• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பிரண்டைப் பொடி

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
89
பிரண்டைப் பொடி

பெண்கள் சில சமயங்களில் தங்களது குழந்தைகளின் மேல் அதிக கோபம் இருந்தால் “உன்னை பெத்த வயித்துல பிரண்டையை வைச்சுத்தான் கட்ட வேண்டும்” என்று இயலாமை கலந்த கோபத்துடன் கத்தி தீர்ப்பார்கள்.
அதற்கு விளக்கம் இதுதான்:

பிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை பிரசவத்தின்போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவாலும் குழந்தையின் பாரத்தாலும் கருப்பையும், பிரசவ உறுப்புகளும், வயிறு புண்ணாகி இருக்கும் அந்தப் புண்களை வெகுவாக ஆற்றக்கூடியது இந்த பிரண்டை. இகழ்ச்சி குறிப்பாக இருந்தாலும் பெற்ற குழந்தைகளின் நடத்தை அவர்களது வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தும் போது அந்த புண்ணையும் அவர்களது மன புண்ணையும் ஆற்றும் வகையில் இரண்டையும் இணைத்து அப்படி சொல்வார்கள்.



பொதுவாக பிரண்டை வெப்பமான இடங்களில் வளர்கிறது கொடிவகையைச் சார்ந்தது. நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும்

பிரண்டையின் சமஸ்கிருத பெயர், அஸ்திசம்ஹரகா. இதன் பொருள் எலும்புகளை பிணைப்பது என்பதாகும். பிரண்டையின் இலை மற்றும் தண்டின் சாற்றை எடுத்து பல்வேறு நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

பிரண்டையின் பாகங்கள் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது, கெட்டோஸ்டீராய்டுகள், ஃப்ரீடீலின் , ரெஸ்வெராட்ரோல் மற்றும் குவாட்ரங்கொலரின் A ஆகியவற்றை முக்கிய உயிர் வளியேற்றக் கூறுகளாகக் கொண்டிருக்கின்றன.



100 கிராம் பிரண்டையில் 327மிகி வைட்டமின் சி மற்றும் 696மிகி வைட்டமின் ஈ சத்து உள்ளன. பிரண்டையின் எதனால் சாற்றில் 2.5% ஃப்ரீடீலின் உள்ளது.பிரண்டையின் மெதனால் சாற்றில் ஸ்டிமஸ்டேரால் 0.47%, β-சிட்டோஸ்டீரோல் 1.15% உள்ளன.

எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. பிரண்டை சாற்றை மிக அதிக அளவில் கொடுக்கும்போது, நரம்புகள் மற்றும் தசைகளை அமைதி படுத்தும் ஒரு மருந்தாகவும் செயல்படுகிறது மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.

இத்தகைய சிறப்புக்களை கண் கொண்டு இருக்கும் பிரண்டையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பிரண்டை நிறைய கிடைத்தால் பொடி செய்து வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் :

பிரண்டைத் துண்டுகள் - 2 கப்
கறுப்பு உளுந்து - 1 கப்
கறுப்பு எள் - 1 கப்
கறிவேப்பிலை - கைப்பிடியளவு,
காய்ந்த மிளகாய் - 20,
புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் பிரண்டையில் உள்ள அரிக்கும் தன்மையை குறைக்கும்.


செய்முறை :

1. வெறும் வாணலியில் கறுப்பு ஒற்றை வறுத்து எடுக்கவும்.
2. அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுக்கவும். ஆற விடவும்.

2. வாணலியில் மேலும் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு பிரண்டைத் துண்டுகள் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும்.

3. கடைசியாக புளியையும் வறுத்து எடுக்கவும்.
4. அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு
1.எள்ளை முதலில் மிக்சியில் ஒரு சுற்று அரைத்து தனியே
எடுத்து வைக்கவும்.

2. வறுத்த பொருட்களை ஒன்றாக

சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து

அரைக்கவும். கடைசியாக பொடி செய்து வைத்திருக்கும் எள்ளைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து

எடுத்து காற்று புகாத டப்பாவில்

சேகரிக்கவும்.


இந்தப் பொடியைத் தேவைப்படும் போது சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொள்ளலாம்.

பின்குறிப்பு:
1 பிரண்டை ஒரு வித நமைச்சல் கொடுக்கும். அதனால் இளம் பிரண்டையை மட்டுமே பொடி செய்யப் பயன்படுத்தலாம்.
2. பிரண்டையில் நார் இருக்கும். நான்கு மூலைகளிலும் உள்ள நாரை நீக்கிவிட்டு வறுக்கவும்.
3.பிரண்டை மிகவும் குறைந்த அளவே இருந்தால், நொடிக்கு பதிலாக துவையல் செய்து சாப்பிடலாம்.
துவையல் செய்முறை:
1. மேலே கூறப்பட்ட செய்முறையில்
புளியை வறுக்காமல் தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு
2. மற்ற பொருட்களை, சிறிதளவு இஞ்சி சேர்த்துக்கொண்டு ஒன்றாக வதக்கி கொள்ளவும்
3. ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த முறையில் சிறிது வெல்லம் சேர்ப்பதும் உண்டு.

4.மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தனியாக ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு வறுக்கலாம். இந்த பிரண்டை எண்ணெயை எடுத்து வைத்து மூட்டுகளில் தடவி வரலாம்.


IMG_20200613_110112_1.jpg



IMG_20200622_131749_1.jpg IMG_20200622_134926_1.jpg IMG_20200622_135202.jpg IMG_20200622_142818_1.jpg IMG_20200622_175730_1.jpg
 

Author: siteadmin
Article Title: பிரண்டைப் பொடி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom