லிவிங் டுகெதர்
சத்யமூர்த்தி யோசித்து யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடலாம் என்று தான்
தோன்றியது.எவ்வளவு பெரிய விஷயம் இது?
எல்லாவற்றிற்கும் காமாட்சி தானே காரணம்! ஏன் இப்படி என்னைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டுப் போனாள்?
என்ன அப்படி அவசரம்?
எங்கே போனாலும் நீங்கள் கூட வந்தால் தான் போவேன் என்று எவ்வளவு அடம் பிடித்திருக்கிறாள்? இப்ப மட்டும் எப்படித் தனியாகப் போக மனசு வந்தது?
மகனிடம் கேட்ட மூன்று நாட்கள் கெடுவும் நாளையோடு முடிகிறது.ஈஸிசேரில் அமர்ந்து கொண்டு மாலை போடப்பட்டு இருந்த மனைவியின் படத்திடம் பேசி சண்டை போட்டார்.
அவள் இருந்த வரை அவள் அருமை தெரியவில்லை. காலை எழுந்து வந்தவுடன் காபி ந்யூஸ் பேப்பர் படிக்கும் போது கையில். வாக்கிங் போகப் போகும் போது வாசலில் கைத்தடி ரெடியாக.குளிக்கப் போகும் போது துண்டு,டிரஸ் பாத்ரூமில் அழகாகக் காட்சி தரும்.
சாப்பிட உட்கார்ந்தால் விதவிதமான அவருக்குப் பிடித்த ஐட்டங்கள் தான் எப்போதும். ஓரு புடவை ஒரு நகை இது தான் வேண்டும் என்று அடம் பிடித்ததில்லை.சண்டை போட்டதில்லை.
அவர் என்ன வாங்கி வந்தாலும் சந்தோஷம் முகத்தில் காட்டி வாங்கிக் கொள்வாள்.அவரைச் சுற்றித் தான் அவளுடைய உலகமே இருந்தது. இந்தக் கால மனைவிகளிடம் இதில் ஒன்று கூடக்
கிடையாது. எல்லாரும் சமம் என்ற கோட்பாடு.எதிர்பார்க்கவே முடியாது.
யோசித்துப் பார்த்தால் சத்தியமூர்த்தியும் காமாட்சியும் அதிகம் பேசிக் கொண்டது கூட இல்லை. ஆனாலும் நல்ல புரிதல் இருந்தது. ஒரே மகன்.பாசத்தைக் கொட்டி வளர்த்து அவன் ஆசைப்பட்ட படி படிக்க வைத்து அவனுக்குப் பிடித்த பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்து எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.காமாட்சி சிரித்த முகத்துடன் வீட்டை மேனேஜ் செய்தாள்.மருமகளும் வேலைக்குப் போவதால் ஓரு துரும்பும் எடுத்து அசைக்க மாட்டாள்.
"அதனால் என்ன? ஓரு பொண்ணு எனக்கு இருந்தா நான் பண்ண மாட்டேனா?"
என்று அவள் துணியெல்லாம் கூடத் தோய்த்து உலர்த்தி மடித்து வைத்து விடுவாள்.
இரண்டு பேரக் குழந்தைகள். அவர்களை ஸ்கூலில் விட்டுக் கூட்டி வருவது சத்தியமூர்த்தியின் வேலை.மற்றதெல்லாம் காமாட்சியின் பொறுப்பு.
திடீரென நெஞ்சுவலி என்று விழுந்தாள்.மூச்சுத் திணறியது.முடிந்தது கதை என்னவென்று புரிவதற்குள்.
இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? நாளை மகன் வாசுவிடம் என்ன பதில் தருவது? அதை யோசிப்போம்!
மறுநாள் காலை விடிந்தது.கையில் ந்யூஸ் பேப்பருடன் வெளி வராண்டாவில் உட்கார்ந்தார்.வாசு வந்தான் பேசுவதற்கு.மருமகள் ஹாலில் கையில் ஃபோனுடன்.கவனம் இவர்களிடம் இருந்தது.
" என்னப்பா? என்ன முடிவு எடுத்தீர்கள்? நாளை போய்ப் பணம் கட்டிடட்டுமா?"
"என்னடா,எதுக்குப் பணம்?"
"என்னப்பா மறந்து போச்சா? உங்க கிட்டே
போன வாரம் சொன்னேனேப்பா? நீங்கள் ஒரு வாரம் டயம் கொடு.யோசிச்சு சொல்லறேன் அப்படின்னு சொன்னீர்களேப்பா!"
"ஒ அதுவா.அந்த முதியோர் இல்லம் பத்தி தானே! அங்கெல்லாம் நான் போகலை.எனக்கு இஷ்டமில்லை. நான் எதுக்குப் போகணும்?"
"என்னப்பா, இப்படிப் பொறுப்பில்லாமல் பேசறீங்களே! நான் தான் அன்னைக்கே உங்களுக்கு எக்ஸ்ப்ளெயின் செய்தேனே!
நாங்கள் ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம்.உங்களை கவனிச்சுக்க முடியலை.அம்மா இருந்த வரை விஷயமே வேற.இப்ப அப்படி இல்லை. வீட்டைப் பாத்துக்க ஆள் போட்டாலும் வர யாரும் ரெடியாக இல்லை. ஒரு ஆம்பளை தனியா இருக்கற வீட்டுக்கு வர மாட்டேன் என்று சமையல்கார மாமி சொல்லி விடுகிறார்.நாங்கள் வேறு என்ன தான் பண்ணறது?"
"அதெல்லாம் சரி.நான் நன்றாக யோசித்து விட்டேன்.இது என்னுடைய சுயசம்பாத்தியத்தில் நான் கட்டிய வீடு.பூர்விகச் சொத்து இல்லை. உயில் எழுதி யாருக்கு வேண்டுமானாலும் நான் தரலாம். உன்னுடைய குழந்தைகள் பெரியவர்களான பிறகு அவர்களுக்கு உரிமை உண்டு தாத்தா வீட்டில். அது வரை நீ உரிமை கொண்டாட முடியாது. ஒரு வாரம் டயம் உனக்கு. நீயும் உன் குடும்பமும் காலி செய்து கொண்டு போகலாம்.வேறு வீடு பார்த்து நீ போய்க்கோ"
என்று சொல்லி விட்டு எழுந்தார்.உள்ளே இருந்து பேசுவதை எல்லாம் ஒரு வார்த்தை விடாமல் கேட்டுக் கொண்டிருந்த மருமகள் சுதா விருவிருவென்று வந்தாள்.
"என்ன மாமா? என்ன பேசுகிறீர்கள்? திடீரெனப் போகச் சொன்னால் எங்கே போவோம் நாங்கள்? "
"திடீரென நீங்கள் என்னைப் போகச் சொல்லலாம். நான் சொல்லக் கூடாதா? இன்றே வீடு தேட ஆரம்பியுங்கள். டயம் உங்களுக்கு ஒரு வாரம் தான். அடுத்த வாரம் என் ஃப்ரண்ட் இங்கே தங்க வரப் போகிறாள்."
"யாருப்பா அந்த புது ஃப்ரண்ட்.?"
நக்கலாகக் கேட்டான் வாசு.
"புது ஃப்ரண்ட் இல்லைடா.பழைய ஃப்ரண்ட்.
காலேஜ் ஃப்ரண்ட். அவளும் குழந்தைகள் கல்யாணம் ஆகிப் போனதும் தனியா இருக்கிறாள்.அவளும் இங்கே வந்துட்டா
எங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சுத் துணையா இருக்கும்."
"சாப்பாடு எல்லாம்?"
"முடிஞ்சா கமலா அது தான் என்னோட ஃப்ரண்ட் சமைப்பா.இல்லைன்னா வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம்.இல்லை சமையலுக்கு ஆள்.ஏதோ பண்ணிக்கிறோமே! உனக்கென்ன?"
"இந்த வயசிலே வேறு ஒரு லேடியோட ஒரே வீட்டிலே! எப்படிப்பா உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது. ஊர் உலகம் என்ன பேசும் நம்ப வீட்டைப் பாத்து.கேவலமாக இருக்கு."
"ஊர் உலகம் நீ என்னை முதியோர் இல்லத்திற்குப் போகச் சொன்ன போது பேசாம இப்ப மட்டும் பேசுமா? பேசினால் நான் பதில் சொல்லிக்கறேன்.வயதான ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கக் கூடாதா? சின்னப் பசங்க கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் என்று சொல்லறதில்லையா? அது மாதிரின்னு நெனச்சுக்கோ.மாடி ரூமையும் ஒரு பேச்சுலருக்கு வாடகைக்கு விட்டாச்சு. எனக்குச் செலவுக்குப் பணம் வேணுமே!
ஒரு சாமான் இல்லாமல் எல்லாம் பேக் பண்ணிக் கொண்டு போகலாம். அப்புறம்
இந்த ஃப்ரிஜ்,டி.வி,வாஷிங் மெஷின் எல்லாம் நான் என் சம்பாத்தியத்தில் வாங்கியவை.கார் மட்டும் உன்னுடையது.தாராளமாகக் காரை எடுத்துப் போ"
சொல்லி விட்டுக் குளிக்கப் போய் விட்டார்.
மாமனாரை முதியோர் இல்லம் அனுப்பி விட்டு அடுத்த வாரம் வெளி நாட்டில் மகன் வீட்டில் தங்கி விட்டுத் திரும்பும் தனது பெற்றோரை இங்கே கூட்டி வரத் திட்டம் போட்ட சுதா திருடனுக்குத் தேள் கொட்டியது போலத் திருதிருவென்று முழித்தாள்.
அவள் பேச்சைக் கேட்டு ஆடிய வாசு தன்னைத் தானே நொந்து கொண்டு ஆஃபிஸில் லீவு சொல்லி விட்டு வீடு தேட ஆரம்பித்தான்.
சத்தியமூர்த்தி மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் சரி தானா? காலம் பதில் சொல்லட்டும்.

Author: siteadmin
Article Title: லிவிங் டுகெதர்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.