வான பிரஸ்தம் -21
அப்படி என்ன தான் நடந்திருக்கும் நிஷாந்தியின் குடும்பத்தில்?
.விஷாகாவிற்கும் நிஷாந்திக்கும் என்ன சம்பந்தம் என்பதைக்
காலச் சக்கரத்தைப் பின்பக்கமாகச் சுழற்றித் தான் போய்ப் பார்க்க வேண்டும்.
நிஷாந்தியின் தந்தை சத்யனும் தாய் கலாவும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். சத்யன் பணக்கார வீட்டின் ஒரே வாரிசு. கலா குஜராத்தில் இருந்து சென்னை வந்து ஸெட்டிலான பிஸினஸ் குடும்பத்தின் ஒரே வாரிசு. இரண்டு பேருக்கும் பணக்காரப் பின்புலம் என்றதால் திருமணத்திற்கு அதிகத் தடைகள் இருக்கவில்லை. திருமண வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. விஷாகா,நிஷாந்தி என்று இரண்டு பெண் குழந்தைகள். விஷாகா அமைதியான பெண். நிஷாந்தி கொஞ்சம் துணிச்சலான அதிரடிப் பெண்.
கலா திருமணத்திற்குப் பின்னர் தனது படிப்பைத் தொடர்ந்தாள். எம்.எஸ்.சி., எம்.ஃபில், பி.ஹெச்.டி. என்று வரிசையாகப் பட்டங்கள் தொடர்ந்தன. அவளுக்கு பிஸினஸில் ஆர்வம் இல்லை. சத்யன் ரியல் எஸ்டேட் பிஸினஸில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிப் பேரும் புகழும் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தார்.
குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள், விரிசல்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்தச் சண்டைகளுக்கு தூபம் போட்டு விரிசல்களை அதிகமாக்கியதில் சத்யனின் நண்பரும் தூரத்து உறவினருமான அன்பழகனுக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது.
அன்பழகன் ஏதோ பிஸினஸ் செய்து அதில் நொடித்துப் போனதால் அவர் மேல் கருணை கொண்ட சத்யன் அவருக்குப் புகலிடம் கொடுத்துத் தன்னுடனே வைத்துக் கொண்டிருந்தார். தன்னுடைய பங்களாவின் அவுட் ஹவுசில் அன்பழகனின் குடும்பத்திற்கு தங்க இடம் கொடுத்து அன்பழகனைத் தனது பிஸினஸில் தனக்கு உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
நண்பரின் நல்ல குணத்தையும் உதவி செய்யும் மனதையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார் அன்பழகன். அன்பழகனும் அவருடைய மனைவியான பேராசை பிடித்த கோகிலாவும்
சத்யனின் இல்லற வாழ்வில் ஏற்பட்ட சச்சரவுகளுக்கு மூல காரணம். இரண்டு பேரின் மனங்களையும் மெல்ல மெல்லக் கரைத்து ஒருத்தருக்கு எதிராக இன்னொருத்தரைத் திருப்பி விட்டார்கள்.
சண்டைகள் பெரிதாக வெடிக்க ஆரம்பித்தன. இனி சமாளிக்க முடியாது என்ற நிலையில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். எதிர்பார்த்தபடி விவாகரத்து கிடைத்துவிட்டது. குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. பெரிய பெண் விஷாகா அம்மாவுடன். நிஷாந்தி அப்பாவுடன் என்று முடிவு செய்தனர்.
மனம் ஒடிந்து போன கலா சென்னையே வேண்டாம் என்று விஷாகாவைக் கூட்டிக் கொண்டு மும்பை சென்று குடியேறி விட்டாள். அவளுடைய பிறந்த வீட்டு உறவினர்கள் மும்பையில் நகைக் கடைகள் வைத்திருந்த பணக்காரர்கள். கலாவும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை தேடிக் கொண்டு அங்கேயே ஸெட்டில் ஆகி விட்டாள்.
மனைவியும் குழந்தையும் பிரிந்து சென்ற பின்னரும் சத்யனால் அவர்களைச் சட்டென்று மறக்க முடியவில்லை. கலா இருந்த கோபமான மனநிலையில் தனது முகவரியோ தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களோ கொடுத்துச் செல்லவில்லை. நிஷாந்தி மிகவும் சின்னக் குழந்தையாக இருந்ததால் அவளை
கவனிக்கும் சாக்கில் அன்பழகனும் கோகிலாவும் சத்யனின் பங்களாவிலேயே வந்து நிரந்தரமாகக் குடியேறி விட, வீட்டுப் பொறுப்புடன் நிர்வாகமும் கோகிலாவின் கைகளில் வந்து விட்டது. கம்பெனியின் முக்கியமான வேலைகளை அன்பழகன் மேற்பார்வை செய்ய ஆரம்பித்தார்.
நிஷாந்தி என்னவோ முதலில் இருந்தே
கோகிலாவிடம் ஒட்டாததால் ஊட்டியில் போர்டிங் ஸ்கூலில் சேர்த்தனர். கல்லூரிப் படிப்பு முழுக்க முழுக்க லண்டனில்.
இப்போது தான் படிப்பை முடித்து விட்டு சென்னை வந்து அப்பாவின் கம்பெனியில் நேரடியாகப் பொறுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையில் இருந்து
அம்மாவையும் அக்காவையும் பார்க்க ஏங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
அன்பழகன் நண்பனுக்கு உதவி செய்வதாகச் சொல்லி ஒரு முறை மும்பைக்கு நண்பனின் மனைவி, குழந்தையைத் தேடிச் சென்றார். அவர்கள் இருவரும் 2001 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று தங்களுடைய சொந்த ஊரான அகமதாபாத் சென்றிருந்த சமயம் திடீரென்று ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்து விட்டார்கள் என்ற தகவலை மும்பையில் இருந்து திரும்பி வந்தவுடன் சத்யனிடம் சொல்லி விட்டார். சோகத்தில் ஆழ்ந்த சத்யன் இந்த விஷயத்தை நிஷாந்தியிடம் மறைத்து விட்டார்.
அந்த சமயத்தில் கலாவும்,விஷாகாவும் அகமதாபாத் சென்றது உண்மை தான். ஆனால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் மட்டும் தவறானது.
நிஷாந்தி கம்பெனியின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டதில் இருந்து அன்பழகனால் அங்கு வாலாட்ட முடியவில்லை. அவரிடமிருந்த முக்கியமான பொறுப்புக்களைத் தானே எடுத்துக் கொண்டு அவர் செய்து வைத்திருந்த குளறுபடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நிஷாந்தி சரி செய்து கொண்டிருந்தாள்.
அன்பழகனால் ஒன்றும் தில்லுமுல்லு செய்ய முடியாமல் பரிதவித்துப் போய் நின்றார். அவருடைய தறுதலை மகன் தயா என்ற முரடனை எப்படியாவது நிஷாந்திக்கு மணம் செய்து வைத்து சொத்துக்களை அபகரிக்க நினைத்த அவருடைய திட்டங்கள் தோல்வியுற்றன. புத்திசாலியான நிஷாந்தி அவரைப் பற்றியும் கோகிலா,தயா பற்றியும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் மூலமாக ஏற்கனவே விசாரிக்க ஆரம்பித்திருந்தாள்.
வான ப்ரஸ்தத்தை அபகரித்த திட்டம் முழுக்க முழுக்க அன்பழகனும் அவருடைய மகனும் போட்டது. அந்த சமயத்தில் கம்பெனியில் முழுப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தார் அன்பழகன். சத்யன் தனது மகள் நிஷாந்தியைப் பார்க்க லண்டனுக்குச்
சென்றிருந்தார் அந்த சமயம். எளியவர்களிடம் இருந்து இடத்தை அபகரித்து வெறும் இலாப நோக்கத்துடன் அவர் தீட்டிய திட்டங்கள் பல. அவற்றில் அந்த முதியோர் இல்லத்தை அபகரித்ததும் ஒன்று .
இனி நிகழ்காலத்துக்கு வருவோம். நிஷாந்தி தனது தந்தையிடம் பேசிய உரையாடலை ஒட்டுக் கேட்டு வேலையாள் அப்போது வெளியே சென்றிருந்த அன்பழகனிடம் தான் தொலைபேசியில் சொன்னான்.
நிஷாந்தி தனது தந்தையிடம் வெறுப்புடன்
பேசி அகன்ற பின்னர் சத்யன் கலாவையும் விஷாகாவையும் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருந்த அந்த இனிமையான நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தார்.
நிஷாந்தி அடுத்த நாள் காலையில் கிளம்பி ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் தற்காலிகமாக அடைக்கப் பட்டிருந்த போலீஸ் ஸ்டேஷனை அடைந்தாள்.
அவளிடம் அகமதாபாத் பூகம்ப விஷயம் பற்றி சத்யன் எதுவும் சொல்லாததால்
தனது தாயும் விஷாகாவும் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சிகளை ஆரம்பித்திருந்தாள் நிஷாந்தி. ரமாமணியைச் சந்தித்துப் பேசினால் ஏதாவது விஷாகா பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தான் காவல் நிலையத்திற்குச் சென்றாள் நிஷாந்தி.
அவர்கள் பெயிலில் வெளியே விடப்பட்ட விஷயம் தெரிந்து கொண்டு அவர்கள் தற்போது தங்கியிருக்கும் முகவரியை அங்கிருந்து வாங்கிக் கொண்டு அந்த இடத்திற்குக் கிளம்பினாள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அவர்கள் கம்பெனி ப்ராஜெக்ட் என்பதால் முதல் நாள் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தையும் பார்த்து விட்டு ரமாமணி மற்றும் ஜித்தனையும் நேரில் சந்தித்துப் பேசுவது தான் நிஷாந்தியின் அன்றைய திட்டம்.
அங்கே தாத்தா, பாட்டி பேய்கள் ஜில் ஜில் ரமாமணி மற்றும் ஜித்தனிடம் அவர்கள் விஷாகாவின் கடத்தல்கார்களைச் சந்திக்கச் சென்ற அந்த அட்ரஸைக் கொடுத்து அங்கே வரச் சொல்லி அவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்கள்.
ஆகாஷும், அஷ்வினும் சிவலிங்கத்தைச் சென்று எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று சென்னை விமானநிலையத்தில் தவம் கிடந்தார்கள்.
நிஷாந்தி அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வளாகத்தை அடைந்து சடலங்கள் தோண்டப் பட்ட அந்த இடத்தைப் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பிய சமயம் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர். அவள் யாரென்று தெரிந்து கொண்ட அவர்கள் பல
கேள்விக்கணைகளை அவள்மீது தயங்காமல் எய்தார்கள்.
" இந்த சடலங்கள் யாருடையவை என்று உங்களுக்குத் தெரியுமா?"
" கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த ஏழைத் தொழிலாளிகள் தவறிக் கீழே விழுந்து இறந்ததால் அவர்கள் உடல்களை ரகசியமாக புதைத்துவிட்டு உலகத்தின் கண்களில் மண்ணை தூவினீர்களா?"
" இந்த சடலங்களைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?"
" நிச்சயமாக நிர்வாகிகளான உங்களுடைய பார்வைக்கு இவர்கள் இறந்த விஷயம் வந்திருக்கும். ஏன் அந்த விஷயத்தை மூடி மறைத்து இருக்கிறீர்கள்?"
"சட்டத்திற்கு முன்னால் நீங்கள் இந்த விஷயத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்."
என்று பற்பல கேள்விகளைக் கேட்டு அவளைத் திக்குமுக்காட வைத்தார்கள்.
" தயவுசெய்து பொறுமையாக நான் சொல்வதைக் கேளுங்கள். எங்கள் கம்பெனி அந்த மாதிரி எந்தத் தவறான செயலிலும் இறங்கி இருக்காது. நான் சமீபத்தில்தான் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து கம்பெனியின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க உங்களைப் போலவே நானும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.
தவறு செய்தது யாராக இருந்தாலும் அது என்னுடைய தந்தையாகவே இருந்தாலும் சட்டத்தின் முன்னால் ஒப்படைக்க நான் தயங்க மாட்டேன். சடலங்களின் பிரேத பரிசோதனை முடிந்ததும் அவர்கள் எப்போது இறந்தார்கள் என்பது தெரிய வரும். அந்த சமயத்தில் காணாமல் போன நபர்களின் தகவல்களை வைத்து அவர்கள் யாரென்று கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாகக் காவல் துறைக்கு நான் ஒத்துழைக்கிறேன்."
என்று சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாளித்து அங்கிருந்து கிளம்பினாள் நிஷாந்தி. அத்வைதின் வீட்டை அவள் அடைவதற்குள் ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்கள்.
அத்வைதின் அம்மா தன்யாவிடம் அவர்கள் சென்ற முகவரியை வாங்கிக் கொண்டு முட்டுக்காடு பக்கம் தன்னுடைய காரில் விரைந்தாள் நிஷாந்தி.

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -21
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.