• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விரதம் - ஒரு அறிமுகம்

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
விரதம்.....

அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை

‘ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி’


இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் நீதிவெண்பாவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“நோயிலே படுத்ததென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே “ என்கிறான் பாரதி.

"லங்கணம் பரம ஒளஷதம்" என்கிறது ஆயுர்வேதம். லங்கணம் என்றால் உணவு உண்ணாமல் இருப்பதாகும். அதேபோல பரமம் என்றால் உத்தமம் என்றும் ஔஷதம் அல்லது அவுடதம் என்ற வார்த்தைக்குச் சிகிச்சை என்றும் பொருள்.


மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும்


வயிற்றுக்கு பெரிய விடுதலையை கொடுக்கக்கூடியது விரதம். சாப்பிட்டவற்றை செரிமானம் செய்து களைத்துப் போயிருக்கும் வயிற்றுக்கு நாம் நோன்பிருந்தால் ஓய்வு கிடைக்கும். ஆகவே, வயிற்று உபாதைகள் தீரும். சாப்பாட்டை தவிர்ப்பதில் சில நன்மைகள் கிடைக்கின்றன.


ஆனால், விரதமிருப்பது அனைவருக்கும் உகந்ததல்ல. குறிப்பாக சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு வியாதி உள்ளவர்கள் உணவினை தவிர்த்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறைந்து ஆபத்தை விளைவிக்கக்கூடும். சாப்பாட்டை தவிர்ப்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பின்னரே முடிவெடுங்கள். ஒருநாளுக்கு மேற்பட்ட நேரம் (24 மணி) சாப்பிடாமல் இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருக்கும்போது போதிய ஓய்வெடுப்பதோடு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் கவனமாக இருத்தல் வேண்டும்

உபவாசம்:


இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மதங்களைப்பொறுத்தவரை விரதம் இருப்பதை உபவாசம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர். இதற்கு இறைவனுக்கு சமீபமாக இருப்பது என்பது பொருள். எல்லா மதங்களிலும் உபவாசம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாக சொல்ல படுகிறது.. அதன் அடிப்படையில்தான் இந்துக்கள் சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினங்களிலோ அல்லது வெள்ளி போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ , சில விசேஷ நாட்களிலோ உபவாசம் இருக்கிறார்கள். இறைவனுக்கு உகந்தது என்றும் அந்த நாட்களில் விரதம் இருந்தும் வருகிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருப்பது கடமையாக கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமாக கருதுகின்றனர். இப்படி, பெரும்பாலான மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை உணவு உண்ணாமல் இருக்கும் விரத முறையாகும்.

யார் விரதமிருப்பது?

கபம், பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடலில் அதிகம் மலம் உடையவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் (குளிர்காலங்களில்) உண்ணா நோன்பை மேற்கொள்ள மிகவும் தகுதியானவர்கள் என்கிறது ஆயுர்வேதம். மற்றவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரதம் கடைபிடிப்பதே சிறந்தது. உணவு உண்ணாமையை, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது கடைப்பிடிப்பது நல்லது.


நன்மைகள்

உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும்.

ஏனென்றால், உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கின்றன.



உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டைச் சீராக்குகிறது. ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டுகிறது. குறிப்பாக, பசியைத் தூண்டும் ஹார்மோனான க்ரைலின் (Ghrelin) சுரப்பைச் சீராக்கி பசியின்மையைப் போக்கும்.

உடலில் உள்ள பிராணவாயு உள்ளிட்ட 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டைச் சீராக்கும். இந்த வாயுக்கள் உடல் இயக்கத்துக்கு முக்கியமானவை. இவை வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) அதிகரிக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகள் (HDL cholesterol) அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்புகளைக் குறைத்து மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும். உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

உடல் வலிமை உள்ளவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு (Athletes) வலுவான தசைகளுடன் அழகான உடல் கட்டமைப்பு கிடைக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கு உடல் எடை குறைய உதவுகிறது. இதுதவிர மனத்தூய்மை, மன வலிமை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

Author: siteadmin
Article Title: விரதம் - ஒரு அறிமுகம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom