• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தனித்த வனத்தில் 7

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
தனித்த வனத்தில் 7
சுற்றிலும் இருந்த அமானுஷ்யத்தை, தெய்வீகத்தை அனுபவிக்க விரும்பி, கண்களை மூடி, ஆழ்ந்து ஸ்வாசித்து, சூழலின் அமைதியை உள்வாங்கிய சாம்பவி காற்றெங்கும் சிறிதும் பெரிதுமான மணிகள் அசையும் ஒலியில் சிலிர்த்தாள்.

லேசான பனிப் புகையினோடே, மழை வருவதற்கான அறிகுறியாக வீசிய குளிர்ந்த காற்றில் ஈரப்பதம்.

கோவிலுக்கு வெளியே நின்றாலும் சாம்பவியால் உள்ளே பார்க்க முடிந்தது. ஏ யப்பா, சிறிதும் பெரிதுமாக எத்தனை மணிகள்!

பரந்த டீ எஸ்டேட்டுகளுக்கு நடுவே, ஒரு ஆலமரத்தின் வேருக்கடியில் சுயம்புவாக கோவில்கொண்டிருந்தார் சிவன்.

‘கண்ட்டி’ என்றால் மணி என்று தெரிந்தவள், திலிங்கா என்றால் அஸ்ஸாமீஸ் மொழியில் மணி என்றும் தெரிந்துகொண்டாள்.

கோவிலுக்கு வந்ததற்காகப் பொதுவில் பிரார்த்தித்துக் கொண்டும், பிரார்த்தனை நிறைவேறவும், நிறைவேறிய பின் வேண்டுதலை நிறைவேற்றவும், என பல்வேறு காரணங்களுக்காகக் கட்டப்பட்ட லட்சக்கணக்கான மணிகள் கோவிலைச் சுற்றி இருந்த மரக் கிளைகளில், கம்பிக் கிராதிகளில் என நீக்கமற நிறைந்திருந்தது.

ஞாயிறு, வருட இறுதி விடுமுறை நேரம், என கோவிலுக்கு பலத்த கூட்டம் வரும் என்பதால்,
கல்பகோஷ் ஆறு மணிக்கு முன்பே வந்து விட, கோவில் திறக்கும் முன்னரே வந்து விட்டனர்.

கோவிலின் வெளியில் இருந்த பூஜை சாமான்கள் விற்கும் கடைகளைக் கூட அப்போதுதான் திறந்து அடுக்கிக் கொண்டிருந்தனர்.

தீன்சுக்கியாவின் அருகே திலங்கா மந்திர் எனப்படும் கண்ட்டி பாபா மந்திர் கண்ணுக்குப் புலப்படும் முன்பே, காற்றில் கிண்கிணிகளின் மெலிதான சலசலப்பு கேட்டது.

அருகில் கண்டதும், அனுதினமும் கட்டப்படும் மணிகளின் ஒலியில் சிலிர்த்த சாம்பவி, கடையில் இருந்து அர்ச்சனைப் பொருட்களுடன் மணியும் வாங்கியவள், கல்பகோஷிடம் “உங்களுக்கு?” என வினவினாள்.

‘நமக்கு ஏன் தனித்தனியா?’ என்று கேட்க நினைத்தவன், ‘எதற்கும் முதலில் பாபாவிடம் ஒரு அப்ளிகேஷனைப் போட்டு வைப்போம்’ என்று அவனுமே ஒரு மணியும் பூஜை சாமான்களும் வாங்கிக்கொண்டான்.

முதலில் வந்த சிலருள் இருந்ததால், கூட்டமின்றி, நிதானமான தரிஸனமும், அமைதியான, விரிவான அர்ச்சனையும், அபிஷேக, ஆராதனையும் காணக்கிடைத்தது.

பூஜை செய்த மணிகளை அவரவரிடம் தந்த பூஜாரி, எதிரே இருந்த மரத்தில் கட்டச் சொன்னார்.

சாம்பவியைப் பார்த்துக்கொண்டே மணியைக் கட்டிய கல்பகோஷின் மனதில் சாம்பவியே இருக்க, அந்த மணியைக் கட்டுவதொன்றே வாழ்வின் லட்சியம் போல் செய்த சாம்பவியின் கவனம் அதில் மட்டுமே குவிந்திருந்தது.

தரிஸனம் முடிந்து வெளியில் வந்தபோது, காத்திருந்த பக்தர்களின் வரிசை வாசலைத் தாண்டி நீண்டிருக்க, சாலையின் இருபுறமும் ஏராளமான கார்களும் பைக்குகளும் நின்றிருந்தன.

அதில் சிலர் இவர்களைப் பார்ப்பதும், தன் குடும்பத்தினரிடமோ, கூட வந்தவரிடமோ எதையோ சொல்வதைக் கவனித்த சாம்பவிக்கு அவர்கள் இந்தியன் ஆயிலின் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்தது. அதில் அவள் பார்த்திருந்த இரண்டு, மூன்று அதிகாரிகளும் கூட குடும்பத்துடன் வந்திருந்தனர். ஓரிருவர் கல்பகோஷுக்கு வணக்கம் வைத்ததைப் பார்த்தவளுக்கு சங்கடம் மிகுந்தது.

“சாம்பவி, டீ?”

“எனக்கு வேணாம், நீங்க வாங்கிக்கோங்க”

தோளைக் குலுக்கியபடி காரை எடுத்துவரச் சென்ற கல்பகோஷ், வழியில் யாருடனோ நின்று பேசுவதும், கை குலுக்குவதும், தன்னைக் காட்டி எதையோ சொல்வதையும் பார்த்தாள்.

மனதில் ஏதேதோ தோன்றவும், இனி இவனுடன் இதுபோல் வெளியில் செல்லக்கூடாதென்று தீர்மானித்துக்கொண்டாள்.

‘சீக்கிரமா ஒரு ஸ்கூட்டியை வாங்கிட்டு ஸாரோட வெஸ்பாவை திருப்பிக் குடுத்துடணும்’

கார் வந்து நிற்கவும் ஏறிக்கொண்டாள். சில கிலோமீட்டர்கள் வரை மௌனமாகக் காரைச் செலுத்தினான்.

சடசடவென மழை பிடித்துக் கொண்டது. நெடுஞ்சாலையின் இரண்டுபுறமும் தேயிலைத் தோட்டங்கள் விரிந்திருக்க, தொடங்கிய மூன்றாவது நிமிடமே, வழி தெரியாத அளவுக்குக் கொட்டித் தீர்த்தது மழை.

வேறு வழியின்றி காரை ஓரங்கட்டி நிறுத்தி, சாம்பவியின் புறம் வாகாகத் திரும்பி அமர்ந்தவன் “பஹுத் அச்சா மோஸம், ஹேனா?”
(ரொம்ப நல்ல காலநிலை, இல்லையா?)

முதல்நாள் இரவு மன்மத ராவின் கேள்வியில் மனதை உழட்டிக் கொண்டதில் மிக தாமதமாகத் தூங்கியதும், காலையில் ஐந்து மணிக்கே விழித்ததும் சேர, களைப்பாக இருந்த சாம்பவிக்குக் கோவில் தரிஸனம் இதமாக இருப்பினும், இந்த பயணம் தொடங்கியது முதலே, ஏனோ உறுத்தலாகவே இருந்தது.

கல்பகோஷின் குறுகுறு பார்வையும், எதையோ சொல்ல வருவது போன்ற முகபாவனையும், அவனே சிரித்துக் கொள்வதும், பாதையை மறைக்கும் மழையை நல்ல காலநிலை என்று வர்ணிப்பதும்…

அனைத்தையும் விட, அக்கறை என்ற பெயரில், ஆளில்லா ரோட்டைக் கடக்க அவள் கையைப் பிடித்ததும், கோவிலுக்குள் இருந்த கூட்டத்திலிருந்து வெளிவர, அவளைச் சுற்றி அணைத்தாற்போல் கையை வைத்துக்கொண்டதும், குழந்தையிடம் சொல்வதைப் போல் ‘இந்தப் பக்கமாக நட, அங்கே பார் மயில்’ என அதீத குழைவுடன் பேசியதும், உண்மையில் சாம்பவிக்கு சற்றே வினோதமாகவும், அவன் ஏதோ பதட்டத்தில் இருப்பதுபோலவும் தோன்றியது.

“ஆமா, நல்ல மழை” என்றாள்.

சில நிமிட அமைதிக்குப் பின், தான் யோசித்து வைத்த எந்த விதமான வரிகளும், பின்புலப் பேச்சும் கை வராமல் , பட்டென

“அமி துமாகே பாலோபஷி சாம்பவி. செலோ பியெ கொரி (ஐ லவ் யூ சாம்பவி, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்)”

என்று சாம்பவியின் கைகளை இறுக்கிப் பிடிக்கவும், முதலில் அவன் பேசியது புரியாது கையைப் பிடித்ததில் பதட்டமாகி அவன் கையை உதறியவள், கொட்டும் மழையில் கார் கதவைத் திறந்து இறங்கிவிட, கல்பகோஷ் தன்னை நிதானித்துக் கொண்டான்.

“ப்ளீஸ் சாம்பவி, தப்பா நினைக்காத. இதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம். முதல்ல நீ உள்ள வந்து உட்காரு” என்று கெஞ்சவும், சரியாக அமர்ந்து கொண்டவளின் உடல் பதட்டத்திலும், மழையில் நனைந்ததிலும் குளிர்ந்து நடுங்கியது.

கார்க் கதவைத் திறந்ததில், உள்ளேயும் ஈரமாகி இருக்க, இரவல் காராகையால், கல்பகோஷ் சிறிது டென்ஷனாகி, பெங்காலியில் எதையோ முனகிக்கொண்டே டவலை எடுத்துத் துடைத்தான்.
மீதி தூரத்தை மௌனமாகக் கடந்தனர்.

பத்தரை மணிபோல் வீடு வந்த சாம்பவி, தலை துவட்டி, உடை மாற்றி, ஷோபாவிடம் இஞ்சி டீ தயாரிக்கச் சொல்லிப் பருகி விட்டு ‘நான் தூங்கப் போறேன், நீ வேலை முடிஞ்சதும் கதவை சாத்திட்டுப் போ’ என்றாள்.

“ஆப் கா கானா? (உங்களுக்கு சாப்பாடு)”

“பாத்துக்கலாம், நானே கூப்பிடறேன்” என்று போய்ப் படுத்தவள், மாலை ஆறு மணிக்கு மேல் கடும் காய்ச்சலுடன் எழுந்தாள்.

******************

சாம்பவி இரும்பு கப்போர்டைத் திறந்து வைத்துக்கொண்டு, நியூ இயர் பார்ட்டிக்கு அணிய உடைத் தேர்வில் ஈடுபட்டிருந்தாள்.

வட இந்தியாவில், விழாவிற்குத் தகுந்த உடையும், உடைக்கு அதிக மரியாதையும் இருப்பதைத் தெரிந்ததில் இருந்துதான் இந்த மெனக்கெடல்.

புடவை, சுடிதார், குர்த்தி, லெக்கின்ஸ், ஜீன்ஸ், டீஷர்ட் - இவை எல்லாமே ஒத்துவராதெனத் தோன்ற சூட்கேஸைத் திறந்து எம்ப்ராய்டரி போட்ட டெனிம் ஸ்கர்ட், வெண்ணிற turtle neck ஸ்வெட்டர், ஆழ் சிவப்பு நிற ஸ்டோல் என எடுத்து ஷோபாவிடம் இஸ்திரி செய்யக் கொடுத்து விட்டு, ஷாம்பூ செய்திருந்த கூந்தலைக் காய வைத்தாள்.

கண்ணாடியில் பார்க்க, சற்று இளைத்தாற்போல் தெரிந்தது. இரண்டு நாட்கள் கடும் காய்ச்சலுக்குப் பின் நேற்றுதான் உடல்தேறி அலுவலகம் சென்றாள். இன்று வருடத்தின் கடைசி தினம். அதிகாரிகளின் க்ளப் ஹவுஸில் பார்ட்டி என அழைத்தனர். தவிர்க்க நினைத்தவளை மன்மதராவ்தான் வரச்சொல்லி வற்புறுத்திக் கிளப்பி இருக்கிறான்.

எட்டரை மணிக்கு கார் ஹார்ன் அடிக்க, கதவைப் பூட்டிக்கொண்டு சென்று ஏறிக்கொண்டாள்.

வெண்ணிற ரவுண்ட் நெக் டீஷர்ட்டும் ஆழ்நீல நிற பிளேஸரும் அணிந்திருந்தான்.

“ஆர் யூ ஓகே நௌ சாம்பவி?”

“ம், ஃபைன்”

“குட்”

கல்பகோஷின் பைக் அவர்களைக் கடந்து சென்றது.
க்ளப் ஹவுசை அடைந்து, உள்ளே செல்ல, மக்கள் கார்டனிலேயே பரவி இருந்தனர்.

DJ யில் ‘ரங்கீலா பாரோ டோலுனா’ அதிர, சில பெண்களும் இளைஞர்களும் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தனர்.

தங்களின் மீதான பார்வைகளை சாம்பவியால், மன்மத ராவைப் போல் எளிதாக எதிர்கொள்ள இயலவில்லை.

தன்னை யாரும் கவனிக்கிறார்களா, அடுத்தவரிடத்தில் ஏதேனும் சொல்கிறார்களா என்ற கவலையை முகத்தில் காட்டாதிருக்க, தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.

மன்மதராவ் தன் காரில் லிஃப்ட் கொடுத்த பாவனையில், சாம்பவிக்கு ஒரு தலையசைப்பைத் தந்து விட்டு மற்ற பிரிவுகளின் உயரதிகாரிகளோடு சென்று இணைந்துகொண்டான்.

இதுபோன்ற அலுவலகக் குடியிருப்புகளில் வழக்கமாகக் காண்பதைப்போல், ஆண் அதிகாரிகள் ஒருபுறம், அவர்களது மனைவியர் ஒருபுறம், எண்ணிக்கையில் குறைந்த பெண் அதிகாரிகள் ஒருபுறம் என நின்றிருந்தனர்.

அறுபதிலிருந்து எழுபது பேர்வரை இருக்கலாம். அதைத் தவிர, பிராமில் இருந்த சில மாதங்களேயான பாப்பா முதல், வேலையில் இருந்து விடுமுறையில் வந்திருக்கும் யுவ, யுவதிகள் வரை பல்வேறு வயதில் அதிகாரிகளின் குழந்தைகளும் இருந்தனர்.

சாட் கார்னர், நூடுல்ஸ், மோமோ, தோசா கார்னர், சோளே பட்டூரே, பிரியாணி என கேனப்பிகளில் (Canopy) கடை பரப்பி இருக்க, அசைவ வகைகளுக்குத் தனி கவுன்டர்கள் இருந்தது.

அநேக ஆண்கள் ஒரு ஓரமாக இருந்த பார் கவுன்ட்டருக்கு அருகே நின்றிருந்தனர்.

சாம்பவி சற்றே தயக்கத்துடன், அவளது வீட்டின் அருகே இருந்த, சில முறை பார்த்துப் புன்னகைத்திருந்த நடுத்தர வயதுப் பெண்ணின் அருகே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டாள்.

“தெரியுமே, இப்ப உங்க உடம்பு பரவாயில்லையா?” என்ற அந்தப் பெண்ணின் எதிர்க் கேள்வியில், அவள் கல்பகோஷுடன் கண்ட்டி பாபா மந்திருக்குச் சென்ற செய்தி, காலனி முழுவதும் 7G வேகத்தில் பரவி இருப்பது புரிந்து, உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது.

மெதுவே ஒவ்வொரு குழுவாகச் சென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய சாம்பவி, நேரமாவதில் பலரும் நடனமாடச் செல்லத் தொடங்கவும், கையில் பழரசத்துடன் ஓரமாக ஒதுங்கி நிற்க, அவளை நோக்கி வந்த கல்பகோஷைக் கண்டு பதட்டமானாள்.

*******************

நேரம் இரவு பதினோரு மணியை நெருங்கிக்கொண்டிருக்க, அநேகமாக எல்லோருமே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி, ஏதோ இரவு பன்னிரெண்டு மணிக்குப் புதுவருடம் பிறந்ததுமே, சொர்க்கவாசல் திறந்துவிடும் என்பதுபோல் நடனமாடினர்.

எட்டு மணிக்கு சமீபத்திய ஹிட்டான குஜராத்தி கிராமியப் பாடல் கலஸீ (Khalasi), மராட்டியப் பாடலான அப்ஸரா ஆலி என்று தொடங்கிய DJ, பழைய கால ஈனா, மீனா, டீக்கா வரை போய், இப்போது ஊம் சொல்றியா மாமாவில் வந்து நின்றது. நாலைந்து மணி நேரம் ஆட வேண்டுமே?

இதில் கலந்துகொள்ளாது வேடிக்கை பார்த்த சீஃப் மேனேஜர் சுக்விந்தர் சிங்குடன் ,
ஜி எம் அரவிந்த் பர்தொளைய், ரிஃபைனரி, பைப்லைன், பெட்ரோகெமிகல், மார்க்கெட்டிங், போன்ற பிரிவுகளின் சீனியர் மேனேஜர்களுடன் பேசியபடி
தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த மன்மத ராவும் நின்றிருந்தான்.

ட்ரேயில் பானங்களுடன் சென்ற வெயிட்டரை அழைத்துத் தன் கோப்பையை நிரப்பிக்கொண்டவனின் பார்வை வட்டத்தில் கல்பகோஷ் சாம்பவியை நெருங்குவதும், அவள் பதட்டமடைவதும் விழ, மன்மத ராவின் தாடை இறுகியது.

சாம்பவி வந்த புதிதில் கல்பகோஷுடன் வண்டியில் வருவது குறித்து ஆஃபீஸில் நக்கலாகப் பேசியதை அறிந்துதான், தன் வெஸ்பாவைக் கொடுத்தான்.

திங்கள் கிழமை காலை அலுவலகம் சென்ற மன்மத ராவ், சிறிது நேரத்திற்கெல்லாம், அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தரப்பரிசோதனை குறித்தான மீட்டிங்கிற்குத் தேவையான குறிப்புகளுடன் வரவேண்டிய சாம்பவியைக் காணாது விசாரித்தான்.

அப்போது அவனுடன் கோவிலுக்குச் சென்று வந்ததைப் பார்த்த சில ஊழியர்களும், சக அதிகாரிகளும் செய்திகளை முந்தித் தந்ததில் அதிகாரிகளிடையே வேகமாகப் பரவி இருந்ததை தன் செயலர் மூலம் அறிந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் சாம்பவி, தன் உடல்நிலை சரியில்லை என கம்பெனி மருத்துவரிடம் வாங்கிய சான்றிதழையும், அன்றைய வேலைக்கான விவரங்களையும், மன்மதராவின் இ மெயிலில் அனுப்பிவிட்டு, கால் செய்து பேசியவளின் குரலில் அத்தனை சோர்வும் அழுத்தமும்.

அன்று மாலையில் அவளைப் போய்ப் பார்த்தவன், கல்பகோஷ் தன்னை கோவிலுக்கு அழைக்கிறான் என்று அனுமதி கோரும் தொனியில் அவள் பேசியபோதே தடுக்காமல் போனதற்குத் தன்னையே நொந்து கொண்டான். கூடவே ‘தடுப்பதற்குத் தான் யார்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

காய்ச்சல் இல்லை, ஆனால் பெரிதும் ஓய்ந்து போயிருந்தாள்.

‘இந்த வயதில், இத்தனை சோகம் ஏன்? நல்ல படிப்பு, வேலை. குடும்பத்தினரும் அக்கறையாகப் பேசுவதாகத்தான் தெரிகிறது’

சாம்பவியின் சோகமும், கவலையும் ஏனென்றால், செக்ஷனில் பலரும் அவளிடமே ஃபோன் செய்து என்ன பிரச்சனை என்று விசாரித்திருந்தனர். கூடவே கல்பகோஷும் பலமுறை அவளை அழைத்திருந்தான்.

“உங்களுக்கு நடுவுல என்ன பிரச்சனை சாம்பவி?”

“...”

“கொட்ற மழைல காரை நடுவழில நிறுத்தி, நீ இறங்குற அளவுக்கு என்ன நடந்தது, அவன்… உன்னை… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”

சாம்பவிக்கு முந்தைய நாளைவிட, அவள் காரை விட்டு இறங்கியதைக் கூட பார்த்ததோடு, அதைப் பரவவும் விட்டிருப்பதில் அதிக அதிர்ச்சி அடைந்தாள்.

“ஸ…ஸார்”

“இது சின்ன காலனி சாம்பவி. அதோட, பெரிய சிட்டில இல்லாம, தனியா ஒரு காட்டுக்கு நடுவுல இருக்கு. இங்க எந்த விஷயமும் வேகமா பரவிடும்”

“மத்தவங்களை விடு, நீ இப்ப எப்படி இருக்க?”

ஏனோ, அவனது கேள்வியில் சாம்பவி உடைந்து வெகுவாக அழ, அவளைத் தேற்றும் வழி தெரியாது, அமைதியாக அமர்ந்திருந்தவன், அவள் சற்று சுதாரித்ததும் “ரிலாக்ஸ் மா, நல்ல குளிர் வேற. நாளைக்கும் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஆஃபீஸ் வந்தா போதும்”

“ஓகே ஸார்”

வாசல் வரை சென்று திரும்பியவன் “அந்தக் கல்பகோஷ் உங்கிட்ட ஏதாவது தப்பா…?”

“...”

“ஓகே, கெட் வெல் சூன்”

இதை மனதில் வைத்து மறுகியவளைக் கட்டாயப்படுத்தி பார்ட்டிக்கு அழைத்து வந்ததும் மன்மத ராவ்தான்.

‘அவ டென்ஷன் ஆகறான்னு தெரிஞ்சும் இந்தக் கல்பகோஷ் ஏன் இப்டி செய்யறான்?’

‘இத்தனை பேருக்கு நடுவுல இப்ப நான் போய் என்னன்னு கேட்டா நல்லாவா இருக்கும்?’

‘இவ ஏன் அவனைப் பார்த்து இத்தனை பதட்டமாகறா?’

‘Literally she is panicking’

தொடக்கத்தில், கல்பகோஷுடன் வந்து கொண்டிருந்த சாம்பவிக்கு, மன்மத ராவ் தன் வெஸ்பாவைக் கொடுத்ததுமே, சக அதிகாரிகள் புருவம் உயர்த்தினர்.

அதிலும் இன்று இருவரும் பார்ட்டிக்கு சேர்ந்து வந்ததே எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருந்ததை மன்மத ராவ் உணர்ந்திருக்க, அவனது பார்வை சென்ற இடத்தைத் தொடர்ந்து, முக மாற்றத்தையும் உணர்ந்த ப்ரொடக்ஷன் சீனியர் மேனேஜர் ராஜேஷ் குப்தா அருகில் வந்தான்.

மன்மத ராவின் வயதும் பதவியும் பிடிக்காதவர்களின் பட்டியலில் முதலில் இருக்கும் ராஜேஷ் குப்தா,

“ஏதாவது பிரச்சனையா ராவ், டிஸ்டர்ப்டா இருக்கீங்க?”

“குச் நஹி”

*******************

சாம்பவியும் மன்மதராவும் பார்ட்டி முடிந்து, பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து, இரவு ஒரு மணிக்கு
மௌன ஊர்வலம் வந்தனர்.

அவளது வீட்டு வாசலில் காரை நிறுத்தி, அவளுடன் இறங்கியவன் “கல்பகோஷ் என்ன சொன்னான்?”

“ம்ப்ச், ஒண்ணுமில்ல”

“ஒண்ணும் இல்லாமலா டான்ஸ் ஆடறத விட்டு உங்கிட்ட பேச வந்தான்?”

“சும்மாதான் பேசினார்”

“அதுக்கு ஏன் அவ்வளவு டென்ஷன்?”

“...”

“உனக்கு இஷ்டம் இல்லைன்னா சொல்ல வேணாம்”

“ஸாரி கேட்டார்”

“ஸாரி கேக்கற அளவுக்கு என்ன செஞ்சான்?”

“ஸார், விடுங்களேன்”

“அப்ப நிச்சயம் ஏதோ இருக்கு. வந்த ஒரு மாசத்துல உன் பேரை டேமேஜ் செஞ்சு வெச்சதும் இல்லாம எல்லார் முன்னாலயும் தனியா கூட்டிட்டுப் போய் பேச வரான். நீ என்னடான்னா சும்மா ஸாரி கேட்டான்ற”

“அன்னைக்கு மழைல காரை ஓரமா நிறுத்தி, பெங்காலில என்னை லவ் பண்றதா சொல்லி, என் கையைப் புடிச்சுட்…”

வாசல் கேட்டை இறுகப் பற்றிய மன்மத ராவ் ‘நினைச்சேன்…. பாஸ்டர்ட்’ என்று ஆத்திரமாக முனகியது சாம்பவிக்குத் தெளிவாகக் கேட்டது.

அடுத்த நொடி தன்னை மீட்டுக்கொண்டவன், தொண்டையைச் செருமியபடி “அதுக்காகவா காரை விட்டு இறங்கிக் காய்ச்சலை வரவழைச்சுக்கிட்ட? கல்பகோஷ் நல்ல டீஸன்ட்டான பையன். பிரைட் ஃப்யூச்சர் இருக்கு. மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர். யோசி, குட்நைட்” என்றவன், காரைக் கிளப்பிக்கொண்டு போயே போய்விட்டான்.

மன்மத ராவ் எடுத்த எடுப்பில் தன்னை மடக்கி மடக்கிக் கேட்ட கேள்விகளும், தாடை இறுக்கமும், ஆத்திரமாக முணுமுணுத்ததும், திடீரென அந்தர்பல்டி அடித்து, கல்பகோஷுக்கு சிபாரிசு செய்ததும் ஏனென்று விளங்காமல், அடர்ந்த பனியில் நின்றிருந்தாள் சாம்பவி.
 
Author: VedhaVishal
Article Title: தனித்த வனத்தில் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 19, 2024
Messages
12
😍😍😍

ஹலோ மிஸ்டர் மன்மதன், உங்க மன்மதலீலையை எல்லாம் பார்க்க நாங்க ஆவலா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா, நீங்க என்னடான்னா சாம்பவியை கல்பகோஷ்க்கு ஜோடி சேர்த்து வச்சு, கடைசியில இப்படி பாட போறீங்களா? 😎😎😎

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
19
😍😍😍

ஹலோ மிஸ்டர் மன்மதன், உங்க மன்மதலீலையை எல்லாம் பார்க்க நாங்க ஆவலா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா, நீங்க என்னடான்னா சாம்பவியை கல்பகோஷ்க்கு ஜோடி சேர்த்து வச்சு, கடைசியில இப்படி பாட போறீங்களா? 😎😎😎

அப்டியெல்லாம் விட்ருவமா😍
 
kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
75
என்னடா இது? அவன திட்டினான், திடீர்னு பாராட்டு பத்திரம் வாசிக்கிறான்? மன்மதா ஏமிரா இதி?
 
Krishnanthamira

New member
Joined
Nov 7, 2024
Messages
2

Yov unaku la yaru manmadha rav nu per vachaa
 
Top Bottom