தொட்டுத் தொடரும் -22
போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே
(*தலைவி தலைவனிடம் தான் கொண்ட விருப்பத்தைச் சொல்லுதல்)
விமான நிலைய சம்பிரதாயங்கள் முடிந்து, காத்திருப்பு அறைக்குத் தனது மூட்டை முடிச்சுகளுடன், கையில் பொம்மையுடன் நடந்தான் ஸ்ரீவத்ஸன். “வாவ்! என்னோட ஃபேவரைட் டால்” என்றவாறு அவன் கையில் இருந்த பொம்மை பிடுங்கப் பட்டது. அவன் சுதாரித்து நிமிர்வதற்குள், முதுகில் இடி போல விழுந்த ஓர் அடியில் அலறியபடி திரும்பினான்.
“ஹேய் கவி! வாட் எ சர்ப்ரைஸ்! நிஜமாவே நீ தானா? இந்த ஊருல யாருடா நம்மளை இப்படி அடிக்கிறது? கவி சென்னைல தானே இருக்கான்னு நினைச்சேன்! நீ மட்டும் தனியா வர சான்ஸ் இல்லையே? எங்கே உன்னில் பாதி?” என்று குதூகலமாக விசாரித்தான்.
கூடவே ‘இப்படியா அடிப்ப பிசாசு! முதுகெல்லாம் எரியுது எனக்கு. பாவம் என் நண்பன். உன் கிட்ட என்ன பாடு படறானோ? மரியாதையா அந்த பொம்மையை கொடு. அது குட்டி நிதிக்காக வாங்கினது” என்றான்.
அவனை முறைத்துக் கொண்டே ராகவி சுற்றிலும் தேட, “நல்ல வேளை டா. நீயாவது என்னைத் தேடறியே. ரொம்ப சந்தோஷம் டா நண்பா! என்னமோ இவ மட்டும் தான் ஃப்ரண்ட்ஷிப்ப காட்டத் தெரிஞ்சவ மாதிரி கழட்டி விட்டு வந்துட்டா. ஆனா நான் கூட வராததும் நல்லதாப் போச்சுடா. எப்படி இருந்தது உன் முதுகுல விழுந்த இடி சே அடி” என்றபடியே அருகில் வந்து அவனை அணைத்த சரண்,
அணிவகுத்து நின்ற பெட்டிகளைப் பார்த்து, “வத்ஸா! நிஜமாவே எல்லாம் உன்னோடது தானா? மச்சான் உன்னை கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கான் டா! வீட்டைக் காலி பண்ணி வச்சிருக்கேன்னு சொன்னான். சரியாத் தான் இருக்கு. சரி வா போகலாம்” என்று அவனைத் தனி விமானங்கள் இயங்கும் பகுதிக்கு அழைத்துச் செல்ல முயன்றான்.
அதற்குள் “மச்சான்! மச்சான்! வெயிட் ப்ளீஸ்!” என்றபடியே வந்தான் ஸ்ரீவத்ஸன் வீட்டு ஜர்னலிஸ்ட் மாப்பிள்ளை. “போச்சுடா” என்று வத்ஸன் முணுமுணுக்க, அதற்குள் அவனது மொத்த குடும்பமும் அருகில் வந்தது. ராகவி அவர்களைக் கண்டு ஜெர்க்காக, சரணுக்கு, அபி தங்களை அவசரமாக டெல்லி அனுப்பியதன் காரணம் விளங்கியது.
இப்போதும் அவர்கள் யாரும் பேசுவதாக இல்லை. அந்த ஜர்னலிஸ்ட் மாப்பிள்ளை தான், “உங்களை மச்சான்னு கூப்பிட்டது பிடிக்கலேன்னா ஐயாம் வெரி சாரி! பட் உங்க அப்பாயின்ட்மென்ட் எனக்கு வேணும். என் குழந்தைக்கு ஒன்னு, எனக்கு ஒன்னு” என்று படபடத்தான்.
புரியாமல் பார்த்த வத்ஸனுக்கு, ”என் குழந்தை ஹெல்த் விஷயமா டாக்டரா ஒரு கன்சல்டேஷன் வேணும்” என்றவன் “நான் ‘நியூஸ் நைன்’ சேனல்ல ஜர்னலிஸ்டா இருக்கேன். உங்க இன்டர்வியூ வேணும் எனக்கு. ஒன் ஆஃப் மை ட்ரீம்ஸ்” என்று ஏதோ வரம் வேண்டுபவன் போல நின்றான்.
சுற்றி நின்றவர்களின் முக பாவனைகளைப் பார்த்த வத்ஸனுக்கு, சித்தியின் பெண் முகத்தில் குழந்தையின் தாயாகத் தெரிந்த தவிப்பும், அதே நேரம் சித்தி மற்றும் பாட்டியின் முகத்தில் தெரிந்த அசூயையும் நன்றாகவே புரிந்தது.
“நான் உங்களுக்கு மச்சான் தானே. அப்படி நீங்களும் நினைச்சா, கண்டிப்பா அப்படியே கூப்பிடலாம் மாப்பிள்ளை. ஐ வில் பி வெரி ஹேப்பி டு ஹியர் தாட்” என்று அவர்களது சொந்தத்தை உறுதி செய்த வத்ஸன், “குழந்தை விஷயமா இவனைப் பாருங்க. ஹி இஸ் சரண், மை பெஸ்ட் ஃப்ரண்ட், ஒன் ஆஃப் தி பெஸ்ட் பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட் இன் இந்தியா, சென்னை சுஸ்ருதாவோட எம்.டி.“ என்றவன் சரணது ஒப்புதலோடு அவனது விவரங்களைப் பகிர்ந்து கொண்டான்.
“அண்ட், அபௌட் தி இன்டர்வியூ, கண்டிப்பா கொடுக்கிறேன். நாட் நௌ. ஆஃப்டர் அட்லீஸ்ட் த்ரீ மந்த்ஸ். என்னோட அம்மாவுக்காகத் தான் இந்த ட்ரிப்பே வந்திருக்கேன். ஒரு மகனா மட்டும் இல்லாம டாக்டராவும் முதல் அப்பாயின்ட்மென்ட் அவங்களுக்கு தான். நானே கான்டாக்ட் பண்றேன்” என்று தனது மொபைல் நம்பரைப் பகிர்ந்து கொண்டான்.
மருத்துவர் என்ற முறையில் வத்ஸனின் மாமா, சரண் மற்றும் ராகவியுடன் ஓரிரு வார்த்தைகள் பேச, மாமி அவனிடம் கௌசல்யா, ஸ்ரீநிதி மற்றும் அவளது குழந்தைகளை விசாரிக்க, மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
“நல்ல மனுஷங்க டா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சரணது கண்களில், வத்ஸனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த பார்கவி பட்டாள். அவ தாங்க வத்ஸனோட மாமா ரவீந்திரனின் பொண்ணு, ஜில் ஜில் ரமாமணி..
‘ஓ இந்தப் பொண்ணு இன்னும் திருந்தலையா?! நடக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி இருக்கா??’ என்று நினைத்தவன், நண்பனைப் பார்க்க, அவனோ அந்த இடத்தை விட்டு கிளம்புவதில் மும்முரமாக இருந்தான்.
‘சரிதான், சார் தான் விசுவாமித்திரர் ஆச்சே? இல்லை இல்லை.. அச்சோ அவர் பேர் ஞாபகம் வரலையே?’ என்று நினைத்தவன் பக்கத்தில் பார்க்க, தோளில் தலையால் இடித்தபடி “ம்ம். ரிஷ்யசிருங்கர்” என்று முணுமுணுத்தாள் அவன் மனைவி.
அசடு வழிய அவளைப் பார்த்தவன், யாரும் அறியாமல் அவளை அணைத்து “நீ பாதி நான் பாதி கண்ணே” என்று காதோரம் பாடினான். “அந்த பொண்ணத் தெரியுதா கவி?” என்று சத்தமில்லாமல் அவன் கேட்ட கேள்வி ராகவியை பழைய நினைவுகளைச் சிந்திக்க வைத்தது.
இவர்கள் கடைசி வருடம் மருத்துவம் படித்த நேரம். முதல் வருட மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் வரவேற்பு கொடுப்பது அந்தக் கல்லூரியின் வழக்கம். ஆட்டம் பாட்டம் என்று கல்லூரி ஒரு வாரம் களைகட்டியது. மேல் வகுப்பு மாணவர்கள் தங்கள் திறமைகளால் ஜுனியர்களை மகிழ்விக்க, பதிலுக்கு அவர்களும் தங்கள் நன்றியைத் திறமையின் மூலம் காட்டினார்கள்.
எல்லா விதமான நாட்டியங்களையும் ஜுகல்பந்தி போலக் கலந்து அற்புதமாக ஆடி, சீனியர்களைக் கவர்ந்த பார்கவி, நிகழ்ச்சிகள் முடிந்ததும் நேராக வத்ஸனிடம் வந்து நின்றாள். அவள் யாரென்று புரிந்து கொண்டவன் அமைதியாக இருக்க, சரணும் கவியும் “வெல் டன் பார்கவி! நல்லா ஆடினே” என்று மனமாரப் பாராட்டினார்கள்.
அது போதாது என்பது போல நின்றவள், “உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும் அத்தான். ஆனாலும், எனக்கு உங்களை மட்டும் தான் எப்பவும் பிடிச்சிருக்கு” என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.
“ஹேய்! நில்லு! நில்லு! நீ இப்போ சொன்னத இன்னோரு தடவை என் காது கேட்கக் கூடாது. புரிஞ்சுதா. அது தான் எல்லாருக்கும் நல்லது. அப்புறம், இப்போ நீ ஆடினியே இதெல்லாம் உங்க பாட்டிக்குத் தெரியுமா? அப்படின்னா, இப்போ வீட்டு கவுரவம் ஒன்னும் ஆகாதான்னு கௌசல்யாவோட பையன் கேட்கிறான்னு போய் கேளு” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய ஸ்ரீவத்ஸன், அவளைத் திரும்பியும் பாராது நடந்தான்.
அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவனோடு பேச அவள் முயற்சி செய்த போதெல்லாம், ஒதுங்கிச் சென்று விடுபவன், ஃபேர்வெல் அன்று நடந்த நிகழ்வுக்குப் பின் அவளை அடியோடு வெறுத்தது போல நடந்து கொண்டான். இன்று வரையிலும் கூட அவன் மனம் அவனுக்கே, ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
“கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்” என்ற பாடலை அவள் தேர்ந்தெடுத்து ஆடிய போது முதலில் எதற்கு இவ்வளவு பழைய பாடலைத் தேர்வு செய்து இருக்கிறாள் என்றே அனைவரும் நினைத்துக் கொண்டனர். பாடலைக் கவனித்து அதனை உள்வாங்கிய போதோ, எல்லோரும் இவனை ஒரு சிரிப்புடன் திரும்பிப் பார்த்தார்கள்.
எல்லோரிடமும் இவர்களது உறவு முறையைப் பற்றி, என்ன சொல்லி வைத்து இருக்கிறாள் என்பதே புரியவில்லை. சிறு பெண் என்று நினைத்து அமைதியாக இருந்தது தவறோ என்று நினைக்க ஆரம்பித்தான். இவனது இரத்தம் கொதி நிலைக்குச் சென்று கொண்டு இருந்தது.
“நேர முழுதிலுமப் பாவிதன்னையே – உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்- தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்”
என்ற வரிகளில் அவனைப் பார்த்துக் கொண்டே அவள் காட்டிய பாவனைகள், அவனை நேராக அவளது தந்தையிடம், கொண்டு நிறுத்தியது. இவன் பேச்சைக் கேட்டவருக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
‘நல்ல மருமகன் வாய்ச்சான் டா எனக்கு. தங்கச் சிலையாட்டம் பொண்ணு உன்னைப் பிடிச்சிருக்குனு சொன்னா, மாமா உன் பொண்ணக் கொடுன்னு என் கிட்ட கேட்காம, பொண்ண ஒழுங்கா இருக்கச் சொல்லுன்னு எனக்கு அட்வைஸ் பண்றான்’.
மனதில் நினைத்ததற்கு மாறாக வெளியே வேறு பேசினார் அவர். “கண்டிப்பா அவகிட்ட சொல்றேன், வத்ஸ். ஃப்யூச்சர் எப்படி இருக்கும்னு யாருக்குத் தெரியும். எதுவானாலும் அப்போ பார்க்கலாம்” என்று அவனைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார். படிக்கிற பெண்ணின் கவனம் சிதறக் காரணமாகி விட்டோமே என்று அவன் வருந்தியதை நினைத்து, ‘இவன் என் அக்காள் மகன்’ என்று மிகவும் பெருமையாகவே உணர்ந்தார் என்பது அவர் மனம் மட்டுமே அறிந்த விஷயம்.
பார்கவி தன்னையே பார்ப்பதை உணர்ந்தாலும், தன் மனத்தை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் அவளைத் திரும்பியும் பாராமல், நண்பர்களுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் வத்ஸன்.
“அப்புறம் வத்ஸ் சுமாரா எவ்ளோ செலவழிச்ச ஷாப்பிங்ல? யாராவது ஹெல்ப் செஞ்சாங்களா பேக்கிங்ல? நீயே எல்லாம் செஞ்சேன்னு சொன்னா நம்புற மாதிரி இல்லையே?” என்று கேட்டு பேச்சை ஆரம்பித்து வைத்தாள் ராகவி.
அதோடு நில்லாமல், “இந்த லக்கேஜ் எல்லாம் நம்ம ஊரு ஃப்ளைட்ஸ் தாங்காதுன்னு தான் நாங்க தனியா ஃப்ளைட் பிடிச்சு இருக்கோம் பாரு” என்று அவனை விடாது சீண்டினாள்.
நண்பர்கள் தனக்காக வந்ததில் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டு இருந்தவன், அவளது கேலிகளை சந்தோஷமாகவே ஏற்றான். எப்போதும் போல ஒரு புன்னகையைப் பதிலாகக் கொடுத்த வத்ஸன், “சரண் & கவி, ஊருக்குப் போறதுக்கு முன்னே எனக்கு சில விஷயங்கள் தெரியணும். அம்மாவோட ட்ரீட்மெண்ட்டுக்கு அது கண்டிப்பா தேவைப்படும்” என்று அவளது கேள்வியைக் கண்டு கொள்ளாமல் வேறு பேசினான்.
“என் கேள்விக்கு பதில் எங்க தம்பி” என்று விளையாட்டாக ஆரம்பித்த ராகவி, தாயின் ட்ரீட்மெண்ட்டுக்கு என்று அவன் பேசியதில் சீரியஸ் மோடுக்குப் போனாள்.
“சொல்லு வத்ஸ், என்ன தெரியணும் உனக்கு. எங்களுக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சொல்றோம்” என்று இருவரும் உறுதி அளிக்க, ஸ்ரீவத்ஸன் அடுத்து கேட்ட கேள்வியை இருவரும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது.
“ஓ! உங்க இரண்டு பேருக்கும் நான் எதைப் பத்தி கேட்க வரேன்னு தெரியாது. நம்பிட்டேன்” என்று நக்கலாக உரைத்தவன், “வேறென்ன கேட்டுடப் போறேன். நிதியோட லைஃப்ல என்ன நடந்தது? இப்போ என்ன தான் நடக்கிறது? இது தான்.. கவிக்கு தெரியலைன்னாலும், சரண் உனக்கும் ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லாதே. நம்பறதுக்கு கண்டிப்பா நான் பழைய வத்ஸன் இல்லை” என்றவனின் முன்பு, இருவரும் தலைகுனிந்து அமர்ந்து இருந்தார்கள்.
சற்று நேரம் மூவருக்கிடையே கனத்த அமைதி நிலவியது. “சொல்லக்கூடாதுன்னு இல்ல வத்ஸ், யாருக்கும் தெரியறதுல அபிக்கு இஷ்டமில்லை. அந்த யாருக்கும்னு, சொல்றது உன்னையும் சேர்த்து தான். அந்த விஷயங்களை எல்லாம் உன்னால தாங்க முடியாதுடா, ப்ளீஸ் விட்டுடேன். இதெல்லாம் தெரிஞ்சா தான் உங்க அம்மாவோட மனசு சரியாகும்னு சொன்னா, பரவாயில்லை அது சரியாகவே வேண்டாம்னுதான் அவன் சொல்லுவான்”
இத்தகைய வார்த்தைகளே தங்கை பட்ட கஷ்டங்களைப் பற்றிய விபரீத கற்பனைகளை விதைக்க, “நோ சரண், எனக்குத் தெரிஞ்சு தான் ஆகணும். அபி கிட்டயே கேட்கலாம். பட், டைம் ரொம்பவே கம்மியா இருக்கிறது மாதிரி ஒரு ஃபீல் எனக்கு. ஏன்னு புரியலை. அம்மாவை இம்மீடியட்டா கவனிக்கலேன்னா, எங்களுக்கு அம்மா இல்லாமலே போயிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு டா” என்று தனது மனதில் இருந்த பயத்தைத் தெளிவாகவே உரைத்தான் ஸ்ரீவத்ஸன்.
“ஹேய்! என்ன நீ இப்படி எல்லாம் பேசற? ஆன்ட்டிக்கு ஒன்னும் ஆகாது. இவனுங்க சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் சொல்றேன். அதுவே பெரிய கொடுமை, அதுக்கு மேல எதுவும் தெரிஞ்சக்கணும்னு துருவக் கூடாது” என்ற ராகவி
தொடர்ந்து “நான் சொல்ல போறதெல்லாம் பழைய விஷயம். ரெண்டு நாளைக்கு முன்னே சுடச் சுட நடந்த ஒரு விஷயமும் இருக்கு. அதை உன் பிரண்டு கிட்டயே கேளு, ஏன்னா எங்க யாருக்கும் விவரம் தெரியாது. எங்க கேட்டுடுவோமோன்னு பயந்து உங்க வீட்டு மாப்பிள்ளை கூட மாமியார் வீட்டுல, அதுவும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அரெஸ்ட் பண்ண பிளான் பண்ண மாமியார் வீட்டுல போய் உட்கார்ந்துட்டு இருக்கான்” என்றாள்.
எதுவும் செய்ய முடியாத அவளது இயலாமை கோபமாக உருவெடுத்து, அவளது வார்த்தைகளில் அப்பட்டமாக வெளிப்பட்டதில் ஸ்ரீவத்ஸன் திணறிப் போனான். “கவி, சாரி…நான்... எங்க..அம்மா” என்று அவன் வார்த்தைகள் வராமல் தடுமாறியதில், தனது மடத்தனத்தை உணர்ந்த ராகவி சரணைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“மேடம் அப்படித்தான், அவங்க உடன் பிறப்பு முன்னே மாதிரி பேசறதில்லைன்னு, திடீர் திடீர்னு இப்படி ஆயிடறாங்க. உன் ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள்ல நல்ல சைக்கியாட்ரிட்ஸ்ட் இருந்தா சொல்லு, ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிடலாம்” என்று கேட்டுக் கண்ணடித்தான் சரண்.
அவனைச் செல்லமாக முறைத்த வத்ஸன், பதில் சொல்வதற்குள், அவனது அலைபேசி விடாது ஒலித்தது. “அபிமன்யு அழைக்கிறான்” என்ற செய்தியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க ஸ்ரீவத்ஸன் அழைப்பை ஏற்றான்.
“அண்ணா! வந்துட்டியா?” என்ற ஸ்ரீநிதியின் குரலில் தன்னிலை அடைந்தவன், விமானம் சென்னையில் இறங்கிவிட்டதை உணர்ந்தான்.
சென்னை விமான நிலையத்தின் அருகில் இருந்த ரேடிஸன் ஹோட்டலின் நூற்று ஏழாம் எண் அறை, நிசப்தமாக இருந்தது. அனைவரது வாய் தான் பேசவில்லையே தவிர, இதயங்கள் துடிக்கும் ஓசை அடுத்தவருக்கு நன்றாகவே கேட்டது.
தமையனின் தோளில் சாய்ந்து கதறி ஓய்ந்து போய் இருந்தாள் ஸ்ரீநிதி. அவளது கண்ணீர் சுரப்பிகள் வற்றிப் போய் இருக்க, ஸ்ரீவத்ஸனின் கண்கள் உடைப்பெடுத்துப் பெருகின, அவனது கைகளோ தங்கையின் தலையை வருடிக் கொண்டே இருந்தன.
எதற்கெடுத்தாலும் அழுது விடும் ராகவிக்கு அழத் தோன்றவே இல்லை. சரணது கைகளை ஒடித்து விடுபவள் போல் இறுகப் பற்றிக் கொண்டு சிலை போல அமர்ந்து இருந்தாள்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் போல அபிமன்யு அமைதியாக அமர்ந்து இருந்தான். மறுபடி மறுபடி ஆறிப்போன ரணத்தைக் கீறி வேதனையை அனுபவிப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை. இதுவே கடைசித் தடவை என்று அவன் மனைவி கேட்டதால், குடும்பத்தினரிடம் மறைத்து விட்டோமே என்று அவளது குற்றவுணர்வு கொஞ்சம் குறையும் என்றே அவன் ஒப்புக் கொண்டான்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஒரு முறை லண்டன் வந்த ஸ்ரீராம் நண்பர்களுடன் பார்ட்டி என்று நிதியை அழைத்தான், இஷ்டமில்லாவிட்டாலும் பேசிப் பழக வேண்டும் என்று சென்றவளுக்கு அவர்களின் கலாச்சாரம் பிடிக்கவே இல்லை.
“ஏன் அபி? உன்னை எல்லாம் பார்த்தா மாப்பிள்ளை மாதிரி எங்க அம்மாவுக்கு தெரியலையா? எங்க இருந்து தான் பிடிச்சாங்களோ?” என்று அபிமன்யுவிடம் புலம்பினாள். அவள் லண்டனில் இருந்த வரையிலும் அதுவே வாடிக்கையானது. இந்நிலையில் படிப்பு நிறைவடைந்து ஸ்ரீநிதி ஊர் திரும்பி இருக்க, திருமணத்திற்கு. ஒரு மாதம் முன்பே விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா வந்த ஸ்ரீராம் அவளை அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்தான்.
ஹோட்டலிலும் அறைகளுக்குள் அழைத்தது அவளுக்கு பிடித்தம் இல்லாததால் அப்போது இந்தியா வந்து விட்ட அபிமன்யுவிடம் தனது சந்தேகத்தைச் சொல்லி விட்டாள். அதுவும் பல நேரங்களில் அந்த அறைக்குள் அவனது நண்பர்களும் இருந்தது அவளுக்கு ஏதோ தப்பாகவே தோன்றியது.
சில நேரங்களில் இவள் செல்ல மறுக்க, கௌசல்யா தான் “பழைய காலம் போலக் கட்டுப்பெட்டியாக இருக்காதே. மாப்பிள்ளை கூட ஃப்ரீயா பேசிப் பழகு” என்று வற்புறுத்தி பழக (?) அனுப்பி வைத்தார். திருமணத்திற்குப் பத்து நாட்கள் இருக்கையில் பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று அழைத்துச் சென்றவன், நண்பர்களுக்கு விருந்தாக அவளையே படைக்கச் சொன்னபோது தான், அவனைப் பற்றிய தனது சந்தேகங்கள் உண்மை என்பதையே உணர்ந்தாள் அந்தப் பேதை. அபிமன்யுவும், சரணும் கமிஷனர் மூலம் அவர்களைப் பின்தொடர்ந்து இருந்ததால் அவளைக் காப்பாற்றி அழைத்து வந்தனர்.
காலம் கடந்திருக்கவில்லை என்றாலும் மிகுந்த போராட்டத்தின் பின்னரே அவளை மீட்க முடிந்தது. சம்பவம் நடந்து பல மாதங்கள் வரை நிதியின் ஈமெயிலில் வந்த ஆபாசமான படங்களைத் தாங்கிய கடிதங்களும், அவளை வேறு விதமாகச் சித்தரித்து சில தளங்களில் அவளது படங்களுடன் வந்த விளம்பரங்களும், அபிமன்யுவால் சரியான முறையில் கையாளப் பட்டு கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உதவியுடன் எல்லாம் சரிசெய்யப் பட்டாலும், ஸ்ரீநிதி பழைய நிலைக்கு வர இரு முழு வருடங்கள் ஆனது. மனம் மட்டும் அல்லாமல் உடல் நிலையும் அவளது போராட்டத்தில் பாதிக்கப்பட்டு இருந்தது. பெண்களுக்கேயான வரமான இயற்கையாகக் கருத்தரிக்கும் பாக்கியத்தை அவள் இழந்திருந்தாள் அவள்.
ஸ்ரீநிதி மட்டும் தடுத்திராவிட்டால் அந்த ஸ்ரீராமை அபிமன்யு, அவன் கையால் ஏதாவது செய்து இருப்பான். தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை தனக்கு மட்டும் அல்லாமல் தனது நண்பர்களுக்கும் மனைவியாக்க நினைத்த அவனை ராவணனுடன் கூட ஒப்பிட அவனுக்கு இஷ்டமில்லை.
ராவணன் கூட கடைசி வரை சீதையின் விருப்பத்தை வேண்டி நின்றானே, அந்த ராமனின் பெயரை வைத்துக் கொண்டு அந்த மனிதன் செய்த காரியங்கள்.. ஞாபக அடுக்குகளில் வலம் வந்தன. “பாஸ்டர்ட்” என்று முணுமுணுத்தபடி சுவற்றில் ஓங்கிக் குத்தினான். தத்தம் நினைவுகளில் இருந்து மீண்ட அனைவரும் “ஹேய்! அபி! என்ன பண்ற?” என்றபடி அவன் அருகில் வந்து விட்டனர்.
“ம்ச்! விடுங்கடா! பழசக் கிளறாதேன்னு சொன்னா யாரு கேட்கிறா? எதுவும் பண்ண முடியலையேன்னு என் பங்குக்கு ஃபீல் பண்றேன். இதானே என்னால முடிஞ்சது.” என்றான், ஸ்ரீ ஸ்கொயரைப் பார்த்துக் கொண்டே.
ஸ்ரீதியை அபிமன்யுவுடன் இணைத்து பெரிய கதை எழுதி, நிச்சயித்த திருமணத்தை ஸ்ரீராம் வீட்டார் நிறுத்தி விட்டனர். அதன் விளைவு, உடனே இருவரது திருமணமும் நடந்தாக வேண்டும் என்று சில நிபந்தனைகளை விதித்தார் கௌசல்யா.

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -22
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.