• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -20

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
324
நான் போடுற கோட்டுக்குள்ளே - 20

சம்பத் சுபிக்ஷாவையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு, அனுராதாவின் கேள்விக்குச் சொந்தக்காரர் யார் என்பது தெரியவேண்டி இருந்தது. பல நேரங்களில் சுபிக்ஷா நினைப்பதை அனுராதாவின் வாய் பேசுவதை அவன் அறிந்திருந்தான். இப்போது நடப்பதும் அதே போன்ற ஒன்று தானா என்பதை உறுதி செய்ய நினைத்தான்.



மனைவியிடம் இருந்து ஆதரவாக எதையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குடும்பமே கலங்கிப் போயிருக்கும் சூழ்நிலையில் ஏதோ விருந்து முடிந்தது, கிளம்ப வேண்டியது தானே என்பது போன்ற மாமியாரின் பேச்சை அவன் ரசிக்கவில்லை.



தனிக்குடித்தனம் என்ற பேச்சுக்கு அவ்வளவு எளிதாக அவன் ஒத்துக் கொள்ளவில்லை. ஆஃபர் என்று பெரியதாகச் சொல்லி, கண்டிஷன்ஸ் அப்ளை என்று ஒரு ஓரத்தில் நமக்கு செக் வைத்திருப்பார்களே அது போலத் தான் நம் நாயகனும். சிலபல டர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் போட்டு தான் சரி என்று சொல்லி இருந்தான். அவற்றை எல்லாம் தாயும் மகளும் அலசி ஆராய்ந்து தான் அவனை ஓகே செய்திருந்தனர். அதுவும் உலக வழக்கில் அவன் சொன்ன கண்டிஷன் எல்லாம் நடைமுறைக்கு வர நாளாகும் என்பதும் ஒரு காரணம்.



ஆனால் நடப்பது எதுவுமே காலத்தின் கையில் இருக்கிறது என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. இந்த விஷயங்கள் ஞாபகத்தில் வந்ததாலே சுபிக்ஷா வாய் திறந்து எதையும் பேசவே இல்லை. ஆனால் அனுராதா அப்படி அல்ல, பேசாமல் இருந்து வாய்ப்பை நழுவ விட அவள் தயாராக இல்லை.



அதனால் மீண்டும் ஒரு முறை தனது கேள்வியை அழுத்தமாக வைத்தாள். "என்ன மாப்பிள்ளை? கேள்வி கேட்டது நான். நீங்க ஏன் சுபியைப் பாக்கறேள்? அவளுக்கும் சேர்த்து தான் நான் கேட்கறேன், நீங்க பதிலைச் சொல்லுங்கோ. எப்போ உங்க ஆத்துக்குப் போகப் போறேள்?"



அனுராதா கேட்ட கேள்வியை ஜீரணிக்க முடியாமல் சம்பத் வீட்டில் அனைவரும் திகைத்து நின்றனர்.‌ எப்போதுமே வாங்கோ என்று வரவேற்பதுடன் தேவிகாவின் வேலை முடிந்து விடும். ராஜலக்ஷ்மி தான் அனுராதாவை சமாளிப்பது, அனுராதா மனதுக்குள் நினைக்கும் விஷயத்துக்கு கூட அவரிடம் பதில் இருக்கும். ஆரம்பம் முதலே பேரனின் வாழ்க்கைக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தவர் இன்றும் அதற்காகவே மௌனம் காத்தார்.



எதிர்பாராத பேரிழப்பு ஒன்றைச் சந்தித்தாகிவிட்டது. உடம்பு, மனது இரண்டுமே ஓய்ந்து போயிருக்க புதிதாக எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும் முயற்சியில் அவர் வாய் திறக்கவில்லை. பேச்சை வளர்த்தால் தானே பிரச்சினை வளறும். அதுவும் போக, சம்பத்தின் திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இனிமேல் கணவன் மனைவி விஷயத்தை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார். சுபிக்ஷாவைப் பற்றி சம்பத்திற்கு இருந்த சந்தேகம் அவருக்கும் இருந்தது. அவரது நினைவெல்லாம் நல்ல விஷயத்தை நல்லபடியாக வரவேற்கலாமே என்பதாக இருந்தது.



சம்பத்தோ மனைவியின் பதிலை எதிர்நோக்கி இருந்தான். அவளோ, அவனது பார்வையைச் சந்திக்க மறுத்துத் பார்வையைத் திருப்பினாள். அந்த நேரத்திலும் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைக் காணும் போது சம்பத்தின் பிபி எகிற ஆரம்பித்தது.



"டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ் மாதிரி, மம்மீஸ் லிட்டில் சோல்ட்ஜர்னு புதுசா ஒன்னு கண்டு பிடிச்சிருக்காளே அதுக்கு ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் எக்ஸாம்பிள் நம்ம மன்னி தான். அவா அம்மா சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போடாதது ஒன்னு தான் குறை. அண்ணா பாக்கறான்னு தெரிஞ்சும் எப்படி பிஹேவ் பண்றா பாரேன். நீயும் தான் இருக்கியே, அத்தை ஒன்னு சொன்னா அதுக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா எதைச் செய்யலாம்னு ரூம் போட்டு யோசிப்ப.." ஒரு புறம் பரத், ஸ்நேகாவைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.



அவன் அருகில் இருந்த அரவிந்த் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான். "என்னமா அப்டேட்டடா இருக்கான் பாரு" என்று ராஜஸ்ரீயிடம் முணுமுணுத்தான். அதோடு நில்லாமல், "டேய்! சின்னப் பையனா லட்சணமா வாயை மூடிண்டு பேசாமல் இருக்க முடிஞ்சா இரு. இல்லேன்னா இரண்டு பேரும் இடத்தைக் காலி பண்ணுங்கோ. ஸ்ரேயாஸ் என்ன பண்றான்னு பாரு, போ" என்று இருவரையும் அனுப்பி வைத்தான்.



இருவரும் மெதுவாகத் தான் பேசினார்கள் என்றாலும், பரத் பேசியதும் அவனை வெளியே அனுப்பியதை வைத்து அவன் பேசிய விஷயம் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் தெளிவாகவே புரிந்தது.



பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த சம்பத் வேகமாக வந்து சுபிக்ஷாவை எழுப்பினான்.

"ஹேய்…. என்ன பண்றேள்? அவளோட கண்டிஷன் தெரியாம…" என்று பதறிய அனுராதா அவன் பார்த்த பார்வையில் அடங்கிப் போனாள்.



சுபிக்ஷாவை இழுத்துக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்த சம்பத் கதவை அறைந்து சாற்றினான்.



அங்கே இருந்த சோஃபாவில் அவளை அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து கொண்டான். சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. சுபிக்ஷா வாய் திறக்கவே இல்லை.



"வாயைத் திறந்து பேசு சுபி. உங்க அம்மா எல்லார் முன்னாடியும் இப்படி ஒரு கேள்வி கேட்கறா. நீ சைலன்ட்டா வேடிக்கை பார்த்தா என்ன அர்த்தம்? உங்க அம்மா தானா கேட்கறாளா இல்லை… இது உன்னோட கேள்வியா?" தனது சந்தேகத்தைக் கேட்டு பேச்சு வார்த்தையைத் தொடங்கி வைத்தான் சம்பத்.



"அது…வந்து.. அம்மா…" என்று இழுத்தவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.



"சுபி! உனக்கு ஞாபகம் இல்லையா, இல்லை…. நான் மறந்து போயிருப்பேன்னு நினைக்கறயான்னு தெரியலை. பட், எனக்கு நன்னாவே ஞாபகம் இருக்கு. இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வந்தால் என்ன பண்ணுவேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே நான் பேசி நீயும் அக்சப்ட் பண்ணின்டு இருக்க. இன் ஃபேக்ட் அதுக்கு அப்புறம் தான் நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்ன."



அவன் சொன்ன அக்மார்க் உண்மையில் சுபிக்ஷாவின் மௌனம் தொடர்ந்தது. ஒரு பெருமூச்சுடன் சம்பத் தொடர்ந்து பேசினான்.



"இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு சிச்சுவேஷன் வரும்னு யாரும் எதிர்பார்க்கலை. என்னாலேயே அப்பா இல்லைன்னு இன்னும் அக்சப்ட் பண்ணிக்க முடியலை. அப்படி ஒரு விஷயத்தை நினைச்சுப் பார்க்கவே முடியாத போது எப்படி அக்சப்ட் பண்ணிக்க முடியும். பெரியவா நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாரு. எங்க எல்லாருக்குமே இப்போ ஒரு சப்போர்ட் தேவைப் படறது. முதல்ல வந்து நிக்கவேண்டிய நீயே இப்படி இருந்தால் எப்படி?" இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆதங்கம் எல்லாம் வார்த்தைகளாக வெளிவந்தது.



"நீங்க சொல்றது எனக்கும் புரிஞ்சு தான் இருக்கு. பட் இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை." தயங்கித் தயங்கி பேசியவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் சம்பத்.



"யாருக்கு தான் பழக்கம் இருக்கு? இந்த மாதிரி நேரத்தில் எப்படி நடந்துக்கணும்னு யாரும் ப்ளான் பண்ண முடியாது. சிச்சுவேஷன் தான் நம்மளை ஆட்டி வைக்கறது. அதை அவாய்ட் பண்ண நினைக்காமல் அந்த நேரத்துக்கு ஏத்த மாதிரி நடந்தாலே போறும். you are not a kid. Try to see things in your own view. Hope you understand my point."



'உன்னை மாதிரியே நானும் எங்க அம்மா சொல்றதைக் கேட்க ஆரம்பிச்சா உனக்குப் பிடிக்குமா?' என்று உதடு வரை வந்த கேள்வியை அப்படியே விழுங்கி விட்டான்.



எதையும் உன் பார்வையில் பார் என்று மறைமுகமாக அவன் உணர்த்தியது அவளுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனாலும் அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கு மேலும் விளக்கம் தேவையா என்று அவனுக்குத் தான் அலுப்பாக இருந்தது.



"நாம எங்க இருந்தாலும், ஐ கேன் கேரண்டி யுவர் ப்ரைவஸி அன்ட் யுவர் ஸ்பேஸ். இந்த ஆத்துல தேவையில்லாமல் யாரும் யாரையும் டிஸ்டர்ப் பண்ணமாட்டா. இத்தனை நாளில் இது உனக்கே தெரிஞ்சிருக்கும். இப்போ, தி பால் இஸ் இன் யுவர் கோர்ட். நிதானமா யோசிச்சு பதில் சொல்லு. நீ சொல்றப் போற பதில்ல தான் நம்ம இரண்டு பேரோட ஃப்யூச்சர் இருக்கு. ஒரு வேளை நீ வேற மாதிரி யோசிச்சா நானும் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியதா இருக்கும்." இது தான் என் முடிவு, இதற்கு சரி என்று சொல்வதைத் தவிர உனக்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பது போல முடித்து விட்டான்.



"ஜஸ்ட் ஸ்டாப் இட். இப்படி எல்லாம் எக்ஸ்ட்ரீமா எதையும் பேசாதீங்கோ. நான் ஒன்னும் அவ்வளவு மோசமா யோசிக்கற பொண்ணு கிடையாது." என்று படபடத்தவள், "நான், எனக்கு.. இந்த சிச்சுவேஷன் ஹேண்டில் பண்றது எப்படின்னு தெரியலை. கொஞ்சம் யோசிக்க டைம் வேணும். அம்மா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வரேனே." இதற்கு முன்னால் இத்தனை கெஞ்சியவள் இல்லை என்பதால் வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் அழுத்தமாகவே வந்தன.



"ம்ம்.. இட்ஸ் ஓகே… டேக் யுவர் டைம். ஆனால் யார் ஹெல்ப்பும் இல்லாமல் நீ மட்டும் யோசி" என்று மீண்டும் வலியுறுத்தினான்.



அதன் பிறகு அங்கே மறுபடியும் அமைதி. அவளாக எதையும் பேசவே மாட்டாள் என்று தெரிந்து கொண்ட

சம்பத் அவளை தீர்க்கமாகப் பார்த்தவாறு, "ம்ம்.. அப்புறம்.." என்றான்.



"என்ன அப்புறம்? இப்படிக் கேட்டா எனக்கு ஒன்னும் புரியலை"



"எப்போ சொல்லப் போற சுபி?"



"இப்போ எதுக்கு இப்படி புரியாத கேள்வியா கேட்கறேள்?"



"ஓ.. கேள்வியை மாத்தி கேட்கவா?? உனக்கு என் கிட்ட சொல்றதுக்கு, ஷேர் பண்ணிக்கறதுக்கு எதுவும் இல்லையா? இல்லை.. அதையும் உங்க அம்மா சொல்லுன்னு சொன்னா தான் சொல்லுவியா? இதுலயும் முதல்ல உங்க அம்மா தானா?" அவனுக்குத் தான் முதலில் தெரிந்திருக்க வேண்டும் என்பதை வேறு வார்த்தைகளில் சொன்னான்.



"ஹான்… அச்சோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் இன்னும் டாக்டர் கிட்ட போகலை. ஆத்துல தான் செக் பண்ணி இருக்கேன். அதான்… கன்ஃபர்ம் பண்ணிட்டு… அப்புறம்…சொல்லலாம்னு.. அம்மா.. தான். " தான் சொல்வதில் இருந்த அபத்தத்தை உணர்ந்து கொண்டவளாகத் திக்கித் திணறினாள் சுபிக்ஷா.



ஏன் அந்த டாக்டர் சம்பத் கூட வந்தால் துரத்தி விடுவாரா? அவனது வீட்டு மனிதர்களுக்கு நடந்த துக்கத்தை மறக்க இந்த மகிழ்ச்சியான செய்தி எத்தனை உதவும் என்று ஒரு நொடியேனும் நினைப்பிருந்தால் இப்படி ஒரு யோசனை வருமா? அவனால் வழக்கம் போல பெருமூச்சு விடத் தான் முடிந்தது. சட்டென்று எழுந்து கதவை நோக்கிப் போனவனை நிறுத்தினாள் சுபிக்ஷா.



"ம்ச்.. இப்போ என்ன?"



"நீங்க எதுவுமே சொல்லலையே?"



"என்ன சொல்றதுன்னு எனக்கு எதுவுமே புரியலை. என்னைக்கு டாக்டர் அப்பாயின்ட்மென்ட்? எந்த ஹாஸ்பிடல்?"



"வெட்னஸ்டே அப்பாயின்ட்மென்ட். Xxxx ஹாஸ்பிடல் தான்…."



"ஓ.. இங்கே பக்கத்தில் இருக்கற ஹாஸ்பிடலுக்கு அண்ணா நகர் போயிட்டு வரப்போறேள். ஸோஓஓ நைஸ்.. " என்று நக்கலாக உரைத்தவன், "ஆனால் ஒரு விஷயம் நீ க்ளியர் பண்ணிக்கோ. இன்னைக்கு உங்க அம்மா கூட நீ போகப்போறதில்லை. நாம இரண்டு பேரும் டாக்டர் கிட்ட போகலாம், உங்க அம்மாவும் கூட வந்தால் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. இங்கே ஆத்துல எல்லார் கிட்டயும் விஷயத்தை சொன்னதுக்கு அப்புறம் நான் உன்னை அண்ணா நகர்ல ட்ராப் பண்றேன். பாட்டி கிட்ட சொன்னா நாள் பார்த்து வைப்பா. உனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் பண்ற விஷயம் இல்லை. அன்ட் இந்த விஷயத்தில் நானும் இன்வால்வ் ஆகி இருக்கேன். ஸோ, நீ மட்டும் தனியா டிசைட் பண்ண முடியாது. மைன்ட் இட்" என்று வெளியே சென்று விட்டான்.



என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்ற சுபிக்ஷா தானும் வெளியே வந்தாள். ஹாலில் இருந்த ரங்கராஜனைப் பார்த்துவிட்டு அவரிடம் சென்றாள். ஏற்கனவே மாமனாருடன் பேசிக்கொண்டிருந்த சம்பத் நகர்ந்து மனைவிக்கு இடம் கொடுத்தான். தந்தையின் உணர்ச்சி துடைத்த முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமல் விழித்த சுபிக்ஷா அப்போது தான் நினைவு வந்தது போலத் தாயைப் பார்த்தாள்.

அங்கே ஒரு எரிமலைச் சீற்றத்தை உணர்ந்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.



உள்ளே நுழையும் போதே ரங்கராஜனுக்கு சூழ்நிலை சரியில்லை என்று தெரிந்து விட்டது. மனைவியின் முகத்தைப் பார்த்தவருக்கு விஷயங்கள் தெளிவாகவே விளங்கி விட்டது. வந்தவுடன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பத் தயாராக நின்றவரை சேஷாத்ரி தான் சம்பத் மற்றும் சுபிக்ஷா வந்தவுடன் கிளம்புங்கள் என்று தடுத்து நிறுத்தி இருந்தார்.



அறையை விட்டு வெளியே வந்த மாப்பிள்ளை தலையசைத்து அவரை வரவேற்ற விதத்தில் இது நாள் வரையில் காணாத ஒரு விலகலை உணர்ந்தவர், "நாங்க கிளம்பறோம் மாப்பிள்ளை. சுபி ரூம்ல இருக்காளா, கொஞ்சம் கூப்பிடுங்கோ. சொல்லிட்டு கிளம்பறோம்" என்று அனுராதாவை ஒரு பார்வை பார்க்க அவளோ மகளது அறை வாசலைப் பார்த்தாள். அவரது பேச்சில் இருந்து அவருக்கு மனைவியின் திட்டத்தைப் பற்றித் தெரியவில்லை என்று அறிந்து கொண்ட சம்பத் அதைப் பற்றிப் பேசி அவரையும் குழப்பத் தயாராக இல்லை.



"சுபி இப்போ வந்துடுவா. நீங்க டின்னர் சாப்பிட்டு கிளம்புங்கோ மாமா" என்று உபசரித்தவன் அதற்கு மேல் எதையும் பேசவே இல்லை.



வெளியே வந்த சுபிக்ஷா தந்தையிடம் சென்று பேசியதில் அனுராதா மாப்பிள்ளையை முறைத்துக் கொண்டே கிளம்பி விட்டாள்.



அன்று இரவு அறைக்குள் நுழைந்த அணைத்துக் கொண்ட சம்பத் தனது தந்தையின் இழப்புக்கு அவளிடம் வடிகால் தேடினான். அவளுக்கும், அந்த நேரத்தில் கணவனது அணைப்பு தேவையாக இருக்க, அவளது கைகளும் அணைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்தன.



புது வரவு பற்றிய செய்தி முரளிதரனின் இழப்புக்கு ஈடு செய்வது போல அமைந்தது. "முரளியே வந்து பிறக்கப் போகிறான்" என்று தாத்தாவும் பாட்டியும் கொண்டாட மற்றவர்களும் அதனை ஆர்வமாக ஆமோதித்தனர்.



—----



தனது அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் சுபிக்ஷா. தாய் வீட்டுக்கு வந்த ஒரு வாரமாக இதே வேலையைத் தான் செய்து கொண்டு இருக்கிறாள். மகளுக்குப் பிடித்தவற்றைச் சமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டிய அனுராதா அவளது மனம் இது போன்ற நேரத்தில் நிச்சலனமாக இருக்க வேண்டும் என்பதை யோசிக்க மறந்து போனாள்.



சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவள் சம்பத்துடன் தனியே இருப்பது தான் நல்லது என்று வலியுறுத்தினாள். வெவ்வேறு வார்த்தைகளை வெவ்வேறு மாடுலேஷனில் பயன்படுத்தினாலும் அதன் சாராம்சம் ஒன்றே ஒன்று தான். தனது பேச்சை மகளது மூளைக்குள் ஏற்றத் துடித்த அனுராதாவின் கண்களுக்கு மகளது முகவாட்டம் புலப்படவே இல்லை.



ஆனால் மகளது முகத்தில் தெரிந்த சோர்வு உடல்நிலையால் ஏற்பட்டதல்ல என்று உணர்ந்து கொண்ட ரங்கராஜன் ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டார்.



அதற்கேற்ற சமயம் பார்த்து இருந்தவர் ஒரு நாள் அனுராதா சமையலில் பிஸியாக இருந்த நேரத்தில் மகளின் அருகில் வந்து அமர்ந்தார். அதைக் கூட உணராமல் இருந்த மகளைக் கண்டு அவருக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.



"சுபி! என்னடாம்மா? என்ன குழப்பம் உனக்கு? மாப்பிள்ளையோட பேசினயா? ஏதாவது மிஸ்அன்டர்ஸ்டான்டிங்கா?" என்று மெதுவாக விசாரித்தவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தாள் சுபிக்ஷா.



"பின்ன, சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தவளாட்டம் இருக்க?" என்னவென்று பதில் சொல்லுவாள். பெரிய படிப்பு படித்து பெரிய உத்தியோகத்தில் பெரிய முடிவுகளை எடுப்பவளால் வாழ்க்கையில் தேவையான நேரத்தில் சுயமாக சிந்திக்கக் கூட இயலவில்லை

என்பதை எப்படிச் சொல்லுவாள்.



ரங்கராஜனோ அவளது பதிலுக்காகக் காத்திருந்தார். "பெரிசா ஒன்னும் இல்லப்பா. ஆஃபீஸ்ல பெரிய காம்ப்ளிகேட்டட் விஷயத்தில் கூட இப்படித்தான் இருக்கும்னு ஈஸியா டெசிஷன்ஸ எடுக்க முடியறது. ஆனால், நம்ம லைஃப்ல நாம நினைக்கற எதுவும் அப்படியே நடக்கறதில்லை. நிறைய ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் வரும் போது எனக்கா எந்த முடிவும் எடுக்கத் தெரியலை, யார் சொல்றதைக் கேட்கறதுன்னும் தெரியலை. ம்ச்.. என்ன பண்றதுன்னே புரியலைப்பா.." மகளது குரலில் இருந்த வருத்தம் ரங்கராஜனை உலுக்கியது.



மகளது வாக்கியத்தில் இருந்த யார் நிச்சயமாக அனுராதா தான் என்று அவருக்குப் புரிந்தே இருந்தது. 'இத்தனை நாளும் மகளுக்கு நல்லது என்று அவள் செய்தது வேறு. ஆனால் இப்போது, கர்ப்பமாக இருக்கும் பெண் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி எல்லாம் செய்யாமல் இருந்தால் தான் என்ன? இவளை என்ன தான் செய்வது?' நினைக்கும் போதே தலை வலித்தது அவருக்கு.



மனைவியை விட்டுக் கொடுக்க முடியாமல் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரது கண் முன்னே வந்து மிரட்டியது. மகளது தற்போதைய மனநிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு. அதனால் தன்னிலை விளக்கம் கொடுக்க தயாரானார்.



"உங்க அம்மா செய்யறதையோ சொல்றதையோ எக்ஸாம்பிளா வச்சிண்டு எதையும் பண்ணிடாத சுபி. எங்க ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்கள் அவளை இப்படி செய்ய வைக்கறது. நானும் இந்த சொசைட்டி எப்படி இருந்ததோ அதையே ஃபாலோ பண்ண ஆள் தான். நான் ஒரு ஆண் அப்படிங்கிற எண்ணம் ஊறிப் போய் இருந்தது. அம்மாவா வைஃபான்னு வரும் போது நடுவே இருந்து இரண்டு பக்கமும் பேசாமல் தப்பிச்சிருக்கேன்.



எனக்கு அம்மா கோண்டுன்னு பேர் வாங்க பிடிக்கலை. அதே நேரத்தில் பொண்டாட்டி தாசன்னு பேர் வாங்கவும் விருப்பம் இல்லை. இரண்டு சைடும் பேலன்ஸ் பண்றதா நினைச்சிண்டு கண்டுக்காம இருந்துட்டேன். அதோட பலனைத் தான் நீ அனுபவிக்கற. ஆனால் உனக்கே நன்னாத் தெரியும். சம்பத் என்னை மாதிரி கிடையாது, அவா ஃபேமிலியும் தான். கூடவே, இப்போ இருக்கற சொசைட்டியும் நிறைய மாறி இருக்கு. இப்போ, நீ எதையும் அலட்டிக்காமல் சந்தோஷமா இருந்தால் தான் உனக்கும் நல்லது குழந்தைக்கும் நல்லது. உனக்குப் புரியும்னு நினைக்கறேன்"



அனுராதாவின் புலம்பல்கள் வாயிலாக பழைய சம்பவங்களை அவள் அறிந்திருந்தாள். ஆனால் இன்று தந்தையின் பேச்சைக் கேட்ட சுபிக்ஷாவிற்கு ஈயம் பூசிய மாதிரியும் இருந்தது, பூசாத மாதிரியும் இருந்தது. அதாவது, அவளுக்கு எதுவுமே புரியலை. ஆனாலும் சரி என்று தலையசைத்து வைத்தாள்.



ரங்கராஜன் சொன்ன மாதிரி பல நேரங்களில் சம்பத் கூட பல சமயங்களில் அனுராதாவின் மனநிலையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருக்கிறான்.



"உங்க அம்மாக்கு ஒரு வித பயம் சுபி. ஒரு இன்செக்யூர் ஃபீலிங். எங்க தனக்கு நடந்த மாதிரியே பொண்ணுக்கும் நடந்திடுமோன்னு பயம். அதனாலயே ஓவர் cautiousஆ இருக்கா. சொல்லப் போனால் பாஸ்ட் அன்ட் ஃப்யூச்சரைப் பத்தின கவலைகளும் பயமும் அவாளை ப்ரசன்ட்ல இருக்கவே விடலை.



உங்க அம்மாவோட பீரியட் வேற சுபி.

நம்ம patriarchy சொசைட்டில ஆரம்பத்தில் இருந்தே ஆணுக்கு அதிகாரமும் முன்னுரிமையும் கொடுத்து பழகியாச்சு. நமக்கு முந்தின ஜெனரேஷன் வரைக்கும் பெண் வீட்டார் எல்லாம் பயந்து நடுங்கற மாதிரி தான் சொசைட்டி இருந்தது. இப்போ எவ்வளவோ மாறி இருக்கு. ஆனாலும் நீங்க மாறினதை நாங்க நம்பத் தயாரில்லைன்னு உங்க அம்மா மாதிரி நிறைய பேர் இருக்கா. பொண்ணுக்கு மாமியார் செஞ்ச எல்லாத்தையும் இப்போ பையனுக்கு மாமியார் செய்ய ஆரம்பிச்சு இருக்கா. முன்னாடி அவா செஞ்சது தப்புன்னு சொன்னா, இப்போ இவா அதே தப்பைச் செஞ்சா தப்பு சரியாகிடுமா?"



"என்னதிது தப்பு, தப்புன்னு நிறைய சொல்றேள்? எனக்கு எதுவும் புரியலை. பட், இந்த patriarchy சொசைட்டில பையன் இல்லாத பேரன்ட்ஸ் என்ன செய்வான்னு யாரும் யோசிக்கறதே இல்லை"



"அப்படி எல்லாம் பொதுவா சொல்லிட முடியாது. முன்னாடி காலம் எப்படியோ, நாளைக்கு உங்க அம்மா அப்பாவைப் பார்த்துக்கற பொறுப்பு உங்க இரண்டு பேருக்கும் இருக்கு. அதுக்கு சப்போர்ட் பண்ற கடமை உங்களைக் கல்யாணம் பண்ணின்ட மாப்பிள்ளைகளுக்கும் இருக்கு. இதை அவாளுக்கும் புரிய வச்சால் போதும். தேவையில்லாத குழப்பங்கள் வராது"



"அதுக்காகத்தானே நாம தனியா இருக்கணும்னு சொன்னா"



"தனியா இருந்தால் இரண்டு பக்கத்து பேரன்ட்ஸ்ல யார் வந்தாலும் தொல்லையாத் தான் நினைக்கத் தோணும்" என்று கண்ணடித்தவன், "இதெல்லாம் நாம நடந்துக்கற விதத்தில் அவா புரிஞ்சுக்கணும் சுபி. உட்கார்ந்து எக்ஸ்ப்ளைன் பண்ணிப் புரிய வைக்க முடியாது"



"ஹூம்… நீங்க சொல்றதும் கரெக்ட் தான்" என்று ஒத்துக் கொண்ட மனைவியை ஆச்சரியமாகப் பார்த்தான் சம்பத்.



"மொத்தத்தில் உங்க அம்மா தனக்கு நடந்த எதுவும் பொண்ணுக்கு நடக்கக் கூடாதுன்னு தெளிவா இருக்கா. அதே மாதிரி தனக்கு நடக்காத எல்லாத்தையும் பொண்ணை வச்சு நடத்திக்கப் பார்க்கறா" என்று பேச்சை முடித்தான் சம்பத்.



அந்தப் பேச்சை இப்போது நினைவுபடுத்திக் கொண்டவள், 'ஒரு வேளை சம்பத் சொன்னது சரிதானோ? அம்மாவின் கவலை தேவையில்லாதது என்று எப்படி நிரூபிப்பது?' என்று யோசிக்க ஆரம்பித்தாள் சுபிக்ஷா.



மணிக்கணக்கில் செய்த சுய அலசலுக்குப் பிறகு ஒரு தெளிவு கிடைத்தது அவளுக்கு. விளைவு, உலகின் எட்டாவது அதிசயமாக அனுராதாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசிவிட்டாள்.



"சும்மா எதுக்கெடுத்தாலும் அவாளையே குறை சொல்லாதம்மா. உனக்கு எதையும் பாஸி
ட்டிவா யோசிக்கவே தெரியாதா?"



'நீயா பேசியது?' என்று அனுராதா திகைத்து நிற்க ரங்கராஜன் மனதுக்குள் மகளுக்கு ஒரு சபாஷ் போட்டார்.



கிடைத்த முதல் அனுபவத்தில் நொந்து போன அனுராதாவை மேலும் நோக வைக்க இளைய மகள் மானஸா வந்து சேர்ந்தாள். அவளது வரவு சுபிக்ஷாவின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -20
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

Member
Joined
Apr 28, 2025
Messages
74
சபாஷ் சுபி👏👏👏

மானஸா என்ன பிரச்சனையை கொண்டு வந்திருக்கா??
 
Top Bottom