நான் போடுற கோட்டுக்குள்ளே -15
தாத்தா பாட்டியின் உடல்நலனில் அக்கறை இருந்தாலும் அன்று முடிக்க வேண்டிய அலுவலக வேலைகளின் முக்கியத்துவம் அறிந்தவன் செய்வதறியாது திகைத்தான். இன்றைய வேலையில் பெரும்பங்கு சுபிக்ஷா செய்து முடிக்க வேண்டியது. அதைச் சரிபார்த்து க்ளோபல் டீமுக்கு அனுப்ப வேண்டிய கடமை மட்டுமே சம்பத்துடையது.
அவன் இருக்கும் மனநிலையில் சுபிக்ஷாவை, அது வேலை விஷயமாகவே என்றாலும் நேரில் பார்ப்பது முடியாத காரியம் என்பதையும் அவன் அறிந்தே இருந்தான். நானா இப்படி என்று அலுப்பாக இருந்தாலும் மனதை வேறு விஷயங்களில் திருப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தே இருந்தான்.
சட்டென்று முடிவெடுத்து, "ஒரு ஹாஃப் அன் அவர் டைம் கொடுங்கோ தாத்தா. லீவ் சொல்லிட்டு இன்னைக்கு டாஸ்க் எல்லாம் அசைன் பண்ணிட்டு வந்துடறேன்" என்று அவசரமாகச் சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான். முதலில் விடுமுறை விவரத்தை அனுப்பி வைத்தவன், தனது டீமுக்குத் தேவையான மின்னஞ்சல்களை விலாவாரியாக விளக்கி அனுப்பி வைத்தான்.
சில மொபைல் அழைப்புகளை விடுத்து அலுவலக விஷயத்தை முடித்து விட்டு லேப்டாப்பை மூடினான்.
"தாத்தா! நம்ம டாக்டர் கார்த்தால எங்க இருப்பார்னு தெரியுமா? இல்லை நான் கேட்கட்டுமா?" என்று கேட்டுக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவன் தாத்தா பாட்டி இருவரையும் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.
"என்ன தாத்தா! இரண்டு பேருக்கும் உடம்பு சரியில்லை, டாக்டரை இன்னைக்கே இப்பவே பார்த்தாகணும்னு என்னை ஆஃபீஸ் போக விடாமல் பண்ணிட்டு.. இதென்ன கோவிலுக்குப் போறது மாதிரி அர்ச்சனை தட்டு சகிதமா கிளம்பி நிக்கறேள்?" என்று தாத்தாவிடம் கேள்வி கேட்டவன், "ராஜி மேடம்! நீயுமா? உனக்கு பிபி எகிறிடுத்து. தலையே தூக்க முடியலை. ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லைன்னு சேஷா சொன்னதெல்லாம் பொய்யா? இரண்டு பேரும் என்ன பிளான்ல இருக்கேள்னு எனக்குப் புரியலையே" என்று பாட்டியிடம் புலம்பினான்.
பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்களே தவிர பேரனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
இருவரையும் கண்கொட்டாமல் பார்த்தவனுக்கு மண்டைக்குள் ஒரு மணி அடித்தது. 'அச்சோ! இவா இரண்டு பேரும் எதையோ ஸ்மெல் பண்ணிட்டா போலிருக்கே. பெருமாளே! என்னை மட்டும் காப்பாத்து!' என்று ஒரு வேண்டுகோள் விடுத்தான். இதை வெளியே காட்டிவிட்டால் அவன் கெத்து என்ன ஆவது. 'உனக்கெல்லாம் … கெத்துன்னா என்னன்னு தெரியுமா..?' என்று அவனது மைன்ட் வாய்ஸ் காரி துப்பியது. 'வீரர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணப்பா' என்று முகத்தை அழுத்தி துடைத்தான்.
பெரியவர்கள் இருவரும் இவன் முகத்தில் வந்து போகும் பாவனைகளை உற்று நோக்குவது புரிந்து முகத்தைச் சட்டென்று சாதாரணமாக மாற்றிக் கொண்டான்.
"இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ பெரிசா என்னை வச்சு ஸ்கீம் பண்றேள்னு தெரியறது. எதுக்குன்னு தான் தெரியலை. சரி வாங்கோ, கிளம்பலாம்" என்று பாட்டியின் கையில் இருந்த கூடையை வாங்கிக் கொண்டு வாசலுக்குப் போய்விட்டான்.
"ராஜி! இவன் உஷாராகிட்டான் போல இருக்கே. நாம நினைச்ச மாதிரி அவன் கிட்டயிருந்து விஷயத்தை வாங்கிடலாமா தெரியலையே?" என்று புலம்பிக் கொண்டே மனைவியுடன் காரில் ஏறினார் சேஷாத்ரி. ராஜலக்ஷ்மி பின்புறம் ஏறிக்கொள்ள சேஷாத்ரி பேரனுக்கு அருகில் அமர்ந்தார்.
தாத்தாவுக்காக கார் சீட்டை அட்ஜஸ்ட் செய்த சம்பத், "தாத்தா! டிரைவர் ரெடி. இப்போ எந்தக் கோவிலுக்குப் போகணும்னு சொல்றேளா? பார்த்தசாரதியைப் பார்க்கணுமா இல்லை அவரோட ஸோல் மேட்டா?" என்றான்.
"அதென்ன டா ஸோல் மேட்.. யாரைச் சொல்ற நீ?" என்று பாட்டி சந்தேகம் கேட்க, தாத்தா பேரனின் முதுகில் ஒன்று வைத்தார்
"படவா! வர வர வாய் ரொம்பவே ஜாஸ்தி ஆகிடுத்து நோக்கு" என்று பேரனிடம் சொன்னவர் மனைவியிடம் விளக்கம் கொடுத்தார்.
"நிறைய விஷயத்தில் நீ கரண்ட் டிரெண்டுக்கு மாறவே இல்லை ராஜி. அவன் மஹாலக்ஷ்மியைத் தான் இந்தக் கால பாஷைல சொல்றான்.."
"பெட்டர் ஹாஃப்னு தானே சொல்லுவா.. இதென்ன ஸோல் மேட்.."
"இது தான் இப்போதைய 2கே கிட்ஸோட பாஷை"
"ஓ.. 2கே கிட்ஸோட பாஷை பிஃப்டீஸ் கிட்டான உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது..
"ஹா ஹா ஹா.. நானெல்லாம் உன்னை மாதிரி இல்லை. அப்பப்போ அப்டேட் பண்ணிக்கறேன் தெரியுமா? நம்ம அரவிந்த் கிட்ட இருந்து நிறைய கிளாஸ் போய் கத்துண்டு வந்திருக்கேனாக்கும்" என்று காலரைத் தூக்கி விட்டார் சேஷாத்ரி.
"போதுமே உங்க பெருமையெல்லாம்" என்று நொடித்த ராஜலக்ஷ்மி, "அஷ்டலட்சுமி கோவிலுக்கே போகலாம் டா ராஜா. நீ காரை எடு. உங்க தாத்தா இப்படித்தான்.. அச்சுப்பிச்சுன்னு பேசிண்டே இருப்பார்" என்றார் பேரனிடம்.
வீட்டில் இருந்து கோவிலுக்கு வந்த பத்து நிமிடப் பயணத்தில் காரில் மௌனமே ஆட்சி செய்தது. தாத்தா பாட்டி எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என்ற குழப்பத்தில் சம்பத்தும் பேரனிடம் எப்படி பேசுவது என்று சேஷாத்ரி தம்பதிகளும் தங்களுக்குள் யோசனை செய்து வந்ததால் வெளியே எதையும் பேசிக்கொள்ளவில்லை.
வார நாள் என்பதால் கோவிலில் கூட்டம் இல்லை. பெரியவர்கள் இருவரும் பேரனின் வாழ்க்கைக்காக வேண்டிக் கொள்ள சம்பத்தோ எதுவும் தோன்றாமல் ஒவ்வொரு சன்னதியிலும் அமைதியாக நின்றான். மனம் சற்று அமைதியானது போலத் தோன்றியது.
அஷ்டலட்சுமிகளையும் ஆற அமர தரிசித்தவர்கள் கடலைப் பார்த்தபடி ஓர் இடம் பார்த்து அமர்ந்தனர்.
அதுவரையில் பக்தியில் திளைத்த சம்பத், வெளியே வந்தவுடன் அதன் தாக்கம் குறைந்து வேறு உலகத்திற்குப் போய்விட்டான். மனம் மறுபடியும் குழம்பிய குட்டையானது.
நினைவுகள் சுபிக்ஷாவைச் சுற்றி வந்தது. ஆரம்பம் முதலே, அலுவலகத்தில் அனைவரும் பாராட்டும் படியாக சிறப்பாகப் பணியாற்றியவளை நினைத்து பெருமைப் பட்டிருக்கிறான். பார்த்த நாளிலேயே ஒரு ஈர்ப்பு தோன்றி இருந்தாலும் வீட்டில் திருமணப் பேச்சு ஆரம்பித்த போது ஏனோ அவளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.
இத்தனைக்கும் அவனது வீட்டில் ஜாதகத்தை எடுத்த உடன் முதல் கேள்வியாக அவனுக்கு யாரையாவது பிடித்திருக்கிறதா என்று தான் கேட்டார்கள். இல்லை என்று சொன்ன பிறகே மற்ற வழிகளில் பெண் தேட ஆரம்பித்தார்கள்.
அவள் தோற்றத்திலும் திறமையிலும் வந்த ஈர்ப்பு, அவளது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வந்த போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அவள் தோழிகளுடன் திருமணம் மற்றும் அது பற்றிய எதிர்பார்ப்புகள் என்று பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட நாள் முதல் அவளைத் தனது ஜூனியர் என்ற நிலையில் மட்டுமே பார்க்க ஆரம்பித்திருந்தான்.
அவளை நோக்கி அவனை ஈர்த்த ஏதோ ஒன்று மொத்தமாக அறுபட்டுப் போனது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தான். ஆனால் இப்போது அப்படி இல்லையோ, ஏதோ ஒர் ஓரத்தில் மறைந்திருந்த ஈர்ப்பு இப்போது மீண்டும் தலை தூக்குகிறதோ என்று அவனுக்கே தோன்ற ஆரம்பித்திருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக ஏற்பட்ட பெண் பார்க்கும் அனுபவத்தில் உலக நடப்பைப் புரிந்து கொண்டவனது கவனம், மறுபடியும் அவளை நோக்கித் திரும்பி இருந்தது போலும். தெரியாத தேவதைக்குத் தெரிந்த பிசாசே மேல் (!?) என்று நினைத்து விட்டான். பெரியவர்களிடம் சொல்வதற்கு முன் அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முயன்றவன் முதல் பாலிலேயே டக் அவுட் ஆகி இருந்தான்.
ஒரே நாளில் ஏன் இத்தனை போராட்டங்கள் என்று நினைத்தவனாய் பெருமூச்சு விட்டான். சிந்தனைகள் எங்கெங்கோ செல்ல கூட வந்த தாத்தா பாட்டியின் நினைவில்லாமல் அமர்ந்திருந்தான்.
கடலை வெறித்தபடி அமர்ந்திருக்கும் பேரனை சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும்
வருத்தத்துடன் பார்த்தனர். "க்கும்…" தொண்டையைக் கனைத்த சேஷாத்ரி, "என்ன ராஜா? எந்தக் கோட்டையைப் பிடிக்கறதுக்கு பிளான் பண்ணின்டு இருக்க? யோசனை எல்லாம் ரொம்ப தீவிரமா இருக்கே. இரண்டு யூத் கூட வந்திருக்கோமே, அவா கிட்ட ஐடியா கேட்கலாமேன்னு உனக்குத் தோணவே இல்லை பாரேன்.. டூ பேட்.. டூ பேட்" என்று மனைவியைப் பார்த்து கண் சிமிட்டினார்.
அவரது பேச்சுத் திறமை வென்றது. தாத்தா வகுத்த வியூகத்தில் பேரன் வசமாக சிக்கிக் கொண்டான். "வாட்!! யூத்தா?? தாத்தாஆஆஆஆ திஸ் இஸ் டூ மச்" என்று பல்லைக் கடித்தவன், "எதுவானாலும் உன் கிட்ட சொல்லாமல் இருப்பேனா தாத்தா. எனக்கே ஒரு கிளியர் பிக்சர் கிடைக்கலை. இதிலே உங்களை வேற குழப்பி விடணுமான்னு தான் யோசனையா இருக்கு" என்றான்.
"எதையுமே யார் கிட்டயாவது ஷேர் பண்ணிக்கும் போது பெட்டரா ஃபீல் பண்ணுவோம். நமக்குத் தோணாத ஏதாவது அடுத்தவாளுக்குத் தோணலாம் இல்லையா. அதனாலயே ஷேர் பண்ணனும். சொல்லு! உனக்கு என்ன தான் குழப்பம்? நேத்து ராத்திரி வரைக்கும் இல்லாத குழப்பம்னு நன்னா தெரியறது" என்ற தாத்தாவை ஆச்சரியமாகப் பார்த்தான் சம்பத்.
"இதிலே என்னடா ஆச்சரியம் நோக்கு? நேத்து சாயங்காலம் ஆத்துக்கு வரும் போது எல்இடி பல்ப் மாதிரி இருந்த உன் மூஞ்சி, நேரம் ஆக ஆக பிரகாசமா எரிஞ்சதே. அதே மூஞ்சி கார்த்தால குண்டு பல்ப் மாதிரி டல்லடிக்கறதுன்னா, காரணம் ராத்திரி நடந்த ஏதோ ஒரு ஆராய்ச்சியின் விளைவுன்னு கூட கண்டு பிடிக்க முடியாதா என்ன?" என்று சிரித்த தாத்தாவைப் பார்க்க முடியாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.
தலைகுனிந்து அவஸ்தையாகச் சிரித்தவனை (ஹீரோ இல்லையா அதான் அசடு வழிந்தவனைன்னு சொல்லாமல் டீசன்டா சொல்லி இருக்கேன் ஹி..ஹி) மேலும் கேலி செய்தார் தாத்தா. இப்போது பாட்டியும் அவருடன் இணைந்து கொண்டார்.
"அட! ராஜி! இங்கே பாரு இந்தப் பையனை.. வெட்கப் படறானாம்.. டேய் கதைகள்ல தான் ஆண்களின் வெட்கம் அழகுன்னு படிச்சிருக்கேன். இப்போ தான் நேர்ல பார்க்கறேன்.. ஹா ஹா ஹா!"
பெரியவர்களின் சிரிப்பில் தானும் இணைந்து கொண்ட சம்பத், "ம்ச். தாத்தா! தயவுசெய்து என்னை விட்டுடு. நான் உன் லெவலுக்கு செட் ஆக மாட்டேன்" என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
"அதெப்படி அவ்வளவு ஈஸியா விடறது? நீ இன்னும் விஷயத்தை சொல்லவே இல்லை. அதைக் கேட்டதுக்கு அப்புறம் தான் நாங்க கேலியைக் கண்டிநியூ பண்ணலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணணும்" என்று சேஷாத்ரி சொல்ல, "எதுவானாலும் சொல்லு ராஜா. தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லை. இப்போ முயற்சி செய்யாமல் விட்டு அப்புறம் வருத்தப் படறதை விட, என்ன தான் நடக்கறதுன்னு பார்த்துடலாமே" என்ற ராஜியின் வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தனது மனதைத் திறந்தான் சம்பத்.
அதன் பின்னர் நடந்த விவாதத்தில் தாத்தா பாட்டி ஜெயிக்க அவனது ஈர்ப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இதோ பெண் பார்க்கும் படலத்தில் வந்து நிற்கிறது.
இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இருந்தது. அது வரை பொறுத்திருந்த அனுராதா தனது ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். ஒரு ஓவரில் ஆறு பந்தும் googly என்றால் பேட்ஸ்மேன் என்ன தான் ஆவார். ஆனால் ராஜலக்ஷ்மி எல்லா பந்துகளையும் அழகாக சமாளித்தார். அடித்து ஆடாவிட்டாலும் தடுத்து ஆடத் தெரியும் என்று காட்டினார்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மணிக்கு ஒரு தடவை அனுராதா கொடுத்த terms and conditions எல்லாவற்றுக்கும் ஒரு வழியாக ஓகே சொன்ன பிறகே பெண் பார்க்க அழைத்தனர். இடைப்பட்ட காலத்தில் சம்பத் லண்டன் சென்று விட்டதால் சுபிக்ஷாவிடம் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை.
இதோ இன்று தான் நேரில் பேச வேண்டும் என்று நிறைய ஒத்திகை பார்த்து விட்டு வந்திருந்தான். ஒரு பெரிய கும்பலுடன் வந்தவனுக்கு அதுவே ஒரு புதிய ஆப்பாக மாறக் காத்திருந்ததை அறியாமல் அக்கா மகளை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டு அத்திம்பேர் மற்றும் தம்பி தங்கைகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தான்.
இளையவர் பட்டாளம் அவனைக் கேலி செய்து குதூகலமாக இருந்தது. இவனும் சந்தோஷமாக அந்தக் கேலியை அனுபவித்தான். வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும் எல்லாரும் வயதிற்கு ஏற்ப ஆளுக்கொரு குழு அமைத்து எதையெதையோ பேசிக்கொண்டு இருந்தார்களே தவிர சுபிக்ஷாவைக் கண்ணில் காட்டவில்லை.
காட்டும் எண்ணமாவது அனுராதாவுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ஃபோனில் சொன்ன அவளது கண்டிஷன்களை நேரில் அழுத்திச் சொல்லி அதற்கான ரியாக்ஷனை தேவிகா மற்றும் ராஜலக்ஷ்மியின் முகத்தில் தேடிக்கொண்டிருந்தாள் அவள். இப்போது அவர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயம் பெண்களின் மூன்று நாள் பற்றியது.
அவரவர் வீட்டு வழக்கம் என்ன என்பதில் ஆரம்பித்தது பேச்சு.
முதல் பேச்சை பத்மாசனி தான் ஆரம்பித்து வைத்தார். மருமகளை மட்டம் தட்டும் நோக்கம் மட்டுமே அவருக்கு. "அந்த காலத்துல இருந்த மாதிரி இப்போ யாராலயும் இருக்க முடியாது. அந்த நாளை இப்ப நினைச்சாலும் மூச்சு முட்டும். சானிட்டரி பேட்ஸ் அப்படின்னா என்னன்னே தெரியாது துணிதான் உபயோகிப்போம். வேலைக்கு போனவாளுக்கும் துணி தான் கதி. உதிர போக்கு அதிகம் உள்ள பொண்களுக்குத் தான் திண்டாட்டம்! பின்னால ஏதாவது தெரியறதா?ன்னு ஒரு பயம் இருந்துண்டே இருக்கும். புருஷாளோட வேலை பார்க்கற போது இன்னும் சங்கடம்.
ஆபீஸ்ல ஒரு வழியா சமாளிச்சு ஆத்துக்கு வந்தா, ஏண்டாப்பா பொண்ணாப் பிறந்தோம் என நொந்து போவோம். கூட்டுக் குடும்பமா இருந்தால் இன்னும் விசேஷம். தெருவிற்கே நம்ம நிலைமை தெரியும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அதுவும் என் புகுந்தாத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. வராண்டாவில் தான் படுக்கை, தலகாணி இல்லை பாயும் தலைக்கு பலகா கட்டையும் தான். கார்த்தால 4 மணிக்கு எழுந்து வாசல் கதவை மெதுவா திறந்து ஆத்தைச் சுத்தி வந்து புழக்கடைக்கு போகணும். என் மாமியார் ஒரு பெரிய பக்கெட் நிறைய தண்ணி, புடவை, பாவாடை ரவிக்கை உள்ளாடைகள் என எடுத்து வச்சிருப்பார். குளித்து முடித்து முதல் நாள் துணிகளைத் தோய்ச்சு மறைவா உலர்த்தி, பக்கெட் சொம்பு எல்லாத்தையும் தேய்ச்சு கவிழ்த்து.. ஹூம் இந்தக் காலத்து குழந்தைகள் கொடுத்து வச்சவா" தனது நீண்ட பிரசங்கத்தை பெருமூச்சுடன் முடித்து வைத்தார் பத்மாசனி.
"இன்னும் நாம அந்த நாட்கள்ல சாப்பிட்ட லட்சணத்தை சொன்னா இப்போ எல்லாரும் சிரிப்பா. ஆத்துல யாராவது மடியா பெரியவா இருந்துட்டா ரூல்ஸ் எல்லாம் இன்னுமே ஸ்ட்ரிக்டா இருக்கும். நிறைய ஆத்துல அந்த மூன்று நாளும் குளிக்கக் கூட வசதி கிடையாது. ஆத்தங்கரைல போய் குளிக்கறவா என்ன செய்ய முடியும்? ஏதோ ஒரு இருட்டு ரூம்ல அடைச்சு வச்சது மாதிரி வச்சிடுவா, பயம் வயித்த பிரட்டும். சாப்பாடு ரூம் வாசலுக்கு வரும். தள்ளி இருந்தே சொல்லிட்டு போவா. நாம யார் கண்ணுலேயும் படாம வெளில வந்து தட்டை எடுத்துண்டு போய் சாப்பிடணும். சாப்பிட்டு முடிச்சு யாரும் புழக்கடையில் இல்லாத பொழுது தட்டை அலம்பி வைத்து ரூமுக்குள் பதுங்கனும். இருட்டு அறை அது. ஒரு புஸ்தகம் கூட படிக்க முடியாது, மோட்டு வளையத்தை பார்த்துண்டு இருக்கவும் முடியாது. வௌவால் தொங்குமோ வேறென்ன ஜந்து குடியிருக்குமோன்னு பயந்தே மூணு நாளையும் ஓட்டணும்" என ராஜலக்ஷ்மி அவர் வீட்டில் நடந்த கதைகளை உரைத்தார். தொடர்ந்து பேசிய பத்மாசனியின் பேச்சு பேத்தியைக் குறி வைத்தே இருந்தது.
"இந்த காலத்து குழந்தைகளுக்கு எல்லா நாளும் ஒன்னு தான். தனியாவா? உட்காரனுமா? வாட் புல்ஷிட்னு ஈஸியா சொல்லிடறா. மத்தவாளுக்குத் தெரிஞ்சிடுமோன்னு பயந்த காலம் போய் இப்போ மாசா மாசம் மளிகை சாமான் லிஸ்ட்ல சேனிட்டரி பேடும் வந்தாச்சு. பெரியவா கூட நாமளும் இந்த காலத்தில் பிறந்திருக்கலாமோன்னு பொறாமைப் படறா. தனியா உட்கார வைக்கும் போது நிறைய சங்கடங்கள் இருந்தாலும் அதுக்கு பின்னால இருக்கற சயின்ஸூம் அதைச் சாக்கு வச்சிண்டு லேடீஸூக்குக் கிடைச்ச ரெஸ்டும் யாருக்கும் புரியலை. பெரியவா சொல்றபடி கேட்கறதுக்கு யாரும் தயாரா இல்லை. சாஸ்திரம் சம்பிரதாயம் இதெல்லாம் ரப்பிஷ்னு
தட்டிட்டு போயிடறா. கலி காலம்றது சரியாத் தான் இருக்கு" என்று மருமகளை ஜாடையாகப் பார்த்தார். அனுராதாவின் முகம் எரிமலையை உள்ளடக்கியது போல மாறி இருந்தது.
"ஆத்துல சாளக்கிராமம் இருக்கறதால நாங்க இன்னைக்கு வரைக்கும் சுத்தபத்தமா இருக்கோம். சம்பூவுக்குக் கூட பஞ்ச சம்ஸ்காரம் பண்ணியாச்சு. முடிஞ்ச வரைக்கும் பெரியவா சொல்றபடி தான் எல்லாம். என் பொண்ணையும் அப்படித்தான் வளர்த்திருக்கேன். போன இடத்திலயும் அப்படித்தான். அவ மாமியார் வெளியூர் போனா கூட மாப்பிள்ளை எல்லாம் செஞ்சிடுவார்" என்று பேச்சு வாக்கில் சொன்ன தேவிகாவை வினோதமாகப் பார்த்தாள் அனுராதா.
"எங்க ஆத்துல ஆசாரம் எல்லாம் என் வரைக்கும் தான். என் பொண்ணு இரண்டு பேரையும் நான் எதுக்கும் கம்பெல் பண்ணினதில்லை. பழைய காலம் மாதிரி இப்போ எதுவும் இல்லை. பொண்ணுக்கும் படிப்பு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன். அதிலே இதுவும் ஒன்னா இருக்க எனக்கு இஷ்டமில்லை" என்று பட்டுக் கத்தரித்தது போல ஒரு தொனியில் சொல்லி முடித்தாள்.
இதேதடா வம்பாகி விட்டது என்று அனைவரும் பார்க்க ராஜலக்ஷ்மி தான் நிலைமையை அழகாகச் சமாளித்தார்.
"நீ சொல்றதும் வாஸ்தவம் தான் மா. ஆணோ பொண்ணோ, இந்த காலத்து குழந்தைகளுக்கு நிக்கறதுக்கே நேரம் கிடையாது. ஓடற ஓட்டத்திலே எத்தனை தான் பார்க்க முடியும்? பிடிக்கலை னு சொல்றவாளைக் கட்டாயப் படுத்தவும் கூடாது. அதுவே சின்னவாளோட புரிதல்ல பிரச்சனைன்னா நாம சொல்ற விதத்தில் சொன்னா புரிஞ்சுக்கப் போறா" என்றார் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல.
இந்த கல்யாணம் தொடர்பான எல்லா விஷயங்களையும் ராஜலக்ஷ்மி தான் அனுராதாவிடம் பேசி இருந்தார். அவர் மனதுக்குள் ஒரு பயம் இருந்தாலும் சம்பத்தின் வாழ்க்கைக்காக எதையும் விட்டுக்கொடுக்க அவரது குடும்பத்தினரைத் தயார் செய்து விட்டார்.
சுபிக்ஷா விட்டுக் கொடுக்க சொன்ன முதல் விஷயமாக அவனது குடும்பம் இருந்ததால் நொந்து போயிருந்த சம்பத்தும் தாத்தா பாட்டியின் தொடர் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளால் மனம் மாறியிருந்தான்.
இப்படி பல கேள்விகள் பதில்கள் என்று நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு சம்பத்தை முறைத்துக் கொண்டே அனுராதா அந்த ஹாலில் பிரவேசித்தாள். "சம்பத்! என் பொண்ணை எங்கிட்ட கொடுத்திடுப்பா. அடிக்கற அனல் காத்துல குழந்தை வாடிப் போயிடுவா" என்று அரவிந்த் குழந்தையை வாங்கிக் கொண்டு சம்பத்தை விட்டுத் தள்ளி அமர்ந்து கொண்டான். அவனுக்கு சுபிக்ஷாவின் முறைப்பிற்கான அர்த்தம் புரிந்து விட்டது என்று உணர்ந்த சம்பத் தடுமாறிப் போனான்.
அந்தத் தடுமாற்றத்துடனே சிங்கத்தை அதன் குகையில் சந்தித்தான் (?!)

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.