• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6


ஜானகியை வென்டிலேட்டர் உதவியில் இயங்க வைத்து அடுத்த கட்ட சிகிச்சைகளைப் பற்றி மருத்துவர்கள் ஆலோசனை செய்ய ஆரம்பித்துவிட, நீரஜ் சற்று இறுக்கம் தளர்ந்து அமர்ந்தான். அதெப்படி நீ நினைக்கலாம் என்றது அவனது அலைபேசி. யாரென்று பார்க்காமல் காதில் வைத்து ஹலோ என்றான்.


"ராஜூ! எங்க இருக்க? வீட்டுக்கு ரீச் ஆகிட்டியா இல்லையா? பாட்டி எப்படி இருக்காங்க? எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது? ஒரு ஃபோன் பண்ணி இது தான் விஷயம்னு சொல்லமாட்டியா? என்னாச்சோ ஏதாச்சோன்னு பயப்பட மாட்டோமா? டக்குன்னு கிளம்பி வர்ற தூரத்துலயா இருக்கோம்?"



மறுமுனையில் அவனது தாயிடம் இருந்து கேள்விக்கணைகள் பாய்ந்து வந்தன. 'நானென்ன இங்க ஹாயா டூயட் பாடவா வந்தேன். நானா இவ்வளவு டென்ஷனையும் தனியா தாங்கினேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு. இதுல இவங்க வேற! கேள்வியா கேட்டு கொல்றாங்க' மனதுக்குள் தாயை வறுத்தெடுத்தவன் வெளியே சாந்த சொரூபியாக மாறி இலகுவாகப் பேசினான்.



"அம்மா! ராஜராஜேஸ்வரி! என்னைப் பெற்ற தாயே! கொஞ்சம் கூட கேப் விடாமல் கேள்வியா கேட்டால் ஞான் எந்து செய்யும்? உங்களுக்கே மூச்சு வாங்குது பாருங்க. நான் சென்னை ரீச் ஆகிட்டேன்னு மெசேஜ் போட்டேனே, நீங்க பார்க்கலையா?" என்று இவன் பேச ஆரம்பிக்கவும், "மிஸஸ். ஜானகியோட அட்டென்டர் யாருங்க. உங்களை டாக்டர் கூப்பிடறாங்க" என்று ஒரு நர்ஸ் வந்து சொல்ல மறுமுனையில் இருந்த அவனது பெற்றோருக்கு பயம் பிடித்துக் கொண்டது.



"ராஜூ! நீ எதையாவது மறைக்கிறியா? அம்மாவுக்கு என்ன ஆச்சு? நல்லா தானே இருக்காங்க? ஓ மை காட்.. அப்பா… அப்பா எப்படி இருக்காங்க? எந்த ஹாஸ்பிடல்? நாங்க உடனே கிளம்பி வர்றோம்" மனைவிடமிருந்து மொபைலைக் கைப்பற்றி படபடத்தார் சந்திரசேகரன், அவர் நீரஜின் தந்தை, ரகுவரன் ஜானகி தம்பதியரின் இளைய புத்திரன்.



"ஜஸ்ட் எ மினிட் சிஸ்டர்" என்று நர்ஸிடம் சொன்னவன், "அப்பா! ப்ளீஸ்! டென்ஷன் ஆகாதீங்க. உங்க ஹெல்த்துக்கு நல்லதில்லை. நான் டாக்டரைப் பார்த்துட்டு வந்து பேசறேன். விஷயம் எவ்வளவு சீரியஸ்னு இன்னும் தெரியலை. டென்ஷன் ஆகாமல் வெயிட் பண்ணுங்க.. அம்மாஆஆஆ! உங்களுக்கும் தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் பேசற வரை வேற யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம், And please, don't even try to call ரகுத்தாத்தா. He is so fragile now and Even a single word about Jaanu will break him into pieces" என்று சொல்லி, அவர்கள் மேலே பேச வாய்ப்பளிக்காமல் அழைப்பை முடித்துக் கொண்டு டாக்டரிடம் விரைந்தான்.



தயவு செய்து ரகுத்தாத்தாவை அழைக்க வேண்டாம், ஜானகியைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டாலும் அவர் உடைந்து போய் விடுவார் என்று அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவனைப் பெற்றவர்களை மேலும் பதற வைத்தது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த சந்திரசேகரன் அன்னையின் நினைவில் கண்கலங்க அவரது மனைவி ராஜராஜேஸ்வரி கணவனுக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில் தனக்கும் சொல்லிக் கொண்டார். இருவரும் கடந்த நாலைந்து வருடங்களாகத் தான் அமெரிக்கா வாசிகளாக மாறி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் படபடப்புடன் காத்திருக்க, அதே படபடப்புடன் டாக்டரின் முன் நின்றிருந்தான் நீரஜ்.



"ப்ளீஸ் உட்காருங்க நீரஜ். மிஸஸ்.ஜானகியோட ரிப்போர்ட்ஸ் வந்திருக்கு. அல்ரெடி எதிர்பார்த்தது தான். எலக்ரோலைட்ஸ் கம்மியா இருக்கு, சோடியம் லெவல் ரொம்பவே

மோசமா இருக்கு. அது தான் அவங்க அன்கான்சியஸா இருக்கக் காரணம். அதைத் தவிர லங்க்ஸ் இன்ஃபெக்ட் ஆகி இருக்கு…. கொஞ்சம் சிவியரான இன்ஃபெக்ஷன் தான். மத்தபடி அவங்க வயசுக்கு ஷி இஸ் பர்ஃபக்ட்லி நார்மல். நந்திங் டூ வொர்ரி மச். As early as possible எலக்ரோலைட்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுடலாம். உங்களுக்கே தெரியும், கொஞ்சம் கொஞ்சமா தான் டோஸேஜ் ஜாஸ்தி பண்ணனும். கூடவே லங் இன்ஃபெக்ஷனுக்கு மெடிசின் ஸ்டார்ட் பண்ணிடுவோம். இப்போ இருக்கிற கன்டிஷன்ல, டைம் லிமிட் எதுவும் சொல்ல முடியாது. லெட் அஸ் ஹோப் ஃபார் ஹெர் ஸ்பீடி ரெகவரி" என்று அவன் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து ஜானகியின் நிலையைப் புரிய வைத்தார்.



சற்று நேரம் அமைதியாக இருந்தவன், "ஓகே டாக்டர். நான் ஏதாவது ட்ரீட்மென்ட்ல ஹெல்ப் பண்ணலாம்னா சொல்லுங்க" என்றான் தயக்கத்துடன்.



ஒரு சிரிப்புடன் ஜானகியின் ரிப்போர்ட்டை அவன் புறம் நீட்டியவர், "இதுல ரிப்போர்ட்ஸ் அன்ட் ட்ரீட்மென்ட் ப்ளான் இருக்கு. Go through the same and let me know your opinion" என்றார்.



நிதானமாக அந்த பேப்பர்களில் கவனம் செலுத்தியவன், "சாரி சார்! இந்த செகண்ட்ல இருந்து நான் பேஷண்டோட அட்டென்டர் மட்டும் தான்" என்று ஒரு வரியில் அவனது திருப்தியை வெளிப்படுத்திவிட்டான்.



"தாங்க் யூ ஃபார் யுவர் அன்டர்ஸ்டான்டிங்!" என்று புன்னகைத்தவர், "வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காமல் சொல்லுங்க" என்றார்.



அப்போது தான் நினைவுக்கு வந்தவனாக, "ஒரே ஒரு விஷயம் டாக்டர். இப்போ இருக்கிற கன்டிஷன்ல தாத்தாவை தனியா வீட்டுல விடமுடியாது. இப்போவே அவரோட பிபி எல்லாம் எப்படி இருக்குன்னு தெரியலை. இங்கே எங்களுக்கு ஒரு ரூம் அலாட் பண்ணினால் பெட்டரா இருக்கும்" என்றான். தயங்கித் தயங்கி அவன் கேட்ட உதவி அந்த மருத்துவமனை விதிகளுக்கு புறம்பானது என்றாலும் மருத்துவமனையின் உரிமையாளர் என்ற முறையில் அவர் அவன் கேட்டதைச் செய்து கொடுத்தார்.



காலை ஐந்து மணிக்கு இந்திய மண்ணில் கால் வைத்தவன், மணி மதியம் ஒன்றைத் தாண்டியிருக்க, கிட்டத்தட்ட எட்டு மணி நேரமாக தண்ணீர் கூட குடிக்காமல் ஓய்ந்து போனான். இத்தனை நேரம் இருந்த டென்ஷன் கொஞ்சம் குறைந்ததால் வயிறு என்னையும் கவனி என்றது.



சோர்ந்த நடையுடனே டாக்டரின் அறையில் இருந்து வெளியே வந்தவன் தாத்தாவைப் பார்த்தான். உதவிக்கு வந்த கம்யூனிட்டி ஆட்கள் அந்த நிமிடம் வரை அவருடன் இருந்தனர். அடிக்கடி சிந்தனையில் மூழ்கியவரைப் பேச்சுக்குள் இழுத்து, எப்படியோ அவரைச் சமாதானம் செய்து இரு வேளையும் உண்ண வைத்து என்று வார்த்தைகளில் வாழ்த்திவிட முடியாத அளப்பரிய சேவை அவர்களுடையது.



இவனைப் பார்த்ததும் ஒருவர் எழுந்து அருகில் வந்தார். "சார்! நீங்க வாங்க, நாம அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வருவோம்" என்று அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு போனார். அவர்கள் சென்ற இடம், மருத்துவமனையின் காண்டீன். எதுவும் வேண்டாம் என்றவனைச் சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் தனது பசியின் அளவை உணர்ந்து கொண்டான் நீரஜ்.



"தாத்தா சாப்பிட்டாரா? நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டீங்களா?" நான்கு வாய் உள்ளே சென்ற உடன் கேள்வி வந்தது.



"அதெல்லாம் வேளை தவறாமல் நாங்க மூணு பேரும் சாப்பிட்டாச்சு. நீங்க சாப்பிடுங்க. ஊர்ல இருந்து வந்து ஒரு காஃபி கூட குடிக்கலை நீங்க" என்று அவனது தேவையைக் கவனித்தார் அவர். சாப்பிட்டு முடித்ததும் பாட்டியைப் பற்றி விசாரித்தார் அவர். இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.



"ரொம்ப சீரியஸ் கண்டிஷன் இல்லை. ஆனால் அவங்க வயசுக்கு கொஞ்சம் பயப்படத் தான் செய்யணும். சீக்கிரம் இங்கே வந்துட்டோம் அன்ட் சீக்கிரமே என்ன பிரச்சினைன்னு கண்டு பிடிச்சு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாச்சு. இனிமேல் எல்லாம்… " என்று மேலே காட்டினான்.



"இங்கே எப்படித் தங்குவீங்க? தாத்தாவ என்ன செய்ய? எவ்வளவு நேரம் இப்படி சேர்லயே உட்கார்ந்து இருப்பாங்க? பாட்டியை விட்டு வரவும் மாட்டாங்க"



"ம்ம்.. இந்த ஹாஸ்பிடல் சேர்மன் என் ஃப்ரண்டோட அப்பா தான். ரூம் தரேன்னு சொல்லி இருக்காங்க. இரண்டு பேரும் இங்கேயே தங்கிக்கலாம்."



"ஓகே சார். ரூம் கிடைச்சதும் நாங்க கிளம்பறோம். உங்களுக்கு ஓகேவா? இல்லை ஹெல்ப் வேணும்னா யாராவது ஒருத்தர் இங்கேயே இருக்கோம். உங்களுக்கு இந்த ஊர் புதுசில்லையா?"



"ஹா.. ஹா.. சார்! என்னைப் போய் இப்படி சொல்லிட்டீங்களே! ஒரு நாலு வருஷமா தான் நான் இங்கே இல்லை. பிஜி படிக்கிறதுக்குப் போனவன் அங்கேயே வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். அப்பவும் கூட வருஷத்தில இரண்டு மாசம் எப்படியாவது வந்துடுவேன். மத்தபடி நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னைல தான். இருபத்திரெண்டு வயசு வரைக்கும் ஃபுல் டைம் நான் தான் ரகுத்தாத்தாவோட காம்படிட்டர். ஜானு டார்லிங் பாவம், இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ணியே டயர்ட் ஆகிடுவாங்க" என்று மீண்டும் சிரித்தான்.



"ஓ.. எனக்கு தெரியாது சார்"



"ஹே.. தட்ஸ் ஓகே. இன் ஃபாக்ட், நான் தான் இவங்களை அந்த கம்யூனிட்டியில் கொண்டு வந்து செட்டில் பண்ணினேன். அண்ணா நகர்ல எங்க வீடு ரொம்ப பெரிசு.

அப்பா ஒரு ப்ராஜெக்ட் விஷயமா லண்டன் போக வேண்டிய கட்டாயம். அம்மாவும் அவரோட போக ஆசைப்பட்டாங்க. ஃபேமிலில மத்த யாரும் இங்க இல்லை. இவங்களை தனியா அவ்வளவு பெரிய வீட்டுல விட்டுட்டு போக கஷ்டமா இருந்தது. அஃப்கோர்ஸ், அவங்க இரண்டு பேரும் தனிக்குடித்தனம் பண்ண ரெடியா தான் இருந்தாங்க. நான் தான் எனக்கு ஜோடி தேடுற வயசுல இவங்க எப்படி ஜாலியா இருக்கலாம்னு வில்லன் ரோல் ப்ளே பண்ணிட்டேன்" என்று மேலும் சிரித்தான்.



இவனது சிரிப்பைத் தூரத்தில் இருந்து பார்த்த ரகுவரனது முகத்திலும் சிரிப்பின் சாயல் தெரிந்தது. மனைவியைப் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு நிம்மதி நிலவியது.



"ஹேய் ரகு தாத்தா! எதுக்கு என்னை அப்படிப் பார்க்கிறே மேன். பொண்ணுங்க யாரும் பார்த்தால் என் இமேஜ் என்ன ஆகுறது?" என்று தனது சுற்றிலும் பார்த்தபடி தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.



"யூ ஸீ.. இந்த ஹாஸ்பிடல்ல நர்ஸ் டாக்டர்னு எல்லாருமே சூப்பரா இருக்காங்க. யாராவது எனக்கு செட் ஆவாங்களான்னு பார்க்கணும்" என்று அவர் காதோரம் ரகசியம் பேசினான்.



"டேய்!! மாத்தி சொல்லக் கூடாது. பொண்ணுங்க உன்னைப் பார்க்கறாங்களா? இங்கே உள்ள நர்ஸ், டாக்டர் எல்லாம் கூட என்னைத் தான் பார்க்கறாங்க. என் பெர்சனாலிட்டி அப்படி.. இந்த வயசுலயும் எனக்கு இருக்கிற ஃபேன்ஸ பார்த்து உனக்குப் பொறாமை. அதுக்கெல்லாம் ஒரு முக லட்சணம் வேணும் டா. என் பேரனா இருந்தாலும் உனக்கு அது வரலை. டூ பேட்.. டூ பேட்" என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு பேரனுக்கு சரியாகப் பகடி பேசினார் ரகுவரன். உயரமும் நிறமும் தவிர ரகுவரனின் மறுபதிப்பாக இருந்தவனைத் தான் இப்படி வாரிக் கொண்டிருந்தார் அவர்.



"அது சரி.. இங்கே பிரச்சினையே நான் உன்னை மாதிரி இருக்கிறது தான். இரண்டு பேரையும் தனித்தனியா பாத்துட்டு பொண்ணுங்க எல்லாம் ஏமாந்து போயிடறாங்க. வில்லன் பேரை வச்சிட்டு ஓவரா ரொமான்ஸ் பண்ற நீ. நீ வேணும்னா பாரு. இந்த வாட்டி நான் என் ஜோடியைத் தேடிக் கண்டுபிடிக்காமல் விடறதா இல்லை. இல்லேன்னா உன் பேரை நீரஜ்னு மாத்தி வச்சிடறேன்." என்று வித்தியாசமான முறையில் ஒரு சபதம் செய்தான். மிகவும் கவனமாக ஜானகி பற்றிய பேச்சைத் தவிர்த்திருந்தான். அருகில் இருந்த இருவரும் அவர்களது பேச்சை ரசித்துக் கொண்டிருக்க ரிசப்ஷனில் இருந்து நீரஜூக்கு அழைப்பு வந்தது.



ஐசியு இருந்த தளத்திலேயே அவர்களுக்கு ஒரு அறையை அளித்திருந்தார்கள். தேவையான முன்பணம் செலுத்தி, தாத்தாவை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான் நீரஜ். அதுவரை வேறு முகம் காட்டிய ரகுவரன், பேரனைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டார். இதை எதிர்பார்த்திருந்த நீரஜ் அவரைத் தடுக்கவில்லை. தாத்தாவின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவரே அழுகையை நிறுத்தி விட்டு ஓய்வறை சென்று வந்தார்.



திரும்பி வந்தவர், "ஜானுவுக்கு என்ன பிரச்சினை ராஜூ? என்னை விட்டுட்டு போக நினைக்கிறாளோ? நான் தான் அவளைப் பிடிச்சு வச்சிருக்கேனா? அப்படி எல்லாம் அவளை விட முடியாது. எனக்கு… என்னால.. அவ இல்லாமல் நான் என்ன செய்வேன்? கூடவே தான் இருந்திருக்கேன். ஒரு தடவை கூட எனக்கு முடியலைன்னு சொல்லவே இல்லையே.. இல்லை.. அவ வாயால சொல்லலை.. ஆக்ஷன்ல காட்டினா.. அடிக்கடி சோர்ந்து படுத்துப்பா.. நான் தான் புரிஞ்சுக்கல.. புரிஞ்சுக்க ட்ரை பண்ணக் கூட இல்லை. கிழவிக்கு வர வர ரொம்ப தூக்கம் வருதுன்னு கேலி பண்ணினேன்.. அதெப்படி நான் இருக்கும் போது அவளுக்கு முடியாமல் போகும்னு ஒரு மிதப்பு. ஹூம்.. இப்படி ஹாஸ்பத்திரில வந்து படுத்துப்பான்னு நினைக்கலையே!" என்று பலவிதமாக மனைவிக்கான தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.



சுற்றி இருந்த மூவரும் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவருக்கு ஓய்வு தேவை என்று உணர்ந்த நீரஜ், "தாத்தா! ஸ்டாப்.. ஸ்டாப்.. உன் ரொமாண்டிக் ஸ்டோரிய கேட்கிற நிலைமைல நான் இல்லை. எனக்கு கொஞ்சம் தூங்கணும், நீயும் கொஞ்ச நேரம் வாயை மூடி அமைதியா படு. அவங்க இரண்டு பேரும் ரொம்ப பாவம், காலைல இருந்து கேப் விடாமல் பேசி அவங்க காதுல ரத்தம் வர வச்சிருக்க. இதுக்கு மேல போனா அவங்க காது வெடிச்சிடும்" என்று பேசிப் பேசி அவரைத் தூங்க வைத்துவிட்டான்.



"எது எப்படியோ, பேசற விஷயத்துல தாத்தாவோட ஜீன்ஸ் எல்லாம் உங்களுக்கு அப்படியே ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு சார்" என்று கூட இருந்த இருவரும் சிரித்தனர். அவனும் சேர்ந்து சிரித்தவன், குரலைத் தணித்துக் கொண்டு பேசினான்.



"எங்க இரண்டு பேருக்குமே டிரஸ், மத்த திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வரணும். நீங்க யாராவது ஒருத்தர் இங்கேயே இருந்து தாத்தாவ பாத்துக்க முடியுமா? நான் முடிஞ்ச வரை சீக்கிரம் வரப் பாக்கிறேன்"



"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க. எங்க வேலையே இது தான் சார். அந்த கம்யூனிட்டியில் இருக்கிற கிட்டத்தட்ட இருநூறு பெரியவர்களும் எங்க குடும்பம் தான். அவங்களுக்கு எதுவானாலும் நாங்க தான் பொறுப்பு. ஜானகி அம்மா விஷயத்தில் நீங்க சமயத்தில வந்ததால நல்லதா போச்சு. இல்லேன்னா என்ன செஞ்சிருப்போமோ தெரியலை. நீங்க என் கூட வாங்க, டக்குன்னு போயிட்டு வந்துடலாம். இன்னும் நீங்க உங்க அப்பாவுக்கு எல்லாம் விஷயம் சொல்லணும். வீட்டுக்கு போகும் போதே பேசிடுங்க. தாத்தா முன்னாடி வேண்டாம்" என்று அழைத்துப் போனார் ஒருவர்.



அவர்களின் காரை மருத்துவமனைக்கு வரவழைத்திருந்தார்கள். காரில் ஏறி அமர்ந்தவுடன் நீரஜ் தந்தையை அழைத்துவிட்டான். அவனும் டாக்டரும் பேசியவற்றை ரெகார்ட் செய்திருந்தவன், சாப்பிட போகும் போதே தந்தைக்கு அனுப்பி விட்டான். எதையும் மருத்துவர் வாயிலாக கேட்கும் போது அதன் விளைவே வேறு தான்.



"என்னப்பா டிசைட் பண்ணி இருக்கீங்க? எப்போ கிளம்பறீங்க?"



"எதுவுமே டிசைட் பண்ணல ராஜூ. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை"



"ம்ச்.. என்னப்பா இது? நீங்களே இப்படி சொன்னா எப்படி? பாட்டியோட ஹெல்த் எப்படி இருந்தாலும் நீங்க வந்து ஒரு தடவை உங்க அம்மாவைப் பார்த்தால் பெட்டர்னு தான் சொல்லுவேன்"



"அதில்லடா.. இப்போ வந்தாலும் நான் ரொம்ப நாள் இருக்க முடியாது. மார்ச்ல வேற நிறைய லீவ் தேவைப்படும். அது தான் யோசனையா இருக்கு."



"அதெல்லாம் பார்த்துக்கலாம் பா. இந்த நிமிஷம் இருக்கும் தேவையை முதல்ல கவனிங்க. பாட்டி முழிச்சா கண்டிப்பா உங்களைத் தான் எதிர்பார்ப்பாங்க"



"எனக்கும் தெரியும்.. என்ன செய்யறதுன்னு பார்க்கிறேன். ஆக்சுவலா இன்னைக்கு நைட்டுக்கு டிக்கெட் போட்டு வச்சிருக்கேன்.. ரிட்டர்ன் பத்தி தான் யோசனையா இருக்கு.."



"வந்து யோசிக்கலாம் பா.. சீக்கிரம் வாங்க.. அப்புறம் உங்க உடன்பிறப்புகள் கிட்ட சொல்லியாச்சா? ஏதாவது ரெஸ்பான்ஸ் உண்டா? பெரியப்பா இப்போவாவது ஊருக்கு வருவாரா? அப்பா அம்மான்னு இரண்டு ஜீவன்கள் இருக்குன்னு அவருக்கு ஞாபகப் படுத்தினீங்களா? உள்ளூர் கிழவி என்ன சொன்னாங்க? எப்போ அவங்க அம்மாவைப் பார்க்க வருவாங்களாம்?"



"ராஜூ… அவ உனக்கு அத்தை.. இப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது" அந்த நேரத்திலும் இடைபுகுந்து மகனுக்கு உறவுகள் பற்றி பாடம் எடுத்தார் ராஜராஜேஸ்வரி.



"ஆமா.. எனக்கு அத்தை.. ஆனால் அது ஒரு சொத்தை.." என்று டிஆர் போல வசனம் பேசியவன், "அம்மா! எத்தனை வயசானாலும் உங்க நாத்தனாருக்கு இருக்கிற திமிர் குறையவே குறையாது. அந்தம்மா ஒழுங்கா இருந்திருந்தா என் ஜானுவுக்கு பிரச்சினையே வந்திருக்காது. அட போங்கம்மா.. அவங்களைப் பத்திப் பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. அவங்க என்ன சொன்னாங்கன்னு மட்டும் சொல்லுங்க"



"அது எதுக்கு உனக்கு?"



"எதுக்கா.. அவங்க வர்ற நேரத்தில் நான் ரகுத்தாத்தாவுக்கு ப்ரோடக்ஷன் கொடுக்கணும். நான் இல்லேன்னா தேவையில்லாமல் பேசி அவரைக் குழப்பி விட்டுருவாங்க அந்தம்மா. அப்புறம் ஜானுவுக்கு பக்கத்தில் அவருக்கும் ஒரு பெட் போட வேண்டியது தான்" என்று பல்லைக் கடித்தான் அவன்.



"சரி.. கோவிச்சுக்காதே.. இப்போ ரொம்ப பிஸியாம். எப்படியும் சாயங்காலம் ஆறு மணிக்கு முன்னால வரமுடியாதாம்"



"ஐயோ பாவம்.. அவ்வளவு சீக்கிரம் எதுக்கு வரணும்?? இதுவே ஜானுவோட வைர நெக்லஸ் உனக்குத் தான்.. சாயங்காலம் வந்து வாங்கிக்கோன்னு சொல்லுங்க.. அடுத்த பத்தாவது நிமிஷம் வந்து நிப்பாங்க.. எனக்கு வர்ற கோபத்துக்கு நான் எதையாவது பேசிடக் கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கோங்க"



"டேய்.. டேய்.. நாங்க வர்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடா. வீணா வார்த்தையை விடாத.. நாங்க நாளைக்கு நைட்டு அங்கே இருப்போம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ராஜூ, நாங்க வரப்போறோம்னு மாமா கிட்ட சொல்லிடு. எனக்கென்னவோ, நீ சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு போய் நின்னது தப்புன்னு தோணுது.

அத்தைக்கு அதுவே ஒரு ஷாக்கா இருந்திருக்கலாம்"



"எனக்கும் அது புரிஞ்சது மா.. இட்ஸ் எ ப்ளன்டர் ஃப்ரம் மை சைட். இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன். சேஃப் ஜர்னி. கீப் மீ போஸ்டட்" என்று அழைப்பைத் துண்டித்தான். அதற்கு முன் ராஜராஜேஸ்வரி, "அடுத்தவங்களை பத்தி சார் யோசிக்க மாட்டாராம். ஆனால் இவருக்கு மட்டும் மத்தவங்க அப்டேட்ஸ் கொடுக்கணுமாம்" கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு திருதிருவென விழித்தான்.



ஒரு வேளை தன்னைப் பார்த்தவுடன் வந்த அதிர்ச்சியில் ஜானகிக்கு ஏதாவது நேர்ந்திருக்குமானால்… நினைக்கையில் நடுங்கியது அவனுக்கு.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
நீரஜ், தாத்தா, பாட்டி பாண்டிங் சூப்பர். இவங்க தான் கொஞ்சம் பெரியவங்க மேல அனுசரணையுடன் இருக்கா போல
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நீரஜ், தாத்தா, பாட்டி பாண்டிங் சூப்பர். இவங்க தான் கொஞ்சம் பெரியவங்க மேல அனுசரணையுடன் இருக்கா போல
யாராவது ஒருத்தர் இருக்கணுமே...
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ரகுவரன் ஜானகி தம்பதிகளின் பெரிய மகன் எந்தவிதம்? நீரஜின் அத்தை பெற்றவர்களுக்கு அவ்வளவாவக சப்போர்ட் செய்வதில்லை என்று தெரிகிறது! Neeraj's quick thinking is to be applauded
 

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
ரகுவரன் ஜானகி தம்பதிகளின் பெரிய மகன் எந்தவிதம்? நீரஜின் அத்தை பெற்றவர்களுக்கு அவ்வளவாவக சப்போர்ட் செய்வதில்லை என்று தெரிகிறது! Neeraj's quick thinking is to be applauded
பெரிய மகன் ரொம்பாஆஆஆஆ பொறுப்பானவன்:cool::p:cool:
 
  • Love
Reactions: VPR

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
113
😃😃😃😃ஜானகி பாட்டியோட பெட் டாக்டர் நீரஜ் இருக்கறப்ப ஷாக் ஆகுறது சரியில்லையே
 
Top Bottom