நான் போடுற கோட்டுக்குள்ளே - 11
நாட்கள் வேகமாக நகர்ந்து சென்றது. நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று பண்டிகைகள் வந்து சென்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. சீனியர் சேஷாத்ரி காலை ஏழு மணிக்கே ஃப்ரஷ்ஷாக வாசலில் இருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்திருந்தார். இப்போது அவரைப் பார்க்கும் எவரும் அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்காது என்று சத்தியம் செய்வார்கள். அவர் அணிந்திருந்த உடை அப்படி.
ஊஞ்சலை லேசாக ஆட்டிக் கொண்டு ஏதோ பாடலை அவர் முணுமுணுத்து கொண்டு இருந்த வேளையில், அந்த உடையின் உரிமையாளன் பல்லைக் கடித்தபடி அங்கே வந்து சேர்ந்தான்.
"குட் மார்னிங் தாத்தா! ரொம்ப குஷியா இருக்க போலிருக்கே" என்றபடி அவரருகில் அமர்ந்தான். லேசான பொறாமை அவன் குரலில் எட்டிப் பார்த்ததோ?
"இருக்காதா பின்னே. , என் பேத்தி வராளே!" பேரனின் செல்லத் தாத்தா தான் அவர்.. தாத்தாவின் செல்லப் பேரன் தான் அவன்.. ஆனால் பேரனா பேத்தியா என்று வந்துவிட்டால் தாத்தாவின் தராசு ஆட்டோமேட்டிக்காக பேத்தி பக்கம் சாய்ந்து விடும்.
"பேத்தி கூட கொள்ளுப் பேத்தியும் வரா.. அதை விட்டுட்டியே"
"ஆமாண்டா படவா.. அதுக்கென்ன இப்போ?"
"அதுக்கென்னவா.. யூ ஸீ.. தாத்தா!! உனக்குக் கொள்ளுத் தாத்தா போஸ்ட் கிடைச்சு நாலு வருஷம் ஆச்சு. உனக்கு வயசாகிடுத்துன்றதுக்கு சாட்சி அது தான். இப்போ அதை டபுள் ஸ்ட்ராங்கா கன்ஃபர்ம் பண்றதுக்கு இன்னொரு ஆளும் வந்தாச்சு. நீ என்னடான்னா எனக்குப் போட்டியா யூத்ஃபுல்லா டிரஸ் பண்ணிக்கறேன் பேர்வழின்னு என் டிஷர்ட் ட்ராக் பாண்ட் எல்லாம் அபேஸ் பண்ணிண்டு இருக்க.. இதெல்லாம் நன்னாவே இல்லை சொல்லிட்டேன்.."
அவனது குரலில் ஏகத்துக்கும் கடுப்பு. அவன் பார்வையோ தாத்தாவின் உடலுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்த அவனது இளநீல நிற போலோ டிஷர்ட்டை முறைத்துக் கொண்டு இருந்தது. தாத்தாவும் பேரனும் பீச்சில் வாக்கிங் போனால் வேண்டும் என்றே அவனது உடையை அணிந்து கொண்டு வருவார்.
மலர்ந்த முகத்துடன் அனைவருடனும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு நடப்பவருக்கு அங்கே ரசிகைகள் பட்டாளமே உண்டு. அனைவரும் இளவயது ரசிகைகளாக இருந்தது தான் பேரனுக்குப் பொறுக்கவில்லை.
"அடப் போடா.. நேக்கு அப்படி என்ன வயசாகிடுத்து. ஐயாம் எய்ட்டி இயர்ஸ் யங் யூ நோ..இப்போ இந்த நிமிஷம் இன்னும் இருபது வயசு குறைஞ்சது மாதிரி ஃபீல் பண்றேனாக்கும். எல்லாம் மனசுல இருக்கு டா. ஏதோ உன் டிரஸ்ஸால வந்ததுன்னு நினைச்சுக்க வேண்டாம்" என்று சத்தமாகச் சொன்னவர்
"பீரோக்குள்ள தூங்கறத நானாவது
போட்டுக்கறேனேன்னு சந்தோஷப் படுவானா… அதை விட்டுக் கேள்வி கேட்கறான்.. எல்லாம் பொறாமை.. யாரும் இவனைத் திரும்பிப் பார்க்க மாட்டேங்கறாளேன்னு" என்று முணுமுணுத்தார்.
"தேவை தான் எனக்கு.." என்று அலுத்துக் கொண்டாலும் சம்பத்திற்கு தாத்தா இந்த வயதிலும் ஆக்டிவாக இருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. மேலும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
"என்ன அதிசயம்.. சீக்கிரம் சரண்டர் ஆகிட்ட?"
"அதுவா தாத்தா.. என்னைக் கேலி செய்யறதுன்னா உனக்கு ஜாங்கிரி சாப்பிடற மாதிரி. எப்பவும் பாயிண்ட்ஸோட ரெடியா இருப்ப.. நான் அப்படி இல்லை.. பாயிண்ட்ஸ இனிமேல் தான் ரெடி பண்ணனும். நம்ம டிபேட்ட இன்னொரு நாள் நிறைய ஆடியன்ஸோட வச்சுக்கலாம்" என்றான் தாராள மனதோடு.
"ஹா ஹா ஹா.."
"அதை விடு தாத்தா. உன் பேத்தி வராளே.. கூட்டணி போட்டு என்னைக் கவுக்க குடும்பம் மொத்தமும் ஏதாவது ப்ளான் போட்டு இருப்பேளே.. அது என்னன்னு தெரிஞ்சா நான் கொஞ்சம் அலர்ட்டா இருப்பேன்.. ஏதாவது ஹின்ட் கொடேன்.."
"அது சரி.. இந்த தடவை நீ அலர்ட்டா இருந்து ஒன்னும் சாதிக்க முடியாது. வரப்போறது சக்கரவியூகமாக்கும். தப்பிக்க சான்ஸே இல்லை. ஐயாம் வெரி சாரி மை டியர் பாய். இந்த விஷயத்தில என் ஹெல்ப எதிர்பார்க்காதே"
"ம்ச்.. இந்த ராஜி கூட வாயைத் திறக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறா.. நீயும் சொல்ல மாட்டேங்கற..ஹூம்.. எதுவானாலும் வரட்டும்.. தனியா சமாளிப்பான் இந்த சம்பத் சேஷாத்ரி" என்று வீர சபதம் எடுத்தவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார் சீனியர் சேஷாத்ரி.
"ஆமா… நீ நிஜமாத் தான் சொல்றியா? அந்தக் கிழவி உன் கிட்ட ஒன்னும் சொல்லலையா?" காதருகே வந்து சத்தமில்லாமல் கேள்வி கேட்டவரை முடிந்தவரை முறைத்தான் சம்பத்.
"தாத்தாஆஆஆ!!! திஸ் இஸ் டூ யூ மச்.. நீ யூத்து.. ராஜி கிழவியா.. பக்கத்தில இல்லேன்னு தைரியம் தானே.. இதை ஏன் காதுக் கிட்ட வந்து கேட்கற.. இவ்வளவு நேரம் வந்த சவுண்ட் இப்போ காணோம்.." என்றவன் உள்ளே திரும்பி, "பாட்டி! தாத்தா ஏதோ கேட்கறார். சீக்கிரம் வா " என்றான் சத்தமாக.
'வை திஸ் கொலவெறி டா பேராண்டி' என்று பார்வையால் கேட்டவரை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே ராஜலக்ஷ்மி அங்கே வந்து சேர்ந்தார். அவரது கையில் இருந்த ஆர்த்தி தட்டை ஓரமாக வைத்து விட்டுக் கணவரிடம் வந்தார்.
"என்ன விஷயம்னா? எதுக்கு ராஜா அப்படிக் கத்தினான்?"
அவரோ பேரனைப் பரிதாபமாகப் பார்த்தார். அவனோ, "நீ கேட்ட கேள்வியை அப்படியே ரிப்பீட் பண்ணு பார்ப்போம்.." என்று சவால் விட்டான்.
"பெரிசா ஒன்னும் இல்லை ராஜி. ஸ்ரீ எத்தனை மணிக்கு வரதாச் சொல்லி இருக்கான்னு கேட்டான். நான் எனக்குத் தெரியாது.. ராஜிக்குத் தான் தெரியும்னு சொன்னேன். அதான் உடனே உன்னைக் கூப்பிட்டான். நான் சொன்னதை அவன் நம்பலே. நீயே உம்பேரன் கிட்ட சொல்லிடு" என்றார் கோர்வையாக. கண்கள் பேரனைப் பார்த்து 'இதெப்படி இருக்கு?' என்றது.
'என்ன ஒரு சாமர்த்தியம்?' என்று வியந்த அவனோ பிற்காலத்தில் அவசியம் பயன்படும் என்று மூளையில் நோட் பண்ணிக் கொண்டான்.
"இதுக்குத் தானா. அவசரமா கூப்பிட்டானேன்னு பதறிப் போய் வந்தேன். ஸ்ரீ அவாத்துல இருந்து கிளம்பியாச்சாம். இன்னும் அரைமணி நேரத்துக்குள்ளே வந்துடுவா" என்று பதில் கொடுத்த ராஜலக்ஷ்மி கணவரின் உடையைக் கண்டு முகம் சுளித்தார்.
"என்ன கண்றாவின்னா இது? வாக்கிங் போயிட்டு வந்தாச்சுன்னா போய் வேஷ்டிய மாத்திக்க வேண்டியது தானே. உங்களுக்கு இப்போ தான் இளமை திரும்பறதுன்னு நினைப்பா? வயசுக்கேத்த மாதிரி இருக்க மாட்டேளா? நாளைக்குப் பேரன் ஆம்படையா வந்து இப்படியா பேரன் டிரஸ்ஸெல்லாம் போட்டுப்பேள்னு கேள்வி கேட்டா மூஞ்சிய கொண்டு போய் எங்க வச்சுக்க? மனுஷருக்கு வயசாச்சே தவிர ஒன்னும் தெரியலை.." என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
சம்பத் சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு தாத்தாவைப் பார்க்க அவரோ மனைவியைப் பார்த்துப் பரிதாபமாக விழித்தார். "இன்னும் என்ன மசமசன்னு நிக்கறேள்? போங்கோ.. போய் வேஷ்டியைக் கட்டிண்டு சீக்கிரம் வந்து சேருங்கோ. குழந்தைகள் வர்ற நேரம் ஆச்சு" என்று ராஜி விரட்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் மனைவியின் கட்டளையை நிறைவேற்றினார் சேஷாத்ரி.
உடை தான் மாறி இருந்ததே தவிர அவரது முகத்தில் அதே உற்சாகம். பேரனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தவரை ஆச்சரியமாகப் பார்த்தான் அவன்.
'நோட் பண்ணிக்கோ.. நோட் பண்ணிக்கோ' என்று அவனது மைன்ட் வாய்ஸ் குரல் கொடுக்க வாழ்க்கைப் பாடத்தின் முக்கியமான அரிச்சுவடிகளை மூளையில் பெர்மனன்ட் ஸ்டோரேஜில் ஸ்டோர் பண்ணி வைத்தான் சம்பத்.
"கிரேட் தாத்தா!" என்றவன் அவரைப் பார்த்துச் சிரித்தான்.
"டேக் இட் ஈசி பாலிசி தான் லைஃப்ல எல்லா நேரமும் கை கொடுக்கும். வெளித்தோற்றம் எப்படி இருந்தால் என்ன. ஐ ஃபீல் யங் அட் ஹார்ட். உனக்குக் குழந்தைகள் பிறக்கும் போதும் இதே மாதிரி நடமாடிண்டு இருக்கணும்னு தினமும் பெருமாளை வேண்டிண்டு இருக்கேன். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. ஆனாலும் என்னோட இந்த ஆசையைப் பகவான் நிறைவேத்தி வைப்பார்னு நம்பறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவரை அணைத்துக் கொண்டான் பேரன்.
"தாத்தா!! டோன்ட் கெட் எமோஷனல். நீ இன்னும் நிறைய நாள் இருக்கத் தான் போற. என் பசங்களுக்கும் நீ தான் ரோல் மாடலா இருப்ப"
நாட்டு நடப்பு தெரியாமல்
ஆணித்தரமாகப் பேசிய பேரனைக் கண்டு புன்னகைத்தார் சேஷாத்ரி.
"பார்க்கலாம்.. மேலே இருக்கறவன் கணக்கு என்னவோ தெரியலையே" என்று பெருமூச்சு விட்டார்.
"நல்லதாவே இருக்கும் தாத்தா.. நம்பிக்கை அதானே எல்லாம்" என்று பஞ்ச் டயலாகை எடுத்து விட்டான் பேரன்.
"இதெல்லாம் நடக்கணும்னா முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்கனும். அதை விட்டு அவன் பஞ்ச் டயலாக் பேசிண்டு இருக்கான். இவர் அதுக்கு மேல வார்த்தையால உருகிண்டு இருக்கார். தாத்தாவும் பேரனும் ஃபீல் பண்ணதுல பங்குனி மாசம் கூட வெள்ளம் வரும் போல இருக்கு" அதுவரை இருவரது பேச்சிலும் குறுக்கிடாமல் இருந்த ராஜலக்ஷ்மி நச்சென்று பேரனின் மூளையில் உரைக்கும் படி சொன்னார்.
அவன் பதில் பேசுவதற்கு முன் ராஜஸ்ரீயின் கார் உள்ளே நுழைய, "தேவிகா! முரளீ! அவா வந்துட்டா பாரு!" என்று ஆரத்தித் தட்டை எடுத்துக் கொண்டு போர்டிகோவிற்குப் போனார் ராஜி.
மார்கழி மாதத்தின் ஆரம்பத்திலேயே ராஜஸ்ரீ அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஸ்ரேயாஸின் பள்ளி மற்றும் அரவிந்தின் அலுவலக வேலைகளைக் கருத்தில் கொண்டு பிரசவம் முடிந்தும் அவள் தாய் வீடு வரவில்லை. தேவிகா மட்டும் பதினைந்து நாட்கள் விடுப்பில் சென்று பெண்ணைக் கவனித்துக் கொண்டார். பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால் இரண்டு மாதங்கள் தாய் வீட்டில் சீராட வந்திருக்கிறாள் ராஜஸ்ரீ.
மகளைக் கைகளில் வைத்துக் கொண்டு ராஜஸ்ரீ நிற்க ஸ்ரேயாஸ் தாயின் அருகில் நின்றான்.
"நீங்களும் இப்படி வந்து நில்லுங்கோ மாப்பிள்ளை" என்று அரவிந்தையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்த பின் நேராகத் தாத்தாவிடம் வந்தாள் ராஜஸ்ரீ.
"இந்தா தாத்தா! உன் கொள்ளுப் பேத்தியைப் பிடி. இனிமேல் உன் பாடு அவ பாடு.. நான் இரண்டு மாசம் நன்னா ரெஸ்ட் எடுக்கப் போறேன்" என்று பெண்ணை அவர் கையில் கொடுத்தாள். நூறு நாட்களைத் தாண்டி விட்டதால் நன்றாக விழி விரித்துப் பார்த்தாள் குழந்தை. தாத்தாவின் முகத்தில் என்ன தெரிந்ததோ மந்தகாசமாகப் புன்னகைத்தாள். அவரும் சந்தோஷமாகப் பேத்தியை அணைத்தபடி உள்ளே சென்றார். அவர் பின்னோடு அனைவரும் சென்றனர்.
காஃபி, பால், ஹார்லிக்ஸ் பூஸ்ட் என்று அவரவர் விருப்பப்படி ஒரு பானத்தைக் குடித்த பின் ஸ்ரேயாஸ் அவனது பொம்மைகளைத் தேடிப் போனான். தாத்தாவும் பாட்டியும் கொள்ளுப் பேத்தியுடன் அவர்களது அறையில் ஐக்கியம் ஆனார்கள். முரளிதரன் ஒரு முக்கிய வேலை என்று வெளியே சென்று விட்டார்.
தேவிகா சமையலறை நோக்கி நகர,
"அம்மா! எனக்கு கீழ் ரூம் தானே. கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை" என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் ராஜஸ்ரீ. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சம்பத்திற்கு தமக்கையின் விழிகள் கணவனிடம் ஏதோ சொன்னது போல இருந்தது. அட.. இவன் தேறிடுவான் போலிருக்கே!
மனைவி சொல்லே மந்திரம் என்று செயல்படும் அரவிந்த் உடனே மைத்துனனைப் பிடித்துக் கொண்டான். ஏப்ரல் மாதம் என்பதால் பத்து நாட்கள் விடுப்பு எடுத்திருக்கும் அரவிந்த்தின் ஹாலிடே டார்கெட் என்று மனைவி சொன்ன விஷயத்தில் உடனே வேலை செய்ய ஆரம்பித்தான்.
சீக்கிரம் வேலையை முடித்தால் கொஞ்சமாவது விடுமுறையை என்ஜாய் பண்ணலாம் என்று அவன் நினைக்க, அவனது தலையெழுத்து இப்போது சம்பத்தின் கையில் அல்லவா இருக்கிறது.
"என்ன சம்பத்? லைஃப் எப்படி போயிண்டு இருக்கு?" சம்பிரதாயமாக ஆரம்பித்தவனைப் பார்த்துச் சிரித்தான் சம்பத். அரவிந்த்தின் அடுத்தடுத்த கேள்விகள் எப்படி இருக்கும் என்று நன்றாகத் தெரிந்தது.
"ஏன் அத்திம்பேர்? நீங்களும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே. வந்ததும் வராததுமா உங்களுக்கு கொடுத்த டார்கெட்ல வொர்க் பண்ண ஆரம்பிக்கணுமா? இன்னும் பத்து நாள் டைம் இருக்கே. மத்தவாளுக்குக் கொஞ்சம் பிரிபரேஷன் டைம் கொடுக்கலாமே?"
இந்தப் பத்து நாட்களில் சம்பத்தின் கல்யாணத்தைப் பற்றி ஒரு முடிவைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அரவிந்த் கிடைக்கும் ஒரு நொடியைக் கூட வீணாக்க விரும்பவில்லை. மைத்துனனைப் பற்றி நன்றாக அறிந்தவன் அவன்.
"ஹேய்.. உனக்குத் தெரியாதா? நமக்கு இது தான் டார்கெட்னு அசைன் பண்ணியாச்சுன்னா இம்மீடியட்டா வொர்க் பண்ண ஆரம்பிக்கணும். அப்போ தான் டைம்ல முடிக்க முடியும்"
"சரி தான்.. நீங்க நல்ல ஃபார்ம்ல இருக்கேள்னு தெரியறது. டோன்ட் வொர்ரி. ஈவ்னிங் கண்டிப்பா பேசறேன்" என்ற வாக்குறுதியுடன் அப்போதைக்கு எஸ்கேப் ஆனான்.
வேறு வழியின்றி அரவிந்த் மனைவியிடம் செல்ல சம்பத் தனது அறையில் சென்று அடைந்து கொண்டான். நினைவுகள் போன வாரம் நடந்த நண்பர்கள் சந்திப்புக்குச் சென்றது.
அண்ணா யூனிவர்சிட்டியில் ஒன்றாக பிஈ படித்த அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சென்று மேல் படிப்பை முடித்தார்கள். பலர் படித்த இடத்திலேயே செட்டிலாக சம்பத்தைப் போன்ற சிலர் தாய் நாடு திரும்பினர். அமெரிக்காவில் செட்டிலான ஒரு நண்பனின் திருமணத்தை முன்னிட்டு அனைவரும் கூடி இருந்தனர்.
வந்திருந்த பதினைந்து பேரில் பாதிப்பேருக்கு மேல் திருமணம் ஆகவில்லை என்பதே அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தது. அனைவரும் அவரவர் அனுபவங்களைக் கொட்டிக் கவிழ்த்தனர். இத்தனையும் தாண்டி திருமணம் செய்யலாமா வேண்டாமா என்று அனைவரையும் பயமுறுத்துவது போலிருந்தது அந்தப் பேச்சுகள்.
சற்று முன் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. இன்னும் இருபது நாட்களில் திருமணம் என்று முடிவு செய்தார்கள். பையனும் பெண்ணும் ஃபேஸ்டைமில் பல சிட்டிங் பேசி ஓகே செய்த திருமணம்.
"நல்ல பொருத்தமான ஜோடிடா நீங்க இரண்டு பேரும்." நண்பர்கள் அனைவரும் வாழ்த்த அவன் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.
"ஹே குமார்! எனக்கு பேரண்ட்ஸ் பாக்கிற பொண்ணு போதும். அதுவும் ட்ரடிஷனலான பொண்ணு தான் வேணும்னு சொல்லிட்டே இருந்தியே.. உன் உட்பிய பார்த்தால் ரொம்ப மாடர்னா தெரியுது. உங்க இரண்டு பேரையும் பார்த்தால் இது அரேஞ்ச்ட் மேரேஜ் மாதிரி தெரியலையே?"
மேடையில் இருந்த வருங்கால மனைவிடம் பார்வையை வைத்திருந்த குமாரிடம் தனது சந்தேகத்தை ஒருவன் கேட்க, அவன் நிதானமாக பதில் சொன்னான்.
"ஆமாண்டா இது லவ் மேரேஜ் தான். அவளும் யுஎஸ்ல தான் இருக்கா. பட் பல மைல் தூரத்தில இருக்கா. எங்க கம்பெனில தான் வொர்க் பண்றா. நான் ஒரு டெபுடேஷன்ல போனபோது பழக்கம். அது அப்படியே கன்டிநியூ ஆகி இங்கே வந்தாச்சு."
"ஓ.. பட் நீ எனக்கு ஃபோன் பண்ணும் போது வேற மாதிரி சொன்ன ஞாபகம்" என்று அந்த நண்பன் கூற குமார் மடைதிறந்த வெள்ளமாகப் புலம்பித் தள்ளி விட்டான்.
"ஹூம். ஆறு மாசத்துக்கு முன்னாடி பண்ணின ஃபோனைத் தானே சொல்ற.. அப்போ ஒரு பொண்ணு பார்த்தோம். அதுவும் Xxxx ஊர்ல. நான் அப்போ வரமுடியலேன்னு அம்மா அப்பா மட்டும் தான் பொண்ணு பார்க்க போனாங்க. சென்னைல இருந்து ஓவர் நைட் டிராவல் பண்ணி போனவங்கள அவங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அவங்க வீட்டுக்கு பக்கத்திவ இருந்த கோயிலுக்கு வரச்சொல்லி இருக்காங்க. அம்மாக்கு அதுல பெரிய வருத்தம்."
அவன் ஒரு பெருமூச்சுடன் நிறுத்த இன்னொருவன் அதை ஆமோதித்தான். "இப்போ எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாரையும் சந்தேகக் கண்ணோட தான் பார்க்கிறாங்க. அதனால யாரையும் வீட்டுக்குக் கூப்பிட்டு பஜ்ஜி சொஜ்ஜின்னு டைம் money எல்லாம் வேஸ்ட் பண்றதில்லை. சிட்டில இருந்தால் ஏதாவது ஹோட்டல்ல தான் ஃபர்ஸ்ட் மீட்டிங். அது சக்சஸ் ஆனால் தான் அடுத்த ஸ்டெப் போவாங்க."
"அதே தான்.. இரண்டு அம்மா அப்பாவும் பேசி ஓகே ஆகி பொண்ணையும் போய் பார்த்தாங்க. நானும் டூ த்ரீ டைம் பேசினேன். பேசிப் பார்த்ததுல இரண்டு பேருக்கும் ஓகேயா தான் இருந்தது. ஒரு வேளை எனக்குத் தான் அப்படித் தோணுச்சா தெரியலை. டைரக்டா கல்யாணம் பண்ணிடலாம்னு ப்ளான் பண்ணிட்டோம்.
திடீர்னு ஒரு நாள் அந்தப் பொண்ணோட அப்பா வந்து, “மன்னிச்சிடுங்க..! நேத்து திடீர்னு என் மகள் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்க”ன்னு கெஞ்சி இருக்காரு. எங்க பேரண்ட்ஸ் நொந்து போய் சரின்னு விட்டுட்டாங்க. இதுல சிட்டி பொண்ணு வில்லேஜ் பொண்ணுன்னு டிஃபரன்ஸ் எல்லாம் இல்லைன்னு நல்லாவே தெரிஞ்சது. நல்ல லெசன் எங்களுக்கு. அதான் இப்போ நானே பொண்ணு பார்த்துட்டேன். Hope we will lead a good life" என்று முடித்தான் அந்தக் குமார்.
இதெல்லாம் ஒரு காரணமா என்று நண்பர்கள் திகைத்து நின்றனர். அவனைத் தொடர்ந்து இன்னும் ஒருவன் அவனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டான்.
"என் கதையைக் கேளுங்க டா. இன்னும் ஆச்சரியமா இருக்கும். அந்தப் பொண்ணும் என்னை மாதிரியே சாப்ட்வேர் என்ஜினீயர். இரண்டு பேரும் பார்த்துப் பேசி ஓகே சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்புறம் இரண்டு பேரும் இந்தக் கால வழக்கப்படி விடிய விடியப் பேசினோம். நேர்லயும் மீட் பண்ணினோம். மோஸ்ட்லி இரண்டு பேரும் காஃபி டேல மீட் பண்ணினோம். அந்த அளவுக்கு அவ ஒரு காஃபி பைத்தியம். என் வாய் சும்மா இருக்காம, ஒரு நாள்
நீ ஒரு காஃபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காஃபி பைத்தியம். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் டெய்லி காலைல என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுத்தால் போதும். அம்மா அப்படியே மெல்ட் ஆகிடுவாங்கன்னு சொல்லிட்டேன்.
மறுநாள் காலையில் அவ ஃபோன் பண்ணி "ப்ளீஸ்! நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமா மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்.
இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்"னு சொல்லிட்டா. நான் அதுக்குப் பதில் பேச அவளும் பேச சண்டை பெரிசாகி கல்யாணம் கேன்சல் ஆகிடுச்சு" என்றான் சோகமாக. நண்பர்கள் அனைவரும் ஷாக்காகிப் போனார்கள்.
"டேய் ஒரு காப்பியா டா கல்யாணத்தை நிறுத்திச்சு. ஆனால், நீ சொல்றதும் வாஸ்தவம் தான். இப்பல்லாம் பொண்ணுங்க கிட்ட வீட்டில் சமைக்கணும்னு சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தையை கேட்டது போல நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாங்க. அதுவும் மாமியார் வீட்டில கேட்டா சேதாரம் ஜாஸ்தி தான். என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்துப் போடணும்?னு கேட்கிறாங்க" என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தான் மற்றொரு நண்பன்.
அவன் நிறுத்திய நேரம் இன்னொருவன் தனது சோகக்கதையை ஆரம்பித்து வைத்தான்.
"டேய் இதெல்லாம் ஜூஜூபி டா. என் கதையைக் கேட்டா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட அந்தப் பொண்ணு என் கிட்ட போட்ட கண்டீஷன் என்ன தெரியுமா?
நமக்குக் குழந்தை வேண்டாம்றது தான்"
அவன் சொல்லி முடிக்கவும் அங்கே ஒரு நிசப்தம் நிலவியது. அனைவரின் முகத்திலும் ஒரு அதிர்ச்சி தெரிந்தது.
"வாட்!! நீ சரியாத் தான் கேட்டியா டா. கொஞ்சம் லேட்டா குழந்தை வரட்டும்னு அவங்க நினைச்சிருக்கலாம்" என்றான் குமார்.
"என்னைப் பத்தி உனக்குத் தெரியுமே டா. அவ சொன்னதும் எனக்கு ஷாக் தான். ஆனால் அந்த நேரத்தில கூட நிதானமாத் தான் யோசிச்சேன். இரண்டு தடவை கேட்டு கன்ஃபர்ம் பண்ணினேன். சரி இப்போ குழந்தை வேண்டாம், இரண்டு அல்லது மூணு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னேன். நோ ...எப்பவுமே எனக்கு குழந்தை வேண்டாம்னு அவ சொல்லிட்டா" என்று நிறுத்தினான்.
"டெலிவரிய நினைச்சு பயப்படறாங்களோ என்னவோ.. நீ புரிய வச்சிருக்கலாமே டா" என்று சம்பத் சொல்ல அவன் விரக்தியாகச் சிரித்தான்.
"அதையும் தான் யோசிச்சேன் டா. அதனாலயே நாம குழந்தை பெத்துக்க வேண்டாம். ஆனால் பெரியவங்க கேட்பாங்க. ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கலாம்னும் சொல்லிப் பார்த்தேன்"
"அதுக்கு அவங்க சரின்னு தானே சொல்லி இருப்பாங்க?"
"ம்ச்.. அடப்போடா.. நீ வேற.. எப்படி வந்தாலும் எனக்குக் குழந்தை வேண்டாம். யக்.. கிட்ஸ் ஆர் டர்ட்டி ஃபெல்லோஸ்.. ஐ டோண்ட் லைக் தெம். எப்பவுமே நாம் இருவர் நாமே இருவர்னு சொல்லிட்டா. போடி,போன்னு காலைல நடந்த நிச்சயத்தை மத்தியானம் கேன்சல் பண்ணிட்டு வந்துட்டோம்" என்றான்.
"அப்புறம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாமல் அவங்க லிவ் இன் ட்ரை பண்ணி இருக்கலாம். நிறைய பேருக்கு சான்ஸ் கிடைச்சிருக்கும்" என்று ஒரு நண்பன் ஆரம்பிக்க,
"அதை ஏன் டா நிச்சயம் முடிஞ்ச பிறகு சொல்லணும். முன்னாடியே சொல்லி இருந்தா செலவு, அலைச்சல் எல்லாம் மிச்சம் ஆகி இருக்குமே" ஆளாளுக்கு விதம் விதமாக விமர்சனம் செய்தார்கள்.
அடுத்தவன் சொன்ன விஷயம் இவை எல்லாவற்றையும் விட ஹைலைட்டாக இருந்தது.
"டேய் என் கதை எல்லாத்தையும் விட மோசம் டா. ப்ரீ வெட்டிங் ஷூட்ல எக்ஸ்ப்ரஷன் பத்தல.. சரியா ஹக் பண்ணல… ரொமான்டிக் லுக் இல்லைன்னு சொல்லி என்னை ரிஜக்ட் பண்ணிட்டா டா ஒருத்தி" என்றான் அவன்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்த சம்பத்திற்கு ஒரே குழப்பமாக இருந்தது. தற்போதைய கல்யாணச் சந்தை நிலவரத்தைக் குறித்து மனதுக்குள் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தினான்.
'இப்போது பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தான் தெரியவில்லை. கர்மா இஸ் எ பூமராங் என்பது போல, ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களுக்குச் செய்தது இப்போது
அவர்களுக்கத் திரும்பி வருகிறது.'
யோசனையினூடே தனது ப்ளஸ் மைனஸ் என்று பெண்கள் எதைச் சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்த போது ஒரு விஷயம் மிகவும் இடித்தது.
'இந்த ஜெனரேஷன் பெண்களுக்கு மாமனார், மாமியார், மச்சினன்,, நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாதே. ஹஸ்பன்ட் மட்டுமே போறும்னு தான் நிறைய பேர் சொல்றா.. அப்போ என் நிலைமை.. ஊஃப்.. நான் ஏன் ஆரம்பத்திலேயே தப்பா யோசிக்கணும்.. எங்க தாத்தா பாட்டியை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கு வரப்போறவளும் அப்படித் தான் நினைப்பா.. நினைக்கணும்' என்று உறுதியாக நினைத்தவன் நான் கல்யாணத்துக்குத் தயார் என்று மாலையில் அறிவித்து விட்டான்.
பெரியவர்கள் அன்றே நல்ல நாள் தான் என்று அவனது ஜாதகத்தை எடுத்து மஞ்சள் தடவி பெருமாள் சன்னதியில் வைத்ததோடு நில்லாமல் அவர்களுக்குத் தெரிந்த பெண்களை அலசி ஆராய, அரவிந்த்தும் தனது வேலையை உடனே ஆரம்பித்தான். சம்பத்தை அருகில் அமர்த்திக் கொண்டு, பிரபலமான மெட்ரிமோனியல் சைட்டில் உடனே பதிந்து வைத்தான். இரண்டாம் நாள் ஒரு மேட்ச் இருக்கிறது என்று சைட் சொன்னது. ஜாதகப் பொருத்தம் இருந்தது. மற்ற விஷயங்களும் ஒத்துக் கொள்ளும் படி இருந்தது. மேலே செல்ல நினைத்த போது அந்தப் பெண் அழைத்தாள். என்ன டா இது பெண்ணே அழைக்கிறாள் என்று நினைத்தாலும் அவளது சூழ்நிலை என்னவோ என்று சாதகமாகவே நினைத்தார்கள்.
ஆனால் அவள் சொன்ன விஷயத்தில் ஆடிப்போனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு சைட் பக்கமே போகவில்லை. அப்படி என்ன கேட்டாள் என்று யோசிக்கிறீர்களா.
என் திருமண விஷயத்தில் நான் எடுப்பது தான் முடிவு என்று சொல்லி சம்பத்திடம் பேச வேண்டும் என்றவளை, காலத்தின் கட்டாயம் என்று அனுமதித்தனர்.
"ஹாய்! எனக்கு உங்க ப்ரோஃபைல் ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு ஓகே தான். பட் என் சைட்ல இருந்து எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான்"
"....."
"ஹலோ.. கேட்கறீங்களா?"
"ஹா.. யெஸ். யெஸ்.. கோ அகெட்"
"டெஸ்டினேஷன் வெட்டிங் கேட்டு இருக்கீங்க தானே.."
"இருக்கேனே.."
"மவுண்டன் டாப்ஸ், பீச் வெட்டிங், உதயப்பூர் பேலஸ் வெட்டிங், அண்டர் வாட்டர் வெட்டிங், கேபிள் கார் வெட்டிங் இது மாதிரி எனக்கும் ஏதாவது வித்தியாசமான ப்ளேஸ்ல கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. செலவைப் பத்தி கவலைப் பண்ற இடத்தில நீங்க இல்லேன்னு எனக்கு நன்னாத் தெரியும். உங்க பொசிஷன் அன்ட் பேக்கேஜே அதைச் சொல்றதே.. நம்ம சம்பிரதாயங்கள் எதையும் விட வேண்டாம். பட் ப்ளேஸ் மட்டும் நான் சூஸ் பண்றது தான்.. வாட் டுயூ ஸே?"
தலையை உலுக்கிக் கொண்ட சம்பத் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தான். ஸ்பீக்கர் வழியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆடிப் போனார்கள்.
"அவ என்ன காத்ரீனா கைஃபா ப்ரியங்கா சோப்ரா வா.. டெஸ்டினேஷன் வெட்டிங்காமே.." ராஜஸ்ரீ சத்தமாகவே முணுமுணுத்தாள்.
"ஸாரி டூ ஸே திஸ் மிஸ்.கீர்த்தனா. என் வசதிக்கு நீங்க சொல்றது நாட் பாஸிபிள். ஆல் தி பெஸ்ட்" என்று அழைப்பைத் துண்டித்தான் சம்பத்.
"ஏன் டா.. அந்தப் பொண்ணு தானே இப்படி சொல்றா.. பெரியவா கிட்ட பேசிப் பார்க்கலாமே" என்றார் ராஜலக்ஷ்மி. சட்டென்று பேரன் ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டானே என்ற வருத்தம் அவருக்கு.
"பாட்டி! நீ எந்தக் காலத்தில இருக்கே. இந்தப் பொண்ணை மீறிப் பெரியவா வாயைத் திறக்கவே மாட்டா. நீ ஒன்னும் வருத்தப் படாதே. இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜம்" என்று சமாதானம் செய்தாள் பேத்தி.
அடுத்ததாக முரளீதரனின் நண்பருக்குச் சொந்தம் என்று சொல்லி படு ஜோராக எல்லாம் நடந்தது. புகைப்படம் பார்த்து பையன் பெண் இருவரும் ஓகே சொல்ல நேரில் சென்று பார்த்தவர்கள் அடைந்த அதிர்ச்சி அளவில்லாதது.

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.