• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -19

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
தொட்டுத் தொடரும் -19
அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல்

கேளாதே அணிசேர் மார்வம்

என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே

முழுசாதே மோவா துச்சி

கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம்போல் முகமும் காணாது

எம்மானை யென்மகனை யிழந்திட்ட

இழிதகையே னிருக்கின் றேனே

(*தனது செய்கை குறித்து தாயின் துயரம்)



சென்னையின் அந்தப் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழக்கம் போல முதல் வரிசையில் ஸ்ரீவத்ஸன். அனைத்து வருடங்களையும் சிறப்பாகக் கடந்து, கோல்ட் மெடல் வாங்கும் மாணவன். அவனுக்கு அருகில் சரணும் ராகவியும், அடுத்தடுத்த ரேங்க் வாங்கி இருந்தார்கள்.

அவர்களது குடும்பத்தினர் அனைவரும் பார்வையாளர்கள் பகுதிகளில் இருந்தாலும், கிரிஜா அந்தக் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் என்ற முறையிலும், ராதா பல்கலைக் கழகத்தின் சார்பில் அந்தக் கல்லூரியின் பொறுப்பாளராகவும் இருந்ததால், இன்று பெற்றோர்களாக மட்டும் இன்றி, பட்டம் அளிப்பவர்களாகவும் மேடையில் அமர்ந்து இருந்தார்கள்.



கிருஷ்ணனும் ராகவனும் இதைப் பெருமிதத்துடன் பார்த்திருக்க வழக்கம் போல கௌசல்யா ஒரு வித இனம் புரியாத உணர்வுடன் பார்த்துக் கொண்டே இருந்தார். ஸ்ரீதரன் தற்போது டெல்லியில் இருந்ததால், எப்போதும் போல விழாவிற்கு கௌசல்யா மட்டுமே. கூடவே ஸ்ரீதரனின் பெற்றோர்.



ஸ்ரீவத்ஸன் மருத்துவம் பயிலும் காலத்தில், கௌசல்யா மொத்தமாகச் சிதைந்து போகாமல் இருந்ததில் இவர்களது பங்களிப்பு மிகவும் பெரியது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் மட்டும் இல்லையென்றால், கௌசல்யா இந்நேரம் ஏதோ ஒரு மனநல மருத்துவமனையில் ரெகுலர் விசிட்டராக இருந்திருக்கக் கூடுமோ? என்னவோ? அந்த வகையில் ஸ்ரீதரன் மனைவியின் மனநலனில் மறைமுக உதவியே செய்துள்ளார் போலும்.



தங்க மெடலை தலைமை விருந்தினரான, கவர்னரின் கைகளால் பெற்ற ஸ்ரீவத்ஸன், தனது மருத்துவப் பட்டத்தை ராதாவின் கைகளால் பெற்ற போது, பேரானந்தம் அடைந்தான். கடந்த ஆறு ஆண்டுகளாக அவன் ராதாவைத் தனது தாயினும் மேலாகப் பாவித்து இருந்ததால், இன்று அவரது கையால் பட்டம் என்பது அவனை உணர்ச்சி வசப்பட வைத்தது.



பேச்சு வராமல் திணறியவனைத் தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார், ராதா. தங்க மெடல் வாங்கிய மாணவன் என்ற முறையில் அவனது ஏற்புரை அனைவரின் மத்தியிலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே பல மாணவர்கள், மேற்படிப்பைத் தொடங்கி விட்ட நிலையில் இவனது நிலைப்பாடு என்ன என்பதை அனைவரும் அறிய ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏன் சரணும் ராகவியும் கூட நரம்பியலில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அடுத்த வாரம் நியுஸிலாந்து கிளம்புகிறார்கள். ஆனால், ஸ்ரீவத்ஸனின் விவரங்கள் இதுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.



ஆரம்பத்தில் ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தான். பிறகு, மைக்கைப் பிடித்த ஸ்ரீவத்ஸனின் வாயிலிருந்து அடுத்த சில நிமிடங்கள் பேச்சு அருவி போல் கொட்டியது.



“குட் ஈவினிங் எவ்ரிஒன். மருத்துவன் ஆகவேண்டும் என்பது எனது லட்சியம். ஆரம்பம் முதலே என் பெற்றோர் ஊக்குவித்தாலும், நான் இன்று இந்த மேடையில் நிற்க காரணம், என்னுடைய பதினைந்தாவது வயதில் எனக்கு கிடைத்த மூன்று நண்பர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தான்”



“அதுவரைக்கும் ஃப்ரண்ட்ஸே இல்லாத எனக்கு கிடைச்ச, என்னோட முதல் ஃப்ரண்ட் அபிமன்யு! பேருக்கேத்தது போல எதையும் சாதிச்சே தீருவான். துரத்தித் துரத்தி என்னை ஃப்ரண்ட் ஆக்கினான். காட் இஸ் கிரேட். அவன் இல்லேன்னா, என் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ தெரியாது”



“மை டியர் ஃப்ரண்ட்! ஐ மிஸ் யூ ஆன் திஸ் ஒகேஷன்! ஐ சின்சியர்லி டெடிகேட் திஸ் சக்ஸஸ் டு யூ!” என்றவன் பார்வையில் ராதா விழ, “இங்க அவனோட அம்மா, ராதாம்மா இருக்காங்க. ராதாம்மா வித் யுவர் பெர்மிஷன், கொஞ்ச நேரம் உங்களை நான் அபியா நினைச்சுக்கறேன்” என்றவன்,



தனக்கு அருகில் அமர்ந்து இருந்த ராதாவை எழுப்பித் தனது மெடலை அவருக்கு அணிவித்து, பட்டத்தை அவரது கைகளில் கொடுத்து, அவரது இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துத் தலைவைத்து வணங்கினான்.



அவனது செயலில் ஒரு நொடி அரங்கமே அமைதி காக்க, பின் பலத்த கரகோஷம் எழுந்து அடங்கியது. “வத்ஸன்! கன்ட்ரோல் யுவர் செல்ஃப் மை பாய்! யூ ஆர் எ டாக்டர் நௌ” என்று ராதா அவனை நிதானப் படுத்தி மைக் இருக்கும் திசையில் திருப்பினார்.



தொடர்ந்து பேசியவன், “அடுத்தது, சரண் & கவி எ ஸ்பெஷல் தாங்க்ஸ் டு போத் ஆஃப் யூ ஃப்ரண்ட்ஸ். இவங்கள பத்தி நான் இங்க சொல்லியே ஆகணும். யுஜி கோர்சே லண்டன்ல போய் பண்ணனும்னு ப்ளான் பண்ணினவங்க இவங்க”



“என்னால தான், எனக்காக மட்டும் தான், நான் எழுத முடியாத என்ட்ரன்ஸ் எல்லாம் அவங்களும் எழுதாமல், நம்ம ஊர்ல இல்லாத காலேஜான்னு என்னையும் சமாதானப் படுத்தி, சேர்ந்தே படிக்கலாம் என்று முடிவு பண்ணி, என் கூடவே இருந்து என்னை இங்க நிக்க வச்சி இருக்காங்க. தேங்க் யூ மை ஃபிரண்ட்ஸ். ஐ லவ் யூ”



“அடுத்து சொல்ல வேண்டிய ஆள், இவங்க எல்லாரும் எனக்கு ஃப்ரண்ட்ஸா கிடைக்க காரணமான, என்னோட முதல் ஃப்ரண்டான என் தங்கை ஸ்ரீநிதி. தங்கையா இல்லாமல், நிறைய நேரங்களில் எனக்கு அம்மாவா நடந்திருக்கா. ஐயாம் வெரி லக்கி டு ஹேவ் ஹெர் அஸ் மை ஸ்வீட் லிட்டில் ஸிஸ்டர்” என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டான்.



நன்றி நவிலல் படலத்தை முடித்து மேற்படிப்பை பற்றிப் பேச ஆரம்பித்தான். “எல்லோரும் நான் கார்டியாக் சர்ஜனா தான் வருவேன்னு சொன்னாங்க. நானும் சில காலம் முன்னடி வரை, அப்படித் தான் நினைச்சு இருந்தேன். ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்னு என் வாழ்க்கை எனக்கு கத்துக் கொடுத்து இருக்கு. அதனால் நான் மேற்படிப்பை அவை சார்ந்த துறைகளிலேயே தொடரப் போகிறேன்”



“பிறகு, நரம்பியல் மற்றும் மனநலம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களும், உதாசீனங்களும் தனிப்பட்ட ஒருவரது மன நலனை மட்டுமின்றி அவரது உடல் நலனையும் அவரைச் சார்ந்தவர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கண்டறிவதே எனது இப்போதைய குறிக்கோள்” என்று முடித்தான்.



சரணும் ராகவியும் கீழிருந்து “ஹேய் சூப்பர் ஸ்ரீ. வி லவ் யூ” என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எப்போதும் போல ராகவியின் குரல் ஓங்கி ஒலித்தாலும், அவர்களது கைகள் இரண்டும் இணைந்தே இருந்ததைப் பார்த்தவன், ஒரு புன்னகையைப் பதிலாக அளித்தான். அவர்களது பிணைப்பை அப்போதே அவன் புரிந்து கொண்டானோ?? அது போல கௌசல்யாவும் புரிந்து கொண்டிருந்தால், பல பிரச்சினைகளை வராமல் தடுத்திருக்கலாம்.



பலத்த கரவொலிகளுக்கிடையே, ஏதோ முன்ஜென்ம ஞாபகங்கள் போல் மடைதிறந்த வெள்ளமாகப் பேசியவன், தனக்குள் ஆச்சர்யப்பட்டவனாக அமைதியாக மேடையில் இருந்து இறங்கினான்.



அவனைப் பற்றித் தெரிந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்தப் பேச்சு, அவனது தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவன் மற்றவரைப் புகழ்வதில் இருந்த உண்மை புரிந்தாலும், மகனின் இன்றைய வெற்றிக்கு அவர்கள் மட்டும் தான் காரணமா என்று மனம் சுணங்கியது. (அம்மா கௌசல்யா! உங்களைப் பத்தி சொல்லாமல் விட்டானே என்று சந்தோஷப் படுறத விட்டு, இப்படி எல்லாம் கூட நினைப்பீங்களா நீங்க)



அதோடு நில்லாமல் ‘தனது நடவடிக்கைகள் காரணமாகத் தான் மகன் இந்த முடிவு எடுத்திருக்கிறானோ? அவன் ஏதாவது புரிந்து கொண்டானோ?’ என்று யோசனையில் ஆழ்ந்தார்.



அவனது முதல் பாதிப் பேச்சை ஏனோதானோ என்று கேட்டுக் கொண்டு இருந்தவர், மறுபாதியைக் கேட்ட போது யோசனைக்குச் சென்றார். ராதாவின் பேச்சுக்கள் காரணமாகத் தான் மகளும் அதே துறையில் படிப்பைத் தேர்வு செய்து இருக்கிறாள் என்று நினைத்து கொண்டு இருந்தது இப்போது நெருடியது. இதுவரை வித்தியாசமாகத் தோன்றாதது, இப்போது தோன்றியது.



கூடவே, மகனது பேச்சிற்கு உற்சாகமூட்டிய ராகவியைப் பார்த்தவர் மனதில் வேறு விதமான எண்ணங்கள் தோன்றியதில் தவறேதும் இருக்கவில்லை. சரண் குடும்பம் சிறு வயதிலிருந்தே பழக்கம் என்பதால், வேறுவிதமாக நினைக்கத் தோன்றவில்லை. மேலும், சரணது செல்வ நிலை, இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் என்பதால் நட்பைத் தாண்டிய உறவுக்கு சாத்தியமில்லை என்று உறுதியாக நம்பினார்.



இவற்றை எல்லாம் யோசித்த கௌசல்யா, தனது வாழ்வில் அடுத்த அபத்தத்தைச் செய்தார். விழா முடிந்து அனைவரும் குழுக்களாகப் பிரிந்து பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் நேராக ராதாவிடம் சென்ற கௌசல்யா எந்த விதமான முகமனும் இன்றி “உங்க பொண்ண என் பையனுக்கு தருவீங்களா?” என்று கேட்டார். மகனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று எல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.



உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்பது போல, இத்தனை வருடப் பழக்கத்தில் முதல் முறையாகத் தானாகப் பேச வந்த கௌசல்யாவை பார்த்து புன்னகைத்த ராதா, ஒரு கணம் அவரது கேள்வியின் பொருள் விளங்காமல் திகைத்தார். பொருள் விளங்கிய போதோ, அவரது முதல் கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்.



தாயறியாத சூல் உண்டோ? மேடையில் இருந்து ஸ்ரீவத்ஸன் கவனித்த இணைந்த கைகளை அதே மேடையில் அமர்ந்திருந்த, ராதா மட்டும் அல்ல கிரிஜாவும் கவனித்து ஓர் அர்த்தமுள்ள பார்வைப் பரிமாற்றத்தில் சம்பந்தமே பேசி முடிவெடுத்து விட்டனர். இதனை அவரவர் வீட்டுத் தலைவர்களின் கவனத்திற்கும் பார்வையாலேயே கடத்தி விட்டனர் என்பதைக் கௌசல்யா அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.



அவரது கையைப் பிடித்தபடி பேச ஆரம்பித்தவர் “கௌசி! எதுவும் நம்ம கையில இல்ல. பசங்க விருப்பம் தான் முக்கியம். வத்ஸனுக்கு கவிய விட நல்ல பொண்ணு அமைவாள்“ என்ற ராதாவின் சுருக்கமான பதில் ஏமாற்றத்தை அளித்தது. அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், அடுத்து கௌசல்யா செய்த செயல் அவரை மட்டும் அன்றி அவரது மகளின் வாழ்வையும் பாதாளத்தில் தள்ளியது
.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
197
கௌசல்யா கொஞ்சம் மாறிட்டான்னு நினைச்சா திரும்ப பிரச்னை யா 🙄🙄🙄🙄🙄
 

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
45
முழுசாதே மோவா துச்சி

கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம்போல் முகமும் காணாது
Nice
 
Top Bottom