தொட்டுத் தொடரும் -25
கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
குழந்தைகளின் பசியாற்றி பாட்டியைக் காவலுக்கு வைத்து விட்டு, அனைவருக்கும் ஜூஸோடு வந்தாள் ஸ்ரீநிதி. சமையல் ராணியான (!?) அவள் அவரவருக்குப் பிடித்த ஜூஸைத் தானே தயாரித்த மகிழ்ச்சியில் நடையில் ஒரு துள்ளலுடன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி வந்தாள்.
கௌசல்யா இன்னும் கூட அபிமன்யுவின் பெயர்க் காரணத்தை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கிறார், அதன் காரணமாகவே ஏகப்பட்ட குழப்பங்களைத் தங்கள் வாழ்வில் செய்து வருகிறார் என்று அவன் வாயாலேயே சொல்லக் கேட்டு, கையில் இருந்த ட்ரேயை அப்படியே இறுக்கிப் பிடித்தபடி சிலையாக நின்று விட்டாள்.
அவளது பின்னால் அந்த ஜூஸிற்குத் தேவையான சர்க்கரை, ஐஸ்கட்டிகள் அடங்கிய ட்ரேயை எடுத்துக் கொண்டு மகளது சேவகனாக வந்த ஸ்ரீதரன், அறையில் இருந்து வந்த பேச்சுக்களால் அதிர்ச்சி அடைந்து, அத்தனையையும் கீழே தவற விட்டார்.
அந்த சத்தத்தில் திரும்பிய நிதி, தந்தையை விதம் விதமான ஜூஸ் மழையில் குளிப்பாட்டி விட்டாள். எல்லோரும் அவரிடம் எப்படிப் பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்த போது தானே வந்து தலையைக் கொடுத்து இருக்கார். என்ன ஆகப் போறாரோ?
கெட்டதிலும் ஒரு நல்லதாக நிதியின் கையிலிருந்த தட்டும், அதில் இருந்த ஜூஸ் டம்ளர்களும் வெள்ளியாக இருக்க, சேதாரம் இல்லாமல் நிதி தப்பித்தாள். ஆனாலும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே வந்தவளை,
“என்ன ஆச்சு டா? ஷார்ப் எட்ஜஸ் ஏதாவது இருந்துச்சா? எங்கேயாவது கீறிடுச்சா?” என்று அக்கறையுடன் வினவிய கணவனுக்கு இல்லை என்பது போல தலையசைத்து பதில் சொன்னவள், “கஷ்டப் பட்டு நானே ஜூஸ் போட்டு கொண்டு வந்தேன். இப்படி ஆகிடுச்சு” என்றாள் தலை குனிந்தபடி.
வந்த சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் போக வாய்விட்டுச் சிரித்தான் அபிமன்யு. ராகவியோ ஒரு படி மேலே போய், “ஏன் மா? இல்லை ஏன்னு கேட்கிறேன்? எங்களை எல்லாம் பார்த்தால் எப்படி இருக்கு உனக்கு?”
“உன் மாமனார் கிட்ட எங்களை எல்லாம் மாட்டி விட எத்தனை நாளாக பிளான் பண்ற? நீ ஆணியே பிடுங்க வேண்டாம். அமைதியா உட்காரு” என்று பேசிக் கொண்டே அந்த இடத்தைச் சுத்தம் செய்தாள்.
“அபி! இப்போ சொல்லு! அம்மா இன்னுமா உன் பேரைப் பத்தி யோசிக்கிறாங்க? உன் பேருக்கு என்ன குறைச்சல்?” என்று எரிச்சலுடன் கேட்டு அடுத்த ரவுண்ட் பேச்சை தொடங்கி வைத்தாள் நிதி.
அவளைத் தொடர்ந்து ஸ்ரீதரனும் “அபி! ஐயாம் வெரி சாரி! நீங்க நிறைய சஃபர் ஆகி இருக்கீங்கன்னு தெரியுது. என்ன தான் பிரச்சினை. இதுக்கு மேலேயும் நான் சும்மா இருந்தால், எல்லாருக்குமே கஷ்டம், அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், எங்கே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை” என்றார்.
“ஆமா, எதையும் கண்டுக்காம இருந்தாச்சு, இப்போ வந்து ஃபீல் பண்ணி என்ன பண்ண?” என்று முணுமுணுத்தாள் நிதி. ‘பேசாதே’ என்று அவளைப் பார்வையில் அடக்கியவன், என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். அவனது மௌனத்தைத் தன்னிடம் பேசப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்ட ஸ்ரீதரன், மெல்ல எழுந்து வெளியே செல்லப் போனார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி தப்பிக்க முடியும் அப்பா? என்னைக்காவது ஒரு நாள் உண்மையைச் சந்திச்சுத் தானே ஆகணும்?” என்ற வத்ஸனின் குரல் அவரைச் இருக்கையில் மீண்டும் அமர வைத்தது. தலை குனிந்தபடி இருந்தவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், பாவம் பார்க்கும் நேரம் இல்லை இது என்று, வத்ஸன் கேள்விக் கணைகளை தந்தையை நோக்கி வீசினான்.
“அம்மா, எப்போ இருந்து இப்படி அப்நார்மலா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சாங்க. அவங்களோட பேசிக் நேச்சரே இது தானா? உங்களுக்கு இடையில ஏதாவது பெரிய பிரச்சினை நடந்து இருக்கா? எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்” என்று கேட்டவன், “ எனக்குத் தெரிந்து நான் டென்ந்த் படிச்சப்போ ஏதோ பெரிசா நடந்தது” என்று எடுத்துக் கொடுத்தான். வேறு வழியின்றிப் பேச ஆரம்பித்தார் ஸ்ரீதரன்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே, கௌசிய ரொம்பவே பிடிக்கும். ஆனால், அவ என் கிட்ட டிஸ்டேன்ஸ் மெயின்டெயின் பண்ணுவா. என் படிப்பை வச்சு மிரண்டு போறான்னு நினைச்சேன். ஆனால் என் அப்பியரன்ச வச்சுத்தான் என்னை அவளுக்கு பிடிக்காதுன்னு கல்யாணம் பேசும் போது தான் தெரியும். அவளுக்கு டான்ஸ் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதில் பெரிய சாதனைகள் எல்லாம் செய்ய நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன், அதுக்கு எந்த பிரச்சனையும் வராது, இப்படி எல்லாம் சொன்னதுல சமாதானமாகித் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சா” என்றவர் பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேசுவதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.
சரணும் ராகவியும் இருந்த சுவடு தெரியாமல், அபியிடம் சைகையில் சொல்லிக் கிளம்பி விட்டார்கள். அபிமன்யுவும் கூட, தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான பேச்சில் தலையிட விரும்பவில்லை, அதைத் தெரிந்து கொள்ளவும் அவன் பிரியப் படவில்லை. தனது பிரச்சனையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான். அழைப்பே வராத மொபைல் ஃபோனைக் காதில் வைத்தபடி “சொல்லுங்க ராம்குமார்! ஒரு நிமிஷம்” என்றவன், “வத்ஸ்! ஒரு முக்கியமான கால். நீங்க பேசிட்டு இருங்க. இப்போ வந்துடறேன்” என்று சொல்லி வெளியேறினான்.
“சந்தோஷமாத் தான் ஆரம்பிச்சது எங்க வாழ்க்கை. அப்புறம் தான் திசைமாறிப் போச்சு. அதுக்கு நானும் ஒரு முக்கிய காரணம், இப்போ யோசிச்சு பார்த்தால், நான் மட்டுமே தான் காரணம் போல இருக்கு” என்று அந்த நினைவுகளில் மூழ்கினார்.
“என்னங்க! இந்த ஸ்ரேயா பொண்ணப் பாத்தீங்களா? மூணு வயசுலயே டான்ஸ்ல என்ன ஒரு ஆர்வம்? என்னோட பெஸ்ட் ஸ்டுடண்ட் அவதான். என்னை நானே பார்க்கிறது மாதிரியே இருக்கு”“என்ன வாய்! என்ன வாய்! அந்த பொண்ணு பேசறது ஹிந்தியா? குஜராத்தியா? அது தான் தெரியலை” என்று ஆர்ப்ப்பரித்த கௌசல்யா, அதற்குக் கணவனிடம் எந்த எதிரொலியும் இல்லாமல் போக மிகுந்த ஏமாற்றமாக உணர்ந்தாள்.
மகாபலிபுரத்தில் இருந்து அவர்கள் குஜராத்தின் துவாரகையை ஒட்டிய பகுதிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. தனது வீட்டிலேயே சிறிய நாட்டியப் பள்ளியை ஆரம்பித்து இருந்தாள் கௌசல்யா. அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, முதலில் பாஷையைப் பேசக் கற்று அந்த பாஷையில் நாட்டிய முத்திரைகளைக் கற்று, ஒரு வழியாக போன வாரம் தான் ஆரம்பித்த அவளது பள்ளியில், நான்கு குழந்தைகள் சேர்ந்து இருந்தனர்.
இருபத்தியொரு வயதில் இதைப் பெரிய சாதனையாக கௌசல்யா நினைக்க, ஸ்ரீதரனோ, ‘என்ன இந்தப் பெண் டான்ஸ் தவிர வாழ்க்கையில் வேறு எதையும் எப்போது நினைப்பாள்?” என்று நினைக்கத் தொடங்கினான்.
இருவருக்கும் இடையே ஆன எட்டு வயது வித்தியாசமும், அவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது என்பதும் அவனை வாழ்க்கையின் அடுத்த நிகழ்வுகளைப் பற்றித் தீவிரமாக யோசிக்க வைத்தது. இரு வீட்டுச் சொந்த பந்தங்களும் அதற்குத் தூபம் போட்டார்கள்.
அந்தத் தீவிர யோசனையின் விளைவாக, நாட்டியப் பள்ளியை சிறிது காலம் மூட வைத்துத் தானும் விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் மனைவியுடன் சுற்றினான். கௌசல்யாவை ஒரு பெண்ணாக உணர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றான்.
அதன் பலனாக, அடுத்த நான்கு ஆண்டுகளில் இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் ஆனார்கள். பிரசவ காலம், குழந்தை வளர்ப்பு என்று கௌசல்யாவின் நேரம் அவளையும் அறியாமல் திருடப்பட்டது என்பதைத் தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. கௌசல்யா குழந்தைகளை வெறுத்தவள் அல்ல. சிறு வயதிலிருந்தே கிடைக்காத சுதந்திரம், கணவனிடம் கிடைத்ததில் அதைச் சற்று அதிகமாக அனுபவித்து விட்டாள், அவ்வளவு தான்.
இயல்பாகவே ஆண் என்ற எண்ணத்தில் ஸ்ரீதரன் செய்த மாபெரும் தவறு, மனைவியின் மன நிலையைப் பற்றி யோசிக்க மறந்து, தன்னிச்சையாக முடிவெடுத்தது தான். அவர்களுக்கு இடையே பெரும் பிளவு உண்டாக அதுவே காரணமாகி விட்டது.
ஸ்ரீவத்ஸனின் இரண்டாம் வயதில் மீண்டும் நாட்டியப் பயிற்சியைத் துவக்கிய போது, ஸ்ரீதரனின் தாய் குழந்தையைப் பார்த்து கொள்ள வேண்டி அவர்களுடன் வந்து இருந்தார். மருமகளின் திறமைகள் மீது அவருக்கு பெருமை தான். ஆனாலும் கூட, ஸ்ரீதரன் தனக்கு ஒற்றைப் பிள்ளையாய் போனதைப் போல மகனுக்கும் அமைந்து விடுமோ என்ற ஆதங்கத்தை அவ்வப்போது புலம்பல்களாக வெளிப்படுத்துவார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் வர ஆரம்பித்தன. இப்போதும் இன்னொரு குழந்தை கண்டிப்பாக வேண்டும் என்ற ஆணின் முடிவே வென்றது.
ஸ்ரீநிதி பிறந்த பின்னர் ஒரு நாள், “என்னம்மா? இப்போ பேத்தியும் பிறந்தாச்சு. இப்போ உங்களுக்கு திருப்தி தானே? அவளோட டான்ஸ் கனவை அழிச்சிட்டேன்னு நினைச்சால் தான் கஷ்டமா இருக்கு. அவளுக்கு கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்குன்னு எடுத்தாச்சு. டான்ஸ் ஆடினால் ரிஸ்க்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. எப்படி அவகிட்ட சொல்லப் போறேன்னு தான் தெரியல” என்று ஸ்ரீதரன் தனது தாயுடன் பேசிக்கொண்டு இருந்ததைக் கௌசல்யா கேட்க நேர்ந்தது.
இவள் கேட்டு விட்டதை உணர்ந்த ஸ்ரீதரன், “கௌசி! நான் சொல்றதை கொஞ்சம் கேளுமா. ப்ளீஸ்! இப்படி வேகமாக ஓடக் கூடாது மா” என்று பின்னால் வருவது தெரிந்தும், அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்றினாள். அவளது மனதில் கணவனுக்கென்று கட்டி வைத்த பிம்பம் சிதைந்து போனது போல் இருந்தது. கணவனின் மேலிருந்த பிரியத்தால், அவளே தேர்ந்தெடுத்தது தான் ஸ்ரீவத்ஸன் மற்றும் ஸ்ரீநிதி என்ற பெயர்கள்.
மற்ற ஆண்களைப் போலத் தன் கணவன் இல்லை, என்று அவள் நினைத்துக் கொண்டு இருந்ததைப் பொய்யாக்கி இருந்தான் அவன். இப்போது, தனது நிலையை எண்ணி வெட்கமாக இருந்தது. அதன் பிறகு ஸ்ரீதரன் டான்ஸ் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம், தடுத்து விடும் கௌசல்யா, பிள்ளைகளுக்கு மொட்டை போட திருப்பதி சென்ற போது, தனது சலங்கைகளை உண்டியலில் போட்டு விட்டாள்.
பிள்ளைகளின் வளர்ப்பிலும் யாரையும் அனுமதிக்கவில்லை. தன்னையே கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல் இருந்த ஸ்ரீநிதிக்கு, எந்தக் கலையிலும் ஈடுபாடு வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தாள். அவளோ, அன்னைக்கும் மேலாக எல்லாக் கலைகளையும் கரைத்துக் குடித்தாள். ஒரே ஒரு வித்தியாசமாக, தந்தையைப் போலவே படிப்பிலும் சுட்டியாக இருந்தாள். மீன் குஞ்சுக்கு நீந்துவதற்குச் சொல்லித் தர வேண்டுமா என்ன?
கௌசல்யா, செய்யக் கூடாது என்று சொல்வதை எல்லாம் செய்து அவரது கோபத்தைக் கிளறினாள். வெளிப் பார்வைக்கு கோபப்பட்டாலும், உண்மையில், ஒரு தாயாக, கௌசல்யா உள்ளுக்குள் மகிழவே செய்தாள். இப்படியாக இவர்களின் வாழ்க்கை ஊர் ஊராகச் சென்று கொண்டு இருந்த போது, வத்ஸன் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த நேரம், இவர்கள் கொல்கத்தாவின் அருகில் இருந்தார்கள்.
விடுமுறைக்குக் குழந்தைகளுடன் ஊருக்கு வந்த கௌசல்யா, தம்பி மற்றும் தங்கையின் வளமான வாழ்வு கண்டு சந்தோஷம் அடைந்தார்.
தங்கையின் குழந்தை பிறந்த போது வந்தவர்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து இப்போது தான் சந்திக்கிறார்கள். ஸ்ரீதரனுக்குச் சென்னையில் நிலம் இருந்தாலும், உடனடியாக வீடு கட்டும் எண்ணத்தில் இருந்ததில்லை. அப்படிப்பட்டவர்களை, ஒரே வருடத்தில் வீட்டைக் கட்டி அங்கேயே குடியேற வைத்த பெருமை, கௌசல்யாவின் தாயையும் தங்கையையுமே சேரும்.
“நல்லா இருக்கியா மல்லிகா? உன் வீடும் தோட்டமும் சூப்பர். நல்லா மெயின்டெய்ன் பண்ணி இருக்க. தோட்டத்துக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிற?” என்று சந்தோஷம் அடைந்தவரை வழக்கம் போல உதாசீனப் படுத்தி, “எனக்கென்ன குறைச்சல்? தோட்ட வேலைக்கு தனியா ஆள் இருக்கான். உன்னை மாதிரியா நாங்க. எங்க வீட்டுக்காரர் பிஸினஸ் பண்றார். நானும் சம்பாதிக்கிறேன்” என்று தங்கை சொல்ல,
அவளைப் பெற்றவளோ, “மூத்தது மோளை இளையது காளைன்னு சும்மாவா சொன்னாங்க. கூத்தாடிப் பிழைப்பு பிழைக்கலாமான்னு கஷ்டமாத்தான் இருந்துச்சு. கூத்தாடியாவது பிழைக்கும்னு பார்த்தேன், அதுவும் இல்லைன்னு பண்ணிட்டான்” அவளது இயலாமையைச் சுட்டிக் காட்டி, எதற்குமே லாயக்கில்லை என்று பேசியதில், வீடு வந்து சேர்ந்த கௌசல்யா வாழ்வில் இரண்டாம் முறையாக தற்கொலைக்கு முயன்றாள்.
இந்தப் பேச்சுகள் வத்ஸனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. அன்னையின் அருகில் அவனும், அந்தத் தோட்டத்தை ஆச்சரியமாகப் பார்த்தபடி, நின்றிருந்தானே. ‘கூத்தாடி’ என்ற வார்த்தை அவனைப் பெரிதும் பாதித்திருந்தது.
கூடவே இதை வார்த்தையை தன் வாழ்நாளில் ஒரு நாள் உபயோகிக்க நேர்ந்ததும் நினைவில் வந்தது. கூடவே ‘நீயா பேசியது,?’ என்பது போல அதிர்ந்து பார்த்த அந்த முகமும் தோன்றி, ‘என்னை மறக்க முடியுமா உன்னால்?’ என்று சவால் விட்டது.
எங்கெங்கோ செல்லும் எண்ணங்களில் இருந்து, தன்னை உலுக்கி, தந்தையிடம் கவனத்தைச் செலுத்தினான். வத்ஸனின் முக மாறுதல்களை அறியாத ஸ்ரீதரன் தன் போக்கில் பேசிக் கொண்டே சென்றார். தந்தை கவனிக்கவில்லை என்றாலும், அவனுக்கு நேரெதிராக இருந்த தங்கை கவனித்து விட்டாள் என்பதை அந்த அண்ணன் அப்போது அறியவில்லை.
“அந்த வயசுல டைவோர்ஸ் கேட்டா, என் கிட்ட. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. ஏன் கேட்டான்னு அவளுக்கே தெரியலை. வேற என்ன தான் வழின்னு கேட்டபோது தான், எனக்கே எனக்குன்னு பணம் வேணும், பசங்க இரண்டு பேரும் என் பொறுப்பு, நீங்க தலையிடக் கூடாதுன்னு கேட்டா. இனிமேல் சேர்ந்து இருக்க மாட்டேன், சென்னைக்குப் போகணும்னு சொன்ன போது எதையும் யோசிக்காமல் ஒத்துக்கிட்டேன். எனக்குத் தெரியலை, அந்த நேரத்திலும் அவ என் கிட்ட வேற எதையோ ஐ மீன் நான் அவளுக்கு சப்போர்ட்டா ஏதாவது பேசுவேன்னு எதிர்பார்த்து இருக்கா.
ரொம்ப நேரம் என்னையே பார்த்துட்டு இருந்தா. அதுக்கு அர்த்தம் ரொம்பவே லேட்டா தான் புரிஞ்சுது. அவ என்னைக்குமே உங்க விஷயத்தில என்னை வரவிட்டதே இல்லை, உங்களுக்கு எல்லாமே பெஸ்ட் வேணும்னு பார்த்து பார்த்து செய்வா.நீங்க அவகிட்ட நல்லாவே இருப்பீங்கன்னு தான் வேலையைக் காரணம் காட்டி வராமலேயே இருந்திட்டேன். அதில இன்னும் நொந்து போய், அவ என்னை விட்டு மனசளவில ரொம்பவே தள்ளிப் போயிட்டா போல இருக்கு” என்று தனது மனதின் பாரங்களைப் பிள்ளைகளுக்குக் கடத்தினார் ஸ்ரீதரன்.
‘அவங்க மட்டுமா, நாங்களும் தான், அம்மா கிட்ட கேட்கக் கூட முடியாமல், நீங்க இப்போ வருவீங்க, அப்போ வருவீங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்து போனோம்’ என்று பிள்ளைகள் இருவரும் நினைத்துக் கொண்டார்கள். ஏற்கனவே நொந்து போய் பேசுபவரை மேலும் நோகடிக்க மனம் வரவில்லை.
“அது அப்படி கிடையாது பா. அவங்க செஞ்சது எல்லாமே அட்டென்ஷன் சீக்கிங் மாதிரி. நான் இப்படி செஞ்சா நீ என் கிட்ட வருவே பாரு, அந்த மாதிரி செஞ்சு இருக்காங்க. சின்ன வயசுலயே யூட்ரெஸ் ரிமூவ் பண்ணிட்டாலும், வயசுக்கே உண்டான மெனோபாஸ் பிரச்சினைகளும் சேர்ந்து ஷேர் செய்ய ஆளில்லாமல் இப்படி ஆகிட்டாங்க” என்றான் வத்ஸன்.
“ராதாம்மா, கிரிஜா ஆன்ட்டி எல்லாம் பார்க்கப் பார்க்க, ஒரு பக்கம் அவங்களுக்குக் கோபமா வருது, இன்னோரு பக்கம் தன்னை நினைச்சே ஏதோ இன்ஃபீரியரா ஃபீல் பண்றாங்க. அது தான் அவங்க செஞ்ச எல்லாத்துக்கும் காரணம். அவங்களே இதுக்கெல்லாம் மெடிகல் ஹெல்ப் தேடிப் போய் இருக்காங்க தெரியுமா?” என்று தந்தையிடம் கேட்டு அவரது பிபியை எகிற வைத்தவன்,
“இப்போ நாம, அம்மாவை பேஷண்ட் மாதிரி டீல் பண்ணக் முடியாது, கூடவும் கூடாது. நாம எல்லோரும் சேர்ந்து தான் அவங்களை, நார்மல் லைஃப்புக்கு கொண்டு வர ஏதாவது செய்யணும்” என்று மருத்துவராகப் பேசினான் வத்ஸன்.
“ஓகே! ஓகே! நானா? சான்ஸே இல்லை. குட்டீஸ வச்சுகிட்டு எந்த புரோகிராமை என்ஜாய் பண்ண முடியும்? அத்தையும் மாமாவும் வருவாங்க, வத்ஸனோட தான் வருவாங்க, சியர் அப். தாங்க் யூ” என்று, நிதியைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி, இவர்கள் பேசி முடிக்கக் காத்திருந்தது போல உள்ளே வந்தான் அபிமன்யு.
அடுத்த ஏழாம் நாள், காலையில் குழந்தைகளுக்குப் பேர் வைக்கும் வைபவம் முடிந்து நிதியும் குழந்தைகளும் வீடு திரும்பி இருக்க, மாலையில் மியூசிக் அகாடமியில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தான் ஸ்ரீவத்ஸன், அருகில் கௌசல்யா , அவரது இன்னோரு புறம் ஸ்ரீதரன்.
உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் வெளிப்பார்வைக்கு வேண்டா வெறுப்பாக அமர்ந்து இருந்த கௌசல்யாவின் பார்வை மேடையில் நிலை கொணடு இருந்தது. அவரது ஆர்வத்திற்கு தீனி போட மேடையில் தோன்றினாள், பார்கவி.

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -25
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.