தொட்டுத் தொடரும் -27
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
(*தாலாட்டு)
கௌசல்யாவிற்குத் தன் முன்னே விரிந்த காட்சிகளை நம்பவே முடியவில்லை. கண்களில் நீர் வழிய, அருகில் நின்றிருந்த அபிமன்யுவை இறுகப் பற்றிக் கொண்டு, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டார். அவனுமே அவரை ஆதரவாகச் சாய்த்துக் கொண்டு புன்னகைத்தான். அவரது கைவண்ணத்தில் உருவான குட்டி கிருஷ்ணன் எல்லோரும் கண் முன்னே தொட்டிலில் தவழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
தொட்டில்களைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள், “சார்! இந்த ஆர்ட்டிஸ்ட் உங்களுக்கு தெரிஞ்சவங்களா சார்? கடைக்கு வந்த நிறைய பேர் அது மாதிரி வேணும்னு கேட்கிறாங்களாம். மேனேஜர் ஃபோன் பண்றேன்னு சொல்லி இருக்கார் சார்” என்று சொன்னதும்,
“ரொம்ப வேண்டியவங்க தான் சார். கொஞ்சம் டச் விட்டு போச்சு. கண்டிப்பா திரும்ப செய்வாங்க” என்று தன்னைப் பார்த்துக் கொண்டே அபிமன்யு சொன்ன பதிலுக்கு அர்த்தமும் இப்போது புரிந்தது.
சற்று நேரம் கழித்து அவரது கையில் இருந்த பார்சலைப் பிரிக்கச் சொன்னான். அதில் என்ன இருக்கும், என்று இப்போது அவரால் அனுமானிக்க முடிந்தது. பேரன் பேத்திகளுக்கான மெத்தைகள் அவரது கைகளில் தவழ்ந்தது. அதுவும் அவர் ஜெய்ப்பூரில் இருந்த போது கற்றுக் கொண்ட தையல் கலையை விவரித்தது. அவரையே அந்த மெத்தைகளைத் தொட்டிலில் இட வைத்தான் அபிமன்யு.
ராகவி அத்தையாக மருமக்களைத் தொட்டிலில் இட்டு செய்ய வேண்டிய முறைகளைச் செய்ய, மாமனாக இருவருக்கும் “அபராஜித்”, “அபிரக்ஷிதா” என்று பெயரிட்டான் ஸ்ரீவத்ஸன். ஸ்ரீநிதியோட செலக்ஷன் ஆனதாலே இரண்டுமே அபியை வச்சே வந்திடுச்சு!!
அனைவரும் “ஹே” என்று ஆரவாரம் செய்து யாரை எப்படி அழைப்பது என்று தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர். இப்படியாக விழா நாற்புறமும் சந்தோஷங்களை வாரி இறைத்தது.
அடுத்தது பாடல் நேரம் என்று யாரோ சொல்ல, பின்னணியில் ஒலித்தது கௌசல்யா அன்று முணுமுணுத்த தாலாட்டு.
“பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு”
அந்தக் குரலிலும் அதில் தெரிந்த பாவத்திலும் கவரப்பட்ட அனைவரும் பாடியது கௌசல்யா என்று தெரிந்ததும், அவரைப் பாடச்சொல்லி வற்புறுத்தினர். மறுக்க முடியாமல் ஆரம்பித்தவருக்கு, நாலே வரிகளுக்கு மேல் பாட முடியாமல் சந்தோஷத்தில் தொண்டை அடைத்தது.
“ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே”
பலத்த ஆரவாரங்களுக்கு இடையே அனைவரும் பாராட்ட சங்கோஜமாக உணர்ந்தார் அவர். இந்தப் பாடலை அவர் அடிக்கடி முணுமுணுப்பதை அனைவரும் அறிவார்கள். பொதுவாகப் பெண்களின் நிலையைச் சொன்ன அந்த பாடலின் மூலம் அவரது நிலையைச் சொல்லி இருக்கிறார் என்றே அவரைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் தோன்றியது.
உணர்ச்சி மயமான தொட்டில் இடும் விழா முடிவுக்கு வந்த வேளையில் ராதா மற்றும் கிருஷ்ணனின் தொழில் முறை உறவினர்கள் வர ஆரம்பித்தனர். அனைவரும் ராதாவை வாழ்த்திய கையோடு குழந்தைகளையும் வாழ்த்தி விடைபெற்றனர். படித்த நண்பர்களிடையேயும் பண்பாக நடந்து கொண்ட, ராதாவை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார் கௌசல்யா.
எல்லோரும் அவரவருக்கு ஏற்ற வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த வேளையில் ராதா மற்றும் கிரிஜாவின் அருகில் நின்றிருந்த கௌசல்யா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
“என்ன கௌசி நீங்க? கையை இறக்குங்க ப்ளீஸ். நம்ம பிள்ளைங்களைப் பார்த்து நாம நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணினா எப்படி?” என்று ராதா அவரைச் சமாதானப்படுத்த,
“இன்னும் இந்த சின்னக் குட்டீஸ் வந்து என்ன எல்லாம் செய்யப் போறாங்களோ? சமாளிக்க தெம்பு வேண்டாமா? ரொம்ப எக்ஸைட் ஆகாதீங்க. அப்புறம் வத்ஸன் கல்யாணம் இருக்கு, பையனோட சேர்த்து மருமகளையும் பாத்துக்கணும். பேரன் பேத்தி வருவாங்க. இனிமேல் தான் லைஃப்ல டைமே கிடைக்காமல் ஜெட் ஸ்பீட்ல ஓடும்” என்றார் கிரிஜா.
வத்ஸன் கல்யாணம், மருமகள் என்ற பேச்சுகள் கௌசல்யாவின் பார்வையைத் திருப்பியது. கவனம் பார்கவியிடம் சென்றது. சற்றே வெளிச்சம் கம்மியான இடத்தில் தன்னைக் கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது அவருக்கு. அவளது நடை உடை பாவனை எல்லாமே தன்னைப் போலவே இருந்தது போலவே தோன்றியது.
நிதியின் மாமாவும் மாமியும் ஓர் அவசர சிகிச்சை என்று விழா முடிந்ததும் கிளம்பிவிட, பார்கவியோ அபிமன்யு மற்றும் ஸ்ரீநிதியோடு வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தாள். பெரியவர்களிடம் ஏதோ அழைப்பிதழ் போன்று கொடுத்துப் பேசியது போலவும் தோன்றியது.
என்னவென்று அறிய ஆவலாக இருந்தாலும், வறட்டுப் பிடிவாதம் என்று அவருக்கே தோன்றினாலும், தன்மானம் என்று இதுவரை நினைத்த ஏதோ ஒன்று இடம் கொடுக்கவில்லை. கிளம்பும் நேரத்தில் இவரிடம் வந்து, “அத்தை! நீங்க கண்டிப்பா வந்து என்னை ஆசிர்வாதம் பண்ணனும். அப்போ தான் என் லைஃப் நல்லா இருக்கும்” என்று சொல்லி விட்டுப் போனாள்.
‘ஒரு வேளை கல்யாணமோ? சேச்சே இருக்காது. நாட்டியம் கற்கிறாளோ? புரோகிராம்ஸ் எல்லாம் பண்றாளோ?’ என்றும் தோன்றியது. அதை உண்மை என்று இதோ இந்த மேடையில் அவரது கண் முன்னே சுழன்று ஆடி நிரூபித்துக் கொண்டு இருந்தாள் அவரது மருமகள்.
அருகில் இருந்த ஸ்ரீதரனின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு மேடையை விட்டுக் கண்களை அகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தார் கௌசல்யா. அவரது தம்பி குடும்பத்துடன் வந்து அருகில் அமர்ந்ததெல்லாம் கண்ணில் பட்டாலும் கருத்தில் படவில்லை.
கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து காதுகளில் ஒலிக்கும் சலங்கை ஓசை மட்டும் அல்லாமல் பார்கவியின் குருவும் அவரது கவனத்தைக் கவர்ந்தார். நிகழ்ச்சி முடிந்த போதும் எல்லாரும் நாட்டியத்தைப் பாராட்டிப் பேசிய போதும், கௌசல்யாவிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை.
நிகழ்ச்சி முடிந்து ஓய்வறைக்குச் சென்ற போது பார்கவியின் தாய் கௌசல்யாவை உடனழைக்க, செலுத்தப்பட்டது போல் அவருடன் சென்றார். அங்கே தனது குருவைக் கண்டதும் சுற்றி இருந்த யாரையும் பொருட்படுத்தாமல் காலில் விழுந்து வணங்கினார்.
அவரைத் தூக்கி ஆசிர்வதித்த அவரது குரு, ஆம் கௌசல்யாவிற்கு நாட்டியம் பயிற்றுவித்த அதே குரு தான் அவரது மருமகளையும் பயிற்றுவிக்கிறார். இது இயல்பாக நடந்ததா, இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று தெரியாவிட்டாலும்,
“கௌசி! நிஜமாவே நீ தானா? பார்த்தியா உன்னோட ஜூனியரை? உன்னால முடியலேன்னா என்ன, உன்னை மாதிரியே இன்னோரு ஆளை உருவாக்கியாச்சு. நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நீயும் இருப்பேன்னு நம்பறேன். காட் ப்ளஸ் யூ ஆல்!” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கண்களில் நீர் வழிய நின்ற கௌசல்யாவைப் பார்த்து பதறிய அவரது தம்பி மனைவி, அவரது கைகளைப் பிடித்து “அண்ணி! கூல்..காம் டவுன்!” என்றார்.
அதற்குள் ஸ்ரீவத்ஸன், தனது தந்தை மற்றும் மாமாவுடன் அங்கே வந்திருந்தான். அவனது வாய் தன் போக்கில் தாய்க்கு சமாதானம் சொல்லிக் கொண்டு இருக்க, பார்வையோ பார்கவியை விட்டு அகலவே இல்லை. முழு நாட்டிய உடையில் தேவதை போல் இருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான். அவளும் அந்தப் பார்வைக்கு, பார்வையால் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.
இந்தப் பார்வை நாடகத்தைக் கண்டும் காணாமல் அனைவரும் இருக்க, கௌசல்யா ஒரு முடிவு எடுத்தவராக கணவரைப் பார்த்தார். முப்பது வருடத்திற்கும் மேலான திருமண வாழ்க்கையில், முதன் முறையாக அவரது பார்வையிலேயே அவர் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிந்த ஸ்ரீதரனும் தன் தலையசைத்து சம்மதம் தெரிவித்தார்.
தாய் தந்தை அருகில் அமர்ந்து பார்கவியின் நாட்டியத்தை ரசித்துக் கொண்டு இருந்த ஸ்ரீவத்ஸனின் மனதுக்குள் ஏதேதோ சிந்தனைகள். நண்பர்கள் அனைவரும் வேப்பிலை அடிக்காத குறையாக, காதில் ரத்தம் வரும் வரை பேசி அனுப்பி இருந்தனர். இவனுக்கும், இடத்திற்கு தகுந்தவாறு, அன்புடன் புன்னகை மாறாமல், நடந்து கொள்ளும் அவளைப் பிடிக்காமல் இல்லை. அதுவும் தன் கனவாக இருந்ததைத், அவள்து கனவாக ஏற்று அதில் வெற்றியும் பெற்றிருப்பவளைக் கண்டு பெருமிதமாகவெ இருந்தது.
இதய அறுவை சிகிச்சையில் பெண்கள் இருப்பது என்பதே, மிகக் குறைவு என்பதோடு அதில் பெயர் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.அதிலும் பார்கவி, ஸ்ரீவத்ஸன் ஆசைப்பட்ட எப்ஆர்சிஎஸ் என்ற நான்கு எழுத்துக்களை அவளது பெயரின் பின்னே தனது இருபத்தைந்து வயதிலேயே பெற்று இருந்தாள். அதையே குறிக்கோளாகக் கொண்டு மருத்துவ மேற்படிப்பை முடித்த கையோடு எப்ஆர்சிஎஸ் உம் பெற்று விட்டாள்.
டெக்னாலஜி வளர்ந்த இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் இருந்தபடியே எம்ஆர்சிஎஸ், எப்ஆர்சிஎஸ் தகுதி பரீட்சைகளை எழுதலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்தி பார்கவி, தனது லட்சியத்தை நோக்கி அயராது உழைத்ததில், ஒரே முயற்சியில் தேர்வில் வெற்றி பெற்று விட்டாள். அன்றிலிருந்து தந்தையின் ஜூனியராகப் பணியாற்றுவதோடு, தனியாகவும் அறுவை சிகிச்சை செய்வதில் பேரெடுத்தும் விட்டாள்.
சரணும், ராகவியும் கூட கல்யாணம், குழந்தை என்று ஆனதில் போன வருடம் தான் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு, அவளை வானளவு பிடித்தது. அவளைப் பெற்றவரையும் பிடிக்காமல் இல்லை, ரவீந்திரனோ அவரது மனைவியோ கௌசல்யா குடும்பத்தினரை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுத்து நடந்ததில்லை.
அப்படி இருந்தும், தனது தாயின் மனநிலை என்ன என்று அறியாது, ஒரு பெண்ணின் ஆசையை வளர்க்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், யார் மாறினாலும், தாயைப் பெற்ற பாட்டி இனிமேல் ஒரு நாளும் மாறப் போவதே இல்லை.
பார்கவியைத் திருமணம் செய்தால், அவரை வாழ்நாள் முழுவதும் பார்க்காமல், பேசாமல் இருக்க முடியுமா? இவ்வாறு உப்புச் சப்பில்லாத காரணங்களை அவன் யோசித்துக் கொண்டு இருக்க, அவனது மனச்சாட்சியோ அவனை ‘உனக்குத் தைரியம் இல்லைன்னு ஒத்துக்கோ’ என்று இடித்தது.
பார்கவியின் தம்பி வந்து “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க, காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க” என்று சத்தமாகப் பாட, கண்ணால் பேசிக் கொண்டு இருந்த பெரியவர்கள் நனவுக்கு வந்ததில் அங்கே ஒரு திருமணம் பார்வையால் மட்டும் அல்லாமல் வார்த்தைகளாலும் முடிவானது.

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -27
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.