நான் போடுற கோட்டுக்குள்ளே - 9
அந்த புதன்கிழமை அழகாக விடிந்தது. காலை ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்த சுபிக்ஷா எந்த உடையை உடுத்துவது என்று பெரும் குழப்பத்துக்கு ஆளானாள். அவளுக்கு முதலில் வந்த கேள்வி பாரம்பரிய உடையா இல்லை மாடர்ன் உடையா என்பது. புடவை, சுடிதார், ஃபார்மல் பேண்ட் ஷர்ட், ஜீன்ஸ்/ ஸ்கர்ட் டாப்ஸ், லெக்கின்ஸ் டாப்ஸ் என்று நூற்றுக்கும் ஆடைகள் இருந்தும் அவ்வளவு எளிதில் எதையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஒரு நைட்டியை மாட்டிக் கொண்டு வார்ட்ரோப் முன்னால் நின்றவள் முழுமையாக பதினைந்து நிமிடங்கள் கழித்தும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள். இன்று அவள் வேலையில் சேரும் நாள், அதனால் தான் இத்தனை ஆராய்ச்சி. இல்லையென்றால் ஒரு நொடியில் அவளது கை ஒரு லெக்கின்ஸையோ ஜீன்ஸையோ எடுத்து அதற்கு மேட்சாக ஒரு டாப்ஸையும் எடுத்திருக்கும். அவை தான் சுபிக்ஷாவின் ஆல் டைம் ஃபேவரைட் டிரஸ்.
யாராவது வேறு உடுத்தலாமே என்று சொன்னால் "I feel comfortable in this" என்ற ரெடிமேட் பதிலே எப்போதும் வரும். ஆனால் இன்று கண்கள் அவளது ஃபேவரைட் டிரஸ் இருந்த பக்கம் போகவே இல்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு அரக்கு நிறத்தில் ஒரு சுரிதாரை எடுத்து மாட்டிக் கொண்டாள். அவளுக்கு நன்றாகப் பொருந்தியதோடு போகும் இடத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது.
எங்கே போகப் போகிறாள் என்று தானே கேட்கறேள்.. இன்று தான் அவளது வேலையில் சேரப் போகிறாள். அவளது உடை என்பது அவளது பதவிக்கும் நிறுவனத்திற்கும் ஏற்றதாக அமைய வேண்டாமா?? அதனால் தான் இத்தனை நேரம்.
மற்றபடி “ஒரு பெண், தனக்குப் பிடித்த வகையில் நன்றாக, உடையணிந்து கொண்டால், தன்னம்பிக்கை அதிகமாகும்" என்று எங்கேயோ எப்போதோ கேட்டதை ட்ரையல் பார்த்து அதை உண்மை என்று உணர்ந்து தனது கொள்கையாகவே மாற்றிக் கொண்டவள்.
இப்போது பல நிறுவனங்களில் லெக்கின்ஸ் அதிகாரபூர்வ உடையாக மாறிவிட்டாலும் பதவிக்கேற்றபடி உடை உடுத்தும் போது அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. உயர் பதவியில் இருப்பவருக்கு லெக்கின்ஸ் அணியும் கொடுப்பினை கிடையாது.
நம்ம சுபிக்ஷாவையும் அப்படி ஒரு நிர்ப்பந்தம் தான் சுரிதார் அணிய வைத்திருக்கிறது. சாதாரணமாக என்றால் யாராவது லெக்கின்ஸ் போடாதோ என்று சொன்னால் என் உடை என் உரிமை என்று அவளுக்குள் இருக்கும் பெண்ணியவாதி சிலிர்த்து எழுந்து விடுவாள். இப்போதோ அந்த பெண்ணியவாதியைக் கஷ்டப்பட்டு தூங்க வைத்து விட்டாள். இந்தப் பெருமை எல்லாம் அவள் சேரக் காத்திருக்கும் கம்பெனி டிரஸ் கோடையே சேரும் (dress code).
கூடவே கேம்பஸ் இன்டர்வியூ நடப்பதற்கு முன்பு அவளது கல்லூரியில் பிளேஸ்மென்ட் ஆஃபீசர் ஆற்றிய ஒரு நீண்ட உரையையும் சாரும்.
"ஷப்பா!! இவர் ஏண்டி இப்படி ஆத்து ஆத்துன்னு உரை ஆத்துறாரு. இது தான் டிரஸ் கோட்டு சொன்னா கேட்டுக்கப் போறோம். அதை விட்டு ஏதேதோ ஹெட்டிங்ல பேசிட்டு இருக்காரு. நாம கேட்டோமா? அவர் கிட்ட இருந்து யாராவது மைக்க வாங்குங்கப்பா" என்று மாணவர்கள் அலறிய தினம் அது. அந்த அளவிற்கு லெக்கின்ஸ்/ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்று ஒரு மணி நேரம் விம் போட்டு விளக்கி இருந்தார்.
வாசகர்களுக்காக அவரது உரையில் ஒரு துளி இங்கே… என் உடை என் உரிமை என்று பேசுபவர்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
"டியர் ஸ்டுடன்டஸ்! அடுத்த வாரத்தில இருந்து நம்ம இன்ஸ்டிடியூட்ல கேம்பஸ் செலக்சன் ஸ்டார்ட் ஆகுது. ஹோப் எவ்ரிபடி இஸ் ப்ரிபேரிங் வெல். இன்டர்வியூ அட்டென்ட் பண்றதுக்கு சில ஜெனரல் இன்ட்ரக்ஷன்ஸ் எல்லாரும் ஃபாலோ பண்ணுங்க.. முதல் பாயிண்ட்.. ப்ரசன்டபிளா இருக்கணும். இட் ஸ்டார்ட்ஸ் வித் யுவர் டிரஸ் . இன்டியன் ஆர் வெஸ்டர்ன் எதுவானாலும் ஓகே. ஆனால் இட் ஷூட் பி எ ஃபார்மல் டிரஸ்" என்று ஆரம்பித்தவர் கொடுக்கப்பட்ட நேரத்தில் பாதியை அதே பாயிண்ட்டுக்கே செலவழித்து மாணவர்களின் ஏகோபித்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.
"வெஸ்டர்ன் கன்ட்ரீஸ்ல குளிர் அதிகம். குளிருக்கு உடலோடு ஒட்டிய உடை தேவைப்படும். ஸோ.. அவங்க லெக்கின்ஸ்/ஜீன்ஸ் ப்ரிஃபர் பண்றாங்க. வருடத்தின் பெரும்பகுதி நாட்களை குளிரில் செலவிடும் அவர்கள் தங்கள் சருமத்தில் சூட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக லெக்கிங்சை போட்டுக்கிறாங்க. ஆனால்.நம் வெயிலுக்கு? காற்றோட்டமான உடையே சிறந்தது. உடல் நலத்தையும் மனதில் கொண்டு, நம் உடையை தேர்வு செய்யலாம்.
பட் இப்போ இந்த டிரஸ்ஸஸ் எல்லா ஊர்லயும் சர்வசாதாரணமாக போட ஆரம்பிச்சாச்சு. கூடவே, யோகா, உடற்பயிற்சிக்கும் அது ஏற்ற உடையாக கருதப்பட்டதால், எல்லா நாட்டு பெண்களும் அதனை விரும்பத் தொடங்கியதோடு எல்லா காலநிலையிலும், எப்போதும் அணிந்துகொண்டிருக்கிறார்கள். உடலோடு ஒட்டி இருப்பதால் பயணத்திற்கு ஏற்றதாகவும் பெண்கள் இதனை கருதுகிறார்கள். ‘பிட்-இன்-ஷேப்’ என்பது லெக்கின்சின் அடிப்படையான விஷயமாக இருப்பதால், இளம்பெண்களின் அத்தியாவசிய தேர்வாகிவிட்டது.
கோடைகாலத்தில் பெண்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையை ஓரளவு உறிஞ்சி எடுக்கும் தன்மை லெக்கிங்ஸ்க்கு இருந்தாலும், அது அதிக நேரம் உடலை இறுக்கிக்கொண்டிருப்பது, காற்றை சருமத்தில் புகவிடாமல் தடுத்துவிடுகிறது. இதனால் கால் களின் இடுக்குப்பகுதிகளில் வியர்வை தங்கி, பூஞ்சையை உருவாகும். இத்தகைய ‘ஃபங்கஸ்’க்கு சிகிச்சை அளிக்கும்போது அந்த பகுதியில் காற்று பட வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
பெண்கள் கால் இடுக்குப் பகுதியில் ‘ஃபங்கஸ்’ ஏற்படுவதை தவிர்க்க தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது பயன்படுத்தினாலும் பெண்கள் வீட்டிற்கோ, ஆஸ்டலுக்கோ திரும்பிய பிறகாவது சருமத்தில் காற்றுபடும்படியான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
லெக்கிங்ஸ் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று கருதும் பெண்கள், அதனை தேர்ந் தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். பருத்தி இழைகள் சேர்த்தவைகளை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, பின்பகுதி, கால்கள் போன்றவைகளின் அளவுக்கு தக்கபடியானதை வாங்குவது நல்லது. குண்டான உடல்வாகு கொண்டவர்கள் அதிக இறுக்கம் கொண்ட லெக்கிங்சை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் நரம்பு இறுக்கம், சரும பாதிப்பு, தசைவலி போன்றவை தோன்றும்.
பெண்களில் சிலர் ஜீன்ஸ் துணியில் தயார் செய்யப்படும் ‘லெக்கின்ஸ்’ வகையான ‘ஜெக்கிங்ஸ்’ அணிகிறார்கள். முடிந்த அளவு அதனை தவிர்க்கவேண்டும். இது பல்வேறுவிதமான ஆரோக்கிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எந்த வகையான ‘லெக்கின்ஸ்’ ஆக இருந்தாலும் அதனை அடிக்கடி துவைத்து நன்றாக உலரவைத்து, குறிப்பிட்ட நேரம் மட்டும் அணிந்து கொள்ள பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இறுகிய ஜீன்ஸ் அணிவதும் பெண்களின் உடலுக்கு ஏற்றதல்ல. அது அவர்களது இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும். வியர்வை உறிஞ்சப்படாததால் பூஞ்சை தொற்று ஏற்படுவதும் அதிகரிக்கும். வளரிளம் பருவ பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், அது அவர்களது உடல் வளர்ச்சிக்கே கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் தொடர்ச்சியாக அதை அணிவதை தவிர்ப்பதோடு அவ்வப்போது துவைத்து, உடுத்தவும் பழகிக்கொள்ளுங்கள்.
இது எல்லாமே ஜீன்ஸ் மட்டுமே போடுற ஆண்களுக்கும் பொருந்தும். கூடவே வெரிகோஸ் வெயின்ஸ், க்ராம்ப்ஸ், ப்ளட் க்ளாட்னு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் வரலாம். ப்ளட் சர்குலேஷன் பாதிக்கப் படலாம்" என்று ஏகத்துக்கும் பயமுறுத்தி பேச்சை முடித்தார். சிலபல மருத்துவர்களின் ஆராய்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசிய விதம் சில(!!) மாணவர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.
"இதெல்லாம் டெய்லி.. அதுவும் மணிக்கணக்கில் தொடர்ந்து உடுத்தும் போது தான். எப்போதாவது யூஸ் பண்றதுல தப்பில்லை" என்று அவர் கூறிய கடைசி வரிகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டவர்களும் உண்டு. அதில் சுபிக்ஷாவும் ஒருத்தி என்று இன்று அவள் போட்டிருக்கும் டிரஸ்ஸிலேயே தெரிந்திருக்கும்.
அன்றைய தினத்தை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே மேக்கப்பை முடித்த சுபிக்ஷா ஹாலுக்கு வந்த போது அனுராதா பவ்யமாக பூஜை அறையில் மாமியாருடன் பூஜை செய்து கொண்டு இருந்தாள். இவள் வந்தது தெரிந்து ஜாடை காட்டி அழைக்க, மூன்றாவது தலைமுறையும் ஜோதியில் ஐக்கியமானது.
பூஜையை முடித்த பத்மாசனி பேத்தியை அங்கே பார்த்து திருப்தி அடைந்தார். "சுபி! பெருமாள நன்னா சேவிச்சுட்டு கிளம்பு. எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்றார். அவள் பெருமாளைச் சேவித்ததோடு நில்லாமல் வெளியே வந்தவுடன், "இப்படி நில்லுங்கோ பாட்டி. சேவிச்சுக்கறேன்" என்று காலில் விழுந்தாள். பேத்தியின் இந்த திடீர் பவ்யத்தில் மயக்கம் வருவது போல இருந்தது பத்மாசனிக்கு.
காலை ஊன்றி நன்றாக சமாளித்து
"ஹா… இருக்கட்டும்.. இருக்கட்டும். க்ஷேமமா இரு. வேலை பார்க்கப் போற இடத்தில நல்ல பேர் வாங்கு" என்று அவசரமாக ஒரு ஆசிர்வாதத்தைப் பார்சல் செய்தார். கூடவே, "அப்படியே அப்பா அம்மாவையும் சேவி!" என்று ஒரு அட்வைஸூம் வழங்கினார். தாய் சொல்லைக் கேட்டு அவசரமாக இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு மனைவியின் அருகில் வந்து நின்று கொண்டார் ரங்கராஜன். அதிலேயே அவரது எதிர்பார்ப்பு புரிந்தது.
எதிர்த்துப் பேசி அன்றைய நாளை வேறு மாதிரி ஆரம்பிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சுபிக்ஷா, அவர்களையும் வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டாள்.
என்றைக்கும் இல்லாத வழக்கமாக அவர்களது காலை உணவு நேரம் வெகு அமைதியாகக் கழிந்தது. மூவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறந்ததால் அங்கே ஒரு அசாதாரண அமைதி நிலவியது. முதலில் சாப்பிட்டு முடித்த அனுராதா, "சுபி! உனக்கு லஞ்ச்சுக்கு ரொட்டி பேக் பண்ணி இருக்கேன். கூடவே ஒரு பாக்ஸ்ல டிரை ஃப்ரூட்ஸ் வச்சிருக்கேன். ஃப்ரஷ் ஜூஸ் ஏதாவது வைக்கட்டுமா?" என்று கேட்டாள்.
தாயை நிமிர்ந்து பார்த்த சுபிக்ஷா என்ன சொல்வது என்று யோசித்தாள். நிச்சயமாக அவள் போகும் கம்பெனியில் கேண்டீன் இருக்கும், சாப்பாடும் நன்றாகவே இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறாள். அவள் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன் பாட்டியின் வாயில் இருந்து வார்த்தைகள் வந்துவிட்டன.
"என்ன.. லஞ்ச் எடுத்துண்டு போலாமா.. வேண்டாமான்னு யோசிக்கறயா? இத்தனை நாள் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டாச்சு. இப்போதைக்கு ஆத்துல இருந்து தான் வேலைக்குப் போகப் போற. நீ ஒன்னும் கையில சுமக்கப் போறதில்லை. வண்டி தான் சுமக்கப் போறது. முடிஞ்ச வரைக்கும் கொண்டு போ. இல்லேன்னா இருக்கவே இருக்கு கேண்டீன் சாப்பாடு" என்று தீர்ப்பெழுதி விட்டார்.
அவள் சொல்ல நினைத்த காரணங்கள் அத்தனைக்கும் பதில் சொல்வது போலப் பாட்டியின் பேச்சு இருந்ததால் சுபிக்ஷா வாயைத் திறக்கவே இல்லை. அவளது பெற்றோரது பார்வையும் பாட்டியின் கூற்றை ஆமோதிப்பது போலவே இருந்தது. வேறு வழியின்றி சாப்பாடு கொண்டு போகச் சம்மதித்தாள்.
அப்போதும் கூட ஒரு கண்டிஷனோடு தான் ஒத்துக் கொண்டாள். "ம்ம்.. அங்கே லஞ்ச் டைம் எப்படி இருக்குமோ தெரியாது. லேட்டானா கார்த்தால பண்ணின சாதத்தை கண்டிப்பா சாப்பிட முடியாது. கொஞ்ச நாள் கொண்டு போறேன். அப்புறம் பாத்துக்கலாம்."
இப்படியாக நல்லவிதமாகவே வீட்டை விட்டுக் கிளம்பினாள் சுபிக்ஷா. இடையே வந்த வாட்ஸ்அப் வாழ்த்துகளுக்கு பதில் சொல்லவும் மறக்கவில்லை.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் சென்னை ட்ராஃபிக்கில் நீந்தி ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டாள். அந்த சாலை முழுமையாக அவர்களின் அலுவலகம் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
தனது டிபார்ட்மெண்ட் எங்கே வரும், முதல் நாள் எங்கே ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டவள் டூ வீலர் பார்க் செய்துவிட்டு கட்டிடத்தை நோக்கி நடந்தாள். இதுவரை இல்லாத ஒரு படபடப்பு வந்து சேர்ந்தது. லிஃப்ட் எங்கே என்று பார்த்தவள் அங்கே இருந்த கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போனாள்.
எப்படியும் மூன்றாவது ரவுண்ட் வரும் போது தான் உள்ளே செல்ல முடியும். நல்ல வேளை சீக்கிரம் வந்தேன் என்று நினைத்துக் கொண்டே லிஃப்ட் வாசலில் இருந்த கூட்டத்தை விட்டுச் சற்று தள்ளி நின்று கொண்டாள். நினைத்தது போலவே இரண்டாவது ரவுண்டு முடிவில் கூட்டம் காலியாக இவள் மட்டுமே தனித்து நின்றாள். லிஃப்ட் கீழே வந்து நிற்கும் நேரத்தில் இன்னொருவர் வந்து சேர அவர்கள் இருவரும் மட்டுமே உள்ளே சென்றார்கள்.
—----
"அடடே அலமுவா? வா! வா! ரொம்ப நாளா கோவில்ல கூட பார்க்க முடியறதில்லையே? ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?"
"சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல் மாமி! நன்னாவே இருக்கோம். மாட்டுப்பொண்ணுக்கு இரண்டாவது பிரசவம். அமெரிக்கால இருக்காளே, இங்கே மாதிரி பொண்ணுக்கு அம்மா மட்டும் பார்த்தால் போறும்னு இருந்திட முடியறதா. காடாறு மாசம் நாடாறு மாசம்னு நாமளும் போய் பேபி சிட்டர் வேலையைப் பார்த்துட்டு வரவேண்டியதா இருக்கு.
என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தான். பிள்ளை கூட அங்கேயே இருந்துடுங்கோன்னு தான் சொல்றான். அந்த ஊர் குளிர் எங்காத்து மாமாக்கு ஒத்துக்கலை. அதனாலயே திரும்ப வேண்டியதா இருக்கு. ஒத்த பிள்ளைய வச்சிண்டு வயசான காலத்துல அல்லாடணும்னு தலைல எழுதி இருந்தா மாத்தவா முடியும்.
உங்க பேரனை எல்லாம் அமெரிக்கா ஆப்ரிக்கான்னு அனுப்பிடாதீங்கோ. நீங்க பெரியவா, நாலும் யோசிச்சு தான் பண்ணுவேள். இருந்தாலும் இந்த காலத்து குழந்தைகள் கேட்கணுமே. அவனுக்கும் வயசாகறதே, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டேளா?"
கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பதிலாக பத்து நிமிடம் மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போன அலமேலு மாமியை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் திருதிருவென முழித்தார் ராஜலக்ஷ்மி.
'இவ என்ன தான் சொல்ல வரா? அமெரிக்கா போகலாம்னு சொல்றாளா இல்லை கூடாதுன்னு சொல்றாளா?'
"பாட்டி! எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியா?"ஆபத்பாந்தவனாக பேரன் குரல் கொடுத்து பாட்டியைக் காப்பாற்றினான்.
"ஒரு நிமிஷம் அலமு. நீ உட்காரு. இதோ வந்துட்டேன்" என்று தப்பித்தேன் பிழைத்தேன் என்று டைனிங் ஹாலை நோக்கி ஓடினார். தேவிகாவும் முரளிதரனும் சீக்கிரமே வேலைக்குச் சென்றிருக்க, சேஷா வீட்டைச் சுற்றி மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
"காலங்கார்த்தால இந்த மாமியோட என்ன அரட்டை பாட்டி? எனக்கு எத்தனை வயசுல கல்யாணம் ஆனா இவாளுக்கு என்ன? இதைச் சாக்கா வச்சு பார்க்கிறவா எல்லாரும் கேட்கறான்னு என் ஜாதகத்தைத் தூக்கிடாத. நான் எப்போ சொல்றேனோ அப்போ பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா போறும்" பேரன் பொரிந்து தள்ளினான்.
"உனக்கு உன் கவலை.. போடா... ஏழு கழுதை வயசாகறது. இந்த லட்சணத்தில இவன் சொன்னா தான் ஜாதகத்தையே தொடணுமாம். இப்பவே உன் தலையைப் பார்த்து கண்ணு கூசறது டா. போற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரம் சோ ராமசாமி மாதிரி மொட்டையாவே ஆகிடப் போறது பாரு. அதுக்குள்ள ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ டா. இந்த காலத்து பொண்கள் எல்லாம் ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிஷன் போடறா."
"...."
"ஏன்டா ராஜா.. இத்தனை நாள் பொண்கள் கூடத் தான் படிச்சிருக்க, வேலை பார்க்கற. அதுல ஒருத்தர் கூடவா உனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை?"
"பாட்டீஈஈஈ!" என்று பல்லைக் கடித்த பேரனைக் கண்டு கொள்ளாமல் அடுத்த கேள்வியக் கேட்டார் ராஜலக்ஷ்மி.
"இந்த ஐஸ்வர்யா அத்தனை பெரியவா இருக்கான்னு கூட பார்க்காம வெளிப்படையா பழகிப் பார்க்கலாம்னு கேட்டாளே.. இந்த மாதிரி வேற யாருமே உன் கிட்ட கேட்டதில்லையா? நம்பற மாதிரி இல்லையே!"
'என்ன ஒரு சந்தேகம் இந்தப் பாட்டிக்கு?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அமைதியாக தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் சம்பத்.
"சரி சரி நீ பதில் சொல்ல பிரியப் படலேன்னு தெரியறது. நான் உனக்கு ஒரு சான்ஸ் தரேன். நம்ம ஆத்துக்கு ஏத்த மாட்டுப் பொண்ணா நீயே ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினாலும் சரி தான். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கண்டுபிடி.. இல்லேன்னா நான் பார்க்கற பொண்ணு தான் உனக்கு"
நீயே பார்த்தாலும் பரவாயில்லை என்று சொல்வதற்கு முன்பே நம் குடும்பத்துக்கு ஏற்றவளாக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனைப் போட்ட பாட்டியின் சாமர்த்தியத்தை உள்ளுக்குள் மெச்சிய படி வெளியே சிரித்து வைத்தான் பேரன்.
"என்ன டா பாட்டி இப்படி ஒரு ஐடியா கொடுக்கறாளேன்னு சிரிக்கறயா? இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜம்னு புரியறது.. ஆனாலும் சில விஷயங்களை ஏத்துக்கத் தான் மனசு ஒப்பலை" என்று பெருமூச்சு விட்டார் பாட்டி.
"பாட்டி! இன்னும் ஆறு வருஷம் ஆனாலும் நானா யாரையும் பார்க்கறதா இல்லை. அதனால ஆறு மாசம் கழிச்சு நீயே பொண்ணைப் பாரு" இன்னும் சில நிமிடங்களில் ஒருத்தியைப் பார்க்கப் போகிறான் என்று தெரியாமலே வாக்குறுதியை வாரி வழங்கினான்.
"டேய். படவா.. அப்படி எல்லாம் சட்டுன்னு சொல்லிடாத.. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?" என்றார் அனுபவசாலியான பாட்டி.
"ம்ம்.. அதையும் பார்க்கலாம்" என்றவன், "கோமளா அத்தை பேசினாளா பாட்டி?" என்று மெதுவாகக் கேட்டான்.
"ம்ம். அவ ஏன் பேசாமல் இருக்கப் போறா? ஒரு நாளைக்கு பத்து தடவை ஃபோன் பண்ணி அவ பொண்ணுக்கு என்ன குறைச்சல்னு பொரிஞ்சு தள்ளறா. பொண்ணுக்கு புத்தி சொல்றதை விட்டு நம்ம கிட்ட கோவிச்சுண்டா என்ன பண்றது? தெரிஞ்சு தான் பேசறாளான்னே நேக்குப் புரியலை."
"அவாளோட ஸ்டாண்ட் ஒன்னும் தப்பு கிடையாது பாட்டி. பொண்ணுக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும்னு எல்லா பேரன்ட்ஸூம் நினைக்கறது தானே. இன் ஃபேக்ட் ஐஷூ கேட்டது கூடத் தப்பு கிடையாது. நான் தான் என்ன சொல்றதுன்னு தெரியாமல் திகைச்சுப் போய் நின்னுட்டேன். அவளே நிதானமா கேட்டு இருந்தா நானும் யோசிச்சு அவளுக்கு சாதகமான பதிலா கூட சொல்லி இருக்கலாம். ஹூ நோஸ்.. பெருமாள் அப்படித்தான் எழுதி இருந்தால் அது தானே நடக்கும்.."
நிதானமாகச் சொல்லி விட்டு எழுந்து சென்ற பேரனை என்ன சொல்வதென்று தெரியாது விழித்தார் ராஜலக்ஷ்மி. பேரனின் பேச்சைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த சேஷாவும் அவனை ஆராய்ச்சி செய்வது போலப் பார்த்தார்.
அவனோ எதுவும் நடக்காதது போல அமைதியாகக் கிளம்பி அலுவலகம் சென்று விட்டான். "என்ன பாட்டி.. வாக்கிங் முடிஞ்சு சேஷா வந்தாச்சு. அவரைக் கவனிக்காமல் சீலிங்ல என்ன ரிசர்ச் பண்ற? நான் ஆஃபீஸ் கிளம்பறேன்" என்று பாட்டியின் கன்னம் தட்டிக் கேலி செய்து விட்டே கிளம்பினான்.
"என்னன்னா பேசிட்டு போறான் இவன்? நேக்கு ஒன்னும் புரியலையே.. பெருமாளே!" ராஜலக்ஷ்மி கணவரை மட்டும் அல்லாமல் பெருமாளையும் துணைக்கு அழைத்தார்.
"ஹூம். நேக்கு மட்டும் புரியறதா? அவன் எதையோ நினைச்சு குழம்பி இருக்கான். தானா தெளிஞ்சிடுவான். அதையே நினைச்சிண்டு இருக்காமல் எழுந்திரு. எனக்கு ஒரு வாய் காஃபி கொண்டா" என்று மனைவியை எழுப்பி விட்ட சேஷாவும் குழம்பித் தான் இருந்தார்.
இவர்களை ஒரு வழி செய்துவிட்டுக் காரில் ஏறிய சம்பத்தின் கவனம் அலுவலக வேலைகளில் சென்றுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அலுவலகம் வருகிறான். நிதானமாக அதன் சுற்றுப்புறத்தை ரசித்தபடி லிஃப்ட் நோக்கி நடந்தான். ஒரே ஒரு பெண் தான் நிற்கிறாள் என்று தெரிந்ததும் சில நொடிகள் தயங்கி நின்றவன் லிஃப்ட் வந்ததும் அக்கம் பக்கம் பாராமல் உள்ளே சென்று நின்றான்.
அவன் செல்ல வேண்டிய நான்காவது மாடியை செலக்ட் செய்தவன் அந்தப் பெண்ணின் கையும் அதே நான்காம் எண்ணை நோக்கிச் செல்லவும் அவளை யாரென்று பார்த்தான். சட்டென்று நினைவுக்கு வரவில்லை என்றாலும் எங்கோ பார்த்த ஞாபகம். அவளோ எப்போது நான்காவது மாடி வரும் என்று பார்த்துக் கொண்டு இருந்தாள்.
'யுரேகா!' என்று மனதுக்குள் கூவியவன் அவளை யாரென்று அறிந்து கொண்ட போது லிஃப்ட் நின்று அவள் வெளியே சென்று விட்டாள்.
'எங்க போயிடப் போறா?' என்று அன்றைய வேலைகளில் மூழ்கிப் போனான். பதினொரு மணிக்கு மேல் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு மறுநாள் நடக்க இருக்கும் இன்டக்ஷனுக்கு அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவன், முதல் நாள் இரவு எடுத்த உறுதிமொழியின் படி லஞ்ச்சை எடுத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குள் சென்றான்.
ஒரே ஒரு டேபிள் மட்டுமே காலியாக இருக்க அங்கே சென்று அமர்ந்தான். விதியாகப் பட்டது அவனை ஒரு பெண்கள் கூட்டத்தின் அருகில் அமர வைத்தது.
அவனே வேண்டாம் என்று நினைத்தாலும் அவர்கள் பேசும் அனைத்தும் அவன் காதுகளில் விழுந்தது.
விளைவு, சாப்பிட்டு முடித்த போது, 'ஷப்பா
!! கேட்கும் போதே கண்ணைக் கட்டறதே! போதும்டா சாமி! இத்தனையா.. நாம இதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.