நீருக்குள் பூத்த நெருப்பு
அத்தியாயம் 6
முகத்தின் அழகை
அப்படியே பிரதிபலிக்கும்
ஆளுயரக் கண்ணாடி
அகத்தின் அழுக்கை
யாருக்கும் காட்டாமல்
தனக்குள்ளேயே எதற்காக
ஒளித்து வைத்துக் கொள்கிறது?
அத்தனை வருடங்களாக மனதில் ஒளிந்து கொண்டிருந்த கேள்விகளை ஒவ்வொன்றாக பூரணியின் முன்னே எடுத்துவைத்தாள் மணிமேகலை.
“ அழுதேன், அழுதேன், அன்னைக்கு அப்படி அழுதேன். சம்மர் லீவு முடிஞ்சு உன் கூட என்னவெல்லாமோ பேசணும், நான் போன இடங்களைப் பத்தி உனக்குச் சொல்லணும், உனக்குன்னு வாங்கி வச்சிருந்த சின்னச் சின்ன கிஃப்ட் ஐட்டம்லாம் கொடுத்து நீ சந்தோஷப்படறதைப் பாக்கணும்னு ஆசையா ஸ்கூலுக்கு வந்தேன். நீ ஊரை விட்டே போயிட்டேன்னு தெரிஞ்சதும், அந்த ஏமாத்தத்தை என்னால தாங்க முடியலை பூரணி! என் கிட்டச் சொல்லிக்காம பூரணி எப்படி ஊரை விட்டுப் போகலாம்னு கோபம், கோபமா வந்தது எனக்கு. பாட்டி கிட்டப் போயிப் பொலம்பித் தள்ளினேன். இப்போ நினைச்சுப் பாத்தா எனக்கே சிரிப்பா வருது” என்றாள் மணிமேகலை.
“ புரியுது கலை. நல்லாப் புரியுது. ஆனா அந்த ஸம்மர் லீவில என்னோட வாழ்க்கையில் என்னவெல்லாமோ நடந்து போச்சு. சின்னவளா இருந்ததுனால எங்கிட்ட யாரும் கேக்கவும் இல்லை. நான் ஒருவேளை வருத்தப்படுவேனோன்னு அக்கறை காட்டவுமில்லை. என்னோட வாழ்க்கை எப்படி இருக்கணும்னு தீர்மானிக்கற உரிமையை என்னோட சித்தி எடுத்துக்கிட்டாங்க. ஆனால் அவங்க செஞ்ச அத்தனை விஷயங்களையும் அவங்க என் பேரில் இருந்த வெறுப்பின் உச்சத்தில் செஞ்சாலும் கடைசியில் எனக்கு அதுனால மிகப்பெரிய நன்மை நடந்தது. அங்கேதான் என்னோட அம்மா தெய்வமா நின்னு என்னைக் கரையேத்தினாங்கன்னு நினைக்கிறேன். நீ எங்கிட்ட சொல்லுவயே ஞாபகம் இருக்கா உனக்கு? ராத்திரியில் உன்னோட அம்மா வானத்தில் நட்சத்திரமா வருவாங்க. நீ அவங்க கிட்டப் பேசலாம். உன்னோட குறைகளை அவங்க கிட்டச் சொல்லலாம்னு நீ எனக்குச் சொன்னது என் மனசுல அப்படியே பதிஞ்சு போயிருந்தது. அப்படி அம்மா கிட்டப் புலம்பின போதுதான் அம்மா ஒரு தேவதையை எனக்கு உதவி செய்ய அனுப்பி வைச்சாங்க. அவங்கதான் என் வாழ்க்கையோட போக்கையே மாத்தி அமைச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு மென்டரா என் கூடவே அவங்க நிக்கறாங்க” என்று சொல்லும்போது பூரணியின் குரல் உணர்ச்சிப் பெருக்கால் தழுதழுத்துப் போயிருந்தது.
பூரணியின் வாழ்க்கையில் வீசிய புயலையும் அந்தப் புயலில் சேதமின்றி அவள் தப்பித்ததையும் தெரிந்துகொள்ள மீண்டும் அவளுடைய கடந்த காலத்தில் எட்டிப் பார்க்கலாம்.
பூரணி அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி பெற்ற சமயம். கோடை விடுமுறை தொடங்கி, பூரணியின் தோழிகள் எல்லோரும் உறவினர் வீடு, சுற்றுலா என்று சென்றிருந்த சமயம். அடுத்த வகுப்புக்கான பாடப் புத்தகங்களைப் பக்கத்து வீட்டில் இருந்து வாங்கித் தானாகவே படிக்க ஆரம்பித்தாள் பூரணி.
‘ போன வருஷம் சரியாப் படிச்சுப் பரீட்சை எழுத முடியலை. இந்த வருஷம் அதுக்கும் சேத்து வச்சு நல்லா மார்க் வாங்கணும்’ என்று அன்று இரவு, வானில் நட்சத்திரமாக இருந்த அம்மாவிடம் உறுதி அளித்தாள் பூரணி. ஆனால், வீட்டில் சித்தியின் மூளையில் உருவாகிய திட்டம் ஒன்று பூரணியின் வாழ்க்கையைப் புயலாகத் தாக்கிச் சின்னாபின்னமாக்கும் அளவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
ஒருநாள் மதிய நேரத்தில் பூரணி, குட்டித் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். கிலுகிலுப்பையை ஆட்டி, அவன் சிரிப்பதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தாள். புதுமலராக இருந்த குழந்தையின் சிரிப்பு, அவளுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த வருத்தங்களை மறக்கடித்தது. சித்தி, அப்பாவிற்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டே பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பூரணியின் காதில் விழுந்தது.
“ அமெரிக்காவில் நம்ம தமிழ்க்காரங்க கட்டின கோயிலுக்கு நல்ல அர்ச்சகர் வேணுமாம். நீங்க அந்த வேலைக்குப் பொருத்தமா இருப்பேள்னு என்னோட ஒண்ணு விட்ட அண்ணா, அபிப்பிராயப்படறார். நீங்க போறேளா? நான் பேசிப் பாக்கட்டுமா? ”
“ அவ்வளவு தொலைதூரம் அதுவும் கடல் கடந்து போறதுல எனக்கு இஷ்டமில்லை. உங்களையெல்லாம் கூட்டிண்டு போக முடியுமான்னு தெரியலை. நான் மட்டும் தனியாப் போறதுல என்ன பிரயோஜனம்? வேண்டாம் விடு. அப்புறம் அங்கே போறவாளுக்கு நன்னா இங்கிலீஷ் பேசத் தெரிஞ்சிருக்கணும். நன்னா வேதமெல்லாம் படிச்சுருக்கணும். நானே அரைகுறை. ஏதோ அந்தக் காலத்துல என் தோப்பனார் சொல்லிக் கொடுத்ததை வச்சு ஓட்டிண்டிருக்கேன். இப்படிப்பட்ட வேலைக்குப் போனாச் சாயம் வெளுத்துடும். விட்டுரு இந்தப் பேச்சை இத்தோட”
“ என்னண்ணா இப்படி எடுத்த எடுப்பிலேயே அஸ்து பாடறேள்! நான் நம்ம குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வரணும்னு நாயாப் பேய் அலைஞ்சு, நல்ல விஷயம் ஒண்ணைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்தா, முழுசாக கேக்கறதுக்குள்ள முந்நூறு நோனாவட்டம் பண்ணறேளே? நான் என்ன விதவிதமாப் பட்டுப் பொடவைகளும், கழுத்து நெறைய நகையுமா கேக்கறேன்? நமக்குன்னு ரெண்டு கொழந்தைகள் ஆச்சு. அதுவும் மூத்தது பொண்ணு. திரும்பிப் பாக்கறதுக்குள்ள முணுக்குன்னு வளந்து பெரியவளாயிடுவா. கல்யாணம், காத்தின்னு பண்ணக் கையில நாலு காசு வேண்டாமா? இல்லை இந்த ஆம்பளைப் புள்ளையை நன்னாப் படிக்க வைக்க வேண்டாமா? இவனையும் உங்களை மாதிரி கோயில் அர்ச்சகனாக்க நான் ஒரு நாளைக்கும் சம்மதிக்க மாட்டேன். இப்பவே சொல்லிட்டேன், ஆமாம்” என்று கழுத்தைத் திருப்பி அவள் நொடித்ததில் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளாதது கூட அதிசயம் தான்.
“ என்னடி இப்படிப் புரிஞ்சுக்காமப் பேசறே! தூர தேசம் போய்ச் சமாளிக்கற அளவுக்கு எங்கிட்ட சாமர்த்தியம் இல்லைடி. நெனைச்சாலே கொலை நடுங்கறது எனக்கு! ”
“ நன்னாருக்கு. ஆம்பளையாப் பொறந்துட்டு இப்படி பயந்து நடுங்கலாமா? அதிர்ஷ்ட தேவதை எப்பயாவது வந்து கதவைத் தட்டுவாளாம்! தேடி வர மகாலக்ஷ்மியை யாராவது வேண்டாம்னு திருப்பி அனுப்புவாளோ? இங்கிலீஷ் தெரியாதுன்னு பெருசாக் கொறைப்பட்டுக்கறேளே? டிவில சினிமாலல்லாம் தமிழ், இங்கிலீஷ், ஹிந்தின்னு கலந்து கட்டி ஒரு மாதிரி அச்சுப்பிச்சுன்னு பேசி ஃபேமஸாயிடறவா எத்தனையோ பேர் இருக்கா. ஒரு மாசம் யாரண்டையாவது இங்கிலீஷ் கத்துண்டாப் போறது. பெரிய அஷ்டமாசித்தியா என்ன இங்கிலீஷ் கத்துக்கறது ? அதுவும் ஓரளவு சமாளிக்கற அளவு கத்துண்டாப் போறுமே! உங்களுக்கெல்லாம் கற்பூர புத்தி! கப்புன்னு பிடிச்சுக்க மாட்டேளா என்ன? சம்ஸ்கிருதம் தெரிஞ்சவாளுக்கு இங்கிலீஷ் என்ன இங்கிலீஷ்? எல்லாம் நன்னா வரும் உங்களுக்கு! ” என்று கூடை கூடையாக ஐஸ்கட்டிகளை அவருடைய தலையில் கொட்டினாள் அந்த சாமர்த்தியக்காரி.
அவளுடைய வாதத்தைக் கேட்டு வாயடைத்துப் போயிருந்தார் அர்ச்சகர். அதுதான் சாக்கென்று மேலே தொடர்ந்தாள் சித்தி.
“ அண்ணாவாத்து விசேஷத்துக்கு நாம ஒரு தடவை போயிருந்த போது நீங்க யாருக்கோ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு அர்த்தம் சொன்னேளாம். அதைக் கேட்டதிலேந்து அண்ணா மனசுல ஒங்க பேருல அவ்வளவு அபிமானம்! அவர் நெனைச்சிருந்தா யாருக்கு வேணாலும் சொல்லிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு நமக்கு ஏன் சொல்லணும்? அதுதான் தெய்வ சங்கல்பம்னு சொல்லறது! எது எப்படியோ, எங்காத்து மனுஷா மூலமா நமக்கு ஒரு விடிவு காலம் பொறந்ததுன்னா நல்லதுதானே? இதுல யோசிக்க என்ன இருக்கு? ”
“ அதெல்லாம் சரி. அவா எல்லாரையும் கூப்பிடலையே? என்னை மட்டும்னா வரச் சொல்லுவா? ஒன்னையும் கொழந்தைளையும் விட்டுட்டு நான் தனியா இருக்கணுமேடி? அதை யோசிச்சுப் பாத்தியா? “
“ இருந்தா என்ன கொறைஞ்சு போயிடுவேள்? இங்கேயே கெடந்து இன்னும் நாலு கொழந்தைகளைப் பெத்துண்டு நான் அல்லாடறதுக்கு நீங்க தள்ளி இருக்கறதே நல்லதுன்னு தோணறது எனக்கு. ஒரு ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சுண்டு ஓட்டுங்கோ. கை நிறையப் பணம் சம்பாதிச்சுண்டு வாங்கோ. அதுக்கப்புறம் நாம நிம்மதியா வாழலாம். ரெண்டு வருஷத்துல அவாளுக்கு ஒங்க வேலை பிடிச்சுப் போச்சுன்னா, எங்களையும் நீங்க அங்கேயே வரவழைச்சுக்கலாம். அவாளே அதுக்கு ஒதவி செய்வா.”
“ சரி, அப்படியே நான் கெளம்பிப் போறதாவே வச்சுக்கலாம். நீ தனியா இங்கே எப்படி சமாளிப்பே? ”
“ அதிலென்ன கஷ்டம்? இப்ப என்னத்தைக் கிழிக்கறேள் நீங்க? நான்தானே ஒண்டி ஆளா, ரெண்டு கொழந்தைகளையும் வச்சுண்டு அத்தனை வேலைகளையும் சமாளிக்கறேன். அதுவும் உங்க பொண்ணு பூரணி இருக்காளே, கொஞ்சம் கூடச் சமத்துப் போறாது. ஒரு வேலையும் உருப்படியாச் செய்யத் தெரியாது. நூறு தடவை சொல்ல வேண்டிருக்கு. அப்படியே அப்பாவைப் கொண்டிருக்கு இந்தப் பொண்ணு! எப்பப் பாரு, கையிலயும், காலிலயும் காயத்தைப் பட்டுண்டுடறா. அக்கம்பக்கத்துல இருக்கிறவா எல்லாரும் நாந்தான் அவளைக் கொடுமைப்படுத்தறதா வாய் கூசாமல் பேசறா. நாளைக்குக் கல்யாணம் ஆகி இன்னொரு ஆத்துக்குப் போகவேண்டிய பொண்ணுன்னு நானும் மாஞ்சு மாஞ்சு அத்தனை காரியமும் கத்துத் தரேன். யாருக்கும் என்னோட அருமை புரியலை. ஒங்களையும் சேத்துத்தான் சொல்லறேன்” என்று சித்தி கண்ணைக் கசக்கத் தொடங்கவும், பூரணியின் அப்பா கிடுகிடுவென்று மனமிரங்கிவிட்டார்.
“ சரி, சரி, கண்ணைக் கசக்காதே. எனக்கு என்னமோ பண்ணறது மனசை. என்ன பண்ணனும்னு நீயே சொல்லிடு” என்று முழு சரணாகதி அடைந்துவிட்டார் பூரணியின் அப்பா.
அடுத்த மாதம் பூரணியின் அப்பா சென்னை சென்று வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்களைத் தொடங்கினார். மாஞ்சோலை கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்த வீடு கோவில் வேலைக்காக அர்ச்சகருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. வேலையை விட்டதால் வீட்டைக் காலி பண்ண வேண்டிய நிலைமை. பூரணியின் சித்தி வீட்டைக் காலி செய்து விட்டுத் தன் பிறந்த வீட்டை அடைந்தாள். மூன்று மாதங்கள் கழித்து ஒரு நல்ல நாளில் பூரணியின் அப்பா, வெளிநாடு செல்ல விமானம் ஏறினார்.
அவர் போகும் வரை வாயை மூடிக் கொண்டிருந்த சித்தி, பூரணியை என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினாள். அவளுக்கே பூரணி உறுத்தலாக இருந்தபோது, சித்தியின் பிறந்த வீட்டினருக்குக் கேட்கவே வேண்டாம், அவளைக் கரித்துக் காட்டினார்கள். அவள் என்ன செய்தாலும் குற்றமாகக் கருதினார்கள். சரியான சாப்பாடு இல்லை. பிரியமான வார்த்தை இல்லை. வசை மாரி மட்டும் தங்குதடையின்றித் தொடர்ந்து பொழிந்தது. அவளுக்கு உகந்ததாக ஒரு வழி விரைவிலேயே கிடைத்தது.
“ சித்தி, நான் திரும்ப ஸ்கூல் போணும். ஸ்கூல் திறந்து ரெண்டு மாசம் ஆச்சு. இங்கே ஏதாவது ஸ்கூலில சேத்துவிடுங்கோ சித்தி. அப்புறம் படிக்கறது கஷ்டம் ஆயிடும்” என்று தைரியமாகச் சித்தியிடம் போய்ப் பேசிவிட்டாள் பூரணி.
“ இப்போ உடனே ஸ்கூலில போய்ச் சேந்து படிச்சு என்னத்தைச் சாதிக்கப்போறே நீ? நானே கையில இருந்த காசையெல்லாம் போட்டு ஒங்கப்பாவை வெளிநாடு அனுப்பி இருக்கேன். அவர் சம்பாதிச்சுப் பணம் அனுப்பட்டும். அதுக்கப்புறம் ஸ்கூலில சேந்துக்கலாம். பெரிய கலெக்டர் படிப்பு ஒண்ணும் பாழ்போகலை இப்போ” என்று சீறினாள் பூரணி மீது. சித்தியின் பதிலை பூரணியால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் வாயை மூடிக்கொண்டு போவதைத் தவிர வேறு வழியேயில்லை அவளிடம். வத்தல், தொத்தலாகவாவது ஆதரவாக இருந்த அப்பாவும் பக்கத்தில் இல்லை. பூரணி என்னதான் செய்வாள் பாவம்!
சித்தியின் அம்மாவின் அராஜகமான மூளையில் புதியதொரு யோசனை உருவானது. மகளிடம் அதை ஓதி விட்டாள். மகளுக்கும் அம்மாவின் யோசனையைக் கேட்டு பயங்கர சந்தோஷம்.
அவர்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் ஃபேக்டரி ஒன்று இருந்தது. அவர்கள் ஊரிலிருந்து நிறைய ஆட்கள் அங்கு வேலைக்குப் போவதுண்டு. காலையில் பஸ்ஸில் அழைத்துச் சென்று மாலையில் பஸ்ஸில் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஊரில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் சிலர் அங்கே வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். குழந்தைகளிடம் வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும் திருட்டுத்தனமாகச் சட்டத்தை மீறுவது நம் நாட்டில் பழக்கமான ஒன்று தானே?
“ குழந்தைகளை வேலைக்கு எடுத்துக் கொண்டால் பாதிச் சம்பளம் கொடுத்தால் போதும். ஆனால் வேலை என்னவோ இரண்டு மடங்காக வாங்கி விடலாம்” என்று அங்கிருந்த மேனேஜர் யோசித்ததால் அவனுடைய இலாபமும் அதிகரித்தது. சம்பளப் பணமும் கணிசமாகக் குறைந்தது.
அடுத்த நாளில் இருந்து பூரணி வேலைக்கு அனுப்பப்பட்டாள். கையில் ஒரு தூக்குவாளியில் பழைய சாதத்துடன் அனுப்பிவிட்டார்கள்.
“ கொஞ்ச நாளைக்கு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் வரைக்கும் வேலைக்குப் போ. உன் சம்பளத்தைச் சேத்துவை. கணிசமாச் சேந்ததும் ஸ்கூலில சேத்துடறேன்” என்று ஆசை காட்டப்பட்டதால், படிப்பைத் தொடரும் ஆசையில் பூரணியும் வேலைக்குச் சேர்ந்தாள்.
வேலை ஒன்றும் எளிதாக இல்லை. அதுவும் பூரணி போன்ற குழந்தைகளுக்கு மிகவும் கடினமானது. மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சாம்பார் மசாலா, கரம் மசாலா ஆகியவை அரவை மெஷினில் திரிக்கப்பட்டு எடை வாரியாகப் பைகளில் அடைக்கப்பட்டன. அவற்றைத் தவிர ஊறுகாய் வகைகள் அங்கு தயாரிக்கப்பட்டன. மிளகாய், மற்ற மசாலாக்களின் நெடி நுரையீரலை பாதிக்கக் கூடியது. சுவாசக் கோளாறுக்கு நிச்சயமாக வழிவகுக்கும். என்னதான் முகத்தை மாஸ்க் வைத்து மறைத்துக் கொண்டாலும் பாதிப்பு இருக்கவே செய்கிறது.
“ சித்தி, அங்கே வேலை செய்யறது ரொம்பக் கஷ்டமா இருக்கு சித்தி. கண்ணெல்லாம் எரியறது. மூச்சு விடவே சிரமமா இருக்கு. இருமல், தும்மல் வருது. தும்மினா அங்கே இருக்கற ஸுபர்வைஸர் கோச்சுக்கறார். கூலியைக் குறைச்சுருவேன்னு மெரட்டறாரு. இந்த வேலை வேணாம் சித்தி. வேற எங்கேயாவது வேலைக்குப் போறேனே! ” என்று கொஞ்சினாள்; கதறினாள் பூரணி, சித்தியிடம். எதுவும் பலிக்கவில்லை அந்த ராட்க்ஷஸியிடம். பூரணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மிளகாயின் நெடியால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு ஒருநாள் அங்கே ஃபேக்டரியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து விட்டாள் பூரணி. அங்கிருந்தவர்கள் பயந்துபோய் அருகிலிருந்த அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பூரணியின் வீட்டிற்கும் தகவல் அனுப்பிவிட்டார்கள்.
சித்தியோ, தகவலைக் கேட்டுப் பதறவில்லை. மருத்துவமனைக்கு ஓடவுமில்லை.
“ அதுதான் ஆஸ்பத்திரியில் சேத்துட்டாங்க இல்லை. அவங்க பாத்துக்குவாங்க. ரெண்டு நாள் கழிச்சு உடம்பு சரியானதும் போய் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துரலாம். இப்போ உடனே கூட்டிட்டு வந்து என்னத்தை சாதிக்கப் போறா” என்று அலட்சியமாகக் கூறிவிட்டாள்.
இந்த சமயத்தில் தான் ஒரு தேவதை பூரணியின் வாழ்க்கையில் எட்டிப் பார்த்தாள். அன்றிலிருந்து பூரணியின் வாழ்க்கை சரியான பாதையில் வெற்றிநடை போட
ஆரம்பித்தது.
தொடரும்,
திருபுவனம் நெசவாளி.

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.