வான பிரஸ்தம் -19
அடுத்தாற்போல் குழந்தைகளின் பெற்றோரிடம் விஷயங்களை எடுத்துக் சொல்லி அப்பாவிகளான முனியம்மாவையும் ஏழுமலையையும் வெளியே கொண்டு வந்து விட்டுத் தங்களுடைய தேடல்களைத் தொடர்வது
தான் சரியென்று பட்டது தாத்தா பாட்டி
பேய்களுக்கு.
முதலில் நேத்ராவின் பெற்றோரையும் அத்வைதின் பெற்றோரையும் ஒன்றாக
ஒரே இடத்தில் அழைப்பது அவசியமானது.
குழந்தைகளிடம் முதலில் தங்களுடைய கதையைப் பகிர்ந்து கொண்டார்கள்.
முழு விவரங்களளைச் சொல்லாமல் பூடகமாகச் சொல்லி விட்டார்கள். குழந்தைகளே ஒரு திட்டம் போட்டு அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
ஸ்கூலில் ஏதோ ஒரு விழாவில்
அத்வைதும் நேத்ராவும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி தயாரித்து அளிப்பதாகவும் அதைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்று அன்று இரவு அத்வைதின் வீட்டிற்கு நேத்ராவின் பெற்றோரை அழைக்க இரவு உணவை முடித்து விட்டு அவர்களும் வந்தார்கள்.
அஷ்வின், தன்யாவும் மற்றும் ஆகாஷ்,மேகாவும் அத்வைதின் வீட்டு ஹாலில் ஒன்றாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
அத்வைத் ஆரம்பித்தான்.
" எங்களோட மிஸ் எங்களுக்காக ஒரு கதையை ஸெலக்ட் செய்து தந்திருக்காங்க. நீங்க நாலு பேருமா அதைப் படிச்சு எங்களுக்கு ஏத்த மாதிரி
மாத்தி ஒரு சின்ன நாடகமாச் செஞ்சு தரணும்."
" எங்க இருக்கு அந்தக் கதை?குடுங்க.படிக்க ஆரம்பிக்கிறோம்."
" இதோ தரேன். என்னோட ஐ பேடில கதை இருக்கு. பி.டி.எஃப் ஆக இருக்கு. நீங்க நாலு பேருமாப் படிங்க. நானும் நேத்ராவும் உள்ளே என்னோட ரூமில் உக்காந்து செஸ் விளையாடறோம். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க."
கமலாகர் தங்களுடைய சோகக் கதையை ஒரு கதை வடிவில் அதில் தனது கணினி நிபுணத்துவத்தால் பதிவு செய்திருந்தார்.
அத்வைத் படிக்கும் ஸ்கூலில் எல்லாக் குழந்தைகளிடமும் ஐ பேட் மற்றும் லேப்டாப் எல்லாமே உண்டு.
நான்கு பேருமாகக் கதையைப் படிக்க ஆரம்பித்தார்கள். ஒருத்தர் மாற்றி ஒருத்தராக வாசிக்க மற்றவர்கள் கவனமாகக் கேட்டார்கள்.
கதையைக் கேட்டு முடித்ததும் அவர்கள் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.
தாத்தா, பாட்டிகள் மாலை நேரம் பூங்காவில் சந்தித்துத் தங்களுடைய நட்பை ஆரம்பித்ததில் இருந்து முதியோர் இல்லம் நடத்தியதும் அதற்குப் பின்னர் அந்தப் பணக்கார முதலை அவர்களிடம் இருந்து
அந்த இடத்தை வாங்கப் பல்வேறு தொல்லைகள் தந்தது பற்றியும் சொல்லிக்
கடைசியாக விஷாகா கடத்தப் பட்டது வரை எல்லாமே எழுதப் பட்டிருந்தது. அவர்கள் நயவஞ்சகமாகக் கொல்லப் பட்ட முடிவைப் பற்றி மட்டும் எழுதவில்லை.
இந்த மாதிரி ஒரு கதையைக் குழந்தைகள் நாடகத்திற்காக அவர்களுடைய மிஸ் எப்படிக் கொடுத்தார்? சின்னக் குழந்தைகள் எப்படி இதைப் புரிந்து நாடகம் போட முடியும் என்று அவர்கள் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த சமயம் அவர்கள் எதிரில் மங்கலாகப் புகை வடிவில் தாத்தா பாட்டிகள் ஆறுபேரும் திடீரென்று தோன்றினார்கள்.
நான்கு பேரும் அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போய் எழுந்திருக்க சீதம்மா முதலில் பேசினார்.
" பயப்படாதீங்க குழந்தைகளே! நீங்க நினைத்தது போல நாங்க ஆறு பேரும் ஆவி வடிவில் உங்கள் குழந்தைகளுடன் அவர்களுடைய அறையில் பல நாட்களாக இருக்கோம். பயப்பட வேணாம். அவர்களுக்கு எந்தக் கேடும் நாங்கள் விளைவிக்க மாட்டோம். உங்க குழந்தைகள் மூலமாக உங்களிடம் உதவி வேண்டி வந்திருக்கோம்."
" என்ன உதவி? நாங்க என்ன செய்ய முடியும்? நீங்கள் பேய்கள் என்பது உண்மையானால் உங்களுக்கே அமானுஷ்ய சக்திகள் இருக்குமே? நீங்க நினைச்சா உங்களுக்கு வேண்டிய காரியங்களை நீங்களே நிறைவேத்திக்கலாமே? மனிதர்களாகிய நாங்களும் எங்களது குழந்தைகளும் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?"
" நீங்க இப்போ படிச்சீங்களே? இந்தக் கதை எங்களுடைய கதை தான். எங்களை நயவஞ்சகமாகக் கொன்னுட்டு உங்களுடைய இந்தக் குடியிருப்பில் தான்
கீழே பார்க்கில் ஒரு கல்யாண முருங்கை மரம் இருக்கே, அதுக்குக் கீழே எங்களைப் புதைத்து வைச்சுருக்காங்க. நீங்க எப்படியாவது அந்த இடத்தைத் தோண்டி எங்கள் உடல்களைப் பரிசோதனைக்கு அனுப்பணும். அதற்குப் பின்னர் எங்கள் உடல்களுக்கு சரியான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்தி விட்டால் எங்கள் ஆத்மாக்கள் சாந்தியடையும். நாங்களும் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாப் போயிடுவோம். எங்க உடல்கள் வெளியே வந்ததில் இருந்து இறுதிச் சடங்குகள் நடக்கும் வரை எங்களுக்கு சக்திகள் அதிகமாகக் கிடைக்கும். அப்போது எங்களால் இந்த இடத்தை விட்டு வெளியேயும் எளிதாகச் செல்ல முடியும்."
" அது வரை நீங்க தான் எங்களுக்கு உதவி செய்யணும். இன்னைக்கு ஒரு நாள் தான் நாங்க எங்களோட சக்தியெல்லாம் உபயோகிச்சு உங்க கண்களுக்கு மங்கலாகத் தெரியறோம். நாளை முதல் அதுவும் முடியாது. உங்க குழந்தைகள் மிகவும் அன்பான சிறப்பான குழந்தைகள். அதனால் அவங்களோட கண்களுக்கு மட்டும் தெரியும்படியான வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கோம்."
" எங்களோட ஆயுட்காலம் முடியறதுக்கு முன்னாலேயே எங்களை அந்தப் பேராசைக்காரன் நயவஞ்சகமாகக் கொன்னு புதைச்சதால அவனைப் பழி வாங்குறதுக்காக நாங்க இங்கே வந்திருக்கோம். நாங்க எப்படி இறந்தோனு குழந்தைகள் கிட்ட நாங்க சொல்லவில்லை. அந்தப் பிஞ்சு உள்ளங்களால் அந்தக் கொடுமையான விஷயங்களைத் தாங்க முடியாது. அதனால் தான் சொல்லலை."
" எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."
ஆகாஷ் சொன்னதும் விஷாகாவைக் கடத்தியவனின் அழைப்பின் பேரில் இரவில் அந்தக் கொடியவன் சொன்ன இடத்திற்குப் போய் மயங்கியதையும் அந்த சமயத்தில் கொல்லப் பட்டதையும் சொன்னார்கள்.
கண்ணீருடன் கேட்டு வருத்தப் பட்டார்கள்.
" குழந்தைகள் வருவதற்குள் உங்கள் கண்ணீரைத் துடைத்துக்கோங்க அவங்க கிட்ட இந்த விவரங்களை நாங்க சொல்லலை."
" நீங்க முதலில் ஜில்ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் பெயிலில் வெளியே எடுக்கணும. அவங்க இரண்டு பேரும் அப்பாவிகள். அவங்க உங்களுக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்க
மாட்டாங்க. அவங்க உதவியுடன் நீங்கள் விஷாகாவைத் தேடிக் கண்டுபிடிக்கணும். ஜில்ஜில் ரமாமணியும் ஜித்தனும் உங்களுக்கு விஷாகாவைக் கண்டுபிடிப்பதில் உதவுவாங்க. அப்புறம் வழக்கறிஞர் சிவலிங்கம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்துட்டாரான்னு கண்டுபிடிச்சு எங்களோட மெயில் அவருக்குக் கிடைச்சுதா என்று கண்டுபிடிக்க வேணும். ஒரிஜினல் டாக்குமெண்ட் இல்லாமல் அந்த இடத்தை எப்படி அபகரிச்சாங்கன்னு கண்டுபிடிக்கணும். நிறையப் பொறுப்புக்களை உங்க கிட்டக் கொடுக்கறோம். எப்படியாவது உதவி செய்ய முயற்சி செய்யுங்க. எங்களுடைய உடல்களைத் தோண்டி எடுத்ததும் எங்களுக்கும் நிறைய சக்திகள் கிடைத்து விடும். எங்களால் இந்த இடத்தை விட்டு வெளியிலும் செல்ல முடியும். அதன் பிறகு எங்களுடைய வேட்டையையும் விளையாட்டுக்களையும் நாங்களே தொடங்கிடுவோம். "
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களுடைய உருவங்கள் மறையத் தொடங்கி விட்டன.
" இனி நாங்கள் குழந்தைகள் மூலமாக உங்களுடன் பேசுவோம்.அவங்க கண்களுக்கு எப்போதும் போலத் தெரிவோம். இன்னைக்கு உங்களை எப்படியாவது சந்தித்துப் பேசுவதற்காக ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கோம். எங்களுடைய நேரம் முடிஞ்சுடுச்சு."
நடந்ததெல்லாம் கனவா இல்லை நனவா என்று யோசித்துக் கொண்டே திகைப்புடன் உட்கார்ந்திருந்த நான்கு பேரும் உடனே ஃபோன் செய்து மற்ற பெற்றோர்களையும் வரவழைத்துத் தங்களுடைய அனுபவத்தைச் சொன்னதும் அவர்களுக்கும் பயங்கரத் திகைப்பு.
ஆனால் அநியாயமாகக் கொல்லப் பட்டு அமைதியில்லாமல் பேய்களாக அலைந்து
கொண்டிருக்கும் அந்த முதியவர்களுக்கு உதவவேண்டும் என்பதில் அவர்கள் யாருக்கும் தயக்கமேயில்லை.
" நாளை காலை வரை நன்றாக யோசித்து விட்டு நாளை இரவு மறுபடியும் இங்கே கூடி நம்முடைய திட்டங்களைக் கலந்து பேசி முடிவு பண்ணலாம். எல்லோருமே நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்து நாளை பேசலாம். ஆனால் அதற்கும் முன்னால் முதன்முதலில் நாம்
நாளை செய்ய வேண்டிய ஒரு முக்கியமான
காரியம் என்னவென்றால் அந்த ஜில் ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் பெயிலில் எடுப்பது. நாளை வெள்ளிக் கிழமை. நாளை மிஸ் பண்ணி விட்டால் இரண்டு நாட்கள் கோர்ட் கிடையாது. நான் ஒரு வக்கீலைப் பார்த்து நாளையே கூட்டிப் போகிறேன். ஆகாஷ் நீங்கள் அந்த சிவலிங்கத்தைப் பத்தி விசாரியுங்கள்."
என்று அஷ்வின் சொல்ல, கனத்த மனதுடன் அந்தப் பெற்றோர்கள் கலைந்தனர்.
அடுத்த சில நாட்களில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற கவலையில் அவர்களுக்குத் தூக்கமே வரவில்லை.
அவர்கள் கவலையும் நியாயம் தானே?
அவர்கள் வாழ்வில் பேய்கள் புகுந்து விட்டனவே!

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.