தொட்டுத் தொடரும் -12
ஸ்ரீவத்ஸன் மருத்துவமனையில் ஏழு நாட்கள் தங்கும்படி ஆயிற்று. அவன் தனியறையில் இருந்தவரை அவனது நண்பர்கள் அவனைச் சுற்றிலும் இருந்து அவனது மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவினார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பேச்சே எழாமல் பார்த்துக் கொண்டார்கள். தாயின் பார்வை தன்னை தொடர்வதை அறிந்தாலும் ஸ்ரீவத்ஸனுக்கு அவரிடம் பேச பயமாக இருந்தது. கௌசல்யாவும் அவன் உறங்கும் போது அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, விழித்துக் கொண்டிருந்த போது அவன் அருகில் கூட வரவில்லை, எதுவும் பேசவும் முயலவில்லை.
தந்தை வந்து விட்டார், தனது படிப்புக்கு ஏதாவது வழி செய்வார் என்று நினைத்தாலும், மறுபுறம் மருத்துவமனையில் அமைதியாக இருக்கும் தாய் வீட்டிற்கு சென்ற உடன் என்ன செய்வாரோ என்ற பயம் மனதை விட்டு அகல மறுத்தது. அவனது பயத்திற்கு அவசியமே இல்லாமல் அவனது தந்தை ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தார்.
ஸ்ரீவத்ஸன் அறைக்கு மாற்றப்பட்ட உடனேயே மகனது உடல்நிலை பற்றிய கவலை அகன்றதில், அவனது மன நிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தன்னால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீதரன் ஒரு முடிவுக்கு வந்தவராய் கிருஷ்ணன் மற்றும் ராகவனிடம் மகனது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றவர், அடுத்து அவன் வீடு திரும்பும் போது தான் மருத்துவமனைக்கு வந்தார்.
நான்கு நாட்களாக ஸ்ரீதரன் மருத்துவமனைக்கு வராத காரணம் வீட்டிற்கு சென்றவுடன் பிடிபட்டது . காஞ்சிபுரத்தில் தனியாக வசித்துக் கொண்டிருந்த அவரது தாய் தந்தையரை நிரந்தரமாகத் தனது வீட்டில் குடியேற்றியிருந்தார்.
இயல்பாகவே பேரன் பேத்தியின் மேல் பிரியமாக இருப்பவர்கள். அவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், சென்னைக்கு மிக அருகிலேயே இருந்தாலும் கௌசல்யாவின் குணம் காரணமாக ஒதுங்கியே இருந்தார்கள்.
தற்போதைய வீட்டு சூழ்நிலையாலும், தன்னால் அருகில் இருக்க முடியாது என்பதாலும், தாய் தந்தையரிடம் பேசி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் ஸ்ரீதரன். அவர்களைப் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தாத்தா பாட்டியை கட்டிக்கொண்ட பிள்ளைகளை கண்டவுடன், ஸ்ரீதரன் தான் எடுத்த முடிவு சரியானதே என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
வீட்டுப் பெரியவர்களாக இருந்து தனது பெற்றோர் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களையும் பேச வைத்து அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதிலேயே திருப்தி அடைந்தவர், மனைவியைப் பற்றி சற்றும் யோசிக்கவே இல்லை, மனைவியைக் கண்டுகொள்ளவே இல்லை என்பதே சரியாக இருக்கும். அதன் பிறகு மகனைப் பற்றிய மிகப்பெரிய முடிவு எடுத்த போதும் மனைவியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
கடந்தகால நினைவுகளில் ஆழ்ந்து விட்ட ராகவியை, "கவி நீ என்ன யோசனையில் இருக்க. நான் கூப்பிடறது காதுல விழுந்ததா இல்லையா" என்ற தாயின் குரல் நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது.
"கவி மாப்பிள்ளை கிட்ட அபி விஷயத்தை பேசினியா இல்லையா" என்ற தாய்க்கு, "உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலம்மா. சரண், அபிமன்யு விஷயத்தில வாய்க்கு பெரிய ஜிப் போட்டுப்பார். சொல்லித்தான் ஆகணும்னு சொன்னா, என்னை நம்பி அவன் சொல்றான். அதுக்கு நான் உண்மையா இருக்கணும்னு டயலாக் பேசுவார்" என்று பதில் சொன்னாள் ராகவி. "என்ன விஷயம்? நான் என்ன டயலாக் பேசுவேன் என்று சொல்லிட்டு இருக்க?" என்று கேட்டபடி வந்தான் சரண்.
அதுவரை மரியாதை பன்மையில் பேசிக் கொண்டிருந்தவள் சரணைக் கண்டதும் எப்போதும் உள்ள பழக்கமாக "ஹேய், நீ என்ன இந்த நேரத்தில வந்திருக்க? சாயங்காலம் தானே வரேன்னு சொன்ன?" என்றாள். சரணின் நமட்டுச் சிரிப்பை கண்ட பின்பே, பக்கத்தில் ராதாவும் இருப்பது ஞாபகம் வந்தது. நாக்கை கடித்துக் கொண்டு பரிதாபமாகப் பார்த்தவளை "இட்ஸ் டூ லேட் மேடம். ராதாம்மாக்கு நல்லாவே காது கேட்கும்" என்று கேலியாக சிரித்தவன், "ராதாம்மா இதை ஞாபகம் வச்சிட்டு அப்புறமா உங்க அட்வைஸ் மழையை ஸ்டார்ட் பண்ணுங்க. இப்போ என்ன கவனிங்க. எனக்கு பசியோ பசி. மேடம் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலையே, அப்புறம் எனக்கு எதுவும் மிஞ்சாது" என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
மனைவியை மாட்டி விட்டவன் அப்போதைக்கு அவளைக் காப்பாற்றவும் செய்ததைக் கண்ட ராதா புன்முறுவலுடன் "இன்னிக்கு எல்லாமே உனக்கு பிடித்த ஐடம்ஸ் தான், உட்காரு சாப்பிடலாம்" என்றார். "இவங்க மட்டும் எப்போதும் போல வா, போன்னு பேசுவாங்களாம், ராதாம்மான்னு கொஞ்சிப்பாங்களாம், நான் மட்டும் புது ரூல்ஸ் ஃபாலோ பண்ணனுமா?" என்று முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தாள் ராகவி.
"ராதாம்மா இங்கே ஏதோ கருகிற வாசனை வரல. அடுப்பை ஆஃப் பண்ண மறந்துட்டீங்களா என்ன?" என்று கேட்டவன், தொடையில் பலமாகக் கிள்ளு வாங்கியதில் "ஆஆஆஆ! வலிக்குதுடி பிசாசு" என்று அலறினான்.
மறுகணம் சீரியஸ் மூடுக்கு மாறியவன் "சீக்கிரம் சாப்பிடு கவி, ராதாம்மா நீங்களும் தான், மாமா எங்க கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. பசங்க தூங்குறாங்க தானே. இந்த நேரத்தில் தான் பேச முடியும். சீக்கிரம் சாப்பிட்டு வாங்க" என்று அவசரப் படுத்தியவனைப் பேசுவற்கு வாய்ப்பே இல்லாமல் செய்தது, வீட்டுத் தொலைபேசியில் வந்த செய்தி. அபிமன்யுவின் மீது அவனது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு, அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து வந்த அழைப்பு அது. இன்று மாலைக்குள் நேரில் வராவிட்டால் கைது செய்ய நேரிடலாம் என்றும் தெரிவித்தது அந்த அழைப்பு.
ஆரம்பகட்ட அதிர்ச்சி நீங்காமல் அனைவரும் அமர்ந்து இருக்க, மனதுக்குள் ஸ்ரீநிதிக்கு நன்றி சொன்னான் சரண். ஸ்ரீநிதியின் அழைப்புக்குப் பின், அலுவலகத்தில் பிரச்சினை என்றால் அபிமன்யு சமாளித்துக் கொள்வான், வீட்டில் உள்ளவர்களுக்குத் தான் துணை தேவை என்று அவசரமாக வந்து இருந்தான். மூளை மரத்து விட்டதோ என்பது போல் அனைவரும் அமர்ந்திருக்க, சற்று நிதானம் அடைந்த கிருஷ்ணன், மகனிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறி உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
தன் முன்னே நின்று கொண்டிருந்த அனைத்து துறை மேலாளர்களையும் கண்களில் கேள்வியுடன் நோக்கினான் அபிமன்யு. "ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்" என்றவன், அனைவரது முகமும் தெளிவின்றிக் காணப்பட்டதைக் கண்டு "வாட் ஹேப்பன்ட் கைஸ்? எல்லாரும் ஒன்னா வந்திருக்கீங்க? இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஜிஎம் இன்டர்வியூன்னு பிளான் பண்ணி இருக்கோம்" என்றவனின் கேள்விக்கு அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனரே தவிர யாரும் பதில் தரவில்லை. சில நிமிடங்கள் கடக்க, நீ தான் பதில் சொல்ல வேண்டும் என்பது போல் மகேஷைப் பார்த்தவன், வந்த பதிலில் குழப்பமானான்.
அதன் சாராம்சம் இதுதான் 'தொழிற்சாலையின் தற்போதைய நிர்வாகம் ஒற்றுமையாக, அனைவரது நன்மதிப்பையும் பெற்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதில் ஒருவருக்கு பதவி உயர்வு என்பது அதில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் , நேரிடக் கூடும் என்பதாலும் பொது மேலாளர் பதவியை மறு பரிசீலனை செய்ய வேண்டும், குறைந்தது சில காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’ என்பதே அனைவரது கோரிக்கையாக இருந்தது.
அபிமன்யுவிற்கு ஆயாசமாக இருந்தது, எத்தனை பிரச்சனைகளை தான் அவன் சமாளிப்பான்? சாதாரணமாக யாரிடமும் வார்த்தைகளில் கூட கடுமையை காட்டாதவன் இன்று வெளிப்படையாகக் கோபத்தைக் காட்டினான். "திடீர்னு என்ன ஆச்சு மகேஷ்? காலைல நான் லெட்டர்ஸ் கொடுக்கும்போது கூட ஒன்னும் சொல்லலையே. எல்லாரும் ஓகே சொன்ன அப்புறம் தானே முடிவு எடுத்தோம்? இப்போ என்ன ஆச்சு? எப்போ இருந்து இந்த திடீர் ஞானோதயம்? யாருடைய ஐடியா இது? எனக்கு ஆக்சுவல் ரீசன் தெரிஞ்சாகணும். இதுக்காக எவ்வளவு வொர்க் பண்ணி இருக்கேன் தெரியுமா? நான் ஒருத்தனே எவ்வளவு பார்க்கிறது? கம்பெனி வளரணும்னு நெனச்சா மட்டும் போதாது. அதுக்கான மேன் பவர் கண்டிப்பா வேணும். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?" கோபத்தில் வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன.
பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் சொல்ல முடியாத சூழ்நிலையை வெறுத்த படி அனைவரும் மௌனத்தையே கடைப்பிடித்தனர். அறையில் நிலவிய ஆழ்ந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக மேசையின் மேலிருந்த அலைபேசி அதிர்ந்து அழைப்பு வந்ததைக் காட்டியது. அழைத்தது சரண் என்று தெரிந்ததும் அதைத் துண்டித்து விட்டு, பதில் சொல்லாமல் உங்களை விடப் போவதில்லை என்பது போல் தன் முன்னே இருந்தவர்களை பார்த்தான்.
தொடர்ந்துவந்த அலைபேசியின் அதிர்வலைகள் பேசியே தீரவேண்டும் என்பதை உணர்த்த, மகேஷ் முன்னால் வந்து "சார்! எதுவானாலும் நாங்க எல்லாரும் உங்க கூடவே இருக்கோம். ப்ளீஸ்! இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப் போடுங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது கம்பெனிக்கும் நல்லது. இதுக்கு மேல வெளிப்படையா விஷயத்தைச் சொல்ல முடியாத சிச்சுவேஷன்ல இருக்கோம் சார். உங்களுக்கு காரணம் தெரியும்னு நம்புறேன். எக்ஸ்யூஸ் ஆல் ஆஃப் அஸ் ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு அனைவருடனும் வெளியேறினார்.
தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவனின் மனம் மிகவும் சோர்வுற்று இருந்தது. அலைபேசியை வைப்ரேட்டரில் போடும் போதே வாட்ஸ்அப்பில் கண்ட நீல நிறக் கோடுகள், சரணின் அழைப்புக்கு ஸ்ரீநிதி தான் காரணமாக இருக்க கூடும் என்பதைத் தெளிவாக உணர்த்தியது. அதனாலேயே அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன என்பதையும் உணர்ந்தே இருந்தான்.
ஒரு காபியை குடித்து உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்றிக் கொண்டவன், சரணுக்கு அழைக்க அவனோ ஸ்ரீநிதி அழைத்த விவரத்தைக் கூறி, எதுவாக இருந்தாலும் பார்துக்கொள்ள்லாம் என்று சமாதானப் படுத்தினான்..
அவளும் குழந்தைகளும் உறங்கும் நேரம் என்பதை உணர்ந்தாலும், ஸ்ரீநிதியை அழைத்துப் பேசி விடலாம் என்று முடிவு செய்து அவளை அழைக்க அவளது எண்ணோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. சரணிடம் பேசியதில் சமாதானம் அடைந்து உறங்கி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டவன், தானாக அழைக்கும் வரை அவள் அழைக்க வேண்டாம் என்பதையும் சொல்லி, அவளுக்கு விரிவானதொரு செய்தியை அனுப்பி வைத்தான்.
ஆறு மாதங்களில், முதல்முறையாக கௌசல்யாவைப் பற்றிய விஷயத்தை யாரிடமும் விரிவாகச் சொல்லாமல் விட்டது தவறு என்று எண்ணி வருந்தினான். தொழிற்சலையிலும் குழப்பம் ஏற்படுத்துவார் என்று அவன் கனவிலும் நினைத்தில்லை. கௌசல்யாவின் நடவடிக்கைகள் அவர் ஒருபோதும் தன் இயல்பில் மாறவே இல்லை என்பதைப் பறை சாற்றி, அவரது மனநலனில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கியது. இன்றைய அவரது பேச்சு சீக்கிரமே அதைத் தெளிவு படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. ஸ்ரீதரனும் அவரின் பெற்றோரும் ஊரில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார் என்பதை சற்றும் எதிர்பாராதவன், இன்று காலை அவருடன் பேசிய பிறகு, ஸ்ரீநிதிக்கு குறிப்பு கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி வைத்திருந்தான்.
ஸ்ரீநிதி இயல்பிலேயே தெளிவாக யோசிப்பவள் என்றாலும், பிரசவம் பற்றி கொஞ்சம் பயம் இருந்தது. அதோடு சேர்த்து இந்தக் கவலையையும் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். இன்னும் சில நாட்களில் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், அவள் தாயுடன் மனஸ்தாபம் கொள்ள வேண்டாம் என்ற அபியின் நினைப்பில் தவறேதும் இல்லையே.
ஏதேதோ குழப்பங்களுடன் காரை ஓட்டிக்கொண்டு இருந்தாலும் அவனது கைகள் பழக்க தோஷத்தில் காரை வீடு கொண்டு சேர்த்தன. சரண், ராகவி இருவரின் காருமே ஏனோதானோ என்று நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து புன்னகைத்தான். 'இந்த விஷயத்துல மேட் ஃபார் ஈச் அதர் தான். ஒன்னாவது ஒழுங்கா பார்க் பண்ணியிருக்கா பாரு' என்று நினைத்துக் கொண்டு சிரித்தவன் காதில் அவர்களின் கோரஸ் பதிலும் ஒலிப்பது போல் இருந்தது 'எல்லாரும் உன்னை மாதிரியே ரூல்ஸ் ரங்கசாமியாவே இருக்க முடியாது பிரதர்/மாப்பிள்ளை உனக்குன்னு வாய்ச்சதும் அதே மாதிரி இருக்குல்ல அதை நினைச்சு சந்தோஷப்படு. நாங்க இப்படி தான் இருப்போம்'

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.