நான் போடுற கோட்டுக்குள்ளே -12
"ஷப்பா!! என்ன வெயில்? என்ன வெயில்? பங்குனி மாசத்துலயே இப்படி கொளுத்தினா சித்திரை கத்திரி வெயில் எல்லாம் எப்படி இருக்குமோ? பெருமாளே! பாட்டி! அரவிந்த் எங்க? ஸ்ரேயாஸ் சத்தமும் காணோம்? ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறாளா? ஹூம்.. இருபத்து நாலு மணி நேரமும் ஏசி ஓட வேண்டியதா இருக்கு.. நானும் போய் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். குழந்தையைக் கொடு."
வீட்டுக்குள் நுழையும் போதே பாட்டியின் கையில் இருந்த மகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டாள் ராஜஸ்ரீ.
"நானும் என் ரூமுக்குப் போறேன் பா" என்ற வார்த்தைகளோடு சம்பத்தும் சென்று விட்டான். முரளிதரனும் தேவிகாவும் தேங்கி நின்றார்கள். அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்காக சேஷாத்ரியும் ராஜலக்ஷ்மியும் காத்திருக்க அவர்களோ மௌனம் சாதித்தனர்.
"ம்ச்.. நானும் டிரஸ் மாத்திண்டு வந்துடறேன் மா" என்று தேவிகாவும் எழுந்து விட்டாள். மயில் கழுத்து கலரில் செல்ஃப் பார்டருடன் அவள் உடுத்தி இருந்த சில்க் காட்டன் புடவை தேவிகாவிற்கு மிகவும் பிடிக்கும். விசேஷ நாட்களில் காலையிலேயே உடுத்திக் கொள்பவள் நாள் முழுவதும் அதை மாற்ற மனமில்லாமல் இருப்பாள். அப்படிப் பட்டவள், அவளது ஆதர்ஷ புடவையை மாற்றி வருகிறேன் என்றதும் அவரது மாமியார் திடுக்கிட்டுப் போனார்.
"நீயுமா தேவி?? போன இடத்திலே ஏதோ சரியில்லைன்னு புரியறது. என்ன நடந்ததுன்னு சொன்னா தானே தெரியும். முரளி! எங்கே உன் ஃப்ரண்ட் கிருஷ்ணன்? அவாளுக்கும் சேர்த்து தளிகை பண்றேன்னு சொன்னேனே" என்று மருமகளை நிறுத்தி வைத்த ராஜி மகனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். .
"ஹூம்.. என்னத்தைச் சொல்றது மா?" என்று கணவனைப் பார்த்தாள் தேவிகா.
"அம்மா! இந்த இடம் சரி வரும்னு எனக்குத் தோணலை. அவ்வளவு தான். கிருஷ்ணன் நேரா அவாத்துக்குப் போயிடறேன்னு சொல்லிட்டான். நானும் சரின்னுட்டேன். விலாவாரியா அப்புறம் பேசுவோம். உன் பேரன் வரவும் நீயே கேளு. இப்போ வயித்தைக் கவனிக்கலாம். பசங்கள சாப்பிடக் கூப்பிடு தேவி" என்று எழுந்து சென்று விட்டார் முரளிதரன்.
என்றும் இல்லாத வழக்கமாக அந்த சாப்பாட்டு அறை அமைதியைத் தத்தெடுத்து இருந்தது. வழக்கமாக லொடலொடக்கும் ராஜஸ்ரீ சாப்பிட மட்டுமே வாய் திறந்தாள். சம்பத்தோ அதற்குக் கூட வாயைத் திறக்காமல் சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த மற்றவர்கள் வருந்த,
"சம்பத்! உனக்குத் தெரியாததில்லை. ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி மூட் அவுட் ஆகி இருந்தால் நன்னாவே இல்லை. இந்தப் பொண்ணு இல்லேன்னா என்ன.. சியர் அப் மேன். ஒழுங்கா சாப்பிடு" என்று மைத்துனனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான் அரவிந்த்.
ராஜஸ்ரீ கிடைத்த பத்து நிமிடத்தில் கணவனிடம் நடந்த விஷயங்களை ஒப்பித்து விட்டாள் என்று புரிந்து கொண்டான் அவளது தம்பி.
"ம்ம்.. " என்று சாப்பிட ஆரம்பித்தான் சம்பத்.
"யூ ஸீ சம்பத்.. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" விட்டேனா பார் என்று கீதோபதேசம் செய்த அரவித்தைப் பாவமாகப் பார்த்தவன் 'ஏன் இப்படி?' என்று கண்களால் வினவினான்.
"பின்ன.. திடீர்னு நீ மாட்டுக்கு சின் சான் மாதிரி அமைதியாகிட்டா எனக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் வேண்டாமா?" என்று சிரித்தவனைக் குத்தவா வெட்டவா என்று பார்த்தாலும் தனது காரியத்தில் கண்ணானான் சம்பத்.
சாப்பிட்டு முடித்து சபை கூடியது. தாத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்தான் சம்பத். அனைவரும் சமீபத்திய நிகழ்ச்சிகளை அசை போட்டனர்.
போன வாரத்தில் ஒரு நாள் முரளிதரன் அலுவலகத்தில் இருந்து திரும்பிய போது அவரது நண்பர் கிருஷ்ணனும் உடன் வந்தார். இருவருக்கும் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக பழக்கம். கம்பெனியில் வெவ்வேறு கிளைகளுக்குப் போனாலும் நட்பு தொடர்கிறது.
பேச்சு வாக்கில் ஒரு நாள் அவரது மனைவியின் தங்கை மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டு இருப்பதாக அவர் சொல்ல, முரளிதரன் அந்தப் பெண்ண சம்பத்திற்குப் பேசலாமா என்று கேட்க அவரும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.
ஜாதகப் பரிவர்த்தனை ஃபோட்டோ எக்ஸ்சேஞ்ச் போன்ற விஷயங்கள் திருப்தியாக அமைய இதோ பெண் வீட்டார் மாப்பிள்ளையைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
"என்ன டா இது?" என்று ஆச்சரியமாகக் கேட்ட ராஜிக்கு, இப்போ இது தான் ட்ரெண்ட் என்று சிறியவர்கள் விளக்கினார்கள்.
"வாங்கோ.. வாங்கோ.. எல்லாரும் வாங்கோ.. அடடே கிருஷ்ணனா! பார்த்து ரொம்ப நாளாச்சே. எப்படி இருக்கேள்? ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?" என்று ஆர்வமாக வரவேற்றார் ராஜலக்ஷ்மி.
"பெரியவா புண்ணியத்தில் எல்லாரும் நன்னா இருக்கோம் மாமி. இப்போ தான் வேளை வந்திருக்கு. அதான் வந்துட்டோம்" என்றார் அந்த கிருஷ்ணன்.
ஆளாளுக்கு அவரவர் பாரம்பரியத்தை தண்டோரா போட, நான் ஸ்டாப்பாகப் போன பேச்சைக் காஃபி கொடுத்து நிறுத்தி வைத்த பெருமை தேவிகாவைச் சேரும். சம்பத்தைப் பார்த்தவர்களுக்குத் திருப்தி என்பதை அவர்களின் பார்வை உணர்த்தியது.
மேலும் சற்று நேரம் நடந்த பேச்சுக்குப் (சம்பத்திடம் நடந்த விசாரணைக்குப்)
பின்னர் பெண்ணின் தந்தை வாயைத் திறந்தார்.
"உங்களை எல்லாம் பத்தி அண்ணா நிறைய சொல்லி இருக்கார். நேர்லயும் பார்த்தாச்சு. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள் பார்த்து ஆத்துக்கு வந்து பொண்ணைப் பாருங்கோ. நேர்ல அழைக்கணும்னு தான் இன்னைக்கு வந்தோம்" என்று சம்பிரதாயமாக அழைத்து பின்னர் அவர்கள் விடைபெற்றனர்.
முரளிதரன் தேவிகா சம்பத் மற்றும் ராஜஸ்ரீ நால்வர் மட்டுமே செல்லட்டும் என்று முடிவு செய்து கொண்டனர். குழந்தைகளைக் கவனிக்கவும் பெரியவர்களின் துணையாகவும் அரவிந்த் இருந்து கொள்ள இன்று காலையில் பெண் பார்க்கச் சென்றவர்களுடன் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியும் இணைந்து கொண்டனர்.
நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றவர்கள் சோர்ந்த முகத்துடன் வந்து சேர்ந்தனர்.
அங்கே நடந்தது தான் என்ன.. இதோ இது தான்..
பெசன்ட் நகரில் இருந்து அரைமணி நேரம் தொலைவில் இருந்த வெளச்சேரியில் தான் பெண்ணின் இல்லம். தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் நல்ல வசதியான தனி வீடு.
வந்தவர்களை வரவேற்று பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கொடுத்து நன்றாகவே உபசரித்தனர். பெண் பார்த்து விட்டு சாப்பிடலாம் என்றவர்களை, நாங்க என்ன அன்னியமா அசலா என்று சமாதானம் செய்து அடக்கி விட்டனர்.
பெண்ணின் தம்பி வந்து சம்பத்துடன் ஆர்வமாகப் பேசினான். தாத்தா பாட்டி கூட நிறைய பேசினார்கள். நேரம் போய்க்கொண்டே இருக்க யாரும் பெண்ணை அழைத்து வருவதாகக் காணோம்.
அங்கும் இங்கும் கண்களை அலைபாய விட்டு ஆர்வமாய் காத்திருந்த சம்பத் நேரம் செல்லச் செல்ல பொறுமை இழக்கத் தொடங்கினான். அருகில் இருந்த தமக்கையிடம் முணுமுணுக்க அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் தம்பியைச் சமாதானம் செய்தாள்.
அவனோ, "நீ கேட்கறயா இல்லை நானே கேட்கட்டுமா?" என்றான்
"டேய்! மானத்தை வாங்காத டா. கொஞ்சம் பொறுமையா இரு. ஏதாவது வேலிட் ரீசன் இருக்கும்" என்று பல்லைக் கடித்த ராஜஸ்ரீ தாயைப் பார்த்தாள்.
"நாமெல்லாம் நிறைய பேசிட்டோம். பொண்ணும் பையனும் பேசிண்டா தானே ஏதாவது முடிவுக்கு வர முடியும். நீங்க என்ன சொல்றேள் மாமி?" என்று குறிப்பால் உணர்த்த முயற்சி செய்தார் தேவிகா. அந்த முயற்சிக்குக் கொஞ்சம் வெற்றி கிடைத்தது.
பெண்ணும் வந்தாள். அவள் வரும் முன்பே அவரது குரல் எட்டுக் கட்டையில் வந்தது. "மாம்! அங்கே வந்து பெரியவாளைச் சேவி, அது இதுன்னு எதுவும் சொல்லக் கூடாது. ஐ ஜஸ்ட் ஹேட் தீஸ் ரப்பிஷ் திங்க்ஸ்.."
"ஷ்ஷ்.. சரிடி.. சரி.. நீ ரொம்ப கத்தாதே ஷ்ரத்தா. அவா எல்லாருமா எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணுவா. கொஞ்சம் நேரம் வந்து கேஷூவலா பேசிண்டு இரு. பையன் கூட பேசிப் பாரு. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்."
"ம்ம்…"
"ஏய்.. இப்படியேவா வரப் போற.. ஒரு சுடிதாராவது போட்டுக்கோடி ப்ளீஸ். "
"நோ வே.. நான் இப்படித் தான் வருவேன்" என்று வேகமாக வந்து ஹாலில் நின்றவளைப் பார்த்த சம்பத்திற்கு சமீபத்தில் பார்த்த ஒரு தெலுங்கு டப்பிங் படம் ஞாபகம் வந்தது. அந்த நிலையிலும் அவன் சற்று சத்தமாகவே சிரித்து விட்டான். அக்காவிடம் இருந்து ஒரு கிள்ளு வாங்கிய பிறகு அவனது சிரிப்பு சட்டென்று நின்றது.
சிறியவர்கள் இப்படி என்றால் தேவிகாவும் முரளிதரனும் என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தனர்.
அப்படி என்ன தான் அவள் உடுத்தி இருந்தாள்… முழங்கால் வரையிலுமான ஒரு ஷார்ட்ஸ் மற்றும் லொடலொடவென்று ஒரு டி ஷர்ட், வித்தியாசமான வாசகங்களுடன். இப்போதைய தலைமுறைக்கு ஆண் பெண் என்ற பேதமின்றி இது தேசிய உடையாகவே மாறிவிட்டது என்றாலும் பெண் பார்க்க வந்தவர்கள் முன்பு இப்படியா வருவார்கள் என்பதே வந்தவர்களின் கேள்வி. பதில் சொல்லத் தான் அங்கே ஆளில்லை.
அதையும் தாண்டி பெண்ணும் பையனும் பேசிக் கொள்ளலாம் என்று தனியே அனுப்பி வைத்துவிட்டு, மற்றவருக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள். எல்லா இடத்திலும் கலை நயம்.. எல்லாம் பெண்ணின் கை வண்ணம் என்று அவளது தாய்க்கு ஏகப் பெருமை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து பேசியது போதும் என்று அழைத்த போது சம்பத்தின் முகம் உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது. என்ன பதில் சொல்வது என்று முரளிதரன் யோசிக்க,
"ஒன்னும் அவசரம் இல்லை. இரண்டு நாள் யோசிச்சு நிதானமா பதில் சொல்லுங்கோ. போதும்" என்று அந்த ஷ்ரத்தாவே சொல்லி விட்டாள். திரும்புகையில், சம்பத் அமைதியாகக் காரை ஓட்ட மற்றவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தாலும் அமைதியாகவே வந்தார்கள்.
ஷ்ரத்தா விஷயத்தில் அனைவருக்கும் ஒரு அதிருப்தி இருந்தாலும் சம்பத்தின் பதிலுக்காகக் காத்திருந்தார்கள். தாத்தா பாட்டி இருவரும் அவளது உடை விஷயத்திலே ஆடிப் போயிருந்தனர். பேரன் அப்படி எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை அதுவும் உடையை வைத்துப் பெண்ணை மறுக்க மாட்டான் என்று தெரிந்தவர்கள். எதுவானாலும் அவனது வாய்மொழியாகக் கேட்கக் காத்திருந்தனர்.
அனைவரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க சம்பத் வாயைத் திறந்தான்.
"ஹூம்.. என்னைப் பொறுத்தவரை சாதாரண நாளிலே டிரஸ் ஒரு பெரிய விஷயம் இல்லேன்னாலும் இன்னைக்கு அகேஷனை நினைச்சு பார்த்தால் அது ஒரு முக்கியமான விஷயம் தான். ஆனால் அவளுக்கு இது பெரிசா தெரியலை. இதைப் பத்தி அவளோட அபிப்பிராயத்தை அப்புறம் சொல்றேன்.
கொஞ்ச நாள் முன்னாடி, என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் அவாளோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் சொன்னா. அவா தனித்தனியா சொன்னதெல்லாம் இன்னைக்கு ஒட்டுமொத்தமா ஒரே பொண்ணு கிட்ட இருந்து கேட்டுண்டு வந்திருக்கேன்" என்று புன்னகைத்தான்.
"கிட்டத்தட்ட ஒரு மணி நேரமும் அவளே தான் பேசினா. அவளோட லைஃப் ஸ்டைல், டே டு டே ஆக்டிவிட்டீஸ், ஃப்ரண்ட்ஸ், அம்பிஷன்ஸ், ஃப்யூச்சர் ப்ளான்ஸ், எக்ஸட்ரா.. எக்ஸட்ரா.. ஹப்பா.. வாய் வலிக்காதோன்னு எனக்குத் தோணித்து. நமக்கு சரி வராதுப்பா. விட்டுடுங்கோ" என்று பேச்சை முடித்துக் கொண்டான் சம்பத்.
"இப்படிச் சட்டுன்னு சொன்னா எப்படி சம்பத். ஒரு பொண்ணை ரிஜக்ட் பண்ண ஏதாவது ஸ்ட்ராங்க் ரீசன் வேண்டாமா?" என்றான் அரவிந்த். அனைவருக்குள்ளும் அதே கேள்வி தான்.
‘‘கரெக்ட் அத்திம்பேர். ஒன்னு இரண்டு சாம்பிள் சொல்றேன். அதுக்கப்புறம் அந்தப் பொண்ணை ஓகே பண்ணலாமன்னு சொல்லுங்கோ. அதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் என் சைட்ல இருந்து ஒரு விஷயத்தை க்ளியர் பண்ணிக்கறேன். நான் கல்யாணம் பண்ணிண்டு இந்த ஆத்துல தான் இருப்பேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவ அதுக்கு மனப்பூர்வமா ஓகே சொல்லணும்.
அஃப்கோர்ஸ்.. i understand that she is an individual and she can have her own ideas and wishes. I will respect them and support her. அதுக்காக நிச்சயம் தனியா போக மாட்டேன்" வரப் போகும் காலங்களில் இதையே சொல்வானா?? பார்ப்போம்..
"இதெல்லாம் இந்தக் காலத்தில ரொம்ப சகஜம் டா ராஜா. தனியா போகணுமானா பக்கத்திலேயே ஒரு ஆம் பார்த்தால் போச்சு. இதுக்காக ஒரு பொண்ணை ரிஜக்ட் பண்ணக் கூடாது" சீனியர் சேஷாத்ரி சிம்பிளாக முடித்துவிட பாட்டியும் பேரனும் அவரை முறைத்தனர்.
"ம்ச்.. தாத்தா.. பி சீரியஸ். அது மட்டும் காரணம் இல்லை. இன்னும் நிறைய இருக்கு. கேளு. அந்தப் பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாதாம். சாஸ்திரம் சம்பிரதாயம் இதெல்லாம் ரப்பிஷ்னு சொல்றா. .
இங்கே வந்து விளக்கேத்துன்னு சொன்னா கூட பிரச்சனை தான். நம்ம ஆத்துக்கு விளக்கேத்தற மாட்டுப் பொண்ணு வரமாட்டா.. பரவாயில்லையா?" முதல் குண்டை வீசி விட்டு வேடிக்கை பார்த்தான் சம்பத்.
"பெருமாளே!"
"பகவானே!"
"நாராயணா"
"அப்போ அவளே மாப்பிள்ளை பார்த்துக்க வேண்டியது தானே. எதுக்கு பொண்ணு பார்க்கற சம்பிரதாயம் "
"அப்போ கல்யாணம் எந்த முறைப்படி பண்றது?" என்று ஆளாளுக்கு ஒன்று சொல்ல, சம்பத் நிதானமாக அடுத்த குண்டை வீசினான்.
"அவ எப்போதும் வெஸ்டர்ன் டிரஸ்ஸஸ் தான் போட்டுப்பாளாம். அதுல தலையிட யாருக்கும்.. அதாவது ஹஸ்பன்ட் உட்பட யாருக்கும் ரைட்ஸ் கிடையாதாம். நாள் கிழமை புடவை கட்டிக்கோன்னு யாரும் வாயைத் திறந்து சொல்லப்படாது.. ஓகேவா?"
"...." அங்கே ஒரு அசாதாரண அமைதி நிலவியது.
‘‘அப்புறம் இது தான் ரொம்பவே முக்கியமானது. லைஃப்ல அவளுக்குன்னு ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திண்டு தான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வாளாம். ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்னு சொல்றா!...’’
சுற்றி இருந்தவர்களைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருக்க, இதுவரை வீசிய குண்டுகளே போதும் என்று நிறுத்தி விட்டான்.
"கலி முத்திடுத்து.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. கிருஷ்ணன் மூலமாவே சொல்லி விட்டுடு, முரளி. ஒரு வேளை பொண்ணைப் பத்தி பெத்தவாளுக்கே தெரியலையோ என்னவோ. என்ன தான் தெரிஞ்சவாளா இருந்தாலும் மூணாவது மனுஷா முன்னாடி இப்படி ஒரு தலைக்குனிவு வந்தா அவாளுக்கும் கஷ்டம் தானே." பாட்டி அங்கலாய்த்தார்.
"நீ சொல்றது வாஸ்தவம் தான் பாட்டி. அந்தப் பொண்ணு தானே இதையெல்லாம் யோசிச்சிருக்கணும். நாம அமைதியா வந்துட்டோம். சட்டுன்னு கோபப்பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும். அவா ரொம்பவே கஷ்டப்பட்டு பொண்ணைக் கூப்பிடாமலே சமாளிச்சா. நமக்குத் தான் தெரியலை. அவ பேரண்ட்ஸூம் முன்னாடியே அவகிட்ட தெளிவா பேசிட்டு நம்மளைக் கூப்பிட்டு இருக்கலாம். நம்ம நேரம், நாம போய் வித்தியாசமா பொண்ணு பாக்கற மாதிரி ஆகிடுத்து. நல்ல வேளை பாட்டி.. நீ அங்கே வரலை." என்றாள் ராஜஸ்ரீ.
"நமக்கெதுக்கு அதெல்லாம்.. இது அவா குடும்ப பிரச்சனை.. நாம எதுவும் கமெண்ட் பண்ணக் கூடாது ஸ்ரீ" என்று மகளைக் கண்டித்தாள் தேவிகா.
"இப்போ பொண்ணெல்லாம் இப்படி இருக்கறதால தான் பிள்ளையை பெத்தவா எல்லாரும் பேசவே பயப்படறா போலிருக்கு. எப்படியாவது பிள்ளைக்குக் கல்யாணம் ஆனால் போறும்னு எல்லாத்துக்கும் தலையாட்டி வைக்கறா"
பேச்சு நேற்றைய இன்றைய கல்யாணம் என்ற தலைப்பில் வளர்ந்து கொண்டே சென்றது.
"மாப்பிள்ளை வர்க்கத்தார் முன்னாடி இருந்த மாதிரியேவா இருக்கா. நிறைய மாற்றங்கள் வந்தாச்சே.. அவா படிப்படியா செஞ்ச அராஜகம் எல்லாம் தான் இப்படி அவாளுக்கே திரும்பி நிக்கறது" என்றார் சேஷாத்ரி.
"எப்படி தாத்தா" இது அரவிந்த்.
ஏன்டா கேட்டோம் என்று அவனே நினைக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார் சேஷாத்ரி.
—-----
"ஹலோ! நான் சுபிக்ஷாவோட அம்மா தான் பேசறேன். சொல்லுங்கோ"
"என் பிள்ளை, பேர் அபிஜித். ஜாதகம் அனுப்பி இருந்தோமே. எங்காத்து ஜோசியர் ஏழு பொருத்தம் இருக்கு. பேஷா. கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டார்."
"எங்காத்து ஜோசியர் அப்படி ஒன்னும் பெருசா சொல்லலையே மாமி. ஏழு பொருத்தம் இருந்தாலும், கல்யாணம் பண்ணினா கஷ்டம்னு சொல்றாரே. புத்திர பாக்கியம் இருந்தாலும் சிசேரியன் தான் ஆகுமாம். எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. நான் நாலையும் யோசிக்கணும் பாருங்கோ."
"...."
டொக்கென்ற சத்தத்துடன் அந்த லேண்ட்லைன் ஃபோன் லேண்ட் ஆனது. அதற்காகவே காத்திருந்தார் போல் அடுத்த அழைப்பு.
"ஹலோ.. ம்ம்... ஆமா.. சொல்லுங்கோ... அதிலே பாருங்கோ.. என் பொண்ணு எம்.பி.ஏ. படிச்சிட்டு மாசம் இரண்டு லட்சம் கைல வாங்கறா.
உங்க பையன் வெறும் பி.இ. தான். சம்பளமும் ரொம்பவே கம்மி. இத்தனை வருஷமா ஒரே கம்பெனில குப்பை கொட்டறார், அப்புறம் எப்படி சம்பளம் ஏறும். இந்த காலத்தில சாமர்த்தியம் இருக்கறவா ஒரே வருஷத்துல இரண்டு கம்பெனி மாறி டபுள் மடங்கா சம்பளம் வாங்கறாளே."
"....."
இப்போதும் அதே டொக் தான். "நீ பண்றது கொஞ்சம் கூட நன்றாக இல்லை, அனு. பொண்ணுக்கு நாம நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கறத விட்டு நாமளே அவ பாட்டுக்கு ஒத்து ஊதினா எப்படி? அவளுக்கும் வயசாகிண்டே போறது. நீ நினைக்கிற மாதிரி மாப்பிள்ளை கிடைக்கறதுக்குள்ள நம்ம பொண்ணு அரைக்கிழவி ஆகிடப் போறா. ஏற்கனவே பிஜி பண்ணனும்னு இரண்டு வருஷம் போச்சு. இவளுக்குச் சீக்கிரம் முடிச்சாத் தான் வர்ஷிக்குப் பாக்குறதுக்கு சரியா இருக்கும். அவளுக்கும் இருபத்திரண்டு ஆச்சே"
"ம்ம்.. எங்களுக்கு நன்னாவே ஞாபகம் இருக்கு. உங்களுக்குத் தான் பொண்கள் மேல் அக்கறையே இல்லை. நானும் அப்படியே இருக்க முடியுமா? அதான் நிறைய அலசி ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்கேன். உபகாரம் பண்ணாட்டாலும் உபத்திரவம் பண்ணாம இருங்கோ"
சட்டென்று வாயை மூடிக்கொண்டு தனது மொபைலில் ஐக்கியம் ஆனார் ரங்கராஜன். வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றைப் பார்த்தவர் அதை அப்படியே மனைவிக்கு ஃபார்வார்ட் செய்தார். அதைப் படிக்க ஆரம்பித்த அனுராதாவின் முகம் சந்தோஷத்தில் ஜொலித்தது. அந்தக் கடைசி வரிகளைப் படிக்கும் போது சந்தோஷம் எல்லாம் காணாமல் போய் அங்கே ஒரு ருத்ர தாண்டவம் அரங்கேறும் போல இருந்தது.
விஷயம் இது தான்…
//
படித்ததில் பிடித்தது.
பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு.
நபர் 1: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.
நபர் 2 : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.
நபர் 1: சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...
நபர் 2 : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...
நபர் 1: சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.
நபர் 2 : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.
நபர் 1: 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?
நபர் 2 : 6,5,4,3,2,1ங்கறது என்னன்ன...
6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.
5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.
4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.
3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.
2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.
1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.
அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.
வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.
பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.
நபர் 1: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?
நபர் 2 : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!
ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!
மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!
அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா!
நபர் 1: சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்!
நபர் 2 : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...
நபர் 1: என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...
உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா!
நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க
மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!
நபர் 2 : என்னதுஊஊஊ... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...
//
அதைப் படித்து விட்டு மனைவி காட்டிய ரியாக்ஷனைப் பார்க்க ரங்கராஜன் அங்கே நிற்கவில்லை.
இப்படி மறைமுகமாக ரங்கராஜன் மனைவிக்கு எடுத்துக் கூறிய விஷயங்கள் எல்லாம் கூடிய சீக்கிரம் அவருக்கே ஆப்பாக அமையப் போகிறது என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இருந்தால் இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வாரா?

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.