பார்த்தவுடன் காதல்' எல்லாம் இல்ல இந்த ராதாகிருஷ்ணன பார்த்தா. படிச்சு முடிச்சு வேலைக்கு போகணும்னு நெனச்ச எனக்கு 'இப்போவே கல்யாணமா?' என்ற எண்ணம்.
ஆனா, அம்மா அப்பா அவர பாக்க போனப்போ மாமி ராஜி, எல்லாம் பேசி முடித்த பின் "சூர்யா என்ன உயரம் இருப்பா ?" என்று கேட்டாராம். "உங்க உயரம் இருப்பா மாமி " என்று ஜானு மா சொன்னாளாம்.
"அப்போ பொண்ணு ரொம்ப
குள்ளம் தா போலயே", ராஜி.
என் அம்மா சங்கடமாக உணர்ந்து அமைதியாக இருக்கவும் ""குறுக்க வந்த கௌசிக் "" மாதிரி வந்த அர்ஜுன் "அதனால என்ன ??? எனக்கு பொண்ண புடிச்சிருக்கு" என்று எனக்காக பரிந்து பேசியதா அம்மா சொன்னப்போ மனசுல 'ஜில்ல்ல்ல்' என்று இருந்தது உண்மை. எனக்கு கொஞ்சம் 'பிளஷ்'... அதாங்க இந்த முகச்சிவப்பு வந்துது . ஆனா பாக்கறவங்களுக்கு தெரிஞ்சிருக்காது ஏன்னா என்னோட கலரே பிரவுன் அதுல எப்டி தெரியும்.!!?
அர்ஜுன் என்னை பெண் பார்க்க வர்றதா சொன்ன நாளும் வந்தது.
பொதுவாக "மேக்கப்"ல் ஆர்வம் இல்லை. புற அழகை விட அக அழகு தான் முக்கியம்னு நினைக்கறவ நான். எல்லாரும் பொதுவா செஞ்சுக்கற 'த்ரெட்டிங்'(eyebrow threading) கூட பண்ணதில்ல.
"புடவை கட்ட மாட்டேன், பவுடர் போட மாட்டேன்" என் இன்னும் சில பல கண்டிஷன்களோடு பெண் பார்த்தல் சம்பவம் இனிதே அரங்கேறியது.
'அவருக்கு என்னை பிடிக்கலன்னா, எனக்கு அவர பிடிக்கலன்னா, திமிரா பேசினா, வழிஞ்சானா இருந்தா, ஸ்டிரிக்ட்டா இருந்தா, அவர் பாத்ததும் பட்டாம்பூச்சி வயத்துக்குள்ள பறந்தா, இப்போ கல்யாணம் தேவையா?? இன்னும் நம்ம அப்பா அம்மா சண்டையே முடியல. இதுல நமக்கு வேற கல்யாணமா??,' இப்டிலாம் பல விஷயங்கள் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு.
ஆனா அவங்க வந்ததும், ஃபார்மாலிட்டி பேச்செல்லாம் முடிஞ்ச அப்பறம், அர்ஜுன் என்கூட தனியா பேச வந்தப்போ என் மனசு நா எதிர்பார்த்த எதுவுமே இல்லாம ஒரு ஆழ்கடல் அமைதியா இருந்தது.
புதுசா ஒரு பையன்கிட்ட பேசப்போறோம்னு கொஞ்சூண்டு படபடப்பு.
நான் இருந்த ரூமில் தான் இருவரும் பேசினோம்.
" ஹாய்... சூர்யாஸ்ரீ !!... என்ன பத்தி எல்லாம் சொல்லிருப்பான்னு நெனைக்கிறேன். நா ராதாகிருஷ்ணன். இன்ஜினியர். வொர்க்கிங் இன் கும்பகோணம்."
"ம்ம்.. சொன்னா... "
"ம்ம்.. ஓகே.. எம்.ஏ ஃபைனல் இயர்
தானே ? அடுத்து என்ன பண்றதா ப்ளான்?"
"டீச்சிங் லைன்ல போகனும்னு ஒரு ஐடியா இருக்கு. "லிங்க்விஸ்டிக்ஸ்"
( linguistics) ல ரொம்ப இன்ட்ரஸ்ட்."
"ம்ம்.. குட்... கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகனும்னு ஐடியா இருக்கா?"
"ம்ம்.. ஆமா.."
"ம்ம்ம்..."
"........."
என்ன பேசுவது என்று தெரியாமல் அப்படியே அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தேன்
"ஓகே .. எனக்கு உங்கள புடிச்சிருக்கு.கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போகணுமா வேணாமாங்கிறது யுவர் சாய்ஸ். நீங்க யோசிச்சட்டு சொல்லுங்கோ. "
"ம்ம். ஓகே.."
"எப்படி சொல்லுவிங்க என்கிட்ட?".....??????
"டேக் மை நம்பர். டெக்ஸ்ட் பண்ணுங்கோ. பை."
மூர்த்தி மாமாவும் ராஜி மாமியும் என்னிடம் சில சம்பிரதாய கேள்விகள் கேட்டனர் . அவர்களும் ஊருக்கு சென்று பேசுவதாக சொல்லிவிட்டு சென்றனர்.
அர்ஜுன் கிளம்பி சென்ற பின் அம்மா அப்பா மறுபடியும் அர்ஜுன் புகழ் பாடினார்கள். எனக்கு ஒரே பயம் தான். என் வாழ்க்கையும் என் அம்மா வாழ்க்கை மாதிரி ஆகிவிட்டால் என்ன செய்வது ???
முன்பே சொன்னது போல ராகவனும் ஜானகியும் நல்ல மனிதர்கள். ஆனால் கணவன் மனைவியாக அவர்கள் இருவரும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க தவறிவிட்டனர்.
இருபது வயதில் கல்யாணக் கனவுகளுடன் அப்பாவை மணந்து கொண்ட அம்மா. முப்பது வயதில் சரியான உத்யோகத்தில் இல்லாத நேரத்தில் அம்மாவை கைப்பிடித்த அப்பா. இருவருக்கும் 'ஏக' பொருத்தம் தான்.
தனக்கு நினைவு தெரிந்த நாளாய் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பேசி சிரித்து சூர்யா பார்த்ததில்லை. சிரித்து பேசினாலும் உடனே அடிதடி சண்டைகள் நடந்ததை அவள் கண்டதுண்டு. அறியா வயதில் தனக்கு பிரியமான அம்மாவை போட்டு அடிக்கும் அப்பாவிடம் எப்போதும் மனதளவில் ஓரடி தூரத்தில் நிற்க பழகிக் கொண்டாள்.
அம்மாவை கண்டாலும் நடுங்கியதுண்டு . எட்டாவது படிக்கும் வரை. பேசி பேசி அம்மாவிடம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டாள். அப்பாவிற்கு அப்போது தான் காத்திருந்து காத்திருந்து அரசாங்க வேலை கிடைத்தது.
சுனைனா பிறக்கும் வரை, வீட்டில் சிரித்து பேசினாலே அடுத்து என்ன காத்திருக்கிறதோ என்று வயிற்றில் புளியை கரைக்கும் சூர்யாவிற்கும், சுஷ்மிதாவுக்கும். இப்போது எவ்வளவோ பரவாயில்லை. குழந்தைகளுக்காக என்றும், கல்யாண வயதுள்ள பெண்கள் உள்ளனர் என்று அனைவரும் சொல்வதாலும் சண்டைகள் வந்தாலும் பெரிதாவதில்லை.
கல்யாணம் இப்போது செய்து கொள்வதா, வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது சூர்யாவிற்கு. ஹாஸ்டலில் உற்ற தோழியான கிருத்திகாவிடம் தன் குழப்பத்தை கூறினாள்.
கிருத்திகா தெளிவான பெண். தனக்கு எது வேண்டும், வேண்டாம் என்று நன்கறிந்தவள். ஒரு சிலருக்குத்தான் சிறிய வயதிலேயே தன்னைப்பற்றிய விழிப்புணர்வு வந்துவிடும். அது கிருத்திகவிடம் இருந்தது. சுய விழிப்புணர்வு (self aware) கொண்ட இளம்பெண்.
அவளிடம் பேசியபோது கல்லூரியில் மாணவர்களின் மனதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கவென இருக்கும் ஆசிரியர்கள் குழு பற்றி கூறினாள்.
எதற்கு கல்யாணம் செய்து கெள்ள வேண்டும்? எதற்கு ஜாதக பொருத்தம்? ஜாதகம் பொருந்திய அனைவரும் சண்டைகள் போடுவதில்லையா? எனக்கே என்னைப்பற்றி தெளிவில்லாத போது நான் இன்னொரு குடும்பத்தில் எப்படி பொருந்துவேன்? சமையல் வேற தெரியாது. இப்படி பல கேள்விகளைக் கேட்டு அந்த ஆசிரியையை கலங்கடித்தேன்.
அவர் என் சந்தேகங்கள் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டார்.
அந்த ஆசிரியர் 'கல்யாணம்' ஒரு அற்புதமான விஷயம். சீக்கிரம் செய்து கொள்வது சிறந்தது. அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் பிடிப்பு இருக்காது. அது கல்யாணம் மூலம் ஏற்படலாம்.
"எல்லாத்தையும் இப்பவே போட்டு குழப்பிக்காத டா. சில விஷயங்களை போற வழில கண்டுபிடிச்சுக்கலாம். அதுதான் வாழ்க்கையோட சுவாரசியமும், சாராம்சமும். எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம். Everything is figureoutable" என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவருடன் பேசியது ஓரு தெம்பையும், நம்பிக்கையையும் தந்தது.
*******
அன்று சாயங்காலமே நான், அம்மா & அப்பா அனைவரும் பேசி அர்ஜுன் ' செலக்டட் '. மாப்பிள்ளை நம்பர் குடுத்து சென்றிருப்பதால் நீயே அவரிடம் பேசு என்று அம்மா கூறவும் ஒரு "ஹாய், திஸ் இஸ் சூர்யாஸ்ரீ " என்று வாழ்க்கையின் முதல் படியில் காலை வைத்தேன்.
இருபது நிமிடங்கள் கழித்து பதில் வந்தது.
"ஹாய்!!!..... நா ராதாகிருஷ்ணன்."
"........"
"என்ன முடிவு பண்ணிருக்கீங்க?"
"ஆத்துல எல்லார்க்கும் புடிச்சிருக்கு.அதுனால எனக்கும் ஓகே."
"ஆத்துல எல்லார்க்கும் புடிச்சது ஓகே. உனக்கு என்ன தோணுது? ஓபனா சொல்லு. என்னைய புடிச்சிருக்கா?"
"ம்ம்ம்.....????"
"என்ன ம்ம்... டெல் மீ!.."
" எனக்கு ஓகே."
"ஓகேன்னா???.."
"ஓகேன்னா... ஓகே தான்"
"புடிச்சிருக்கா இல்லையா?"
"அதா சொல்லிட்டேனே...!!!"
"புடிச்சிருக்குன்னு சொல்லலையே????!!!"
சரியான விடாக்கண்டன் போலயே என்று தோன்றியது. நானே புடிச்சிருக்குன்னு சொன்ன அப்பறம் தான் விட்டார் அந்த பேச்சை. எப்படி அவர் நம்பரை சேவ் செய்வது என்று தெரியாமல் அவர் பெயரில் முதல் இரண்டு எழுத்துக்களை ஆர்.கே (RK) என்று என் கான்டாக்ட் லிஸ்டில் சேர்த்தேன்.
ஆனால் பெண் பார்த்துப் போய் போய் ஒரு வாரம் முடிந்த பின்பும் அர்ஜூன் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அம்மாவும் அப்பாவும் கவலை கொண்டனர்.

Author: Adhithya
Article Title: இப்படிக்கு, காதல் - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.