உருகியோடும் 10
10. தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கல்!
முகம் நிறைய சோர்வோடும் கையில் மருந்துகள் நிரமுபிய பையுடனும் வீட்டில் நுழைந்தவளைப் பார்த்து, சுப்பம்மாள், “என்னடி ஆச்சு! மாத்திரையும் கையுமா வர்ற?” என்றார் பதறியடித்து.
சித்ரா அன்று காலையில் மாமியார் வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப் போயிருந்தாள். மாலை தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள். “டயர்டா காய்ச்சல் வர்ற மாதிரி இருந்துச்சுமா.. பீரியட்ஸ் வேற அதான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தேன். சத்து மாத்திரை கொடுத்திருக்காங்க.. வேற ஒன்னும் இல்ல” என்றான்
பீரியட்ஸ் வந்துருச்சு என்ற அவள் சொன்னதிலேயே சுப்பம்மாளுக்கு அவர் மனதை உறுத்திக் கொண்டிருந்த பெரும் கவலை அகன்றது போலிருந்தது. கணவரின் புகைப்படத்தைப் பார்த்து நன்றி சொல்லிக் கொண்டார்.
சித்ராவுக்குத் தான் ஊரில் உள்ள அனைத்துக் கடவுள்களும் பழக்கம். சுப்பம்மாளுக்கு இறந்து போன தன் கணவர் மட்டுமே தெய்வம்.
அம்மா கொடுத்த காபியை குடித்துவிட்டு அன்று கம்பெனியில் நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்ல, “என்னடி இப்படி பேசிட்டு வந்து நிக்கிற? நாம இருக்கிற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா? அகலக் கால் வைக்கிறியோனு இருக்கு. உங்க அத்தை கிட்ட அனுமதி வாங்க வேண்டாமா? அவங்க பையன் தப்பு செஞ்சதால அவங்க நம்மகிட்ட நல்லபடியா நடந்துக்கிறாங்க.. அவங்களுக்கு ஆதரவா இருக்க வேண்டியது தான்.. அதுக்காக ரொம்பவும் தொந்தரவு கொடுக்கக் கூடாதுல்ல?” என்றார். சத்தியபாமாவுடன் சித்ரா இவ்வளவு நெருக்கமாக இருப்பது சரிதானா என்பது குறித்து சுப்பம்மாளுக்கு அடிமனதில் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது.
இன்றைய காலகட்டத்தில் யாருடைய அன்பையும் நாம் அப்படித்தான் எடைபோட்டுப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்களா அல்லது எதிர்பார்ப்பற்ற அன்பு வைத்திருக்கிறார்களா என்பதை ரொம்பவே யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சத்யபாமா மிகவும் நல்ல குணம் படைத்தவர் தான். சமீப காலத்தில் இப்படி ஒரு குணத்தை வேறு யாரிடமும் பார்த்ததாக சுப்பம்மாளுக்கு நினைவில்லை.
தன்னையே சுற்றிக் கொண்டிருந்த மகள் நடுவில் திடீரென ஒருவன் மேல் காதல் விழுந்து திருமணம் செய்து கொண்டதையே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இப்பொழுது அத்தனைக்கு உரித்தான அன்பை மாமியாருக்கும் சேர்ந்துக் கொடுப்பதில் பாசம் பங்கு போடப்பட்டுவிட்டது என்பது போல் ஒரு லேசான பொறாமை, யாரிடமும் சொல்ல முடியாமல் ஒரு சின்ன வருத்தம். இவள் இந்த அம்மாவுடனே ரொம்பவும் நெருக்கமாக இருந்தால் அடுத்து எப்படி அவளுக்கு வேறு திருமணம் செய்து வைப்பது என்ற ஒரு கவலை வேறு.
முதல் வாழ்க்கை சரியில்லை என்று வந்துவிட்டால் வேறொரு திருமணம் செய்து வைத்து விட வேண்டும், முதல் திருமணத்துடைய தொடர்பே இருக்கக் கூடாது என்பதுதான் அவர் அடி மனதின் விருப்பம். இருந்தாலும் சத்தியபாமாவின் நல்ல குணத்தை அன்பையும் அவரால் அசட்டை செய்ய முடியவில்லை. இவரும் ஒரு சில உதவிகள் பெற்றுக் கொண்டுதான் இருந்தார். அவருக்கென உணவு சமைத்துக் கொடுத்து விடுவதையும் தொடர்ந்து வந்தார். அன்று இளைய மகள், ‘அம்மா கணக்குப் பாடம் கஷ்டமா இருக்கு, ஏதாவது டியூஷன் கிளாஸ்ல சேர்த்துவிடேன்’ என்று சொல்லிக் கேட்ட போது கூட,
“நமக்கு எதுக்கும்மா டியூஷன் எல்லாம்? அவ்வளவு வசதி நம்மகிட்ட இருக்கா என்ன? முடிஞ்சதைப் படி” என்று சொன்னார். சித்ரா தான், “எங்க அத்தை வேலை பாக்குறாங்களே.. அந்த டியூஷன் சென்டர்ல கேட்டுப் பார்க்கலாம் என்றாள். ஒரு வார்த்தை விசாரித்ததற்கு சத்தியபாமா அடுத்த நாளே, “தங்கச்சியை வரச் சொல்லும்மா பீஸ் எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. டீச்சர் எல்லாம் நமக்குத் தெரிஞ்ச பிள்ளைங்க தான்.. நான் பார்க்க வளர்ந்த பிள்ளைங்க. பூபதியோட தங்கச்சிங்க ரெண்டு பேரு, அவங்களோட ஃப்ரண்ட்ஸ் மூணு பேரு.. இவங்க தான் டியூஷன் எடுக்குறாங்க” என்று சொல்லியிருந்தார். அவரது ஏற்பாட்டில் தான் சித்ராவின் தங்கை இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கும், ‘எங்க மிஸ், எங்க டியூஷன்’ என்று ஏகப்பட்ட திருப்தி.
இதெல்லாம் கூட சரி தான், இப்போது உரிமைப்பட்டவள் போல் மகள் சத்தியபாமாவுடைய வீட்டில் வைத்து புதிதாக தையல் இயந்திரங்கள் வைத்து தொழில் நடத்துவது கொஞ்சம் அதிகமாகப் பட்டது சுப்பம்மாளுக்கு.
“அன்னைக்கு பேங்குக்குப் போனப்ப அத்தை தான் சொன்னாங்கம்மா.. லோன் எதுவும் போட்டு சொந்தத் தொழில் வைக்கலாம், எத்தனை நாளைக்கு இப்படி சம்பளத்துக்கே வேலை பாப்ப.. நம்ம ஏரியாவுல தைக்கிறதுக்கு ஆள் குறைவுதான். யாரும் சரியான நேரத்துக்குக் கொடுக்க மாட்டேங்கிறாங்க.. கூலியும் அதிகம். நீ வந்தா நல்ல பிக்கப் ஆயிடும்னு சொன்னாங்கமா”
“அதெல்லாம் இருக்கட்டும் சித்ரா.. அங்கேயே இருந்தேன்னா உனக்கு இன்னொரு கல்யாணம் காட்சி எல்லாம் பண்ணிப் பார்க்க வேண்டாமா? நீ வாழ்ந்ததெல்லாம் ஒரு வாழ்க்கையா? மாமியார் வீட்டோடயே நீ இருந்தா அடுத்து மாப்ள யாரும் ஒன்னு கேட்டு வருவாங்களா..? ஒருவேளை அந்தப் பையன் திரும்பி வருவான்னு நினைக்கிறியா?”
இல்லை என்று தலையசைத்தாள் சித்ரா. இதற்கு மேல் எதிர்மறையாக எதுவும் சொல்லாதே என்பது போல் அவளது பார்வை அம்மாவை கெஞ்சியது
“சரி.. என்னவோ போ.. அதையும் முயற்சி பண்ணுவோம்.. உன் பேச்சுக்கு தலையாட்டியே நான் பழகிட்டேன்”
வாழ்க்கைக் களத்தில் பெண்ணைப் பெற்றவர்களுக்குத் தான் தடுத்து ஆடும் மனப்பான்மை இருக்கும் போல.. பையனைப் பெற்றதாலோ, அல்லது இப்போது ஒற்றை ஆளாக இருப்பதாலோ, சத்தியபாமா அடித்து ஆடும் மனப்பான்மையில் இருந்தார். சித்ரா அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர் வேகவேகமாகத் திட்டமிட்டார்.
“உங்க ஃபேக்டரிக்கு ஒரு தடவை வந்து நான் பார்க்கிறேன்.. எவ்வளவு இடம் வேணும், என்ன ஏதுன்னு அதுக்குத் தகுந்தாப்ல இடத்தை ரெடி பண்ணிடலாம்” என்றார்.
அதன்பின் யாருக்கும் காத்திருக்காமல் நாட்கள் ஓட, சித்ராவின் யூனிட் உட்பட ஐந்து புதிய யூனிட்டுகள் நகரில் ஆங்காங்கே உதயமாகின. அனைத்தையும் முதலாளி ரவீந்திரனே வந்து திறந்து வைத்தார். இவர்களது யூனிட்டில் அருகிலிருந்த காலிமனையில் கொட்டகை போடுவது, மின்சார வசதி செய்வது என்று எல்லா வேலைகளையும் சத்தியபாமா பார்த்துக் கொண்டார். முதல் நாளில் மிஷின்கள் எல்லாம் லாரியில் வந்து இறங்கின. கூடவே தைக்க வேண்டிய துணிகளும், பிற பொருட்களும் வந்தன. மாட்டிக் கொடுக்கும் ஆட்கள் கடகடவென்று ஒவ்வொரு யூனிட்டுக்கும் பயணித்து இயந்திரங்கள் சரியாக ஓடும் வரை பரிசோதனை செய்து பார்த்து விட்டுச் சென்றனர்.
மணிமேகலைக்கு ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்து மூன்று யூனிட்டுகளுக்கு மேலாளராக இருக்கும் பொறுப்பையும், பழைய கம்பெனியுடன் வரவு செலவை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் கொடுத்தார் முதலாளி. சூப்பர்வைசர் நிலைக்கு சித்ராவை உயர்த்தி அவளுக்குக் கீழ் இன்னும் பத்து தையற்கலைஞர்களை வைத்துக் கொள்ளலாம் என்றார். ஏற்கனவே அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களில் ஆறு பேரின் வீடும் சத்யபாமாவின் வீட்டுப் பக்கம் தான் என்பதால் அங்கே வந்து பணியில் இணைந்தனர்.
இன்னும் புதிதாக நான்கு பேர் வேண்டும். அக்கம் பக்கத்தில் சொல்லி வைத்திருந்தாள் சித்ரா. சத்யபாமா மறுநாள் காலையில் நான்கு பெண்களை அழைத்து வந்தார்.
“சித்ரா உன்கிட்ட ஒரு உதவி கேட்கிறேன், செய்வியாம்மா”
“என்ன அத்தை! இப்படி கேட்டுட்டீங்க? நீங்கதானே எனக்கு உதவுறீங்க.. உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” சித்ராவின் குரலில் பதட்டம்.
“இவங்க நாலு பேருக்கும் தையல் ஓரளவு தெரியும். கொஞ்சம் முயற்சி எடுத்தா இன்னும் நல்லா கத்துக்குவாங்க.. இவங்களுக்கு வேலை கொடும்மா” என்றார்
“அதுக்கு என்ன அத்த.. தாராளமா வரட்டும்.. நாங்களே ஆள் வேணும்னு தானே தேடிக்கிட்டு இருக்கோம்..”
“சரி தான்மா.. ஆனா இவங்க எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவிச்சவங்க…”
அதிர்ச்சி நிரம்பிய கண்களுடன் அவர்கள் புறம் திரும்பினாள் சித்ரா. அவர்களைப் பார்த்தால் சாதாரணப் பெண்மணிகள் போலவே இருந்தார்கள். அனைவருக்கும் எப்படியும் வயது முப்பதிலிருந்து ஐம்பதுக்குள்ளே இருக்கும்.
“நான் ஜெயில்ல இருந்தது ஒரு வாரம் தான்.. ஆனால் இவங்க எல்லாம் எனக்கு முன்னாடியே இருந்தாங்க. எனக்கு பூபதி உதவி செஞ்ச மாதிரி இவங்களுக்கு உதவி செய்ய ஆள் இல்லை.. பூபதி எனக்கு சொன்ன வக்கீலைய்யா நல்லவரு.. பொய் வழக்குப் போட்டு பாதிக்கப் பட்டவங்க நிறைய பேருக்கு கம்மி ஃபீஸ் வாங்கிக்கிட்டு காப்பாத்தி விட்டிருக்காரு.. இதுல ரெண்டு பேருக்கு ஜாமீன் வாங்கித் தந்தாரு.. இன்னும் ரெண்டு பேருக்கு கேஸ் நடந்துகிட்டு இருக்குது, அதையும் அந்த வக்கீல் தான் நடத்துறாரு.. இதோ இவங்க நாலு பேரும் முன்னாடி வீட்டு வேலைக்கும் வயல் வேலைக்கும் போய்க்கிட்டு இருந்தாங்க.. ஜெயிலுக்குப் போயிட்டு வந்த உடனே அந்த வீடுகளில் வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்.. நான் தான் மருமக இருக்கா, தையல் சரியா வரலைன்னாலும் மடிக்கிறதுக்கு, லேபிள் பண்ண, பேக் பண்ண, ஏதாவது வேலை குடுத்தாப் போதும். முதல் கட்டமா ரெண்டு மூணு மாசத்துக்கு வேலை பார்த்துட்டாங்கன்னா அதுக்கப்புறம் வேற நிறுவனங்கள்ல கூட கேட்டுப் பாக்கலாம்.. வீட்டை விட்டு வெளியே வரவே ரொம்ப யோசிச்சாங்க. என்னை மாதிரியே இவங்களுக்கும் ஜெயிலு, கோர்ட்டு, கேஸ் எல்லாம் புதுசு தான். நான் மனசைக் கல்லாக்கிட்டு இயல்பு வாழ்க்கைக்கு வந்துட்டேன்”
“அக்கா, நீங்க இரும்பு மனுஷிக்கா. உங்கள பார்த்து தான் எங்களுக்கும் போராடனும்னு தோணுச்சு” என்றார் வந்தவர்களில் ஒரு பெண்.
அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரிக்கும் சண்டை. பக்கத்து வீட்டுக்காரியின் வீட்டில் பணம் காணாமல் போனதாகவும், இவள் தான் திருடி விட்டதாகவும் சொல்லி கைது செய்யப்பட்டவள். தான் அந்தப் பணத்தை எடுக்கவே இல்லை என்று சத்தியம் செய்த போது யாரும் நம்பவில்லை. அதன்பின் வேறு சில திருட்டு வழக்குகளை இவர் மேல் சேர்த்துப் பதிந்திருக்கிறது காவல்துறை. போராடி வெளியே வந்திருக்கிறாள். மற்றவர்களுக்கும் அதே போல் தான் நிலைமை. இன்னொருவர் வேலை பார்த்த வீட்டில் அதே மாதிரி பொருள் களவு போய்விட்டது, வேலைக்காரி தான் காரணம் என்று நினைத்து விட்டார்கள். மூன்றாவது பெண், ஒரு இடத்திற்கு இந்தப் பணத்தைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வா என்று தெரிந்தவர் சொல்ல நம்பிக்கையோடு சென்றாள். போலீசார் கைது செய்த பின்பு தான் தெரிந்தது, தான் கொண்டு போன பையில் தேர்தலுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் இருந்தது என்று.
நல்ல வக்கீல் யாராவது கொஞ்சம் முயன்றாலே ஸ்டேஷன் பெயில் அல்லது மேஜிஸ்ட்ரேட்டின் தனிப்பட்ட பெயிலில் விட்டிருக்க முடியும். போதுமான விபரம் இல்லாததால் வாரக்கணக்கில் அவர்கள் ஜெயிலில் இருக்குமாறு நடந்தது. அப்படிப் பார்க்கையில் சத்தியபாமா தான் அதிர்ஷ்டசாலி. அவர் சிறைக்குப் போனதும் வந்ததும் ஊரில் அநேகமானவர்களுக்குத் தெரியாது.
அனைத்து யூனிட்டுகளும் வெற்றிகரமாக செயல்படத் துவங்கின. சூப்பர்வைசர்கள் முடிந்த மட்டும் அலைந்து வேலையை எளிமையாக்கினார்கள். தன் ஊழியர்கள் மேல் நம்பிக்கை வைத்து வேலையைப் பகிர்ந்து கொடுத்த முதலாளி ரவீந்திரனுக்கு ஆர்டர்கள் வழக்கத்தைவிட அதிகமாகவே வந்தன. மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில், வழக்கமாக கம்பெனியில் வாங்கி வந்த ஊதியத்தை விட தனித்தனியாகப் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம் அதிகமாகவே கிடைத்தது.
முதலாளியும் பல பணிகளை புதிய யூனிட்டுகளுக்குப் பிரித்துக் கொடுத்து அவர்களின் பொறுப்பை அதிகரித்தார். இதுவரை கம்பெனியில் இருந்து ஒரு வாகனம் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பயணித்து துணி, நூல் உள்ளிட்ட பொருட்களை கொடுத்துச் செல்லும். இனிமேல் நீங்களே தெரிந்த வாகனம் ஒன்றை அமர்த்திக் கொள்ளுங்கள் என்றார் முதலாளி. சத்தியபாமா தான், “பூபதி! நீயே அந்த வேலையைச் செய்யலாமே, முடிஞ்ச அளவு உன்னோட ஆட்டோலயே சாமான்களை ஏத்திட்டு வா, இல்லனா சொல்லு.. செகண்ட் ஹாண்டில் ஒரு லோடு ஆட்டோ வாங்கிடுவோம்” என்றார். வெகுவாகத் தயங்கிய பூபதியைச் சமாதானம் செய்து, லோடு ஆட்டோவை வாங்க வைத்தார் சத்தியபாமா. தன்னுடைய பயணிகள் ஆட்டோவையும், இந்த சரக்கு ஆட்டோவையும் மாறி மாறி ஓட்டினான் பூபதி. தேவையெனில் வேறு ஓட்டுனர்களைப் பயன்படுத்திக் கொண்டான்.
தையலிலோ, துணி தயாரிப்பிலோ லேசாகப் பழுதடைந்த ‘டேமேஜ்ட்’ நைட்டிகளைக் குறைந்த விலைக்கு சில்லரை வியாபாரிகள் வாங்கிப் போவது வழக்கம். வியாபாரிகளிடம் ஒப்படைப்பதற்கும், கணக்குப் பார்த்து பணம் வசூலிப்பதற்கும் சரியான ஆட்கள் இல்லை. அதனால் தையல் யூனிட்டுகள் நடத்தும் பெண்களையே விரும்பினால் நீங்களே வாங்கி விற்பனை செய்து கொள்ளுங்கள் என்றார் முதலாளி. ஒவ்வொரு யூனிட்டிலும் பல பெண்கள் இருந்ததால் அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விற்றனர். அதுவே அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்தது. சத்திய சுபா கார்மெண்ட்ஸ் என்று சிறிய துணிக்கடையை வீட்டின் முகப்பில் திறந்து சுப்பம்மாள் அதில் கல்லாவில் அமர்ந்தார். ஓவியம் மற்றும் கலையில் ஆர்வமுடைய சித்ராவின் தம்பி பள்ளி விட்டு வந்து மாலை நேரங்களில் நைட்டியில் வெட்டியது போக மீதமான விதவிதமான துணிகளை வைத்து சிறுவர்களுக்கான கவுன், இரவாடை போன்ற சிறிய உடைகளை அழகாக வடிவமைத்தான். அவற்றுக்கும் அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு இருந்தது. மொத்தத்தில் சித்ராவின் யோசனையாலும், அதன் பின் அதை விட்டுவிடாத கடின உழைப்பாலும் பலரின் வாழ்க்கைத் தரம் விறுவிறுவென உயர்ந்தது. கையில் காசு புழங்க ஆரம்பித்தவுடன், தீராது என்று நினைத்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கும் பிறந்தது.
சித்ரா சத்தியபாமாவின் மூலம் வேலைக்கு சேர்ந்த பெண்களை நல்லபடியாகவே நடத்தினாள். “அக்கா! இந்த டேமேஜ் நைட்டிங்கள்ல நிறைய கஸ்டமர் எக்ஸ்ட்ரா தையல் போட்டுத் தரச் சொல்லுவாங்க.. முதல்ல அதைப் போட்டுப் பழகுங்க அக்கா, அப்புறமா புது நைட்டி தைக்கிறது ஈசியா வந்துடும்... சரியா?” என்று அவர்களிடம் சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் அன்பாகக் கூறியவளை நான்கு பேருக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. “எங்க பிள்ளைகளுக்கெல்லாம் டியூஷன் சென்டர் வெச்சு பாடம் நடத்த வைக்கிறதும் உங்க அத்தை தான். இப்ப வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறதும் உங்க அத்தை தான். தினசரி நாலு பேரைப் பார்த்து சந்தோஷமா பேசி சிரிச்சு வேலை பார்க்கிறதே நிம்மதியா இருக்கு” என்று பேச்சுவாக்கில் சொன்னார்கள்.
இந்தத் தகவல் சித்ராவுக்கே புதிது சத்தியபாமா வேறொருவர் நடத்தும் டியூஷன் சென்டரில் தான் வேலைக்குப் போகிறார் என்று நினைத்தால், இவராகவே ஒருங்கிணைத்து டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்குக் குறைந்த விலையில் தரமான கல்வியை தருவது,நூற்றுக் கணக்கான பிள்ளைகள் அதில் சேர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த போது சத்தியபாமா மேல் அவள் கொண்ட மதிப்பு உயர்ந்து கொண்டே போனது.
இந்நிலையில் சித்ரா மற்றும் முகுந்தனின் திருமணத்தை ஒட்டி கோவிலில் அவர்களுடன் இருந்த ஒரு புதிய நண்பர் ஒருவர் திடீரென சத்தியபாமாவின் வீட்டிற்கு வந்தார். அங்கே சித்ராவைப் பார்த்து, “என்னை நினைவிருக்கா? நான்தான் உங்க கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ணினேன்” என்றவர், “முகுந்தன் எங்கே?” என்றார். சித்ராவும் சத்தியபாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க,
“அன்னைக்கு மும்பைக்கு போயிருந்தேன்.. அங்கே முகுந்தன் மாதிரியே ஒருத்தன் இன்னொரு பெண்ணோட நெருக்கமா போய்கிட்டு இருந்தான். அவங்களைப் பார்த்தால் தம்பதி மாதிரி தெரிஞ்சுது. அதான் சந்தேகத்தில் இங்கே வந்தேன்” என்றார். உண்மை நிலவரத்தை அப்படியே அவரிடம் சொன்னார் சத்தியபாமா.
“இன்னொரு பொண்ணோட இருக்கான்னா ஒரு விதத்துல எங்களுக்கு அது நிம்மதி தான்”
“ஆமா அத்தை சொல்றது சரிதான்” என்றாள் சித்ரா. அவன் தன் வாழ்வில் இருந்து மொத்தமாகப் போய்விட்டான் இனி வரமாட்டான் என்ற எண்ணத்தை இந்த நண்பர் கொண்டு வந்த செய்தி மேலும் வலுவாக்கியது. கதைகள், திரைப்படங்களில் உறவுகள் முறிந்து தம்பதியினர் பிரிந்து செல்லும்போது ஏதோ க்ளோஷர் (closure) வேண்டும், க்ளோஷர் வேண்டும் என்று சொல்கிறார்களே, இதுதான் அது போலும். இந்தச் செய்தி தன் மனத்திற்கு எவ்வளவு தேவையாக இருந்திருக்கிறது என்பதை அன்று ஏற்பட்ட நிம்மதியில் உணர்ந்தாள்.
முகுந்தனைப் பற்றிய அந்தத் தகவல் வந்துவிட்டுப் போன அன்று மாலையில் இரண்டு கலகலப்பான இளம்பெண்கள் ‘சத்தியசுபா ஃபேஷன்ஸ்’ கடைக்குள் நுழைந்தனர். சுப்பம்மாள், சத்தியபாமா, சித்ரா, சித்ராவின் தம்பி, தங்கை அனைவரும் அந்த நேரத்தில் அங்கு தான் இருந்தார்கள். தீபாவளிக்காக வேறு சில உடைகளை வாங்கி வைத்து அனைவரும் சேர்ந்து ஸ்டாக் நிலவரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ஹேய் அனிதா மிஸ்! நர்மதா மிஸ்! வாங்க வாங்க! இது எங்க கடை தான்” இன்று வரவேற்றாள் சித்ராவின் தங்கை.
“வாங்க அனிதா, நர்மதா! என்ன மகராசிங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க. உட்காருங்க” என்று வரவேற்றார் சத்தியபாமா.
தங்கையின் ஆசிரியர்கள் போலும் என்று நினைத்து சித்ரா வரவேற்பாகப் புன்னகைக்க, சித்ராவின் அருகில் வந்து கையை பிடித்துக் கொண்டாள் அனிதா.
நர்மதா தன் கையில் இருந்த பையை சுப்பம்மாள் மற்றும் சத்தியபாமா இரண்டு பேரிடமும் ஒரு சேரக் கொடுத்து, “எங்க அண்ணன் ராமச்சந்திர பூபதிக்கு உங்க பொண்ணு சித்திரை வடிவைப் பொண்ணு கேட்டு வந்திருக்கோம். கல்யாணம் செஞ்சு கொடுப்பீங்களா?” என்றாள்.
தொடரும்

Author: Sungudi
Article Title: உருகியோடும் 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.