விழிகள் தீட்டும் வானவில் -4
மாலை நேரக் காற்று சிலுசிலுவென்று வீச, பால்கனியில் நின்று இருந்த நேத்ரா கண்ணை மூடி ஒரு கணம் அந்தக் குளிர்ச்சியை அனுபவித்தாள். சீரான இடைவெளியில் ஒலித்த சிவன் கோவில் மணியோசை இங்கு வரை தெளிவாகக் கேட்டது. மாலை நான்கு மணி.... சாயந்திர நடை திறக்கும் நேரம் போலும்.
காற்றில் கூந்தல் கலைந்து முன்னால் வந்து விழுக, ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டு தூரமாகத் தெரிந்த கோவில் கோபுரத்தை பார்த்து கன்னம் தொட்டு வேண்டுதலாகக் கண்களை மூடி திறந்தாள்.
“இந்தா அம்மு.... பூவெல்லாம் பறக்குது பாரு..... கொஞ்சம் ஜன்னலை சாத்தேன்....” ஹாலில் இருந்த செல்வி அக்கா குரல் கொடுக்க, “காத்து நல்லா இருக்குக்கா.... கொஞ்ச நேரம் இருக்கட்டும்...” நேத்ரா காற்றைத் தடுக்கிற திசையாக அவர் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.
அவர் அருகே இருந்த பூக்கூடை அரும்பு அரும்பாகக் கொய்திருந்த ஜாதி மல்லி மலர்களால் நிறைந்து இருந்தது. மலர்ந்து மலராமலும் வெள்ளையும் இளஞ்சிவப்புமாக இருந்த அந்தப் பூக்களில் இரண்டை எடுத்து முகர்ந்தபோது பூவின் நறுமணம் இதமாய் உள்ளே இறங்கியது.
‘என்ன வாசம்டா சாமி....? டிவைன்லி ஃப்ரேகரன்ஸ்.....’ உள்ளம் சிலிர்க்க சிலாகித்துக் கொண்டவள், செல்வி அக்கா நூல் கண்டை பிரிப்பதை பார்த்தவுடன், “எத்தனை பூ எடுத்து வைக்கணும்.... நான் ஹெல்ப் பண்றேன்...” உதவிக்குப் போக, “நாலு நாலா எடுத்து வை” என்றார் அவர்.
அவர் சொன்ன மாதிரியே நாலு நாலு பூவாகப் பிரித்து வைத்தவள், அவர் விரைந்து பூக்கட்டுவதையே எப்போதும் போலவே இப்போதும் ஆச்சரியமாகப் பார்த்தாள். “எப்படிக்கா இவ்வளவு வேகமா கட்டுறீங்க.... ப்ச்.... நானும் ட்ரை பண்றேன்... வரவே மாட்டேங்குது....”
அவள் சலிப்பதை கண்டு சிரித்தவர், “உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்.... என்னிக்காவது உன் வேலையை நான் செய்யணும்னு கேட்டு இருக்கேனா...? உனக்கு மட்டும் எப்பப்பாரு இந்த வேண்டாத ஆசை...?” விளையாட்டாக அவளைச் சீண்ட, “க்கா...” நேத்ரா முறைத்தாள்.
வீட்டில் வேலை செய்பவராக இருந்தாலும் ரொம்ப வருட பழக்கம். அந்த நெருக்கத்தில் உரிமையும் கிண்டலுமான பேச்சு அங்கே.
“சே... உங்க மூக்கை உடைக்கிறதுக்காகவே நானும் கட்டி பழகணும்னு நினைக்கிறேன்... ஆனா.... பாருங்க... எனக்கு வருவானாங்குது ?” நேத்ரா அலுத்துக் கொண்டாலும், “எனக்கும் கொஞ்சம் நூலை கொடுங்க... நான் கட்டி பழகுறேன்... விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி....” வீரமாய்ச் சூளுரை எல்லாம் உரைத்து பூக்கட்ட முயற்சித்தாள்.
“நல்ல பூவையெல்லாம் வெட்டி போட்டுடாத, அம்மு.... இந்தா... மொக்கா இருக்கிறதை மட்டும் தனியா வச்சிருக்கேன் பாரு... அதுல உன் கைவண்ணத்தைக் காட்டு...” இவள் திறமையைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த செல்வி அசால்ட்டாக நக்கலடிக்க,
“ப்ச்.. ஆனாலும் ரொம்ப டேமேஜ் பண்றீங்க....?” அவளால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது. தான் விட்ட சவாலில் எல்லாம் ஜெயிக்க முடியவில்லை.
அந்தோ பரிதாபம்... அவள் ஒவ்வொரு பூவாக எடுத்து வைத்தாலும் கூட, கையில் வைத்து நூலை சுற்றிக் கொண்டு வருவதற்குள் பூ கீழே விழுந்து வைத்தது. அதனுடன் மல்லுக்கட்டி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலும் நூலை முடிச்சுப் போடும்போது முடிச்சு எங்கோ விழ, அப்படியும் அட்ஜஸ்ட் செய்து இவள் வேகமாகப் போட்ட சுருக்கில் காம்பு தனியாக பிய்ந்து மலர் தனியாகப் பரிதாபமாக நின்றது.
பிய்த்து பிய்த்து இவள் நாலு கண்ணி கட்டுவதற்குள், செல்வி எல்லா மலர்களையும் அழகிய சரமாகக் கட்டி முடித்து விட்டார்.
அவள் கையில் இருந்த ‘நைந்த’ தோரணத்தைப் பார்த்துச் செல்வி கேலியாக நகைக்க, “ரொம்பத் தான் பீத்திக்காதீங்க.... நானும் ஒரு நாள் இதே மாதிரி நெருக்கமா கட்டி காட்டுவேன்... அப்ப உங்க மூஞ்சை எங்க கொண்டு போய் வச்சுக்குறீங்கன்னு பார்க்கிறேன்.....” கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் நேத்ரா அவரைப் பார்த்து ‘தம்’ கட்டினாள்.
“செஞ்சு காட்டு.... அதுக்கப்புறம் என் மூஞ்சை அண்டாக்குள்ள வைக்கலாமா இல்ல அட்டாலில வைக்கலாமானு யோசிப்போம்...” செல்வி வலித்த தன் முட்டியை நீவி கொண்டு சிரிப்புடன் எழுந்தார். நேத்ராவுடன் வாய் கொடுத்து வாய் கொடுத்தே அவரும் வம்பு வளர்ப்பதில் பிஹெச்டி வாங்கியிருந்தார்.
“க்க்க்கா..... சே... எல்லாம் பழக்க தோஷம்.... வளர்த்த கடா மார்ல பாயுது....” அவள் புலம்ப, “கோச்சுக்காதடா கண்ணு.... இந்தா இந்தப் பூவை தலைல வச்சுக்க....“ அவர் இப்போது அவளைச் செல்லம் கொஞ்சினார்.
செல்வி முதல் முதலாக இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்தபோது நேத்ராவுக்குப் பதினான்கு வயது. இப்போது பறித்து வந்தாரே, ஜாதிமல்லி அரும்பு... அது போல மலர்ந்தும் மலராத பருவம்.
ஒவ்வொரு வீட்டை போல வீட்டு வேலை செய்பவர்களைத் தள்ளி நிறுத்தாமல் இயல்பாக நடத்தியதால் அவருக்கு அங்கே சகஜபாவம் இருக்க, நாளாக நாளாக, ஆசையாக வந்து பழகும் நேத்ரா மேல் தனிப் பிரியமும் ஏற்பட்டுப் போனது.
சின்னதிலிருந்தே எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும், பாசமாகப் பேசும் அழகுச் சிறுமியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்...!? அந்த வயதில் கொழுக் மொழுக்கென்று இருந்தவளின் குழந்தைத்தனம் கன்னம் கிள்ளி கொஞ்சத் தூண்டியது என்றால் அவளுடைய கள்ளமில்லா சுபாவமும் இயல்பும் அழகான அன்பு பிணைப்பை உருவாக்கியிருந்தது.
“இந்தக் காலத்துல ஒவ்வொண்ணும் என்ன மாதிரி நடந்துகுதுங்க..... என்ன இருந்தாலும் எங்க அம்மு மாதிரி வராது....” தன் வீட்டருகில் இருப்பவர்கள், தன் உறவினர்களிடமெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் அளவுக்குச் செல்விக்கு நேத்ரா மேல் வாஞ்சை.
இத்தனை வருடங்களில் அவள் யாரிடமும் வெடுக்கென்றோ அதிகாரமாகவோ பேசி அவர் பார்த்ததில்லை. ‘நாங்கள் வசதி, நீங்கள் மட்டம்’ என்பது போல வேலை செய்பவர்களைத் தள்ளி வைத்துப் பார்க்காமல் சரிசமமாகப் பழகும் பெண். செல்விக்கு வேறு இரண்டும் பையன்களாகப் போய் விட, பெண்குழந்தை மேல் இயல்பாகத் தோன்றும் பாசம் வேறு சேர்ந்து கொண்டது.
அதுவும் நேத்ரா இப்போது ஹாஸ்டலில் இருப்பதால் கேட்கவே வேண்டாம். அவள் வீடு வரும் நாட்களில் அவளைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்வார்.
இப்போது கூட ‘அம்முக்கு பிடிக்கும்....’ என்ற எண்ணத்தில் தான் தன் முதுகுவலியையும் பொருட்படுத்தாது வேகாத வெயிலில் தோட்டத்தில் இறங்கியிருந்தார். மொட்டுக்களாகப் பறித்து வந்து அவளுக்கெனச் சரம் கட்டி முடித்ததும் அவர் மனதில் அப்படி ஒரு சந்தோஷம்!
“கட் பண்ணாம அப்படியே வச்சுக்க....” அவர் பூவை அழகிய பந்தாகச் சுருட்டிக் கொடுக்க, “அப்புறமா வச்சுக்கிறேன்க்கா... நீங்க பிரிட்ஜ்ல வச்சுருங்க..... நான் எடுத்துக்கிறேன்... கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்.... தூக்கம் வர்ற மாதிரி இருக்குது....” அவள் அகலமாகக் கொட்டாவி விட்டாள்.
களைத்திருந்த அவள் முகத்தையும் கண்களையும் கவனித்தவர், “கொஞ்ச நேரம் தூங்கு கண்ணு.... ஆறு மணிக்கா எழுப்புறேன்.. பாவம்.... நைட் முழுக்கத் தூங்கி இருக்க மாட்டே....” பிரியமாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கிப் போய்விட்டார்.
தன்னறைக்குள் வந்த நேத்ரா அவரிடம் சொன்னபடியே படுக்கையில் கவிழ்ந்தடித்துப் படுத்தாள். ஆனால் தூங்கத்தான் இல்லை. கையில் உருட்டிக் கொண்டிருந்த இரட்டை ஜாதிமல்லிகளைப் பார்த்தவள், அனிச்சையாக ஜன்னல் வழியாக அந்த வீட்டை பார்த்தாள்.
இவள் படுக்கையில் இருந்து பார்த்தால் நேர் பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டோர் ஹவுஸின் முன்புறம். அதைத் தாண்டி ஒரு பெரிய கடை. பிறகு அந்த பங்களா.... இவளுடைய பார்வை வட்டத்தில் அந்த பங்களா போர்டிகோவின் ஒரு பகுதியும், தோட்டமும் தெரிந்தன.
‘எப்படி இருந்த வீடு...?’ இறகாய் இருந்த மனம் ஷணத்தில் கனத்துப் போக, படுக்கையில் இருந்து எழுந்து சென்று ஜன்னல் கம்பிகள் வழியே அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். முன்னால் இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தனவே தவிர, செடி கொடிகளோ, பச்சை பசுமையோ, பழைய பொலிவோ, களையோ எதுவுமே இருப்பது மாதிரி தெரியவில்லை.
இப்போது இருப்பவர்கள் சரியாகப் பராமரிப்பது இல்லை போல.... ’அப்போல்லாம் எவ்ளோ அழகா இருக்கும் இந்தத் தோட்டம்... ? வீடும் கலகலன்னு...’ அவளுடைய நீண்ட பெருமூச்சினால் என்ன பயன்....?!
இந்த ஜாதி மல்லி மட்டுமல்ல, இன்றும் இவர்கள் வீட்டில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் அடுக்கு செம்பருத்தியும், பட்டு ரோஸும், செவ்வரளி மலர்களும், வீட்டின் பின்னால் மலர்ந்து மணம் வீசும் மனோரஞ்சிதமும், மருதாணி மரமும் கூட அங்கிருந்து கொண்டு வரப்பட்டவை தான். சில பதியன் போட்டவை, பல தொட்டிகள் அன்பின் பரிசாக இவளுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டவை.
ஏதோ யோசனையில் அப்படியே கொஞ்ச நேரம் நின்று விட்டவளுக்குத் திடீரென்று தோன்றியது. “நம்ம சம்ஸ்க்கு இந்த பூன்னா ரொம்ப பிடிக்கும்ல...” சௌமியின் நினைவு வந்தவுடன் அவள் முகம் தன்னாலே புன்னகையைத் தத்தெடுத்தது.
‘இந்தத் தடவை ஊருக்கு போறன்னிக்கு மறக்காம செல்விக்காகிட்ட சொல்லி கட்டி தர சொல்லணும். ஆனா காலைல போய்ச் சேர்றதுக்குள்ள புளியம்பூ மாதிரி ஆகிடுமே... பேசாம குட்டி ப்ரீசர் பாக்ஸ் வாங்கி அதுல வச்சி எடுத்துட்டு போயிடலாமா....?’
வேக வேகமாகத் திட்டம் போட்டுக் கொண்டவளின் சிந்தனை சட்டென்று ஓரிடத்தில் தேங்கி நிற்க, அவள் விரல்கள் டேபிளின் மேலிருந்த மடிக் கணினியின் முதுகை தடவிப் பார்த்துக் கொண்டன.
‘நல்லவேளை.... என் செல்லத்துக்கு அடிபடல..... கொழுப்பெடுத்த குரங்கு.... எப்படி அடிச்சு சாத்துச்சு...?’
அன்று அவளும் சௌமியும் ‘பாடுகிறேன் பேர்வழி’ என்று வீட்டை இரண்டு பண்ணிக் கொண்டிருக்கையில் எங்கிருந்து வந்து நின்றான் என்று தெரியவில்லை அந்த ஆகாஷ்...
உள்ளே வரும்போதே அந்த நடனக் காட்சிகள் மானிட்டர் திரை வழியே அவன் கழுகுக் கண்களில் பட்டிருக்கும் போல..... பார்த்துக் கொண்டே வந்தவன் ஆத்திரம் பெருக லேப்டாப்பை அறைந்து மூடிவிட்டு, அவளைக் கடுமையாகப் பார்த்துவிட்டு, சௌமியை ஒரு முறை முறைத்தானே பார்க்கவேண்டும்.
“இல்லண்ணா....” தடால் புடால் என்று எழுந்து நின்ற சௌமி மெதுவாக முனக, ‘பே’வென்று அமர்ந்திருந்த நேத்ராவின் கையில் இருந்த போனையும் பிடுங்கி பாடிக் கொண்டிருந்த மியூசிக் பிளேயரை பட்டென்று நிறுத்திவிட்டான். அப்போதாவது இவள் சும்மா இருந்திருக்கலாம். எங்கே..?
சமீபமாக அவனிடம் அவசியம் இல்லாமல் அவள் பேசுவதில்லை தான். என்னவோ அந்தச் சமயம் அவன் செய்த ஆர்பாட்டத்தில் அவளுக்கும் உச்சிக்கு ஏறி விட்டது.
“இப்ப எதுக்கு ஆப் பண்ணுனீங்க...? கொஞ்சம் கூட மேனர்....ஸ் இல்லாம...” அவள் துடுக்காகப் பேச ஆரம்பிக்க,
“வாயை மூடு.... மேனர்ஸ் பத்தியெல்லாம் நீ பேசாதே.... ஒரு வீட்டுக்கு கெஸ்ட்டா வந்தோம்னா எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சு அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்க...” அவளைப் பார்த்து சிடுசிடுத்தவன், “இந்த சிடி எங்க இருந்துச்சு...?” மகனுடைய கூச்சலைக் கேட்டு ஓடி வந்த சுகந்தியைப் பார்த்து எரிந்து விழுந்தான்.
“நான் தான் தேடி கொடுத்தேன்....” அவர் சமாளிக்க, ‘நம்பிட்டேன்’ என்கிற மாதிரி அவன் திரும்பி நேத்ராவைப் பார்த்து முறைத்தான். ‘பயபுள்ள சரியா கண்டுபிடிச்சுட்டானே....’ அப்போது கூட அவளது மைண்ட் வாய்ஸ் அடங்குவதாக இல்லை.
“அடுத்த வீட்டுக்கு வந்தா இரண்டு நாளு இருந்தோமா, ரெஸ்ட் எடுத்தோமான்னு கிளம்பி போயிட்டே இருக்கணும், புரியுதா...? அனாவசியமா பழைய குப்பையை எல்லாம் எடுத்து நோண்டக்கூடாது....” அவன் கடுகடுத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
‘ம்க்கும்.... தொரை பெரிய்ய்...ய வால்டர்..ரு வெற்றிவேலு..... இவரு அட்வைஸ் பண்ணினா நாங்க அப்படியே கேட்டுடுவோமாக்கும்....’ நேத்ரா சட்டையில் பட்ட தூசைப் போல அவன் பேச்சை உதறிக் கொள்ள, பாவம் சுகந்தியும் சௌமியும் தான் தவித்துப் போனார்கள்.
“அவன் கிடக்குறான்மா... இதோ வர்றேன்...” மையமாக உளறிவிட்டு சுகந்தி அவன் பின்னாலேயே ஓடினார் என்றால், சௌமி ‘பூத் பூத்’ என்று அழவே ஆரம்பித்து விட்டாள். “சாரிடி... சாரி அம்மு... அவன் கத்துனதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்...” இடையிடையே இவளிடம் விசும்பல் வேறு.
“அட.. விடும்மா..... இதுக்குப் போயி...” நேத்ரா அலட்சியமாக ஒதுக்கி தள்ளினாலும் அவள் விடவில்லை. இவள் அசந்திருந்த மதிய வேளையில் ஆகாஷிடம் சண்டைக்குப் போய் விட்டாள்.
“உனக்குக் கொஞ்சமாச்சும் ஏதாவது இருக்கா...? வீட்டுக்கு உறம்பரையா வந்தவங்க கிட்ட இப்படித் தான் பேசுவியா...? அப்படி நாங்க என்ன பண்ணிட்டோம். ஒரு பாட்டை வச்சு கேட்டது தப்பா..? எப்ப பாரு உம்முன்னு மூஞ்சை மூஞ்சை பார்த்துட்டு சுத்தி வரணும்னு நினைக்குறியா..?”
இருந்த வேகத்தில் சௌமி வெடுவெடுவென்று உரக்க கேட்பது செவிகளில் விழ, தூக்கமும் விழிப்புமாக இருந்த நேத்ரா நன்றாகக் காதைத் தீட்டிக் கொண்டு கவனிக்க ஆரம்பித்தாள்.
‘பாவம்... ஏதோ கோபத்துல கத்திட்டு இப்ப பீல் பண்ண போறான்....’ நேத்ரா ஆர்வமாக எதிர்பார்க்க,
“உன் பிரண்ட் இன்னும் எத்தனை நாளுக்கு இங்க இருக்கப் போறா....?” அவன் அடுத்த நொடியே பதிலுக்கு இன்னொரு கேள்வி கேட்டு அவளது மனக் கோட்டையை அடித்துக் காலி செய்தான்.
“ஏன் உனக்கென்ன வந்துச்சு.. ? அவ எத்தனை நாள் வேணும்னாலும் இங்க இருப்பா....” மற்ற நேரமாக இருந்தால் சௌமிக்கு இப்படிப் பேச தைரியம் வந்திருக்காது. தன் தோழியை நேருக்கு நேராக அவமதித்துக் கடுமையாக அவன் நடந்து கொண்டதில் சூடாகி இருந்தவள், நன்றாகவே திருப்பிக் கேட்டாள்.
“ஏன்... அவங்க அப்பா காசை மிச்சப்படுத்துறாரோ....? அந்த மாதிரி ஆளு தான் அந்த ஆளு...” நக்கலாகச் சொன்னவன், “லீவு விட்டாச்சுன்னா ஆசை பொண்ணை அவரு வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே.... அடுத்த வீட்டுக்கு எதுக்கு அனுப்பணும்...? அறிவில்ல அந்த ஆளுக்கு...?”
அடுத்த அறையில் இருந்தாலும் கூட அவன் குரல் தெளிவாகவே கேட்டது, நேத்ராவுக்கு...
அவ்வளவு நேரம் தன்னைத் திட்டின போது வராத கோபமெல்லாம் தன் தந்தையைச் சொன்னபோது மூக்கை எட்டியது. தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தவள் சட்டென்று எழுந்து போய் கேட்க முடியாததால் பல்லைக் கடித்தபடி பொங்கிய எரிச்சலை அடக்கிக் கொண்டாள்.
“ரொம்பப் பேசுற நீ....” சௌமியின் குரலும், “அப்படித் தான் பேசுவேன்... இப்ப என்னங்கிற...?” அவனுடைய எகத்தாளமான பதிலும், “இந்தப் பேச்சை இதோட விடுப்பா... சௌமி பேசாம இரும்மா....” சுகந்தி அத்தையின் கெஞ்சலும் கேட்க அவள் இன்னும் கண்களை இறுக்கிக் கொண்டாள்.
இறுக மூடிய விழிகளையும் தாண்டி அழுகை வந்து விடும் போல இருந்தது. பொங்கிய கோபமெல்லாம் கொதித்த பாலில் நீர் தெளித்தது போல அடங்கிப் போனது சுகந்தி அத்தை அடுத்து சொன்னதைக் கேட்டு.
“குணா மாமா உங்க அத்தைகிட்ட கன்னாபின்னான்னு கத்திட்டு இருந்தாருன்னு அவனே ஒரு மாதிரி சுத்திட்டு இருக்கான். சமாதானப்படுத்தலாம்னு பக்கத்துல போனா ‘செஞ்சவங்க சொல்லி காட்ட தான் செய்வாங்க. அதெல்லாம் எனக்கும் அவருக்கும் நடுவில இருக்கிறது.. உங்களுக்கு என்ன வந்துச்சு”’ன்னு அதுக்கும் கத்துறான்.”
“அண்ணனுக்கு எவ்வளவோ பிரச்னைடா.... இந்தச் சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணாதே.... நான் அம்முகிட்ட பேசுறேன். அவ புரிஞ்சுப்பா...”
சௌமியை தனியே தள்ளிக் கொண்டு வந்தவர் அவளிடம் தணிந்த குரலில் சொல்வதைக் கேட்டவளுக்கு இன்னுமே அழுகை வரும் போலத் தான் இருந்தது. ஆனால், இந்த முறை காரணம் தான் வேறு.
நடிக்கிற நடிப்பை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே? கொஞ்ச நேரம் அப்படியே ஆழ்ந்து தூங்குவது போல பில்ட்-அப் கொடுத்தவள், சிறிது நேரம் கழித்து எழுந்தாள். அதற்குப் பின் யாரும் சமாதானம் செய்யவே தேவையில்லை என்பது போல அவள் கலகலப்பாக நடந்து கொள்ள, சௌமியும் கொஞ்ச நேரத்தில் இயல்பாகிவிட்டாள்.
ஆனால், சுகந்திக்கு தான் மனசு ஆறவில்லை போல. அவளிடம் மீண்டும் பேச்சை எடுத்தவர், “அவன் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காதம்மா... என்னவோ டென்ஷன்ல பேசிட்டான்....” அவர் சொல்ல சொல்ல இடையிட்ட நேத்ரா,
“ப்ச்.... இதெல்லாம் பச்சா மேட்டர் அத்தை.... ப்ரீயா விடுங்க....” இரு விரல்களைக் குவித்துக் காற்றில் ‘உப்’பென்று பறக்க விட்டு காண்பிக்க, “நல்ல பிள்ளைடா நீ....” சுகந்தியும் மனதில் பூத்த நிம்மதியுடன் சிரித்தபடி நகர்ந்து விட்டார்.
ஆனால் உள்ளபடிக்கு அவளுக்குக் கோபம் கோபம் தான்... ஆகாஷ் வீட்டில் இருக்கும் கொஞ்சமே கொஞ்ச நேரத்திலும் எதிர் எதிராகப் பார்க்கும்போதெல்லாம் அவனை முறைத்துக் கொண்டு தான் திரிந்தாள். அவன் தான் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி பேசுனதுக்கெல்லாம் நல்லா பதில் சொல்லிட்டு தான் கிளம்பணும்....” இவள் உள்ளுக்குள் கருவி கொண்டிருக்க, அவன் அப்படியே யு-டர்ன் அடித்துத் திரும்புவான் என அவள் எதிர்பார்த்தாளா என்ன?
கொஞ்ச நேரத்தில் பைக்கை உதைத்து வெளியே கிளம்பியவன், ஐந்தே நிமிடங்களில் திரும்பி வந்தான்.
“இந்தா... இதை முதல்ல போட்டுக்கச் சொல்லு....” சௌமியை அழைத்தவன் கையில் தீப்புண்ணுக்கான மருந்து.
“என்னடி இது...? இப்படிக் கொப்பளிச்சு போய் இருக்கு.... தண்ணில கையை வச்சிருந்தா போதும்னு அடம் பிடிச்சியே... எருமை....“ நேத்ராவின் கையிலிருந்த எண்ணெய் காயங்களைப் பார்த்து கொஞ்ச நேரத்துக்கு முன் சௌமி புலம்பிக் கொண்டிருக்க, அதை அவன் கேட்க நேர்ந்ததின் எதிரொலி போலும்.
‘ரொம்ப தான் அக்கறை... அக்கறை அரைகுறையாம்... அதுல ஒரு சிவ சிவவாம்....’ வாயில் வந்ததைப் பழமொழி என்ற பெயரில் மென்ற நேத்ரா அவன் கண்களைப் பார்த்து நன்றாகவே முறைத்தாள்.
“உடனே மருந்து போட்டுக்கணும்னு தெரியாது. பல்ஜ் ஆகிற மாதிரியா விட்டு வைப்ப... டாக்டருக்கு படிச்சா மட்டும் பத்தாது... படிக்கிறதை அப்ளை பண்ணவும் தெரியணும்....” இவளிடம் நேராகவே அவன் அட்வைஸ் மழை பொழிய,
மருந்து போட்டு விட அருகில் வந்த சௌமியை ‘வேண்டாம்...’ எனத் தடுத்தவள், “ஒண்ணும் தேவை இல்ல. ஜஸ்ட் பர்ஸ்ட் டிகிரி பர்ன் தான். ஏற்கனவே பர்ன் ஜெல் போட்டுகிட்டேன்....”
அவனை நிமிர்ந்து பார்த்த நேத்ரா கடுப்பாகவே பதில் சொன்னாள். பின்னே, அவன் அக்கறையாக வாங்கி வந்து கொடுத்தால் இவள் உடனே குளிர்ந்து போய்க் குழைய வேண்டுமா, என்ன?
ஒன்றும் பேசாமல் அவள் அருகில் வந்தவன் “ப்ச்... ரொம்பப் பண்ணாதே” மெல்ல முணுமுணுத்தான்.
“நம்ம சண்டையை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்.... என் மேல இருக்கிற கோபத்துல பெருசா இழுத்து விட்டுக்காதே.... பேசாம போட்டுக்க.....” சௌமியிடம் இருந்து அந்த ட்யுபை வாங்கி அவள் கையில் திணிக்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் நேத்ரா வாங்கிக் கொண்டாள், முகச் சுணுக்கத்துடன் தான்.
‘நீ போட்டுக்காம நான் நகர மாட்டேன்’ என்பது போல இடுப்பில் கை வைத்துக் கொண்டு அங்கேயே அவன் நிற்க, வேறு வழி இன்றி அந்த ட்யுபை பிரித்தாள்.
பூரித்திருந்த கொப்பளங்களின் மேல் அவள் மருந்து இட்டுக் கொள்வதைச் சுருங்கிய புருவங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், “இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க வேணாம் நீ.... இந்த மருந்துலயே சரியா போயிடும்ல..? இல்ல ஏதாவது இன்பெக்ஷன் ஆகிட போகுது...”
கவலையாகச் சொல்லிக் கொண்டே போக, நிமிர்ந்து அவனை ஆழமாக நோக்கிய நேத்ராவின் மனதில் தோன்றியது தான் இப்போதும் தோன்றியது.
‘என்ன மேக்டா சாமி....? ஒரு நேரம் சுனாமி கணக்கா சுத்தி அடிக்க வேண்டியது... அடுத்த நிமிஷமே பாசத்துல உருகுறது.... இவனை வச்சுக்கிட்டு.... ரொம்பவே கஷ்டம் தான்....’
தலையணையைப் பற்றிக் கொண்டு புரண்டவளின் விழிகள் புன்னகையிலும் பூரிப்பிலும் விரிந்திருந்தன என்றால், “ஆ.....கா..........ஷ்ஷ்.......” அவளது இதழ்கள் மயக்கத்துடன் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக் கொண்டிருந்தன.

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.