தொட்டுத் தொடரும் -3
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்
(*கணவன் சீக்கிரம் வரவேண்டும் என்ற மனைவியின் தூது)
கணவனைப் பற்றிய இனிமையான நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் பார்வையில் சுவற்றில் இருந்த கடிகாரம் விழ, அது தற்போது மணி காலை 10:40 என்று காட்டியதில், சட்டென்று நினைவுகளில் இருந்து மீண்டாள். அவசரமாகத் தன் அலைபேசியை எடுத்தவள், பலமுறை தேடிப்பார்த்தும் அவள் எதிர்பார்த்த அழைப்பு அதில் இல்லை என்பதால் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.
குளியலறையில் இருந்த போது தனது அலைபேசியின் ஒலி கேட்டது போல் தோன்றியது என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. அப்படி இருந்தால் "மிஸ்ட் கால் இல்லாமல் எப்படி போகும்? ஒருவேளை கால் பண்ணவே முடியாமல் ரொம்ப பிசியோ? எப்படி இருந்தாலும் கால் பண்ணாம இருக்க மாட்டாரே? அப்படியே முடியாம போனாலும் ஏதாவது மெசேஜாவது அனுப்பி இருக்கணுமே?" என்று யோசித்துக் கொண்டே வாட்ஸாப்பை அதற்குறிய கடவுச்சொல் இட்டுத் திறந்தவள் அதில் வந்த செய்திகளைப் பார்வையிட்டாள்.
"செக் தி ரெக்கார்டர்டு கால்ஸ்" என்ற அபியின் செய்தியில், அவசரமாக பதிவு செய்யப்பட்ட அழைப்புகளுக்குள் சென்றாள். பதிவு செய்யப்பட்ட அந்த அழைப்பு உணர்த்திய செய்தி அவ்வளவு உவப்பாக இல்லை. (கால் ரெக்கார்டிங் என்பது அழைப்புகளைப் பதிவு செய்வதற்காக உள்ள அலைபேசி செயலி. நம் தேவைக்கேற்ப அழைப்புகள் அனைத்தையும் அல்லது சில குறிப்பிட்ட அழைப்புகளைப் பதிவு செய்யும் படி செய்யலாம். அழைப்பு வந்ததை ஹிஸ்டரியில் இருந்து அழித்து விட்டாலும் கூட ரெக்கார்ட் செய்யப்பட்ட பதிவுகள் அலைபேசியில் இருக்கும்)
வளைகாப்பு முடிந்து, பிரசவத்திற்காக தாய்வீடு வந்தது முதல் இந்த ஆறு மாதத்தில், தினமும் காலையில் அவளை அழைத்து பேசுவதை அபிமன்யு வழக்கமாகக் கொண்டிருந்தான். இன்றும் அதே போல் வந்த அழைப்பை தன் தாய் எடுத்து பேசியிருக்கிறார் என்பதே அதிர்ச்சியாக இருந்தது என்றால் அழைப்பு வந்ததே தனக்குத் தெரியக் கூடாது என்று அழிக்கும் அளவு அதில் என்ன தான் பேசியிருக்கிறார் என்ற யோசனையோடு அந்தப் பதிவை முதல் முறை கேட்ட போது, ஹை வோல்டேஜ் மின்சாரம் தாக்கியதுபோல் உணர்ந்தவள், "தான் கேட்டது சரிதானா? பேசியது தன் தாய் தானா?" என்று திகைத்தாள். தொடர்ந்து மூன்று முறை அந்த பதிவை கேட்ட பின்பே அதிலிருந்த செய்தியை முழுமையாக உள்வாங்கினாள். தாயால் இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று வியந்து போனாள்.
கூடவே, என்ன காரணத்திற்காக இந்த செயலியை இறக்கினார்கள், இப்போது வேறு மாதிரி பயன்படுகிறதே என்று வருந்தியவள் அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் திருதிருத்தாள். இந்த ரெக்கார்டிங் வசதியை அபிமன்யு தான் அவளது மொபைலில் செய்து கொடுத்திருந்தான்.
அவர்களது திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் அவளுடன் நேரில் பேச முடியாத வண்ணம் அபிமன்யு ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. அவளது சம்மதத்தை பெற்றோர் மூலம் அறிந்திருந்தாலும் தானும் அவளது வார்த்தைகளின் மூலம் அறிய விரும்பி அழைத்தவன், அவளை ஓர் வார்த்தை பேச வைப்பதற்குள் படாத பாடுபட்டுப் போனான். அவன் அறிந்த ஸ்ரீநிதி அவனைப் போலவே, வாய்க்கு வலிக்காதா என்று நினைக்கும் வண்ணம் இடைவிடாது பேசுபவள். அதுவும் அபியிடம் அவளுக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை.
சுற்றியிருந்த அனைவரும் இவர்கள் இருவரும் தான் சரியான ஜோடி என்று சான்றிதழ் கொடுத்திருக்க, இவளோ தேவர்மகன் ரேவதி போல் "காத்து தான் வருது" என மாறிவிட்டாள். இடையே நடந்த சில வேண்டாத நிகழ்வுகளால் ஏற்பட்ட அவளது மனவேதனைகளை அறிந்தவனாய், தங்கள் திருமணத்திற்கு முன்பு அவளைப் பழைய ஸ்ரீநிதியாக மாற்றி விடவேண்டும் என்று உறுதி பூண்டான்.
"ஸ்ரீ நான் பேசுறது கேக்குதா இல்லையா வீடியோ கால்ல வரட்டுமா" என்றான். அதற்கு "ம்ம்.. ம்ஹூம்" என்று பதில் கிடைத்தது. "என்னடா இது ஸ்ரீக்கு வந்த சோதனை?" என்று கேலி செய்தவன், தொடர்ந்து வந்த நாட்களிலும் அவள் அதையே கடைப்பிடிக்க ஜெர்மனியில் இருந்து வந்தவுடன் முதல் வேலையாக அவளை சென்று பார்த்தான்.
நேரில் அவள் பழைய ஸ்ரீநிதியாக அவனுடன் வாயாட, "ஓ! உனக்கு போன்ல தான் பேச வராதா?" என்று ஆச்சரியப்பட்டவன், அந்த கேலியில் அவளது முகம் மாறியதைக் கண்டு பேச்சை மாற்றினான். அவளது மொபைலில் கால் ரெக்கார்டிங் செயலியை இறக்கி, தனது அழைப்புகளை மட்டும் பதிவு செய்யுமாறு மாற்றியவன் "எதுக்கும் நீ பேசுறதெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சுக்கலாம். பின்னால எப்போதாவது பொழுது போகலேன்ன நீ எத்தனை ம்ம் ... ம்ஹூம்...சொல்லி இருக்கேன்னு கால்குலேட் பண்ணினாலே போதும்" என்று கன்னம் தட்டிச் சொல்லி விட்டுச் சென்றான்.
எவ்வளவு நேரம் கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாளோ, அந்தப் பதிவை மறுபடியும் கவனமாகக் கேட்ட போது "எனக்கு யோசிக்க இன்னும் கொஞ்சம் டைம் வேணும்" என்ற அபிமன்யுவிற்கு "நிறையவே டைம் கொடுத்தாச்சே. இன்னைக்கு பன்னிரண்டு மணி வரைக்கும் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள நான் சொன்னது நடக்கணும். இல்லேன்னா, கரெக்டா ஒரு மணிக்கு நான் செய்ய வேண்டியதை செஞ்சிடுவேன். அப்புறம் வருத்தப்பட்டு பிரயோசனம் இல்லை. என்ன செய்வேன்னு ஞாபகம் இருக்கா இல்லை மறுபடியும் சொல்லணுமா?" என்ற தாயின் பதில், இது முதல் முறை நடக்கும் பேச்சு அல்ல என்பதை தெளிவு படுத்தியது.
"என்னதான் நடக்கிறது எங்கள் வாழ்வில்? இந்த அம்மா எப்போதுதான் திருந்துவார்? என்ன தான் அவரது மனதுக்குள் இருக்கிறது? ஒருவேளை மனதளவில் பாதிக்கப்பட்டு அவருக்கு ஏதாவது நோய் வந்துவிட்டதோ?" என்று பல கேள்விகளுக்கு விடை புரியாமல் திணறினாள்.
அப்படி என்னதான் செய்ய வேண்டுமாம் இவருக்கு, இதற்கு முன் எப்போது அபியிடம் பேசினார் என்று யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. தனது அலைபேசியின் மூலம் தான் தாய் கணவனை மிரட்டி வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்த உடன், இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து அழைப்புகளையும் ஒரு முறை கேட்டாள். இன்றைய அழைப்பை மட்டுமே தாய் பயன்படுத்தி இருப்பது போல் தோன்றியது.
இன்று அபிமன்யுவிற்கு வேலை அதிகம் என்பதால் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தவளுக்கு, யாரை அழைப்பது என்றும் புரியவில்லை. தன்னிடமே இதைப் பற்றி எதுவும் கூறாத அபிமன்யு பெற்றோரிடம் சொல்லியிருக்க மாட்டான் என்று நிச்சயமாக நம்பினாள்.
போன வாரம் தான் தாத்தாவும் பாட்டியும் உறவினர் சிலருடன் யாத்திரை சென்றிருந்தனர். தந்தையின் பணி இப்போது சென்னையில் தான் என்றாலும் அவரும் ஒரு வாரப் பயணமாக டெல்லி சென்றிருந்தார். இரண்டு நாட்களில் திரும்பி விடுவார் என்பதால் அவரை தொந்தரவு செய்யவும் மனம் வரவில்லை. மீதமுள்ள அண்ணனோ உலகின் மறுகோடியில் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். தாய் திட்டமிட்டுக் காய் நகர்த்தி இருப்பது புரிந்தது.
அவளறிந்த வகையில் சரணுக்குத் தெரியாத ரகசியங்கள் எதுவும் அபியிடம் இல்லை. அவனை அழைக்கலாமா கூடாதா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள், வேறு வழி எதுவும் தோன்றாததால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் சரணை அழைத்தாள். ஒரு மணிக்குள் தாய் செய்யப்போகும் காரியம் என்ன என்பது தெரியாவிட்டாலும், எதுவாக இருந்தாலும் அது அபிமன்யுவின் நல்லதற்கு அல்ல என்று உறுதியாக நம்பியவள் எப்படியாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று செய்த முயற்சிகள் யாவும் பலனற்றுப் போய் அவளது தாய் தான் நினைத்ததை நடத்தி இருந்தார்.
அதன் விளைவு, மனைவியை மன ரீதியாகக் கொடுமை செய்து தாய் வீட்டிற்கு அனுப்பிய காரணத்திற்காக, அன்று மாலைக்குள் விசாரணைக்கு வருமாறு அபிமன்யுவிற்கு அழைப்பு வந்தது.
"பாட்டீ நாங்க வந்துட்டோம்" என்ற மழலைகளின் குரலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ராதா எழுந்து வாசலுக்கு வந்தார் "செல்ல குட்டீஸ் வாங்க வாங்க" என்று வரவேற்று பேரன்களை கொஞ்சத் தொடங்கினார். "அடடே குட்டீஸ் நல்லா வளந்துட்டாங்களே, பாட்டி மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது தாத்தாவை தெரியுதா பாரு" என்று சொல்லிக் கொண்டே வந்தார் கிருஷ்ணன். உடனே அந்த வாண்டுகளின் கவனம் தாத்தாவின் பக்கம் திரும்பியது "தாத்தா நீங்களும் காலேஜ் போகலையா உங்களுக்கும் லீவா ஹய்யா ஜாலி ஜாலி" என்று குதித்தவாறு தாத்தாவின் மேல் ஏறினார்கள் இருவரும்.
"எல்லாம் தாத்தா கிட்ட இருந்து வந்த பழக்கம் தான். பேரன்களைப் பார்த்ததும் கொஞ்ச தெரியுது, அஞ்சரை அடியில பெத்த பொண்ணு கண்ணு முன்னாடி நிக்கிறது தெரியுதா" என்று இடுப்பில் கை வைத்தபடி நின்று தந்தையை முறைத்தாள் ராகவி.
"என்ன செய்யறது, குட்டி செல்லம் எல்லாம் வந்த பிறகு பழசையே கொஞ்சிட்டு இருக்க முடியுமா" என்று தாயிடம் இருந்தும்," என்னடா அப்பாவப் போய் இப்படி சொல்லிட்ட. என்னைக்கு இருந்தாலும் நீ தான் என்னோட முதல் செல்லம்" என்று தந்தையிடம் இருந்தும் ஒரே நேரத்தில் பதில் வந்தது.
"இப்படியே வாசல்ல நின்னு பேசப் போறீங்களா, அப்பாவும் பொண்ணும் உள்ள வாங்க. கவி, உன் கிட்ட கொஞ்சம் பேசணும், நீ உடனே கிளம்பணுமா?" என்று கேட்டபடி உள்ளே சென்ற ராதாவைப் பின் தொடர்ந்து அப்பாவும் மகளும் உள்ளே சென்றனர்.
"நான் இன்னிக்கு ஆஃப் எடுத்துட்டேன் மா. ஏதாவது எமர்ஜென்சி கால் வந்தா தான் போகணும். நீங்க இன்னிக்கே பேசணும்னு சொன்னதால தான் காலைலயே வந்தேன். இல்லேன்னா பசங்களோட எங்கேயாவது போயிட்டு சாயங்காலம் இங்கே வரலாம்னு பிளான் பண்ணி இருந்தேன்" என்றபடி தாயுடன் தானும் சமையலறைக்குச் சென்றாள். கிருஷ்ணன் ஹாலில் பேரன்களுடன் ஐக்கியமானார். "தாத்தா! எங்க காரை மாமா ரெடி பண்ணியாச்சா. மாமா எங்க காணோமே?" என்ற ராகவின் கேள்விக்கு "என்னோடது ரெட் கலர் தானே" என்று தனது சந்தேகத்தை பதிவு செய்தான் கேசவ்.
இந்த வயதிலேயே , மாமனைப் போலவே காரைப் பிரித்து மேய்வதில் ஆர்வமாக இருந்ததால், "மினியேச்சர்" கார் ஒன்று அவர்களுக்கு அபிமன்யுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது. "பசங்களா உங்க கார் ரெடியான்னு மாமா வந்தா தான் தெரியும். அதுவரைக்கும் தாத்தா உங்களோட விளையாடறேன். நாம இன்னிக்கு என்ன விளையாடலாம்? வாங்க நம்ம ரூமுக்கு போகலாம்" என்று அவர்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அது குழந்தைகளுக்கு ஏற்றவாறு பலவித வசதிகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது.
தாத்தாவும், பேரன்களும் விளையாட்டில் ஐக்கியமாக, தாயும் மகளும் ஒரு டீயுடன் வந்து ராதாவின் அறையில் அமர்ந்தனர். ராதா அமைதியாக ஏதோ யோசனையில் இருக்க "இன்னிக்கே பேசணும்ற அளவு என்ன விஷயம் மா?" என்று பேச்சைத் தொடங்கி வைத்தாள் ராகவி.
"எல்லாம் உன் கூடப் பிறந்தவனைப் பத்தி தான். என்ன நினைக்கிறான், என்ன செய்யறான்னே புரியல. கேட்டா எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீயும் அப்பாவும் கவலைப் படாமல் இருங்கன்னு சொல்றான். உங்க அப்பாவும் அவன் என்ன சின்னக் குழந்தையா? என்ன பண்ணனும்னு அவனுக்கு நல்லாவே தெரியும். அப்படி முடியலேன்னா நம்ம கிட்ட வருவான். அப்போ உன் ஐடியாவைக் கொடுன்னு என் வாயை அடைக்கிறார்" என்று தனது ஆதங்கத்தை படபடவென்று கொட்டினார்.
தாயின் புலம்பல்களைக் கேட்ட ராகவி கலகலவென அடக்கமாட்டாமல் சிரித்தாள். தாயின் முறைப்பில் சிரிப்பை நிறுத்தியவளுக்கு "எப்ப இருந்து மா இப்படி அக்மார்க் அம்மாவா மாறினீங்க. எப்பவுமே நிதானமா இருப்பீங்க. அப்புறம்... அம்மாஆஆ எனக்கு ஒரு டவுட்டு, நீங்க சைக்காலஜி புரோஃபசர் தானே, உங்களுக்கே மறந்து போயிடுச்சா, ஞாபகப் படுத்தணுமா?" என்று பதில் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.
"ம்ம்ச்ச், என்னை கிண்டல் பண்றத விட்டு நான் ஏன் வருத்தப்படறேன்னு நீயாவது யோசிச்சு பாரு கவி. அபி வீட்டுல இருந்தா நம்ம வீடு எப்படி கலகலப்பா இருக்கும். வாய் மூடாம பேசிட்டு இருப்பான். இப்பல்லாம் வீடு பூத் பங்களா மாதிரி அமைதியா இருக்கு. அபி எப்பவும் ஏதோ யோசனையிலயே இருக்கான். வாயே வலிக்காதாடா உனக்குன்னு கேட்டு கேட்டு இப்போ ஏதாவது பேசுடான்னு கேட்க வேண்டியதா இருக்கு. என் கண்ணே பட்டுடுச்சோ?" என்று வருத்தப் பட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் ராகவி.
அவளும், பழைய கனாக்கால நிகழ்வுகளுக்குப் போனாள். அபியும் அவளும் இரட்டையர்கள் என்றாலும் நிறைய விஷயங்கள் அவர்களுக்குள் ஒத்துப் போனதே இல்லை. அபிமன்யு எந்த அளவுக்கு கலகலப்பானவனோ அந்த அளவுக்கு அழுத்தமானவன். ராகவி மிகவும் அமைதியானவள் என்றாலும் எதையும் மனதில் வைத்துக் கொண்டு வருந்த மாட்டாள். தாய் தந்தை இருவரிடமும் கொட்டி விடுவாள்.
எல்லோரும் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அபிமன்யுவின் குரலே ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கும். "டேய், உனக்கு வாய் வலிக்குதோ இல்லையோ, எங்க காது வலிக்குதுடா. தயவு செஞ்சு வாயை மூடி பேசவும்" என்று ராகவி கெஞ்சிய காலங்கள் அவை.
நண்பர்களிடமும் அதே கலகலப்புடன் தான் இருப்பான். சில மாதங்களாக வழக்கமான கலகலப்பு இல்லாமல் இருந்தவனை, முதலில் கிண்டல் செய்து கொண்டு இருந்த நண்பர்கள், பின் அவனது இந்த நடவடிக்கைகள் மாதக்கணக்கில் தொடரவும் அனைவருமே "யார் அவனிடம் கேட்பது" என்று திகைத்து நின்றனர்.
அபிமன்யு, அவ்வளவு எளிதாக யாரிடமும் தனது வருத்தங்களைக் காட்டிக் கொள்ள மாட்டான் என்பதுடன் "இது என் தனிப்பட்ட வாழ்க்கை. யாரும் தலையிட வேண்டாம்" என்பது போல நடந்து கொள்வான்.
எப்போதும் போல, இப்போதும் அவனது நண்பர்கள் ராதாவிடம் முறையிட்டனர். இது ஏற்கனவே மகனைப் பற்றிய வருத்தத்துடன் இருந்தவருக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று.
மகனிடம் பேச முயன்றவரை கணவர் தடுத்ததால் , மகளுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கவே அவளை இன்று அழைத்திருந்தார். அபிமன்யு, சில விஷயங்களை சரணிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான் என்பதும் ஒரு காரணம்.
அவருக்கு என்ன தெரியும், இப்படி அபிமன்யு பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை சரண் ஒரு போதும் ராகவியிடம் சொன்னதே இல்லை என்று. இவளும் அதைப் பற்றிக் கேட்டதில்லை. கேட்டு "எனக்கும் என் ஃப்ரண்டுக்கும் இடையே ஆயிரம் இருக்கும். உன் கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்ற பதிலை வாங்க அவளுக்கு பிடிக்குமா என்ன?

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும்... -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.