உளுந்து பொங்கல்
உளுந்து, வெந்தயம், தேங்காய் எண்ணெய் போன்றவை பல்வேறு பயன்களை உடலுக்கு தரக் கூடியவை...உளுந்து ஒரு முழுமையான உணவு என்று எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம்..வெந்தயம் நமது உணவு பழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைந்த அளவே உள்ளது.. இப்போதைய உணவு பழக்கத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது...
இவை எல்லாவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.( பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது) . இன்றைய ரெசிபி இவற்றை எல்லாம் கலந்து செய்தது... எங்கள் வீட்டில் ஞாயிறு காலை உணவாக பெரும்பாலும் இருப்பது இது தான்....
தேவையான பொருட்கள்:
முழு உளுந்து – 1/2 கப்
பச்சரிசி -1 கப்
தேங்காய் (துருவியது) – 1/4 கப்
வெந்தயம் – 4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். வெந்தயம், அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும்:
1.உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.
2. துருவிய தேங்காயை போட்டு கிளறவும்
3. கடைசியாக தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறவும்
தேங்காய் துவையலுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசிக்கு ருசியும் ஆச்சு.. சத்தான
உணவும் ஆச்சு..

Author: SudhaSri
Article Title: உளுந்து பொங்கல்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.