• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
314
நான் போடுற கோட்டுக்குள்ளே -10

லிஃப்ட்டை விட்டு வெளியே வந்த சுபிக்ஷா ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தாள். எங்கே சென்று விசாரிப்பது என்று தெரியாததால் அந்த குழப்பம். அவளது பின்னோடு வந்த சம்பத், "ரிப்போர்ட் டு தி ரிசப்ஷன். தே வில் கைட் யூ" என்று ஃப்ரீ அட்வைஸ் வழங்கி விட்டு அந்த ஹாலின் கடைசியில் இருந்த அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

"தேங்க்ஸ்!" என்று அவள் சொன்னது காற்றோடு போனது.

'ம்ச். ரொம்ப சின்சியர் சிகாமணி போல' என்று நினைத்துக் கொண்டே ரிசப்ஷன் டெஸ்க் நோக்கி நகர்ந்தாள்.

"ஹலோ மிஸ்.சுபிக்ஷா! வெல்கம் டூ அவர் ஆர்கனைசேஷன் அண்ட் ஆபரேஷன்ஸ் டிபார்ட்மெண்ட்" என்று புன்னகையுடன் வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட் அவளுக்கு மேலும் சில தகவல்களைத் தந்து அழைத்துச் சென்றாள்.

"ரிப்போர்டிங் டைம் டென் ஒ கிளாக் தான். நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க. இன்னும் மூணு பேர் இன்னைக்கு ஜாயின் பண்றாங்க. மேனேஜர் இப்போ தான் வந்திருக்கார். என்ன ஸ்கெட்யூல்னு அவர் சீஃப் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுவார். அது வரைக்கும் இந்த டெஸ்க்ல இருங்க. யூ கேன் யூஸ் தி சிஸ்டம் அண்ட் கோ த்ரூ தீஸ் கோட் ஆஃப் கன்டக்ட் டாக்குமெண்ட்ஸ். இதெல்லாம் ப்ரிண்ட் எடுத்து கொண்டு வரேன். யூ ஹேவ் டு சைன் தெம்" என்று அவளுக்கு ஒரு வேலையைக் கொடுத்து விட்டுப் போனாள்.

நான்காம் மாடி மொத்தமும் ஆபரேஷன்ஸ் டிபார்ட்மெண்ட் தான் என்று தெரிந்து கொண்டு அந்த ஹாலைச் சுற்றி பார்வையை ஒடவிட்டாள் சுபிக்ஷா. சில தனி கேபின்களும் பல கியூபிகிலுமாக இருந்தது. ஆங்காங்கே சில தலைகள் தென்பட்டது.

சில தலைகள் அவளை நோக்கித் திரும்பவும், தான் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து சட்டென்று அமர்ந்தாள். எதிரே இருந்த கேபினைப் பார்த்தவள், "எம்.சம்பத் சேஷாத்ரி, Chief Operations Officer" என்று சத்தமாக வாசித்தாள். இந்தப் பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று யோசித்தவளுக்கு, அவன் தான் தனக்கு நாலாவது ரவுண்ட் இன்டர்வியூ செய்தவன். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கேள்விகளால் துளைத்து எடுத்தவன் என்பது ஞாபகம் வந்தது.

'பார்த்தா ரொம்ப யங்கா தெரிஞ்சதே.. COO வா... ஹூம்.. பெரிய அறிவாளி போலிருக்கு!' என்று வியந்தவள், 'இப்போது லிஃப்ட்டில் தன் கூட வந்தவன் அவனா?? அச்சோ சரியா பார்க்கலையே' என்று ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டாள்.

இன்டர்வியூ நடந்த தினம் அவளுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ஆறடி உயரத்தில் டிப்டாப்பாக வந்தவனை ஆர்வமாகப் பார்த்த பெண்கள் பலரும் அவன் கேள்விகளில் மாட்டி, அரைமணி நேரத்திற்கே இப்படின்னா நாள் பூராவும் இவனுக்குக் கீழே வேலை பார்த்தா.. ஐயோ சாமி நாங்க தாங்க மாட்டோம் என்று ஓடிப் போனார்கள்.

அந்த அறை வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தவள் யாரோ கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்லவும் சட்டென்று பார்வையை கம்ப்யூட்டருக்குத் திருப்பினாள்.

தீவிரமாக கம்பெனியின் வாழ்க்கை வரலாற்றை அவள் புரட்டிக் கொண்டிருந்த போது மற்ற மூவரும் வந்து சேர்ந்தனர். இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாக வந்தவர்கள் மூவரும் சுபிக்ஷாவைப் போல இந்தியாவின் புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்தே வந்திருந்தனர்.

பரஸ்பர அறிமுகத்திற்கப் பிறகு வேலையில் கவனமானார்கள். தேவையான டாக்குமெண்ட் அனைத்திலும் கையெழுத்திட்டு முறையாக வேலையில் சேர்ந்து கொண்ட போது மதியம் ஒன்றை நெருங்கி இருந்தது. என்ன செய்வது என்று மூவரும் யோசிக்க, ரிசப்ஷனிஸ்ட் அங்கே வந்தாள்.

"ஹாய் கைஸ்! இந்தாங்க நெக்ஸ்ட் த்ரீ டேஸுக்கு உங்களோட ஸ்கெட்யூல். இப்போ நீங்க போய் சாப்பிட்டு வந்துடுங்க. ஆஃப்டர்நூன் ஒரு ட்ரைனிங் செஷன் அலாட் பண்ணி இருக்காங்க. அதோ அந்த கான்பரன்ஸ் ரூமுக்கு வந்துடுங்க" என்று சொன்னவள் ஐந்தாம் மாடியில் இருந்த காஃபிடேரியாவுக்கான வழியைக் காட்டிவிட்டுச் சென்றாள்.

நால்வரும் கிளம்பிய போது ஆகாஷ் "ஃப்ரண்ட்ஸ்! நீங்க போங்க. என் ஃப்ரண்ட் குவாலிட்டி டிபார்ட்மெண்ட்டில ஜாயின் பண்ணி இருக்கான். நான் அவன் கூட சாப்பிட்டு வரேன்" என்று சொல்லிக் கிளம்பி விட்டான்.

பெண்கள் மூவரில் சுபிக்ஷா மட்டுமே உள்ளூர் வாசி, மற்ற இருவரும் தென்தமிழகத்தில் இருந்து இங்கே வேலைக்காக வந்திருந்தனர். இனிமேல் தான் தங்கும் விடுதியைப் பார்க்க வேண்டும். இங்கே மூன்று வேளையும் உணவு நன்றாகவே இருக்கும் என்பதை ஏற்கனவே அறிந்து கொண்டே வந்திருந்தனர்.

சுபிக்ஷா தனது லஞ்ச் பாக்ஸ்ஸை எடுத்து வர, மற்றவர் இருவரும் தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு வந்தனர்.

எங்கே அமர்வது என்று யோசிக்கும் போதே ஒரு பெண்கள் பட்டாளம் அங்கே வந்து சேர்ந்தது. அவர்களும் ஆபரேஷன்ஸ் டிபார்ட்மெண்ட் தான் என்று சொல்லி இவர்களையும் தங்களுடன் அமரும் படி அழைப்பு விடுக்க, மறுக்க இயலாது அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் சில வருடங்களாக அங்கே பணி புரிபவர்கள் என்பது தெரிந்து கம்பெனி பற்றிய தேவையான விவரங்களை அறிய முற்பட அவர்களோ, "கமான் கேர்ள்ஸ். முதல் நாளே என்ன அவசரம். அதெல்லாம் போகப் போக தெரிஞ்சுக்கலாம்.‌ இப்போ லஞ்ச் டைம். நோ கம்பெனி டாக்ஸ். ஒன்லி பர்சனல். இத்தனை கேர்ள்ஸ் இருக்கோம். எவ்வளவு பேசலாம்" என்று ரூட்டை மாற்றி விட்டனர்.

"இட்ஸ் ஓகே!" என்று வேறு வழியில்லாமல் புதியவர்கள் மூவரும் ஒத்துக் கொண்டனர்.

"ஹலோ ஃப்ரண்ட்ஸ்!" என்று புதிதாக அங்கே வந்து சேர்ந்த ஒரு பெண் அன்றைய ஹாட் டாபிக் ஆகிப் போனாள். கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் கயிறும் கைகளில் இருந்த மெஹந்தியும் சமீபத்தில் திருமணம் ஆனவள் என்று காட்டிக் கொடுத்தது.

"ஹேய்! இங்கே பாருங்கடி புதுப் பொண்ணு!"

"உனக்கு இப்போ ஆஃபீஸ் ஞாபகம் எல்லாம் வரக்கூடாதே."

"ஹனிமூன் போக வேண்டிய ஆளு இங்கே எதுக்கு வந்திருக்க?"

"உன் ஆளு எப்படி உன்னைத் தனியா அனுப்பி வச்சார். ஃபெவிகால் போடாமலே ஒட்டிக்கிட்டு இருந்தாரே?"

ஆளாளுக்கு விசாரணை நடத்த, அவளோ "அவரும் தான் வந்திருக்கார். அதோ அந்த டேபிள்ல இருக்கார்" என்றாள் மெதுவாக.

"பாருடா.. இவளுக்கு வெட்கம் எல்லாம் வருது.." என்று கலாய்த்த பெண்கள் அடுத்து அவள் பேசியதைக் கேட்டு கொதித்துப் போனார்கள்.

"நான் பேப்பர் போட்டுட்டேன் பா. நெக்ஸ்ட் வீக் அவர் கூட சிட்னி கிளம்பறேன். அங்கே போய் வேலை தேடிக்கலாம்னு அவர் சொல்லிட்டார்.
ஷார்ட் நோட்டீஸ்னாலும் கம்பெனில அக்சப்ட் பண்ணிட்டாங்க. அதான் கேட்ஜட்ஸ் எல்லாம் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சாச்சு. நாங்க கிளம்பறோம். அங்கே போனதும் கான்டாக்ட் டீடெயில்ஸ் அனுப்பறேன். கீப் இன் டச்" என்று நீளமாகப் பேசிவிட்டு அவள் கிளம்பி விட்டாள். மேலும் சில நிமிடங்கள் இருந்தாலும் தனக்கு வம்பாக முடியும் என்று அவளுக்குத் தெரியும்.

"டிஸ்கஸ்டிங்!" என்றாள் ஒருத்தி. தனது கருத்துக்களை அந்த ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முயன்றாள் போலும். அந்த அளவுக்கு அவளது முக பாவனைகள் இருந்தது. அன்றைய டாபிக் கிடைத்தது என்று ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.

இடைப்பட்ட நேரத்தில் தான் சம்பத் அருகில் இருந்த டேபிளுக்கு வந்தான். அவனது மூளை எழுந்து போ என்று சொன்னாலும் ஃப்யூச்சருக்கு யூஸ் ஆகும் என்று மனம் சொன்னதைக் கேட்பது என்று முடிவு செய்து விட்டான். காதுகளைத் தீட்டிக் கொண்டு அவர்களது பேச்சைக் கேட்க ஆரம்பித்தான். பெண்களின் பேச்சு சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது.

"மேரேஜூக்குப் போன போது கூட லீவ் முடிஞ்சு வந்துடுவேன்னு தானே சொன்னா. அதுக்குள்ள எப்படி இப்படி ஒரு டெசிஷன் எடுத்தா?"

"இவ பாட்டுக்கு வேலையை விட்டுக் கிளம்பறாளே, புது ஊர்ல எங்கேயாவது போகணும் ஏதாவது வாங்கணும்னா கூட ஹஸ்பன்ட் கிட்ட கேட்கணும்."

"இப்போ எல்லாம் ட்வன்டி ஃபோர் இயர்ஸ்ல மேரேஜ் பண்றதே ஆச்சரியம். அதுவும் அரென்ஜ்ட் மேரேஜ். இதிலே ஒரே வாரத்தில அவன் கூட எப்படிப் போக முடியும்? வேலையை விட்டுட்டு எல்லாத்துக்கும் எப்படி அடுத்தவனை நம்பி இருக்க முடியும்?"

ஆளாளுக்கு கருத்து தெரிவிக்க அதில் ஒருத்தி மாற்றி யோசித்தாள். அதுவே உண்மையாக இருக்கும் என்று மற்றவர்கள் நம்பும்படியாக இருந்தது.

"நிறுத்துங்க டி. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. அவளைப் பத்தி நமக்கு இரண்டு வருஷமா தான் தெரியும். அதுலயே அவளோட தாட் ப்ராஸஸ் அண்ட் அவங்க ஃபேமிலி பத்தி ஓரளவுக்கத் தெரியும். அதை வச்சு யோசிச்சுப் பார்த்தா. இந்த ப்ளானே இவளோடதா தான் இருக்குமனு தோணுது."

"அதெப்படி அவ்வளவு கான்ஃபிடன்ட்டா சொல்ற?"

"நீங்களே யோசிச்சு பாருங்க. இவ வீட்டுல அண்ணனும் இவளும் தான். நல்ல வசதியான குடும்பம். அண்ணி ஹவுஸ் வைஃபா இருந்தா போதும்னு ஊர்ப்பக்கம் பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணாங்க. ஆனால் என்ன ஆச்சு.. கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல உள்ளூர்லயே தனிக்குடித்தனம் போயிட்டாங்க.

காரணம் என்னன்னு நமக்குத் தெரியாது. ஆனால் இவ நம்ம கிட்ட சொன்னது என்ன. அம்மா அப்பா தான் அவங்க ப்ரைவசிக்காக அனுப்பி வச்சாங்கன்னு சொன்னா.

எல்லாருக்கும் ப்ரைவசி வேணும்னு நினைக்கிற பேரண்ட்ஸ் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது பெரிய குடும்பத்தில் இருந்து இரண்டாவது பையனை எப்படிப் பார்த்தாங்கன்னு யோசிச்சேன். இப்போ தான் தெரியுது. ஒரே பையனா இருந்தா இப்படி போக முடியாது. இதுவே இரண்டாவது பையனா இருந்தா போகலாம். கரெக்டா?"

"இவங்களே வொர்க் விஸா வாங்கி அனுப்பிட்டா.. இன்னும் ஈஸி. மாப்பிள்ளை வீட்டில எதுவும் சொல்ல முடியாது"

"அதானே.. எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க"

"அதையும் கடைசி நேரத்தில சாதிச்சிருக்காங்க பாரேன். கிரேட் இல்ல. இவர்களைப் போய் இந்தக் காலத்துக்கு லாயிக்கில்லேன்னு சொல்லிட்டேனே"

"ஓ மை காட்!!" என்று வாய் விட்டே அதிர்ந்தான் சம்பத்.

பெண்களின் பேச்சு மேலும் தொடர்ந்தது.
"அவளை விடுங்க.. இப்போ யார் யாரெல்லாம் என்னென்ன மேரேஜ் ப்ளான்ஸ் வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்ப்போம். லவ் மேரேஜா அரேன்ஜ்ட் மேரேஜா?" என்று ஒருத்தி ஆரம்பித்து வைத்தாள்.

"ப்ளானை விடுடி. அதைப் பின்னாடி பார்த்துக்கலாம். அதுக்கு முன்னாடி யோசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. கேர்ள்ஸ்! எந்த மாதிரியான மாப்பிள்ளை வேணும்னு சொல்லுங்க பார்ப்போம். உங்க டெர்மஸ் அண்ட் கண்டிஷன்ஸ கொட்டுங்க"

'டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸா??' என்று அதிர்ச்சி அடைந்த சம்பத் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டான். ஒவ்வொருவராக ஆரம்பித்து வைத்தனர்.

"ம்.. ஆளு நல்லா ஹைட்டா ஸ்லிம்மா ஃபிட்டா இருக்கணும்"

"பாரு டா.. இவ xxxx படத்தைப் பார்த்ததுல இருந்தே இப்படித் தான் சொல்லிட்டு இருக்கா. ஆறடி இருந்தா நீ அவன் கண்ணைப் பார்க்கணும்னா ஸ்டூல் போட்டு தான் பார்க்கணும் தெரியுமா?"

"ஹலோஓஓஓ!! கண்ணைப் பார்க்கணும்னா ஸ்டூல் தான் ஒரே வழியா? இன்னொரு வழி கூட இருக்கு. இட்ஸ் மோர் ரோமான்டிக் யூ நோ.. !"

"அந்த ரொமான்டிக் வழி என்னன்னு நீயே சொல்லிடு"

"ஹேய்! என்னைப் பாரு. ஃபிட்டா இருக்கிறவன் ஃபிப்டி கேஸி தாஜ்மஹால் மாதிரி இருக்கிற என்னை ஈஸியாக தூக்கிட மாட்டானா? ரொமான்ஸ் பண்ண அடிக்கடி நிறைய சான்ஸ் கிடைக்கும். யூ நோ"

"ஹோ…" என்று அனைவரும் ஆர்ப்பரிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று நமது ஹீரோ யோசித்துக் கொண்டிருந்தார்.

பெண்களின் பேச்சு மேலும் தொடர்ந்தது.
"சேம் ஏஜ் க்ரூப்பா இருக்கணும். ஒன் ஆர் டூ இயர்ஸ் எல்டர் ஓகே. பட் அஞ்சு வயசு பத்து வயசெல்லாம் ஸ்ட்ரிக்டா நோ.." இது அடுத்தவள்.

"ஸேம் பின்ச் டி.. அண்ணா அங்கிளை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்பட முடியாது." அவளது கருத்தை விம் போட்டு விளக்கி வைத்தாள் இன்னொருத்தி.

"நமக்கு மேல படிக்கலேன்னாலும் ஈக்வலா படிச்சிருக்கணும்."

"கூடவே நம்மள விட ஜாஸ்தி இன்கம் இருக்கணும்.."

"யெஸ்.. மன்த்லி டேக் ஹோம் 2L ஆவது இருக்கணும்"

"அந்தப் படிப்பையும் ஒரு ப்ரெஸ்டிஜியஸ் காலேஜ்ல படிச்சிருக்கணும்" இது நம்ம தலைவி சுபிக்ஷா.

"வாவ். இதை மறந்துட்டேன். தேங்க்ஸ் சுபிக்ஷா"

"எனக்கு டீ டோட்டலர் எல்லாம் வேண்டாம் மா. சோஷியல் ட்ரிங்கிங் இஸ் அக்சப்டபிள். ஐ லைக் தி பார்ட்டி கல்ச்சர். ஸோ எனக்கு வர்றவனும் அப்படியே தான் இருக்கணும்"

"எனக்கெல்லாம் ஆள் எப்படி இருந்தாலும் ஓகே. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு எதுக்கு யோசிக்கணும். எனக்கு வரப்போற ஆளு குட்டையோ நெட்டையோ.. சொட்டையோ.. வெல் செட்டில்டா இருக்கணும். நல்ல கேட்டட் கம்யூனிடில வீடு.. ஒரு பிஎம்டபிள்யூ காரு. ஈஎம்ஐ இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்ன ஒரு தாராளம்.

அடுத்தது ஒருத்தி, தான் மிகவும் முற்போக்கு சிந்தனை உடையவள் என்று நிரூபித்தாள். "ஏற்கனவே லவ் பண்ணி பிரேக்அப் ஆகி இருந்தால் நல்லது. அவனுக்கு லேடீஸை எப்படி ட்ரீட் பண்றதுன்னு ஒரு லெசன் கிடைச்சிருக்கும். ஸோ, அவன் நம்ம கிட்ட கேர்ஃபுல்லா இருப்பான். நம்ம கண்டிஷனுக்கு ஒத்து வருவான்."

'அடக்கடவுளே!' என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான் சம்பத்.

"தென்.. இந்த வீட்டு வேலை எல்லாம் என்னால செய்ய முடியாது. குக்கிங் வாஷிங் க்ளீனிங்னு எல்லாத்துக்கும் ஆள் இருந்துட்டா வெல் அண்ட் குட். இல்லேன்னா எனக்கொன்னும் கஷ்டம் இல்லை. அவன் தான் எல்லாம் செய்யணும். ஐ ஜஸ்ட் ஹேட் தீஸ் வொர்க்"

"ஷாப்பிங் பத்தி கேள்வி கேட்காத ஆளா இருக்கணும். என் செலவு என் உரிமை. வீட்டு செலவெல்லாம் அவன் தான் செய்யணும். என் சேலரிய எதிர்பார்க்கக் கூடாது"

"அதே மாதிரி அந்த ட்ரெஸ் போட்டுக்கோ.. இந்த ஃபுட் சாப்பிடுன்னு என்னைக் கன்ட்ரோல் பண்ணவே கூடாது"

"நான் வீட்டில ஒரே பொண்ணு. எங்க அம்மா அப்பா என்னைக் கஷ்டப் பட்டு படிக்க வச்சாங்க. அவங்க கடைசி வரைக்கும் என் கூட தான் இருப்பாங்க. அதையெல்லாம் அப்ஜெக்ட் பண்ணக் கூடாது"

என்ன ஒரு பாசம். ஆனால் அதே பாசம் பையனுக்கு இருக்கலாமா?? பதில் இதோ…

"பையன் கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா செல்லமா இருந்துட்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவைக் கேட்டுத் தான் செய்யணும்னு சொல்றதெல்லாம் கூடாது"

"நீ சொல்றதும் சரி தான் பா. அவங்க எல்லாம் தனியா இருக்கிறது தான் சரி. கூடவே அவங்களுக்கு ஏதாவது வருமானம் வந்தால் இன்னும் நல்லது."

"அதே போல அடிக்கடி ஃபோன் பண்ணி எங்க வீட்டு வழக்கம் இப்படி.. இந்த பண்டிகையை இப்படித் தான் கொண்டாடணும்னு டார்ச்சர் பண்ணக் கூடாது. குறிப்பா‌ புடவையைக் கட்டுன்னு சொன்னா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது"

"அப்புறம் இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. அதான் இந்த நாத்தனார் கோஷ்டி… அதைப் பத்தி யாரும் எதுவும் சொல்லலையே"

"அதெல்லாம் இல்லாமலே இருந்தால் ரொம்ப நல்லது. அப்படியும் இருந்துட்டா கல்யாணம் ஆகி கொஞ்சம் தூரமா இருந்துட்டா இரண்டு பேருக்கும் நல்லது"

"கரெக்டா சொல்றீங்க டீ.. இந்த மாமியார் மாமனார் நாத்தனார் இவங்க எல்லாம் இல்லாத பையனா வந்தால் ரொம்ப நல்லது"

அடுத்தது என்ன வரப்போகிறதோ என்று சம்பத் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "ஹேய் அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே.. " என்றாள் ஒருத்தி அவசரமாக.

"அதான் டி.. கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற கமிட்மென்ட்…"

"...."

"என்ன டீ இப்படி முழிக்கிறீங்க.. கல்யாணம்னா ஹஸ்பன்ட் அண்ட் வைஃப்கு இடையில வர ஃபிசிகல் ரிலேஷன்ஷிப்.. அது ஒரு கமிட்மென்ட் இல்லையா?" என்று அவள் விளக்கம் கொடுக்க, என்ன வரப் போகிறதோ என்று பயந்து போன சம்பத் யதேச்சையாக மணியைப் பார்த்தான். இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

அன்று மாலை காஃபிக்காக அவன் மீண்டும் காஃபிடேரியா சென்ற போது பெண்களிடையே காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்த முறை அங்கே இருந்த அனைவரும் திருமணம் ஆனவர்கள்.

வந்த வழியே திரும்பி விடலாமா என்று யோசித்தாலும் கால்கள் ஆட்டோமேட்டிக்காக அவர்களது பேச்சு காதில் விழும் இடமாகப் பார்த்து அமர்ந்தது. கூட்டுக் குடும்பமா? தனிக்குடித்தனமா என்பது பற்றிய விவாதம் போலும். தனிக்குடித்தனம் தான் என்ற எண்ணிக்கை பெரிதாக இருந்தாலும் கூட்டுக் குடும்பம் தான் என்ற தரப்பிலும் குறைந்தது மூன்று பேர் இருந்தனர்.

பரவாயில்லையே இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் பற்றிப் பேசும் பெண்களும் இருக்கிறார்களே என்ற ஆச்சரியம் அவனுக்குள். அவற்றைப் பற்றிய சில அரும் பெரும் விஷயங்களை அந்தப் பெண்களிடம் இருந்து தெரிந்து கொண்டான்.

இதோ அந்த விவாதத்தின் சாராம்சம்..

"என்னைக் கேட்டால் கூட்டு குடும்பம் தான் பெஸ்ட்னு சொல்லுவேன். வீட்டுப் பெரியவங்க பொறுப்பா வரவு செலவு கணக்குகளைப் பார்த்துப்பாங்க. சமையலறையில் நம் வேலை என்றாவது தான் வரும். ஜாலியா எங்கேயாவது போகலாம் என்றால் குழந்தைகளை வீட்டில் விட்டு நாம் போகலாம். குழந்தைகள் சேஃப்டியா இருக்கும். நமக்கும் நிம்மதி.

நம்ம செலவுக்குன்னு என கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும். இரண்டு பேரும் சம்பாதித்தால் சேவிங்ஸ் அதிகம். கூட்டுக்குடும்பத்தில ஆளுக்கொரு வேலையைப் பார்த்தால் நமக்கு பெரிய வேலை இருக்காது. நம்ம ரூம் நம்ம குழந்தைகள்னு பார்த்தால் போதும். நிறைய டைம் இருக்கும். குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லைன்னா வீட்டில் உள்ள பெரியவர்கள், மாமனார் மாமியார் பார்த்துக்கொள்வார்கள். கை வைத்தியம் செய்வார்கள் குடும்ப உறவுகளின் பாசம் ஆசை ஒற்றுமை எல்லாம் நம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் . நமக்கே உடம்பு சரியில்லாமல் போனால் நம்மளையும் கவனிச்சு நம்ம பிள்ளைகளையும் கவனிச்சுப்பாங்க.

சிஸ்டமேடிக் லைஃப் இருக்கும். கணவன்-மனைவிக்குள் சண்டை வராது, வந்தாலும் ஓடிடும். அப்படியே இழுத்தடிச்சாலும் பெரியவங்க தலையிட்டு ஏதாவது செய்வாங்க." கூட்டுக் குடும்பத்தின் வக்கீலாக மாறி ஒருத்தி மூச்சு விடாமல் வாதாடினாள்.

"நீ சொல்றதெல்லாம் சரி தான். நீ கூட்டுக் குடும்பத்தில இருந்து வந்ததால உனக்கு அதிலே உள்ள நல்லது மட்டும் தான் தெரியுது. ஆனால் சுயநலமாக இருக்கிற பெரியவங்க தான் இப்போ நிறைய இருக்காங்க. அதனால தனிக்குடித்தனம் போறது தான் எல்லாருக்கும் நல்லது. முதல்ல நமக்குத் தேவையான ப்ரைவசி தேவையான நேரத்தில கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில இதை எதிர்பார்க்கவே முடியாது. தனிக்குடித்தனம் பெஸ்ட். நம்ம வீடு, நம்ம ஹஸ்பன்ட் நம்ம பசங்கன்னு ஒரு சுறு சுறுப்பு வரும். நினைச்சா காலை மெதுவா எழுந்திருக்கலாம் கேட்க யார் இருக்காங்க, பிடிச்சா, முடிஞ்சா சமைக்கலாம் இல்லன்னா இருக்கவே இருக்கு ஸ்விகி ஜொமேடோ எல்லாம். பீட்சா,பர்கர் என ஸ்விகியில் ஆர்டர் செய்து நைட் சமைக்காமல் நெட்ப்ளிக்சில் மூவி பார்க்கலாம்.

நம்ம இஷ்டத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். ஏன் வெட்டி செலவுபண்றேன்னு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. வாரத்திற்கு ஒரு புடவை, சுரிதார்னு என வாங்கி போட்டுக்கலாம், அமேஸானில் எப்போ வேணும்னாலும் எதை வேணும்னாலும் ஆர்டர் பண்ணலாம்.

ஷார்ட் ஹாலிடே லாங் ஹாலிடேன்னு இன்ட்ரக்ஷன்ஸ் ட்ரிப்ஸ் கூட ப்ளான் பண்ணலாம்.

ஹஸ்பன்ட் கிட்ட இரண்டு நாள் சண்டை போட்டு பேசாமல் இருந்தால் அவனா வந்து சமாதானம் செய்வான், அதுவும் ஜாலி. நம்ம குழந்தைகளை நம்ம இஷ்டம் போல வளர்க்கலாம், செலவழிக்கலாம் யாரும் கேட்க முடியாது.

நினைச்சா அம்மா வீட்டுக்கு போகலாம். ஏன் போற என்ன விசேஷம் எத்தனை நாள் தங்குவேன்னு யாரும் கேட்க மாட்டாங்க.

எங்களுக்கு வீட்டுச் செலவு அதிகம்னு சொல்லி மாமானார் மாமியாருக்குப் பணம் கொடுக்காமல் தப்பிக்கலாம். நம்ம பேரன்ட்ஸூக்கு ஏதாவது தேவைன்னா ஈஸியாக செய்யலாம். அவங்க நம்ம வீட்டுக்கு வந்து எத்தனை நாள் வேணும்னாலும் இருக்கலாம். கூட்டுக் குடும்பத்தில இது நிச்சயமா முடியாது. மாமியார விட நம்ம அம்மா கிட்ட பசங்களை விடும் போது நாம பெட்டரா ஃபீல் பண்ணுவோம். இத்தனை பெனிஃபிட்ஸ் இருக்கு பாரு"

இன்னைக்கு இந்த ஷாக் போதும் என்று எழுந்து விட்டான் சம்பத். அன்று முதல் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அதிர்ச்சிகளைச் சந்தித்தான். அவை எல்லாவற்றையும் விட சக ஆண்களிடம் இருந்து அவன் கேட்ட விஷயங்கள் அவனை அவசியம் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேண்டுமா என்று யோசிக்க வைத்தது.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom