விழிகள் தீட்டும் வானவில் -22
“ஆகாஷ்... ஐ’யம் ரியலி டயர்ட்... நேரா வீட்டுக்கு போகாம இப்ப எங்க போகணும் போகணும்னு அடம் பிடிக்குறீங்க....” எரிச்சல் தொனிக்கத் தன் முன் வந்து நின்றவனிடம் நேத்ரா கடுப்படித்துக் கொண்டிருந்தாள்.
காலை முதல் மாலை வரை ஓ.பி பார்த்து பிஸியாகக் கழிந்ததில் உடல் அலுப்பு இருந்தாலும், கணவன் மேல் இருந்த உள் மன கோபமே அவளை வெடுவெடுக்க வைக்க,
“ஜஸ்ட் ஒன் அவர் தான்... போயிட்டு வந்துடலாம்... ப்ளீஸ்... டக்குனு ஏறேன்...” அதிசயமாகக் கெஞ்சியவன், “இப்ப உனக்கென்ன ? வீட்டுக்கு போனதும் கை கால் எல்லாம் பிடிச்சு விடுறேன்... போதுமா...?”
ஒரேயடியாக செல்லம் கொஞ்ச, ஷணத்தில் முகம் சிவந்தவள் கையில் இருந்த ஹேண்ட்பேகை விசிறி அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.
“வாயை மூடுங்க.. எதுக்கு இப்படிக் கத்துறீங்க...? மானம் போகுது... வண்டியை எடுத்து தொலைங்க...” அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த ஓரிருவர் தங்களை ஆர்வமாகப் பார்ப்பது தெரிய, அவசரமாக பைக்கின் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.
“சரியான லூஸு..” அவள் தலையில் அடித்துக் கொள்ள, கண்ணாடி வழியே அவளைப் பார்த்து கண்சிமிட்டியவன், “ஆமா.. இது பெரிய உலக அதிசயம் பாரு... நீ முதல்ல ஒழுங்கா உட்காரு... அடிக்கிற காத்துல வேற யாரு வண்டிலயாவது போய் உட்கார்ந்துக்கப் போற...”
இன்னும் இன்னும் அவளைச் சீண்டியதில், தோளில் கைகளில் சில பல அடிகளை, நான்கைந்து கிள்ளுகளைத் தாராள மனதுடன் பெற்றுக் கொண்டான். இவர்களுடைய லடாயிலேயே கால் மணி நேரம் கழிய, போரூரின் குறுக்கு தெரு, சந்து, பொந்து என்று வண்டி ஓடி, வர வேண்டிய இடம் வந்திருந்தது.
பழைய கட்டிடம் ஒன்றின் முன் அவன் நிறுத்த, “யாரு வீடுங்க இது...? என்ன.. யாருக்காவது உடம்பு சரியில்லையா...?” தன் கைப்பையில் ஸ்டெத் இருக்கிறதா என்று கை வைத்து பார்த்தபடியே இறங்கினாள் நேத்ரா.
தூரத்தில் பச்சை கட்டிடமாகத் தெரிந்தது குட்டி கேட்டின் அந்த பக்கம் பார்க்க சிறிய வீடு என்று புரிந்தது. வீட்டின் வாசலிலேயே இவர்களுக்கெனக் காத்துக் கொண்டிருந்ததைப் போல நின்றிருந்த முதியவர் ஒருவர், “வாங்க.. வாங்க..” என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.
“இவங்கதான் உங்க வீட்டம்மாவா....?” வரவேற்பாக அவளைப் பார்த்து புன்னகைத்தவர், “உட்காருங்க...” என்றபடி அங்கிருந்த மர சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
“ப்ளேட்டு போட்டு விக்கறோம்னு எத்தனையோ பேரு வராங்க. எனக்குதான் அப்படிக் கொடுக்க மனசு வரல்ல.. பழைய கட்டிடமா இருந்தாலும் நல்ல உறுதியான கட்டிடம்... நான் பார்த்து பார்த்து கட்டினது.. என்ன பண்ணுறது..? வயசாச்சே... தனியா இருக்க முடியல....”
“சின்னவன் கூடயே போயிடலாம்னு இருக்கேன்... அவன் மங்களூர்ல இருக்கான்.. எனக்குத் தான் அங்க உடம்பு ஒத்துக்குமோ இல்லையோ தெரியல... நீங்க உங்களுக்குப் பிடிச்சா பாருங்க.... யாரு வாங்கிக்கிட்டாலும் நல்ல அதிர்ஷ்டசாலிங்க தான்”
எந்தத் தூண்டுதலும் இல்லாமல் அவராகவே பேசிக் கொண்டு செல்ல, “என்ன ஆகாஷ் இது...?” புரிந்தும் புரியாததுமான கேள்வியுடன் நேத்ரா பார்த்தாள்.
“நம்ம செல்வா தான் சொன்னான், இங்க ஒரு வீடு இருக்கு.. புரோக்கர்லாம் இல்லாம தேடுறாரு... அவருக்கு ஆளுங்களைப் பிடிச்சிருந்தா மட்டும் தான் விப்பாரு.. போய்ப் பாரேன்னான். காலைல வந்து பார்த்தேன்.. எனக்குப் பிடிச்சு தான் இருக்கு.. நீயும் பாரேன்... நாம அப்புறம் பேசலாம்...”
சிறிய குரலில் விவரம் சொன்ன ஆகாஷ், “வா...” என்றபடி அவர் காட்டிய அறைகளைப் பார்த்தார்கள்.
“பின்னாடி கிணறு இருக்கு.... சின்ன மோட்டார் வச்சு தண்ணியை இழுத்துக்குவோம்.... இங்க நிறையப் பேரு போர் போட்டு தண்ணி வரலைன்னு இருக்காங்க.. ஆனா எங்க வரைல இந்த நாற்பது வருஷத்துல தண்ணிக்குன்னு கஷ்டப்பட்டது இல்ல..”
“ரொம்ப வெயில் காஞ்சா, ஊத்து கீழ போகும். ஆனாலும் மகமாயி தண்ணியில்லாம ஒருநாளும் எங்களைத் தவிக்க விட்டது இல்ல.. நாங்களும் விரயம் பண்ணி வீணாக்குனதுல்ல...”
அவர் நெகிழ்ச்சியோடு பேசும் விதத்திலேயே அந்த வீடு எவ்வளவு தூரம் அவரது உயிருடனும் உணர்வுடனும் கலந்திருக்கிறது என்று புரிய, இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
ஆயிரத்து நூறு அடியில் வீடு, பின்னால் நூறு சதுரத்துக்குச் செடி, கொடி என்று அமைப்பாக இருந்தாலும் வீடும் தோட்டமும் சரியான பராமரிப்பில்லாமல் பெயிண்ட் உதிர்ந்து காய்ந்து கிடந்தது.
நடுத்தர அளவிலான ஹால், அதை ஒட்டிய சமையலறை, குட்டி பூஜை ரூம்... ஒரு அறை மட்டும் பெட்ரூம் என்ற பெயரில் கட்டிலுடன் இருந்தது. மற்ற இரு அறைகளும் ஸ்டோர் ரூம் போல பாத்திரம், பண்டம் எனப் போட்டுக் கலவையாக வைத்திருந்தார்கள்.
வீட்டின் உள்ளே ஒரு பாத்ரூம் டாய்லட், வெளியே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒன்று எனப் பழைய மோஸ்தரில் இருந்தாலும் வீடு நல்ல களையாக இருக்க, நேத்ரா, “ம்ம். நல்லா இருக்கு..” திருப்தியுடன் கண்ணைக் காட்டினாள்.
கொஞ்ச நேரத்தில் “நாங்க வீட்டுல பேசிட்டு சொல்றோம்ங்க....” அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். “எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.... எவ்வளவுங்க சொல்றாரு...?” வெளியே வந்ததும் வராததுமுமாக நேத்ரா பரபரக்க, ஆகாஷ் சொன்ன தொகையைக் கண்டு அவள் சமைந்து போனது நிஜம்.
“எப்படி இவ்ளோ....?” ஊற்றெனப் பீறிட்ட உற்சாகம் தரையிறங்க, கவலையும் அவநம்பிக்கையும் தொனித்தன அவள் கண்களில். “இரு... பார்க்கலாம்... எடுத்தவுடனே ஏன் வேண்டாம்னு சொல்லணும்...?” வண்டியை கிளப்பிய ஆகாஷின் முகத்திலும் சிந்தனையின் கோடுகள்.
****************************************
“லலு ல...லு லு..லு ளூ....அம்மம்...மூ....மிம்...ம்மிம்மூ.....”
குழந்தையைக் கைகளில் அணைவாய் வைத்திருந்த நேத்ரா புரியாத மொழியில் கொஞ்சிக் கொண்டிருக்க, அவள் கையிலிருந்த பூம்பிஞ்சும் புரிந்ததோ புரியலையோ உதட்டை பிளந்தபடி வேடிக்கை பார்த்தது.
“ஏன்டி என் பொண்ணைக் இப்படி கொடுமைப்படுத்துற...?” குளித்து உள்ளே வந்த சௌமி கண்ணாடியை பார்த்து பவுடர் போட்டுக் கொண்டேகேட்க, “கொழுப்பா....? நான் பேசுறதை எல்லாம் இவ எப்படி என்ஜாய் பண்ணி கேக்குறா பாரு.... “ அவளை முறைத்த நேத்ரா தன் கொஞ்சலைத் தொடர்ந்தாள்.
“ஜூஜூஜூ ஜிஜிஜ்ஜோ ..... எங்க செல்ல பட்டூ..... குட்டி சிட்டூ...... ஏய்... இங்க பாரு இவ எப்படிச் சிரிக்கிறான்னு...? இன்னும் கொஞ்சம் நாளாச்சுன்னா இந்த அத்தை பேச்சுல மயங்கி அப்படியே குலுங்கி குலுங்கி சிரிப்பா... நீ பொறாமைல புஸ் புஸ்ஸுன்னு பெருமூச்சு விட்டுட்டு இருக்கப் போற....”
நேத்ரா கொடுத்த பில்ட்-அப்பில், “சரிதான் போ... உன் ஓவர் கான்பிடன்ஸ்க்கு ஒரு அளவே இல்லையா...?” சிரித்தாள் சௌமி. அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.
வளைகாப்பு முடிந்த அடுத்த வாரத்திலேயே வலி வர, நேத்ரா கொடுத்த தைரியத்துடன் அருகில் இருந்த நர்ஸிங் ஹோம் அழைத்துச் சென்றார்கள். ஒரு நாள் முழுவதும் அம்மாவை படுத்தி எடுத்து விட்டு புது உயிர் பூமியை தரிசித்தது. பெண் குழந்தை. ‘ஷம்ருதி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.
சௌமி இங்கு வந்த நாள் முதல் மகளைச் சுகந்தி கவனித்தாரோ இல்லையோ, தோழியைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்ட நேத்ரா, குழந்தை பிறந்த பிறகு இன்னும் பிஸியாகிப் போனாள்.
“அவளை எங்கிட்ட கொடுத்துட்டு முதல்ல நீ போய்ச் சாப்புடு அம்மு....”
வேலையில் இருந்து வந்ததும் வராததுமாகக் குளித்து விட்டு, குழந்தையுடன் அமர்ந்து செல்லம் பேசிக் கொண்டிருந்தவளை சௌமி வாஞ்சையுடன் பார்த்தாள்.
“தேவையில்லாம தொடர்ந்து நைட் ட்யுட்டி வாங்கிக் கஷ்டப்படுற... பகல்லயும் தூங்காம இவளோட லூட்டி... மரியாதையா அடுத்த வாரத்துல இருந்து டே ஷிப்ட் போ... அது தான் அம்மா, அத்தே எல்லோரும் இருக்காங்கல்ல....” பேசியபடியே குழந்தையை வாங்கிய சௌமி அவளுக்குப் பால் கொடுக்கத் துவங்க,
“எனக்கொண்ணும் கஷ்டமா இல்ல சம்ஸ்.... இன் எ வே இது தான் கம்பார்டபிளா இருக்கு... ப்ளஸ், இப் எவெரிதிங் கோஸ் ஆன் வெல், நெக்ஸ்ட் வீக்ல இருந்து போரூர் போய்ட்டு வரவும் இது தான் வசதி..... எல்லாம் கொஞ்சம் செட்டில் ஆனப்புறம் செட்யூல் மாத்திக்கிட்டா போச்சு...”
“இன் பாக்ட் எங்க டீன்க்கு நான் வாலன்டியரா நைட் ட்யுட்டி எடுத்துக்கிறது வசதியா இருக்கு.. எப்ப வேணுமோ அன்னிக்கு மாத்தி எடுத்துக்கோங்கன்னு ஒரே கவனிப்பு தான் போ” இலகுவாகச் சொல்லிக் கொண்டிருப்பவளை நிமிர்ந்து பார்த்த சௌமியின் முகத்தில் லேசான கவலையின் பிரதிபலிப்பு.
“அம்மு... வந்து...” லேசாக இழுத்தவள்,
“என்னால இதைச் சொல்லவும் முடியல... சொல்லாம இருக்கவும் முடியல..... எல்லாத்திலயும் ப்ரெஷர இழுத்துக்கிட்டு கஷ்டப்படாதீங்க... உங்க வரைக்கும் ஜாலியா இருக்காம... அங்க இங்கன்னு போகாம..... ஏன்டி இப்படி....? அவன்கிட்ட பேச முடியாது... அதான் உன்கிட்ட சொல்றேன்....”
தனக்கெனப் பேசுபவளின் வருத்தம் புரிந்தாலும் அவளுடைய தோளை விளையாட்டாகத் தட்டினாள் நேத்ரா.
“ஹலோ மேடம்... கூல் கூல்.... எதுக்கு இப்படிச் சொற்பொழிவு கொடுக்குற...? ஒரு ப்ரஷரும் இல்ல... நீயா என்னத்தையாவது கற்பனை பண்ணிக்காதே....” என்றவள்,
“அப்புறம்... ஏய்.... கொழுப்பெடுத்த கொரங்கே... உன் தூக்கம் கெடக் கூடாதுன்னு குழந்தைக்கு நேப்கின் கட்டி வைக்கிறியா...? மரியாதையா எந்திருச்சு காட்டன் துணியை மாத்தி விட்டு பழகு....”
இலகுவாக அவள் பேச்சை மாற்றுவது புரிந்த சௌமி, “அவனை மாதிரியே நீயும் அழுத்தக்காரியா மாறிட்ட போ....” முணுமுணுத்தாளே தவிர, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“நீ இருக்குறியே... உன் ட்யுட்டியை ஆஸ்பத்திரியோட நிறுத்திக்காம என்னை ஏன்டி படுத்தி வைக்குற... இத பண்ணாதே, அதைப் பண்ணாதேன்னு உன் கொடுமை தாங்கமுடியல... சரியான மாமியாரு....” சௌமி திட்டுவதைச் சிரித்தபடியே பார்த்திருந்த நேத்ரா, வெளியே பார்வதி சாப்பிட கூப்பிடவும் எழுந்து வெளியே வந்தாள்.
சௌமிக்கு தோன்றும் கவலை தான் வீட்டில் உள்ள எல்லோருக்கும் எனப் புரிந்தாலும், எல்லாம் கூடி வரும்வரை எதையும் அதிகப் பிரசங்கித்தனமாகப் பிரஸ்தாபிக்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.
அன்று போய் பார்த்த வீடு மனதிற்குப் பிடித்திருக்க, அடுத்த நிலைக்குப் போக கணவனும் மனைவியுமாகத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
முதலில் விலையைக் கேட்டதும் மலைத்து போனாலும் மார்க்கெட் ரேட்டை விட அவர்கள் குறைந்த தொகையையே சொல்ல, அவளுக்கு விடவும் மனசில்லை. அதேநேரம் ‘நம்மால அவ்வளவு முடியுமா?’ என்று அச்சமாகவும் இருந்தது.
ஆனால், ஆகாஷ் அவளளவு தயங்கிக் கொண்டு நிற்கவில்லை.
“நம்ம கல்யாணம் பிக்ஸ் ஆனதுல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன். ஒரு வீடு கூட மனசுக்கு பிடிக்கல. பிடிச்சு வந்தா நம்ம பட்ஜெட்டுக்கு அடங்கல. இதுதான் எல்லா விதத்திலயும் ஒத்து வருது. ப்ளஸ் நம்ம வேலைக்கும் இது தான் வசதி. எங்கயோ வாங்கி வச்சு தினம் இரண்டு மணி நேரம் ட்ராவல் பண்றது எல்லாம் சரிப்பட்டு வராது...”
“இரண்டு பேரும் சேர்ந்து லோன் எடுத்துக்கலாம்.... இனிஷியல் பேமெண்ட்க்கு இவ்வளவு வருஷம் வீட்டுக்குன்னு தனியா எடுத்து வச்ச சேவிங்க்ஸ் இருக்கு... கொஞ்சம் ஆயில் ரிபைனரீஸ் ஷேர்ஸ் ஹர்ஷா கூடச் சேர்ந்து வாங்கி வச்சிருக்கேன். அதையும் வித்துடலாம்.”
அவன் தெளிவாகத் திட்டம் போட்டு காய் நகர்த்த, அவனுடைய வேகம் அவளை மருட்டவே செய்தது.
“நல்லா யோசிச்சு தான் இதுல இறங்கியிருக்கேன்... வீணா பயப்படாதே... நமக்கும் வீடுன்னு ஒண்ணு வேணாமா... எவ்வளவு நாள் அத்தை வீட்டுல வாடகைக்குன்னு இருக்க முடியும்..?”
“ஏஜென்சில வர்ற பணம் லோனுக்குப் போச்சுனா ஹோட்டல் அமவுண்ட் வீட்டு செலவுக்கு சரியா இருக்கும்... முதல் இரண்டு வருஷம் கொஞ்சம் டைட்டா தான் போகும். அப்புறம் ரெகுலரைஸ் ஆகிடும்...” அவன் என்னதான் திடமாகச் சொன்னாலும் அவளுக்குள் ஒரு பய வண்டு குடைந்து கொண்டு தான் இருந்தது.
‘இன்னிக்கு எப்படியும் பேங்க் லோன் அப்ரூவல் பேப்பர்ஸ் வந்துடும்னு சொன்னாரு... எல்லாம் பக்காவா வந்துடுச்சுன்னா நாளன்னிக்கு எல்லாரையும் கூட்டிட்டு போய் அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு வந்துடலாம்... லாயர்கிட்ட பேச சொல்லி ஆகாஷ்க்கு ரிமைண்ட் பண்ணணும்’ உள்ளுக்குள் கணக்கு போட்டபடி வந்தவள்,
சுகந்தி நீட்டிய தட்டை பார்த்து, “ஹை... இன்னிக்கு டிபன் ஆப்பம், தேங்காய் பாலா... சூப்பர்.... சூப்பர் அத்தே....“ நொடியில் மனநிலை மாறியவளாய் சூடான ஆப்பங்களை ஸ்வாகா செய்ய ஆரம்பித்திருந்தாள்.
**********************
“இல்லப்பா.. அதெல்லாம் வேணாம்...”
“.....”
“சொன்னா கேளுங்கப்பா... அதான் நான் ஏற்கனவே அம்மாகிட்ட சொல்லிட்டேனே..”
“......”
“திருப்பித் திருப்பி ஏன் இதையே பேசி டென்சன் ஆகுறீங்கப்பா... வி கேன் மேனேஜ்... முடியலைன்னா உங்களை தான் கேப்போம்... சோ ப்ரீயா விடுங்க...”
“.....................”
அந்தப் பக்கம் பேசியது காதில் விழவில்லை என்றாலும் பேச்சின் சாரத்தை உணர்ந்து கொள்ள முடிய, கட்டிலில் படுத்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷ் நேத்ரா இருந்த திசை நோக்கி திரும்பிப் படுத்தான்.
“என்ன...?” என்பதாய் அவன் சைகையில் கேட்க, “ஒண்ணுமில்ல...” என்று தலையசைத்த நேத்ரா, கொஞ்ச நேரம் ‘ம்ம்.. ‘ம்ம்ம்..’ என்று மட்டும் கொட்டிக் கொண்டிருந்தாள்.
நின்று, நடந்து, சாய்ந்து, அமர்ந்து எனக் கொஞ்ச நேரம் பேசிய பேச்சையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தவள், ஒருவழியாகப் போனை வைத்து விட்டு வர, “என்ன உங்கப்பா கூட ஒரே பாச மழையா....?” அவன் சீண்டினாலும் அவள் முகம் அவ்வளவு சௌஜன்யமாக இல்லை.
“அப்பா அமவுண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணி விடுறேன்னு ஒரே பிடிவாதம்.... ‘உங்களுக்குத் தானே எல்லாம், நான் இப்பயே கொடுத்தா என்ன தப்பு?’ன்னு ரொம்பக் கோபப்படுறாரு... அதான் வேணாம்னு சொல்லி பேசிட்டு இருந்தேன்...” சோர்வாக வந்தது அவள் பதில்.
பேருக்கு வங்கிக் கடனில் அவள் பேரையும் சேர்த்து விட்டானே தவிர, அவள் சம்பளப் பணத்தைக் கூடத் தொடாமல் ஆகாஷ் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்.
இப்படிப்பட்ட ரோஷக்காரனுக்கு அவள் தந்தை ஏதாவது கொடுக்கிறேன் என்று வந்தால் வீண் பிரச்சனை தான் வரும் என்று புரிந்து வைத்திருந்தவள், தன் பெற்றோரின் மனம் நோகாமல், ‘வேண்டாம்’ என்று சொல்லி அவர்களிடம் தனியே வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்.
“’’நீ இன்னும் என் பொண்ணு தானே’ன்னு கேட்டு திட்டுறாரு.... அம்மா வேற அப்பா சொல்றது தான் சரின்னு சப்போர்ட்... தாத்தா நடுவுல சிபாரிசு....” அவள் ஏதோ பக்கத்து வீட்டு கதையைச் சொல்வது போலக் காதில் வாங்கிக் கொண்டானே தவிர, ‘’ம்ம்’’ என்பதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அவன் அமைதி இருந்த கடுப்பை கிளறி விட, “அதான் நான் சொன்னேன், என் புருஷன் ரோஷக்காரரு, மானக்காரரு, கொஞ்சம் சீன்காரரு, பயங்கர பில்ட்-அப்காரருன்னு...” வந்த எரிச்சலில் அவள் நீட்டி முழக்க,
வாய் விட்டு சிரித்தவன், “உனக்கு மட்டும் நாளுக்கு நாள் நக்கல் கூடிகிட்டே போகுதே, அது எப்படி...?” அவள் காதைப் பற்றி வலிக்காமல் திருகினான்.
“எப்படியோ ஒரு வீட்டுக்கு சொந்தக்காரியாகிட்டே... அந்தச் சந்தோசத்துல எதுகை மோனைல்லாம் பிச்சு உதறுது....” அவன் வம்பு வளர்க்க,
“ம்ம்க்கும்... ஆமா.. போங்க...” வெகுவாகச் சலித்துக் கொண்டவளின் மனதில் உள்ளபடியே கொள்ளை மகிழ்ச்சி தான். இன்று மாலை தான் போரூர் சென்று அக்ரீமெண்ட் சைன் செய்து வந்திருந்தார்கள்.
இன்னும் மூன்று மாதங்களில் ரிஜிஸ்ட்ரேஷன். எல்லாமே தாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத வேகத்தில் நடந்து கொண்டிருக்க, அந்தச் சந்தோசத்தையும் தாண்டி அவள் மனது சொல்ல முடியா நமைச்சலில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.
‘இன்னிக்கு இதைப் பேசாம விடக்கூடாது...’ என்ற முடிவு செய்தது போல், “கொஞ்சம் அந்த மொபைலை தூக்கி ஓரமா வைக்குறீங்களா....? உங்களுக்கு நான் பொண்டாட்டியா, அது பொண்டாட்டியா...?” எரிந்து விழுந்தவள் அவன் கையிலிருந்ததைப் பறித்து அவனை முறைத்தாள்.
“எதுக்கு இப்படி வச்ச கண்ணு வாங்காம என்னையே பார்த்துட்டு இருக்க...? நான் என்ன அம்புட்டு அழகாவா இருக்கேன்..?” அவனுடைய கிண்டலிலோ,
“இந்தக் காதல் பார்வை, காதல் பார்வைனு சொல்லுவாங்களே, அந்த மாதிரி எதையாச்சும் ட்ரை பண்ணுறியா...? அந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பி கண்ணாடியை பாரு... காளியாத்தா பார்க்குற மாதிரி இருக்கு...” தொடர்ந்த அவனது நக்கலிலோ கொஞ்சமும் அசராத நேத்ரா,
“ஆகாஷ்... நான் செம காண்டுல இருக்கேன்... டோண்ட் டைல்யூட் தி டாபிக்...” வெகு சீரியஸாகப் பார்த்தாள்.
“நான் தெரியாமத்தான் கேக்குறேன்.. உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க...? அப்படியே யாருமேயில்லாம வானத்துல இருந்து ‘தொப்பு’ன்னு குதிச்சு நீங்க வளந்துட்டிங்களா...?” ஆரம்பிக்கும்போதே வேகமெடுத்தவள்,
“அப்பா கிட்ட நீங்க நடந்துக்கிற விதம் எனக்குச் சுத்தமா பிடிக்கல... என்ன முழிக்குறீங்க... எங்கப்பாகிட்ட இல்ல... உங்கப்பாகிட்ட...” எடுத்த எடுப்பிலேயே மூன்றாவது கியரை தட்ட,
“திடீர்னு என்னடி ஆச்சு உனக்கு...? என்ன விஷயம்னு டைரக்டா சொல்லு...” ஆகாஷின் குரலில் பொறுமை நழுவும் அபாயம் தெரிந்தது.
“என்னத்த டைரக்டா சொல்றது...? ஏன் உங்களுக்கே தெரியாதா....?” அவள் இரட்டித்ததில், எதைச் சொல்லுகிறாள் என்று புரிந்தாலும் அவனுக்கு எரிச்சல் தான் பற்றிக் கொண்டு வந்தது.
“மனுஷனை ஒரு நல்ல விஷயம் நடந்துருக்குன்னு சந்தோசப்பட விடுறியா..... எப்ப பாரு ஏதாவது ஒரு ராமாயணத்தை ஆரம்பிச்சுக்கிட்டு.....” சலிப்பாகப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
“இன்னிக்கு புது வீட்டுக்கு போனமே... அப்ப மாமா எவ்வளவு பூரிச்சு போய் ‘அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு’ன்னு உங்ககிட்ட வந்து வந்து பேசுறாரு... நீங்க என்னமோ ரப்பரை முழுங்கின மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு தலையைத் தலையை ஆட்டுறீங்க...”
கண்களை மறைத்திருந்த அவன் கையை எடுத்துவிட்டு நேத்ரா நியாயம் கேட்க, அவனுக்குத் தன் மேல் தவறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.
“இங்க பாரு... என்னால அப்படித் தான் இருக்க முடியும். மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில சிரிச்செல்லாம் டிராமா பண்ண முடியாது. அவரே அதையெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாரு... நீ தேவையில்லாம நோண்டி எரிச்சலை கிளப்பாதே...” அவள் பிடியிலிருந்த தன் கரத்தை உதறியபடி அவன் திரும்பிப் படுத்துக் கொள்ள,
“உங்களுக்குப் புரிஞ்சு கிழிச்சது அவ்வளவு தான். உள்ளுக்குள்ள அவரு எவ்வளவு புழுங்கி போறாருன்னு நெஜமா உங்களுக்குத் தெரியல.?” தொடங்கிவிட்ட பேச்சை தோல்வியோடு முடித்துக் கொள்ள நேத்ரா தயாராக இல்லை.
“ஆகாஷ்... ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா? ஒருவேளை நான் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த வீட்டுக்கு வந்திருந்தேனா எனக்கு எதுவும் வித்தியாசமா இருந்திருக்காதோ என்னவோ? ஆனா எனக்கு விவரம் தெரிஞ்ச நாளா அவரைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். எப்படி ரைட் ராயலா இருந்தவரு இப்படிக் குறுகிப் போய் நிக்குறதை பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா...”
சாம, தான, பேத, தண்டம் என அனைத்தையும் பிரயோகிக்க முடிவு செய்தவள், இப்போது தடாலெனக் கெஞ்சலில் இறங்க, “அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுற..? இதெல்லாம் அவரா வரவழைச்சுகிட்டது...” அவன் இறுகிப் போனவனாகச் சொன்னான்.
“இருக்கட்டுமே.. மனுஷன்னா அவன் தவறி கீழ விழவே மாட்டேனா...? இருங்க... இருங்க... குறுக்க வராதீங்க... அவரு தப்பு செஞ்சாரு தான். இல்லேங்கல... சின்னச் சபலத்துல வேண்டாத ப்ரெண்ட்ஷிப்ல போய் மாட்டிக்கிட்டு, அதனால எல்லாத்தையும் இழந்து நிக்குற மாதிரி ஆகி போச்சு... அதுக்காகக் காலம் முழுக்க அவரு குற்றவாளி மாதிரி தான் இருக்கணுமா...?”
அவள் கேட்பதற்கு எல்லாம் அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை. “ப்ச்...” சலிப்பாய் அவன் உதடுகள் முணுமுணுக்க, விழிகளோ கடந்து போன நாட்களின் வெம்மையில் அந்தகாரத்தை வெறிக்கத் தொடங்கின.
“அப்படி என்ன அவரு தப்பான வழியில சம்பாதிச்சு கோடி கோடியாய் சொத்து சேர்த்து வச்சிட்டாரா...? அவரு ஆசைப்பட்டது எல்லாம் ஸ்டார் ஹோட்டல் டின்னரு, பெரிய மனுஷங்க சகவாசம், அவங்களோட பார்ட்டி, லோக்கல் டூருன்னு ஜபர்தஸ்தான வாழ்க்கை... அவ்வளவு தான். அதுவே கூட தப்பு தான்... ஒத்துக்குறேன். அதுக்காக அதையே காலம் முழுக்கச் சொல்லிக் காட்டிட்டு இருக்கப் போறீங்களா...?”
அவன் கேட்கிறானோ, இல்லையோ சொல்லவந்ததைச் சொல்லி முடித்து விடும் உத்வேகத்தில் அவள் இருந்தாள்.
“மத்தபடி மாமாவும் சரி, அத்தையும் சரி, தங்களுக்குன்னு சுயநலமா எதையும் பதுக்கிக்கல. தாங்க அனுபவிச்சாங்களோ இல்லையோ, காசு பணம்னு உதவி கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் வாரி இறைச்சுருக்காங்க.... வீட்டுக்கு வந்தவங்களுக்கெல்லாம் முழு மனசோட வயிறார சாப்பாடு போட்டுருக்காங்க..”
“அந்தப் புண்ணியம் தான் நீங்க இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறதுக்கே காரணம்... அதைத் தெரிஞ்சுக்கோங்க முதல்ல....” அவள் இடக்காக இடிக்க, அவ்வளவு நேரம் இறுக்கத்துடன் இருந்தவன், அவள் கடைசியாகச் சொன்னதைக் கேட்டு சிரித்து விட்டான்.
“அடிப்பாவி... நான் ராப்பகல் தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு ஒவ்வொண்ணா சேர்த்து வச்சா, இவ கொடுக்குற விளக்கம் இருக்கே....” தலையில் அடித்துக் கொண்டவன்,
“அம்மா.... நியாயதராசே... நானும் உன் வழிக்கே வரேன்... நீ சொல்ற மாதிரி சறுக்குறது எல்லோருக்கும் சகஜம் தான். அதுக்காக அப்படியே இருந்துடுவாங்களா... எல்லாத்தையும் கையைக் கழுவி விட்டுட்டு, ஒதுங்கி மூலையில உட்கார்ந்துகிட்டா எல்லாம் சரியா போயிடுமா...?”
“அப்படிப்பட்ட பொறுப்பில்லாத ஆளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்துட்டா பெரிய இவ மாதிரி, போடி வேலையைப் பார்த்துக்கிட்டு....” நேற்று தான் எல்லாம் நடந்தது போல அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
“அ..வரு...” ஏதோ சொல்ல வந்தவளை இடை மறித்தவன், “உனக்கு இதெல்லாம் புரியாது நேத்ரா. இங்க எங்க அத்தை வீட்டுக்கு அகதி மாதிரி வந்து சேர்ந்தோம். இன்னிக்கும் எங்க மாமா முன்னாடி எனக்குக் கூசி போகுது, எங்க ஏதாவது பழைய கதையை எடுத்து பேசிடுவாரோன்னு.... ஆனா எங்கப்பாக்கு அந்த எண்ணமெல்லாம் கொஞ்சம் கூட இல்ல...”
“அன்னிக்கு நீயே பார்த்தியே... ரிப்பேர் பண்ணி இந்த வீட்டுலயே இருக்கலாம், குருகிட்ட நான் பேசுறேங்குறாரு... கொஞ்சமாச்சும் மான அவமானம்னு ஏதாவது இருக்கான்னு பாரு...”
“அது கூட வேண்டாம், நாம முன்னேறி மேல போவோம், இங்கேயே இப்படியே இருக்க வேணாம்னு கூடவா தோணாது?” மனதில் இருப்பதை எல்லாம் அவன் கொட்டிக் கவிழ்க்க, அவனுடைய ஆதங்கம் அனைத்தும் அவளுக்குப் புரியாமல் இல்லை.
“ஆகாஷ்... அவரு மனசளவுல ரொம்ப வீக்கா இருக்காருப்பா.... ரொம்ப மதிப்பா இருந்துட்டு இப்ப நம்மளை யாரும் மதிக்கிறதே இல்லைங்கிற இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்... ஒரு மாதிரி இன்செகுயுர்ட் பீலிங்.... அவருக்கு எதையும் பெரிசா யோசிக்கவே பயமா இருக்குனு நினைக்கிறேன்....” ஒரு மருத்துவராக விஸ்வத்தின் சைக்காலஜியை யோசித்துச் சொன்னாள்.
“ஓகே, அவரு தான் சரியில்லைன்னு தெரியுதுல்ல... ஒரே ஒரு நாளாச்சும் உங்கப்பா கிட்ட நீங்க பாஸிடிவ்வா நடந்து இருக்கீங்களா...? சிரிச்சு பேசியிருக்கீங்களா..? நாம நல்ல நிலைமைல தான் இருக்கோம்னு என்னிக்காச்சும் தைரியம் கொடுத்துருக்கீங்களா..?”
கேட்பதற்கு எரிச்சலாக இருந்தாலும், அவள் கேள்விகள் அவனைத் துளைக்கவே செய்தன.
“அதெல்லாத்தையும் விடுங்க... இந்த வீட்டுல என்ன வருமானம் வருது, என்ன செலவாகுதுன்னாவது அவருக்குத் தெரியுமா..? இது இதுவுமே இல்லாம, அவரு முன்னேறி மேல போகணும்னு எப்படி நினைப்பாரு...? நீங்க தானே அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கணும்...!?”
“அதுக்குன்னு நான் உங்களை மொத்தமா தப்பு சொல்லல... உங்க கோபத்துல நியாயம் இருக்கு தான்.. அதே நேரம் அவங்கள குறை சொல்லி நொந்துக்கிறதுலயும் எந்த அர்த்தமும் இல்லன்னு புரிஞ்சுக்குங்க...”
அவள் விரல்கள் அவன் முன்னுச்சி முடியை இதமாய் வருடிக் கொடுத்தாலும், துள்ளி சுழலும் சாட்டையைப் போன்று அவள் வார்த்தைகள் எல்லாம் பளிச் பளிச்சென்று வந்து விழ, பிரமிப்பில் பேசவும் மறந்தவனாக அவன் வாயடைத்துப் போயிருந்தான்.
“நீங்க ஒண்ணும் உங்கப்பாவா தலைக்கு மேல தூக்கி வச்சுக்க வேணாம், பாசத்தைப் பொழிய வேணாம். அட்லீஸ்ட் குடும்பத்துல இருக்குற ஒரு பெரியவரா நினைச்சு, அவருக்குரிய மரியாதையைக் கொடுங்க... டோண்ட் கண்டினியு இக்னோரிங் ஹிம். ஒருத்தரை தெரிஞ்சே ஒதுக்குறதை விட பெரிய பாவம் வேற ஒண்ணும் இல்ல....”
“மத்தபடி பழசையே நினைச்சு அந்த வலியையும் கஷ்டத்தையும் வாழ்க்கை பூரா சுமந்துக்கிட்டே இருக்கப் போறீங்களா..? அதை எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வெளில வாங்க ஆகாஷ்.... அது தான் நம்ம வாழ்க்கைக்கும் நல்லது”
அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவள் மென்மையாக சொல்ல, ஆகாஷ் ஒன்றும் சொல்லாமல் அவள் விரல்களை எடுத்து விட்டான்.
“இதுக்கு மேல இந்த விஷயத்தைப் பத்தி நான் எதுவும் பேசுறதா இல்ல... அப்புறம் உங்க இஷ்டம்... டூ வாட் எவர் யு வான்ட்...”
அவன் தொடர்ந்து அமைதியாகவே இருக்க, விறைப்பாகச் சொல்லிவிட்டு விளக்கை அணைத்தவள், காலோடு தலையாக போர்த்திக் கொண்டு படுத்து விட, அவனுக்குக் கொஞ்ச நேரம் முன்பு இருந்த சந்தோச அலுப்பு, சாதித்த களைப்பு எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
நேத்ரா இப்போது சொன்னதெல்லாம் அவனுக்கு ஒன்றும் புதிதான விஷயமில்லை. இத்தனை நாட்களாக அவன் மனசாட்சி மெல்லிய குரலில் உச்சரித்துக் கொண்டிருந்ததைத் தான் இன்று அவள் வாய் விட்டு கத்தியிருந்தாள்.
என்னமோ இன்று அவள் எடுத்துச் சொன்னதும் உள்ளுக்குள் பெருகிய பிழை உணர்வில் அவன் மனது அரித்துப் பிடுங்கத் தொடங்கி இருந்தது.
‘ஒருவேளை நான் தான் ஓவரா பண்றனோ...? இவ சொல்ற மாதிரி யாரு தான் தப்பு பண்ணல.... அதையே பிடிச்சுக்கிட்டு... வீட்டுல எல்லோரும் சரி, சரின்னு போறதை அட்வான்டேஜ் எடுத்துக்குறனோ....?’
குழம்பிய குட்டையாய் அறிவும் மனசும் தர்க்கம் பண்ண, எங்கேயோ, எப்போதோ படித்த வரிகள் தன்னிச்சையாக அவன் நினைவில் வந்து மோதின.
“Never ignore a person who loves you, cares for you and misses you, because one day, you might wake up and realize, you lost the moon while counting the stars”
மனதில் வலியோடு யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தச் சொற்களின் வீரியம் பெரும் அதிர்வைக் கொடுக்க, ஒருமாதிரியான குற்ற உணர்வு உள்ளத்தை மருக வைத்தது.
“உன்மேல் அன்பு செலுத்துபவரை ஒரு நாளும் உதாசீனம் செய்யாதே; அதை உணர்ந்து சுதாரிக்கும் வேளை, நட்சத்திரங்களை எண்ணும் அவசரத்தில் நிலவை நீ தவற விட்டிருக்கலாம்....”
இந்த வரிகளே மீண்டும் மீண்டும் மனதில் ஓட, தூக்கம் என்பது ஒரு பொட்டுக்கூட இல்லாமல் புரண்டுக் கொண்டிருந்தவன் ஆறுதலுக்காக அருகில் இருந்தவளை அணைத்துக் கொண்டபோது, வெளியே வானில் ஒளிர்ந்துகொண்டிருந்த நிலவு மெல்ல கீழே இறங்கி மறைந்து கொண்டிருந்தது.

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.