• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -17

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
329
தொட்டுத் தொடரும் -17
களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும் திண் டோளும் தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த

இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே

(*தாயின் வருத்தங்கள்)



"டிப்ரஷன்ல இருக்கிறவங்க அதை அக்சப்ட் பண்றதே பெரிய விஷயம் இல்ல! அதிலும், இவங்க ட்ரீட்மெண்ட்டுக்கும் தானே வாலண்டீயர் பண்றது அமேசிங் இல்லையா? சைக்காலஜி ஃப்ரோபசர், நீங்க தான், இதைப் பத்தி சொல்லணும் மேடம்" என்று மேலும் பேச, பேசா மடந்தையாக அமர்ந்து இருந்தாள் ஸ்ரீநிதி.



"என்ன ஸ்ரீ ஒன்னும் பேச மாட்டேங்குற? என்ன பண்ணலாம்னு சொல்லு, அதே டாக்டர நாம போய் பார்ப்போமா?அவங்க கோ-ஆபரேட் பண்ணும் போதே யூஸ் பண்ணிக்கிறது பெட்டர் இல்லையா?" என்று பேசிக் கொண்டே சென்றவன்,



"வத்ஸனோட டிராவல் பிளான் எப்போ கன்பஃர்ம் ஆகும்? அது வரைக்கும் வெயிட் பண்ணலாமா? அவனுக்கு உங்க அம்மாவோட கேஸ் டீடெயில்ஸ் தெரிஞ்சா என்ன ஆகும்? எப்படி ஃபீல் பண்ணுவான்? அதுக்கு முன்னாடி நாம சொல்லிடறது பெட்டர் இல்லையா?" என்று அவளை பேசத் தூண்டினான்.



அவளோ 'எதற்கெடுத்தாலும் தாயைக் குறை சொல்லிக் கொண்டிருந்தோமே, ஏன் இப்படி இருக்கிறார் என்று வளர்ந்த பிறகும், ஏன் அவர் பெற்ற பிள்ளைகள் இருவருமே மனநலத்துறையைத் தொழிலாக அமைத்துக் கொண்ட போதும் கூட தாயைப் பற்றிச் சிந்திக்கவே இல்லையே' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.



"ஓ மை காட்! ஏன் ஸ்ரீ? இப்படி இருக்குமோ? ஒரு வேளை அடுத்த சிட்டிங்ல பார்க்க வேண்டிய டாக்டரே நம்ம வத்ஸன் தானோ? வெளியூர்ல இருந்து வர டாக்டர்னு சொல்லி இருக்காங்களே? வத்ஸனையும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கே?"

"ம்ச்.... கோபத்தில நானும் என்ன பேசறதுன்னு இல்லாமல் ரொம்பவே பேசிட்டேன் போல. அதான் இப்படி ஃபீல் பண்ணி சாரி எல்லாம் கேட்டு இருக்காங்க" என்றான் கடைசி பஞ்ச்சாக. (டேய் ஏன்டா இம்புட்டு நல்லவனா இருக்க)



அபிமன்யு கௌசல்யா சாதாரணமாக பேசி விட்டதில், ஏதோ மாற்றம் வந்து விடும் என்ற நம்பிக்கையில், பேசிக்கொண்டே இருக்க ஸ்ரீநிதி ஏதோ ஒரு உலகத்தில் தாயைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.



'சிறிய வயதில் இருந்தே தங்கள் வீட்டில் எல்லாமே காஸ்ட்லியான விஷயங்களாகவே இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அவர்களது குடும்பம் உயர் மத்திய தர குடும்பம் என்றாலும் உள்ளிருக்கும் வசதி வாய்ப்பையும் அவர்களின் தோற்றத்தையும் பார்த்தால் பணக்கார குடும்பம் போல தோன்றும்.'



'தந்தையின் வேலை காரணமாக ஊர் ஊராக சுற்றும் போது கூட எல்லாவற்றையும் சேர்ந்தே சுமந்து இருக்கிறார்கள். இது காரணமாகப் பலமுறை பிரச்சினைகள் வந்திருந்தாலும் தாய் பிரச்சினைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சாமான்களை அடுத்த ஊருக்கு மூட்டை கட்டி விடுவார். அவற்றில் விதம் விதமான கலைப் பொருட்களைப் பார்த்து வியந்திருக்கிறாள். தாயிடம் அவற்றைப் பற்றிக் கேட்டு உதையும் வாங்கி இருக்கிறாள்'



'இது ஒரு சேம்பிள் தான். கௌசல்யா எல்லோரையும் போல இல்லை என்பதற்கு இது போல பல உதாரணங்கள் நடந்து கொண்டே இருந்திருக்கின்றன ஆனால் கூடவே இருந்தவர்களுக்கு தான் தெரியவில்லை அல்லது தெரிந்தும் புரியவில்லை, புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது இப்படி எடுத்துக் கொள்ளலாமா? அது அவரது தான் என்ற அகம்பாவம், உடன்பிறந்தவர்கள் முன்னிலையில் தனது பணக்காரத் தனத்தை, நானும் நன்றாக இருக்கிறேன் பாருங்கள் என்பதைக் காட்டுவதற்காக இப்படி செய்கிறார், அவரது இயல்பே அப்படித்தான் என்ற முத்திரை குத்தி ஒதுக்கி விட்டோமா?'



ஸ்ரீநிதி இவ்வாறான யோசனைகளில் இருக்க அபிமன்யு அவளை நிகழ்காலத்துக்குக் கொண்டுவரச் செய்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. தந்தையின் சிரமத்தை உணர்ந்த மக்கள் அவனுக்கு உதவ தூக்கத்திலிருந்து விழித்தார்கள். அவனது இளவரசி ஒரு அருமையான ராகம் பாடித் தாயை பூலோகத்திற்கு நொடியில் அழைத்து வந்தாள்.



அவர்களின் பசியை ஆற்றி மறுபடியும் சிந்தனை வசம் சென்ற ஸ்ரீநிதியை அபிமன்யு சமாதானப்படுத்தி படுக்கவைத்தான் "ஸ்ரீ, பழசெல்லாம் விடு. இப்போ ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்லதே நடக்கும்னு நினைச்சிட்டு தூங்குற வழிய பாரு. ரொம்ப லேட் ஆயிடுச்சு. பேசாமல் படு" என்று அவனும் தூங்க முயற்சி செய்தான்.



அவனது மொபைல் போன் மீண்டும் அலறி அபிமன்யுவைத் தூங்கவிடாமல் செய்தது. அழைப்பது ஸ்ரீவத்ஸன் என்று தெரிந்ததும் "அட நம்ம மச்சான். ஆயுசு நூறு அவனுக்கு" என்று குஷியாகி எழுந்து அமர்ந்தான்.



அவன் மச்சானை அழைத்த வேகத்தில், உறங்கி விடலாமா இல்லை விளையாடி பெற்றவர்களைத் தூங்க விடாமல் செய்யலாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்த அவனது அருமை மகள், சரி இவர்கள் இப்போதைக்கு தூங்கப் போவதில்லை நாமும் விளையாடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.



அடுத்த அரை மணி நேரம் மாப்பிள்ளையும் மச்சானும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீநிதியையும் கவனிக்கவே இல்லை. மச்சானுடன் பேசி முடித்தவன்,



"ஒரு பிக் ரிலீஃப் ஸ்ரீ. வத்ஸன் டிராவல் பிளான் கன்பஃர்ம் ஆயிடுச்சாம். இன்னும் மூணு நாளில் இங்கே இருப்பான். டிரான்ஸிட் டீடெயில்ஸ் மட்டும் கிளியரா தெரியலையாம். கிளம்பற முன்னாடி இன்ஃபார்ம் பண்றேன்னு சொன்னான். இது வரைக்கும் அத்தையோட டீடெயில்ஸ் எதுவும் அவனுக்கு தெரியாதது மாதிரி தான் இருக்கு. அப்போ அந்த டாக்டர் அவன் இல்லையோ?" என்று ஸ்ரீநிதியைப் பார்க்க, அவளோ அவனைப் பார்வையால் எரித்துக் கொண்டு இருந்தாள். ஏனென்று பார்வையில் கேட்க "ஹலோ! அவன் என் அண்ணன். அது ஞாபகம் இருக்கா? நானும் மொபைலை இப்போ தருவ, அப்போ தருவன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தா அரைமணி நேரம் கழிச்சு கூட என் கிட்ட கொடுக்காமலே கட் பண்ணியாச்சு. அவனும் என்னை கேட்கவே இல்லை. நிதி ரொம்ப கோபமா இருக்கா" என்று திரும்பிக் கொண்டாள்.



"அப்பாடா! ஐயாம் வெரி வெரி ஹேப்பி. இன்னிக்கு தான் நாம இரண்டு பேருமே ஒரு நார்மல் ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் மாதிரி பிஹேவ் பண்ணி இருக்கோம். இத்தனை நாளும் நான் ஏதோ உனக்கு கிடைச்ச வரம்கிற மாதிரி என்னை ட்ரீட் பண்ணுவ, நானும் பாதி நாள் உன்னை பாவமாத் தான் பாத்து இருக்கேன். இன்னிக்கு, இப்போ, இந்த நிமிஷம், இந்த செகண்ட் ஐயாம் ஆன் க்லௌட் நைன் யூ நோ" என்றவன்



"ஸ்ரீ, நான் இங்க இருக்கேன்னு அவனுக்கு எப்படித் தெரியும் அதுதான் அவன் உங்கிட்ட பேசனும்னு கேட்கல. நானும் சொல்லலை. என்னிக்காவது உன்னை இந்த நேரத்தில டிஸ்டர்ப் பண்ணி இருக்கானா? மார்னிங் கண்டிப்பா கூப்பிடுவான். இப்ப தூங்கினால் தான் அவன் காலை நீ அட்டென்ட் பண்ண முடியும். எப்படி வசதி?" என்றபடி படுத்தவன், அப்போது தான் தன்னைப் பார்த்து விழிகளை விரித்து மயக்கும் புன்னகையுடன் கைகால்களை வேகமாக ஆட்டிய மகளைக் கண்டான்.



"அடடே! என் செல்லக் குட்டி முழிச்சு இருக்காங்களே! இன்னிக்கு அப்பா கூட தான் தூங்க போறாங்க. வாடா! வாடா! ராஜாத்தி! வா! வா" என்று குழந்தையை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டு படுத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் தந்தையும் மகளும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றனர்.



இருவரையும் பார்த்துப் பொறாமையில் பொங்கிக் கொண்டு இருந்த ஸ்ரீநிதியும் சற்று நேரத்தில் தன்னை அறியாமல் கண்ணயர்ந்தாள்.



அதே வீட்டில் வெவ்வேறு அறைகளில் இருந்த ஸ்ரீதரனும் கௌசல்யா இருவரும் கூட உறங்கி இருந்தனர். அபிமன்யு பாலில் கலந்து கொடுத்த தூக்க மாத்திரையின் உதவியுடனும், அதே அபிமன்யுவிடம் சில விஷயங்கள் பேசி விட்ட திருப்தியில் கௌசல்யாவும் அன்றைய நாளின் அழுத்தங்களை மறந்து உறக்கத்தின் பிடியில் இருந்தார்கள்.



ஜான் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின், பால்டிமோர். நியூரோ சைக்கியாட்ரி துறையில் பெயர் பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று. கடந்த நான்கு வருடங்களாகத் தனது வாழ்வின் ஓர் அங்கமாகிப் போன இடத்தை ஓர் முறை கண்களால் வலம் வந்தான் ஸ்ரீவத்ஸன்.



தாய் நாடு திரும்பும் எண்ணம் சில மாதங்களாக வலுப்பெற, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இதோ கிளம்பும் நேரம் வந்தே விட்டது. எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்ற வாழ்த்துக்களோடு அவனுக்கு விடை கொடுக்கத் தயாரானது அவனது லட்சிய மருத்துவ உலகம்.



இதை விட முக்கியமான கடமை ஒன்று அவனுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறது, இனியும் காலம் தாழ்த்துவது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று அவனது உள்மனம் அவனுக்குச் சில காலமாக விடாமல் உணர்த்தியதால் சட்டென்று முடிவு எடுத்து விட்டான்



"எக்ஸ்யூஸ் மீ டாக்டர்?" என்றவாறு 'டாக்டர். ஸ்ரீவத்ஸன் ஸ்ரீதரன்'' என்ற போர்டு இருந்த அறைக்குள் நுழைந்த ஜெனிஃபர், கடந்த சில வருடங்களாக ஸ்ரீவத்ஸனது ஜூனியராக அவனது ஆராய்ச்சிகளில் உடன் இருந்தவள்.



சில ஃபைல்களை மேசை மேல் வைத்து விட்டு "தீஸ் ஆர் தி டீடெயில்ஸ் ஆஃப் தி அப்பாயின்ட்மென்ட்ஸ் வெயிட்டிங் ஃபார் யூ இன் இண்டியா. தி சீஃப் வான்ட் யூ டு பி இன் ஹிஸ் சேம்பர் பிஃபோர் லீவிங். சேஃப் ஜர்னி டாக்டர். கீப் இன் டச்" என்று அவனுக்குக் கை கொடுத்து வெளியேறினாள்.



வத்ஸனுக்கு தெரிய வேண்டாம் என்று கௌசல்யா நினைத்து வேறு மருத்துவரைப் பார்த்து இருந்தாலும், காலம் வேறு தீர்மானங்கள் வைத்திருந்தது போலும். அவரது விவரங்கள் அடங்கிய ஃபைல், உலகின் அடுத்த மூலையில் பிரிண்ட் எடுக்கப் பட்டு, தாய் மண்ணில் காலெடுத்து வைத்ததும் வத்ஸனின் அப்பாயின்ட்மென்ட் வேண்டிய முக்கிய கேஸ்களில் ஒன்றாக அவன் கைகளில் சேர்க்கப் பட்டுவிட்டதோ?



"தேங்க்ஸ் சோ மச் மிஸ்.ஜெனி" என்று ஒரு புன்னகையோடு அந்த ஃபைல்களை வாங்கிய ஸ்ரீவத்ஸன் அவற்றைத் தனது ப்ரீஃப்கேஸில் வைத்தான். எப்போதும் விமானப் பயணங்களின் போது, இது போன்ற ஃபைல்களைப் படித்து விவரம் தெரிந்து கொள்வது அவனது வழக்கம். இப்போதும் அதே எண்ணத்தில் தான், அந்த ஃபைல்களை எல்லாம் கேபின் பேக்கேஜில் வைத்தான்.



அவற்றில் முதலாவது ஃபைல் அவனது தாயின் வரலாற்றைச் சொல்வது என்பதை அறிந்தால் என்ன செய்வான்?? வழியில் அதைப் படித்து விடுவானா?? அப்படிப் படித்தால் அவனது நிலை எவ்வாறு இருக்கும்?? ஒரு வேளை அவனுக்கு ஏற்கனவே தாயைப் பற்றிய விவரங்கள் தெரியுமோ??
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom