• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு - டீசர்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
167
பகலிரவு பல கனவு - டீசர்


“உனக்கு சம்யுக்தான்னு பேர் வச்சதால எங்கிருந்தோ உன் ப்ருத்விராஜன் குதிரை மேல வந்து உன்னை தூக்கிட்டு போறது மாதிரியே கனவு கண்டுகிட்டு இருக்க. ஆனா அவன் கிட்ட குதிரையும் இல்ல… உங்க அப்பாவோட பவருக்கு முன்னாடி வாயைத் திறந்து பேசறதுக்கு தைரியமும் இல்ல.. “

‘அவனைப் பத்தி‌ இங்கே யாருக்கும் தெரியாது. அவன் நிச்சயம் வருவான்..’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாளே தவிர தோழியிடம் வாயைத் திறக்கவில்லை அவள்.

“இங்கே பாரு சம்யூ! என் மேலேயும் தப்பு இருக்கு. ஆரம்பத்திலேயே உன் கூட சேர்ந்து அவனைப் பார்த்தது தெரிஞ்சு தான் இப்போ உன் பேரண்ட்ஸ் என்னைக் கேள்வி கேட்கறாங்க. நான் அதெல்லாம் ஒரு டைம் பாஸ், வயசுல வர்ற இன்ஃபேச்சுவேஷன்னு கடந்து வந்துட்டேன். நீ எப்படி இவ்வளவு கொஞ்ச பீரியட்ல வாழ்க்கையே அவன் தான்ற அளவுக்கு ஃபிக்ஸ் ஆகிப் போயிருக்க.”

“அதுவா… அவனை மாதிரி ஆளை எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது… பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்… அதான்.. பழகிப் பார்த்து…. “


“ஷட் அப் சம்யூ. என்னையும் சேர்த்து இதுல மாட்டி விட்டிருக்க. உன்னைக் கெஞ்சி கேட்கிறேன்.. அவன் வருவான்னு தேவையில்லாமல் ஆசையை வளத்துட்டு படிப்பைக் கெடுத்துக்காத சம்யூ. அவன் ஒரு சாதாரண ஆளு, உன் லட்சியம் என்னன்னு அவனால் புரிஞ்சுக்க கூட முடியாது"

"பார்க்கலாம்.. யார் ஜெயிக்கப் போறாங்கன்னு..."

"உன் கூட பேசறதே வேஸ்ட் டீ... என் தொண்டை வலிச்சது தான் மிச்சம்."

—----------

“நம்ம சனத்துல, சொந்தத்தில உனக்கு பொண்ணு கொடுக்க நீ, நான்னு போட்டி போட்டு காத்திருக்காங்க. வீடு கொள்ளாம வரிசை வச்சு ஊர் மெச்ச கல்யாணம் செஞ்சு காலம் பூராவும் சீர் குறையாம பாத்துக்குற ஆளுங்கள விட்டு சிகப்பு தோலைப் பாத்து மயங்கிப் போய் கிடக்கான். ஆத்தாவும் தங்கச்சியும் அவனுக்கு ஒத்து ஊதுறீங்க. பின்னாடி அண்ணனை மாதிரியே நீயும் எவனையாவது கூட்டிட்டு வாரதுக்கா? நல்லா வளத்துருக்கா புள்ளைங்கள… சொல் பேச்சு கேட்காம… “ மூச்சு விடாமல் கத்திக் கொண்டிருந்தார்
முருகானந்தம்.

“ஆமா… இவர் வெறும் கையிலே முழம் போட்டுட்டு இருந்தப்போ இந்த சொந்தம் எல்லாம் எட்டியே பார்க்கல.. இப்போ என் மகன் தன்னால முன்னேறி நாலு பேர் மெச்சற மாதிரி இருக்கான். அவன் முன்னேறும் போதெல்லாம் என் மகனாக்கும்னு மார் தட்டிக்க வேண்டியது.. அதுவே இவருக்கு பிடிக்காத விஷயம்னா அம்மா வளத்தது சரியில்லை.. எல்லா ஆம்பளைகளும் இப்படித்தான்.. எப்போத்தான் மாறுவாங்களோ.. அந்தப் புள்ளைக்கு என்ன குறைச்சல்.. இவரோட தங்கச்சி பொண்ணு அறுக்காணியை விட ஆயிரம் மடங்கு அழகா இருக்காளே… அந்தப் பொறாமை தான் மனுசருக்கு.. கூடவே முதல்ல இவர் கிட்ட சொல்லாம என் கிட்ட சொல்லிட்டானே .. அந்தப் பொறாமை தான்..‌” என்று புடவைத் தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு முணுமுணுத்தார் காமாட்சி, திருமதி முருகானந்தம்.

ஆம், எப்போதும் எந்த விஷயத்தையும் முதலில் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் தனயன் இவ்விஷயத்தில் ஏனோ அவரை விடுத்துத் தாயிடம் நெருக்கம் காட்டிவிட்டான்


தாயின் பேச்சு அச்சு பிசகாமல் அருகில் இருந்த அண்ணன் தங்கை இருவரது காதிலும் விழுந்தது. தங்கை தந்தையின் முன் சிரித்து அவரது கோபத்தைக் கூட்ட விரும்பாமல் உள்ளே ஓடி விட்டாள்.

ஆனால், தந்தையின் கோபத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல், வாய் விட்டுச் சிரித்தான் பிரபாகரன். அருகில் இருந்த காமாட்சி அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டு அவனைத் தரையிறக்கினார்.

சட்டென்று சூழ்நிலை உணர்ந்து அவன் தந்தையைப் பாவமாகப் பார்க்க அவரோ நெற்றிக் கண்ணைத் திறந்தார்.
 
Last edited:
Top Bottom