பகலிரவு பல கனவு - 4
சரண்யாவின் வீட்டில் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அதனால் தோழிகள் இருவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு சரண்யாவின் அம்மா அவர்களது படிப்பு பற்றிய சில கேள்விகளை கேட்டார். உயிரியல் ஆசிரியை என்பதால் அவரிடம் தங்களது சில சந்தேகங்களை இருவரும் நிவர்த்தி செய்து கொண்டனர்.
அங்கு வந்து சிறிது நேரம் ஆவதை உணர்ந்த சம்யுக்தா தனது வீட்டுக்கு கிளம்புவதற்கு ஆயத்தமானாள். இதுவரையிலும் அவள் ஜூஸ் கடையில் பார்த்த மனிதனைப் பற்றிய எந்த பேச்சையும் எடுக்காததால் அவனை மறந்து விட்டதாகவே சரண்யா நினைத்தாள். தானாகச் சென்று அவனை ஞாபகப்படுத்தி விட வேண்டாம், சம்யுக்தா பேசினால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
அதனால் தைரியமாக சம்யுக்தாவிற்கு டாட்டா காண்பித்து வழியனுப்பி வைத்து விட்டாள். ஆனால் படுக்கையில் விழுந்த பிறகு தான் சம்யுக்தாவின் பழைய வரலாறு ஒன்று ஞாபகம் வந்து அவளை பயமுறுத்தியது.
அவர்கள் பதினொன்றாம் வகுப்பு முடித்திருந்த பொழுது மாணவர்களை அறிவியல் சுற்றுலா என்று இஸ்ரோ அழைத்துச் சென்றிருந்தனர். பதின்ம வயதிற்கே உரிய முறையில் மாணவிகளின் பார்வை அங்கிருந்த இளம் வயது விஞ்ஞானி மீது சென்றது.
“ஹேய் சரண்! அவனைப் பாரேன். டோவினோ தாமஸூக்கு டஃப் கொடுப்பான் போல இருக்கான். இவ்வளவு ஹேன்ட்ஸமான ஆளு இங்கே என்ன பண்றான்?” என்று சந்தேகம் கேட்டாள் ஒருத்தி.
“அவன் ஆளு பார்க்க நல்லா இருக்கான் தான்.. அதுக்காக என் ஆளு டோவினோ தாமஸ் கூட கம்பேர் பண்றதெல்லாம் டூ..டூ.. மச் “ என்றாள் ஒருத்தி.
“ஹேய்! இரண்டு பேரும் அடங்குங்கடி.. ஆயிரம் டோவினோ தாமஸ் சேர்ந்தாலும் இவன் பக்கத்துல கூட வர முடியாது” என்று தீர்ப்பு வழங்கி விட்டாள் சம்யுக்தா.
“சம்யூ! நீயுமாடி.. ஆத்தா.. நாம எதுக்கு வந்திருக்கோம்.. இதெல்லாம் நம்ம கூட வந்திருக்கிற ஃபிசிக்ஸ் ஆத்தாவுக்குத் தெரிஞ்சா இங்கேயே ஏதாவது ராக்கெட்ல நம்மள கட்டி மேலோகத்துக்கு அனுப்பி வச்சிடும்” என்று புலம்பினாள் சரண்யா.
ஆனால் மாணவிகள் தங்கள் பார்வையை, கமெண்ட் அடிக்கும் வேலையை மாற்றிக் கொள்ளவே இல்லை. இடையே ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.
இயல்பிலேயே அதிபுத்திசாலியான சம்யுக்தா அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்ததோடு மட்டும் அல்லாமல் தானும், அவர்கள் பதில் சொல்ல முடியாத வகையில் சந்தேகங்களை எழுப்பினாள்.
அதிலும் ஹைலைட்டாக, அந்த இளம் விஞ்ஞானி சாதாரணமாகப் பாராட்டாமல், “யூ ஆர் எ ரேர் காம்போ. க்யூட் அஸ் வெல் அஸ் ஸ்மார்ட்” என்று
கன்னத்தில் தட்டி விட்டுப் போனான். மற்ற மாணவிகள் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். வடநாட்டில் தொட்டுப் பேசுவது என்பது சகஜமான விஷயமாக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதுவும் தேனி போன்ற ஊரில் அது இன்னும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. சம்யுக்தா தனது கன்னத்தைத் தடவிக் கொண்டே இருந்தாள்.
இவர்கள் ஊர் கிளம்பும் நாளில் அந்த விஞ்ஞானிக்கு விடுமுறை நாள் போலும். அவனைக் காணாமல் சம்யுக்தா விட்ட கண்ணீரில் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாகத் தகவல் வந்தது. ஊர் வந்து சேர்ந்த பிறகும் கிட்டத்தட்ட ஒரு வாரம் அமைதியாகவே இருந்தாள். சரண்யா தான் இதெல்லாம் வந்து போகும் மேகம் (அதாங்க பாஸிங் க்ளவுட்) என்று சொல்லிச் சொல்லி அவளை தேனியில் தரையிறக்கி இருந்தாள். அதைச் செய்வதற்குள் அவள் ஒரு வழியாகியிருந்தாள்.
இப்போதும் அது போல ஏதாவது நடந்தால் என்ன செய்ய என்பது தான் சரண்யாவின் கவலையாக இருந்தது. அவசரமாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டாள்.
பிள்ளையாரோ, “இனிமேல் தான் என் ஆட்டத்தை தொடங்கப் போகிறேன். வெயிட் அன்ட் வாட்ச்” என்று சிரித்துக் கொண்டார்.
பிள்ளையாரிடம் பொறுப்பை ஒப்படைத்து சரண்யா நிம்மதியாக தூங்கிவிட்டாள். ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சம்யுக்தா நிச்சலமான மனதுடன் சென்று கொண்டிருந்தாள்.
திடீரென இரண்டு மூன்று சிறுவர்கள் சைக்கிள்களில் வேகமாக வர, எந்தப் பக்கம் ஒதுங்குவது என்று தெரியாமல் திகைத்தவள் எதிரில் வந்த பைக்கைக் கவனிக்கத் தவறிவிட்டாள். விளைவு, ஸ்கூட்டி நேராக பைக்கில் மோதித் தரையில் சாய்ந்தது.
தனது தவறை உணர்ந்து அவசரமாக ஸ்கூட்டியை நிமிர்த்த முயன்றவள் அப்போது தான் பைக்கில் அமர்ந்திருந்த அவனைக் கண்டாள். திடீரென்று கடவுளைக் கண்ட பக்தையின் நிலைக்குப் போனாள் சம்யுக்தா. ஸ்கூட்டியை மறந்துவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது செயலைக் கண்ட பிரபாகரன் என்னடா இது, இந்தப் பொண்ணு என்ன லூசா என்று தான் முதலில் நினைத்தான். பிறகுதான் அவள் பார்வையில் தன்னைக் கண்டு வந்து போவது ஓர் பரவசம் என்பதை உணர்ந்து கொண்டான். தன்னையும் ஒரு பெண் பரவசத்துடன் பார்ப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
நிதானமாக பைக்கில் இருந்து இறங்கி அவளைத் தூக்கி நிறுத்தினான். சாய்ந்திருந்த ஸ்கூட்டியை நிமிர்த்தி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். இத்தனை செய்யும் போதும் அவளது பார்வை மாறவே இல்லை. பட்டப் பகலில் நட்ட நடு ரோட்டில் இப்படி நிற்பது சரியல்ல என்பது அவனுக்குப் புரிந்தே இருந்தது.
“ஹலோ! எத்தனை நேரம் இப்படியே நிக்கப் போற? யார் வீட்டுப் பொண்ணு நீ? வீடு எங்கேன்னு சொல்லு. நானும் கூட வரேன். முதல்ல இந்த இடத்தை விட்டுக் கிளம்பு” என்று அதட்டினான்.
“ஹான்… வீடு பக்கம் தான்.. பத்திரமா போயிடுவேன்” என்று உடனே கிளம்பி விட்டாள். ஆனாலும் அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே தான் சென்றாள். மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
“வாவ்! பிள்ளையாரப்பா! இன்னைக்கே அவனைக் கண்ணுல காட்டிட்ட. இப்படியே எங்க இரண்டு பேருக்கும் முடிச்சு போட்டு விட்டுடு. நான் உனக்கு நூத்திஎட்டு தேங்காய் உடைக்கிறேன்” என்று வேண்டிக் கொண்டாள். சிறு பெண் இல்லையா, எல்லாம் அவ்வளது ஈஸியான விளையாட்டாகப் போய் விட்டது. படுக்கையறையில் விழுந்தவளுக்குக் கலர் கலராக கனவுகள் வந்தது.
—---
அத்தை மகள் சங்கீதா பிறந்தது முதல் தனக்கானவள் என்றே வளர்ந்தவன் பிரபாகரன். அவள் மீது ஆசை என்று சொல்வதை விட எனக்கு உரிமையானது என்ற எண்ணம் அதிகம் உண்டு. அதற்காக ஆசையில்லாதவன் என்று அர்த்தம் இல்லை. மச்சான் என்று அவள் அழைத்து எதைக் கேட்டாலும் அது உடனே அவளுக்கு கிடைத்து விடும். அந்த அளவுக்கு ப்ரியமும் அதிகம் கொண்டவன். இவனது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் குறைந்ததன் காரணமும் அவள் மீதிருந்த ஆசை தான்.
ஆனால் அது தான் பிரபாகரனின் வாழ்வில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. சங்கீதாவும் சரி அவளது தாயும் சரி பிரபாகரன் மற்றும் அவனது தந்தையின் சொத்துக்கள் மீது மட்டுமே ஆசை அதிகம் வைத்திருந்தனர் என்பது அப்போது வெட்ட வெளிச்சமானது.
சோறு போட்டுக் கொண்டிருந்த மில்லை விற்று தங்கை மகளுக்கு சீர் செய்த முருகானந்தம் மகனுக்காக சிறு துரும்பையும் நகர்த்த மறுத்து விட்டார். காமாட்சியும் அப்பத்தாவும் உதவ முன்வந்த போது அவன் தான் படித்தது போதும் என்று முடிவு செய்து விட்டான். ஏதாவது செய்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தட்டுத் தடுமாறி ஒவ்வொரு படியாக எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான்.
வீட்டைச் சுற்றி நிறைய மரங்களையும் செடிகளையும் பராமரித்து வந்தான். அதன் பூக்களும் பழங்களும் கணிசமான வருவாய் தந்தன.
அதுவும் கூட பிரபாகரனின் அத்தையின் கண்களை உறுத்தியது போலும். சங்கீதா ப்ளஸ் டூ முடித்த போது மிச்சம் மீதி இருந்த சொத்துக்களில் பங்கு கேட்டு கேஸ் வந்தனர்.
“அண்ணே! சங்கீ நீட் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டா. நம்ம ஊர்ல இருக்கிற மெடிக்கல் காலேஜ்லயே சேர்க்கலாம்னு பார்க்கிறோம். இரண்டு லட்சம் ரூபாய் ஃபீஸ் ஆகுது. அதான், இந்த வீட்டை வித்தாலும் சரி இல்லை நீயே எடுத்துட்டு என் பங்கைக் கொடுத்தாலும் சரி. சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணு. இல்லேன்னா…”
“இல்லேன்னா என்ன பண்ணுவீங்க அத்த? அதையும் சொல்லிட்டீங்கன்னா நாங்க முடிவெடுக்க ஈஸியா இருக்கும்” என்று பிரபாகரன் இடைபுகுந்தான்.
“இல்லேன்னா கோர்ட்ல கேஸ் போட்டு தான் வீட்டைப் பிரிச்சு வாங்கணும். அது வரைக்கும் நீங்க தங்கறதுக்கு இடம் இருக்காது. நல்லா யோசிச்சு ஒரு பதிலைச் சொல்லுங்க அண்ணே” என்று கிட்டத்தட்ட மிரட்டல் விடுத்தாள். முருகானந்தம் தலைகுனிந்து கொண்டார்.
பிரபாகரன் சிரித்து வைத்தான். காமாட்சி கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். அப்பத்தா புடவைத் தலைப்பை உதறிக்கொண்டு எழுந்தார்.
“அடி செருப்பால, உன்னைய பெத்த வயித்துல பிரண்டையை வச்சுத்தான் கட்டிக்கணும். கூடப் பிறந்த அண்ணன் குடும்பம் தெருவில நிக்கறத பாக்கறதுல எவ்வளவு சந்தோஷம். வீட்டுல பங்கு கேட்டு வந்தியே, இது என்ன உங்க அப்பன் சம்பாதிச்சு வச்ச சொத்தா இல்ல.. உங்க தாத்தன் சம்பாதிச்சதா..?”
“இது… இது… அப்பாவோடது தான.. “
“கல்யாணத்தோட உனக்குக் கொடுத்தோமே.. இப்போ நீ குடியிருக்கிறயே அது என்னாது.. உங்க அப்பன் வீடா.. இல்லை மாமனாரு வீடா?”
“பொண்ணுக்கு கொடுத்த சீரெல்லாம் கணக்கு கேப்பீங்களா?”
“நாங்க ஏன் கேட்கிறோம்? நீ தான் வந்து என் மருமகளுக்கு அவங்க அப்பா வீட்டில தந்த வீட்டில பங்கு கேட்டு கேஸ் போடுவேன்னு வந்து நிக்குற. வேணும்னா என் பேரன உன் வீட்டில பங்கு இருக்கு, தாத்தா சுயநினைவு இல்லாதபோது எழுதி வாங்கிட்டாங்கன்னு கேஸ் போடச் சொல்லவா? அநேகமா நீ தான் தோத்துப் போயிடுவ? வந்துட்டா எதுடா சாக்குன்னு?” அப்பத்தா பாயிண்ட் பாயிண்ட்டாகப் பேசியதில் அவரது மகள் தனது மகளைக் கூப்பிட்டுக் கொண்டு வெளியேறினாள்.
“பொறந்த வீட்டுல நல்லா இருந்தா பிடிக்காத ஜென்மங்கள்னு சிலது இருக்கும் போல… அதுல ஒன்னு என் புள்ளையா வந்து பொறந்திருக்கு” என்று வருந்தினார் அப்பத்தா.
“விடு அப்பத்தா! உன் மகனையும் சொல்லணும். பாசமலர் படம் ஓட்டி அவங்களை இப்படி ஆக்கி வச்சிட்டாரு. இந்தப் புள்ள சங்கீதாவும் அம்மாவ மாதிரியே வருது. பாவம், அவளைக் கட்டப் போறவன்” என்று பரிதாபம் கொண்டான் பிரபாகரன்.
“என்ன தம்பி? இப்படிச் சொல்லிப்புட்ட. அவ பொறந்ததுல இருந்தே உனக்குத்தான்னு சொல்லித் தானே வளத்திருக்கு. இப்போ எதுக்கு இப்படி ஒரு பேச்சு?”
“என் வாயில இருந்து வேண்டாம்னு வராது அப்பத்தா. ஆனால் அவ பெரிய படிப்பு படிக்கப் போறா, நான் படிக்காதவன். முன்ன மாதிரி காலம் இல்ல. அவங்க வேண்டாம்னு சொன்னா கேட்டுக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் ரெடியா இரு” என்று சமாதானம் செய்து வைத்தான். அதன் பின்னர் இன்று தான் சங்கீதாவை நேரில் பார்க்கிறான்.
அவளது வருங்கால கணவனுடன் கும்பக்கரை அருவி, வைகை அணை , மேகமலை போன்ற இடங்களில் பார்த்திருக்கிறான். தெரிந்தவர் என்று காட்டிக் கொள்ளாமல் வந்துவிடுவான். நண்பர்கள் கேலி செய்யும் போதும் சிரித்துச் சமாளித்து விடுவான்.
இதோ சங்கீதா கல்லூரி சென்று மூன்றே வருடங்களில் பிரபாகரன் வேண்டாம் என்ற வார்த்தை அவர்கள் வாயில் இருந்து வராவிட்டாலும் செய்கையில் தெளிவாக வந்துவிட்டது.
மூன்றாம் வருடம் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு எதற்கு அவசரமாக திருமணம் என்று யோசனை வந்தாலும் நமக்குத் தேவையில்லை என்று ஒதுக்கி விட்டான்.
சங்கீதாவைத் தெளிவாக அவன் மனதில் இருந்து அழித்த பிறகு பார்த்தால் இன்று பார்த்த ஸ்கூட்டி அழகி அந்த இடத்தை நிரப்பி இருந்தாள்.
அல்லி நகரத்தில யார் வீட்டு பெண்ணாக இருக்கும்? நிச்சயம் நல்ல வசதியான, நன்றாகப் படிக்கக் கூடிய, நல்ல பின்னணி உடைய குடும்பமாகத்தான் இருக்கும். இது உனக்குத் தேவையா என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
எனக்குத் தேவையா என்பதை விட அந்தப் பெண்ணுக்கு நான் தேவை போலிருக்கிறதே என்று அதே மனசாட்சி பதிலளிக்க வெகுநேரம் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான் பிரபாகரன்.
இது என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். மீண்டும் அ
வளைச் சந்தித்தால் பார்க்கலாம் என்று முடிவு செய்து விட்டான். அது என்ன அத்தனை எளிதான காரியமா?