விழிகள் தீட்டும் வானவில் -7
காலை பதினோரு மணிக்கே உரிய சோம்பலும் அமைதியும் வீட்டை நிசப்தமாக்கியிருக்க, மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் விஸ்வம்.
வலப்பக்க ஜன்னல்கள் இரண்டும் சாத்தியிருந்ததால் அந்தக் கூடம் இருளோவென்று இருந்தது. ஜன்னல் கதவுகளின் கொக்கியை நீக்கி விட்டு அவர் விரிய திறந்து வைக்க, இப்போது காற்று குபுகுபுவென்று உள்ளே பாய்ந்தது. திரைசீலை அமைதியான ரிதத்துடன் ஊசலாட, கதவு அடித்துக் கொள்ளாமல் தடுப்பைப் போட்டு விட்டவர், விளிம்புகளில் இருந்த தூசியை வாயை குவித்து ஊதினார்.
“வந்துட்டீங்களா...? எப்பயும் வர்றதுக்கு இன்னிக்கு ரொம்ப லேட் ஆகிடுச்சு போல.... காலைல என்னை எழுப்பிச் சொல்லிட்டு போயிருக்கலாமில்ல... “ குளித்து விட்டு அப்போது தான் வெளியே வந்த சுகந்தி கேள்வியாகக் கேட்டுக் கொண்டே மேசையில் இருந்த கீரைக் கட்டை கவரில் இருந்து எடுத்துப் பார்த்தார்.
“பச்பச்சுன்னு பிரெஷா இருக்கு.... கோவில் ஆயாகிட்டயா வாங்குனீங்க...?”
“சரி... சரி..... சாப்பிட வாங்க... காபி கூடக் குடிக்காம வெளில போயிட்டீங்க.....”
“சமையல் ஆயிடுச்சு.... பேசாம சாதமே சாப்டுடுங்க....”
“அத்தையும் மாமாவும் மேல போயிருக்காங்க.... எப்ப போனாங்க...? இன்னும் காணோம்....”
பரபிரம்மம் போல நின்று கொண்டிருந்த கணவனிடம் சுகந்தி தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். விஸ்வம் ஒரு வார்த்தை கூடப் பதில் சொல்லவில்லை.
“கையைக் கழுவிட்டு வர்றீங்களா...?” சுகந்தி கேட்க, “இல்ல... இப்ப வேணாம்... பசியில்ல...” விஸ்வம் உள்ளேயிருந்த சின்ன அறைக்குள் சென்று விட்டார்.
“இங்கயே உட்காந்து டிவி பார்க்கலாம்ல.... என்னத்துக்கு எப்ப பாரு இத்துனூண்டு ரூமுக்குள்ளயே போயி உட்கார்ந்துக்கிறீங்க.....” சுகந்தியின் பொருமலுக்கு விடை சொல்லத்தான் அங்கே யாருமில்லை.
இது வழக்கம் தான் என்றாலும் கூட, ‘இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் போராட்டம்...?‘ நொந்து போயிருந்த மனசு இன்னும் சுருங்கிப் போக, ‘எப்படி இருந்த மனுஷன்....?’ ஆதங்கத்திலும் அங்கலாய்ப்பிலும் சுகந்திக்கு அப்படியே மலைத்துக் கொண்டு வந்தது.
‘ஜைஜாண்டிக்கா சபாரியும் மடிப்பு கலையாத பேண்டும் போட்டுகிட்டு என்ன மிடுக்கா இருப்பாரு....? இன்னிக்கு கசங்கி போன வேட்டி சட்டையோடயே திரியறாரு..... வீட்டுக்குள்ள நுழைஞ்சாலே பேச்சும் சிரிப்பும், பிள்ளைங்களோட விளையாட்டும்ன்னு வீடே அதகளப்படும்.... இப்ப வாயை தொறந்து இரண்டு வார்த்தை பேச மாட்டேங்குறாரு... இப்படியே போச்சுன்னா உடம்புதான கெட்டுப்போகும்....’ சுகந்தியால் தனக்குத் தானே புலம்பிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
வாசல் கதவு திரும்பவும் திறக்க, “அவ அங்கயே உட்கார்ந்து மககிட்ட ஊர்க்கதை பேசிக்கிட்டு இருக்கா.... இப்போதைக்கு வர மாட்டா....” மருமகளிடம் சொல்லிக் கொண்டே உள்ளே வந்த ராமநாதன், “எங்க அவன் வந்துட்டானா....?” என்றார்.
“ம்ம்.. உள்ள தான் இருக்காரு....” சுகந்தியின் பதிலில் அறைக்குள் எட்டிப் பார்த்தவர், “என்ன விஸ்வம்? இன்னிக்கு விடியல்லயே எழுந்து வெளில போயிட்ட போலிருக்கு... சுகந்தி பயந்து போச்சு....” அறையில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த மகனிடம் கேட்க,
“ம்ம்.... சும்மா வாக்கிங் போனேன்.....” மெல்ல ஒலித்தது விஸ்வத்தின் குரல். அந்த நொடி நேரம் தந்தையை நிமிர்ந்து பார்த்துப் பதில் சொன்னவர், மீண்டும் பேப்பரில் புதைந்து கொண்டார்.
“வாக்கிங்னா கூட என்ன ஆறு மணி நேரமா....?” ராமநாதன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போலச் சன்னமாகக் கேட்க, அங்கே எந்த எதிர்வினையும் இல்லை.
“எங்க போற.... என்ன ஏதுன்னு சொல்லிட்டு போப்பா.... எங்களுக்குத் தைரியமா இருக்கும்ல...” தன்மையாகச் சொல்லி விட்டு வெளியே வந்தார்.
பத்து வார்த்தைக்கு அரை வார்த்தை பதில் சொல்லும் மனிதரிடம், அது பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும் கூட மேலும் என்ன பேச முடியும்? தனக்குள்ளேயே சுருண்டு கொள்ளும் விஸ்வத்தைப் பார்க்க ஒரு பக்கம் அவருக்குப் பாவமாக இருந்தது.
ஒரு காலத்தில் அவரும் மகனை கடுமையாகத் திட்டியவர் தான். கோபத்தில், ஆதங்கத்தில் கொஞ்ச நாள் விஸ்வத்துடன் பேசாமல் கூட இருந்திருக்கிறார்.
ஆனால், நாட்கள் கரைய கரைய, சில விஷயங்களைத் தன்போக்கில் உணர்ந்து கொள்ள முடிய, அந்தக் கோபம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. இப்போது இவரே வலிய வலிய சென்று பேசி விஸ்வம் தன்னைச் சுற்றி கட்டிக் கொண்டிருந்த கூட்டில் இருந்து அவரை வெளியே கொண்டு வர முயல்கிறார். ஆனால், பலன் தான் பூஜ்யமாக இருந்தது.
‘காலம் தான் எல்லாத்தையும் சரி செய்யணும்....’ மெல்ல முனகிக் கொண்ட ராமநாதன், அருகில் இருந்த துண்டை எடுத்து சோபாவை தட்டிவிட்டு அமர்ந்தார். கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு, மகனுக்குப் போட்டியாகத் தானும் ஒரு பேப்பரை எடுத்துக் கண்களை ஓட்ட ஆரம்பித்தார்.
**********************
கையிலிருந்த ஸ்க்ரிப்ட்டில் வேக வேகமாகக் கண்களை ஓட்டினான் ஆகாஷ். முழு நீள திரைப்படத்துக்கான வசனங்கள் பக்கம் பக்கமாக இருக்க, சிகப்பு மையால் அடிக்கோடிடப்பட்ட வரிகளில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தினான். கடினமான பிரெஞ்ச் சொற்றொடர்களுக்கு இணையான ஆங்கில வசனங்களைக் குறிப்பெடுத்தவனின் விரல்கள், சில சிக்கலான இடங்களில் பெருக்கல் குறி போட்டு வைத்தது.
‘கொஞ்சம் யோசிக்கணும்.... இந்த இடத்துல நார்மல் ட்ரான்ஸ்லேஷன் சரியா இருக்காது... இது ஆப்கன் ரெப்யுஜிஸ் பத்தின கதை. அவங்க பேச்சு வழக்குல எப்படிச் சொல்லுவாங்கன்னு பார்த்துட்டு தான் கண்டினியு பண்ணணும்...’ தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன், போனில் மேகலாவின் எண்ணை எடுத்து அவளை அழைத்தான்.
“இந்த ஸ்கிரிப்ட் இன்னிக்கு ரெடியாகாது மேகலா... நான் வெங்கட்கிட்ட பேசிக்கிறேன். நீ இதுக்காக வெயிட் பண்ணாத. நேத்து பாதியில விட்ட வேலையைப் பார்க்க ஆரம்பி....” அந்தப் பக்கம் பேசிய பெண்ணிடம் சில குறிப்புகளைக் கொடுத்தவன், அப்போது தான் ஞாபகம் வந்தது போல நேரத்தைப் பார்த்துக் கொண்டான்.
‘மை குட்நெஸ்... அதுக்குள்ள ஏழாகிடுச்சா...?’ கடிகார முள் ஓடியதே தெரியவில்லை. செயற்கை வெளிச்சம் மட்டுமே நிரம்பியிருந்த அறைக்குள் வெளியே இருட்டியது கூட உரைக்கவில்லை.
“இல்ல... வேண்டாம் மேகலா... அதை நானே பார்த்துக்கிறேன்... நீ இதை மட்டும் பாரு.. இப்ப நான் கொஞ்சம் வெளில போகணும்.. வந்துட்டு பேசுறேன்... ம்ம்.. வேண்டாம்... உனக்கு லேட்டாயிடும்... எதுக்கும் நாளைக்குக் காலைல எனக்கு ஒரு ரிங் கொடேன்....ம்ம்....? ஓகே.. ஓகே.. பை....” அவசர அவசரமாகத் தன் பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினான்.
ட்ராபிக் நெரிசலைக் கடந்து அவன் பார்க்கிங்கில் வண்டியை போட்டு விட்டு அந்த மாலின் முதல் தளம் செல்ல, சரியாகச் சொல்லி வைத்தது போல சௌமியின் அழைப்பு...
“செகண்ட் ப்ளோர்ல இருக்கோம்ணா.... ஒரு பத்து நிமிஷம் ஆகும் போல.. நீ வேணா இங்க வர்றியா....” வேறு யாரோ கூட இருப்பார்கள் போல. ‘அண்ணா’ போட்டு அவள் பவ்வியமாகப் பேசுவதில் இருந்தே தெரிந்தது. ஆகாஷ் சிரித்தபடி அவள் சொன்ன கடையைத் தேடி எஸ்கலேட்டரில் ஏறினான்.
மேலே சென்றவன் சௌமியை தேட வேண்டிய அவசியமே இல்லாமல் அவர்கள் மூவரும் அந்த ஷோ ரூமில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். ட்ரெஸ் கோட் போல... ஒரே மாதிரி வெண்ணிற சுரிதார்கள். காற்றில் பறக்க விட்ட மெல்லிய துப்பட்டா... அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அலையும் கூந்தல்...
கூடவே ‘நாங்க இங்கே இருக்கோம்... இங்கே இருக்கோம்....’ என்று காட்டிக் கொள்வது போலச் சலசலவென்ற பேச்சு.... கூட ஸ்ருதி சேர்க்க அந்தத் தளத்தையே அதிரவைக்கும் இணைந்த சிரிப்பொலி....
ஒண்ணும் சொல்லிக்க முடியல... இதுங்க அடிக்கிற லூட்டியை....’ காதணி முதல் செருப்பு வரை ஒரே மாதிரி அணிந்திருந்த சௌமி, நேத்ரா மற்றும் சுஜியை பார்த்தவனுக்குத் தன்னையும் மீறிய புன்னகை ஓடியது.
தன் இருபுறமும் சௌமி, சுஜி நடந்து வர, நடுவில் இருந்த நேத்ரா இருவரிடமும் மாறி மாறி எதையோ சொல்லி, அவர்களின் தோள் தட்டி கலகலவெனச் சிரித்துக் கொண்டிருந்த காட்சி இளையராஜாவின் சித்திரம் போல இருக்க, அவனையும் அறியாமல் கண்கள் அதை ‘கிளிக்’ செய்து தன் மனக்குளத்தில் ஆழப் பதித்த அழகிய தருணம்.
‘ஆஷ்’ நிற அரைக்கை சட்டையும் டெனிம் பேன்ட்டுமாகப் பக்கவாட்டில் நின்றபடி தங்களுக்காகக் காத்திருந்தவனைச் சௌமி பார்த்தாளோ இல்லையோ, “உங்க வீட்டு பாடிகார்ட் வந்தாச்சு...” நேத்ரா கவனித்துவிட்டு அவளிடம் கண்களைக் காட்டினாள்.
அவர்கள் அவனை நோக்கி வர, சுஜியிடம் ‘ஹாய்’ புன்னகை பூத்தவன், “போலாமா?” என்றான் சௌமியிடம்.
“இரு.. ஒரு நிமிஷம்....” என்ற சௌமி, “இவங்க தான் என் அண்ணா...” அவர்கள் பின்னால் வந்த மற்றொரு பெண்ணிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அவள் காட்டிய பெண்மணி உயரமாக, அந்த உயரத்துக்கேற்ற உடல்வாகுடன் அமெரிக்கையான புன்னகையுடன் தலையசைத்தார். வயது நடு முப்பதுகளில் இருக்கவேண்டும். அவர் அணிந்திருந்த உயர்தர காட்டன் புடவை அவருடைய அந்தஸ்தை காட்ட, படித்த களையும், குடும்பச் செல்வாக்கும் பார்க்கும்போதே தெரிந்தது.
“இவங்க சுஜியோட அக்கா பவவர்ஷினி” சௌமி கொடுத்த அறிமுகத்தில் ஆகாஷ் அவரிடம் ‘ஹலோ’வ, “ஹாய் ஆகாஷ்.... சௌமி சொல்லிட்டு இருந்தா, அண்ணா வருவாருன்னு...” புன்னகைத்தவர், “அப்புறம், நீங்க என்ன பண்ணுறீங்க....?” இயல்பாகக் கேட்டார்.
“லாஸ்ட் டைம் நீ காலேஜ் வந்தப்ப நாம சாப்டோம்ல பவி.. அந்த ஹோட்டல் இவரோடது தான்....” இடைமறித்த சுஜி தன் சகோதரியிடம் கூற, இப்போது அந்தப் பவியின் கண்களில் வழி தவறிச் செல்லும் ஆடுகளைப் பார்க்கும் மேய்ப்பரின் கருணைப் பார்வை.
‘ஓ.... சாப்பாட்டுக் கடையா...?’ இளக்காரம் ததும்பும் விழி சிமிட்டலை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்ட அந்தப் பெண், “ஓ.... ஐ சீ.... அது உங்களோடது தானா....! வெரி நைஸ்...” சம்பிரதாயமாகத் தலை ஆட்டினார்.
பிறகு என்ன நினைத்தாரோ ஏதோ யோசித்தவராய், “எங்களுக்கும் சில நியூ செட்டப்ஸ்க்கு கேட்டரர்ஸ் தேவைப்படுது ... உங்க பிசினசை எக்ஸ்டென்ட் பண்றதா இருந்தா என்னை ஆபீஸ்ல வந்து பாருங்களேன்....” தன் பிசினஸ் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
‘செயின் ஆப் ஹாஸ்பிடல்ஸ்’ நடத்தும் செல்வாக்கான தொழில் குடும்பத்தின் மருமகள் அவர் என்பதை அவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்டிருந்த ஆகாஷ் நன்றி சொல்லி அவர் கொடுத்த அட்டையை வாங்கிக் கொண்டான்.
“உங்க பாதர்-இன்-லா வை மீட் பண்ணியிருக்கேன். உங்களைப் பார்த்தது இல்ல....” என்றபடி ஆகாஷ் தன்னுடைய அட்டையை எடுத்துக் கொடுக்க, அசுவாரஸ்யமாக அதில் பார்வையை ஓட்டியவர், ஆச்சர்யமாக நிமிர்ந்தார்.
“அப்ப... நீங்க தான் எங்க பிரான்சஸ்ல....” விழிகளை உயர்த்தியவர் அவனுடைய ஆமோதிப்பைக் கண்டு, “இட்ஸ் சோ நைஸ்... வெரி க்ளேட் டு மீட் யூ....” இப்போது அவர் விழிகளில் பாராட்டு, ஒரு அங்கீகாரம் வந்திருந்தது.
“ஓகேங்க.... நாங்க கிளம்புறோம்....” என்றபடி அவன் புறப்பட, “நோ... நோ... வாங்க... அங்க ஏதாவது சாப்டுட்டு அப்புறம் போகலாம்...” அங்கிருந்த புட் கோர்ட்டை காண்பித்துச் சொன்னார்.
‘இல்ல... இட்ஸ் ஓகே... இன்னொரு நாள் பார்க்கலாம்...‘ அவன் என்ன மறுத்தும் அவர் கேட்பதாக இல்லை. குடும்பத்திலும் தொழிலிலும் சிம்ம சொப்பனமாகத் திகழும் தன் மாமனாரே வெகுவாகப் பாராட்டி பேசும் இளைஞனை எதேச்சையாகச் சந்திக்கையில் அவனை உடனே அனுப்பிவிட அவருக்கு மனமில்லை.
கிளம்பவும் முடியாமல், ஒரேயடியாக மறுக்கவும் முடியாமல் வேறுவழியின்றி ஆகாஷ் அவர்கள் உடன் நடக்க, “பார்த்தியா சௌமி... சொல்றவங்க சொன்னா தான் எடுபடுது... நாமெல்லாம் கூப்ட்டா எலி கூட ஹெலிகாப்டர் ஏறி போயிடும்....” நேத்ரா நக்கலடித்துக் கொண்டே பின்னால் வந்தாள்.
“ரைமிங்கா பேசுறேன் பேர்வழின்னு எதையாவது உளறாம வா...” வழக்கம் இல்லாத வழக்கமாக ஆகாஷ் நேரடியாக அவளுக்குப் பதில் கொடுக்க, எல்லோரும் கொல்லென சிரித்தார்கள்.
“அம்மு.... உனக்கு இந்த அவமானம் தேவையாடி....?” சௌமியும் சேர்ந்து கொண்டு வெறுப்பேற்ற, “வீரனுக்கு விழுப்புண் சகஜம்மா....” புறங்கையால் துப்பட்டாவை தட்டி உதறியவள்,
“என்னவோ.... இன்னிக்கு தான் உங்க அண்ணனோட எல்லாப் பல்லையும் பார்க்கிறேன்... நீ வேற டிஸ்டர்ப் பண்ணாதே.....” மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி அசால்ட்டாக லெப்டில் சிக்னல் போட்டு ரைட்டில் ஓரங்கட்ட, அவளுடைய அலப்பறையைப் பொறுக்க முடியாத சௌமியும் சுஜியும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.
புட் கோர்ட்டுக்கு சென்று அவரவருக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு எல்லோரும் உட்கார, ஆகாஷ் ஒரு ஜூஸ் மட்டும் வாங்கி வந்து அமர்ந்தான். எல்லோரும் உணவு உண்ணத் தொடங்க, ஆகாஷின் பார்வை மட்டும் தன் முன்னால் அமர்ந்திருந்த அந்தச் சிறு பெண்ணின் மேலேயே இருந்தது.
எளிமையான சுடிதாரில் இருந்த அந்த இளம்பெண் பதினெட்டிலிருந்து இருபதுக்குள் இருப்பாள். காதுகளிலும் கழுத்திலும் செயற்கை அணிகலன்கள், முகத்தில் பாமரத்தனம்; விழிகளில் கவனமும், சிறு அச்சமும்; நாசுக்காக உடுத்தியிருந்தாலும் அதையும் மீறி வெளியே தெரியும் ஏழ்மை.
யாரும் சொல்லாமலேயே தெரிந்தது அவர் பவியின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் உதவி ஆள் என்று.
தன் மடியில் துள்ளி விளையாடும் இரண்டு வயது குழந்தையை ஒரே இடத்தில் பிடித்து வைக்க முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
“பேபி.... டோன்ட் டூ திஸ்... நோ பேபி....” என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டு மட்டும் இருந்தார் பவி. அவனும் வந்ததில் இருந்து பார்க்கிறான். தான் பெற்ற குழந்தையை அவர் ஒருமுறை கூட கைக்கொண்டு தூக்கவில்லை. அதற்கென்றே அழைத்து வந்திருந்த வேலை ஆள் இருக்க, அவர் ஏன் குழந்தையைத் தூக்கி தன் புடவையைக் கலைத்து கசக்கிக் கொள்ளப் போகிறார்...!?
சௌமியும் நேத்ராவும் குழந்தையை வைத்துக் கொள்ள முன் வந்தாலும் அப்பிள்ளை அவர்களிடம் வர மறுத்தது. “விடுங்க... ஷி வில் டேக் கேர்....” என்று பவியும் மறுத்து விட, “நீ இப்படியே இரு.... நாளைக்கு உன் பிள்ளை ராதாவை தான் அம்மான்னு கூப்பிட போகுது....” சுஜி மறைமுகமாகச் சாடினாலும் கூட, அதற்கும் பவியிடம் இருந்து அமர்த்தலான ஒரு சிரிப்பு தான் வந்தது.
கண்முன்னே நல்ல உணவு, இதுவரை பார்த்திடாத சுற்றுப்புறத்தின் அழகு, எல்லாவற்றையும் கண்ணால் மட்டுமாவது அனுபவித்திட வேண்டும் எனத் தூண்டும் இளமை, அதற்கேற்ற பதின்வயது; ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெகு இயல்பான இந்த ஆசைகளைக் கூட மறுக்கும் தன் கடமை என்று அவள் அல்லாடுவதைப் பார்க்கும்போது தன்னையே ஒருகணம் நிழலாகப் பார்த்தது போல ஆகாஷின் முகம் சுருங்கிப் போனது.
அதற்கு மேல் அங்கே உட்கார முடியாமல் சட்டென்று எழுந்தவன், “நீங்க சாப்பிடுங்க... நான் வச்சிக்குறேன்...” தன்னிடம் வர மறுத்த குழந்தையைத் தாஜா செய்து ஓரமாக இருந்த ப்ளே பிளேஸுக்கு கூட்டி செல்ல, அந்தப் பெண் நன்றியுடன் புன்னகைத்தாள்.
“இப்பயாவது நிதானமா சாப்பிடு ராதா....” நேத்ரா சொல்ல, இப்போது ராதாவின் முகத்தில் சிறு கூச்சமும், சிரிப்பும்.
கொஞ்ச நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள். “பரவாயில்லையே... யாருகிட்டயும் இருக்க மாட்டா.... இவருகிட்ட இவ்வளவு நேரம் இருக்கா....” பவி தொலைவில் தெரிந்த இருவரையும் பார்த்து வியக்க,
“அதெல்லாம் பொறுமை தான்.. எங்களையெல்லாம் பார்த்தா தான் பாய்ஞ்சு பிடுங்கும்...” மனதுக்குள் இடித்துக் கொண்ட நேத்ரா, “கிளம்பலாம்ல.. இருங்க... நான் போய்க் கூட்டிட்டு வரேன்...” வேகமாக எழுந்து அவன் இருந்த பக்கம் சென்றாள்.
பின்னே, கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே !?
குழந்தை மின் டைனோசரில் உட்கார்ந்து குதித்தபடி இருக்க, ஆகாஷ் தொடர்ந்து காசு போட்டபடி இருகைகளாலும் குழந்தையை விழுந்து விடாமல் அணைத்துக் கொண்டு இருந்தான். அம்மழலையின் கொஞ்சல் பேச்சுக்குப் பதில் சொல்லியபடி இருந்த அவன் முகத்தில் அபூர்வமான மகிழ்ச்சியும், சொல்லவியலா மலர்ச்சியும்...
பாந்தமான அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டே நேத்ரா அருகில் வந்தாள். இவள் வருவதைக் பார்த்த ஆகாஷ் ‘என்ன’வென்று புருவம் உயர்த்த, “எல்லோரும் கிளம்பிட்டாங்க.. போலாமா...?” பக்கத்தில் வந்தவள் குழந்தையைத் தானும் ஒரு கை பிடித்துக் கொண்டாள்.
அவன் அந்த பொம்மையின் இயக்கத்தை நிறுத்த, பிள்ளையைத் தூக்கிக் கொண்டவள், “பவி சொன்னாங்க.... குழந்தையை நீங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிறீங்களாம்... உங்களுக்கு வர்ற போற வைப் ரொம்பக் கொடுத்து வச்ச பொண்ணாம்.....” பவி சொல்லாத பிட்டை எல்லாம் ஏகமாகப் போட்டு வைத்தாள்.
‘காசா? பணமா? சும்மா அடிச்சு விட வேண்டியது தான்..‘ கிண்டலுடன் அவள் சிரித்துக் கொண்டே அவனைப் பார்க்க, “அவங்க சொன்னாங்களா...? நம்பிட்டேன்....” தலையை ஏளனமாக அசைத்தவன், “சரி வா...” என்று முன்னால் நடந்தான்.
“ஷேவ் பண்ணும்போது பார்த்து பண்ணணும்... இப்படியா கிழிச்சுப்பாங்க... கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்ல....” அவள் அங்கலாய்த்தபடி பின்னால் வர, ஆகாஷின் கரங்கள் அனிச்சையாக உயர்ந்து தாடையைத் தடவி கொண்டன.
‘அடிப்பாவி.... இதைக் கூடவா கவனிப்ப.....’ காலையில் ரேஷர் பட்டு வந்த காயத்தைக் கவனித்து அவள் சொல்ல, அவன் ஆடிப் போனான்.
மலைப்பு எல்லாம் ஒரு நொடி தான். வாழ்வின் நிதர்சனத்தை உள்ளும் புறமும் அறிந்தவன் அவன், அதுவும் வலிக்க, வலிக்க...
அவளுடைய விளையாட்டுச் சீண்டல்களில் அவன் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. சுறுசுறுவென்ற எரிச்சல் பொங்கி வர, அப்படியே நின்றவன், “முதல்ல ஒரு டாக்டர் மாதிரி பொறுப்பா நடந்துக்கோ.... இதெல்லாம் என்ன...? சின்னப்புள்ளைத்தனமா இல்ல...” கடுப்படிக்க,
“ஏன்...? எனக்கென்ன குறைச்சல்..? பொறுப்...பா...ன டாக்டர் மாதிரி தான் நடந்துக்கிறேன்... கண்ணுலயே ஸ்கேன் பண்ணி என்ன பிரச்சனைன்னு சொல்லிடணுமாக்கும்.... தட்’ஸ் கால்ட் ஏஸ் பெஸ்ட் ப்ராக்டிஸ்....” அவன் கன்னத்தைக் கண்களால் காட்டி அவள் சொன்ன விளக்கத்தில் அவனுக்கு நெற்றியில் அறைந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.
“நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்....எப்படியோ போ....” மற்றவர்கள் தங்களுக்காகக் காத்திருப்பதைக் கவனித்து அவன் வேகமாக முன்னே நடக்க,
“நாம எதுக்குச் செல்லம் திருந்தணும்...? நாம ஒழுங்கா தான இருக்கோம்...” ‘ஒன்றும் புரியாது’ என்ற தைரியத்தில் நேத்ரா அந்தப் பிஞ்சு குழந்தையிடம் கதை அடித்துக் கொண்டு வந்தாள்.
“சரி நேத்ரா... நான் அக்கா கூடக் கிளம்புறேன்.. மண்டே பார்க்கலாம்....” சுஜி தன் சகோதரியுடன் விடைபெற, பவியும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
நேத்ராவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட ராதா, ‘வரேன்ணா....’ பிரத்யேகமாக ஆகாஷிடம் சொல்லிக் கொண்டு போக, “ஒகேம்மா...” அவளிடம் புன்னகைத்தவன், குழந்தைக்கு ‘டாட்டா’ சொல்லி வழியனுப்பி வைத்தான்.
“சரி...வா கிளம்பலாம்....” சௌமியைக் கூப்பிட்டு விட்டு அவன் பார்க்கிங் ஏரியாவுக்கு நடக்க, சௌமிக்கு தான் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை.
அம்முவை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஹாஸ்டலில் சுஜியும் இல்லாமல் அவள் தனியே என்ன செய்வாள்....? அவளை அழைத்தால் இவன் என்ன மாதிரி முகத்தைக் காண்பிப்பானோ தெரியாது.
போனமுறை இவன் நடந்து கொண்ட முறைக்கு அம்முவும் வர யோசிப்பாள். குழம்பிக் கொண்டே வந்தவளை திரும்பிப் பார்த்தவன், அவள் இரு கைகளையும் கவனித்துத் தங்கையை முறைத்துப் பார்த்தான்.
அவனுடைய பார்வையின் பொருளை ஷணத்தில் புரிந்து கொண்டாள் சௌமி. “இதெல்லாம் அம்மு வாங்குனது.... இந்தாடி புடி...” அவசர அவசரமாகத் தன் கையிலிருந்த ஷாப்பிங் பைகளை அவள் நேத்ராவிடம் ஒப்படைக்க,
“ஏன் இப்படி பயந்து சாகுற...?” சௌமி அலறி அடித்துக் கொடுத்த விதத்தில் நேத்ராவுக்கு எரிச்சல் எகிறியது.
“இங்க பாருங்க.... இந்த ஒரு சுடியை நான் அவளுக்குன்னு வாங்கினது..... சம்ஸ், நீ இதை எடுத்துட்டு போற... யாரு என்ன சொல்றாங்கன்னு நானும் பார்க்கிறேன்....”
அண்ணனுக்கும் தங்கைக்கும் பொதுவாகப் பொரிந்து தள்ளியவள், சௌமியின் கையைப் பிடித்து அந்தக் குறிப்பிட்ட பையை மட்டும் திணித்தாள். கூடவே ஆகாஷை பார்த்து வீராவேசமான முறைப்பு வேறு.
அவன் மேலே ஒன்றும் சொல்லவில்லை. ‘எவ்ளோ..?’ கண்களாலேயே தங்கையை விசாரித்தவன், தன் வாலட்டை திறந்து ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து நீட்ட, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் நேத்ரா.
“பணத்தை வச்சு மட்டும் எல்லாத்தையும் மதிப்பு போடாதீங்க ஆகாஷ்... அட்லீஸ்ட் என்கிட்டயாவது...” அவனை வேதனையோடு பார்த்தவள் உடைந்த குரலில் சொல்ல, அவன் கசப்பாகப் புன்னகைத்தான்.
“பணம் இல்லேன்னா எதுக்குமே மதிப்பு இல்ல.... அதை நீ முதல்ல புரிஞ்சுக்க...” சிரித்த ஆகாஷ், “நானே இதெல்லாத்தையும் ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சுகிட்டேன்.” கடைசி வரியை ஆழ்ந்த குரலில் சொல்லியபடி அவளிடம் அந்த ரூபாயை திணித்தான்.
“சரி வா... உன்னை ஆட்டோல ஏத்தி விட்டுட்டு நாங்க கிளம்புறோம்....” இயல்பாகச் சொல்லிவிட்டு அவன் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல, ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்ட சௌமியும் நேத்ராவும் சமைந்து போன தினுசில் அந்த நிமிடம் அங்கேயே நின்று விட்டார்கள்.

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.