விழிகள் தீட்டும் வானவில் -16
“என்ன கண்ணு இது..? மணி பத்தாச்சு... இன்னும் ரூமுக்குள்ள படுத்துகிட்டு….? நீ வந்திருக்கன்னு ஆசை ஆசையா இடியாப்பம் பிழிஞ்சு வச்சா, அது பாட்டுக்கு ஆறி அவலா போச்சு....”
தனக்கு அறைக்கதவை திறந்து விட்ட நேத்ராவை உரிமையுடன் கண்டித்தபடி உள்ளே வந்த செல்வி, சுவாதீனமாக ஜன்னலின் திரை சீலைகளை ஒதுக்கி விட்டார்.
வெள்ளமென அறைக்குள் பாய்ந்த புது வெளிச்சத்தில் கண்கள் கூசிப் போக, அவள் மீண்டும் படுக்கையில் தலை சாய்த்துக் கொண்டாள். “நல்லா தான் போ.. எந்திருச்சு வா முதல்ல.” அதட்டல் போட்ட செல்வி சுண்டிப் போயிருந்த அவள் முகத்தைப் கவனித்துப் பதறிப் போனார்.
“என்ன கண்ணு ஆச்சு...? மூஞ்செல்லாம் பொசுக்குனு போயிருக்கு...”
“ஒண்ணும் இல்லக்கா... ஒரே தலைவலி... எனக்கு டிபன் வேணாம். ஒண்ணா மத்தியானம் சாப்பிட்டுகிறேன்” தலையை இருகைகளாலும் பிடித்தபடி சரிந்து இருந்தவளை கவலையுடன் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார் மாலதி.
“என்னக்கா அம்மு தலைவலின்னு சொல்லுது. ஒரு மாத்திரை கொடுத்து தூங்க வச்சிருக்கலாமில்ல... சரி, நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்...” செல்வி மாலதியையும் அலுத்துக் கொண்டே கீழே இறங்கி செல்ல, பெண்ணின் உண்மையான காரணம் அதுவல்ல என்று உணர்ந்திருந்த மாலதி மௌனமாக அவள் அருகில் வந்து அமர்ந்தார்.
நேற்று இரவு அவள் வந்ததில் இருந்தே அவரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார், கண்களைப் பார்த்துப் பேசாமல் தனக்குள்ளேயே எதையோ வைத்து போராடிக் கொண்டிருக்கும் மகளை.
“ஏண்டி நாலு மணி வரைக்கும் ரூம்ல லைட் எரியறதும், அணைக்கிறதுமா இருந்துச்சு. கதவை வேற தாழ்பா போட்டு வச்சிருந்த...” மகளின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தபடி அவர் கேட்க,
“இல்லம்மா.... என்னமோ தூக்கமே வரல.... அதான் காலைல தலையை வலிக்குது ...” என்று அவர் மடியில் தலை வைத்து படுத்தவள், இரண்டே நிமிடங்களில் ஒரு முடிவுடன் எழுந்தாள்.
“அம்மா... ஒரு நிமிஷம்.... குளிச்சிட்டு வந்துடுறேன். உங்ககிட்ட பேசணும்...” குளியறைக்குள் சென்று விரைந்து தயாராகிச் செல்வியின் திருப்திக்காகக் காபியையும் மாத்திரையையும் விழுங்கி விட்டு அன்னையின் அருகில் வந்து உட்கார்ந்தவள்,
“ம்மா... வந்து... உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்..” ஆரம்பித்த முதல் வார்த்தையில் தான் தயக்கம் இருந்தது. அதற்குப் பிறகு அவள் மடமடவென தன் மனதில் இருப்பதைக் கொட்டி விட மாலதி தான் வார்த்தை வராமல் சமைந்து போயிருந்தார்.
“என்னடி சொல்லுற...?” கொஞ்ச நாட்களாகவே பெண்ணின் நடவடிக்கைகளை வைத்து ஒரு சந்தேகம் ஊவா முள்ளாக அவர் நெஞ்சில் உறுத்திக் கொண்டு தான் இருந்தது. அது உண்மைதான் என்று அவளே பிட்டு பிட்டு வைக்க,
“இது விளையாட்டு இல்ல.. அம்மு.. உனக்கு இப்படி ஒரு எண்ணம் வரும்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல... அப்படி ஒருவேளை தோணியிருந்துச்சுன்னா அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வர்றதை எல்லாம் வேணவே வேணாம்னு சொல்லியிருப்பேன்... கடைசில உங்கப்பாவோட கவலை சரின்னு ஆயிடுச்சுல்ல... இந்தப் பேச்சை இத்தோட விட்டுடு... இது சரிப்பட்டு வராது...” உள்ளுக்குள் பதறினாலும் வெளியே அழுத்தமாகவே பேசினார் மாலதியும்.
அன்று ஆகாஷ் சொன்னதையே இன்று அம்மாவும் சொல்ல, நேத்ராவின் மனதில் புயல் அடித்தது.
“ஏம்மா சரிவராது...? அவரும் இதே தான் சொல்லுறாரு... நீங்க என்ன வேணும்னாலும் திட்டிக்கோங்க.... நான் கல்யாணம்னு பண்ணிக்கிட்டா ஆகாஷை தான் பண்ணிப்பேன்... இல்லேன்னா கவர்மெண்ட் போஸ்டிங் கேட்டுட்டு எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிடுறேன்...” தைரியமாகப் பேசுவது போலிருந்தாலும் அவளுடைய சொற்கள் அனைத்தும் விரக்தியில் குளித்து வந்தன.
அன்று வெட்கம் துறந்த வேகத்தில் அவன் மார்பில் சாய்ந்து மன்றாடியும் கூட ஆகாஷ் கடைசியாகச் சொன்னது “இது ஒத்து வரவே வராது” என்பதைத் தான்.
ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தன் மேல் சாய்ந்திருந்தவளை அணைத்துக் கொண்டிருந்தவன் வெளியே கேட்ட சௌமியின் பேச்சுக் குரலில் தீப்பட்டது போல அவளை உதற, நேத்ரா விதிர்த்து தான் போனாள்.
வேகமாக விலகி நகர்ந்தவன், தலையை இடம் வலமாக ஆட்டியபடி, “டோன்ட் பி எ எமோஷனல் பூல், நேத்ரா.... நாம நினைக்கிறது எல்லாம் நடக்குறதுக்கு இது ஒண்ணும் சினிமா இல்ல.”
“எனக்கு லைப்னா என்னன்னு தெரியும். அதைவிட நிதர்சனத்துல என்ன நடக்கும்னும் தெரியும்.. சோ லீவ் இட் ஆஸ் இட் இஸ்....” என்றான் உறுதியான குரலில்.
இவளுக்கு என்னமோ யாரோ நாலு பேர் முன்னால் வைத்துக் கன்னத்தில் அறைந்தது போன்ற அவமானம். உடல் முகமெல்லாம் சூடாகி விட்டது.
‘இவன் மாறவே மாட்டானா...?’ குளிரும் வெயிலுமாக மாறி மாறி படுத்துபவனை என்ன செய்ய...? விளங்காத யோசனையில் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “அண்ட் சாரி பார் வாட் ஹேப்பண்ட் நவ்...” அவளுடைய கண்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டு ‘விட்டால் போதும்’ என்கிற மாதிரி தன்னறைக்குள் விரைந்து விட்டான்.
“எதுக்கு அம்மு இப்ப கிளம்பணும்கிற? அதுக்கு உங்கப்பா கூடயே போயிருக்கலாம் இல்ல.... ஏண்டி திடீர்னு என்ன ஆச்சு...?” தன்னை அதட்டும் தங்கையின் குரல் அவனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும். இருந்தும் அவன் வெளியேயே வரவில்லை.
“இல்ல சம்ஸ்.... இப்பதான் ஞாபகம் வந்துச்சு. ஒரு அசைன்மெண்ட் முடிக்கணும்.. நானும் சுஜியும் நைட் வொர்க் பண்ணி முடிச்சா தான் ஆச்சு..” வேக வேகமாகத் தன் பொருட்களை எடுத்துக் கொண்டவள், சுகந்தி மற்றும் விஸ்வத்தின் கேள்விகளுக்கு என்ன என்னவோ வெற்றுக் காரணங்கள் சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அதற்கு மேல் அங்கே ஐந்து நிமிடங்கள் கூடுதலாக இருந்தாலும், தான் உடைந்து போய் விடுவது உறுதி என்று தெரிந்து போன பின்னால் அங்கேயே இருந்து அழுது கிழுது வைத்து பெரியவர்களுக்கு வேறு ஏன் தர்மசங்கடம் தர வேண்டும்?
ஆட்டோ பிடிக்கத் தெருமுனை வரை வந்த சௌமி தோழியைத் துளைத்து எடுத்து பார்த்து விட்டாள், “என்ன ஆச்சு... அவன்கிட்ட ஏதாச்சும் பேசினியா? என்ன திரும்பவும் சண்டையா?” என்று.
நேத்ரா ஒன்றுமே சொல்லாமல் வழியில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்த முயல, சௌமி அவளுடைய தோளை அழுத்தமாக பற்றி தன் பக்கம் திருப்பினாள். நேத்ராவால் சௌமியை நேருக்கு நேராகப் பார்க்கவே முடியவில்லை.
நீர்த்திரை பார்வையை மறைக்க, “ப்ச்.. விடுடி...” அவளுடைய கரத்தை எடுத்து விட, “அம்மு... எனக்குத் தெரியும்டி... அவன் ஏதாவது திட்டியிருப்பான்...” சிறு முறைப்பும் பெரு ஆதங்கமுமாக நேத்ராவை பார்த்தாள் சௌமி.
“நான் இப்படிச் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத... இப்ப நான் அவனோட தங்கச்சியா பேசல... உன்னோட பிரண்டா மட்டும் தான் பேசுறேன். யூ டிசர்வ் எ பெட்டெர் பெர்சன்டா... அவனோட கோபமும் வேகமும்...”
“வேண்டாம்.. அதெல்லாம் எதுக்கு இப்ப..? உன் காதலுக்கு அவன் தகுதி தானான்னு எனக்கே சமயத்துல ஆத்திரம் ஆத்திரமா வருது... உன் அருமை அவனுக்குப் புரியாதுடா..”
மென்மையான பூ போன்றவள் நேத்ரா. அவளுடைய அருமை தெரியாமல் அலைகழிக்கும் ஆண் தன் உடன் பிறந்தவனாகவே இருந்தாலும் சௌமிக்கு பொறுக்கவில்லை.
‘அவனை விட எனக்குத் தகுதியான ஆளு வேற யாரு..?’ நேத்ரா வெளியே சொல்லவில்லை. கசந்த சிரிப்புடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், “வேணாம்டி.. ஏற்கனவே நொந்து போயிருக்கேன். நீ வேற எதுவும் பேசாதே... நான் கிளம்புறேன்...” என்றபடி தன் அருகில் வந்து நின்ற வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.
அதற்கு மேல் சென்னையில் இருக்கவே வெறுப்பாக இருந்தது. ஆறுதலாகப் பேசிய சுஜியையும், அவ்வப்போது அழைத்து நலம் விசாரித்துக் கொண்டிருந்த சௌமியையும் கூட நேருக்கு நேராக பார்த்து மனதில் கொதித்துக் கொண்டிருப்பதைக் கொட்ட முடியாத புழுக்கம். பேசாமல் இரண்டு நாள் லீவ் போட்டுவிட்டு ட்ரைன் ஏறி விட்டாள்.
இதற்குமேலும் இதை உள்ளுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் அவ்வளவு தான் என்று தோன்ற அம்மாவிடமும் சொல்லிவிட்டாள். எதிர்ப்பு வரும் என்று தெரியும்.
வரட்டும்... எல்லோருக்கும் தெரியட்டும்.. காதலுக்கு எதிராகப் பெற்றோரோ, மூன்றாம் மனிதரோ நின்றால் அவர்களை கன்வின்ஸ் செய்யலாம். காத்திருந்து ஆன பாடு படலாம்.
யார் துணை நிற்க வேண்டுமோ அவனே விலகி விலகி செல்ல, மறைத்து வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்ற விரக்தி கொடுத்த துணிச்சல் அவளுக்கு.
‘அட்லீஸ்ட் என் கல்யாண பேச்சை எடுக்காம இருந்தா கூடப் போதும்... இரண்டு பக்கமும் இடி வாங்க என்னால முடியாது.’ அப்பா வேறு அழுத்தம் திருத்தமாக அந்தக் கோயம்புத்தூர் மாப்பிள்ளையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, அவளும் தான் வேறு என்ன செய்வாள்?
மாலதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆகாஷ் நல்ல பிள்ளை தான். ஆதி நாள் முதல் பார்த்துக் கொண்டிருப்பவனை அவருக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், தங்கள் ஒரே செல்ல மகளுக்கு மாப்பிள்ளையாக...
அவர் அப்படியெல்லாம் யோசித்ததில்லை. அருகருகே வளர்ந்தவர்கள் என்று பிள்ளைகளின் நட்பை மதித்துப் பழக அனுமதித்தால்..? அவருக்கு ரவியை நினைத்தாலே பக்கென்று இருந்தது.
ஒருவேளை அவர்கள் குடும்பம் பழைய செல்வ செழிப்பில் இருந்திருந்தாலும் கூடக் கணவன் மாமனாரை சம்மதிக்க வைப்பது கடினம். இப்போதோ, நடுவில் ஏதேதோ நடந்து அவர்கள் இருக்கும் நிலைமை... மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
‘ஏன் இந்தப் பொண்ணுக்கு இப்படிப் புத்தி போச்சு...?’ மனதை பிசைந்த எண்ணங்களுடன் அவர் அவள் அறையில் இருந்து வெளியே வர, ஹால் பால்கனியில் கடுமையான முகபாவத்துடன் ரவி நின்று கொண்டிருந்தார்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவர் பொருமிக் கொண்டிருந்த கோலமே சொல்லாமல் சொன்னது நேத்ரா சொன்ன விஷயங்கள் எல்லாம் அவர் காதிலும் விழுந்து விட்டன என்று.
“என் கால் தூசிக்குப் பெறுமானம் இல்லாத இடம். சை... உன் பொண்ணுக்கு என்னடி மூளை கழண்டு போச்சா...?” தன்னைக் கண்டதும் எரிந்து விழுந்தவரை என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றார் மாலதி.
“நான் அப்பயே சந்தேகப்பட்டேன்.. நீ தான் கண்டபடி கற்பனை பண்ணாதீங்கன்னு கதை சொல்லிட்டு இருந்த... நல்லா கேட்டுக்க.. இதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்... அவகிட்ட சொல்லி வை” தாம் தூம் என்று குதித்த கணவனை ஆழ்ந்த வருத்தத்துடன் பார்த்தார்.
பெண்ணைப் பெற்றவராக அவருடைய ஆதங்கம் நூற்றுக்கு நூறு சரி தான். ஒரு தாயாகத் தனக்கும் மகளின் விருப்பம் பெரிய அதிர்ச்சி தான். ஆனாலும்...
“எம்எஸ், எம்எடின்னு பாரின் போய்ப் படிச்சிட்டு வந்த பசங்க எல்லாம் க்யுல வந்து நிக்குறானுங்க.. இவ என்னடான்னா அந்த அன்னாடங்காய்ச்சி பின்னால... சோத்துக்கும் கட்டின துணிக்கும் பஞ்சமில்ல... அவ்வளவு தான்...”
“என்ன தகுதி இருக்கு அவனுக்கு...? வெக்கங்கெட்டவனுங்க... பொண்ணை வளைச்சுட்டா மொத்த சொத்தையும் தூக்கிடலாமில்ல...” ரவி பேசிக் கொண்டே போன தரமற்ற வார்த்தைகளை ஒரு கட்டத்துக்கு மேல் மாலதியால் சகிக்கமுடியவில்லை.
“போதுங்க... வார்த்தையை விடாதீங்க... ஆகாஷும் சரி, சுகந்தி வீட்டுல மத்தவங்களும் சரி.. இந்த மாதிரி கோணலா யோசிக்கிறவங்க இல்ல... அந்தப் பையனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா தெரியல.. இவ தான் பிடிவாதமா இருக்கா...”
தான் நினைப்பதையே மனைவியும் கடைசி வரியாகச் சொல்ல ‘ம்ஹ்ம்..’ ஒரு உறுமலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் ரவி.
“நீங்க கொஞ்சம் மனசு வச்சிருந்தீங்கன்னா அந்தப் பையனும் நீங்க எதிர்பார்க்கிற ஸ்டேட்டஸ்ல இன்னிக்கு நின்னுருப்பான் இல்ல... இனாமா யாரு கேட்டாங்க.. கடனா கூட.... ” மனசு பொறுக்காமல் மாலதி இழுக்க, ‘ஜிவுஜிவு’ என்றானது அவர் முகம்.
“தராதரம் தெரியாம நீயும் உன் பொண்ணும் இழுத்து வச்சிருக்கிற வினையெல்லாம் போதாதா? இதுல பழைய கதையை எடுத்து பேசுறே... அறிவு கெட்டவளே.. உன் வளர்ப்பு சரியா இருந்தா ஏன்டி இப்படி...?”
குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்த மனதை கோப உணர்ச்சியில் மறைத்து கொண்டாரோ என்னவோ..? தன்னைத் திட்டிக் கொண்டே அங்கிருந்து நழுவி விலகிச் செல்லும் கணவனை ஒன்றுமே சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் மாலதி.
அவர் மட்டுமல்ல. தன் அறையிலிருந்தபடி இங்கே காது கொடுத்துக் கொண்டிருந்த நேத்ராவும் கூட.
**********************
அந்த நாள் இன்றும் கூட நன்றாக நினைவில் இருந்தது அவளுக்கு. ஆகாஷ் வந்து அப்பாவிடம் அவமானப்பட்டுத் திரும்பிய நாள்.
‘இதெல்லாம் தொடங்கி வச்சது நான் தானே..?’ அன்றைய வருத்தம் வருடங்கள் பல கடந்து இன்றும் பச்சைப் புண்ணாக வலிக்க, அவள் உதடுகள் சலிப்பாக ‘ப்ச்’ என்றன. கைகளோ மேசையில் கிடந்த பேம்ப்ளட்டை தன்னிச்சையாக புரட்டியது.
“அபிராமியம்மாள் அறக்கட்டளை” பெரிதாக ஒளிர்ந்தது முகத்துப் பக்கத்தில். நேத்ராவின் தந்தை வழிப் பாட்டி பெயர் அபிராமி. ரவி தன் தாயின் பெயரில் நடத்திக் கொண்டிருந்த ட்ரஸ்ட் அது.
கடைசி நாட்களில் மனைவியின் விருப்பம் அறிந்து அவருடைய நகைகளின் ஒரு பகுதி மற்றும் அபிராமி அம்மாளின் பிறந்த வீட்டில் இருந்து பிரித்துக் கொடுத்த சொத்துக்கள் என எல்லாவற்றையும் திரட்டி மகனிடம் கொடுத்து விட்டார் சோமசுந்தரம்.
“உங்க அம்மா ஆசைப்படி இந்தப் பணத்தையெல்லாம் நல்ல காரியத்துக்கு உபயோகப்படுத்து...” என்று அவர் தூக்கிக் கொடுத்த பல லட்சங்கள் முதலீடுகளாகப் பெருகி நிறைய பேருக்கு உதவி செய்து கொண்டிருந்தது.
கல்வி உதவித் தொகைகள், மருத்துவ அவசரங்களுக்கு அந்தந்த பின்னணியை விசாரித்துச் சரியாகவே உதவி செய்து கொண்டிருந்தார் ரவி. இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார்.
ரவியில் கணக்கு பிசகிப் போனது ஆகாஷ் விஷயத்தில் மட்டும் தான். அதற்கு ஒரு விதத்தில் அவர் மனதில் தோன்றியிருந்த காழ்ப்புணர்ச்சியும் காரணம் என்பதை அவர் மட்டுமே அறிவார்.
என்னதான் அருகருகே வசித்தாலும் விஸ்வத்திடம் ரொம்ப நெருங்கியதில்லை ரவி. ‘புதுப் பணக்காரன்.. ரொம்பத் தான் ஆடுறான்..’ என்று ஆரம்பம் முதலே விஸ்வத்தின் மேல் ஒரு எண்ணம்.
‘ஓவரா பந்தா பண்ணுறான்.. என்னிக்கு வழுக்கி விழப் போறானோ...?’ விஸ்வத்தின் தாட் பூட் வாழ்க்கை முறையைப் பார்த்து அபிப்ராயம் கொண்டிருந்த பரம்பரை செல்வந்தர்களில் அவரும் ஒருவர்.
அதனால் தான் விஸ்வம் வரிசையாகப் பிரச்சனைகளில் சிக்கியபோது மாலதி, சோமசுந்தரம் அளவுக்கு அவர் மனதார பரிதாபப்படவில்லை. நன்றாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை. ‘இது இப்படித் தான் ஆகும்னு எனக்கு எப்பவோ தெரியும்..’ என்று மூன்றாம் மனிதராகக் கடந்து போய் கொண்டிருந்தார்.
அப்போது தான் சோமசுந்தரம் “அந்தப் பையன் படிப்புக்கு நம்ம ட்ரஸ்ட்ல உதவ முடியுமா பாரு..?” என்று கேட்டார். “சரி... முதல்ல அவங்க வர்ராங்களா பார்க்கலாம், அதுக்கப்புறம் பேசிக்கலாம்” என்று எளிதாகவே சொன்னார்.
நேத்ரா ‘ப்ளீஸ் பா.. ப்ளீஸ் பா..’ என்று பின்னாலே சுற்றிய போது கூட, “நொய் நொய்னு பண்ணாதே அம்மு... நான் பார்த்துட்டு தான் முடிவு பண்ண முடியும்...” என்று கண்டித்தவர்,
“அப்பா, மாலு... உங்க இரண்டு பேருகிட்டயும் இப்பயே சொல்லி வைக்கிறேன். பிரண்ட்ஷிப் வேற... ட்ரஸ்ட் விஷயம் வேற... நான் கன்வின்ஸ் ஆனா தான் எதுவுமே... சோ, என்னை இந்த விஷயத்துல பிரஸ் பண்ணாதீங்க...“ என்று எல்லோரையும் ஒரே போடாகப் போட்டு அடக்கி வைத்தார்.
ஒருவேளை ஆகாஷ் வீட்டிலிருந்து அப்படி யாரும் வர மாட்டார்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!?
ஆனால், உண்மையாகவே அவர்கள் அணுகியபோது அவருடைய தோரணையே வேறு மாதிரி இருந்தது.
“கண்டிப்பா உதவி செய்வாங்க. நான் சோமசுந்தரம் அண்ணன் கிட்டயும் பேசி இருக்கேன்.. நீ என் கூட வா ... வந்து உன் பைலை மட்டும் கொடு...’ என்று ராமநாதன் வற்புறுத்தி அழைத்து வந்திருந்ததால் தயங்கி தயங்கி தன் வீடு வந்தவன் தளர்வாகத் திரும்பி சென்றது இன்று நடந்து போல இருக்கிறது.
அன்று மாலை நேரம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு தன்னைக் காண வந்தவர்களை நன்றாகத் தான் வரவேற்று உட்கார வைத்தார் ரவி. குளிர்பானங்கள் கொண்டு வர சொல்லி ராமநாதனையும் ஆகாஷையும் உபசரித்தார்.
“என்ன மாமா இப்படி ஆகிப் போயிடுச்சு...?” சம்பிராதயமாக ராமநாதனிடம் விசாரித்தவர், “சரி கவலைப்படாதீங்க.. நீங்க வீட்டை வித்துட்டு போனாலும் நல்ல கைல தான் கொடுத்துட்டுப் போகப் போறீங்க. வாங்கி இருக்கிறது நமக்குத் தூரத்துப் பங்காளி முறை தான்...” சௌஜன்யமாக ஆறுதலும் சொன்னார்.
ஆகாஷின் படிப்புத் தடைப்படும் விஷயம் சொல்லி அதற்கு உதவ முடியுமா என்று சன்ன குரலில் ராமநாதன் பேச்சை ஆரம்பித்ததும் ரவியின் தொனியே மாறிப் போன மாதிரி இருந்தது. அண்டை வீடு, நட்பு, பல வருஷத்துப் பழக்கம் எல்லாம் மறைந்து சாமர்த்தியமான பிசினஸ்புள்ளி அவதாரம் மட்டுமே அங்கே.
“நாங்க பொதுவா ப்ரொபஷனல் கோர்ஸ்கெல்லாம் பணம் ஒதுக்கிறதில்ல... அதுவும் மெடிசனுக்கு எல்லாம் உதவி பண்ணற அளவுக்கு இது பெரிய ட்ரஸ்ட்டும் இல்ல....” அவர் ஆரம்பிக்கும் விதத்திலேயே ராமநாதனின் நம்பிக்கை தளர ஆரம்பித்திருந்தது.
ஆகாஷின் நிலைமையோ இன்னும் மோசம். கடைசியாக பற்றிக் கொள்ளக் கிடைத்த கயிறும் அவிழ்ந்து கொண்டது போலப் பிடிப்பில்லாமல் அவன் அமர்ந்திருந்தான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவரிடம் தன்னுடைய தேவைகளை எடுத்துச் சொன்னான்.
“நீங்க ஒரு வருஷத்துக்கு ஹோல்ட் கொடுத்தீங்கன்னா கூடப் போதும் அங்கிள். நான் என்னோட ப்ரொபசர்ஸ் கிட்ட அப்ரோச் பண்ணி பார்ட் டைம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க ட்ரை பண்ண போறேன். ரிசர்ச் ஸ்காலர்ஸ்க்கு அப்ரெண்டிஸ் மாதிரி சில வேலைகள் கிடைக்கும்.”
“அதை வச்சு என் மத்த செலவையெல்லாம் பார்த்துப்பேன்... நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணினீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும். இதை நான் கடனா வாங்கிக்கிட்டுக் கூடிய சீக்கிரம் திருப்பிக் கொடுத்துடுறேன்...” தன் தயக்கம், கூச்சம், வெட்கம் எல்லாவற்றையும் தள்ளி வைத்து படிப்பை காப்பாற்றிக் கொள்வதே குறியாக அவன் நயந்து வேண்ட,
“எப்பப்பா வரும் அந்த சீக்கிரம்...? அஞ்சு பத்து வருஷம் கழிச்சா...? நீ எப்ப படிப்பை முடிக்கிறது? எப்ப திருப்பி தர்றது...? ம்ம்... இருந்தாலும் நல்லா தான் சொல்ற... திருப்பி கொடுக்கணும் நினைக்கிறியே... அதுவே பெரிய விஷயம் போ....“
தான் சொன்னதை நகைச்சுவை என்று நினைத்து தானே பெரிதாகச் சிரித்தவர், பணம் கொடுத்து உதவி செய்வாரா, மாட்டாரா என்றே கண்டுபிடிக்க முடியாத லயத்தில் பேசினார்.
அவருடைய இடக்கான பேச்சில் எண்ஜாண் உடம்பும் குறுகிப் போனவராக ராமநாதன் அமர்ந்திருக்க, ஆகாஷ் மிடறு விழுங்கிக் கொண்டான்.
“நீங்க பைலை கொடுத்துட்டு போங்க... நான் பொறுமையா உக்காந்து பார்த்துட்டு சொல்றேன். பீஸ் டீடைல்ஸ், வருஷவாரியா என்னென்ன தேவைப்படும்னு இருக்குல்ல... சரி... ஒரு வாரத்துல சொல்றேன்...” என்று அவன் கொடுத்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டார்.
ஒரு வாரம் என்று சொன்னவர், ஊரில் இல்லை, ஹைதராபாத் போகிறேன், அது இது என்று பதினைந்து நாட்களுக்கு மேல் அலைய விட்டார்.
மாலதியும் சோமசுந்தரமும் வந்து வந்து ஏமாந்து திரும்புபவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்துப் போக, நேத்ரா வேறு இன்னொரு பக்கம், அழாத குறையாகச் சிபாரிசு பிடித்து அம்மா தாத்தாவின் பின்னாலேயே அலைந்தாள். அப்பாவை நச்சினால் வேண்டுமென்றே அவர் மறுத்து விடுவாரோ என்று அது வேறு பயமாக இருந்தது.
ஒருவழியாக அன்று ஆகாஷை வீட்டுக்கு வர சொன்னவர், முடிவு காணா தொடர்கதைக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அது சுபமாகத் தான் இல்லை என்றால் தேவையில்லாத வார்த்தைகளைக் கொட்டி சிறு இளைஞனின் மனதில் வைராக்கியத்தையும் உறுதியையும் விதைத்துப் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார்.
“நான் எங்க ஆடிட்டர்கிட்ட இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணேன்.. ஆனா அவரு ஒண்ணும் பாசிடிவா சொல்ல மாட்டேங்குறாரு...” என்று ஆரம்பித்தவர், அதற்குப் பிறகு கொட்டியது எல்லாம் விஷ வார்த்தைகள் தான்.
“நான் மட்டும் கன்வின்ஸ் ஆகி ஒரு பிரயோஜனமும் இல்லப்பா.... உங்க அப்பாவோட கிரெடிபிலிட்டி சுத்தமா நெகடிவ்ல இருக்கு. நீங்க ஐ பி கொடுக்கப் போறீங்களோன்னு கூட ஏதோ பேச்சு போச்சுல்ல.. அதை நான் நம்பலன்னு வை.”
“இப்பயும் என்ன காஸிப் போகுதுன்னா, உங்கப்பா பணத்தை எல்லாம் எங்கயோ சேப்டி பண்ணிட்டாரு. வீடு விக்கிறது, கார் விக்கறதுனு எல்லாமே ஒரு செட்டப் டிராமா தான். கொஞ்ச நாள்ல வேற ஊருக்கு போயி தம் ஆயிடுவீங்கன்னு பேசிக்கிறாங்க..... “
“நீயே சொல்லு தம்பி. நீ படிக்கிற பையன் தானே.... இந்த மாதிரி பேக்கிரௌண்ட்ல நான் எப்படி உனக்கு எங்க ட்ரஸ்ட்ல இருந்து பண்ட் ரிலீஸ் பண்ண முடியும்....? எங்க கம்பனி லாயரும் வேணாம்னு தான் பீல் பண்றாப்புல”
இவர் சொன்னார், அவர் சொன்னார் என்று தன் மனதில் இருப்பதைத் தான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று எதிரில் அமர்ந்திருப்பவனுக்கு நன்றாகவே புரிந்தது.
‘கொடுக்க மாட்டேன் என்றால் முதல்லயே சொல்லலாமே.. ஏன் இப்படி அலைய விட்டு நம்பிக்கை கொடுத்து, கடைசில இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கையை விரிக்கணும்....?’ நேருக்கு நேரான குற்றச்சாட்டில் முகம் சுண்டிப் போக,
“இட்ஸ் ஓகே சார். எனி வே நீங்க இவ்வளவு தூரம் கன்சிடர் பண்ணி பார்த்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்..” உள்ளே கொதித்துக் கொண்டிருந்தாலும் வெளியே நாகரீகமாக நன்றி சொல்லி விருட்டென்று எழுந்து வெளியே வந்தான்.
“பார்த்தியாயா ...? அங்கிள் போய் சார் ஆயிடுச்சு..? இவனுங்களுக்கு எல்லாம் பணத்தை உடனே எடுத்து கொடுத்தா நல்லவன்.. இல்லன்னா இப்படித் தான் எடுத்தெறிஞ்சு பேசுவானுங்க..”
“பிராடு பசங்க... அப்பன் மட்டுமில்ல.. குடும்பமே போர் ட்வென்டி தான்.. நான் சொல்றேன் பாரு.. எங்கயாச்சும் சேப்டி பண்ணியிருப்பானுங்க... நாலஞ்சு வருஷம் கமுக்கமா இருந்துட்டு அப்புறம் எடுத்து விடுவானுங்க பாரேன்...” தன் பிஏவிடம் அவர் எகத்தாளத்துடன் சொல்வது தெளிவாகவே அவன் செவியில் விழுந்தது.
காதில் விழுந்தாலும் பதிலுக்கு என்ன ஓடிப் போய் அவர் சட்டையைப் பிடிக்கவா முடியும்? கொடுக்கும் இடத்தில் இருந்து இறங்கி வாங்கும் இடத்தில் கை ஏந்தி நிற்கும் நிலை வந்தால் இப்படி எல்லா ஏளனங்களையும் சகித்துக் கொள்ளத் தானே வேண்டும்.
கண்கள் கலங்கியபடி அவன் வெளியேற, தந்தைக்குக் காபி கொடுக்கும் சாக்கில் அந்த அறைக்குள் நுழைந்த நேத்ராவிற்கு ரவி கடைசியாகப் பேசியது மட்டும் கேட்க அவள் அதிர்ந்து போனாள்.
“அப்பா.. என்னப்பா இது...?”
“நீ சின்னப் பொண்ணு... வாயை மூடிக்கிட்டுப் போய்ப் படிக்கிற வழியைப் பாரு...” அவர் ஓங்கி அதட்டல் போட்டதில் அதற்கு மேல் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை.
வெளியே ஓடி வந்து தோட்டத்தில் அவனை இடை மறித்தவள், “ஆகாஷ்... அப்பா... இந்த மாதிரி.... சாரி....” அந்த வயதுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல், அதே சமயம் அவனையும் சமாதானம் செய்ய வேண்டுமே என்ற தவிப்பில் தடுமாற, அவன் ஆத்திரமும் ஆதங்கமுமாக அவளை முறைத்தான்.
“போதும் தாயே... உங்க பணத் திமிரை காட்டுறதுக்கு நாங்க தான் கிடைச்சோமா..?... சை... எல்லாம் எங்க கெட்ட நேரம்..... இப்படி எல்லார்கிட்டயும் அசிங்கப்படணும்னு...” அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. விடுவிடுவென்று வெளியே நடந்து விட்டான்.
சிவந்து கன்றிப் போய் அங்கிருந்து விலகி சென்ற அந்த முகமும், அவனுடைய தொய்ந்த குரலையும் அவளால் மறக்கவே முடியாது. அதற்குப் பிறகு மாலதி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். சோமசுந்தரம் எடுத்து சொல்லிப் பார்த்தார். நேத்ரா அழுதுப் பார்த்தாள். ஆனால் ரவி மசிகிற பாடாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் வசதியில் அந்த உதவித் தொகை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஆனால், கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டுமே... அப்படிப்பட்ட அப்பா இப்போது அவனைத் தான் காதலிக்கிறேன், கல்யாணம் செய்து கொண்டால் அவனைத் தான் செய்து கொள்வேன் என்று சொன்னால் உடனே ஒத்துக் கொண்டு மண்டபம் பார்க்க போய் விடுவாரா, என்ன?
நேத்ரா தனக்குள் கிண்டலாகச் சிரித்துக் கொண்டாள். அவள் அறிந்து தான் வைத்திருந்தாள், தன்னுடைய காதலுக்காக எல்லோரிடமும் போராட வேண்டும் என்று, தான் உயிராக நேசிப்பவனையும் சேர்த்து....

Author: siteadmin
Article Title: விழிகள் தீட்டும் வானவில் -16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.