'முடி' மேல் ஆசை
எங்கள் ஊரில் மதிப்பு மிக்க குடும்பங்களுள் ஒன்று அது. பல பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தவர் அந்த மூத்த தலைவரான தாத்தா. ஊர் போற்ற வாழ்ந்த தாத்தா 85 வயதுக்கு மேல் உடல்நலம் குன்றி மறைந்து போனார். அப்போது நான் வெளியூரில் இருந்ததால் ஊருக்குப் போன பின் பாட்டியைப் பார்த்து வரலாம் என்று போனேன். தாத்தா இறந்து போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. இறப்புக்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் விடை பெற்றிருக்க ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். சென்று பார்த்த எனக்கு அவருடைய மொட்டைத்தலை ஆச்சரியத்தை கொடுத்தது. அவருக்கு நீளமான தலைமுடி. எண்பது வயதுக்கு நரை மிகமிகக் குறைவாகவே இருக்கும். கருகருவென்ற நீளமான முடி. துக்க வீட்டிற்கு வந்த யாரிடமிருந்தோ பாட்டியின் தலைக்குப் பேன் வந்து, அது பெருகி கவனிக்காமல் விட்டு விட புண்ணாகிவிட்டது. அதிகப் புண்ணால் காய்ச்சல் வந்து விட வேறு வழியின்றி மொட்டை போட்டிருக்கிறார்கள்.
தன் நீளமான முடியைப் பற்றி பாட்டிக்கு எப்போதுமே பெருமை உண்டு. தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது, சாம்பிராணி போடுவது, அழகாகச் சீவி கொண்டை போட்டு வைப்பது என்று தலைமுடி பராமரிப்பதற்காக அதிக நேரம் செலவழிப்பார். நான் போன அன்று பாட்டி மிகவும் வருத்தமாக இருந்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக தலைமுடி பறிபோனதைப் பற்றியே புலம்பினார். "நான் தலைக்குக் குளிச்சா காயவைக்க அரை நாள் ஆகும். மாசமா இருக்கும்போது என் கைக்கே அடங்காது. பின்னி விட ஆள் தேடுவேன். ஆத்துல குளிச்சா அம்புட்டு ஜனமும் என் முடியைத் தான் பாக்கும். தாத்தா கூட நீ சாப்பிட்ட சாப்பாடு உன் முடிக்கே சரியாப் போகும்னு கிண்டல் பண்ணுவாங்க" என்று மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
பாட்டியின் மகள் என்னைத் தனியே அழைத்து, "நீங்க டாக்டர் தானம்மா. நீங்களாவது சொல்லுங்க.. ரொம்ப பீல் பண்றாங்க. தூங்குறதுக்குக் கூட கஷ்டப்படுறாங்க. அப்பா இறந்தப்ப கூட இப்படி இல்ல. மொட்டை போட்டு ஒரு வாரமாச்சு. இந்த ஒரு வாரமா புலம்பல் அதிகமா இருக்கு. ஏதாவது தூக்க மாத்திரை ரெண்டு நாளைக்கு எழுதித் தாங்க" என்றார்.
அறுபது வருடங்களுக்கு மேல் குடித்தனம் நடத்திய இணையைப் பிரிந்த வருத்தத்தை குடும்பத்தினரும் ஊராரும் பங்கு போட்டுக் கொண்டனர். ஆனால் தலைமுடி விஷயத்தை அவர் மட்டுமே ஜீரணிக்க வேண்டியதாகிவிட்டது. 'புண் வந்துவிட்டது. மொட்டை போட்டால் தான் ஆறும், அதனால் என்ன?' என்று மற்றவர்கள் சாதாரணமாக நினைப்பதுபோல பாட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாத்தாவின் மறைவைப் போலவே இந்த இழப்பையும் அவர் மிகப்பெரியதாகக் கருதுகிறார்.
உண்மையில் தலைமுடிக்கு மனிதகுலம் அளிக்கும் முக்கியத்துவமும் அதுகுறித்த உளவியலும் மிகவும் நீண்டது. உலகிலுள்ள அனைவருமே தலைமுடியைப் பெருமைக்குரியதாக நினைக்கின்றார்கள். தன் முடிஉதிர்வைப் பற்றி ஓரளவேனும் வருந்தாத வழுக்கை தலையர்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. முடி உதிர்ந்து விடும் என்பதற்காகவே புற்றுநோய்க்கான கீமோதெரபியை மறுக்கும் நோயாளிகளும் இருக்கிறார்கள். நீண்ட நாள் கழித்து தோழியை சந்திக்கும் பெண்கள் முதலில் கேட்கும் கேள்விகளுள் 'என்ன உன் முடி இப்படி கொட்டிப் போச்சு?' என்று கேள்வி தவறாமல் இருக்கும்.
இன்று நேற்றல்ல கூந்தல் குறித்த முக்கியத்துவம் மத, இன, பாலியல் ரீதியாகவும் பண்டைக் காலம் முதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது. சில மதங்களில் ஆசையைத் துறப்பதற்கு முதற்படியாக தலைமுடியை இழக்க வேண்டும் என்றார்கள். இந்தியாவில் வழங்கி வரும் சில மதங்களில் முடியை நீளமாக வளர்ப்பது மத அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. சில இனக்குழுக்களைப் பார்த்தவுடனே அவர்களது தலைமுடி வாயிலாகக் கண்டு கொள்ளும் விதமாக எல்லாரும் ஒன்று போல சிகை அலங்காரம் செய்து கொள்வார்கள்.
17ஆம் நூற்றாண்டில் நடந்த ஆங்கிலேய உள்நாட்டுப் போரின்போது அரசரின் ஆதரவாளர்கள் சுருள் சுருளாக முடி வைத்திருக்க புரட்சியாளர்கள் அரசின் எதிரிகள் நாங்கள் என்று கூறிக் கொள்ளும் விதமாக தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டார்களாம். அதனால் அவர்களுக்கு Roundheads என்று பெயராம். பழைய கால மனிதர்களின் தலைமுடியை ஆராய்ந்து பார்த்தால் அவர்களது உணவு பழக்க வழக்கங்களை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கையில் சில ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஹிப்பி கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிட்ட தலை அலங்காரத்தோடு காணப்படுவதையும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் வித்தியாசமான சிகை யலங்காரத்துடன் இருப்பதையும் பார்க்கிறோம்.
சிறைச்சாலைகள், வதைமுகாம்களில் தண்டனையின் ஒரு பகுதியாக மொட்டை அடிப்பதையும், ஒரு கஷ்ட காலம் முடியும்போது அல்லது நல்லது நடக்க வேண்டும் என்ற வேண்டுதலின் தொடர்ச்சியாகவும் மொட்டை போடுவதும் நம் நாட்டில் சாதாரணம். ஒரு இறப்பின் பின் சடங்கின் ஒரு பகுதியாகவும் மொட்டை போட்டுக் கொள்கிறோம். விரதம் இருந்து, பல கிலோ மீட்டர் நடந்து சென்று முடியை இறக்கினால் கடவுள் மனமகிழ்ந்து அருள் வழங்குவார் என்ற நம்பிக்கையும் அசைக்க முடியாமல் இருக்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் கூந்தலால் என்னென்ன நன்மைகள்? உடல் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்கு முடி உதவுகிறது. விலங்குகளுக்கு உடல் முழுவதும் மூடியிருப்பது அதனால்தான். மனிதர்களின் தலைமுடி குளிர்பிரதேசங்களில் குளிர் தாக்காமல் சற்று காக்கிறது. ஆற்றில், குளத்தில் ஒருவர் தவறி விழுந்தால் மயிர்கற்றையைப்பிடித்துக் காப்பாற்ற வசதியாக இருக்கிறது. காதிலுள்ள haircells ஒலியைக் கடத்தி கேட்புசக்தியை உணர உதவுகின்றன. கண் இமைகளில், மூக்கின் துவாரங்களில் இருக்கும் மெல்லிய முடிகள் தூசு, அழுக்கு இவற்றைத் தடுத்து நிறுத்துகின்றன.
ஆண் மயிலுக்கு இருக்கும் பெரிய தோகை போல நீளமான கூந்தலும் அழகான சிகையும் எதிர்பாலின ஈர்ப்பிற்கானதாகவும் அறியப்படுகிறது.
தலை முடியை வைத்துப் பெரும் வியாபாரம் உலகெங்கும் நடக்கிறது. ஷாம்பூக்கள், எண்ணெய்கள் தவிர சிகை அலங்கார நிலையங்கள், முடியை ஒட்ட வைக்கும் Darning, weaving சிகிச்சைகள் மனிதனின் தீராத தலைமுடிக் காதலால் தழைக்கின்றன. வழுக்கை தலையில் முடி வளர வைக்கிறேன் என்று ஏமாற்றும் மனிதர்கள் காலங்கள் தோறும் முளைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர்கள், குறிப்பாக ஆண்கள் அதிகம் படிக்கும் அரசியல் பத்திரிகைகளை கவனித்தால் தெரியும் பெரும்பாலும் பின் அட்டைப் பக்கத்தில் 'வழுக்கைத் தலையா? கவலை வேண்டாம்!' என்ற விளம்பரம் இடம் பிடித்திருக்கும்.
ஆரோக்கியமான தலைமுடி நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கிறது ரத்தசோகை, ஸிங்க் குறைபாடு போன்ற சத்து குறைபாடுகளால் தலை முடி உதிர்வது நடக்கிறது. தலையில் ஏற்படும் தொற்றுக்கள், பொடுகு, தைராய்டு குறைபாடு இவற்றாலும் முடி உதிர்வு நிகழலாம். குழந்தைப் பருவத்தில் புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் Flag type of hair என்ற ஒரு நிலை உண்டு. புரதச் சத்து உடலுக்கு சீராக கிடைக்கும் நேரம் முடி கருப்பு நிறத்திலும், புரதச்சத்து குறைவாகக் கிடைக்கும் போது பழுப்பு நிறத்திலும் வளர்வதால் தலைமுடியில் Bands உருவாகி கொடி போன்ற அமைப்பு தெரியும். மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் கைகளால் முடிகளை பிடுங்கிக் கொண்டே இருப்பார்கள். சிலர் பிடுங்கிய முடிகளை வாயில் போட்டு விழுங்கி விடுவதும் உண்டு. இதைக் கூர்ந்து கவனித்தால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விரைவில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.
கூந்தல் வளர்வது பெரும்பாலும் மரபணு சம்பந்தப்பட்ட விஷயம். தாய்க்கு அடர்ந்த கூந்தல் இருப்பது போல மகளுக்கும் இருக்கலாம். ஆணுக்கு இளவயதில் வழுக்கை வந்தால் அவர் மகனுக்கும் அதே வயதில் வர நேரும். மன உளைச்சலாலும் அதிகம் முடி கொட்டுகிறது. உளைச்சலால் தான் முடி உதிர்வது நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் அதை வைத்து மன உளைச்சலுக்கு ஆரம்ப சிகிச்சை எடுக்க வேண்டுமே தவிர, நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அது மேலும் சிக்கலைத் தான் விளைவிக்கும். 10 முதல் 12 வயதில் கூந்தல் அதிகமாக வளரும் பருவம். கர்ப்பகாலம், பிரசவம் போன்ற நேரங்களிலும் கூந்தல் அடர்த்தியாக வளரும். இதற்குக் காரணம் அந்த காலகட்டத்தில் உடல் சக்திகளை சேமித்து வைக்கும் ஆற்றலுடன் இருக்கிறது. 'பாசிட்டிவ் நைட்ரஜன் பேலன்ஸ்' என்று இதைக் கூறுகிறோம். இந்த நிலை கடந்த பின் முடி கொட்டுவது இயற்கை. இதற்கு வருந்தத் தேவையில்லை. அதேபோல உடலில் உள்ள எல்லா செல்களைப் போலவே தலைமுடியும் தன் வளர்ச்சியில் நான்கு பருவங்களைக் கடக்கிறது. அதில் ஒன்று தான் முடிகொட்டும் பருவம் (telogen effluvium). சாதாரணமான நாட்களில் நாள் ஒன்றுக்கு 100 முடிகள் வரை கொட்டுவது இயற்கை. முடிகொட்டும் பருவத்தில் உதிர்வு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் அதன்பின் வளர்ந்துவிடும். முறையான பராமரிப்பு, போதிய ஊட்டச்சத்து, மனநலம் பேணுதல் இவற்றால் மட்டுமே நிச்சயமாக கூந்தல் ஆரோக்கியத்தைக் காக்க முடியும். வெளியே பயன்படுத்தும் பொருட்களால் பெரிய பலன்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை.

Author: siteadmin
Article Title: 'முடி' மேல் ஆசை
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.