விழிகள் தீட்டும் வானவில் -18
“கங்க்ராட்ஸ் ஆகாஷ்.... யூ ஷுட் ரீச் க்ரேட் ஹைட்ஸ்... இன்னும் நிறைய நிறைய இந்த மாதிரி நீ சாதிக்கணும்...” அந்தப் பக்கம் இருந்து ஒலித்த உளமார்ந்த வாழ்த்தில் மலர்ந்து சிரித்த ஆகாஷ்,
“தேங்க்ஸ் ஹர்ஷா... வித் ஆல் யுவர் பெஸ்ட் விஷஸ் அண்ட் சப்போர்ட்..” நன்றி சொல்லி போனை வைத்து விட்டு சந்தோச ஆயாசத்துடன் அப்படியே சேரில் சாய்ந்து கொண்டான்.
வரிசையாக வாழ்த்துக்களும், குறுஞ்செய்திகளும், ஈ-மெயில்களும் வந்த வண்ணம் இருக்க, முதலில் விஷயம் அறிந்தவனுக்கு மகிழ்ச்சியை விட வந்த செய்தி உண்மையா என்ற சந்தேகம் தான் அதிகம் இருந்தது.
கொஞ்சம் முன்பு வந்த அதிகார பூர்வ தகவலுக்கு பிறகு தான் நிம்மதியான பூரிப்பு அவன் உள்ளமெங்கும்.
அவன் பணிபுரிந்திருந்த சினிமா அந்த வருடத்துக்கான சிறந்த தொழில்நுட்ப வேலைக்குரிய விருதை பெற்றிருந்தது. திரையின் பின்னணியில் அதிகளவு உழைப்பை கோரும் இந்த மாதிரி பணிகளுக்கு விருது கொடுப்பது சமீப காலங்களில் தான் ஆரம்பித்திருக்கிறது என்றாலும் நல்ல விஷயம், அல்லவா?
விஎப்எக்ஸ் வேலைகள் மற்றும் மூவி எபெக்ட்ஸ்க்காக பிரபல பத்திரிக்கை ஒன்று வருடா வருடம் கொடுக்கும் விருது வரிசை அது.
சௌமி கல்யாணத்துக்கு முன்பே முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று இரவும் பகலுமாக அவன் உட்கார்ந்து செய்திருந்த வேலை.
திரைப்படம் வெளிவந்த போதே அவனுடைய பணியைக் குறிப்பிட்டு நல்ல நல்ல விமர்சனங்கள் வந்திருந்தன. இப்போது விருதும் அறிவிக்கப்பட்டதில் கூடுதல் அங்கீகாரம் உணர்ந்தது அவன் மனம்.
‘எபர்ட்ஸ் ஆர் பெய்ட் ஃ’ஆப்...’ நெஞ்சம் முழுக்கத் ததும்பும் பூரிப்பு அலைகளும், திருப்தியுமாக ஆகாஷ் புன்னகைத்துக் கொண்டிருக்க,
“அப்புறம் தல... என்ன நீங்களே தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க? அப்புறம் எங்களுக்கு எல்லாம் எப்ப ட்ரீட்...?” கதவை திறந்து எதிரில் வந்து அமர்ந்த பிரவீன் கொக்கி போட்டான். பின்னாலேயே நான்சி, ஸ்வேதா மற்றும் அஜீஷ் சிரிப்போடு...
“உங்களுக்கு இல்லாததாடா... எப்ப போலாம்னு நீங்களே சொல்லுங்க...” சோம்பலும் உற்சாகமுமான இந்த மாதிரி அரட்டைகளை ரொம்பவே ரசிக்கும் ஆகாஷ் அவர்களிடமே கேட்டான்.
“இப்பயே கூட போலாம்... நாங்க ரெடி...” பிரவீனும் அஜீஷும் ஒரே குரலில் சொல்ல,
“நாளைக்குப் போலாமா...? செல்வா வேற இன்னிக்கு இல்ல.. இவங்களும் வீட்டுல சொல்லிட்டு பிளான் பண்ணிட்டு வர்றதுக்கு ஈசியா இருக்கும்... ஓகேவா ஸ்வேதா..? வாட் அபவுட் யு நான்சி..?” பெண்களின் சவுகரியத்தை விசாரித்துக் கொண்டவன்,
“ஹர்ஷா ப்ளஸ் மேகலாகிட்டயும் சொல்லணும். நாளைக்கு டேபிள் அவைலபிலிட்டி செக் பண்ணிட்டு அவங்க இரண்டு பேருக்கும் கால் பண்றேன். கொஞ்சம் ஞாபகப்படுத்து...” கொஞ்ச நேரம் தங்கள் வெற்றியையும், கொண்டாட்ட திட்டங்களையும் பற்றி மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“சரி.. நான் கிளம்புறேன்... இன்னிக்கு எந்த வேலையும் ஓடாது போல இருக்கு.. நீங்களும் சீக்கிரமாவே கிளம்புங்க... நாளைக்கு பார்த்துக்கலாம்...”
“ஹூய்ய்ய்.......” அவர்களுடைய உற்சாகக் கூக்குரலில் சிரித்துக் கொண்டே வெளியே வந்தவன் வீட்டிற்குக் கிளம்பினான்.
“நீ இங்க வர வேணாம்... நானே பார்த்துக்கிறேன்..” சற்று முன் அழைத்து வாழ்த்து சொன்ன நரேன் சொல்லியிருந்தான். அதனால் நேரே வீடு தான்.
இந்த மகிழ்ச்சியை அணு அணுவாக மென்று ருசிக்க வேண்டும் என்ற மன கிளர்ச்சியில் எல்லாப் பணிகளையும் தள்ளி வைத்து விட்டு வண்டியை கிளப்பியவனின் இதழ்கள் ரொம்ப நாட்களுக்குப் பிறகு உற்சாகமாக விசில் அடித்தது.
“வந்துட்டான் பாரு.. வா வா...” பேரனின் வண்டியை தெருமுனையில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்த பார்வதி உள்ளே பார்த்து குரல் கொடுக்க, சுகந்தியை தொடர்ந்து வேக வேகமாக வெளியே வந்த ராமநாதன். “அருமைடா தங்கம்.. ரொம்பச் சந்தோசமா இருக்கு” அவனைப் பெருமையுடன் அணைத்துக் கொண்டார்.
“இப்படி வந்து நில்லுப்பா...” கண்களில் நீரும், உதடுகளில் புன்னகையுமாக சுகந்தி ஆலம் எடுக்க, “எதுக்குத் தாத்தா இதெல்லாம்...? அத்தை நீங்க வேற...” அவனுடைய மறுப்பை லட்சியம் செய்யாத வைஷ்ணவி திருஷ்டி சுற்றி வெளியே எடுத்துப் போனார்.
”திருஷ்டி கழியட்டும்... இந்த அவார்ட் எல்லாம் கிடைக்கிறது சாதாரண விஷயமா?” பார்வதி மெச்சிக்கொள்ள, தாத்தா பாட்டி புடை சூழ உள்ளே வந்தவன்,
‘அப்பா எங்க?’ இந்தக் களேபரத்தில் விஸ்வம் இல்லாது போக, இந்தக் கேள்வியை மனதில் மட்டுமே கேட்டுக் கொண்டான். வாய் விட்டு கேட்க என்னவோ தடுத்தது.
அவன் கேட்காவிடினும் அதற்கு விடையாக வேகமாகச் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தார் விஸ்வம். “லேட்டாயிடுச்சு....” எல்லோரிடமும் பொதுவாக மன்னிப்பு கேட்பது போலச் சொல்லியவர் தன் மகனை நெஞ்சு கொள்ளாத பெருமையுடனும் பூரிப்புடனும் பார்த்தார்.
“அபிஷேகம் முடிஞ்சு அர்ச்சனை பண்ண நேரம் ஆயிடுச்சு..” தன் தாமதத்திற்கு விளக்கம் போல சொன்னவர், தன் கையில் இருந்த விபூதியை அவன் முன்னே நீட்டினார்.
எங்கே பழைய ஆகாஷ் மாதிரி சிரிப்புடன் கண்களை மூடிக் கொண்டு முகத்தை முன்னால் கொண்டு வந்து நெற்றியை காட்ட மாட்டானோ என்று அவருடைய உள்மனது ஏங்க, அதை உணர்ந்தும் உணராத ஆகாஷின் கரம் அவருடைய உள்ளங்கையைத் தொட்டுத் திருநீற்றை மட்டும் எடுத்துக் கொண்டது.
‘எங்க நல்ல நாளும் அதுவுமா அவங்கப்பா கிட்ட சுள்ளுன்னு ஏதாச்சும் பேசிடுவானோ?’ என்ற பயத்தில் அங்கேயே கண்ணாக இருந்த சுகந்தி மகனின் இந்தச் செயலிலேயே நிம்மதியுற்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.
சௌமியின் திருமணத்திற்குப் பிறகு தான் விஸ்வம் கொஞ்சம் தன் கூட்டிலிருந்து வெளியே வந்து பழையபடி பேச முயல்கிறார். அப்பா மகன் உறவு பெரிதாகச் சீர்படவில்லை என்றாலும் இந்தச் சுமூகத்திலேயே திருப்தி கொள்ள முயன்றது சுகந்தியின் உள்ளம்.
கொஞ்ச நேரத்தில் குணாவும் வந்து விட, பொழுது சந்தோசமான பேச்சில் கழிந்தது. இனிப்பு, பாயசத்துடன் அன்றைய இரவு உணவை எல்லோரோடும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு எழுந்த ஆகாஷ், தன்னுடைய அறைக்கு வந்தான்.
வரிசையாக பேஸ்புக், வாட்ஸ்அப் பார்த்து வந்திருந்த வாழ்த்துகளுக்கு நன்றி சொன்னவன், காலையில் நிதானமாகப் பேச முடியாதவர்களைக் கூப்பிட்டு சாவகசமாகக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
நண்பர்களிடம் பேசி முடித்து நூற்றுக்கு நூறு நல்ல மனநிலையில் இருந்தாலும், உள்ளே என்னவோ ஒரு வினோத உணர்வு பிராண்டிக் கொண்டு தான் இருந்தது. எத்தனையோ பேரிடம் பேசியும், சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டும் கூட மனசுக்குள் என்னவோ சின்ன வெற்றிடம் பரவியிருந்த மாதிரி ஒரு ஃபீல்.
குட்டியோ குட்டியூண்டு காற்றுக்குமிழ் நேரம் செல்ல செல்ல உப்பிக் கொண்டு மேலே வருவதைப் போன்ற இனம் புரியாத ஏமாற்றத்தில் அவன் இன்னொரு முறை போனை எடுத்து தன் இன்பாக்ஸ்சை ஆயிரத்தோராவது முறையாகப் பார்த்துக் கொண்டான்.
‘ஒருவேளை தெரியாதா?’
‘தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கூப்ட்டு இருப்பா...’
‘அது எப்படி இன்னும் தெரியாம இருக்கும்? வருண் காலைலயே கூப்ட்டு பேசிட்டானே... ஒரே கேம்பஸ்ல இருந்துகிட்டு இப்ப வரைக்கும் சொல்லாமயா இருப்பான்...’
‘ஒரு வேளை ஓடில இருந்தா கூட ஒரு மெசேஜ் அனுப்ப முடியாதா என்ன?’ சிறுபிள்ளை போன்ற ஏக்கத்தில் முணுமுணுவென்று கோபம் பொங்கியது.
‘பேசாம நானே பண்ணிடவா...?’
‘வேணாம்... அங்க போனதுல இருந்து அவ ஒரு போன் கூடப் பண்ணல. நானே தான் தாத்தாவ சாக்கு வச்சு பேசுறேன்..’ இந்தப் பக்கமும் இறங்கிவர முடியாமல் உள்ளம் சடைத்துக் கொள்ள, அவனுக்கு ஒருவகையில் அலுப்பாக இருந்தது.
நேத்ரா அருகில் இருக்கும்போது எல்லாம் தெரியவில்லை. அவள் என்று டெல்லி போகிறாள் என்று தெரிந்ததோ அன்றிலிருந்தே அவன் மனமே ஒரு நிலையாக இல்லை.
‘என் தொல்லையும் உனக்கு வேணாம். எங்கப்பா தொல்லையும் எனக்கு வேணாம்’ என்று எரிச்சலாகி இருந்தவள், ‘சென்னையும் வேணாம், கோயம்புத்தூரும் வேணாம்’ என டெல்லி சென்று விட்டாள்.
பிஜிக்கான தகுதித் தேர்வில் நல்ல ரேங்கில் வந்திருந்ததால் அவள் விரும்பிய துறையிலேயே அட்மிஷன் கிடைத்து விட்டது. வருண் ப்ராக்டிஸ் செய்யும் அதே யுனிவர்சிட்டி.
“ம்ம்... நடத்து நடத்து...” சௌமி திருமணத்திற்கு வந்து திரும்பியபோது இருவரையும் கண்கள் காட்டி வருண் கூட நேரடியாகக் கிண்டல் அடித்தான்.
“நீ வேற..? கொஞ்சம் சும்மா இருடா...” மென்னகையோடு அவன் தலையில் குட்டினாலும், ஆகாஷின் முகம் முழுக்கச் சிரிப்பே விரவி இருந்தது.
“யாரு முன்னாடியாவது இந்த மாதிரி உளறி வைக்காதே... இதெல்லாம் நடக்காத விஷயம்...” அவன் அப்போதும் வருணை கண்டிக்க,
“வேணாம் வேணாம்னு உன் வாய் தான் சொல்லுது. கண்ணெல்லாம் அந்தப் பக்கம் தான் இருக்குது...” ஆகாஷின் வயிற்றில் வலிக்காமல் குத்தி வருண் கேலி செய்ததில், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. இப்ப தான் அம்மணியே ரோஷமா இருக்காங்க.. கெடுத்து விட்டுடாதே...” ஆகாஷ் ஏதோ சொல்ல வேண்டுமே என்பது போலத் தான் சொன்னான்.
அப்போதுகூட அவன் பார்வை அனுவின் குழந்தையைத் தூக்கி வைத்து எதையோ ஊட்டிக் கொண்டிருந்த நேத்ராவின் மேல் தான் இருந்தது.
இவ்வளவு நாட்கள் பார்த்தவள் தான். என்னவோ தன் மனசுக்கு போட்டு வைத்திருந்த கட்டு எல்லாம் தளர்ந்து போனது போல அவன் இதயம் இலவம்பஞ்சாகக் கனமற்றுக் கிடந்தது.
ஒருவேளை தங்கை திருமணம் தான் பயந்தது போல இல்லாமல் நிறைவாக அமைந்து போனதில் அவனே அறியாமல் நெகிழ்ந்திருந்தானோ என்னவோ?
கல்யாண வீட்டின் கலகலப்பும் சந்தோஷமும் ஒருபக்கம் அவனுள்ளத்தில் ஆழ ஒளித்து வைத்திருக்கும் கற்பனைகளைத் தூர் வார, அவள் கோபத்தில் தன் பக்கம் திரும்பாமலேயே இருப்பது இன்னொரு புறம் சுவாரஸ்யமாக இருந்தது.
அதை விட எதைக் கேட்டாலும் சௌமியாகட்டும், சுகந்தியாகட்டும், ‘அம்முக்கு தான் தெரியும். அவகிட்ட கேட்டுக்கோ... அதை அம்மு பார்த்துப்பா” என்று தான் சொல்லி முடித்தார்கள். வீட்டுப் பெண்ணாய் திருமண ஜவுளி நகைகள் தொடங்கித் தாம்பூல பையிலிருந்து முறை செய்ய வேண்டிய வரிசைகள் வரை அவளிடம் தான் கணக்கு ஒப்படைத்து வைத்திருந்தார்கள் பார்வதியும், வைஷ்ணவியும்.
“சௌமி... பார்லர்க்கெல்லாம் கரெக்டா சொல்லிட்டியா? அவங்கள இரண்டு நேரமும் மண்டபத்துக்கு வர சொல்லு.... ட்ராபிக்ல நீ போயி பண்ணிக்கிறது எல்லாம் சரிப்படாது... கடைசி நேரத்துல டென்சன் பண்ணாதீங்க..” ஆகாஷ் கடைசி நேர ஏற்பாடுகளில் பரபரக்க,
“ம்ம்.. வந்துடுவாங்க தான்... அம்மு இங்க வாடி... அந்த அக்கா கரெக்டா வந்துடுவாங்கல்ல.... நீதானே நேத்து பேசின... ”
“ஏன்ம்மு... அந்த குந்தன் செட் மட்டும் இன்னிக்கே வந்து வாங்கிக்கோன்னு சொன்னாங்கல்ல.... மறந்தே போயாச்சு பாரு... நீ அண்ணா கூடப் போயி அப்படியே வாங்கிட்டு வந்துடேன்...”
“அண்ணா இவளையும் கூட்டிட்டு போ... அப்படியே மண்டப டெகரேஷனையும் பார்த்துட்டு எங்களுக்கு வாட்ஸ்அப் பண்ணுடி...”
சௌமி சில நேரம் அறிந்தும், பல சமயம் அறியாமலுமாக இருவரையும் கோர்த்து விட்டுக் கொண்டிருக்க,
“எல்லாம் நியாபகம் இருக்கு தாயே... அனுக்காவும் நானும் போயி எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடுறோம்... நீ கொஞ்ச நேரம் சும்மா இருந்தா அதுவே போதும்...” நேத்ரா முடிந்தவரை அவனுடன் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவே பார்த்தாள்.
“செல்லம்... அவன் கூடயே போயிட்டு வந்துடுடா... பாப்பாவை விட்டுட்டு வந்தா எந்த நேரம் அழுவும்னே சொல்ல முடியாது..” அனு சொன்ன காரணத்தில் அவளுக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. பேசாமல் பர்ஸை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“நீயும் வர்றியா...? ஆனா கார் இல்லையே.... வருண் எடுத்துட்டு மார்க்கெட் போயிட்டான். பைக் தான்... உனக்குப் பரவாயில்லையா...?” வேண்டுமென்றே ஆகாஷ் வினவ, நிமிர்ந்து பார்த்த அவள் பார்வையில் அனல் வீசியது.
அவள் எப்போதும் போலப் பேசி சகஜமாக இருந்திருந்தால் அவனுக்கும் கிண்டல் செய்யத் தோணியிருக்காதோ என்னவோ? அவன் பக்கமே பார்க்காமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டு, அப்படியே தப்பித் தவறிப் பார்த்தாலும் ‘வெட்டுவேன், குத்துவேன்’ என்கிற மாதிரியே முறைத்தால்...!?
அதை விட, தன்னுடன் வெளியே வர அவள் இல்லாத சாக்கு போக்கு சொல்ல, தன்னையுமறியாமல் பழைய துள்ளல் மீண்டிருந்தது அவனுக்கு.
“வேணும்னா ஆட்டோ பிடிக்கட்டுமா?” அவன் தொடர்ந்து சீண்ட, நேத்ரா முறைத்த முறைப்பில் வாயை மூடிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“ஹப்ப்பா ரொம்பச் சூடு இல்ல... என்னமா கொளுத்துது...!?” உதடுகளில் விரவிய கேலியோடு அவன் வானத்தைப் பார்த்து அலுக்க,
“ஆமா.. இவரு அப்படியே சுவிட்சர்லாந்துல பொறந்து வளர்ந்தவரு.. வெயில் கொளுத்துதாம்... வெட்டியா பேசாம வண்டிய எடுங்க...” கடுப்படித்துக் கொண்டே அவள் பின்னால் அமர்ந்தாள்.
தப்பித்தவறி அவளே அவனிடம் பேசினாலும் பச்சைமிளகாயின் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது தான், என்றாலும் அவனைப் பொறுத்தவரைக்கும் அந்த ஒரு வாரமும் இனிமையாகக் கழிந்தது.
அவள் மாலையில் வீடு வந்து இரவில் ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் கூடவே இருப்பது போன்ற கிளர்ச்சியும் உற்சாகமும் அவன் உள்ளத்தில் வெள்ளமாகப் பொங்கி பிரவாகித்துக் கொண்டிருந்தது.
சௌமி புகுந்த வீடு செல்லும் தினம் நேத்ராவும் கிளம்பி விடுவாளே என்று இவன் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்க, மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கிய மாதிரி இருந்தது வருண் சொன்ன செய்தி.
“அங்க எல்லா பார்மலிட்டியும் முடிஞ்சு ஸ்டுடண்ட் கோட் கூட வந்தாச்சு... நீ என்னமோ புதுசா கேக்குற...” என்ற வருண் “என்னமோ இந்த ஒரு வாரமா நான் பார்க்கிற படத்தை வச்சு கதை எங்கயோ போகும்னு நினைச்சா என்னடா நடக்குது இங்க..?” ஆகாஷை சீண்டவும் தவறவில்லை.
“எதுக்குடா... திடீர்னு இப்படி ஒரு முடிவு...?” முயன்றாலும் மறைக்க முடியாத பதட்டத்தை அவன் குரலில் உணர்ந்த வருண், பேசாமல் ஒரு நிமிடம் ஆகாஷையே பார்த்தான்.
“என்ன.. என் மூஞ்சில என்ன படமா ஓடுது..?” ஆகாஷ் முறைக்க, “ஆமா படம் தான் ஓடுது.... கேக்குறான் பாரு.... நீ தான் காரணம் ஆகாஷ்... உனக்கே தெரியும்.. அப்புறம் என்னத்துக்கு என்னைக் கேக்குற?” ” வருணுக்கும் எரிச்சல் வந்தது.
“ஏன் அவ ஏதாவது என்னைப் பத்தி உன்கிட்ட சொன்னாளா?” அவள் டெல்லி போகும் விஷயம் கூடத் தனக்குத் தெரியாதது ரொம்பவே பாதிக்க, ஆகாஷ் அதற்கும் கடுகடுத்தான்.
“என்னை முறைச்சு என்ன புண்ணியம்... அம்முவா எதுவும் சொல்லல... பட் ஐ கேன் கெஸ். ஏன்டா கண்ணு இருக்கிற யாராயிருந்தாலும் உங்க இரண்டு பேரையும் ஒரு மணி நேரம் ஒண்ணா வச்சுப் பார்த்தா தெரிஞ்சு போயிடும்... இதுல அவ சொன்னாளாவாம்...” நக்கலாக வருண் சிரித்தான்.
“மாப்ள.... நான் சீரியஸா சொல்றேன்... யூ போத் வில் மேக் எ ப்யுட்டிபுள் பேர். அண்ட் ஷி இஸ் வெரி வெரி சின்ஸியர் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ்.. அவ்வளவு தான் சொல்லுவேன், பார்த்துக்கோ... இப்ப விட்டுட்டு.... அப்புறம் தாடி வளர்த்துக்கிட்டு நாயை கூட்டிகிட்டு திரியாதே....”
வருண் வேண்டுமென்றே தள்ளாடிக் காட்ட, அவனுடைய பாவனையில் கவலையையும் மீறிய சிரிப்பு வந்தது ஆகாஷுக்கு.
“போடா... இவனே...” அவனைத் திட்டினாலும் வருண் சொன்ன விஷயம் ஆகாஷின் மனதினுள் ஆழமாக உள்ளே இறங்கத் தவறவில்லை.
அவளுள்ளம் உள்ளும் புறமும் அறிந்த விஷயம் தான். ஆனால், அவள் பிறந்த வீட்டின் உயரமும், தங்களின் நடுத்தர வர்க்க நிலைமையும், ஆங்காங்கே ஊடு பாய்ந்த முட்களாக அவள் அப்பாவின் நடத்தையும்...
‘இப்ப எல்லாமே பாஸிடிவ்வா தான் தோணும். பின்னாடி ஒருவேளை இங்க அட்ஜஸ்ட் ஆக முடியாம போயி... அவளால சந்தோசமா இருக்க முடியலன்னா... ஷி டிசர்வ்ஸ் எ மச் பெட்டர் லைப் தேன் திஸ்...’ இந்த எண்ணம் தான் அவனுக்கு...
இந்த நினைப்பெல்லாம் அவள் ஊரை விட்டு வெகு தொலைவுக்குச் செல்லப் போகிறாள் என்று தெரிந்ததும் எங்கே போனது என்றே தெரியவில்லை. கைப் பொருள் களவுப் போவது போல ஒரு தவிப்பு.
‘ஏன் என்கிட்டே சொல்லவேயில்ல...?’ உரிமையுடன் கேட்டுச் சண்டை போடவும் முடியவில்லை. ‘எங்க போகணுமோ போயிக்கோ... எனக்கென்ன வந்துச்சு...’ வீம்பாக ரோஷம் காட்டவும் இயலவில்லை.
அவளிடம் எப்படிக் கேட்க என்று தடுமாறியவன், சௌமி நரேனை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்த கையோடு நேத்ராவும் கிளம்ப, “எப்படியும் நான் கான்டீன் போகணும்... நானே டிராப் பண்ணிடுறேன்.. நீ தனியா ஆட்டோல எல்லாம் போக வேணாம்..” போகற போக்கில் கெத்தாகச் சொல்லி விட்டு சென்றான்.
‘இத பாருடா... என்னமோ தினமும் இவரு தான் கூட்டிட்டு வந்து கொண்டு போய் விடுற மாதிரி... ரொம்பத் தான் அக்கறை... இதுல அதிகாரம் வேற...’ எரிச்சலாக இருந்தாலும் எல்லோர் முன்னிலையிலும் அவளால் மறுக்க முடியவில்லை.
“இங்க தானே படிக்கிற போறேன்னு சொல்லிட்டு இருந்த.. திடீர்னு என்ன டெல்லி...?” வண்டி நகர்ந்த இரண்டாம் நிமிடம் ஆகாஷ் கேட்க, நேத்ராவுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது.
“சும்மா தான்... இந்த ஊரை சுத்தி பார்த்ததெல்லாம் போதும்னு தோணுச்சு.. எப்ப நான் நார்த் எல்லாம் பார்க்கிறது? அது தான்...” அவள் அசட்டையாகப் பதில் சொல்ல, அவன் சிறு முறுவலுடன் தலையை ஆட்டிக் கொண்டான்.
“எப்படிப் படிக்க மட்டும் தானா? இல்ல அங்கேயே இருந்துடுவியா...?” தன் தவிப்பை மறைத்த பாவனையில் வேண்டுமென்றே அவள் வாயை பிடுங்க, நேத்ரா மெலிதாகச் சிரித்தாள்.
“இப்ப படிக்கன்னு தான் போறேன்.. ஏதாவது ஆபர்ச்சுனிடி வந்தா அப்படியே பார்த்துக்க வேண்டியது தான். என்னையும் நம்பி வேலை கொடுத்தா வேண்டாம்னு விட்டுடுவேனா என்ன?” அவளுடைய கிண்டலான பதில் அவனுடைய ரத்தக் கொதிப்பை ஏற்றியது.
அவன் முகம் போன போக்கை கவனித்த நேத்ரா, ‘நான் விலாங்கு மீனாக்கும்’ மனதுக்குள் கிண்டலாகச் சொல்லிக் கொள்ள, “என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல...” வந்த கோபத்தில் வேகமாகவே கேட்டு விட்டான்.
அவள் ஒரு நிமிடம் ஒன்றுமே சொல்லவில்லை.
திரும்பி அவனையே தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள், ‘உங்ககிட்டயா...? உங்ககிட்ட எதுக்கு சொல்லணும்...?’ சலனமேயில்லாத முகத்துடன் கேட்க, ஆகாஷின் மூக்கு, முகம் எல்லாம் ரத்தம் ஏறி சிவந்து போனது.
“வாட் இஸ் தி பர்பஸ்...?” தனக்குள்ளேயே கேட்டுக் கொள்வது போலச் சத்தமாகச் சொன்னவள், தோளைக் குலுக்கியபடி ஜன்னல் பக்கம் திரும்பிக் கொள்ள, அவன் அந்த வித பதிலில் திகைத்துப் போனவனாக “ஓ...” என்றான்.
அதற்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. காரில் அப்படி ஒரு நிசப்தம்.
தான் அதிகம் பேசி விட்டது போன்ற குற்ற உணர்வில் அவள் மெதுவாகத் திரும்பி அவனைப் பார்க்க, அவனின் தொண்டைக் குழி காய்ந்து போய் ஏறி ஏறி இறங்கியது.
இறுகிய தாடையும், கடினமான பார்வையுமாகச் சாலையிலேயே அவன் கவனமாக இருக்க, “இங்கயே நிறுத்திக்குங்க... லைப்ரரி போய்ட்டு போகணும்..” அதற்குள் கல்லூரி வளாகம் வந்திருந்ததில் அவள் நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்.
கதவை சார்த்தி ஜன்னல் பக்கமாகக் குனிந்து “தேங்க்ஸ்” என்றவள், “வர்ற பிப்டீன்த் ஊருக்கு போறேன். அங்க ஒரு மாசம் இருந்துட்டு அங்க இருந்து நேராவே டெல்லி போயிடுவேன்....”
சில நிமிடங்களுக்கு முன்பு தான் வெடுக்கென்று பேசியதற்கு மருந்து போடுவது போல அவள் மெல்லிய குரலில் தகவல் சொல்ல, உதடுகளை மடித்துக் கொண்டு சம்பிராதயமாகப் புன்னகைத்தவன், “ம்ம்.. ஓகே.. ஆல் தி பெஸ்ட்...” என்றான்.
வழக்கமான ஆகாஷ் என்றால் அவள் வெறுப்பேற்றியதற்கு ‘இதை மட்டும் எதுக்கு என்கிட்ட சொல்ற?’ என்று தான் கடுப்படித்திருப்பான்.
அவனுடைய மென்மை அவனுக்கே ஆச்சரியமாக இருக்க, “அங்க பார்த்து இருந்துக்கோ... பி சேப் அண்ட் அட் தி சேம் டைம் ஹேவ் ஃபன்...” அவனுடைய அக்கறையான இதத்தில் அவளுக்கு மயக்கமே வரும் போலிருந்தது.
உண்மையில் அவன் கவனம் கோபம் கொள்வதிலோ, எதிர் வாதம் செய்வதிலோ இருக்கவில்லை.
‘இன்னும் இரண்டு வாரம் தான் இங்க இருப்பாளா? அதுக்கப்புறம் எப்ப பார்க்கிறது?’ கணக்கு போட்டு மனம் மலைத்துக் கொண்டிருக்கையில் அவன் எங்கே சண்டைக்கு வருவான்?
அந்தச் சமயம் தான் அவளுடன் அதிக நேரம் செலவழித்தது. அதற்குப் பிறகான இரண்டு வாரத்தில் இங்கு இருந்த வருணின் புத்தகங்களைக் கொண்டு போய்க் கொடுக்க ஒரு முறை, கேண்டீனில் அவள் நண்பர்களோடு ஒரு முறை என்று பார்த்தான். நின்றெல்லாம் பேச முடியவில்லை.
அவள் கோவை கிளம்பிய அன்று, சௌமியும் சுகந்தியும் எதையோ மூட்டை கட்டிக் கொடுக்க அதைக் கொண்டு போய்க் கொடுத்தவனின் நெஞ்சம் இரும்பு குண்டால் கட்டி இழுத்தது போலக் கனத்துக் கிடந்தது.
நேத்ராவும் பார்க்க ரொம்பவே சோர்வாகத் தெரிந்தாள். “நிறைய லக்கேஜ் இருக்கா? எத்தனை மணிக்கு ட்ரைன்? நான் வந்து சென்ட்ரலுக்கு ட்ராப் பண்றேன்”
அவன் ஆழமான குரலில் பேசிக்கொண்டிருக்க, அவள் உள்ளுக்குள் என்ன நினைத்தாளோ, தெரியாது. அவள் கண்கள் மட்டும் கலங்கிய மாதிரி இருந்தது.
“இல்ல ஆகாஷ்... அப்பா வந்துருக்குறாரு..... கார்லயே போயிடுவோம்.” என்றாள். அதற்குமேல் அவன் சொல்ல என்ன இருக்கிறது?
‘சரி போ... ஸ்டேஷன் வரைக்கும் போலாம்னு நினைச்சேன். அதுவும் முடியாது...” மனதுக்குள் சலிப்பாக இருக்க, “சரி... பார்த்துக்கோ... டேக் கேர்...” என்றவன் விடுவிடுவென்று வெளியே வர, அவளும் பின்னாலேயே வந்தாள்.
அவன் வண்டியை ஸ்டாண்ட் நீக்கி அமர, “வீட்டுக்கு தானே?” அவள் கேள்விக்கு அவன் தலை ‘ஆமாம்’ போட்டது. முயன்றாலும் எந்தச் சொல்லையும் உதட்டிலிருந்து பிரிக்க முடியாத மாதிரி அவன் இதழ்கள் உலர்ந்து போயிருந்தன.
வண்டியின் பக்க கண்ணாடியில் ஒற்றை விரல் கொண்டு ஏதோ கோலம் வரைந்தவள், “ரொம்ப அலையாதீங்க... உடம்பை பார்த்துக்குங்க... ஒழுங்கா டைமுக்கு சாப்பிடுங்க....” அக்கறையாகச் சொல்லிக் கொண்டே போனாள்.
“வேலை எப்பவும் தான் இருக்கும். உங்களுக்குன்னு கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணுங்க... என்ன புரியுதா? அடுத்தத் தடவை பார்க்குறப்ப எனக்கு அந்தப் பழைய மங்கி பாய் ஆகாஷ்ல ஒரு பத்து பர்சென்ட்டாவது தெரியணும்...”
ஏதோ அந்த நிமிடம் தோன்றிய உரிமையில் செல்லமாக அவள் அதட்ட, அவன் கண்களை எட்டாத சிரிப்புடன் “ம்ம்... “ என்றான்.
அதற்கு மேல் என்ன பேச என்று தடுமாற்றத்தில் அவள் அமைதியாக, “சரி... ஓகே... நான் கிளம்புறேன்... பை...” தலையசைத்து கிளம்பிவிட்டான், ரிவர் வியு மிர்ரரில் தன்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அவள் கண்களை விடாமல் பார்த்தபடி.
அதற்குப் பிறகு இந்த ஆறு மாதத்தில் தாத்தா உடம்பு சாக்கில் ஓரிரு முறை போன் பேசியதோடு சரி.
இப்போது விருது கிடைத்திருக்கிறது என்ற சந்தோசமான தருணத்தில் அவளுடைய அழைப்புக்காக அவன் மனம் ஏங்க, அவளுடைய சிலாகிப்புக்காக அவன் செவிகள் காத்திருந்தன. ஆனால் என்னவோ தெரியவில்லை, அவள் கூப்பிடவே இல்லை.
இனம் விளங்கா ஏக்கம் பரவியதில், “நீ உண்மையிலேயே ரொம்பத் தூரம் போயிட்ட இல்ல....” அவன் ஒற்றை விரல் அவளுடைய புகைப்படங்களை நகர்த்தின. அந்தக் கோபத்திலும் அவன் கண்கள் அவளுடைய அழகை, எளிமையை, இயல்பை, குறும்பை ரசித்து உள்வாங்கிக் கொள்ளத் தவறவில்லை.
எல்லாமே சௌமி திருமணச் சமயத்தில் எடுத்தவை. கல்யாண ஆல்பம் போடும்போது அவளுடைய பிரத்யேக ஸ்னேப்களைத் தனியாகச் சுட்டு எடுத்து வைத்திருந்தான். எவ்வளவு நேரம் அந்த கேலரியையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியாது.
‘கிண்கிணி’ என்ற குல்பி ஐஸ் வண்டியின் மணி சத்தம் தொலைவில் கேட்க, நேரம் நள்ளிரவை நெருங்கி விட்டதை உணர்ந்தவன், ‘ம்ஹும்.. இது சரிபடாது...’
தன் மொபைலை குப்புற கவிழ்த்து விட்டு தானும் குப்புற கவிழ்ந்து படுத்தான். கண்களை மூடிக் கொண்டானே தவிர எங்கே, தூக்கம் என்னவோ சுத்தமாக வரவில்லை.
அலைபேசி செய்த வேலையை இப்போது அவனுடைய மனபேசி செய்ய, அவளது முகம் மட்டுமே அவன் விழித்திரையில் ரிவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது.

Author: SudhaSri
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -18
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.