• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 9

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் 9

“அத்த, குட்டி பேபி பாடு(ரு). குட்டி கை, குட்டி கால் பாடு(ரு)”

அண்ணி மீராவுக்கு முந்தைய நாள் இரவு குழந்தை பிறந்திருக்க, வீடியோவில் குழந்தையைப் பார்த்த சாம்பவியிடம், தங்கைப் பாப்பாவைக் காட்டிப் பேசினான் ஆதி.

“ஆதிக்கு பேபிய புடிச்சிருக்கா?”

பலமாகத் தலையை ஆட்டினான்.

“பேபி என்ன சொல்றா?”

“பேபிலாம் பேசாது” என்றவன், ரகசியம் பேசுவதுபோல் கையால் ஒருபுறமாக வாயை மூடிக்கொண்டு “பெட்லயே சுஸ்ஸு போறா, பேட் கேர்ல்” என்றதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு சாம்பவி வாய்விட்டுச் சிரித்தாள்.

திரையில் வந்த சூர்யா “லட்டுக்கு நல்ல பேர் சொல்லு சாம்”

“சொல்றேன், ஆனா லட்டுவே சூப்பரா இருக்குண்ணா. அண்ணிட்ட குடு, பேசறேன்”

சூர்யா ஒரு முறை அறையைச் சுற்றிக் காட்ட, மனோஜும், தேவாவும் தெரிந்தனர். மீராவிடம் பேசியவள், பொதுவாக எல்லோருக்கும் கையாட்டினாள்.

மீராவின் அம்மா பரிதாபப் பார்வையுடன் “நல்லா இருக்கியாம்மா?” என்றார்.

தேவாவின் மகனைக் கையில் வைத்திருந்த சகுந்தலா “பதினாறாம் நாள் பேர் வைக்கறதுக்கு வர்றியா?”

“புரொபேஷன் டயம்மா. லீவு கிடைக்காது. அவ்வளவு தூரம் வரணும்னா, கொறஞ்சது ஒரு வாரமாவது வேண்டாமா?”

“என்னவோ போ, எல்லாரும் இங்க இருக்கோம். சொல்ல சொல்ல கேக்காம நீ மட்டும் எங்கயோ போய் ஒரு காட்டுல உக்காந்துருக்க. வரனும் அமைய மாட்டேங்குது. என்னத்தைச் சொல்ல?”

‘ஒரு பெங்காலி வரன் இரும்பு வளையலோட ரெடியா இருக்கான், பரவாயில்லையா?’

மொபைலை வாங்கிய சூர்யா “டேக் கேர் சாம், அப்புறம் பேசலாம்” என்று காலை கட் செய்து, அம்மாவை முறைத்தான்.

வீட்டில் இருந்த தந்தைக்குத் தனியே அழைத்துப் பேசினாள். நீலகண்டன் இப்போதெல்லாம் பொதுவாக விசாரிப்பதுடன் சரி.
அம்மாவின் புலம்பலுக்கும், அப்பாவின் ரத்தினச்சுருக்கமான ஊரையாடலுக்கும் காரணம் குற்றவுணர்வே என்று சாம்பவிக்குப் புரிந்தாலும், தவறு செய்த மகளைச் சீராட்டி, அவள் குழந்தையைக் கொண்டாடுபவர்கள், தன்னிடமிருந்து விலகி நிற்பதை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தது.

சனிக்கிழமை காலையாதலால், சோம்பலாக இருக்க, மீண்டும் ரஜாய்க்குள் புகுந்து கண் அசந்தவளை அழைத்தான் மன்மத ராவ்.

‘மனுஷன் தூங்கவே மாட்டாரா?’

“சாம்பவி, வெளிய போகலாம், வர்றியா?”

“இன்னைக்கா, எங்க ஸார்?”

“டிக்பாயோட மிக முக்கியமான இடத்துக்கு”

ஒரு கணம் படுக்கையிலேயே நாளைக் கழிக்க விழைந்த சாம்பவி, பின் “வரேன் ஸார்”

“திரும்பி வர ஃபுல் டே ஆயிடும். லஞ்ச் ஈஸ் ஆன் மீ”

“ஓகே ஸார்”

“சாம்பவி…”

“ஸார்?”

“ம்ப்ச், நத்திங். ஸீ யூ அட் நைன்”

‘என்ன சொல்ல வந்தார்?’ என்ற கேள்வியோடீ தயாரானாள்.

ஜனவரி முதல் வாரமாதலால், பனிப்புகையே விலகாமல் கடுங்குளிர் நிலவியது. காலனி இன்னும் உறக்கம் கலையாதிருக்க, சொன்னபடியே சரியாய் ஒன்பது மணிக்கு வந்தான்.

ஆளில்லாத சாலைகளில் புகைமூட்டத்தினூடே பயணித்தனர். சாலையின் இருபுறமும் தேயிலையின் ஆதிக்கம்.

விளம்பரங்களில் மட்டுமே பார்த்திருந்த டாடா, லிப்டன், டங்கன், ப்ரூக் பாண்ட் போன்ற கம்பெனிகளின் டீ எஸ்டேட்டுகளின் பெயர்ப் பலகைகளை ஆங்கங்கே காண முடிந்தது.

குஜராத்தில் இந்த அளவு குளிர் கிடையாது. கார் கண்ணாடியை இறக்கி, வாயைக் குவித்து ஊதி, சிகரெட் இல்லாமலே புகை வருவதை ரசித்தவளைப் பார்த்த மன்மத ராவ் உதடுகளை மடித்து தாடிக்குள் சிரித்தான்.

குளிரும் பனியும் காருக்குள் சூழ, சிலிர்க்கவும், சட்டென சாம்பவியின் கையில் இரண்டு விரல் நுனிகளால் தட்ட, திரும்பியவளிடம் “ஹேய், என்ன, குளிருது, கிளாஸை ஏத்து”

சிறு குழந்தைபோல் நடந்ததில் முகம் சிவந்துவிட “ஸாரி ஸார்”

“எந்துக்கு?”

நல்ல ராயல் நீலத்தில் காதைப் பொத்தியபடி தொப்பி (watch cap) அணிந்திருந்தவனின் வசீகரித்த புன்னகையை எதிரொளித்தாள்.

“ஏமிரா, ஈ ரோஜு மீரு சால சந்தோஷங்கா உன்னாரு?”

(என்ன, இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல)

வார்த்தைக்கு வார்த்தை புரியாவிட்டாலும், அவன் கேள்வியின் பொருள் புரிய “என் அண்ணாக்கு பொண்ணு பொறந்திருக்கு”

“வாவ், சாம்பவி அத்தைகாரு”

“ஸார்…”

“அண்ணாக்கு இது ரெண்டாவது குழந்தை. ஆதின்னு மூணு வயசுல ஒரு பையன் இருக்கான்”

“ஓ! தட்’ஸ் நைஸ்”

“உனக்கு ஸ்போர்ட்ஸ் புடிக்குமா சாம்பவி?”

“தீவிரமா எல்லாம் கிடையாது. ஸ்கூல்ல கேம்ஸ் பீரியட்ல அவங்க சொன்னதை விளையாடினதோட சரி. காலேஜ் ஹாஸ்டல்ல நிறைய ஷட்டில் விளையாடுவேன்”

“ஃபேர் இனஃப்”

இருபது நிமிடங்களில் இலக்கை அடைந்தனர். அவர்கள் வந்து நின்ற இடத்தைப் பார்த்ததுமே, சாம்பவிக்கு மன்மத ராவின் ஸ்போர்ட்ஸ் குறித்த கேள்விக்கும், வீட்டுக்கு வந்தவுடன் ஜீன்ஸ், ஸ்வெட்டர் சகிதம் நின்ற தன்னைக் கண்டதும் சற்றே நிம்மதியடைந்து ஊஃப் என்று ஊதியதற்குமான பொருள் புரிந்தது.

அவர்கள் வந்திருந்தது, அஸ்ஸாமின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தனித்துவம் மிக்க டிக்பாய் கோல்ஃப் கிளப்பிற்கு.
(Digboi golf club, Digboi)

டிக்பாய் கோல்ஃப் க்ளப் நிறைய டோர்னமென்ட்டுகள் நடக்கும், முழுமையான 18 ஹோல் கோல்ஃப் கோர்ஸ் (18 holes golf course).

டீ எஸ்டேட்டுகள், ஆயில், ரிஃபைனரி, மூங்கில் பொருட்கள், நிலக்கரிச் சுரங்கம், வனவிலங்குகளின் சரணாலயம், இயற்கையின் பசுமை என டூரிஸ்ட்டுகளை ஈர்க்கும் டிக்பாயின் மற்றுமொரு முக்கியமான இடம் இந்த கோல்ஃப் கோர்ஸ்.

மன்மத ராவ் ஒரு தீவிர கோல்ஃபர் (Golfer). அவனைப் பொறுத்தவரை மனிதர்கள் மூன்று வகை. கோல்ஃப் விளையாடுபவர்கள், விளையாடாதவர்கள் மற்றும் கோல்ஃபை வெறுப்பவர்கள்.

“சாம்பவி, கோல்ஃப்லதான் வாழ்க்கையோட தத்துவமே அடங்கி இருக்கு, தெரியுமா?”

“...”

“கோல்ஃப் விளையாடறவங்க ஒவ்வொரு ஷாட்டுக்குப் பிறகும் முன்னோக்கி நடப்பாங்க. ஏன் தெரியுமா, எது நடந்தாலும், ஒன் ஷுட் மூவ் ஆன். நைஸ் நோ?”

“கோல்ஃப் நம்மோட கான்ஸன்ட்ரேஷனை, பொறுமையை வளர்க்கும். இதுல ஓடி, ஓடி ரன் எடுக்க வேண்டாம். ஆனா, காத்திருந்து, நின்னு, நிதானமா குறி பார்த்து அடிக்கணும். பந்துதான் ஓடணுமே தவிர, நாம ஓடக்கூடாது”

“இது பணக்கார விளையாட்டுன்னு நீ நினைக்கலாம். ஆனா, பெருசா சாதிக்கணும்னு நினைக்கறவங்க, சாதிச்சவங்க, ஒரே நேரத்துல தங்களை ரிலாக்ஸ் பண்ணிக்கவும், ரீசார்ஜ் பண்ணிக்கவும் பெஸ்ட் ஸ்போர்ட் கோல்ஃப்தான்”

“என்ன பாக்கற, நான் பணக்காரன் இல்லைதான், ஆனா, வாழ்க்கைல எனக்கு கவனம் தேவைப்பட்டப்போ, அதைக் கத்துக்கொடுத்தது கோல்ஃப்தான். கொஞ்சம் காஸ்ட்லிதான். இருந்தாலும், கோல்ஃப் விளையாடறது எனக்கு மெடிடேஷன் செய்யற மாதிரி”

சாம்பவி எல்லாவற்றுக்கும் மண்டையை பலமாக ஆட்டினாள்.

முன்பே வந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சக கோல்ஃபர்களுக்கு அவளை அறிமுகம் செய்தான். அவர்களில சிலர் பக்கத்து டீ எஸ்டேட்களில் பெரிய பதவியில் இருந்தனர். விமானப்படையில் இருந்து இருவரும், ராணுவத்திலிருந்து இருவரும் வந்திருந்தனர். சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

“ராவ், மேட்ச் ஆடலாமா?”

“கொஞ்ச நேரத்துல வரேன் மேஜர்” என்றவன், சாம்பவியை கோல்ஃப் மதத்திற்கு மாற்றும் முயற்சியில் இறங்கினான்.

கோல்ஃப் பந்து, கோல்ஃப் க்ளப், அவற்றின் எண்கள், விளையாடும் விதம் என விளக்கினான். சிறிது நேரம் putting செய்யக் கற்றுக் கொடுத்தான்.

(Golf club - பந்தை அடிக்கும் கழி அல்லது பேட்டிற்கு கோல்ஃபில் க்ளப் என்று பெயர்

Putting - golf club ஆல் பந்தை அடிப்பது)

சாம்பவி putting செய்ய நிற்கும் விதம் சரியில்லை என, அவளது தோளில், முதுகில் கை வைத்து நிமிர்த்த, இவள்தான் சங்கடத்துடன் நின்றாளே தவிர, மன்மத ராவின் கவனம் முழுவதும் கோல்ஃபில்தான் இருந்தது.

“யூ நோ சாம்பவி, கோல்ஃப் க்ளப்ல சின்ன நம்பர் தூரமா அடிக்கவும், பெரிய நம்பர் பக்கத்துல அடிக்கவும் பயன்படும்”

சாம்பவி சிறிதான துடுப்புடன், பார்க்க மெலிதான கம்பிபோல் இருந்த Putter எனப்படும் ஸ்பெஷல் க்ளப்பை தூக்கினால் இரும்புக் குண்டாய் கனத்தது. அவள் முனைந்து வேகமாக கையைச் சுழற்றிப் putting செய்ய, கைதான் வலித்ததே தவிர, பந்து வைத்த இடத்திலேயே அமர்ந்திருந்தது.

“கமான் சாம்பவி, குட் ட்ரை, நெக்ஸ்ட் ஷாட்ல வந்துடும்”
என்றவன், பொறுமையாக நாற்பது நிமிடங்களுக்கு மேல் செலவழித்து,சாம்பவி தன் முதல் பந்தை putt in golf (பந்திற்கான குழிக்குள் பந்தைப் போடுதல்) செய்யும் வரை விடவில்லை.

பனிப்புகை குறைந்திருந்ததே தவிர, சுத்தமாக வெயில் இல்லாததோடு, நல்ல குளிரும் கூட. இருந்தும் வெட்ட வெளியில் நின்றதிலும், விளையாடியதிலும் சற்றே வியர்த்தது.

சாம்பவிக்குக் களைப்பை விட, மிக அருகில் நின்று, அவளது முதுகில் அழுத்தி சரியான கோணத்தில் நிற்க வைத்து தோளை, கைகளைப் பிடித்து க்ளப்பைப் பிடித்திருந்த விதத்தைச் சரி செய்தவனின் அண்மையும் தொடுகையும்தான் அதிக அவஸ்தையைத் தந்தது.

அங்கிருந்தவர்கள் அனைவரும் விளையாடியபடியே முன்னோக்கி நகர்ந்திருக்க, சில கோல்ஃபர்களின் மனைவிமார்களும், குழந்தைகளும் கோல்ஃப் க்ளப்பின் கட்டிடத்தினுள் இருந்த கஃபேட்டரியாவில் இருக்க, ஓரிருவரைத் தவிர, இருவரும் தனியேதான் நின்றிருந்தனர்.

நீளமும் வலியமையுமான கைகள் இறுக, அந்த இரும்பு க்ளப்பை அலட்சியமாகப் பிடித்து, நேர்த்தியாக putting செய்த அவனது ஸ்டைல் ஈர்க்க, திருட்டுத்தனமாக அவனைப் பார்த்தவள் திடீரென “உங்க கண்ணாடி எங்க ஸார்?”

‘அவ்வளவா என்னைக் கவனிக்கறா?’

முழுதாகத் திரும்பி சாம்பவியைக் கூர்ந்து பார்த்தவன் “விளையாட ஈஸியா இருக்க லென்ஸ் போட்டிருக்கேன்”

மன்மத ராவ் வார்ம் அப்புக்காக சிறிது நேரம் தனித்து விளையாட, சாம்பவியும் அவனுடனே நடந்தாள். மன்மதராவின் கோல்ஃப் கிட்டைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஒரு ஆள் (Caddie) வந்தான்.

பந்தைக் குறிபார்த்து அடித்துவிட்டால் கூட, அதை எடுக்கவும், அடுத்த பந்தை அடிக்கவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.

‘பணக்காரர்கள் நடைபயிற்சிக்குப் பதில் கோல்ஃப் விளையாடுவார்கள் போல’

இதற்குள் நேரம் பன்னிரெண்டரையைத் தாண்டவும், க்ளப் ஹவுஸுக்குச் சென்றனர்.

க்ளப் ஹவுஸில் வைத்திருந்த வரப்போகும் டோர்னமென்டிற்கான நோட்டீஸைப் பார்க்க, அதில் செக்ரட்டரி என்ற இடத்தில் மன்மத ராவின் புகைப்படமும், விளையாடுபவர்களின் பட்டியலியல் இரண்டாவது இடத்தில் அவனது பெயரும் இருந்ததைப் பார்த்து வியந்தவள், அவனிடமே கேட்டாள்.

“இந்த ஊருக்கு போஸ்ட்டிங்கைக் கேட்டு வாங்கினதே இதுக்காகத்தான்”

அங்கிருந்த கஃபேட்டரியாவுக்குச் சென்று நூடுல்ஸ், சாண்ட்விச், காஃபி வாங்கி வந்தான்.

சாம்பவி சாண்ட்விச்சை முடிக்க முடியாது திணற “விடு” என்ற மன்மத ராவ் படு கேஷுவலாக அவள் மீதம் வைத்ததை எடுத்து சாப்பிடவும் தன் முகத்தின் சிவப்பையும் வியப்பையும் மறைக்கத் திண்டாடியவளைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

“ஹேய், யூ ஆர் ப்ளஷ்ஷிங்”

உணவுக்குப் பின் விளையாடக் கேட்ட ஆர்மி மேஜருடன் அவன் சென்றுவிட, சாம்பவி க்ளப் ஹவுஸின் பழைய புகைப்படங்கள், ஷீல்டுகள், வந்திருந்த விருந்தினர் லாக் புக்கில் கையெழுத்திட்டிருந்த பிரபலங்கள் என நேரத்தைக் கழித்தவள், போரடிக்கவே மன்மத ராவைத் தேடி நடந்து சென்றாள்.

பாதி கோல்ஃப் மைதானத்தைக் கடந்த பின், க்ளப்பைத் தரையில் ஊன்றியபடி மேஜர் மற்றும் இன்னொரு தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருந்தவன், இவளைப் பார்த்ததும் “ஏமிரா?” என்று அவனது தாய்மொழியில் கேட்கவும், அவர்களது பார்வையில் சுவாரஸ்யம் கூடியது.

அவர்கள் விளையாட, கூடவே நடந்தவளுக்கு, அவர்கள் குட் ஷாட் என்று பாராட்டிக் கொள்வதும், அதைப் பற்றிய விவரிப்புகளும் சுத்தமாகப் புரியவில்லை.

சாம்பவிக்கு, தனக்கு கிரிக்கெட்டின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கத் தெரிந்த அளவுக்கு மற்ற விளையாட்டுகள் பழகவில்லை என்று புரிந்தது. இடையில் மதியம் மூன்று மணிக்கு ஒருவரின் caddie சென்று ஃப்ளாஸ்க்கில் டீ எடுத்து வந்தான்.

ஒரு ஷாட்டைக் குறி பார்த்து அடித்துவிட்டு, அந்த பந்து சென்று விழுந்த இடத்தில் , அடுத்தவர் விளையாடக் காத்திருந்த மன்மதராவையும் மற்றவரையும் நோக்கி, சாம்பவியும் அந்தப் பெண்ணும் பேசியபடி நடக்கத் தொடங்கினர்.

இருவருக்கும் இடையே எழுபதடி தொலைவு இருக்கையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து, இருட்டிக்கொண்டு வர, ஓரிரு தூறல்களும் விழத் தொடங்கியது. எட்டி நடைபோட்டுத் தூரத்தைக் கடக்கையில், மழை சற்று கனத்த சரங்களாக, ஐஸ் கட்டியாகப் பொழிந்தது.

சற்று தூரத்தில் கோல்ஃப் கோர்ஸுக்கு உள்ளேயே செல்லும் சிறு வண்டிகளை நிறுத்தும் இடம் இருந்தது (Golf cart storage)

மன்மதராவும் மற்ற இருவரும், கோல்ஃப் கார்ட் ஸ்டோரேஜ் கட்டிடத்தை நோக்கி வேக எட்டில் நடக்கத் தொடங்கி, பெண்களை அங்கே விரையச்சொல்லிக் கத்திக் கை காட்டினர்.

ஐஸ் கட்டிகள் கல் போல் தாக்க, கூரையைத் தேடிய சாம்பவி, எதிர்ப்புறம் இருந்து, கட்டிடத்தை நோக்கி நடக்கும்படி சைகை செய்த ஆண்களைப் பார்த்தவள், அதிர்ச்சியில், பயத்தில் உறைந்தாள்.

மூவரும் வரிசையாக நடக்க, கடைசியாக இருந்த மன்மதராவின் பின்னே, சற்று தூரத்தில் இருந்த சிறிய சரிவில் இருந்த புதர், செடிகளுக்கு நடுவிலிருந்து, தன் பாதங்களைப் பதிய வைத்து மிடுக்காக நடந்து வந்துகொண்டிருத்தது, ஒரு சிறுத்தைப் புலி(Leopard).

மேஜரின் மனைவியும் பயந்தாலும், இந்த இடத்தில், இதற்கான சாத்தியம் இருப்பது தெரிந்ததாலும், முன் அனுபவமும் இருந்ததாலும், சுதாரித்து “கமான் கேர்ல், ரன்” என்று சாம்பவியை உலுக்கி, அவள் கையைப் பிடித்து இழுத்தபடி கட்டிடத்தை நோக்கி ஓடியவள்,

“கைஸ், வாட்ச் அவுட், பீ க்விக் அண்ட் கேர்ஃபுல்” என்று கத்தினாள்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் கடந்ததும், இரண்டு caddies உள்பட எல்லோரும் பாதுகாப்பான கூரைக்குள் வந்ததும் எப்படி என்றோ, தப்பியது நிஜமென்றோ நம்ப முடியாத அதிர்ச்சியில் நின்றிருந்தாள் சாம்பவி.

கடைசியாக உள்ளே நுழைந்து, விரைந்து கதவைச் சாத்திய மன்மத ராவிடம், அந்தப் பெண் சாம்பவியைச் சுட்டிக்காட்டி “முதல் தரம் இல்லையா, அதான் ஷாக் ஆயிட்டா. நீங்க சொல்லலையா ராவ்?”

“ம்ப்ச், ரொம்ப நாளாச்சா, அதான் அலட்சியமா இருந்துட்டேன். இன்னைக்கு இதை எதிர்பார்க்கல மேம்” என்றபடி, சாம்பவியை நெருங்கினான்.

அவனை நோக்கி சாம்பவி திரும்பிய வேகத்தில்,
மன்மத ராவ் ‘எங்கே, அதிர்ச்சியில் அடித்து விடுவாளோ’ என்றெண்ணி “ஸாரி ஸாம்ப…”

“...”

மற்றவர்களின் எதிரே பயத்தில் தன்னை அடிப்பாள் என நினைத்த பெண், இறுக அணைத்ததை எதிர்பாராத மன்மத ராவ் முகம் சிவக்க “ஹேய், நத்திங் மா, வி ஆர் சேஃப். ரிலாக்ஸ்” என சாம்பவியின் முதுகில் தட்டினான்.

வெளியில் சிறுத்தையின் உறுமலும், பின் பெரு
மழையின் சத்தமும் கேட்டது.

******************

அஸ்ஸாமில் ஜனவரியில் பொதுவாக இப்படி மழை பெய்யாதாம். பனிக்கட்டியுடன் தொடங்கிய மழை ஆறு மணி நேரமாகியும் நிற்கவில்லை.

எதையும் செய்ய மனமன்றி, சுடச்சுட ஷோபா செய்து கொடுத்த பராட்டா, சப்ஜியை சாப்பிட்ட சாம்பவி, அவள் சென்றதும், வாசல் கதவைத் தாழிட்டு, அறைக்குள் வந்து ரஜாய்க்குள் சுருண்டாள்.

மனதில் அன்றைய நாளின் நிகழ்வுகள் மட்டுமே ரிபீட் டெலிகாஸ்ட்டாக ஓடியதில் மொபைல், லேப்டாப், புத்தகம் என எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

எந்தவித பாதுகாப்புமின்றி, சிறுத்தையை நேரில், சுதந்திர வெளியில், அது புழங்கும் இடத்தில் பார்த்ததை இப்போது நினைக்கையில் த்ரில்லாகத்தான் இருந்தது.

ஆனால், மயக்கிய இயற்கை மருட்டிய அந்தக் கணம்….

மன்மத ராவின் பின்னே பதினைந்தடி தூரத்தில் சிறுத்தையைக் கண்டதும், அவள் நெஞ்சு உலர்ந்ததும்…

அதி வேகமாகப் பாயக்கூடிய விலங்கல்லவா? ஒற்றைப் பாய்ச்சலில் அது அவனை நெருங்கி இருக்கக்கூடிய சாத்தியத்தை நினைக்க, சாம்பவிக்கு இப்போதும் உடல் உதறியது.

மன்மத ராவை அருகில் கண்டதும், அவனுக்கு ஒன்றுமில்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள அவனைப் பார்த்தவள், இருந்த பயத்தில் என்ன செய்கிறோம், ஏன் இத்தனை பதட்டம் என்றெல்லாம் யோசிக்காது, அவனை அணைத்திருந்தாள்.

‘என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பார்?’

‘என்னவோ கல்பகோஷ் கைய புடிச்சதுக்கே அத்தனை சீன் போட்டா, இப்ப என்னடான்னா, அவளே கட்டிப்புடிக்கறா! ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமான்னு நினைச்சிருப்பாரோ?’

‘ஒருவேளை அவர் பெரிய போஸ்ட்ல இருக்கறதால, நான் அப்டி நடந்துக்கிட்டேன்னு நினைச்சிருந்தா’

‘என்னைச் சொல்லணும், என்னதான் பயம்னாலும் இப்படியா செய்வேன். எனக்கு புத்திதான் கெட்டுப் போச்சு’

யோசிக்க, யோசிக்க புலியைப் பார்த்த அதிர்ச்சியைவிட, சாம்பவிக்குத் தன் செயல்தான் அதிக பாதிப்பைத் தந்திருந்தது.

‘நாளைக்கு அவரை எப்படி நேர்ல பாக்கறது? ஏற்கனவே ஆஃபீஸ்லயும், அங்க பார்த்த அவரோட ஃப்ரெண்ட்ஸும் எங்களை பார்த்த பார்வையே சரி இல்லை. இதுல நான் வேற…’

‘நான் என்ன செய்யறது, நாய், பூனையைக் கண்டாலே ஓடற எனக்கு முன்னால புலி வந்தா?’

‘ஏற்கனவே இந்த ஊர்ல எப்படா பாம்பு வரும்ன்ற பயத்துலயே இருக்க வேண்டி இருக்கு. இதுல சிறுத்தை தரிசனம் கொடுத்தா?’

‘சாம், நீ இங்க வந்ததுக்கும் இப்ப செய்யற வேலைக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா?’

‘ஏன், நான் என்ன சந்நியாசம் வாங்கிட்டா இங்க வந்தேன்?’

‘இல்ல, சாம்பவி யாரையும் லவ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கு?’

‘அப்படியே எனக்கு அவரைப் புடிச்சுருந்தா, அதுல தப்பென்ன இருக்கு?’

‘ஆமா, எனக்கு அவரை புடிச்சிருக்குதான், ஸோ வாட்?’

நினைவும், நிகழ்வும், கேள்வியும், பதிலுமாய் உறக்கமின்றிப் புரண்டவள், தன் எண்ணம் போகும் போக்கில் அரண்டு போய் எழுந்து அமர்ந்தாள்.

பரஸ்பர நேசம், பகிர்வு, பாதை, பயணம், சாத்தியம், சம்மதம் என சிந்தையிலேயே பரமபதம் ஆடிய சாம்பவி உணர்ந்தது, புரிந்தது எல்லாம், தன் மனதுக்குள் கரும்பும் வில்லுமாய் மன்மத ராவ் நீக்கமற நிறைந்திருந்ததை மட்டுமே.

தன் உள்முக தரிஸனத்தில் பயந்து விதிர்த்தவள், எல்லாக் கோட்டையும் அழித்து ‘க்ளீன் ஸ்லேட்’ ஆக விரும்பிக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

கண்ணை மூடியதும் கசிந்து வெளியேற அவன் தூசியா என்ன?

‘எல்லாம் அவராலதான். அவர் ஏன் என்னை கூட்டிட்டுப் போய், மெனக்கெட்டு கோல்ப் விளையாட சொல்லிக் கொடுக்கணும்?’

அதே நேரம் ‘நான் ஏன் அவளை கோல்ஃப் விளையாடக் கூப்பிட்டேன்?’ என்ற அதே கேள்வியைத் தன்னையே கேட்டுக்கொண்டான் மன்மத ராவ்.
 
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Krishnanthamira

New member
Joined
Nov 7, 2024
Messages
2

Mannu rao 😁😁😁
Deva and Manoj needs to repent nu ninachalum. Chances of all that happening are very slim onli
 
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

நீங்க ரெண்டு பேரும் கோல்ஃப் விளையாடினாதானே அப்படி, இப்படி ரொமான்ஸ் நடக்கும், நாங்களும் ஜொள்ளு விட்டுக்கிட்டே படிப்போம்...🙈🙈

மன்மதன் சார், நீங்க தான் ஹீரோ, இன்னிக்கு கோல்ஃப், நாளைக்கு பல விதமான விளையாட்டு விளையாட வேண்டி இருக்கு.. so be ready..😛😛
 
VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
😍😍😍

நீங்க ரெண்டு பேரும் கோல்ஃப் விளையாடினாதானே அப்படி, இப்படி ரொமான்ஸ் நடக்கும், நாங்களும் ஜொள்ளு விட்டுக்கிட்டே படிப்போம்...🙈🙈

மன்மதன் சார், நீங்க தான் ஹீரோ, இன்னிக்கு கோல்ஃப், நாளைக்கு பல விதமான விளையாட்டு விளையாட வேண்டி இருக்கு.. so be ready..😛😛
What a scene❤️❤️
 
Top Bottom