Subha Balaji
Member
- Joined
- Jun 30, 2024
- Messages
- 84
நினைவெல்லாம் நீயே 19
அங்கு வந்த சீஃப் நர்ஸ் காமினி அதட்டலோடு "யாரு..ரம்யா..இவருஇந்த நேரத்துல ஐசியூல என்ன வேணுமாம்"
"சிஸ்டர்..ஐசியு பேஷண்ட் பத்தி கேட்டாரு..
"ஐயா..உங்களை பார்த்தாலே ஊர்லேந்து அவசரமா வந்த மாறி தெரியுது..காலை ஆறுலேந்து ஏழு மணி வரைக்கும் ஐசியூவில் இருக்கறவங்கள பத்தி சொல்வாங்க.."
"அப்ப வந்தீங்கனா உங்க சொந்தக்கார ஆட்களை பத்தி தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்.."
அங்கு வந்த வார்ட் பாயை அழைத்தவர் "ராமு கேண்டீன்ல என்ன சாப்பிட இருக்குனு பாத்து இவருக்கு வாங்கி குடு.." என அனுப்பி விட்டார்..
"யார் வந்து என்ன கேட்டாலும் பதில் சொல்லணும் அவசியம் இல்லை..ரம்யா..மொதல்ல இது பதில் சொல்ற நேரமில்லை..
புரியுதா.."
"இன்னிக்கு உன் ட்யூட்டி ஐசியூல இல்லயே..விஐபி பேஷண்ட் ஐசியுல அட்மிட் ஆகி இருக்கறதால யார் வந்து ஐசியூ பற்றி எது கேட்டாலும் என் கிட்ட சொல்லணும் சீப் மீட்டிங்க்ல சொன்னாரே..நீ இல்லயா அப்ப.."
"நல்ல வேளை நான் கேமரால பாக்கவே உடனே வர முடிஞ்சிது..நீ கெளம்பு "
அங்கிருந்து ரம்யாவை அனுப்பியவர் வம்பே வேண்டாம் என தானே ஐசியூ வாசலில் உட்கார்ந்து கொண்டார்.
கேண்டீன் வந்த கிராமத்துக்காரர் வார்ட் பாயிடம் "என்னப்பா உங்க ஆஸ்பத்திரில சொந்தக்கார பையனை பாக்க வந்தா இவ்ளோ கெடுபிடி பண்றீங்க.."
"ஐசியூனாலே அப்டி தான் பண்ணுவாங்க ஐயா..அங்க இருக்கறவங்க உயிருக்கு ஆபத்தா தானே வர்றாங்க..அவங்கள ஜாக்கிரதையா நல்லபடியா திருப்பி அனுப்பற கடமை இருக்குல்ல..
அதான்.."
"கேண்டீன் ஓனரை அழைத்து "இவங்க ரொம்ப நேரம் பிரயாணம் பண்ணி ஏதோ ஊர்லேந்து வந்திருக்காப்பல்ல ண்ணே...
காமினி அக்கா தான் அனுப்பி வெச்சாங்க.."
"இவருக்கு சீக்கிரம் ஜீரணமாகிற மாறி இட்லியோ..இடியாப்பமோ குடுங்க.."
"சரிங்க ஐயா நான் அண்ணா கிட்ட சொல்லிட்டேன்..உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க. தருவாங்க..திருப்தியா வாங்கி சாப்பிடுங்க.."
"நம்ம கேண்டீன்ல சாப்பாடு நல்லாவே இருக்கும்..சாப்ட்டு வெளியே ஒரு பெரிய ஹால் இருக்கு..ஐசியூல இருக்கறவங்களோட வந்தவங்க அங்க தான் தங்குவாங்க..
நீங்களும் அங்கேயே தங்கிக்கங்க.. எனக்கு ட்யூட்டிக்கு நேரமாச்சு..நான் வர்றேன் ஐயா.."
தான் வந்த நோக்கம் நிறைவேறாததால் வெறுத்து போன அந்த உருவம் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கடமைக்காக ரெண்டு இட்லி வாங்கி சாப்பிட ஆரம்பித்தது.
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பேச்சு குரல் கேட்க தன் காதை தீட்டி கொண்டு கையில் இருந்த ஃபோனில் அமைதியாக ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தது.
"ரூபா வர்மாக்கு என்ன தான் ஆச்சு டி..நாம யாரையும் அந்த சூட் ரூம் இருக்கற ஃப்ளோர்க்கே விட மாட்டேங்குறாங்க..ட்யூட்டிக்கு சீஃப் டாக்டரும், காமினி சிஸ்டர் மட்டும் தான் போறாங்க.."
"தெரியல டி..கொரோனா மாதிரி ஏதாவது தொத்து வியாதியா இருக்கும்.."
"இல்ல டி எனக்கு என்னவோ சந்தேகமாகவே இருக்கு.."
"என்ன டி உன் சந்தேகம்.."
"இது சினிமாகாரங்க நடத்தற ஹாஸ்பிடல்..இங்க வந்து ட்ரீட்மெண்ட் பாத்துக்கற முக்கால்வாசி பேருங்க சினிமாகாரங்க தான்.."
"ஏன் டி லூசு..ஹாஸ்பிடல் பார்த்தல்ல..ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாறி இருக்குல்ல.."
"அதான் டி..இங்க வர்ற சினிமாக்காரவங்க சாதா ட்ரீட்மெண்ட் மட்டும் வர்றதில்லை டி..ஏதாவது தவறா ஆனா கலைச்சுக்கறத்துக்கும் வருவாங்களாம்னு ஒரு ரூமர் இருக்கு தெரியும்ல்ல.."
"உனக்கு அறிவு இருக்கா..இல்லை மொத்தமா எங்கயாவது கடன் குடுத்திட்டியா..சம்பளம் குடுக்கறவங்கள பத்தி நியாயமே இல்லாத புரளி பேசலாமா.."
"இவங்க நமக்கு தெய்வம் போல டி..நமக்கு எல்லாம் நல்ல சம்பளம் தர்றாங்க..நம்ம குடும்பத்து ஆளுங்கள்ல படிக்கற பசங்க இருந்தா டிகிரி வரைக்கும் இலவசமா படிக்க வெக்கறாங்க..மேற்கொண்டு படிக்க வட்டி இல்லாத கடன் தர்றாங்க..நம்ம குடும்பத்து ஆட்களுக்கு உடம்பு சரியில்லாம போனா வைத்தியம் பண்றாங்க.."
"அவங்க அவ்ளோ வசதிகள் நமக்கு செய்யும் போது அதை சுகமா அனுபவிச்சுக்கிட்டே புரளி பேசறீயே..அவங்களயே பேசும்போது நீ எங்கள பத்தியும் இதே மாறி தானே பேசுவ.."
"தாயே..இனி நான் உன் கூட எங்கயும் வர மாட்டேன்..உனக்கு ஒரு கும்பிடு..உன் திசைக்கே ஒரு கும்பிடு.."
படபடவென பேசி விட்டு எழுந்து போன பெண்ணின் வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் எதிரில் இருந்த பெண்ணின் வார்த்தைகளை தனக்குள் சொல்லியபடி அந்த உருவம் எழுந்து சென்றது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் தான் கேட்ட வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும், ரூபா வர்மா கர்ப்பமாக இருக்கலாம் என்றும் அதை கலைக்க தான் ஹாஸ்பிடலில் சேர்ந்து உள்ளதாகவும், இதை அங்க வேலை செய்வோரே பேசியதாக ரெகார்ட்டிங் செய்ததை பதிவிட்டும் தன் யூ ட்யூப் சேனலில் பதிவிட்டது.
பதிவிட்ட ஒரே மணி நேரத்தில் பல லட்சம் ஷேர்கள், இதன் அடிப்படையில் வேறு வேறு யூட்யூப் சேனல்களில் எல்லாம் போஸ்ட் என சோஷியல் மீடியாவில் பரபரப்பு தொற்றி கொண்டது.
தமிழக ஊடகங்களிலும், டிவியிலும் இந்த யூட்யூபை ஆதாரமாக்கி செய்திகள் வெளியிட இன்னும் பரபரப்பாகியது.
விடியற்காலை நாலு மணிக்கு ஃபோன் அடிக்க எடுத்து பார்த்த சபரி அதில் இருந்த ரமணன் பெயரை பார்த்து நெற்றி சுருக்கியவன் மெல்ல எழுந்து ரூம்க்கு வெளியே வந்தவன் "குட்மார்னிங் சார்..என்ன இவ்ளோ காலைல ஃபோன்..ஏதாவது முக்கியமான விஷயமா..."
"விஷயம் ரொம்ப முக்கியம்..ரொம்ப சென்சிட்டிவ்..நானே இப்ப தான் பாத்தேன்..நீங்க உங்க ட்யூபர் திறந்து பாருங்க.."
வேகமாக யூட்யூப் திறந்தவன் கண்ணில் பட்டதை கண்டதும் அந்த சேனலில் இருப்பவர்களை அடித்து நொறுக்கும் ஆவேசம் வந்தது..
"என்ன சார்..உண்மையே இல்லாத விஷயத்தை இப்படி தானே நேரில பாத்த மாறி போஸ்ட் பண்ணி இருக்காங்க..அவன் மட்டும் என் கையில கிடைச்சான் செத்தான்.."
"இந்த விஷயம் ரொம்ப ஜாக்கிரதையா டீல் பண்ணணும்..வீட்டுல இருக்கற ஆளுங்களுக்கு தெரியாம பாத்துக்கணும்..முக்கியமா உங்கம்மாக்கு தெரிய வேணாம் தம்பி..ஏற்கனவே வேதனைல இருக்காங்க..அவங்க அழுது ஏதாவது உடம்புக்கு பிரச்சினை ஆகி இன்னும் அதிகமான வேதனை அதோட சேர வேணாம்.."
"உங்க பீலிங்க்ஸ் எனக்கு நல்லா புரியுது தம்பி..
கொந்தளிக்கறீங்க..உங்களால உங்களையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்க.."
"நான் சொல்றனேனு தப்பா நினைக்காதீங்க... நீங்க இப்ப தான் பொறுமையா இருக்கணும்..எதுவும் கோவப்பட்டு செஞ்சிடாதீங்க தம்பி..
"ஆறு மணிக்கு சார் வீட்டுக்கு போவேன்..அவர் கிட்ட இதை காட்டறேன்..என்ன ஆக்ஷன் எடுக்கறதுனு சார்க்கு தான் சரியா தெரியும்.."
"அப்ப இதை எல்லாம் பாத்துட்டு நாங்க ஏதுவுமே தெரியாத மாறி தொம்மையா இருக்கணும்க்கறீங்களா சார்.."
"தம்பி மறுபடியும் சொல்றேன்..இது நாம கோவத்தை காட்டற நேரமில்ல..யார் இதை செஞ்சாங்கனு ட்ரேஸ் பண்ண சொல்லி இருக்கேன்..இன்னும் அரை மணில தெரிஞ்சிடும்.."
"ஆள் யாருனு மட்டும் தெரியட்டும்..அவனை கண்டதுணடமா வெட்டி போட்டு நான் ஜெயிலுக்கு போறேன்.."
"தம்பி பொறுமை..இந்த மாதிரி மீடியாக்களை சார் சிறப்பா ஹான்டில் செய்வார்..உங்களுக்கு இதை பத்தின அனுபவம் இருக்க வாய்ப்பு இல்லை..."
"சார் என்ன சொல்றாரோ..அவர் சொல்ற படி நடந்துக்கங்க.."
ஆறு மணி வரை பொறுத்து கொள்ள முடியாதவன் மெல்ல காத்யாயனியை மட்டும் எழுப்பி அவசரமாக வெளியே செல்வதாக சொல்லி கதவை தாள் போட்டு கொள்ள சொல்லி விட்டு, அண்ணனையும் எழுப்பி அவனையும் அழைத்து கொண்டு வெளியே செல்ல கதவை திறக்கும் போது வெளியே அடித்த ஃப்ளாஷ் லைட்களால் கண்களை மூடி மறுபடியும் கதவை அடைத்தான்.
அதுவரை லைனில் இருந்த ரமணன் "என்ன தம்பி பிரஸ் வெளியே இருக்காங்களா.."
"ஆமா சார் இப்ப என்ன பண்றது..எப்படி வெளியே வர்றதுனே தெரியலயே.."
"நான் சொல்றபடி கேளுங்க..உங்க வீட்டில் பின்பக்கமா பால்கனி இருக்கா.."
"இருக்கு சார் சமையறையை ஒட்டி இருக்கும்..ஆனா அது சின்னதா ஒரு ஆள் தான் வர மாறி இருக்குமே.."
"ஒரு ஆள் வர்ற வழி இருக்குல்ல..அது போதும் அந்த வழியில நீங்க வெளியே வரலாம்ல்ல.."
"இன்னும் பத்து நிமிஷத்துல யாரும் சந்தேகம் வராத அளவுக்கு நம்ம ஆளுங்க அங்க வருவாங்க..அவங்க உங்களை ஜாக்கிரதையா சாரோட கெஸ்ட் ஹவுஸ்க்கு கூப்பிட்டு வந்திடுவாங்க.."
"சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்க..உங்க அண்ணா அங்க இருக்கட்டும்..நீங்க மட்டும் வாங்க..அங்க எதாவது ப்ராப்ளம்னா பாக்க ஒருத்தர் இருக்கணும்..அதான்"
"உங்க வீட்டுக்கு கீழே வந்ததும் அவங்க ஃபோன் பண்ணுவாங்க..ரெடியா இருங்க தம்பி.."
"சரி சார்..நான் ரெடியா தான் இருக்கேன்.."
"நடந்ததை எல்லாம் அண்ணனிடம் வேகமாக விளக்கியவன் அவனை வீட்டில் இருந்து பார்த்து கொள்ள சொல்லி முடிப்பதற்குள் ரமணன் சொன்னது போல ஃபோன் வர சபரி பால்கனி வழியாக சப்தமே இல்லாமல் வேகமாக இறங்கி அவர்களிடம் போக..அடுத்த அரை மணி நேரத்துக்குள் தன்ராஜின் கெஸ்ட் ஹவுஸ்க்கு அவர்களோடு போய் சேர்ந்தான். (தொடரும்)

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 19
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.