- Joined
- Jun 17, 2024
- Messages
- 23
உளமார நேசிக்கிறேன்! 3
தன் மனிதர்களுடன் ஒட்டவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் மனமின்றி, உஷாவைத் தன் வீட்டுப் பெண்களிடம் தனியே விடத் தயங்கி, வெளியில் நிற்கும் ஆண்களை நெருங்கத் தைரியம் இல்லாத பாலாஜி மனைவியுடன் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான்.
அந்தக் கனமான சூழலிலும், இந்த முரணான தம்பதியின் அந்தரங்கம் குறித்தான கற்பனையும் குறுகுறுப்பும் எல்லோரிடமும் இருந்தது. ஆனாலும், எத்தனை நேரம்தான் அவர்களையே கூர்வது?
பாலாஜி தம்பதியின் வருகை தந்த அதிர்வு நீங்கி, முன்பிருந்த பதட்டமும் விசாரமும் கூடக் குறைந்ததில் பேச்சு வேறுபுறம் திரும்பியது.
சுந்தரி “ஏம்மா, ஆபரஷன் ஆன கொஞ்ச நாளைக்காவது ரமணன் படுத்துக்க ஒரு கட்டில் வேண்டாமா, தரைல உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்துக்க முடியுமா?” என அடுத்த பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாள்.
உண்மைதான். அவர்கள் வீட்டில் ஃபர்னிச்சர் என்றால், வசுந்தராவின் திருமணத்திற்குத் தந்த இரண்டு மணைப் பலகைகள், ஒரு தலைக்குயரம் (சிறிய சற்றே உயரமான பலகை. மதிய நேரத்தில் தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்வர்) , ஒரு காலுக்குப் பதில் செங்கல் வைக்கப்பட்டு அரிசி டின், உப்பு வைக்கும் கல்சட்டி, மாங்காய் ஜாடி என வைத்திருக்கும் மூன்றடி நீள ஒல்லி பெஞ்ச் ஒன்று, மரத்தாலான இரண்டு பழைய மடக்கு நாற்காலிகள் மற்றும் ஜெயாவைப் பெண் பார்க்க வந்தபோது வாங்கிய கலர் கலரான பிளாஸ்டிக் பட்டை நாடாவால் ஆன இரண்டு நாற்காலிகள், அதுவுமே மடக்கும் வகைதான்.
சாவித்திரியின் கட்டளைப்படி நாலரை வருஷங்கள் கடந்தும் கும்பகோணத்தில் பைக், கார், லாரிகளுக்கான டயர் ஷோ ரூம் வைத்திருக்கும் பணக்கார பிஸினஸ் மாப்பிள்ளை வந்தால் உட்காருவதற்கெனப் பழைய வேட்டியில் பாதுகாக்கப்பட்டு, குட்டை மர பீரோவின் தலையில் அமர்ந்துள்ளது.
இதில் சுந்தரிக்கு ‘ஏன், அவர் மட்டும்தான் இந்தாத்து மாப்பிள்ளையா?’ என ஏக வருத்தம்.
ஜெயாவைப் பெண் பார்த்துவிட்டுச் சென்றதும் விரித்துக் கிடந்த புதிய நாற்காலிகளில் ஏறி நின்ற குழந்தைகளைக் கண்ட சாவித்ரி, உடனடியாக அவர்களின் முதுகில் இரண்டு போட்டு பாதுகாப்பு நடவடிக்கையை அமல் படுத்தினார். அதற்கு எதுவும் சொல்லாத ரமணன், அதன் பிறகு அதைத் திரும்பியும் பார்த்ததில்லை.
பணம் செலவழித்து வாங்கி வந்த ரமணன், அதன் பலத்தை சோதிக்கக் கூட அதில் அமர்ந்து பார்த்ததில்லை என்பதை என்றாவது அவர்கள் உணர்வார்களா என்றும் தெரியாது.
அத்தை “சாவித்ரி, அங்க இருக்கறதே ஒட்ட சாணுக்கு ஒரு ரூம். கட்டில் வாங்கினா அந்தக் கூடத்துலதான் போடணும். நீயே சொல்லு, இன்னும் ரெண்டு குடித்தனம் இருக்கற இடத்துல, ஒரு ஆம்பளை நடுக்கூடத்துல படுத்துண்டு கிடந்தா நன்னாவா இருக்கும்?”
‘கிடந்தா…வா?’
வசுந்தரா விலுக்கென நிமிர்ந்த வேகத்தில், ஹேமா தன் அம்மாவை இடிப்பதும், சற்றே துணுக்குற்ற அத்தையின் அலட்சியமும், நாத்தனாரின் பேச்சு பிடிக்காத சாவித்திரியின் வருத்தமான முகமும் கண்ணில் பட்டது.
அதற்குள் பாலாஜி “அதென்ன கிடந்தா… “என எகிறிக் கொண்டு வந்தான்.
ஹேமா பாலாஜியிடம் “உன்னை யாரும் எதுவும் கேட்கலை”
உஷா “பாலா, தேவையா உனக்கு, பேசாம இரேன்”
வசுந்தரா “ நீங்க சொல்றதும் சரிதான் அத்தை. ஒரு ஆம்பளை எப்படி நடுக்கூடத்துல படுத்துக்க முடியும்? இதுவே ஒரு பொம்பளையா இருந்தா, பகல்லயே கூட ஆத்துக்காரர் மடில படுத்துக்கலாம், சரிதானே ஹேமா?”
ஹேமா முகத்தாலேயே தாளித்துக் கொட்ட, அத்தை “சின்னஞ் சிறிசுன்னா அப்படித்தான் முன்னப் பின்ன இருப்பா” என்றாள் முனகலாக.
‘என்னை விட மூணரை வயசு பெரியவ சின்னஞ்சிறுசா?’
ரமணனும் வசுந்தராவும் தங்களை விடச் சிறியவர்கள் என்று சங்கர், ஹேமா இங்கு வரும்போதெல்லாம் இருக்கும் ஒரு அறையை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தாலும்,
‘ரூம் சின்னதா இருக்கு, புழுங்கறது, மூச்சு முட்டறது குழந்தை அழறான்’ என நூறு காரணங்களை அடுக்கி, பிடிவாதமாகக் கூடத்தில் படுக்கைப் போடும் ஹேமா, யார் குறித்த கவலையும் இன்றி கணவனின் தோளில் தலை வைத்துப் படுத்துக் கொள்வதும், சில நேரம் பகலிலேயே சங்கரின் மடியில் தலை வைத்துப் படுப்பதும்…
காலையில் வெளிச்சம் வந்த பின்பும், இருவரும் மெலிதாக அணைத்தபடி உறங்குவதைப் பார்க்கும் மாடிவீட்டு நாராயணனின் நக்கல் சிரிப்பும், நடுவுள்ளில் குடி இருக்கும் வேம்புப் பாட்டி ‘கருமம், கருமம்’ என்று தலையில் அடித்துக் கொள்வதும் வாடிக்கையாக நடப்பது.
சாவித்ரி ஜாடை மாடையாகவும், நேரிடையாகவும் சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. ரமணகுமார் “இவன் ஏன்டீ இப்படி ஆயிட்டான்?” என்ற முணுமுணுப்போடு, ஒன்று அவர்கள் எழும்வரை அறைக்குள்ளேயே இருப்பான். அல்லது திண்ணைக்கு ஓடிவிடுவான்.
ஹேமா, அவனுக்குமே அத்தை பெண்தான் என்பதால்
வசுந்தரா, கணவனிடம் “சான்ஸை மிஸ் பண்ணிட்டமேன்னு வருத்தமா இருக்கான்னா?” என்று கேட்டு, வெறுப்பேற்றி அவன் முறைப்பை வாங்கிக் கட்டிக் கொள்வாள்.
மெய்யாகவே, வீட்டினருக்கு ஹேமாவை ரமணகுமாருக்குதான் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இவளின் கேலியில் ரமணன் இன்னும் இறுகுவான்.
சும்மா சொல்லக் கூடாது, ரமணகுமாரைப் போலவே, அவனது பெற்றோர், அத்தை, உடன் பிறந்தோர் என எல்லோருமே ஒட்டிக்கொள்ளும் சிவப்பு. ஒரே ஜாடை.
பிள்ளைகள் ஐவருமே
புகைப்படத்தில் சிரிக்கும் ரமணனின் தந்தையின் சாயல்தான். என்ன ஒன்று, சுந்தரியும் ரமணனும்தான் நல்ல உயரம். மற்ற மூவரும் சராசரிதான்.
இதில் வியப்பு என்னவெனில், சுற்றிவர ஏதோ சொந்தம் என்பதால், சாவித்ரிக்குமே கிட்டத்தட்ட அதே முகவெட்டுதான். உயரம் குறைவென்றாலும் அறுபத்தியோரு வயதிலும் கட்டுக் குலையாமல்தான் இருக்கிறார்.
தான் கேட்டால் சாவித்ரியால் தன்னை, தன் பெண்ணை மறுக்கவா முடியும் என்ற எண்ணத்தில் இருந்த அத்தையும் அவள் கணவரும் ரமணனை சிறந்த, சுலபமான இலக்காக நினைத்தனர்.
பெரிய பின்னணி இல்லையே தவிர, பதினெட்டு வயதிலேயே பேங்க் உத்தியோகம். தன் தம்பியைப் போன்றே அழகு, நிறம், வாட்ட சாட்டமான தோற்றம். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. வெட்டி செலவிற்கு அர்த்தமே தெரியாது. குடும்பத்தின் மீதான ஒட்டுதல். பதினாலு வயது முதலே அத்தனை பொறுப்பு.
அத்தை பெண்ணாக இருப்பதாலேயோ என்னவோ, வனை விட ஐந்து வயது சிறிய ஹேமாவிடம் தலையசைப்பும் ஓரிரு வார்த்தைகளும் மட்டுமே என்ற பண்பு என மாப்பிள்ளையாக வரப் போகிறவனுக்குத் தேவையான சகல கல்யாண குணங்களும் நிறைந்த
மருமானிடம் அத்தைக்குப் பிடித்ததும் பிடிக்காததும் அவனது பொறுப்புதான்.
கல்யாணம் ஆன பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனிக்குடித்தனம் வைத்து, சாவித்ரிக்கு மாதம் இவ்வளவென்று பணத்தை மட்டும் தந்தால் போதும் என்று பிடியை இறுக்க நினைத்தார் அத்தை.
ஹேமாவிற்குப் பியூசி முடித்ததுமே டெலிஃபோன் ஆபரேட்டர் வேலை கிடைத்து, மெட்றாஸில் போஸ்டிங் வந்தது.
மகளுக்குத் தகுந்த வயது வரக் காத்திருந்தவருக்கு அவளது படிப்பும் வேலையும் சேர, மகளின் தகுதி உயர்ந்ததில், ரமணகுமாரை காத்திருப்புப் பட்டியலில் போட்டார்.
இதனிடையே சத்தமின்றி டிப்ளமா படித்து முடித்த சங்கருக்கு மதறாஸ் ரிஃபைனரீஸில் வேலை கிடைத்தது.
அம்மாவை அடியொற்றி ஹேமாவும் ரமணகுமாரின் குணத்தையும் தோற்றத்தையும் தாண்டி, சங்கரின் இதர தகுதிகளுக்கே ஓட்டுப் போட, அவன் வேலையில் சேர்ந்த கொஞ்ச காலத்திற்குள் ‘கண்டேன் மாப்பிள்ளையை’ என வந்து நின்றனர்.
நாத்தனாரின் குணத்திற்கும் வசதிக்கும் தன் பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுப்பாள் என்றே எதிர்பாராத சாவித்ரி, ரமணனை மனதில் நினைத்துப் பேச, அவரோ மூத்தவனை ஒதுக்கி, சங்கரைக் கேட்டது பேரதிர்ச்சி.
‘நல்லவேளையா அவன் இருக்கும்போது கேட்காம போனாளே’ எனப் பெருமூச்செறிந்தார் அன்னை.
பட்டும் படாமலும் “அக்கா, உங்களுக்குத் தெரியாததா, ரமணன் ஜாதகத்தையே இன்னும் எடுக்கல. சங்கர் சின்னவன். கலந்து பேசிட்டு சொல்றேன்” என்ற சாவித்ரி, ஊரிலிருந்து மகள் சுந்தரியை வரவழைத்து
‘எம் புள்ளைக்கு என்னடீ குறைச்சல், அப்படி அவனை ஒதுக்கிட்டு இவ பொண்ணை மாட்டுப் பொண்ணா ஆக்கிக்கணும்னு என்ன முடை கேக்கறேன்?’ எனப் புலம்பினார்.
அவ்வளவாக படிப்பு ஏறாமல், பத்தாவதில் கோட் அடித்த ஜெயா ஹேமாவின் மீது ஏற்பட்ட பொறாமையில் அம்மாவை ஆதரிக்க, சுந்தரி வேறு சொன்னாள்.
“தப்பென்னம்மா, ரெண்டு பேரும் சம்பாதிச்சா நல்லதுதானே, சங்கருக்கு வர அதிர்ஷ்டத்தை நாம கெடுப்பானேன்?”
“...”
“அத்தையை விடு, நீ சொல்லேன், இப்ப நீ வரன் பார்த்தா, ஜெயாவை யாருக்குத் தருவ, ரமணனா, சங்கரா?”
சாவித்ரிக்கு மூத்தவனை எண்ணி மனது உறுத்தினாலும், சங்கர் போன்ற வரனுக்குதான் பெண்ணைக் கொடுப்பேன் என உண்மையை ஒத்துக் கொண்டார்.
அடுத்த மாத இறுதியில் சுதந்திர தினத்தோடு சேர்ந்து மூன்று நாள் விடுமுறையில் வந்த சங்கரிடம் சாவித்ரிக்கு முன்பே ஜெயா செய்தியை முந்தித் தந்ததில், படிப்பும், வேலையும், வசதியும், வாளிப்பான அழகும் நிறைந்த ஹேமாவின் நினைவில் சங்கரின் முகம் விகசித்தது.
சொல்லி வைத்தது போல் சுந்தரியும் வந்து சேர, கூடிக் கூடிப் பேசினர். சனிக்கிழமை மதியம் வங்கியிலிருந்து திரும்பி, உணவுக்குப் பின் உறங்க முற்பட்ட ரமணகுமார், இரண்டு நாட்களாகவே தன்னைச் சுற்றி எல்லோரும் எதையோ ரகசியமாகப் பேசுவதை உணர்ந்தாலும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.
தாயும் தமக்கையும் நீண்ட, பலத்த ஆலோசனைக்குப் பின் மாலை காஃபியோடு அத்தையின் ஆசையை ரமணனிடம் பிரஸ்தாபித்தனர்.
பட்டென்று அடுத்த நொடியே “நல்ல விஷயம்தானே, சங்கரைக் கேட்டியாம்மா?” என்றவனின் மனதில் இருந்தது என்னவென்று அவன் மட்டுமே அறிவான். குறுகுறுவென்று தன்னையே பார்த்தவர்களிடம் சிக்காது “ஒரு வேலையா திருவையாறு வரை போகப்போறேன்”என்று கிளம்பிவிட்டான்.
நடைமுறையில் இது தவறில்லை எனினும், தன் மகள், மகள் வயிற்றுப் பேத்தி என்று பாரபட்சம் பார்க்காது ரமணனுக்காக நின்றது பாட்டி ராஜம் மட்டுமே.
“இங்க பாரு சாவித்ரி, எம்பொண்ணுதான். அவளை எனக்கு நன்னா தெரியும். தனக்குன்னா ஒன்னு, பிறத்தையார்க்குன்னா ஒன்னுன்னு யோசிக்கறவ. ஏன், ரமணன்தான் மூத்தவன், அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு அவளுக்குத் தெரியாதா?”
“...”
“போகட்டும், ஹேமாக்கும் சங்கருக்கும் முடிச்சு போட்டுருந்தா நடக்கட்டும். ஆனா ரமணன் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம். முதல்ல அவனுக்குப் பொண் பாக்கற வேலையைச் செய். கல்யாணம் பண்ணிண்டு, அண்ணா, மன்னியா தம்பி கல்யாணத்துல மணைல உட்காரட்டும்”
சுந்தரி “அது வரைக்கும் அத்தை…”
“அப்படிப் போனா போகட்டும். ஏன், ஹேமாவை விட்டா சங்கருக்கு வேற பொண்ணே கிடைக்காதா?” என்ற பாட்டி, அதே சூட்டோடு பேரனின் ஜாதகத்தைப் பார்க்கத் தொடங்கி விட்டார்.
“இப்ப என்னத்துக்கு பாட்டி, ஜெயா கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பார்க்கலாம்” என்றான் ரமணன்.
“ரமணா, உன்னைவிட பத்து வயசு சின்னவ ஜெயா. யார் வாழ்க்கையும் யாராலயும் நிக்காது, நிக்கவும் கூடாது. இப்பவே இருபத்தேழு வயசாச்சு. நான் சொல்றதைக் கேளு” என அடக்கிவிட்டார்.
கல்யாணம் என்ற பேச்சு தொடங்கிய மூன்றாம் மாதமே ரமணனுக்கு வசுந்தராவுடன் திருமணமே முடிந்து விட்டது.
ரமணகுமாருக்கும் வசுந்தராவுக்கும் திருமணம் முடிந்த கையோடே அத்தை வீட்டிலிருந்து சம்பந்தம் பேச வந்து விட்டனர்.
மகளுக்கு அத்தனை இணக்கமான, வளமான வாழ்க்கை அமைய வேண்டுமென ஆசைப்படும் அத்தை, அவர் மகனுடன் வாழ வந்த பெண்ணுக்கு அதைத் தரவில்லை என்பது அந்தப் பெண் பழகிய விதத்திலிருந்தே தெரிந்தது.
சங்கர், ஹேமாவின் திருமணம்…
“ஏன்டீ சுந்தரி, சங்கருக்கும் ஹேமாவுக்கும் ஒன்னரை வயசுதான் வித்தியாசம் இல்லையோ?”
“ஆமா சித்தி, ஹேமாவை முதல்ல ரமணனுக்குதான் பண்ணிக்கறதா இருந்தது. பாவம், அவன் தலையெழுத்து… எல்லாம் மாறிபோச்சு. விடு சித்தி, எங்க சங்கருக்கு எப்போதுமே அதிர்ஷ்டம்தான். அதுசரி, யார் தாலிய யார் கட்ட முடியும்?”
மணமகன் அறைக்குள் கல்யாணப் பெண்ணிற்கான கூரைப் புடவை, தாலிக்கொடி, மெட்டி, மற்ற சிறு நகைகள் எல்லாம் ராஜம் பாட்டியிடம் இருந்தது. அதை எடுத்துச் செல்ல வந்த வசுந்தரா பெரிய நாத்தனார் சுந்தரி, மீனாக்ஷி சித்தியிடம் பேசுவதைக் கேட்டு அசையாமல் நின்றுவிட்டாள்.
தன்னை சுதாரித்துக்கொண்டு, கல்யாணக் கூட்டத்தில் கணவனைத் தேட, அவனே அவளைத் தேடி வந்தான்.
“ஏய், இப்டி மசமசன்னு நின்னா… கூரை, தாலியெல்லாம் எங்க, சீக்கிரமா கொண்டு வா, நேரமாறது பாரு”
“...”
பத்தொன்பது வயது வசுந்தராவிற்குப் பெரிய வசதிகள், கனவு போல வாழ்க்கை, கொஞ்சிக் குலவும் கணவன் என இல்லாவிட்டாலும், ரமணகுமாரின் கம்பீரமும் கண் நிறைந்த அழகும், நிதானித்த பேச்சும், இருவருக்குமான பிரத்யேகக் தருணங்களில், பயமுறுத்தாத அவனது மென் வேகமும் கணவன் மீது தனி பிரேமையைத் தந்திருந்தது.
இப்போது நாத்தனார் கூறியதே மண்டைக்குள் சுழல, கணவனின் முகத்தில் வருத்தமோ, ஏமாற்றமோ இழப்போ தெரிகிறதா என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் வசுந்தரா.
“எல்லாரும் பாக்கற இடத்துல எதிர நின்னு எம் மூஞ்சில என்னத்தைடீ தேடற, ஓதிக் குடுக்கணும். வேகமா நட” என்றவனின் வேகத்திற்கு வசுந்தரா ஓட வேண்டி இருந்தது.
கல்யாணமான ஐந்தாறு மாதங்களிலேயே, தங்கள் மகளின் பொறுப்பும், மாப்பிள்ளைக்கு ஈடுகொடுப்பதும், இந்தத் திருமணத்தில் அவளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும், அவள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் கண்டு வசுந்தராவின் பெற்றோர் பூரித்தனர் என்றால், அதே காரணங்களுக்காக சுந்தரியும் நாகராஜனும் பொசுங்கினர்.
திருவாரூரில் இருந்த நாகராஜனின் தங்கையை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற அர்த்தமில்லா கோபத்தில், இருவரும் வந்ததே, சத்திரத்திற்குக் கிளம்பும் முன்னர்தான்.
பாட்டிக்கும், அம்மாவுக்கும் திருமண வேலைகள் கழுத்து வரை இருக்கும், ரமணனும் புதிதாகக் கல்யாணம் ஆனவன் , வசுந்தரா சிறுபெண் என எதையும் பொருட்படுத்தாது, கோடை விடுமுறைக்குக் குழந்தைகளை அனுப்பிய சுந்தரி, வழக்கமாகத் தானும் வந்து டேரா போடுபவள் இந்த முறை தான் வராது, கணவனின் தாளத்திற்கு நடனமாடினாள்.
வீட்டில் இருப்பவர்களிடம்தானே வேலை சொல்ல முடியும்? பாட்டியும், அம்மாவும் திருமணத்திற்கு முன்பான சடங்குகளுக்குத் தேவையானவை, கோடையில் செய்யக்கூடிய ஊறுகாய், வடகம், ஜவுளி, தாலி, கூரை என ஏற்பாடு செய்தனர்.
ரமணகுமாரும் வசுந்தராவும் பத்திரிகை கொடுத்து அழைக்கச் சென்றதை ஜெயா ரசிக்கவில்லை. ரமணனே சொல்லியும், “அழைக்கற முறைன்னு ஒண்ணு இருக்குடா” என்ற பாட்டி ஜெயாவை அனுப்ப மறுத்துவிட்டார்.
ஆரம்பம் முதலே, மண்டபத்திற்கு எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள் அனைத்தையும் எடுத்து வைத்து வேலை செய்த வசுந்தராவிடமிருந்து பிடுங்கி சுந்தரியிடம் தரும் சிந்தனையோ அவகாசமோ யாருக்கும் இல்லை.
அக்கா, தங்கையின் ஆதங்கமும், கோபமும் தெரியாமல் கணவனும் மனைவியும் தங்கள் போக்கில் கடமையாற்ற, போகிற போக்கில் வசுந்தராவைக் குழப்பி இருந்தாள் சுந்தரி.
ரமணனின் சுபாவத்தால் ஓரளவிற்கு மேல் சகஜமாக அவனிடம் நெருங்க முடியாத வசுந்தரா, அவனது இயல்பே அதுதானா, அல்லது முகமூடியா, எல்லாரிடமும் அப்படியா இல்லை தன்னிடம் மட்டுமா என மாற்றி மாற்றி யோசித்தவளுக்கு, அவனது இறுக்கத்திற்குக் காரணம் ஹேமாதான் எனத் தோன்றியதில், பார்வையால் கணவனைத் தொடர்ந்தாள்.
முஹுர்த்தம் முடிந்து, மணமக்களை இவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்து, மாலையில் நலங்கு பிறகு வரவேற்பு என, கண்ணில் படும் நேரமெல்லாம் கணவனைக் கண் அவனாகக் கண்டவளைக் கண்டு கொண்டான்.
வரவேற்பில் கூட்டம் கொஞ்சம் குறைந்ததும், வீட்டிற்குச் சென்று இவர்களது அறையை புது தம்பதிக்கென அலங்கரிக்க வந்த ஆளுடன் புறப்பட்ட ரமணகுமார் வசுந்தராவைத் தன்னோடு சாப்பிட அழைக்க, தடுமாறினாள்.
அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று “ நானும் அவளும் பூக்காரரோட போறோம்” என்றான் ரமணன்.
சுந்தரி “இது நம்ம ரமணன்தானான்னு நன்னா பார்த்துக்கோம்மா” என்று கழுத்தை வெட்டினாள்.
ரமணன் முதலில் நாகராஜனை அழைக்க, “வேஷ்டியில் ஜரிகை போதவில்லை, தாலி முடிய வாங்கித் தந்த புடவை தரமாக இல்லை, சத்திரத்தில் கொசு அதிகம், குளிக்க வெந்நீர் இல்லை’ என ஒரு முழத்துக்குப் புகார் படித்தவர், தானும் வர மறுத்து சுந்தரியையும் தடுத்துவிட்டார்.
மகளின் குறிப்பில் சாவித்ரி குழம்பி நிற்க, ராஜம் பாட்டிதான் “சாந்தி கல்யாணத்துக்கு ஜோடிக்க பெரியவ நீயே போகலைன்னா, ஜெயாவையும் பால்ஜகயையுமா அனுப்ப முடியும்? நேரமாறது, நீ கிளம்புடா ரமணா, வசு, நீயும்தான்” என விரட்டினார்.
அறையில் இருந்த சாமான்களை ஒதுக்கி, பூ அலங்காரம் செய்பவருக்கு வழி விட்டு இருவரும் வெளியில் வர, ரமணன் முற்றத்து மேடையில் அமர்ந்து கொண்டான்.
மற்ற இரண்டு குடித்தனக் காரர்களும் கல்யாண மண்டபத்தில் இருக்க (சமாராதனையில் இருந்தே இங்கேதான் சாப்பாடு!) வீட்டில் இவர்கள் மட்டுமே.
பட்டுப்புடவை கசகசக்கவே, வசுந்தரா குளித்துவிட்டு வந்தாள்.
பூக்காரர் “வேலை முடிஞ்சுது ஸார், கட்டில் போடணுமா?”
“இல்லங்க, நான் வரேன்” என்ற ரமணன், புத்தம் புதிய ஜமக்காளங்கள், மெத்தைகளை விரித்து, தலையணையை அடுக்கி, போர்வையை வைக்க, பூக்காரர் அதிலும் பூவால் கோலம் போட்டார்.
வசுந்தரா, பாட்டி தந்த குறிப்புகளின் படி ஆரத்தி கரைத்து வைத்தாள். படுக்கை, தலையணைகளுக்குக் குங்குமம் தடவினாள். இனிப்பு, பழங்கள், வெற்றிலை பாக்கை தாம்பாளத்தில் அடுக்கி வைத்து, கொண்டு வந்த பாலைக் காய்ச்சியவளுக்குத் தான் ஏதோ பெரிய மாமியாகி விட்ட உணர்வு.
கூடவே, அதற்கு முற்றிலும் மாறாக, அவர்களுடையதாக அவள் நினைத்த அறையின் அலங்காரம் குறுகுறுப்பையும் கூச்சத்தையும் தர, வெளியே எட்டிப் பார்த்தாள். ரமணன் பூக்காரரை அனுப்புவது தெரிந்தது.
இனி மண்டபத்திலிருந்து சங்கரும் ஹேமாவும் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். யாருக்காக இருந்தாலும், அந்த இரவுக்கான சூழல் தந்த கூச்சத்தில், கேஸ் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, சமையலறையிலேயே நின்று கொண்டாள்.
பாலா அல்லது திரட்டுப்பாலா,
அரை லிட்டர் பாலை எத்தனை நேரம்தான் காய்ச்சுவது?
மெதுவே வெளியே வர, ரமணன் கூடத்தில், இந்தக் கல்யாணத்தை முன்னிட்டு போடப்பட்ட ட்யூப்லைட்டின் கீழ் அமர்ந்து ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். வசுந்தரா வாசலுக்கு நழுவப் பார்க்க, நிமிராமலே “இங்க வா” என்றான். வந்தாள்.
“சொல்லு”
“என்ன?”
“ம்ப்ச், என்னைக் கேட்டா, நாள் முழுக்க கண்ணாலயே என்னைத் துரத்தினது நீ… அதுவும். கல்யாணத்துக்கு வந்தவாளோட கவனத்தை ஈர்க்கற அளவுக்கு…”
“???”
தான் பேசிய வேகத்தில் தமிழ் அர்த்தமாகாமல் நின்றிருந்தவளிடம் எழுந்து வந்து, புருவங்களால் ‘என்ன?’ என்றான்.
அவன் இன்னும் நெருங்க, எதிரே இருந்த அறையின் அலங்காரமும், மல்லி, மரிக்கொழுந்து, ஊதுபத்தி வாசனையும், வீடெங்கும் பரவிய ஏலக்காய், பச்சை கற்பூரம் பொடித்துப் போட்டுக் குறுகக் காய்ச்சிய பசுப்பாலின் மணமும், கணவனின் அண்மையும் கிறக்க, எந்நேரமும் யாரும் வரலாம் எனப் பதறிய வசுந்தரா, எங்கே, அதற்குள் வந்துவிடுவார்களோ என்று ஏங்கவும் செய்தாள்.
ரமணன் “என்னைப் பத்தி யாரு என்ன சொன்னா?”
“...”
பின்னால் இருந்த ஸ்விட்ச் போர்டில் குழல் விளக்கின் விசையை அணைத்தவன், சரக்கென வசுந்தராவைத் தன்னோடு அணைத்திருந்தான்.
“ஹ்..க்…” - திமிறித் திணறினாள்.
“அசையாம நில்லுடீ, கேட் திறந்தா சத்தம் கேட்கும். அதோட சைக்கிள் ரிக்ஷாலதான் வருவா”
“!!!”
“ஹேமாவை எனக்குத் தரேன்னு யாரும் சொல்லலை. கேட்டாலும் வேணாம்னுதான் சொல்லி இருப்பேன். எல்லாருக்கும் நான் பொறுப்பா இருக்கறது புடிச்ச அளவுக்கு, எனக்கு இருக்கற பொறுப்புகள் புடிச்சதில்லை”
“...”
“நான் தேவதாஸும் இல்லை, எனக்கு தாடி வளர்ந்துடுத்தா, நான் நாய் வளர்க்கறேனான்னு நீ உத்து உத்து பாக்க வேண்டிய அவசியமும் இல்லை, புரிஞ்சுதா?”
சைக்கிள் ரிக்ஷாக்களின் மணியும், தொடர்ந்து வாசல் கேட்டின் நாதாங்கி திறக்கப்படுவதும், கதவின் ‘க்ரீச்’ சும், காலடியோசையும் சளசளவென்ற பேச்சும், நிகழ்வின் நினைவுகள் தந்த கேலியும் வெட்கமும் சீண்டலும் சிரிப்பும் வயது பேதமின்றி ஒலிக்க, ரமணன் “ஆரத்தி கொண்டு வா” எனச் சத்தமாகச் சொன்னபடி வந்தவர்களை வரவேற்கச் சென்றான்.
கடந்த ஏழு மாதங்களில் முதன் முறையாகக் கணவனை இத்தனை இயல்பாக, மனதுக்கு நெருக்கமாக உணர்ந்த வசுந்தரா, ஓரிரு நிமிடங்கள் நிதானித்தபின், ஆரத்தியுடன் வெளியே சென்றாள்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்து, கண்களை மூடி அசையாது இருந்தவள், அதன் கனம் தாஙாகாது அப்படியே படுக்கையில் சாயவும், பயந்து போன சாவித்ரி “வசு, வசு உனக்கு என்னடீ பண்றது?”
“எனக்கு ஒண்ணும் இல்லம்மா”
பாலாஜி “மன்னி, கட்டில் மட்டுமாவது நான் வாங்கிண்டு வந்து போடறேனே”
அத்தை “அந்த ஒண்டுக் குடித்தன வீட்டுல காலை நீட்டிப் படுத்துக்கக் கூட ரமணனுக்கு இடமில்லையேன்னு ஒரு ஆதங்கத்துல சொன்னேன், எனக்கேன் பொல்லாப்பு. நீ இங்க வந்து கஷ்டப்படாதம்மான்னு ஹேமா அப்பவே சொன்னா. வந்ததுமில்லாம வாங்கியும் கட்டிண்டேன்”
பாலாஜி “வார்த்தையை விட்டு வாங்கிக் கண்டிண்டேன்னு சொல்லு”
“தம்பி புள்ளையாச்சேன்னு அக்கறைல ஒரு வார்த்தை சொன்னேன். என்னைப் பேச உனக்கென்னடா தகுதி இருக்கு, நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை உள்ள விட்டதே தப்பு”
ஹேமா, பாலாஜியிடம் “முதல்ல ரெண்டு பேரும் வெளில போங்கோ, அவுட்” என்று கத்தினாள்.
வசுந்தரா “ஷ்… யாரும் பேச வேண்டாம். அது அவர் வீடு. அவருக்கு எங்க இஷ்டமோ, எங்க வசதியோ அங்க இருப்பார். கட்டிலை எங்க போடறதுன்னும் அவரே முடிவு பண்ணுவார். தயவு செஞ்சு எல்லாரும் அமைதியா இருங்கோ” என்றதில் உடனடி மௌனம் சூழ்ந்தது.

Author: VedhaVishal
Article Title: உளமார நேசிக்கிறேன்! 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.