தொட்டுத் தொடரும் -26
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆனிப்பொன் னால்செய்த
வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையமளந்தானே தாலேலோ!
(*தொட்டில் இடுதல்)
‘பிருந்தாவனம்’, கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் பிறகு அதன் இளவல்களின் வருகையால், பழைய உற்சாகத்தை மீட்டெடுத்து இருந்தது. அபிமன்யு – ஸ்ரீநிதியின் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் வைபவத்தோடு, ராதாவிற்குப் புதியதாக வந்த பதவியைக் கொண்டாடும் விதமாக உறவினர்களாலும், நண்பர்களாலும் நிறைந்து வீடு விழாக் கோலம் பூண்டு இருந்தது.
தன் துறை சார்ந்த விஷயங்களில் பல ஆய்வுகளைச் செய்து, டாக்டரேட் பட்டம் பெற்று இருந்த ராதா, தனது நிர்வாகத் திறமையையும் பல இடங்களில் வெளிப் படுத்தி இருந்தார். அவரது கடுமையான உழைப்பின் பயனாகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் ‘தற்காலிக துணைவேந்தராக’ அறிவிக்கப்பட்டு இருந்தார். தன்னால் அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று தயங்கியவரை, கிருஷ்ணன் தான் ஊக்குவித்து ஒரு வருடம் தானே என்று ஒத்துக் கொள்ள வைத்து விட்டார்.
குழந்தைகளின் சிறு பிள்ளை விளையாட்டுகளைப் பாட்டியாக அனுபவிக்க முடியாதோ என்று நினைத்தவருக்கு, முன்பை விட நிறைய நேரம் கிடைத்து சந்தோஷங்களை வாரி வழங்கியது.
அன்று காலையிலேயே ஸ்ரீநிதி மற்றும் குழந்தைகளை முறைப்படி அழைத்து வந்து விட்டனர். ஸ்ரீதரன் குடும்பத்தினரும், ராகவன் குடும்பத்தினரும் கூட உற்சாகமாக விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். முதல் நாள் காலை வரை, ஸ்ரீதரன் வீட்டில் நடைபெறுவதாக இருந்த பெயர் சூட்டு விழா, கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கௌசல்யா சிறிது மனம் சுணங்கினாலும், எப்படி இருந்தாலும் குழந்தைகளை இன்று அவர்கள் வீட்டில் விடவேண்டும் என்பதால் அமைதியாக இருந்தார்.
“வாங்க! வாங்க! இன்னும் காணோமே, கால் பண்ணனுமோன்னு பார்த்தேன், கரெக்டா வந்துட்டீங்க. பார்த்து இறக்குங்க இரண்டு தொட்டிலையும், சரண் நீ ஒரு கை கொடு, இங்க இல்லை ரைட் சைட் போ! அங்கே தான்.
வத்ஸ்! நீ என்ன வேடிக்கை பாக்கிற? வந்து பிடி! ரொம்பவே வெயிட் பா இது. ஹேய் ஸ்ரீ! நீ என்ன பண்ற? தள்ளி நில்லு.
சார்! டிசைன்ல எங்கேயும் கட் எதுவும் பண்ணிடலையே. கேர்ஃபுல்லா செஞ்சு இருக்கீங்க தானே? பெட்டும் சேர்த்து கொடுத்து இருந்தேனே? இங்க இருக்கா? தாங்க் யூ.
“தலைப்பக்கம் ஈஸ்ட்ல வர மாதிரி செட் பண்ணனும். கரெக்ட் தானே அத்தை” ஆளாளுக்கு ஒரு வேலை சொல்லிக் கொண்டு இருந்த அபிமன்யு தன்னையும் பேச்சில் இழுக்கவே, கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினார் கௌசல்யா.
இன்னமும் பிரிக்கப் படாமல், பேப்பரில் சுற்றி, முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டிருந்த தொட்டில்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் சில மனதில் வந்து போயின. கைகள் தன்னையும் அறியாமல் தடவிக் கொடுத்தன.
ஸ்ரீவத்ஸனைச் சுமந்த போது அவர்கள் துவாரகை அருகே இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணன் மயமாக இருந்தது. ஸ்ரீதரனின் ஆராய்ச்சியும் கிருஷ்ணனின் துவாரகை நகரைப் பற்றியே இருந்தது.
கிருஷ்ணனின் பால பருவம் முழுவதுமாக தன் கையால் ஓவியங்களாகத் தீட்டித் தனது குழந்தைக்குத் தொட்டில் செய்ய வேண்டும் என்று கௌசல்யாவிற்கு ஆசை. நிறைய பலகைகளை வாங்கி, அவர் ஓவியங்களை வரைந்து முடித்து விட்டாலும், தலைப் பிரசவத்திற்குத் தாய் வீடு சென்று விட்டதால் தொட்டில் செய்யப் படவில்லை.
ஸ்ரீநிதி பிறந்த போது, “ரொம்ப நல்லா இருக்கு, பிரசவங்கிறது மறுபிறவி மாதிரி. பிள்ளை கைக்கு வர வரைக்கும் எதுவும் நிரந்தமில்லை. இதென்ன புதுப் பழக்கம். முதல்ல தொட்டில் செஞ்சு வைக்கிறது. கேட்க யாருமில்லேன்னு ரொம்பவே ஆடற போல” என்று வார்த்தைகளால் குத்திக் கிழித்த கௌசல்யாவின் தாய், மகளது கைவண்ணத்தில் உருவான அத்தனை பலகைகளையும் பரணில் தூக்கிப் போட்டு விட்டார்.
இப்போது பேரன் பேத்தியின் முகம் பார்க்கும் போது அந்த பலகைகளில் தொட்டில் செய்யும் ஆசை மறுபடியும் எட்டிப் பார்த்து ‘உள்ளேன் ஐயா’ என்றது. ஆனால் யாரிடமும் சொல்ல விருப்பமில்லை. கணவன் மற்றும் பிள்ளைகளின் ஞாபக சக்தியை சோதிக்க ஆசை. கிட்ட தட்ட முப்பது வருடங்களாக அந்த பலகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார் என்பதை அவர்கள் மூவரும் அறிவார்கள்.
கூடவே “இதுல என் பசங்க தான் தூங்க முடியாமல் போச்சு. ஆனால் என் பேரன் பேத்தி எல்லாம் இதுல தான் தூங்குவாங்க, என் தாலாட்டோட சேர்த்து” எப்போதெல்லாம் பலகைகள் பராமரிப்புக்காக வெளியே வருகிறதோ, அப்போதெல்லாம் அவரிடமிருந்து இந்த டயலாக்கும் சேர்ந்தே வருவதையும் அறிவார்கள்.
அவையெல்லாம் இப்போது ஞாபகம் வர, ஒரு பெருமூச்சுடன் அருகில் இருந்த தொட்டிலை தடவிக் கொடுத்தார். போனவாரம் தன்னையும் அறியாமல் ஒரு முறை, தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்ததைக் கௌசல்யா அறியவில்லை. வீட்டில் அனைவரும் வத்ஸன் அறையில் இருந்த நேரம் பேரன் பேத்தியுடன் தனது மாமியார் மட்டுமே இருப்பதைக் கண்டு, அவர்கள் அருகில் அமர்ந்து மனதில் தோன்றிய விஷயங்களை அந்தச் சின்னச் சிட்டுக்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
பேரனின் மயக்கும் புன்னகையில் எப்போதும் போல மயங்கியவர், “இந்தச் சின்னக் கண்ணனைப் பாத்தீங்களா அத்தை? அபிமன்யுவோட பையன் தானே இவன், அவனை மாதிரியே ஒரு சிரிப்பைப் பாரு இவனுக்கு, கோபப்படவே முடியாதபடி சிரிச்சே மயக்கிடறான். ராஜாக் குட்டி உங்க வீட்டுக்கு போகப் போறீங்களா? இந்தப் பாட்டிய ஞாபகம் வைச்சுப்பீங்களா?” என்று கொஞ்ச,
அதற்குள் பேத்தி ‘அவனை மட்டும் தான் கொஞ்சுவாயா பாட்டி. இப்போ என்ன பண்றேன் பாரு’ என்பது போல தனது ட்ரேட் மார்க் சவுண்ட்டை எடுத்து விட,
“அச்சோ! நீ கத்தாதடி செல்லம்மா! தொண்டை வலிக்கப் போகுது. இதோ! பாட்டி உன்னைத் தூங்கிட்டேன்!” என்று பேத்தியைத் தூக்கி மடியில் இட்டுக் கொண்டு, பேரனிடம் தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“இந்த சின்னக் குட்டி இருக்காளே அப்படியே உங்க அம்மா தான். இப்பவே என்னமா கத்தறா. எப்போ பாரு அவளையே எல்லாரும் கவனிக்கணும். எங்க சின்ன கண்ணனுக்கு, குட்டி குட்டி கண்ணனை எல்லாம் சேர்த்து வச்சு, அங்கங்கே மணி வச்சு, தொட்டில் செய்யலாமா? ஆனா இந்த குட்டிப் பொண்ணு கத்துற சத்தத்தில மணிச்சத்தம் எல்லாம் கேட்காதே” என்று சிரித்தவர், பெரிய மனிதரிடம் பேசுவது போல் பேரனிடம் பேசிக் கொண்டே சென்றார்.
வராத ஃபோனை வந்ததாகக் கூறி, வெளியே வந்த அபிமன்யு அவரது புலம்பல்கள் மூலம் வெளிப்பட்ட ஆசையை கேட்க நேரிட்டதையோ, அவருக்குத் தெரியாமல் அதைச் செயல்படுத்தி விட்டதையோ அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தாலாட்டு போல ஏதோ பாடலை அவர் முணுமுணுத்ததையும், அதிலே அவரது பேத்தியும் கூட அமைதியாகி உறங்கி விட்டதையும் கூடக் கவனித்து இருந்தான் அவன்.
கௌசல்யா தொட்டில் அருகிலேயே நின்று கொண்டு இருப்பதைக் கண்ட அபிமன்யு, அவரருகே வந்து இன்னும் ஒரு பார்சலைக் கொடுத்து, “அத்தை! இங்கேயே இதோ இந்த சோஃபாலயே உட்காருங்க. இதையும் கையிலேயே வச்சுக்கோங்க. நான் கேட்கும் போது கொடுத்தால் போதும்” என்று சொல்லி விட்டுப் போனான்.
அங்கேயே அமர்ந்து சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்த கௌசல்யாவின் கண்களின் அனைவரின் ஆடைகளிலும் உள்ள ஒற்றுமை சற்று நேரம் கழித்தே பட்டது.
ராகவியும், ஸ்ரீநிதியும் ஒரே மாதிரியான புடவை அணிந்து இருந்ததைக் கண்டு அவரிடம் கலவையான உணர்வுகள் தோன்றின. அப்போது தான் உள்ளே வந்த கிரிஜாவைக் கவனித்தவர், சட்டென்று திரும்பி ராதாவைப் பார்த்தார். மனதில் இனம் புரியாத உணர்வுகள் தான் இருந்தன.
இவர்கள் மூவரும் கூட ஒரே மாதிரியான புடவைகளை அவரவருக்குப் பிடித்த வண்ணத்தில் அணிந்து கொண்டு இருந்ததே காரணம். ஆண்களும் கூட அதே போல அவரவர் ஜோடிகளின் உடைகளுக்கு மேட்சாக, அதே நேரத்தில் அவர்களும் சற்றே ஒரே மாதிரியான ஆடைகளையே அணிந்திருந்தனர்.
இந்த ஆடைகள் எல்லாம் இளையவர்களின் தேர்வு, தங்களைப் போல் அல்லாமல் அவர்களது வாழ்க்கை நன்றாகவே இருக்க வேண்டும் என்று அவசரமாய் ஓர் வேண்டுதல் பிறந்தது.
கௌசல்யாவின் பிறந்த வீட்டு உறவினரும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். கௌசல்யா அனைவரிடமும் பட்டும் படாமலும் பேசினாலும், அவர்கள் எல்லோரும் சாதாரணமாகப் பேசுவதற்கு முயற்சி செய்வது போலவே கௌசல்யாவிற்குத் தோன்றியது.
அதுவும் கௌசல்யாவின் தங்கை மல்லிகா வந்து, “அக்கா! நல்லா இருக்கியா? உன் மனசுக்கு நீ நல்லாவே இருப்ப” என்று பேச ஆரம்பித்த போது பதில் பேச விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்.
அவரது தங்கையும் விடாக்கொண்டியாக, பேச்சை வளர்த்தார். “நான் செஞ்சதுக்கு எல்லாம், என் பேத்தி அனுபவிக்கிறா. உன் பையன் மட்டும் இல்லேன்னா இந்நேரம் என்ன ஆகி இருக்குமோ? ரொம்ப சாரிக்கா” என்று பேசியபோது, ‘என்ன ஆயிற்றோ?’ என்று மனம் பதறினாலும் யாருக்கு என்ன என்றெல்லாம் தெளிவாக கவனத்தில் படவில்லை.
“எல்லாம் பணம் பண்ற வேலை. எதுல போட்டி போடறதுன்னு இல்லாம, சின்னப் பொண்ணுக்கு, படிக்கிற வயசுலயே கல்யாணத்த பண்ணி வச்சு, குழந்தையும் பெத்துக்கிட்டா எப்படி? நான் தான் படிக்காதவ, மாப்பிள்ளை தேடறதுல அவசரப் பட்டு சொதப்பினேன். நீங்க எல்லாம் படிச்சவங்களாச்சே, அப்புறம் நல்ல பையனா தேடறதுல என்ன பிரச்சினை?” என்று அவர் பிரச்சினை என்ன என்று தெரியாமல் பேசிக்கொண்டே போக,
“அச்சோ! அத்தை! நான் எல்லாம் உங்க பொண்ணு காலால சொல்ற வேலையை தலையால செய்யறவனாக்கும். உங்க தங்கச்சி சொன்னதை நீங்க சரியா கவனிக்கலை போல இருக்கே, பிரச்சினை எங்க குழந்தைக்கு. அதுவும் கூட நம்ம மச்சான் புண்ணியத்தில என்னன்னு பார்த்தாச்சு. இப்போ சரண் அண்ணா கம்ப்ளீட்டா செக் பண்ணி சீக்கிரமே சரியாகிடும்னு சொல்லி இருக்கார்” என்று விம் போட்டு விளக்கினார், அங்கே ஆஜரான அவர்கள் வீட்டு ஜர்னலிஸ்ட் மாப்பிள்ளை.
“குழந்தைக்கா!” என்று ஷாக்கான கௌசல்யா, “ஆமா, இதுல வத்ஸ் எப்படி வந்தான்?” என்று கேட்க,
“ஆஹா! அண்ணான்னு கேட்க எவ்வளவு நல்லா இருக்கு! ஆனாலும் யார் கூப்பிடணுமோ அவங்க கூப்பிட்டா தான், நல்லா இருக்கும் மாப்பிள்ளை. நிதிக்கும் அவ தங்கச்சிக்கும் தான் நான் அண்ணன்”
“எங்க.. அவங்க இரண்டு பேரும் என்னை அண்ணன்னு கூப்பிட்டு, ம்ஹூம்.. இந்த ஜென்மத்தில எனக்கு அந்த கொடுப்பினை இருக்கிற மாதிரியே தெரியலையே?”
“சித்தி! நீங்க கொஞ்சம் என் தங்கச்சிகள் கிட்ட ரெகமண்ட் பண்ணுங்களேன். நீங்க சொன்னா கேட்பாங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்” என்று வத்ஸனைப் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்லும் இக்கட்டில் இருந்து மாப்பிள்ளையைக் காப்பாற்றி விட்ட சரண், அவரையும் தனது கேலிப் பேச்சுக்குள் சகஜமாக இழுத்தான்.
“ஹேய் சீனியர்! எப்படி இருக்கீங்க?” என்றபடி நிதியோடு அங்கு வந்து சேர்ந்தாள் பார்கவி. இருவரையும் கண்டதும் தன்னை வேறு வேறு கலர்களில் ஜெராக்ஸ் எடுத்தது போலத் தோன்றியது கௌசல்யாவிற்கு. அவர்களும் கூட ஒரே மாதிரியான ஆடைகளையே அணிந்திருந்தனர். சிறியவர்கள் சஜகமாகப் பழகுவதும் கண்ணில் பட்டு, ‘எத்தனை நாளாக இது நடக்கிறது?’ என்று யோசிக்க வைத்தது.
“போன நிமிஷம் வரைக்கும் நல்லா தான் இருந்தேன். இனிமேல் எப்படி இருப்பேனோ யாருக்கு தெரியும்? உங்க கிட்ட இன்னைக்கு சிக்கினது நான் தானா? கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்தி விட்டுடு” என்று மேலே பார்த்துக் கும்பிடு போட்டான்.
“இதோ வந்துவிட்டேன் பக்தா! உம் கூக்குரல் கேட்டு ஓடோடி உம்மைக் காப்பாற்றவே யாம் வந்தோம். என்ன வரம் வேண்டும், கேள் மகனே கேள்!” என்று ஆஜரானான் அபிமன்யு.
அங்கிருந்த பார்கவியைப் பார்த்தவன், “அட! நம்ம ஜில்லு! எப்படி இருக்கீங்க மேடம்? டா…” என்று ஆரம்பித்தவன் அங்கிருந்த கௌசல்யாவைக் கவனித்ததால், “பிராக்டீஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்று அபிநயம் பிடித்தான்.
அமெரிக்காவில் இருந்து, அனைவருக்கும் வாங்கி வந்திருந்த பொருட்களை மறந்து வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த ஸ்ரீவத்ஸன், அப்போது தான் கை கொள்ளாமல் பைகளை அள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
தன் தயக்கங்களை உடைத்து, “என்ன அத்தான் நீங்க? இப்படி தனித் தனி கவர்ல தூக்கிட்டு வரீங்க? ஒரு பெட்டியில போட்டு கொண்டு வரலாம் இல்ல?” என்று கேட்டுக் கொண்டே அவனை நோக்கி ஓடிய பார்கவி, அவன் கையில் இருந்த சில பைகளை வாங்கினாள்.
இந்தக் காட்சி, பெரியவர் சிறியவர் என அங்கிருந்த அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்றாலும், யாரும் எந்த ஒரு எதிர் வினையும் காட்டவில்லை, கௌசல்யா உட்பட. அவருக்குத் திடீரென்று காட்சிகள் எல்லாமே ஏதோ மந்திரம் போட்டாற் போல மாறிவிட்டது என்றே தோன்றியது. தன் குடும்பத்தில் அனைவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ செய்வதாகவும் தோன்றியது. எதுவானாலும், நல்லதே செய்வார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
சிறியவர்கள் எல்லோரும் ஏதேதோ பேசிக் கலகலத்துக் கொண்டிருக்க, கௌசல்யா வெறும் பார்வையாளராக அங்கே தங்கையோடு அமர்ந்து இருந்தார். பார்வை, மகனிடம் சென்றது. பார்கவியைக் கண்டதும் மலர்ந்த அவனது முகத்தைப் பார்த்து அவளது முகமும் மலர்ந்ததும், அது பொய்யோ என்னும் படி நொடியில் கடுகடுப்புக்கு மாறியதும் பார்கவியின் முகம் அதில் வாடியதும், மற்றவரைப் போலவே கௌசல்யாவின் கண்களுக்கும் தப்பவில்லை.
“என்ன உங்க அண்ணன் ரொம்ப ஓவராத் தான் பண்றான். எல்லாத்துக்கும் சேர்த்து பின்னாடி அனுபவிக்கப் போறான். கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லு” என்று ஸ்ரீநிதியின் காதுகளில் அபிமன்யு முணுமுணுத்தான்.
அது சரணின் காதுகளில் விழுந்து, “வை ப்ளட். சேம் ப்ளட். யாம் பெற்ற இன்பம். இதெல்லாம் தான் எனக்கு ஞாபகம் வருதுடா மச்சான். ஆனால், உன் உடன்பிறப்புக்கு நீ இது மாதிரி எதுவும் சொல்லி அனுப்பலையோ?” என்று நக்கலாகக் கேட்க,
உள்ளேன் ஐயா என்று ஆஜரானாள் அவனது தர்ம பத்தினி. அதுவரை மாமியாருடன் இணைந்து விழா நாயக நாயகியரைத் தயார் செய்தவள், தொட்டில் ரெடியா என்று பார்க்க வந்தாள்.
இன்னமும் பிரிக்கப் படாத நிலையில் இருந்த தொட்டில்களையும் அனைவரும் சுற்றி உட்கார்ந்து அரட்டைக் கச்சேரி செய்து கொண்டு இருப்பதையும் கண்டவள், “அபி! சரண் என்னடா எல்லோரும் வெட்டி அரட்டை அடிக்கத் தான் கூடி இருக்கோமா? தொட்டிலை யார் ரெடி பண்றது? பெட் எங்கே காணோம்? ஃபங்ஷனுக்கு டைம் ஆச்சு” என்று அனைவரையும் விரட்டினாள்.
“சொல்லுங்க எஜமான்! நீங்க ஒன்னு சொல்லி நான் கேட்காம இருக்கறதா? நெவர்” என்று பவ்யமாக வாய் பொத்தி, எழுந்து நின்ற சரணின் முதுகில் ஒன்று போட்ட அபிமன்யு,
“கவி! தொட்டிலும், பெட்டும் அப்புறம் தான் பிரிக்கணும். நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன். ஸ்ரீ! நீ வா. பசங்களைக் கூட்டிட்டு வரலாம். எல்லோரும் அசெம்பிள் ஆகுங்க.
அத்தை, மாமா, வத்ஸ் எல்லோரும் தொட்டில் கிட்ட நில்லுங்க. வத்ஸ் என் பிள்ளைகளுக்கு இன்னைக்காவது பெயர் வைச்சுடுடா, பெயர் ரெண்டும் ஞாபகம் இருக்குல்ல, இதோ வந்திட்டோம்” என்று மனைவியை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.
அடுத்த அரைமணி நேரம் அங்கு ஒரே உணர்வு மயமாக இருந்தது. அனைவரும் கூடிய பிறகு கௌசல்யா மற்றும் ஸ்ரீதரனின் கைகளில் ஆளுக்கொரு கத்திரியைக் கொடுத்த அபிமன்யு, அவர்களை வைத்துத் தொட்டில்களைச் சுற்றி இருந்த பேப்பர்களை அகற்ற, அவர்களுக்கு நேர் எதிரே நின்றிருந்த கௌசல்யாவின் முகத்தில் வர இருக்கும் உணர்வுகளைப் படம்பிடிக்க ஸ்ரீநிதி தயாராக இருந்தாள்.

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -26
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.