பகலிரவு பல கனவு - 26
பல நாட்கள் கழித்து தனது தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் முதல் படியாக அன்று அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு வந்துவிட்டான். தென் மேற்குப் பருவமழை தேனியில் தனது முதல் சாரலைத் தூவிக் கொண்டிருந்தது. சில்லென்று மேலே விழுந்த மழைத்துளிகளால் அவனது உள்ளத்தில் பற்றி எரியும் நெருப்பை அணைக்க முடியவில்லை.
திருமணத்தையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் குறிப்பாகத் தாயின் நடவடிக்கைகளையும் அசை போட்டபடி அன்று சாகுபடி செய்யப்பட்ட பழங்களைப் பார்வையிட்டான். அவன் வராவிட்டாலும் தினசரி வேலைகள் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது. அவன் சேர்த்துக் கொண்ட ஆள்பலம் அப்படி.
“குட் மார்னிங் பிரபாகரன்! ஹனிமூன் எல்லாம் ஓவரா? இப்படி ஒரு சூப்பர் க்ளைமேட்ல புது மாப்பிள்ளை ஜோடி இல்லாமல் தனியா வரலாமா?” என்று கேட்டபடி அங்கே வந்தவர் தோட்டத்தை நிர்வகிக்கும் கதிரேசன். தமிழ் நாடு தோட்டக் கலை துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். அவரது வாழ்வில் பெரும் பகுதியைப் பழங்களுடன் கழித்தவர். ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்வது என்று யோசித்தவரின் கவனத்தைப் பிரபாகரன் தனது தோட்டத்தின் மீது திருப்பி இருந்தான்.
அவனது கடைகளைப் பற்றி அறிந்து வியந்தவர், இரண்டு வருடங்களாக அவரது அனுபவத்தை எல்லாம் பிரபாகரனின் தோட்டத்தில் கொட்டிக்கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் சார்! என்ன கேட்டீங்க? ஹனிமூனா? ஏன் சார் ஏன்? எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத் தான் நிம்மதியா மூச்சு விடறதுக்கே சான்ஸ் கிடைச்சிருக்கு. ஒவ்வொரு நாளும் கண் முழிக்கும் போதே, இன்னைக்கு என்ன பூதம் கிளம்புமோன்னு திக்குன்னு இருக்கு சார்.” இடைவிடாது புலம்பியவனின் தோளில் தட்டினார் கதிரேசன்.
“இப்பவே ரொம்ப அலுத்துக்கக் கூடாது யங் மேன்! கல்யாணம் பண்ணிப்பார்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சாங்க. இன்னும் பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கே!”
“இது வெறும் ட்ரைலர் தான். மெயின் பிக்சர் இன்னும் அமோகமா இருக்கும்னு சொல்லுறீங்க. ஷப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!!”
“அதே தான்.. ட்ரைலருக்கே அசந்துட்டா எப்படி?” எனது சிரித்த கதிரேசன், “உன் நல்ல மனசுக்கு மெயின் பிக்சர் நல்லாவே இருக்கும், பிரபாகரன். இதெல்லாம் சும்மா பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரி. நம்மளைச் சுத்தி இருக்கிற மனுஷங்க மனசோட ஆழத்தைப் புரிஞ்சுக்க ஒரு வாய்ப்புன்னு நினைச்சு என்ஜாய் பண்ணு மேன். சந்தோஷம் மட்டுமே இருந்தால் வாழ்க்கை ருசிக்காது. கூடவே கொஞ்சம் சச்சரவுகளும் வேணும். அப்போதான் வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்.”
“என்ஜாய் பண்ணவா?? காலங்காத்தால உங்க கிட்ட மாட்டுனதுக்கு வச்சு செய்றீங்க. இன்றைய தத்துவம் போதும் சார். ஆளை விடுங்க.” கையெடுத்துக் கும்பிட்டான் பிரபாகரன்.
“முதலாளி சொல்லும் போது மறுக்க முடியாதே. நாம டாபிக்க மாத்துவோம். நம்ம தோட்டத்தில பன்னீர் திராட்சை விளைச்சல் அதிகமா இருக்கு. நம்ப கடைகளுக்கு அனுப்பி வச்சது போக நிறைய மிச்சம் வரும் போல தோணுது. திராட்சைய நிறைய நாள் சேர்த்து வைக்கவும் முடியாது. வேற ஏதாவது செய்யணும்.”
“வேற ஏதாவதுன்னா.. நீங்க என்ன சொன்னாலும் செஞ்சிடலாம் சார். சொல்ல வர்றத தெளிவா.. உடைச்சு சொல்லிடுங்க. நான் இப்போ இருக்கிற நிலைமைல மூளைக்கு எக்ஸ்ட்ரா வேலையெல்லாம் கொடுக்க முடியாது.”
“இரண்டு மூணு ஐடியா இருக்கு பிரபாகரன். நார்மலா, நம்ம ஏரியால இருந்து இந்தியா பூராவும் பன்னீர் திராட்சை சப்ளை நடக்குது. பழமா டைரக்டா சேல்ஸ் ஆகுது. அதைத் தவிர ஹோல் சேல்னு பார்த்தா, கம்பெனிகளுக்கு ஜுஸ், ஸ்குவாஷ், ஜாம்னு பண்றதுக்கு சப்ளை நடக்குது. இதையும் தாண்டி க்ரேப் வைனுக்கு எப்பவுமே மவுஸ் உண்டு.”
“இது எல்லாமே இங்க ரெகுலரா நடக்கிறது தானே? நமக்கு எது ஒத்து வரும்னு பார்த்து நீங்களே முடிவு பண்ணுங்க சார்.”
“ரெகுலரா நடக்கிறது தான். ஆனால், பழத்தை மட்டும் சப்ளை பண்றதுல பெரிய லாபம் எல்லாம் வந்துடாது. வேற மாதிரி யோசிக்கணும்.”
“சார்! நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. தயவு செஞ்சு தெளிவா பேசுங்க. பதினெட்டு வயசுல இருந்து நானே யோசிச்சு நானே முடிவு செஞ்சு நொந்து போய் இருக்கேன் சார். என் நல்லதுக்காகத் தான் இவ்வளவு பேசறீங்கன்னு எனக்குத் தெரியும். என் மேல உங்களுக்கு உள்ள பிரியமும் தெரியும். உங்க பையனுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி நினைச்சு, நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதைச் சொல்லுங்க. நிச்சயம் செஞ்சிடலாம்.”
“ம்ம்.. நீ ஜுஸ் கடைக்காரனாவே இல்லாமல் அடுத்த லெவலுக்குப் போறதைப் பத்தி யோசிக்கணும்னு தான் விம் போட்டு விளக்கிட்டு இருக்கேன். முன்ன மாதிரி நீ தனி ஆளு கிடையாதுன்னு ஞாபகம் இருக்கட்டும். நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்துக்கு போக முடியாது. பொண்டாட்டிக்குப் பணம் செலவழிக்கிறத விட நேரத்தைச் செலவு செய்யறது ரொம்ப முக்கியம். நல்ல டைம் எடுத்துக்கோ. நம்ம கிட்ட மூணு ஆப்ஷன் இருக்கு. எது பெஸ்ட்னு நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா.”
“நிச்சயம் சார். ஒரேயொரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன் சார். எத்தனை தொழில் ஆரம்பிச்சாலும், எத்தனை உயரத்துக்குப் போனாலும் என் ஜுஸ் கடையை விடமாட்டேன் சார். என்னால முடியும்னு எனக்கே காட்டுனது அந்தக் கடை தான் சார். அது, எங்க அம்மாவுக்கும் மேல.” பிரபாகரன் மேலே பார்த்தபடியே உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான்.
அதைப் புரிந்திருந்த கதிரேசன் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அவனது மொபைலில் வந்த அழைப்பு பிரபாகரனின் மோன நிலைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. யாராக இருக்கும் என்று அறிந்தவன் புன்னகையுடன் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ மிஸ்டர்.தோட்டக்கார்! டைம் என்னன்னு தெரியுமா? இன்னும் லேட் ஆனா காலேஜ் பஸ் எனக்கு டாட்டா சொல்லிட்டு போயிடும். நான் பொடிநடையா கிளம்பறேன். நீங்க ஒவ்வொரு மரத்தையா சுத்திப் பாத்துட்டு வந்து சேருங்க. பை.”
“ஹேய்.. சம்யூ! ரொம்ப நாள் கழிச்சு வந்ததால டைம் போனதே தெரியாமல் இருந்துட்டேன். இதோ கிளம்பிட்டேன்.. பத்தே நிமிஷத்துல வந்துடுவேன்.”
இவனது பதிலைக் கேட்காமலே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“ஹும்.. நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை சார். பொண்டாட்டி வந்த பிறகு நேரத்தைச் செலவு செய்யறது எப்படின்னு ஒரு கோர்ஸ் போகணும். நான் கிளம்பறேன் சார். இன்னும் லேட்டானா சேதாரம் ஜாஸ்தியா இருக்கும்.” சிரித்துக் கொண்டே தனது புல்லட்டை நோக்கி நடந்தான் பிரபாகரன்.
காலை ஏழு மணி. சம்யுக்தா பரபரப்பாகபக் கல்லூரிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். மெல்லிய கலரில் சுடிதார், தோளில் மருத்துவருக்கான வெள்ளை கோட், ஒரு கையில் ஸ்டெதஸ்கோப் மறுகையில் பை சகிதம் கிளம்பி விட்டாள்.
ஒரு நாளும் இல்லாத வழக்கமாக, கண்ணாடியின் முன் நின்றாள். அதில் தெரிந்த பிம்பம் அவள் தானா என்று சந்தோஷமாக இருந்தது. வழக்கமாக ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் என்று கிளம்புவள் திருமணம் ஆன நாள் முதலாய் அப்படி ஒரு உடை இருப்பதையே மறந்து விட்டிருந்தாள். காரணம் சரண்யா. அவள் தான் இருக்கும் இடம் அறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று தோழிக்கு அறிவுறுத்தி இருந்தாள்.
“பிரபாகரன் எதுவும் சொல்லாமல் இருக்கலாம் சம்யூ. அவங்க வீட்டுல அம்மா, அப்பத்தான்னு பெரியவங்க இருக்காங்க. வீட்டுக்கு கல்யாணம் விசாரிக்க யாராவது வந்து போயிட்டு இருப்பாங்க. அட்லீஸ்ட் கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளாவது ஜீன்ஸ ஓரங்கட்டி வை.”
“ஃப்ளவர் கூட ஜீன்ஸ் போடறாங்க சரண். நான் பாத்திருக்கேன்.”
“அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சம்யுக்தா மேடம். உன்னையும் ஜீன்ஸ மறந்துடுன்னு சொல்லல. கொஞ்ச நாளைக்கு ஒதுக்கி வைன்னு தான் சொல்றேன்.” இப்படிப் பேசியே சம்மதிக்க வைத்திருந்தாள்.
இப்போது கண்ணாடியைப் பார்த்தவள், “அட இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டாள்.
“நானே நானா? யாரோ தானா?” பாடியவாறு அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அவள் கீழே இறங்கிய போது
சமையலறையில் காமாட்சி தனியாக இருந்தார். முகத்தில் நேற்றைய கோபத்தின் எச்சங்கள் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது.
“குட் மார்னிங் அத்தை! நான் காலேஜுக்கு போயிட்டு வரேன்.”
சம்யுக்தா இயல்பாகக் கூறினாள். காமாட்சியை இயல்பாக்க தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்து விடுவது என்று முடிவெடுத்திருந்தாள்.
முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும் என்று அவள் நினைக்கவில்லை தான். ஆனால் காமாட்சி இவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பார் என்றும் நினைக்கவில்லை.
இவளது குட்மார்னிங் கேட்காதது போலவே நடந்து கொண்டார். கண் கூட தூக்கிப் பார்க்கவில்லை. சம்யுக்தா எதுவும் பேசாமல் தண்ணீர் குடித்து விட்டு வாசலுக்குச் செல்லத் திரும்பினாள்.
அப்போது, “சமையல் செஞ்சாச்சு. டிபனும் ரெடி. காலைல சாப்பிட்டு, மதியத்துக்கு சாப்பாடு எடுத்துட்டு போகலாம்” என்றது காமாட்சியின் குரல். அதில் அக்கறை இல்லை.
ஆணை மட்டும்.
சம்யுக்தா ஒரு நொடி நின்றாள்.
“அத்தை.. அது வந்து..”
அந்த வார்த்தை முடிவதற்குள்,
“என்ன?” காமாட்சியின் குரல் கூர்மையானது.
“காலைல இருந்து சாப்பிடாம
வெளியிலேயே அலையற பழக்கம் தான்உங்க வீட்டுல கத்துக் கொடுத்தாங்களா?”
சம்யுக்தா பதறினாள்.
“அப்படி இல்ல அத்தை.. நான் .. எனக்கு..”
“இந்த வீட்டுக்கு வந்த பிறகும்
உன் வசதிப்படி தான் நடப்பியா? மாமியார்னு ஒரு மரியாதை இல்லையா?”
அந்தக் கேள்வியில் மாமியாரின் உரிமை இல்லை. அதிகாரம் இருந்தது.
“சாரி அத்தை! ப்ளீஸ் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. காலைல சாப்பிட்டு பஸ்ல போனா எனக்கு வாமிட் வரும். அதனால எதுவும் சாப்பிடாமல் தான் போவேன். மதியம், காலேஜ்லயே சாப்பிட்டுடுவேன். கிளாஸ் எப்போ முடியும்னு சொல்ல முடியாது. சில நேரம் சாப்பிடவே நேரம் இருக்காது. அதான்...” தயங்கித் தயங்கித் தன் நிலையைப் புரிய வைக்க முயற்சி செய்தாள் சம்யுக்தா.
அதே நேரம் தனது புல்லட்டை அவசரமாக நிறுத்தி விட்டுப் பிரபாகரன் வேகமாக உள்ளே வந்தான். காமாட்சியின் முகம் கடுமையாக இருந்தது. சம்யுக்தாவின் முகத்திலோ பதட்டம். நொடியில் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்து கொண்டான்.
‘காலங்காத்தால பஞ்சாயத்தா?’ என்று நொந்து போனான்.
“என்னம்மா?” பஞ்சாயத்தை அன்னையிடம் இருந்து ஆரம்பித்து வைத்தான். அவனது குரல் அமைதியாக இருந்தாலும்
கண்களில் ஒரு தீவிரம் இருந்தது. காமாட்சி மகனது கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் கழுத்தை நொடித்தார்.
சம்யுக்தா தனது கையையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கல்லூரிக்குச் செல்லும் பேருந்து வரும் நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தவன், “அம்மா! அவளுக்கு பஸ்ஸுக்கு லேட் ஆகிடுச்சு. ஏத்தி விட்டு வந்து பேசறேன். வா சம்யூ!” என்று மனைவியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
பிரபாகரன் பத்து நிமிடம் கழித்து வந்த போதும் காமாட்சி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
“அம்மா! ஒரு காப்பி கொடுங்க. குடிச்சிட்டு தெம்பா பஞ்சாயத்து பண்றேன்.” காமாட்சியைக் கையோடு அழைத்துச் சென்று அவர் கையால் காப்பியை வாங்கிக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான். திருமணத்திற்குப் பிறகு அன்னையின் கையால் குடிக்கும் முதல் காப்பி. வழக்கம் போல ரசித்து ருசித்துக் குடித்து விட்டு நிமிர்ந்தான்.
“இப்போ சொல்லுங்கம்மா. சம்யூ என்ன செஞ்சா?”
“உன் பொண்டாட்டி இந்த வீட்டுச் சாப்பாடு வேண்டாம்னு சொல்றா.” பதில் காட்டமாக வந்தது.
பிரபாகரன் காமாட்சியின் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.
“சம்யூ, ஏதாவது காரணம் சொல்லி இருக்கட்டுமே?”
“காலேஜ்ல சாப்பிடுவேன்னு சொல்றா. விடியல்ல எழுந்து நான் சாப்பாடு செஞ்சதுக்கு என்ன மரியாதை? காலைலயும் பச்சைத் தண்ணியக் குடிச்சிட்டு கிளம்பறா. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஒரு வேளை சோறு போட வக்கில்லாம இருக்கிறோமா?” திருமண நாளிலும் அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் நடந்ததை மறந்து விட்டு அவர் பேச, பிரபாகரனின் இதழ் விரக்தியில் வளைந்தது.
“அதுல என்ன தப்பு இருக்கும்மா? இப்போல்லாம் பசங்க காலேஜல தான் சாப்பிடணும்னு ரூலே இருக்கு தெரியுமா?” அவனது குரல் இன்னும் அமைதியாகவே வந்தது.
“தப்பு இல்ல. ஆனா மருமகளா வந்த பிறகும் வீட்டு வழக்கம்னு ஒன்னு இருக்குல்ல?”
“ஓ.. வீட்டு வழக்கம்னா.. அது முதல் நாள் மருமகளுக்கு ஆரத்தி எடுக்கும் போது ஏன் இல்லை? கல்யாணம் ஆன முதல் நாளே இலையைப் போட்டு சோறு போடாம போன போது ஏன் இல்லை? அடுத்த நாளில் இருந்து பகையாளி மாதிரி மூஞ்சியை திருப்பி வச்ச போது ஏன் இல்லை? சம்யூ காலேஜ் போக ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. இத்தனை நாள் இல்லாமல்
இப்போ மட்டும் எதுக்காக இருக்கணும்?”
இப்படி எல்லாம் கேட்க வேண்டும் என்று அவன் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால், பலநாள் நெஞ்சில் சுமந்த கேள்விகள் பாரம் தாங்காமல் வேகமாக வெளியே வந்து விழுந்தன. அந்தக் கேள்விகள் காமாட்சியைக் குத்தியது.
“நீ தான் இப்படி எல்லாம் பேசுறியா பிரபா? நேத்து வரைக்கும்
என்னை அம்மான்னு கூப்பிட்ட வாய்தான இது? நீயும் எல்லா ஆம்பளைங்க மாதிரி தானே இருக்க. பொண்டாட்டி வந்த உடனே அம்மா இரண்டாம் பட்சமா போயிட்டால்ல?”
பிரபாகரன் ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டான். “அம்மா…இது பெரிய விஷயம் இல்ல. இதுக்கு இவ்வளவு பேச வேண்டாம்.”
“உனக்குத் தெரியல. இப்படித் தான் ஆரம்பிக்கும்.”
“ஆரம்பிக்கும்னா?”
“இன்னைக்கு சாப்பாட்டுல ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே உங்க வசதிப்படி மாற வேண்டியது தான். இப்பவே மாமியார்னு மரியாதை இல்லை. போகப் போக மனுஷியாக் கூட மதிக்க மாட்டாங்க.”
“அம்மா… அவ மரியாதை இல்லாம
ஒரு நாளும் நடந்துக்க மாட்டா.”
காமாட்சி சிரித்தார். அது சிரிப்பு இல்லை. புறக்கணிப்பு.
“மரியாதை சொல்லி வராது. நடத்தைல தெரியும்.”
அவ்வளவுதான். பிரபாகரனின் குரல் உயர்ந்தது. “போதும் நிறுத்துங்கம்மா.”
அந்த போதும் என்ற வார்த்தை கணீரென்று வீடு முழுவதும் எதிரொலித்தது. காமாட்சி மகனை வெறித்துப் பார்த்தார். அந்தச் சத்தத்தில் அப்பத்தா உள்ளே வந்தார்.
“என்னடா பேராண்டி இது?”
பிரபாகரன் மெதுவாகச் சொன்னான்.
“அப்பத்தா… நான் என்ன தான் செய்ய? பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு” என்று தலையைப் பிடித்துக் கொண்டான் பிரபாகரன்.
அப்பத்தா ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை. மருமகளை ஆழ்ந்து பார்த்தார்.
“நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா போ. கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம்” என்றார் அமைதியாக.
காமாட்சி அதிர்ந்தார்.
“என்ன சொல்றீங்க அத்தை?”
“ஏன், நான் தெளிவா தானே சொன்னேன். எம்பேரனையும் அவன் பொண்டாட்டியையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னேன்.”
“அதாவது என்னை விட்டு எம்மகனைப் பிரிக்கலாம்னு பாக்குறீங்களா?”
“பிரிச்சுப் பாக்குறது யாருன்னு உனக்கே தெரியும். இந்த வீட்டுல எம்பேரனும் அவன் பொண்டாட்டியும் நிம்மதியா வாழ முடியும்னு தோணல. நம்மளால மாற முடியலன்னா
அவன் தூரமா போறது தான்
சரியான வழி.” அந்த வார்த்தைகள்
தீர்ப்பாக வந்து விழுந்தது.
மாமியார் பேசிய வார்த்தைகள் குத்தினாலும் காமாட்சி பதில் பேசவில்லை.
அன்று மாலை சம்யுக்தா கல்லூரியில் இருந்து வந்த போது வீட்டின் உட்புறம் இருந்து மாடிக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது. கேள்வியாகப் பார்த்தவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் வெளிப்புற படிகளின் வழியாக அவளை அழைத்துச் சென்றான்.
“சம்யூ! இனிமேல் இது தான் நம்ம சாம்ராஜ்யம்.” என்றவாறு சமையலறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே புத்தம் புதிய அடுப்பு முதல் சமையலுக்குத் தேவையான அனைத்தும் அணிவகுத்து நின்றன.
சம்யூ கண்களில் நீரோடு அவனைப் பார்த்தாள்.
“சம்சாரம் அது மின்சாரம் படம் பாத்திருக்கியா சம்யூ?”
“சான்ஸே இல்லை.. ஏன் கேட்கிறீங்க?”
“அதுல வர்ற மாதிரி தான் இப்போ நாம தனியா வந்திருக்கோம். தள்ளி நின்று, நீ சௌக்கியமா? நான் சௌக்கியம்னு கேட்டுக்கப் போறோம்” என்று சிரித்தான் பிரபாகரன்.
“எனக்கு பயம்மா இருக்கு பிரபா! இரண்டு ஃபேமிலியும் சப்போர்ட் பண்ணலேன்னா நம்மளால சமாளிக்க முடியுமா? எனக்கு குக்கிங் எல்லாம் ரொம்ப தெரியாதே! கூடவே வயசான காலத்துல பெரியவங்களைத் தனியா விட்டுட்டோம்னு எல்லாரும் சொல்லுவாங்களே!” காதல், கல்யாணம் என்று கனவு வாழ்க்கையில் இருந்தவளுக்கு நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.
“பயப்படாத சம்யூ. வேற வழியே இல்லாமல் தான் இப்படி வந்திருக்கோம். ரொம்பத் தள்ளிப் போகாம பக்கத்துலயே தான் இருக்கோம். பெரியவங்களைக் கண் பார்வைல தான் வச்சிருக்கோம். இந்தத் தனிக்குடித்தனம் நம்ம குடும்பத்தைக் கலையாமல்
காப்பாத்தறதுக்கான ஒரு முயற்சி. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்.”
இருவரும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அந்த நம்பிக்கை நிறைவேறுமா? இல்லை ஆட்டம் காணுமா?

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு - 26
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.