வான பிரஸ்தம் -15
மதன் தாத்தா உடனே தனது நண்பர்களை அழைத்து அவசர அவசரமாக ஒரு மீட்டிங்
போட்டு விட்டார். என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள்.
முதலில் அவர்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்; அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுடன் சேர்ந்து இப்போது ஜில் ரமாமணியையும் ஜித்தனையும் விடுவிக்க வேண்டியதும் அவசியமாகி விட்டது.
"அந்த அப்பாவிகள் மாட்டிக் கொண்டிருப்பதும் நம்மால் தானே?
அதனால் அவர்களையும் முதலில் காப்பாற்ற வேண்டும்"
என்று முடிவு செய்து குழந்தைகளின் பெற்றோரை அணுகுவது மட்டுமே இப்போது சிறந்த வழியென்று முடிவு செய்தார்கள். முதலில் அத்வைதின்
பெற்றோரையும் நேத்ராவின் பெற்றோரையும் மட்டும் அழைத்து அவர்களிடம் சொல்லித் தங்களுக்கு உதவச் சொல்லிக் கேட்கலாம் என்று தீர்மானம் செய்தார்கள்.
"அவர்களே மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளட்டும். அது தான் சரி."
"எப்படிச் சொல்வது? எப்படி அவர்களை நம்ப வைப்பது? அவர்கள் கண்களுக்கு முன்னால் அருவங்களாகக் காட்சி தர முடியுமா? அவர்களால் இவர்களைப் பார்க்க முடியுமா?
அதுவும் தெரியாது. குழப்பம் தான்.என்ன செய்வது?"
இந்த மாதிரியான விஷயங்களை அலசிக் கொண்டிருக்கையில் அவர்களுடைய நினைவுகள் கடந்த காலத்திற்குள் எட்டிப் பார்த்தன.
எவ்வளவு சந்தோஷமான நாட்கள் அவை! வாழ்க்கையின் இனிமையையும் வாழவேண்டும் என்ற ஆசையையும் தொலைத்து விட்டு வெறுமையை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்த அவர்களுடைய வாழ்வில் கலகலப்பையும்
உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்த்தது அந்த முதியோர் இல்லம் தானே?
முதியோர் இல்லம் தொடங்கிய வீடு சீதாப் பாட்டியின் பூர்விகச் சொத்து. வீடு என்பதை விட மாளிகை என்று சொல்லலாம். சீதம்மாவின் பெற்றோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். மாநிலங்கள் பிரிக்கப் பட்டு சென்னை மாநகரம் தமிழ்நாட்டிற்குத் தான் என்று முடிவு செய்யப்பட்டதும் சென்னையை விட்டுப் பிரிய மனமில்லாமல் சென்னையில் அதாவது அப்போதைய மெட்ராஸில் தங்கி விட்ட நிறையத் தெலுங்குக் குடும்பங்களில் சீதம்மாவின் குடும்பமும் ஒன்று.
சீதம்மாவின் தந்தை இரும்பு வியாபாரம் செய்து நிறையப் பணம் சேர்த்து செழிப்பாக வாழ்ந்தவர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழையூர் பகுதியில் பெரிய இடமாக வாங்கி மாளிகையாகக் கட்டிப் போட்டு விட்டார்.
தற்போதைய சென்னை தாழையூரை எல்லாம் இப்போது தாண்டி வளர்ந்து விட்டது. இப்போது ஓஎம்ஆர் என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரச் சாலையைச் சுற்றிப் பெருகி விட்ட குடியிருப்புப் பகுதிகள் இந்தத் தாழையூரையும் தன்னுள் அடக்கியவை.
சீதம்மாவும் அவளுடைய அண்ணனும் இரண்டு குழந்தைகள் அவர்களுடைய பெற்றோருக்கு. சீதம்மாவுக்கு இளம் வயதில் திருமணம் ஒரு முறை நிச்சயிக்கப்பட்டு திருமணத்துக்கு முன்னால் மணமகன் விபத்தில் இறந்து விட்டதால் ராசி இல்லாதவள் என்ற முத்திரை குத்தப்பட்டுத் திருமணம் ஆகாமலே நின்றுவிட்டவள். அந்தக் கவலையிலேயே அவளுடைய பெற்றோர் இறந்துவிட அண்ணனும் தனது மனைவியின் பிறந்த வீட்டுப் பக்கம் ஆந்திர மாநிலத்தில் சென்று ஸெட்டில் ஆகிவிட்டான். போவதற்கு முன்னால் வீட்டையும் பாங்கில் கொஞ்சம் பணத்தையும் சீதம்மாவுக்காக விட்டுச் சென்றான். அதற்குப் பிறகு சென்னை பக்கம் வரவே இல்லை. பணம் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் நிம்மதியில்லாத வாழ்க்கை தனிமைச் சிறையாக இருந்தது சீதம்மாவிற்கு.
உண்மையான உறவினர்களோ நண்பர்களோ கூட இல்லாமல் தவித்துப் போனாள் சீதம்மா.
அப்போது தான் அவளுக்குச் சில நல்ல நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த பார்க்கில் சீதம்மா அந்த நண்பர்களைச் சந்தித்தாள்.
கவிதாயினி காவ்யா கல்லூரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவள். கலகலப்பான சுபாவம். அவளும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கையை தனியாக கழிப்பது என்று இளம் வயதிலேயே முடிவு செய்து சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தவள்.
தமிழாசிரியர் நல்லசிவம். தமிழ்ப் பற்று மிகுந்தவர். பிழையில்லாத தூய தமிழில் பேச மக்களைப் பழக்குவதைத் தனது கடமையாகக் கருதித் தமிழுக்காகவே வாழ்பவராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர். அரசாங்கப் பள்ளியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பல வருடங்களுக்கு முன்னர் மனைவியை இழந்தவர். குழந்தைகளும் இல்லை.
அடுத்தது உற்சாக மூட்டையான முத்தரசு. பலசரக்குக் கடை, தேங்காய் மண்டி, பழக்கடை, ஜுஸ் கடை என்று பல்வேறு பிஸினஸ்களை வெற்றிகரமாக நடத்தி விட்டு ஒரு கட்டத்தில் ஒற்றுமையில்லாத குழந்தைகளின் மனப்போக்கால் வெறுத்துப் போய் சொத்தையெல்லாம் பிரித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டுத் தனக்காக ஒரே ஒரு வீடும் கொஞ்சம் பாங்க் பாலன்ஸுமாகத் தனியே பிரிந்து ஒதுங்கி
விட்டார்.
இவருடைய மனைவியும் குழந்தைகளின் நடத்தையால் மனமொடிந்து நோய்வாய்ப் பட்டு சமீபத்தில் தான் இறந்து போயிருந்தார். அத்தனை கவலைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு வெளியே மிகவும் உற்சாகமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வார். இவர் இருக்கும் இடத்திலும் கலகலப்பிற்கும் சிரிப்பிற்கும் பஞ்சமே இருக்காது.
அடுத்த நண்பர் மதனகாமராஜன் என்ற
ரிட்டையர்ட் ஆர்மி ஆஃபீசர். மதன் என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சீதம்மா குழந்தையிலிருந்தே பயந்து பயந்து வாழ்ந்து இப்போது தனிமையிலும் நேரத்தை பயந்தே கழித்துக்கொண்டு முழுமையான பயந்தாங்கொள்ளி ஆகிவிட்டாள். அதற்கு நேர் எதிர்மறையாக மதன் பயங்கரத் துணிச்சல்காரர். ஆர்மியில் வேலை பார்த்ததினால் தானோ என்னவோ அவருக்கு பயம் என்பதே கிடையாது. எந்த விஷயத்திலும் தயக்கமில்லாமல் துணிந்து ஒரு கை பார்க்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
பல வருடங்களுக்கு முன்னரே இவருடைய மனைவி இவருடைய ஆர்மி வேலை பிடிக்காமல் இவரை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாகப் பிரிந்து போய் இன்னொரு திருமணமும் செய்து கொண்டாள். நல்ல வேளையாகத் தங்களுடைய ஒரே மகனை மட்டும் கணவரிடமே விட்டுச் சென்றாள்.மகனைத் தனியாகத் தானே நல்லபடியாக வளர்த்துப் படிக்க வைத்தார். அவனும் அப்பாவைப் போலவே ஆர்மியில் வேலைக்குச் சேர்ந்து காஷ்மீரில் நடந்த ஒரு போரில் உயிரை இழந்து விட்டான். மதனும் ஓய்வு பெற்ற பின் சென்னைக்கு வந்து அந்த இடத்தில் செட்டிலாகி விட்டார்.
அடுத்த நண்பரான கமலாகர் ஒரு பெரிய கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட். பெரிய குடும்பத்தின் தலைமகனான அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தம்பி தங்கைகளைப் படிக்க வைத்து நல்ல படியாக வாழ்க்கையில் ஸெட்டில் செய்து வைத்துத்
தன் கடமைகளை முடித்தார். ஆனால் இப்போது அவருக்கு வாழ்க்கையில் யாரும் இல்லை.அதிகம் பேசிப் பழகும் சுபாவம் இல்லாத கமலாகர் தனிமை என்ற கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டு வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.
வேறுபட்ட குணங்களைக் கொண்ட இந்த ஆறு பேரும் பார்க்கில் தினமும் சந்தித்துப் பழகியதில் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்கள்.
எல்லோரிடமும் பண வசதிக்குக் குறைச்சலே இல்லை. ஆனால் உண்மையாகப் பழகும் நல்ல உறவுகளும் நண்பர்களும் இல்லாத குறைதான். அதுவும் இப்போது ஆண்டவன் அருளால் தீர்ந்து போனது.
" இனிமேல் மீதி இருக்கும் நாட்களையாவது இனிமையாகக் கழிக்க வேண்டும்; நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும். "
என்று அவர்கள் முடிவு செய்த சமயத்தில்தான் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சீதம்மா வீட்டை கொஞ்சம் மாற்றங்கள் செய்து முதியோர் இல்லமாக மாற்றும் பிளான் அவர்கள் மனத்தில் உதித்தது.
"நல்ல முடிவு தான் நமக்கும் நம்மைப் போன்ற வேறு சில முதியவர்களுக்கும் ஒரு நல்ல புகலிடமாக இருக்கும்."
என்று உறுதியாகத் தீர்மானித்த அவர்கள் உடனே மடமடவென்று அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார்கள்.
வானப்பிரஸ்தம் என்ற பெயரில் அந்த அழகான முதியோர் இல்லம் அவர்களுடைய முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.

Author: SudhaSri
Article Title: வான பிரஸ்தம் -15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.