வான பிரஸ்தம் -16
வானப்ரஸ்தம் என்ற அந்த அழகான பெரிய முதியோர் இல்லம் அந்த முதியோர்களின் முயற்சியால் தயாராகி பிரம்மாண்டமாக நின்றது. சீதம்மாவிற்கும் அவளுடைய நண்பர்களுக்கும் மனது நிறைவாக இருந்தது.
அந்த இடத்தின் பத்திரம் சீதம்மா பேரில் தான் இருந்தது. ஆனால் அந்த முதியோர் இல்லத்தைத் தங்கள் ஆசைப்படி கட்டி நிலைநிறுத்தியதில் அவர்கள் அறுவருடைய பணமும் உழைப்பும் முயற்சியும் சேர்ந்தே இருந்தன. அந்த முதியோர் இல்லத்தை எடுத்து நிறுத்தியதில் எல்லோருடைய பணமும் உழைப்பும் இருந்தன.
ஏற்கனவே இருந்த மாளிகையைப் பல்வேறு அறைகளாகப் பிரித்து அதனுடன் சேர்த்துப்
பெரிய சமையலறை, பெரிய டைனிங் ஹால், பிரார்த்தனை அறை, ஒரு கிளினிக், அலுவலக அறை, ஸ்டோர் ரூம்
மற்றும் எல்லோருக்கும் பொதுவாகப் பெரிய பெரிய வாஷிங் மெஷின்களை வைத்து லாண்டிரி என்று சகல வசதிகளுடன் பிரமாதமாகத் தயார் செய்து ஆறு பேரும் அந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகிகளாகத் தங்களை அந்த முதியோர் இல்லத்துடன் முழுமையாக இணைத்துக் கொண்டார்கள். ஒரு நல்ல வக்கீலை ஆலோசித்துத் தேவையான ஆவணங்களையும் நேர்த்தியாகத் தயார் செய்து விட்டார்கள்.
அடுத்து முதியோர் இல்லம் நடத்துவதில் அவர்களுக்கு தினசரி வேலைகளில் உதவி தேவையாக இருந்ததால் வேலைக்கு என்று சில இளைஞர்களைத் தேடி நியமித்தார்கள்.
அலுவலகத்தின் மொத்தப் பொறுப்பையும் கையாளவும் முதியோர் இல்லத்தின் மொத்த ஏற்பாடுகளை மேற்பார்வை செய்யவும் தகுதியான ஆட்களைத் தேடிக் கொண்டிருந்த போது அவர்களுடைய வழக்கறிஞர் சிவலிங்கம் சிபாரிசு செய்த பெண்ணான விஷாகா வந்து சேர்ந்தாள்.
சிவலிங்கம் அவர்களுக்கு சட்ட சம்பந்தமான அனைத்து ஐயங்களையும் தீர்த்து வைத்துத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும் தன்னால் இயன்ற அளவு பெரிய உதவி அவர்களுக்கு இலவசமாகவே செய்து கொடுத்திருந்ததால் அவருடைய சிபாரிசில் வந்த விஷாகாவை உடனே வேலையில் நியமித்து விட்டார்கள்.
சிவலிங்கம் அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் பலவற்றை வழங்கிய போது மதன் அவரிடம் அவருக்குண்டான ஃபீஸ் பற்றிக் கேட்க அவரோ சிரித்துக் கொண்டே ,
" இன்னும் சில வருடங்களுக்குப் பின்னர் நான் இங்கே வந்து விடுவேன். அப்போது எனக்கு அறை வாடகையில் சலுகை தந்து விடுங்கள்."
என்று சொல்லி மறுத்து விட்டார். அப்படிப் பட்ட நல்ல உள்ளம் கொண்ட நண்பரின் சிபாரிசில் வந்த விஷாகாவை கைகளை விரித்து வரவேற்றார்கள் தாத்தா பாட்டிகள்.
விஷாகா அழகான துடிப்பான இளம் பெண். தன் சொந்தக் காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இந்த வேலையை எடுத்துக் கொண்டாள். புத்திசாலி மற்றும் திறமைசாலி.
மிகவும் எளிமையான தோற்றம். ஆடை அலங்காரத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாத பெண். ஓர் இளம் துறவி போலத் தான் இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைக் கற்றுக் கொண்டு முதியோர் இல்லத்தை முழுவதுமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள்.
தாத்தா பாட்டிகளுக்கும் பெரிய நிம்மதி. தங்களுடைய ஆயுட் காலம் முடிந்த பின்னரும் முதியோர் இல்லத்தை நிர்வகிக்க ஒரு வாரிசாக விஷாகா வந்தது அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. அவர்களுடைய நம்பிக்கைக்கும் அன்பிற்கும் ஏகபோக
உரிமையாளியாக விஷாகா விஸ்வரூபம் எடுத்தாள்.
அவளுடைய குணத்தாலும் திறமையாலும்
தாத்தா பாட்டிகள் க்ளீன் போல்ட் ஆகி விட
வானப்ரஸ்தத்தின் நிர்வாகத்தில் விஷாகாவிற்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்டது.அலுவலகத்திலும் சமையலுக்கும் தோட்டத்திற்கும் என்று பல்வேறு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவளே வேலைக்கு நியமனம் செய்தாள்.
முனியம்மாவும் ஏழுமலையும் வேலைக்கு வந்து சேர்ந்தது விஷாகாவால் தான். கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த அக்கா,தம்பி ஜோடிக்கு ஆதரவு தந்து தான் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்து உதவியவள் என்பதால் விஷாகா மேல் மட்டற்ற மதிப்பும் கொள்ளைப் பிரியமும் கொண்டிருந்தார்கள் முனியம்மாவும் ஏழுமலையும்.
வெள்ளந்தியான அவர்களின் குணம் தாத்தா, பாட்டிகளையும் வெகுவாகக் கவர்ந்து விட அந்த அக்கா, தம்பி ஜோடி முதியோர் இல்லத்தின் பிரிக்க முடியாத அங்கமாகச் சேர்ந்து விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக முதியோர் பலர் அங்கு நம்பிக்கையுடன் வந்து சேர ஆரம்பித்தார்கள். வசதியுள்ளவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தார்கள். அநேகமாகக் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு வயதான காலத்தில் தனிமையில் தவித்துக் கொண்டிருந்த பெற்றோர் பலர் சேர ஆரம்பித்தார்கள். வசதியில்லாத சிலரையும் குறைந்த கட்டணத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
வாரம் ஒரு முறை ஆடிட்டோரியத்தில் திரைப்படம், மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் ஏதாவது கோயிலுக்குச் சுற்றுலா என்று மிகவும் இனிமையாக அவர்களுக்கு நேரம் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் விஷாகாவின் குடும்பத்தைப் பற்றி எதுவும் விஷாகா எப்போதுமே பேச மாட்டாள். வானப்ரஸ்தத்திலேயே ஒரு தனி
அறையில் தங்கிக் கொண்ட விஷாகா எப்போதுமே விடுமுறை எடுத்துக் கொண்டு போனதில்லை. ஆனால் அவள் முகத்தில் ஏதோ சோகமும் கலக்கமும் எப்போதும் குடியிருக்கும். எவ்வளவோ முறை தாத்தா, பாட்டிகள் முயற்சி செய்தும் அவள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வாயே திறக்கவில்லை. வக்கீல் சிவலிங்கத்திற்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று கேட்டால் அவரும் ஒன்றும் சொல்லத் தயாராயில்லை.
நேரடியாக விஷாகாவிடமே பலமுறை கேட்டும் அவள் பதில் சொல்லாததால் தாத்தா பாட்டிகளும் அவளிடம் "தொணதொணவென்று கேட்கக் கூடாது. அவளாகவே மனது வந்து எப்போது சொல்லத் தோன்றுகிறதோ அப்போது அவளே சொல்லட்டும்" என்று நினைத்து விட்டு விட்டார்கள்.
ஏதோ மனஸ்தாபத்தால் வீட்டை விட்டுப் பிரிந்து வந்து விட்டாள் என்று மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. அதற்கு மேல் அவளுடைய பெற்றோரைப் பற்றியோ, குடும்பத்தை விட்டு ஏன் பிரிந்தாள் என்றோ யாரும் கேட்கவில்லை.
வானப்ரஸ்தம் நல்லதொரு முதியோர் இல்லமாகப் புகழ் பெற்று வந்து கொண்டிருந்தது. எல்லாம் விஷாகாவின் திறமையாலும் தாத்தா பாட்டிகளின் நட்புடன் பழகும் நல்ல குணத்தாலும் தான்.
அந்த சமயத்தில் அந்தப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல, ஓ.எம்.ஆர் சாலையின் இரண்டு பக்கங்களிலும் புற்றீசல் போல முளைக்க ஆரம்பித்தன.
ஒரு பில்டரின் கண்களில் இந்த முதியோர் இல்லம் பட்டு விட்டது. அருமையான பெரிய இடம். அருகே கொஞ்சம் வயல்களும் ஓர் ஏரியும் இருந்தன. ஏரியில் தண்ணியே இல்லாமல் வற்றிப் போய்க் காட்டுச் செடிகள் மண்டிக் கிடந்தன.
எப்படியாவது முதியோர் இல்லம் இருந்த இடத்தை விலை பேசி வாங்கி விட்டால் சுற்றியிருக்கும் வயல்களையும் ஏரியையும் சேர்த்துப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு
வளாகமாக மாற்றி நிறையப் பணம் பார்த்து விடலாம் என்று மனதில் பேராசை புகுந்து விட்டது அந்தப் பணக்கார முதலைக்கு.
முதலில் ஏஜெண்ட் ஒருத்தனைத் தூது அனுப்பினான். தாத்தா பாட்டிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் தானே நேரடியாகப் பேச வந்தான்.
" உங்கள் ஆறு பேருக்கும் ஒவ்வொரு ஃப்ளாட்டும் கணிசமாகப் பணமும் தருகிறேன். ப்ராஜெக்ட் முடியும் வரை தங்குவதற்கு இடமும் நானே தருகிறேன். இந்த இடத்தை எனக்கு விற்று விடுங்கள்"
என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்.
மிரட்டியும் பார்த்தான்.
" இந்த முதியோர் இல்லம் எங்களுடைய
பலநாள் கனவு.நனவாக்கி இருக்கிறோம். இந்த இடத்தை எந்தக் காரணம் கொண்டும் விலைக்குக் கொடுக்க மாட்டோம். வாழ்வின் இறுதிப் பகுதியில் இருக்கும் நாங்கள் உங்களுடைய பணத்தை
வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் ?" என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள்.
கோபத்துடன் அவமானப் பட்டுத் திரும்பிய அந்தப் பணக்காரன் மனதில் வன்மத்துடன் திரும்பிச் சென்றான்.
" உங்களை இந்த இடத்தை விட்டு எப்படியாவது துரத்துகிறேனா இல்லையா பாருங்கள். என்னை எதிரியாக்கிக் கொண்டு நீங்கள் இந்த இல்லத்தை எப்படி நடத்துகிறீர்கள் என்று பார்க்கிறேன்"
என்று சூளுரைத்துச் சென்றான் அவன்.
அடுத்த வாரத்தில் இருந்து அவன் திட்டமிட்டபடி அவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தான்.
திடீர் திடீரென்று பவர் கட்,தண்ணீர் சப்ளை குறைச்சலாக என்று அடிப்படைத் தேவைகளைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தான் அந்தப் பணக்காரன். அரசாங்க ஆட்களைக் கையில் போட்டுக் கொள்வது தான் அவனுக்குக் கை வந்த கலையாயிற்றே?
அங்கே வேலை செய்யும் ஆட்கள் சிலரை மிரட்டி வேலையில் இருந்து நிற்க வைத்தான்.முதியோர் இல்லத்தைப் பற்றித் தவறான வதந்திகளைக் கிளப்பி விட்டான்.
வானப்ரஸ்தத்தின் பேர் கெட்டுப் போனால் யாரும் அங்கே வந்து சேர மாட்டார்கள். அவர்களுக்கு வருமானம் நின்று போய் விடும் என்று தப்புக் கணக்கு
போட்டான் அவன்.
இந்த இரும்பு மனிதர்கள் கொஞ்சம் கூட அசையவில்லை இந்தத் தொல்லைகளால்.
அப்போது தான் கொஞ்சம் அதிர்ச்சி கரமான சம்பவங்கள் அங்கு அரங்கேற ஆரம்பித்தன.

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.