகத் தீண்டியிருக்கும் பட்சத்தில் அதிகபட்ச ஆபத்து நேரலாம். நாகத்தின் விஷம் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தாக்கும். கண் இமைகள் மூடுவதும், மூச்சுத் திணறுவதும் இதற்கான அறிகுறிகள். விரைந்து செயலாற்றி விஷ முறிவு மருந்து, பிராணவாயு மற்றும் செயற்கை சுவாசம் அளித்தால் உறுதியாகக் காப்பாற்றி விடலாம்.
அழகு ஆபத்தானது என்பது எதில் உண்மையோ இல்லையோ பாம்புகள் விஷயத்தில் முற்றிலும் உண்மை. விரியன் பாம்புகளின் மேல் இருக்கும் கோடுகளையும், வடிவங்களையும் இயற்கை வரைந்திருப்பது போலத் திருத்தமாக எந்த ஓவியனாலும் வரைய முடியாது. நல்ல பாம்பின் படத்தில் இருக்கும் கண் போன்ற வடிவமும் (spectacle) இயற்கை வரைந்த ஒரு அழகான ஓவியம் தான். விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, பச்சைப்பாம்பு இவற்றுக்கு நிறம் பளிச்சென்று இருக்குமே தவிர அவற்றின் உடலில் வடிவங்கள் இருக்காது. சதுரங்க வேட்டை திரைப்படம் நினைவிருக்கிறதா? மண்ணுள்ளிப் பாம்பை (sand boa) அதிர்ஷ்டம் மிக்கது என்று விற்பார்களே? அதுவும் ஒரு ஆபத்தற்ற பாம்பு தான்.
பாம்புகளே நல்ல விலங்குகள் தான் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். உலகின் மோசமான விலங்கு எது என்று கூகுளிடம் கேட்டால், முதலில் கொசு, அப்புறம் மனிதன், மூன்றாவதாகத் தான் பாம்பைச் சொல்கிறது. தன் இருப்புக்கு ஆபத்து வரும்போது மட்டுமே பாம்புகள் தம் குணத்தைக் காட்டுகின்றன.
முதலில் சொன்ன கர்ப்பிணிப் பெண் நல்லபாம்பு கடித்ததால் இறந்திருக்கலாம். அதுவும் இரை சாப்பிட்டு வெகு நேரம் ஆகிய நல்லபாம்பாக அது இருக்கலாம் என்பது என் அனுமானம். அந்தப் பெண்ணைப் போல சிலர் எதேச்சையாக பாம்புகளின் பாதையில் குறுக்கிட்டு துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கின்றனர்.
இன்றும் சில கிராமங்களில் பச்சிலையைக் கடிப்பது, நான்கு மிளகும் இரண்டு வெற்றிலையும் சாப்பிட்டேன் விஷம் இறங்கி விட்டது என்று கூறும் நபர்கள் உண்டு. அது விஷமற்ற கடியாக இருந்திருக்கலாம், அதனால் பச்சிலை வேலை செய்தது போல ஒரு தோற்றம் இருக்கும். பாம்பு கடித்த காலையோ கையையோ இறுக்கமாகக் கட்டி விடும் பழக்கம் இருக்கிறது. மிகவும் இறுக்கமாகக் கட்டியதால் இரத்த ஓட்டம் தடைபட்டு விரல்கள் அழுகிப்போன நபர்களும் உண்டு. சற்றுத் தளர்வாக ஒரு விரல் மட்டுமே உள்ளே நுழையும் அளவு கட்டினால் ரத்த நாளங்கள் வழியே மேலே ஏறுவதைக் கொஞ்சம் தவிர்க்கமுடியும். கடிபட்ட இடத்தில் லேசாகக் கீறி ரத்தத்தை வெளியேற்றுவது சில சமயம் ஆபத்தில் முடியலாம். என்ன முதலுதவி அளித்தாலும் விஷமுறிவு மருந்து மட்டுமே நிரந்தரத் தீர்வு. மற்றபடி ஹீரோயின்களின் உடலில் ஏறிய விஷத்தை வாயில் உறிஞ்சிக் காப்பாற்றிய ஹீரோ நீலம் பாரித்து இறந்து போவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்!
*பாம்புக்குக் காது கேட்குமா?
*பாம்புகள் பழி வாங்குமா?
*கடல் பாம்புகள் என்ன செய்யக்கூடும்?
*தேள், பூரான் கடித்தால் பாதிப்
பு என்ன?
அடுத்த வாரம்...

Author: SudhaSri
Article Title: பாம்பென்றால் ...1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.